புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
விதுர நீதி - பகுதி 2 Poll_c10விதுர நீதி - பகுதி 2 Poll_m10விதுர நீதி - பகுதி 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதுர நீதி - பகுதி 2


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 21, 2011 7:45 pm

உணவுப் பழக்கம் இப்படி இருக்க வேண்டும்

சத்துவகுணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய மூன்று குணங்களில் ஒரு குணம் ஒருவனுக்கு அதிகமாக இருக்கும். இந்த மூன்று குணங்களில் சத்துவ குணமே நல்ல குணமாகும். ரஜோ குணம் உள்ளவன் கோபக்காரனாகவும் தமோ குணம் உள்ளவன் மந்த புத்தி உள்ளவனாகவும் இருப்பான். சத்துவ குணம் வளர பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உணவுப் பழக்கம் ஆகும்.

முதலில் நாம் சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து சாப்பிட வேண்டும். எப்படி தூண்டிலில் உள்ள தீனியை நினைக்காத மீனும் பொறியில் உள்ள உணவைப் பற்றி நினைக்காத எலியும் மாட்டிக் கொள்ளுமோ அவ்வாறு பார்த்தது எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது. எது செரிக்குமோ அதைத்தான் சாப்பிட வேண்டும். அவ்வாறு செரித்தாலும் எது உடம்புக்கு ஆரோக்கியம் கொடுக்குமோ அதைத்தான் சாப்பிட வேண்டும். சாப்பிட சுவையாக இருக்கின்றது என்று எண்ணி சாப்பிட்டு விட்டு அது உடம்புக்கு கெடுதல் செய்யுமானால் அதை சாப்பிடக் கூடாது.

பகவானுக்கு நைவேத்தியம் செய்து விட்டுத்தான் நாம் சாப்பிட வேண்டும். அப்போது தான் நமக்கு சத்துவ குணம் வளரும். குளிக்காமலும் பெருமானுக்கு நிவேதனம் செய்யாமலும் சாப்பிடக் கூடாது. (ஆனால் இவ்வாறு பிற இடத்தில் செய்யப் பட்ட உணவுப் பற்றி தெரியாததால் [சமைக்கும்போது உள்ள குணம், பெருமானுக்கு நிவேதனம் செய்ததா இல்லையா என்பது பற்றி ] ) சாப்பிட தவிர்ப்பவர்களைப் பற்றி ஒரு சாரர் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

அடுத்து அதிக காரம், சூடு, உப்பு, கார்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. இவ்வாறு சாப்பிட்டால் நமக்கு ரஜோ குணம் தான் வளரும். அடுத்து மிச்சத்தை சாப்பிடக் கூடாது. எச்சில் படாத உணவைத் தான் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் நமக்கு தமோ குணமே வளரும்.

அடுத்து எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி. இரண்டு வேளை சாப்பிடுபவன் போகி. மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி. அதற்கு மேல் அதாவது நான்கு, ஐந்து வேளைகளைப் பற்றி அவர் கூறவில்லை. அவ்வாறு சாப்பிடுவோம் என்று நினைக்க வில்லை போலும்.

சத்துவ குணம் இருந்தால்தான் பகவானைப் பற்றி சிந்தனை வரும். இல்லை என்றால் சிந்தனையே வராது. இவ்வாறு சத்துவ குணம் வளர சாப்பிட வேண்டிய உணவுப் பழக்கத்தைப் பற்றி விதுர நீதியில் கூறியுள்ளார். அடுத்து வரும் நீதியில் என்ன சொன்னார் என்று அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

உறவாக இருந்தாலும் நீதியையே சொல்ல வேண்டும்.

மகாபாரத்தில் அரிய பல கருத்துக்கள் சொல்லப் பட்டுள்ளன. அதில் நாம் விதுர நீதியைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து நீ சுவராஸ்யமான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிராயே நன்மை தரும் பல விஷயங்களை மேலே சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

விதுரர் தொடர்கிறார். திருதராஷ்டிரா எல்லா ஜீவ ராசிகளிடம் நேர்மை யாக நடந்துக் கொண்டாலே சகல தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். எனவே எப்போதும் நியாமாக நடந்து கொள் என்று கூறுகிறார். மேலும் உதராணமாக பிரகலாதன் எப்படி நியாமாக நடந்து கொண்டான் என்பது பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேள் என்று ஒரு கதையை ஆரம்பிக்கிறார்.

பிரகலாதனுக்கு விரோச்சணன் என்று ஒரு மகன் இருந்தான். (பிரகலாதன் தந்தை ஹிரண்ய கசிபு, பிரகலாதன் மகன் விரோச்சணன் மற்றும் விரோச்சணன் மகன் மகாபலி ஆவார்கள். ) பிரகலாதனுக்கு வயதாகிற்று. விரோச்சணன் வாலிபத்தை அடைந்தான். அப்போது சுதன்வா என்ற பிரமாணனும் அந்த ராஜ்யத்தில் இருந்தான். அங்கு கேசினி என்ற அழகிய பெண்ணும் இருந்தாள். கேசினியை மணக்க விரோச்சணனும் சுதன்வாவும் ஆசைப் பட்டார்கள். எனவே கேசினிக்கு குழப்பம் ஆயிற்று. எனவே இரண்டு பேரில் ஒருவனை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தாள். கேசினியை விரோச்சணன் சந்தித்தான். நாங்கள் தேவர்கள், பிராமணர்கள் மற்றும் அனைவரையும் வென்றாயிற்று. நான்தான் சுதன்வாவை விட உயர்ந்தவன். என்னை மணந்து கொள் என்று கேட்டுக் கொண்டான்.

கேசிநியோ உனக்கு மட்டும் தான் என்னை மணக்க தகுதியோ! சுதன்வாவுக்கு ஏன் தகுதி கிடையாது. நாளை இரண்டு பேரும் வாருங்கள் நான் எனக்கு பிடித்தமானவரை தேர்ந்தெடுக்கிறேன் என்று கூறினாள்.

மறு நாள் விரோச்சணன் முதலில் வந்தான். கேசினியின் அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். பிறகு சுதன்வா அங்கு வந்தான். கேசினி சுதன்வாவை நமஸ்கரித்தாள். அவனுக்கு தர வேண்டிய மரியாதையை தந்தாள். பிறகு விரோச்சணன் சுதன்வாவைப் பார்த்து நீயும் இங்கு அமர்ந்து கொள் என்று கூறினான். சுதன்வாவோ தகப்பனார் பக்கத்தில் பிள்ளை அமர்ந்து கொள்ளலாம். ஒரு சத்திரியன் அருகில் மற்றொரு சத்திரியன் அமர்ந்து கொள்ளலாம். ஒரு பிராமணன் அருகில் மற்றொரு பிராமணன் அமர்ந்து கொள்ளலாம். ஒரு உயர்ந்தவன் ஒருகில் மற்றொரு உயர்ந்தவன் அமர்ந்து கொள்ளலாம். நான் உனது அருகில் அமர மாட்டேன் என்று கூறினான். அதற்கு விரோச்சணன் ஆமாம் நீ கீழேயே தர்ப்பத்தை விரித்து அமர்ந்து கொள் என்று கேலி செய்தான்.

அதற்கு சுதன்வா விரோச்சனனைப் பார்த்து நான் உன்னவிட உயர்ந்தவன். நான் உட்கார்ந்திருந்தால் உனது தந்தை எனக்கு சமமாக உட்காரமாட்டார். எனவே நான்தான் உயர்ந்தவன் என்று கூறினான். இரண்டு பேருக்கும் யார் உயர்ந்தவர் என்ற போட்டி உண்டாயிற்று. விரோச்சணன் என்னிடம் உள்ள சொத்து அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன், நீ உயர்ந்தவன் என்று தெரிந்தால் அத்தனையையும் கொடுத்து விடுகிறேன் என்று கூறினான். அதற்கு சுதன்வா, வேண்டும் என்றால் உயிரை பணயமாக வைப்போம் மற்ற எந்த சொத்தும் எனக்கு தேவை இல்லை என்று கூறினான்.

இருவருக்கும் நீதியை சொல்ல ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமே. எனவே சுதன்வா விரோச்சனனைப் பார்த்து இந்த தேசத்து ராஜாவும் உனது தந்தையும் ஆகிய பிரகலாதனுக்கு அந்த தகுதி இருக்கிறது. அவர் நியாயத்தை சரியாக சொல்வார். அவரிடம் செல்வோம் என்று கூறினான். விரோச்சணனும் ஒத்துக் கொண்டு பிரகலாதனிடம் செல்ல முடிவு செய்தனர்.

இருவரும் ராஜாவிடத்தில் சென்றார்கள். இருவரும் சேர்ந்து வருவதை பார்த்து விரோச்சனிடம், சுதன்வா உனக்கு நண்பனா என்று கேட்டார். அதற்கு விரோச்சணன் நாங்கள் இருவரும் நேர் விரோதம் கொண்டவர்கள் யார் உயர்ந்தவர் என்று தெரிந்து கொள்ள வந்துள்ளோம் என்று கூறினான். ராஜாவும் நடந்ததை கேட்டு உயிரைப் பணயமாக வைத்துள்ளதுப் பற்றியும் அறிந்துக் கொண்டார். பிறகு ராஜா சுதன்வாவை நமஸ்கரித்து பருத்த வெள்ளைப் பசுவை தானமாக கொடுத்தார்.

சுதன்வா, இந்த தானத்தை விட உன்னிடம் சத்யத்தை எதிர்ப் பார்க்கிறேன். எனவே சத்யத்தை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ராஜாவோ நீ பிரம்மத் ஞாநி அவனோ எனது பிள்ளை, நான் என்ன கூற வேண்டும் என்று சுதன்வாவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார். சுதன்வா உனது சொத்தையும் ராஜ்யத்தையும் உனது மகனுக்கு கொடு. நீ சத்யத்தை மட்டும் சொல். எங்களில் யார் உயர்ந்தவர் என்று கூறு என்று கேட்டுக் கொண்டான்.

ராஜா இந்த தர்ம சங்கடாமான சூழ்நிலையில் நான் பொய் சொல்லிவிட்டால் என்ன ஆகும் என்று கூறு என்று கேட்டுக் கொண்டார். சுதன்வா பொய் சொல்பவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றி கூறினான்.

நீ ஒரு வேளை பொய் சொல்லிவிட்டால் -

1. அக்னி முன்பு கை பிடித்த மனைவியை வேறு பெண்ணிற்க்காக கை விட்டு விட்டால் முதல் மனைவிக்கு ஏற்படும் துன்பத்தை அனுபவிப்பாய்.

2. சூதாட்டத்தில் மொத்த சொத்தையும் இழந்து விட்டவன் எவ்வாறு தவிப்பானோ அவ்வாறு தவிப்பாய்.

3. தலை முழுக்க அதிக பாரத்தை ஏற்றி விட்டு அவனை வெய்யிலில் விட்டால் அவன் எவ்வாறு தவிப்பானோ அவ்வாறு தவிப்பாய்.

மேலும் பொய் சொல்பவர்கள் என்ன தண்டனைக்கு உள்ளாவர்கள் என்றும் சுதன்வா கூறினான்.

1. பிராநிக்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் ஐந்து தலை முறை கெட்டுப் போவான்.
2. பசுவுக்காக பொய் சொன்னால் அவன் பத்து தலை முறை கெட்டுப் போவான்.
3. ஒருவன் குதிரைக்காக பொய் சொன்னால் அவன் நூறு தலை முறை கெட்டுப் போவான்.
4. ஒருவன் ஒரு பெண் விஷயத்திற்காக பொய் சொன்னால் அவன் ஆயிரம் ஜென்மம் கெட்டுப் போவான்.
5. தங்கத்திற்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் ஒரு தலை முறை முன்பும் ஒரு தலை முறை பின்பும் கெட்டுப் போவான்.

ஆனால் பூமிக்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் எத்தனை தலை முறை உண்டோ அதனை தலை முறையும் கெட்டுப் போவன். கேசினி பூமிக்கு சமம். அவள் விஷயத்தில் பொய் சொல்லக் கூடாது. எனவே எங்களில் யார் உயர்ந்தவர் என்று சரியாக சொல் என்று கேட்டுக் கொண்டான்.

பிரகலாதன் நறுக்கு தெரித்தார் போல தனது தீர்ப்பை சொன்னார். சுதன்வா தந்தை உனது தந்தையை விட உயர்ந்தவர். சுதன்வா தாய் உனது தாயை விட உயர்ந்தவர். விரோச்ச்சனா நீ அகங்காரம் கொண்டு உள்ளாய். உன்னைவிட சுதன்வாவே உயர்ந்தவன் என்று கூறி முடித்தார். பிறகு சுதன்வாவை நமஸ்கரித்து எனது மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடு என்றும் கேட்டுக் கொண்டார்.

சுதன்வா எனக்கு உனது மகனின் உயிர் வேண்டாம். கேசினியும் எனக்கு வேண்டாம். நீ சத்யம் தவறாது பேசினாயே அது போதும் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். இவ்வாறு கதையை முடித்து விட்டு விதுரர் அமைதி காத்தார். பிறகு பாண்டவர்களுக்கு சேர வேண்டிய ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்துவிடு என்று திருதராஷ்டிரனிடம் கூறினார்.




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விதுர நீதி - பகுதி 2 1357389விதுர நீதி - பகுதி 2 59010615விதுர நீதி - பகுதி 2 Images3ijfவிதுர நீதி - பகுதி 2 Images4px
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Oct 21, 2011 8:01 pm

சுதன்வா எனக்கு உனது மகனின் உயிர் வேண்டாம். கேசினியும் எனக்கு வேண்டாம். நீ சத்யம் தவறாது பேசினாயே அது போதும் என்று சொல்லி விட்டு சென்று விட்டான்

மிகவும் பிடித்த இடம் புன்னகை சூப்பருங்க



விதுர நீதி - பகுதி 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! விதுர நீதி - பகுதி 2 599303
விதுர நீதி - பகுதி 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! விதுர நீதி - பகுதி 2 102564

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக