புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திக்குவாய்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
திக்குவாய் என்பது இன்று உலகம்தழுவிய ஒரு மருத்துவப் பிரச்னையா?
திக்குவாய் என்பது இன்றைய நாளில், செல்வந்த நாடுகள், ஏழைநாடுகள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உலக நாடுகள் த ழுவிய பொதுவான மருத்துவப் பிரச்னையாகும். டாக்டர் வில்லியம் என்ற ஆய்வு வல்லுநர் கணக்குப்படி, அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 மில்லியன் ஆடவர்கள் திக்குவாய்க்கு ஆளாகின்றார்கள். திக்குவாய் பற்றி விரிவான ஆய்வு நிகழ்த்திய ஆய்வு வல்லுநர்கள் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் தொகையில் குறைந்தது ஒரு விழுக்காட்டினர் திக்கு வாய்க்கு ஆளாகின்றார்கள் என கணக்கிட்டுள்ளார்கள். எனவே திக்குவாய் என்பது இன்றைய நாளில் உலகம் தழுவிய ஒரு மருத்துவ பிரச்னை மட்டுமல்ல, சமுதாய பிரச்னையும்கூட.
திக்குவாய் என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை, கவலை கொள்ளத்தக்க ஒரு மருத்துவ பிரச்னையா?
அண்மையில் எடுத்த புள்ளிவிவரம் ஒன்று நம் நாட்டில் மட்டும் சுமார் 8,50,00,000 திக்குவாயர்கள் இருப்பதாகக் கூறுகின் றது. உலக நாடுகளில் மிகவும் அதிகமான திக்குவாயர்களைக் கொண்ட நாடு என்ற அவலநிலை கொண்டதாகும். திக்குவாய் என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை, செல்வந்தர்கள், வறியவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் பற்றும் பொதுவான நோயாகும். நம்நாட்டைப் பொறுத்தவரை திக்குவாயை மருத்துவ ரீதியாக நலப்படுத்தக் கூடிய, சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களும், இத்தகைய துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற தொழில் நுட்ப வல்லுநர்களும் மிகவும் குறைவான அளவில் உள்ளனர். இத்தகைய எண்ணிக்கையானது நமது தேவையை ஈடுகட்டும் அளவிற்கு போதுமான அளவில் இல்லை. மேலும் இவர்கள் நம்நாட்டிலுள்ள நகர்ப்புறங்களில் மட்டும் உள்ளனர். எனவே, நம் நாட்டிலுள்ள திக்குவாயிற்கு ஆளானவர்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவப் பயிற்சியை அளிப்பது என்பது கனவிலும், எண்ணிப்பார்க்க இயலாத ஒன்றாகும்.
திக்குவாய் என்றால் என்ன?
உச்சரிக்க வேண்டிய அல்லது சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாகவும் சொல்ல இயலாது, ஒரு மனிதன் தன் எண்ணத்தை சொற்களின் மூலம் வெளிப்படுத்த இயலாது போராடும் அவலநிலையை நாம் திக்குவாய் எ ன்று கூறுவதுண்டு. திக்கு வாயை ஆங்கிலத்தில் STAMMERING அல்லது SHUTTERING என்று கூறுவது ண்டு.
தன்னுடைய எண்ணத்தை சொற்களால் வடித்து, தங்கு தடையின்றி, தெளிவாகவும், சொல்ல இயலாமல் ஒரு குழந்தையோ அல்லது ஒரு ஆடவரோ போராடும் அவலநிலைதான் திக்குவாயாகும். தனி மனிதனின் தகவல் தொடர்பு முறையால் அடிக்கடி ஏற்படும் தட்டுத் தடங்கல்கள் என்று பொதுவாகக் கூறுவதுண்டு (It is a Communication Disorder). உலக சுகாதார அமைப்பானது (WHO) திக்குவாயை கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றது. ‘‘பேசும் சொற்களின் எண்ணிக்கையோ அல்லது சீர் நிலையோ பாதிக்கப்படுவதால் சொற்களின் கோர்வை பாதிக்கப்படும் நிலையை திக்குவாய் என்று கூறலாம்.’’
பொதுவாக திக்குவாய் எந்த வயதில் தோன்றும்?
குழந்தைகள் பேசக் கற்கும் காலத்தை பொதுவாக மருத்துவர்கள் 2 முதல் 5 வயது வரை என கணித்துள்ளார்கள். இந்த கால கட்டத்தில் தான் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு திக்குவாய் முதன் முதலாக தோன்றுவது வழக்கமாகும். சில சமயங்களில் மிகவும் அபூர்வமாக, இளமைப்பருவ காலத்தில் கூட திக்குவாய் ஏற்படக் கூடும்.
பெண்குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிக அளவில் திக்குவாயிற்கு ஆளாவதற்கு அடிப்படைக் காரணங்கள் எ ன்ன?
5 ஆண் குழந்தைகளுக்கு ஒரு பெண் குழந்தை என்ற விகிதத்தில் திக்குவாயானது குழந்தைகளைப் பற்றுகின்றது. இதற்கு ப ல்வகையான காரணங்கள் உள்ளன. திக்குவாய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் தன்மை கொண்ட மாறுபட்ட நிலையாகும். பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட முன்னதாகவும், விரைவாகவும் பேசும் திறன் இயற்கையாக பெற்றுள்ளன. மேலும் பெண் குழந்தைகள் இயல்பாக அடிக்கடி, பேசும் ஆற்றலை இயற்கையாக பெற்றுள்ளன. இதன் வி¬ ளவாக, மிகவும் இளம் வயதிற்கு, பெண் குழந்தைகள் இயற்கையாக சரளமாக பேசும் ஆற்றலை பெறுகின்றார்கள். இதன் விளைவாக, பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைப் போல் அதிக அளவு திக்குவாயிற்கு ஆளாகுவதில்லை.
ஆண் குழந்தைகள் அதிக அளவு திக்குவாயிற்கு ஆளாகுவதற்கு அடிப்படைக் காரணங்கள், அவர்களின் பெற்றோர்களின், பேராசையும், அறியாமையும்தான் அடிப்படைக் காரணங்களாகும். பல்வகையான போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் தங்களுடைய குழந்தைகள் குறிப்பாக, ஆண் குழந்தைகள், அவர்களின் இயற்கையான மூளைத்திறன், ஆர்வம் இவற்றை கணக்கிடாமல் தங்களுடைய பேராசையின் காரணமாக, கல்வியில் முதலாவதாக வரவேண்டும் என்ற பேராசையின் காரணமாக, குழந்தைப் பருவத்தில், ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் கல்வி என்ற பெயரில் பல்வகையான சுமைகளை குழந்தைகள் சுமக்க இயலாத அளவிற்கு ‘‘குருவி தலையில் பனங்காய்’’ என்ற கோட்பாட்டில், குழந்தைகளை பல்வகையான மன இறுக்கத்திற்கு ஆளாக்குகின்றார்கள். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் அதிக அளவு பல்வகையான மன இறுக்கத்திற்கு ஆளாக்கப்படுவது முதன்மையான காரணமாகும்.
நாம் எவ்வாறு சரளமாகவும் தெளிவாகவும் பேசுகின்றோம்?
திக்குவாய் ஏன் ஏற்படுகின்றது என்ற கேள்விக்கு நாம் பதில் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் எவ்வாறு கோர்வையாகவும், சரளமாகவும் தெளிவாகவும், தங்கு தடையின்றி பேச முடியும் என்பது பற்றி சில உண்மைகளைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
பேசும் கலையென்பது மனித குலத்திற்கு இயற்கை அளித்த இனிய சிறப்பு மிக்க பரிசாகும். நாம் பேச வேண்டுமென்றால் அந்த எண்ணமானது முதலில் மூளையில் உதிக்கின்றது. நாம் என்ன பேசப்போகின்றோம் என்றபடி மூளை முடிவு செய்து அதற்குத் தேவையான சொற்களை நாம் மூளையின் நினைவு வங்கியில் (MEMORY BANK) ல் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம். இதன் பின்னர் நமது உடலிலுள்ள பேசும் உறுப்புகள் (Organ of Voice) செயல்படத் தொடங்குகின்றன.
நாம் உள்மூச்சு, வெளி மூச்சு விடும் பொழுது, வெளிவரும் காற்றானது, தொண்டைப் பகுதிகளிலுள்ள ‘‘குரல் நாண்களுக்குள் (VOCAL CORDS) சென்று குரல் அதிரச் செய்து ஒலி எழுப்புகின்றன. இந்த ஒலி அலைகளாவது மேற்புறமாக வாய்ப்பகுதிக்கு செல்லும் பொழுது, உதடுகள், நாக்கு, அன்னம், வாய் இவற்றின் ஒட்டுமொத்த, ஒருங்கிணைந்த இயக்கங்களின் காரணமாக, ஒலி அலையானது சொற்களாக மாற்றப்பட்டு, சொற்றொடர்களாக தெளிவாகவும், சரளமாகவும் உதடுகளிலிருந்து வெளி வருகின்றன. எனவே நாம் தெளிவாகவும், சரளமாகவும் பேச வேண்டுமென்றால், மூளையிலுள்ள பல்வகையான நரம்பு அமைப்புக்கான செயல்பாடுகள் மட்டுமல்லாமல் உடலிலுள்ள பேச்சு உறுப்புக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு சேர செயல்படுவது மிகவும் அவசியமாகும்.
திக்குவாய் ஏன் ஏற்படுகின்றது?
திக்குவாய் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு விடை காண ஆயிரக்கணக்கான மருத்துவ கட்டுரைகளும், நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்தாலும், இன்றும் இதுவரை யாராலும் திக்குவாய் ஏன் ஏற்படுகின்றது என்ற கேள்விக்கு முழுமையாக உடலியல், உளவியல், நோய் இயல் அடிப்படையில் முழுமையான விளக்கத்தை அளிக்க இயலவில்லை. இருந்தாலும் இதற்கெல்லாம் பல்வகையான பதில்கள் கூறப்படுகின்றன. இவற்றில் சில முக்கிய கருத்துகளை மட்டும் இங்கு காணுவோம்:
திக்குவாய்க்கு காரணமான முதல் கருத்தானது தான் பேசும் ஒலியைக் கேட்பதில் ஏற்படும் காலதாமதத்தின் விளைவாக திக்குவாய் ஏற்படுகின்றது என்கின்றது. நலமான நிலையில் நாம் பேசும் ஒலியை காதானது, 17 மில்லி செகண்ட் நேரத்தில் கிரகித்துக் கொள்வது வழக்கமாகும். ஆனால் திக்குவாயினால் அவதியுறுவோர்களுக்கு பேசும் ஒலியை காதானது ஈர்க்கும் நேரமானது, வழக்கத்திற்கு மாறாகவும், இயற்கைக்கு மாறாகவும் மிகவும் அதிகமாகின்றது. இந்த இடைவெளி அதிகமாதலால் உச்சரிக்கும் சொல்லை கேட்க இயலாததால் இவர்கள் சொன்ன சொற்களை திரும்பத் திரும்ப சொல்லி அவதியுற வேண்டிய அவலநிலை ஏற்படுகின்றது.
மூளைத் தாக்கம் (STROKE), சிறு மூளை பாதிப்பு, மூளையில் ஏற்படும் பல்வகையான காயங்கள் போன்ற நோய் இயல் காரணங்கள் சில சமயங்களில் இதற்கு வழிவகுக்கக் கூடும். இத்தகைய காரணிகள் யாவும் மிகவும் அபூர்வமான காரணிகளாகும்.
துள்ளித் திரியும் குழந்தைப் பருவத்தில் குழந்தைகளை உள்ளத்தாலும் உடலாலும் அளவிற்கு அதிகமாக துன்புறுத்தும் பெற்றோர்கள்.
குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் வளர்க்கின்றேன் என்ற போர்வையில் குழந்தைகளுக்கு அதிக மனச்சுமையை அளிக்கும் பெற்றோர்கள்.
குழந்தைகளின் இயற்கையான அறிவு ஆற்றலுக்கு அப்பால், குழந்தைப் பருவத்தில், கல்வியில் குழந்தையை முதல் மாணவனாக வரவேண்டுமென பேராசை பிடித்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிகமான மனஉளைச்சலை ஏற்ப டுத்துதல். இவை போன்ற சூழல்கள் குழந்தைகளுக்கு திக்குவாய் ஏற்பட வழிவகுக்கின்றன.
திக்குவாய் பற்றி விரிவான ஆய்வு நிகழ்த்திய அமெரிக்க நாட்டு ஆய்வு வல்லுநர், மார்ட்டின் ஹிவார்ட்ஸ் என்பவர், குழந் தைகளை இயற்கைக்கு மாறாக குழந்தைப் பருவத்தில் பல்வகையான மன உளைச்சலுக்கு ஆளாக்குவதால் குழந்தைகளின் கு ரல் நாண்கள் இறுக்க நிலையை அடைந்து திக்கு வாயிற்கு வழி வகுக்கின்றது என்கின்றார்.
சாதாரண குழந்தைக்கும் திக்குவாய் குழந்தைக்கும் உடல் அளவில் ஏதாவது வேறுபாடுகள் உண்டா?
அமெரிக்காவிலும், மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், சாதாரணமாக பேசும் நலமான குழந்தைகளுக்கும், திக்குவாயிற்கு ஆளான குழந்தைகளுக்கும் உடல் அளவிலும், உளவியல் அளவிலும், ஏதாவது வேறுபாடுகள் உள்ளனவா என்பது பற்றி நீண்ட கால ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டது. இத்தகைய நீண்ட கால ஆய்வு முடிவானது, இந்த இரண்டு வகை குழந்தைகளின் உடலில் ஏதாவது உளவியல், உடலியல் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்பது பற்றி ஆய்வு செய்த பொழுது, இவர்களின் உடலில் எவ்வகையான உடலியல், உளவியல் மாற்றங்கள் எதுவும் இல்லையென்றும் இரண்டு வகையான குழந்தைகளும் ஒரே தன் மை கொண்டவர்களாக இருப்பதைக் கண்டனர். ஆனால் குழந்தைகள் திக்கிப் பேசும் போதும் மட்டும் தற்காலிகமாக வேற்றுமைகள் உள்ளன என்கின்றார்கள்.
பிறக்கும் பொழுது எந்தக் குழந்தையும் திக்குவாயாக பிறப்பதில்லை. குழந்தைகள் சூழ்நிலையின் காரணமாகத்தான் திக்கு வாயர்களாக மாற்றப்படுகின்றார்கள். இந்தக் கூற்றில் எந்த அளவு உண்மை உள்ளது?
திக்குவாய் என்பது மரபுவழி சீர்கேட்டின் பல பண்பகங்களால்தான் ஏற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்த தற்பொழுதுள்ள ஆய்வு முடிவுகளால் உறுதியாக நிலை நாட்ட முடியவில்லை. எனவே இதுவரை ஆய்வு முடிவுகள் மரபு வழி காரணத்தை நிலை நாட்டமுடியவில்லை. எனவே மரபு வழி பிரச்னையல்ல, பெரும்பாலும் இத்தகைய குறைபாடு ஏற்பட குழந்தை வள ரும் குடும்ப சூழல்தான் மிகவும் முக்கிய காரணமாகும். ஏனென்றால் குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் குழந்தை பேச கற்றுக்கொள்ளும் பொழுது, குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் சொற்களை உச்சரிக்கும் முறையை குழந்தைகள் அப்படியே பின்பற்றுகின்றார்கள். எனவே குடும்பத்தில், தந்தையோ, அல்லது தாயோ அ ல்லது அண்ணன், அக்கா, போன்றவர்களில் யாராவது திக்கு வாயிற்கு ஆளாகியிருந்தால், குழந்தையானது பேசக் கற்றுக் கொள்ளும் பொழுது அவர்கள் சொற்களை உச்சரிக்கும் முறையை குழந்தை அப்படியே பின்பற்றி, குழந்தையும் திக்குவாயாக மாற வாய்ப்பு உள்ளது.
ஒரு குழந்தையானது திக்குவாய்க்கு ஆளாகும் பொழுது அந்தக் குழந்தையின் நிலை எவ்வாறு இருக்கும்?
திக்குவாயிற்கு ஆளாகும் பொழுது குழந்தையானது ஒரு சொற்றொடரில் ஒரு சொல்லை மட்டும் திரும்பத் திரும்ப உச்சரிக்கக் கூடும் கிளிப் பிள்ளையைப் போல். சான்றாக ‘‘அம்மா’’ என்ற சொல்லை அம்மா! அம்மா! அம்மா! அம்மா என்ற ஒரே சொல்லை பலமுறை திரும்பத் திரும்ப உச்சரிக்கக் கூடும். அல்லது அ,அ,அ,அ,அ என்று திரும்பத் திரும்ப உச்சரிக்கக் கூ டும். ஒரு குழந்தையானது வேகமாக, சொற்களை உச்சரிக்கும் பொழுது அல்லது அதிக அளவு உணர்ச்சி வசப்படும் பொழு து, திக்குதலின் தன்மையானது பன்மடங்கு அதிகமாகக்கூடும். குழந்தையானது திக்குதலுக்கு ஆளாகும் பொழுது, குழந்தையின் முகத்தில் சிலவகையான மாற்றங்கள் ஏற்படுவதோடு அல்லாமல், மூச்சுவிடும் தன்மையும் மாறுபடும்.
திக்குவாய் என்பது குழந்தைகளைப் பற்றும் ஒருவகையான நோயா?
நம்நாட்டில் பெரும்பான்மையான மக்கள், பாமரர்கள் மட்டுமல்லாமல், படித்தவர்களும் திக்குவாயை ஒருவகையான நோய் எ ன்றே தவறாக கருதுகின்றார்கள். உண்மையில் திக்குவாய் என்பது குழந்தையின் தனிப்பட்ட தகவல் தொடர்பு முறையால் ஏற்படும் ஒரு வகையான இயற்கைக்கு மாறுபட்ட தொடர்பு அறுந்து விட்டு விட்டு ஏற்படும் தகவல் தொடர்பு முறையாகும் (மிt வீs ணீசிளிவிவிஹிழிமிசிகிஜிமிளிழி ஞிமிஷிளிஸிஞிணிஸி). பெரும்பான்மையான மக்கள் நினைப்பது போல் இது ஒரு வகையான குழந்தையைய் பற்றும் தொற்றுநோய் அல்ல.
திக்குவாயை நலப்படுத்த பெற்றோர்கள் தொடக்க நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியதின் அவசியம் என்ன?
குழந்தையின் வளர்ச்சிக் கட்டத்தில் பேச்சுத் திறன் என்பது முக்கிய மைல் கல்லாகும். இத்தகைய காலகட்டத்தில் பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். ஏனென்றால் திக்குவாயிற்கு ஆளாகும் குழந்தைகள், தான் பேசினால் அடிக்கடி திக்கும் - இதனால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகக் கூடும் என்ற அச்சத்தில் மற்றவர்களுடன் பேசுவதை தவிர்த்து சற்று ஒதுங்கி வாழ நினைக்கும். இதன் விளைவாக பள்ளிச் சூழலிலும், குடும்பச் சூழலிலும், மற்றவர்களுடன் ஒதுங்கி தனித்து வாழ நினைக்கும்.
இதன் விளைவாக திக்குவாய் குழந்தைகளுக்கு மனதில் தாழ்வு மனப்பான்மை தோன்றும். கொஞ்சம் கொஞ்சமாக குழந் தையின் ஆளுமை பல வழிகளில் பாதிக்கக் கூடும். மேலும் குழந்தையானது தன்னம்பிக்கையை இழக்கத் தொடங்கும். இதன் விளைவாக, பள்ளியில் இவர்களுடைய கல்வித் திறனானது மற்ற குழந்தைகளை விட ஒப்பிடும் பொழுது மிகவும் பின் தங்கியே இருக்கும். குடும்பத்திலுள்ள மற்றவர்களுடன் அவர்கள் பழகும் விதமானது மிகவும் மாறுபட்டு இருக்கும், எதிர்கால த்தில் இவர்களுடைய திருமணத்திற்குப் பின் உள்ள உறவுகள் யாவும் சற்று மாறுபட்டே இருக்கும். இவர்களுக்கு வாழ்க்கை என்பது இருள் நிறைந்த குகையாக காட்சியளிக்கும். எனவே, திக்குவாயான தொடக்க நிலையில் விழிப்புணர்வு கொண்டு, கு ழந்தைகள் எதிர்காலத்தை மனதில் கொண்டு, தொடக்க நிலையில் தக்க மருத்துவ உதவியை நாடுவது அவசியமாகும்.
திக்குவாய் குழந்தைகள் பாடும் பொழுது மட்டும் தடங்கலின்றி மிகவும் தெளிவாகப் பாடுகின்றார்களே? இதற்கு காரணமென் ன?
திக்குவாயிற்கு ஆளான குழந்தைகள் பாடும்பொழுது, பாடும் பாடலின் வரிகளை முன் கூட்டியே பயிற்சியின் மூலமாக உச்சரிக்கக் கற்றுக் கொள்கின்றன. மேலும் தொடர்ந்து நிகழும் பயிற்சியின் மூலமாக, பாடலின் வரிகளை தெளிவாக மனப்பாடம் செய்து கொள்கின்றன. இதனால் இந்த குழந்தைகள் பாடலின் வரிகளை முழுமையாக புரிந்து கொண்டு உச்சரித் துப் பாடுவதால் எவ்வகையான மனக்குழப்பத்திற்கும், திக்குதலுக்கும் ஆளாகாமல் பாடும் பொழுது தெளிவாக பாடலின் வரிகளை உச்சரிக்கின்றன. இதனால் திக்குதலுக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளன.
வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொண்டு தொடர்ந்து பேசினால் திக்குவாயை நலப்படுத்த முடியுமெனக் கூறுகின்றார்கள். இத்தகைய முறையில் எந்த அளவு, மருத்துவ அறிவியல் உண்மை உள்ளது?
பல நூற்றாண்டு காலமாக, நம்நாட்டில் மட்டுமல்ல, பெரும்பான்மையான நாடுகளில் தொன்று தொட்டு நிலவி வரும் மூடநம்பிக்கையாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிரேக்க நாட்டில் வாழ்ந்த அறிஞர் டொமாஸ்தனிஸ் தன்னுடைய திக்குவாயைப் போக்க, கூழாங்கற்களைப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது. இளம் வயதில் திக்குவாயால் அவதிப்பட்ட, டொமாஸ்தனிஸ் வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொண்டு நீண்ட நாட்களாக பேசிப் பேசி, தன்னுடைய திக்குவாயை திறமையாக போக்கியதோடு அல்லாமல் கிரேக்கம் புகழும் சிறந்த பேச்சாளராக விளங்கினார் என வரலாறு கூறுகின்றது.
சரளமாகவும் தெளிவாகவும் பேசும் ஆடவர்கள், குழந்தைகளின் நாவானது வாயின் அகப்புறத்தில் குறிப்பிட்ட இடத்தை தொடுவது வழக்கமாகும். ஆனால் திக்குவாயிற்கு ஆளாகும் குழந்தையின் நாவானது இயற்கைக்கு முரணாக வாயின் அகப்பகுதியின் வேறு பகுதியில் தொடும். குழந்தையின் வாயில் கூழாங்கற்கள் அடைத்துக் கொண்டிருப்பதால், குழந்தையின் சிந்தனையும், கவனமும் திசை திருப்பப்படுகின்றது. அதாவது குழந்தைகளானது, கூழாங்கற்களை விழுங்கி விடுவோமோ என்ற பயத்தில் சொற்களை உச்சரிக்கும் பொழுது பதட்டம் அடையாமல் தெளிவாக உச்சரிக்கின்றன. இத்தகைய முறையானது, திக்குவாயைப் போக்க சிறந்த முறையல்ல. ஏனென்றால் குழந்தையின் வாயினின்று கூழாங்கற்களை எடுத்து விட்டால் குழந்தை மறுபடியும் திக்க ஆரம்பிக்கும். மேலும் குழந்தையானது தவறுதலாக, கூழாங்கற்களை விழுங்கி விட்டால், அதன் விளைவுகள் கடுமையானது. வாயில் கூழாங்கற்களைப் போட்டு திக்குவாயைப் போக்குவது என்பது கிரேக்க அறிஞருக்கு வேண்டுமென்றால் சிறந்த முறையாக பயன்பட்டிருக்கலாம். தற்கால முறைக்கு ஏற்றதல்ல.
திக்குவாய் குழந்தைகள் ஆர்ப்பரிக்கும் அலை கடலுக்கு முன்னர் நின்று உரக்கக் கத்தி பயிற்சி செய்தால் திக்குவாயைப் போக்க முடியும் என்கின்றார்களே. இதில் எந்த அளவு உண்மை உள்ளது?
திக்குவாய் தொடர்பாக உலகின் பலநாடுகளில் நிலைத்து வரும் நம்பிக்கைகளில் இது ஒன்றாகும். ஆர்ப்பரிக்கும் அலைகட லுக்கு முன்னர் நின்று கொண்டு உரக்கக் கத்தி பயிற்சி செய்தால் காலப் போக்கில் திக்குவாயைப் போக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை உலக அளவில் நிலவி வருகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் ஆர்ப்பரிக்கும் அலைகடல் எழுப்பும் பேர் ஒலியானது, திக்குவாய் குழந்தைகள் பேச்சு ஒலியை முழுமையாக மறைத்து விடுகின்றது. இதனால் குழந்தையானது தான் பேசும் ஒலியை திரும்பப் பேச இயலாமல் போய் விடுவதால், திக்கும் வாய்ப்பு ஏற்படுவதில்லை. ஆனால் இந்த முறையானது அமைதியான, ஓசையற்ற மற்ற இடங்களில் பேசும் பொழுது, செயல்படுமா என்பது கேள்விக்குரிய ஒன்றாகும்?
திக்குவாயை நலப்படுத்தும் தன்மையுள்ளமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா?
ஏற்கெனவே இந்தக் கட்டுரையின் முன் பகுதியில் கூறியபடி, திக்குவாய் என்பது ஒரு நோயல்ல. திக்குவாய் என்பது சரளமாக பேச இயலாது, பேச்சில் ஏற்படும் ஒருவகையான தட்டுத் தடங்கல் நிகழ்வாகும். நோயைத் தான் மருந்துகள் மூலம் தற்கால முறையில் நலப்படுத்த இயலும். எனவே, இதுவரை முழுமையாக நலப்படுத்தும் தன்மையுள்ள மருந்துகள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. நம் நாட்டில் திக்குவாயை நலப்படுத்தக்கூடிய பல்வகையான மருந்துகள் இருப்பதாக விளம்பரங்கள் மூலம் விளம்பரப் படுத்தப் படுகின்றன. இவற்றால் உங்கள் பணப்பைதான் திக்குமே ஒழிய, இதனால் எவ்வகையான பலனையும் பெற இயலாது.
திக்குவாயை நலப்படுத்தும் வாய்ப்புக்கள் எந்த அளவில் உள்ளன?
திக்குவாய் என்பது இன்றைய நாளில் நலப்படுத்த இயலாத குறைபாடு அல்ல. தொடக்கக் காலத்தில் பயிற்சிபெற்ற மருத்து வர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியை நாடி, பொறுமையுடன் தொடர்ந்து முறையான பயிற்சி பெற்றால் இந்த கு றைபாட்டு நிலையை அகற்ற முடியும். தொடர்ந்து முறையான பயிற்சி பெறும் ஐந்து குழந்தைகளில், நான்கு குழந்தைகள் மு ழுமையாக நலம் பெற்று தங்கு தடங்கல் இன்றி தெளிவாக பேசமுடியும். எனவே பெற்றோர்கள் அறிவியலுக்குப் பொருந்தாத தவறான மருத்துவ முறைகளை மேற்கொண்டு காலத்தையும், பொருளையும் வீணாக்காமல் முறையான மருத்துவத்தை மேற்கொள்வது சிறந்த முறையாகும்.
வளர்ந்து வரும் நவீன மருத்துவ தொழில்நுட்ப முறைகள் திக்குவாயை சரி செய்ய எவ்வாறு துணைபுரிகின்றது?
திக்குவாயினால் அவதியுறுவோருக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களின் குறையை சரி செய்யவும், பல்வகையான மருத்துவ தொழில் நுட்ப அறிவை அடிப்படையாகக் கொண்டு, பல்வகையான புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை திக்கு வாயை சரி செய்ய பெரிதும் துணையாக உள்ளன. கம்ப்யூட்டர்கள், ஒலிப்பதிவு நாடாக்கள், ஒலியை காலம் தாழ்த்தி அனுப்பும் கருவிகள், (DELAYED AUTIORY FEED BACK) அதிர்வலைப் பொறிகள் (VIBRATING MACHINES), ஒலி மறைப்பான்கள் (MASKER) போன்றவை, திக்குவாயை சரிசெய்ய பயன்படுத்தும் சில முக்கிய நவீன மருத்துவக் கருவிகளாகும்.
திக்குவாயிற்கு ஆளான குழந்தைகளின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?
தங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட திக்குவாயை மருத்துவ அறிவியலுக்கு ஒவ்வாத பல்வகையான மாந்திரீக முறைகளின் மூலமாக நலப்படுத்தி விட்டால் என்ற சபலங்களுக்கு ஆளாகி, பொருளையும், காலத்தையும் வீணாக்காதீர்கள்.
நீங்கள் வாழும் பகுதியிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவிலுள்ள சிறப்பு மரு த்துவரை அணுகினால், அவர் உங்கள் குழந்தைக்கு மேற்கொள்ள வேண்டிய மருத்துவமுறைகளை சிறப்பாக மேற்கொள்வார்.
இத்தகைய சிறப்பு மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரில், திக்குவாயை சரிசெய்ய இதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற திக்கு வாயை சரிசெய்யும் சிறப்புப் பயிற்சியாளர்கள் (SPEECH THRRAPIST) உங்களுக்கு அன்றாடம் தொடர்ந்து பயிற்சி அளித்து உங்கள் குழந்தைகள் திக்குவாயைச் சரிசெய்வார்.
திக்குவாய் பற்றிய நமது சமுதாயப் பார்வை ஏன் மாறவேண்டும்?
திக்குவாய் பற்றி நமது சமுதாயப் பார்வையானது முழுமையாக மாற வேண்டும். திக்குவாய் என்பது தனிமனிதரின் சொற்களை வெளிப்படுத்துவதில் ஏற்படும் ஒருவகையான குறைபாடுதான். அதை நாம் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய நாளில் குழந்தைகள் பள்ளிகளில் பலவகையான கிண்டலுக்கும் கேலிக்கு உரிய பொருளாக ஆக்கப்பட்டு, மற்றவர்கள் அவர்களுக்கு பல்வகையான மன உளைச்சலை ஏற்படுத்துவது மிகப் பெரிய சமுதாயக் கொடுமையாகும். இது போன்று திக்குவாயிற்கு ஆளான ஆடவர்களும் அன்றாட வாழ்க்கையில் கேலிக்குரிய பொருளாக ஆக்கப்படுகின்றார்கள்.
இன்றைய திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், மற்றும் இதழ்களில் வரும் நகைச்சுவை துணுக்குகளில் திக்குவாயர்கள் ஜோக்குக்குரிய பாத்திரங்களாக படைக்கப்பட்டு வருகின்றார்கள். நகைச்சுவைக்கு நல்ல கருக்கள் இருக்கும் பொழுது, திக்குவாயிற்கு ஆளாகுபவர்கள் கேலிக்குரிய பொருளாக ஆக்கப்படுவது, கண்டனத்திற்குரிய செயலாகும். எனவே, திக்குவாய் பற்றிய நமது சமுதாயப் பார்வையில் நிறைய மாற்றங்கள் தேவை. அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்ற சீரிய நோக்கு நம்மிடையே ஏற்பட வேண்டும்.
http://www.thedipaar.com/news/news.php?id=35535
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1