புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
32 Posts - 42%
heezulia
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
2 Posts - 3%
prajai
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
1 Post - 1%
jothi64
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
398 Posts - 49%
heezulia
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
26 Posts - 3%
prajai
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மறதிக்கு குட் பை. Poll_c10மறதிக்கு குட் பை. Poll_m10மறதிக்கு குட் பை. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறதிக்கு குட் பை.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 17, 2011 5:25 pm



மறதிக்கு குட் பை.


மறதி நோய் மேலை நாடுகளில்தான் அதிகம் காணப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நம் நாட்டிலும் முதியவர்களை இந்நோய் தாக்குகிறதா?

நம் நாட்டில் உள்ள மொத்த ஜனத்தொகையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடியாகும். இதில் 21 லட்சம் மக்கள் (3%) டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2050வது ஆண்டில் 60 வயதிற்கு மேற்பட் டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல் முதியவர்கள் டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக வாய்ப்புண்டு.

முதுமையில் சிலருக்கு குறைந்த அளவு ஞாபக மறதி மட்டுமே இருக்கும். (Mild Cognitive Impairment). மற்றபடி அவர்களுடைய பேச்சுத்திறன், செயல்திறன் மற்ற நடை, உடை, பாவனைகள் எல்லாமே சரியாகவே இருக்கும். இவர்களில் சரிபாதி மக்களுக்கு, அடுத்த 3 5 வருடங்களில் டிமென்ஷியா நோயின் மற்ற அறிகுறிகளும் தோன்ற வாய்ப்பு அதிகம் உண்டு. (உ.ம்) பேச்சுத் திறன் குறைதல், உரையாடல் மாற்றம் தெரிதல், செய்யும் செயலில் குறைகள் ஏற்படுதல், மறதிக் குறைவோடு இதுபோன்ற குறைகளும் அவர்களுக்கு ஏற்படும்.

வயதான காலத்தில் மறதி ஏற்படுவது முதுமையின் விளைவா? அல்லது நோயின் அறிகுறியா?

வயதான ஆண்களைவிட பெண்களே டிமென்ஷியாவினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்!

டிமென்சியா நோய் முதுமையினால் வருவது அல்ல!

நம் நாட்டில் மக்களின் வாழும் நாட்கள் அதிகரிக்க முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. முதியவர்கள் அதிகம் ஆக, ஆக டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம் ஆகிறார்கள். இது நீண்ட ஆயுட்காலத்திற்குக் கிடைத்த ஒரு தண்டணையா?

சுமார் 60 வயதைக் கடந்தவர்களுக்கு சற்று ஞாபகமறதி ஏற்படுவது சகஜம். மிகவும் பழக்கமானவர்களின் பெயர் மறந்து வி டும். புதிதாக டெலிபோன் எண்ணை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கும். பணத்தை பல முறை எண்ணிக் கொண்டே இருப்பார்கள். இப்படி பல ஞாபக மறதி சம்பவங்கள் தினமும் நடப்பது சகஜம். இது முதுமையின் விளைவு. ஆனால் பல நோய்களினாலும் ஞாபக மறதி ஏற்படலாம். முதுமையில் எந்தக் காரணமுமின்றி ஞாபக மறதி ஏற்படுவதை அறிவுத் திறன் வீழ்ச்சி (ஞிமீனீமீஸீtவீணீ) என்று கூறுவதுண்டு. மறதி உள்ளவர்கள் எல்லாம் டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. அதே சமயம் டிமென்ஷியா உள்ளவர்களுக்கு ஞாபகமறதி கட்டாயம் இருக்கும்.

முதுமையில் ஏற்படும் ஞாபக மறதிக்கும், அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் ஏற்படும் ஞாபக மறதிக்கும் என்ன வித்தியாசம்? அதை எப்படிக் கண்டு கொள்வது?

ஆரம்ப நிலையில் இரண்டிற்கும் வித்தியாசம் கண்டறிவது மிகவும் கடினமே. இருந்தாலும் கீழ்க்கண்ட குறிப்புகளின் மூலம் வித்தியாசம் கண்டு கொள்ள முடியும்.

முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி மூளையிலுள்ள நரம்புச் செல்கள் மெதுவாக செயல்படுவதால் ஏற்படுகிறது. (Slowing of Neural Processes)
தனக்கு ஞாபக மறதி உள்ளதாக கவலை அடைந்து, அவரே டாக்டரிடம் செல்வார்.



ஒரு பொருளை தவறாகச் சொன்னாலும், அதை எடுத்துக் கூறினால், அவர் அதைப் புரிந்து திருத்திக் கொள்வார். (உ.ம்) பேனாவை கத்தி என்பார். ஆனால் அது தவறு, இது எழுதுவதற்கு உபயோகப்படுத்தக் கூடிய பொருள் என்று சொன்னால், அவர் புரிந்து, ‘‘ஆம் அது பேனாதான். நான் தவறாக கத்தி என்று கருதிவிட்டேன்" என்று தன்னைத் திருத்திக் கொள்வார்.

டிமென்ஷியா ஒரு சில நாட்களிலோ
அல்லது வாரங்களிலோ வரும் நோயல்ல!
பல மாதங்களாக அல்லது வருடங்களாக உள்ளிருந்து
மறதி மூலம் வெளிப்படுகிற நோய்.

விவிஷிணி ஜிமீst மனநோயைக் கண்டறியும் பரிசோதனை. இதில் மாற்றம் ஏதும் இருக்காது.
MRI & PET Brain Scan இதிலும் மாற்றம் ஏதும் இருக்காது.

அறிவுத் திறன் வீழ்ச்சி மூளையிலுள்ள இரசாயனப் பொருட்கள் குறைவதாலும் திசுக்கள் அழிவதாலும் ஏற்படுதல்.

தனக்கு ஞாபக மறதி ஏதுமில்லை என்று அவராகவே டாக்டரிடம் செல்ல மாட்டார். ஆகையால், அவரை குடும்பத்தினர்தான் டாக்டரிடம் அழைத்து வருவர்.

போனாவை கத்தி என்று தான் அடித்துக் கூறுவார். தன்னைத் திருத்திக் கொள்ளத் தெரியாது.

MMSE Test இச்சோதனையில் மிக்க மாற்றம் இருக்கும்.
MRI & PET Brain Scan இப்பரிசோதனைகளில் மாற்றம் தெரியும்.

டிமென்ஷியா எதனால் வருகிறது?

டாக்டர் அலோசிஸ் அல்சியமியர், ஜெர்மனியிலுள்ள மனோதத்துவப் பேராசிரியர், இந்நோயை 1906 ம் ஆண்டு முதன்முதலில் கண்டுபிடித்தார். இது முதுமையைத் தாக்கும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய்க்கான காரணம் இன்னமும் சரியாக கண் டறியப்படவில்லை. இந்நோய் எவரையும் தாக்கலாம்.

உதாரணம் : அமெரிக்க ஜனாதிபதி ரெனால்டு ரீகன் அவர்களுக்கும் மற்றும் பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கும் இந்நோய் வந்துள்ளது. மூளையிலுள்ள நரம்புச் செல்கள் சரியாக செயல்படாததால் மறதி ஏற்படுகிறது. இந்த செல்கள் சரியாக செயல்பட ஆசிடைல்கொலின் (Acetylcholine) என்ற திரவம் தேவைப்படுகிறது. இந்த இராசாயனப் பொருள் நரம்புத் திசுக்களை ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட மிகவும் உதவுகிறது (Neurotransmitter). இது ஞாபகசக்தி, படிக்கும் திறன் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரி தும் உதவுகிறது. இந்தக் குறைந்த திரவத்தை மருந்துகள் மூலம் சற்று அதிகப்படுத்தினால் மறதியை சற்று குறைக்க முடியும்.

டிமென்ஷியாவில் பல வகைகள் உண்டு என்கிறார்களே அதைப் பற்றி சில விவரங்கள் தேவை?

டிமென்ஷியா என்பது முதுமையில் கட்டாயம் வருமென்பது அவசியமில்லை, பல முதியவர்கள் நூறு வயதில் கூட டிமென் ஷியா இல்லாமல் நல்ல மனநலத்துடன் வாழ்கிறார்கள். டிமென்ஷியாவில் பல வகைகள் உண்டு. டிமென்ஷியா வருவதற்கான காரணத்தைக் கொண்டு அவைகளைப் பிரிக்கலாம்.

1. அல்சியமியர் நோய் காரணம் கண்டறியாத டிமென்ஷியா (Aizheimer‘s dieseas). மரபுப் பண்பும் (Gene) சுற்றுப்புற சூழ்நிலையில் ஏற்படும் மாற்றமும் (Environment) ஒரு காரணமாக இருக்கலாம்.

2. மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுவதால் ஏற்படும் டிமென்ஷியா உதாரணம் : பக்க வாதம் (Vascular Dementia).

3. அல்சியமியர் டிமென்ஷியாவும் மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் பாதிப்பால் ஏற்படும் டிமென்ஷியாவும் சேர்ந்து வருதல் (Mixed Dementia).

4. சில குடும்பங்களில் மிக அரிதாக பாரம்பரியமாகவும் வர வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் டிமென்ஷியா நோய் சற்று கு றைந்த வயதிலேயே தோன்ற ஆரம்பிக்கும். (50 60 வயது).

5.நோய்களினால் ஏற்படும் டிமென்ஷியா.

முதுமையில் எந்தவித நோய்களினால் டிமென்ஷியா வரலாம்?
சுமார் 15 20% முதியவர்களின் ஞாபக மறதிக்கு நோய்களும் ஒரு காரணமாகும் அவைகள் :

மூளைக்கு இரத்த ஓட்டம் குறைதல். இது முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வர வாய்ப்புண்டு. இரத்த அழுத்தத்திற்கு தக்க சிகிச்சை அளித்து ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளைக் கொடுத்தால் நல்ல குணம் தெரியும்.

மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு இரத்தக் கட்டி ஏற்படுதல், முக்கியமாகக் கீழே விழுதல் மற்றும் விபத்து போன்ற காரணங்களினல் ஏற்படுதல். இதை மூளை ஸ்கேன் மூலம் எளிதில் கண்டு, தக்க சிகிச்சை அளித்து பூரண குணமளிக்க முடியும்.

அளவுக்கு அதிகமாக மது அருந்துவது. மதுவை நிறுத்தினால் நினைவாற்றல் திரும்பும்.

தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தாலும் மிகுந்த ஞாபகமறதி ஏற்படும். இதற்கு தக்க சிகிச்சையின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

உதறுவாதம், மனச்சோர்வு உயிர்க்கொல்லி நோயினாலும் டிமென்ஷியா வரலாம்.

வைட்டமின் சத்துக்கும் டிமென்ஷியாவுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
இரத்தத்தில் ஓமோசிஸ்டின் (Hymocysteine) அளவு அதிகம் உள்ளவர்களுக்கு அறிவுத் திறன் வீழ்ச்சி வருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த ஆராய்ச்சிக்கு 21 முதியவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆரம்ப நிலையில் அறிவுத் திறன் வீழ்ச்சி இருப்பது தெரிந்தது. அவர்களில் 9 (21) பேருக்கு ஓமோசிஸ்டின் அளவு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் வைட்டமின் ஙி6 பொலிக் ஆசிட் (Folic Acid) மற்றும் ஙி12 (Mecobalamin) கலந்த மாத்திரையை, ஒரு நாளுக்கு இரண்டு என்று 6 மாதத்திற்குக் கொடுக்கப்பட்டது. 6 மாதத் திற்குப் பின்பு ஓமோசிஸ்டின் அளவு 5/9 நபர்களுக்கு சரியான அளவுக்கு வந்துள்ளது. மேலும் அவர்களின் அறிவுத் திறன் வீழ்ச்சியிலும் நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

இரத்தத்தில் ஓமோசிஸ்டின் அளவு அதிகம் உள்ளவர்களை வைட்டமின் சத்து மாத்திரைகள் மூலம் அறிவுத் திறன் வீழ்ச்சியில் இருந்து தடுக்க முடியும்.

அறிவுத் திறன் வீழ்ச்சி நோயின் (Dementia) முக்கிய அறிகுறிகள் என்ன?
இந்நோய் சுமார் 7075 ஆண்டுகள் கடந்த முதியவர்களுக்கு அதிகம் வர வாய்ப்புண்டு. ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய அறிவுத் திறன் முதலில் வீழ்ச்சி அடைகிறது. இதனால் நினைவாற்றல், ஒரு முகக் கவனம், இட இயல் அறியும் தன்மை ஆகியவை பாதிக்கப்படுகின்றன. ஒரு பொருளை பகுத்தறியும் தன்மையும், புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொள்ளும் தன்மையும் குறைகின்றன. இதனால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. (உ.ம்) கவனக்குறைவு, எதையும் மனதில் பதிய வைக்க முடியாத நிலை.

முக்கியமாக அண்மைக்கால நினைவு (Recent memory) பாதிக்கப்பட்டு மறதி உண்டாகிறது. ஏதாவது ஒன்றைக் கூறினால், அதில் கவனம் செல்லாததால், அதை நினைவில் பதிய வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் அண்மை நினைவுகள் அற்றுப் போய் விடுகின்றன. யார் யார் வந்தனர்? யார் யார் போயினர்? நேற்று என்ன நடந்தது? என்பது கூட அவர்கள் நினைவில் இருப்பதில்லை. ஆனால், கடந்த கால நினைவுகள் (Past memory) நிலைத்திருக்கும். அதனால் அதைப் பற்றியே பேசிக் கொண்டும், நினைத்துக் கொண்டும் வாழ்ந்து வருவார்கள். கடைசியில் தம்மையும் மறந்துவிடுவார்கள். தம்மையும் மறந்து ஒரு தாவர வாழ்க்கையை வாழ்வார்கள். அவர்களுடைய தேவைகளை பிறர் செய்ய வேண்டிய நிலையில் இருப்பார்கள். அதாவது சுருக்கமாக சொன்னால், மனதளவில் இறந்து உடலளவில் வாழும் மனிதர்களாக இருப்பார்கள்!
முதுமையில் ஏற்படும் மறதியைக் கண்டறிய ஏதாவது சுலபமான வழிமுறைகள் உண்டா?

முதுமையில் மறதியைக் கண்டறியும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள கட்டங்களில் ஏதேனும் ஒன்றை டிக் செய்து இருந்தால் உங்களுக்கு மறதி நோய் அல்லது வேறு மருத்துவ பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. தயவு செய்து உங்கள் குடும்ப டாக்டரிடம் உடனே கலந்து ஆலோசிக்கவும்.

முதுமை மறதியை கண்டறியும் வழி
நினைவு இழப்பு (சந்திப்புகளை மறந்து விடுதல், சமீப நிகழ்வுகளை அல்லது உரையாடல்களை நினைவு கூற முடியாமை)
பொருள்களை இடம் தவறி வைத்துவிடுதல் மற்றும் அவற்றை யாராவது திருடிவிட்டதாக எண்ணுதல்.

திசை தடுமாற்றம் (பழக்கமற்ற இடங்களில் குழப்பமடைதல், நேர காலம் அல்லது ஆண்டு என்னவென்பதறியாமை, தன் னுடைய வீட்டிற்கு வழியறியாமை) பேசுதல் (எளிய நன்கு அறிந்த பொருள்களின் பெயர்களை மறந்து போதல், பொருத்தமற்ற வார்த்தைகளை உபயோகித்தல், சொன்ன வார்த்தைகளையும், வாசகங்களையும் திரும்பத் திரும்ப சொல்லுதல்)
பொழுதுபோக்குகளில் மற்றும் சொந்த செயல்பாடுகளில் ஆர்வம் இன்மை, தான் அனுபவித்து வந்த செயல்பாடுகளை தவிர் த்தல்
நண்பர்கள், சக பணியாளர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காணல் (பேரக் குழந்தைகளை மறந்து போதல், நண்பர்களை அயலார்களாக எண்ணுதல்)
சிக்கலான வேலைகளில் ஈடுபடுதல் (செக் புக்கை வைத்திருத்தல், பணத்தை எண்ணுதல், தொலைபேசியை உபயோகித்தல்)
தொந்தரவுமிக்க நடவடிக்கை (இரவில் வெளியே செல்லுதல், வன்முறையில் ஈடுபடுதல்)

மோசமான சுகாதாரம் (பல் துலக்க மறந்து போதல், மெதுவாக ஆடை அணிதல் அல்லது பொருத்தமற்ற ஆடை அணிதல்)

ஒருவருக்கு டிமென்ஷியா இருப்பதை எப்படி கண்டறிவது?

முதுமையில் ஒருவருக்கு மறதி ஏற்பட்டால் அது முதுமையின் விளைவே என்று எண்ணி டாக்டரிடம் செல்ல மாட்டார். அக்குடும்பத்திலுள்ள உறவினர்கள் தான் அவரைக் காலம் தாழ்த்தாது டாக்டரிடம் அழைத்துச் செல்லவேண்டும். அந்த முதியவரின் ஞாபகமறதி மற்றும் அவருடைய செயல்திறனை அறிய, தேவையான தகவல்களை முதியவரிடம் டாக்டர் கேட்டு அறிவார். இதைவிட மிகவும் முக்கியம், அம்முதியவரைப் பற்றி உறவினர்கள் கொடுக்கும் தகவல்கள்.

பின்பு அம்முதியவரை டாக்டர் முழுமையாக பரிசோதனை செய்வார். (உ.ம்.) இரத்த அழுத்தம், அவருடைய நடை, கண் பார்வை, காது கேட்கும் திறன்.

முதியவரின் மறதியைக் கண்டறிய MMSE TEST (Mini Mental Staus Examination) என்ற பரிசோதனை செய்யப்படும்.

இரத்தப் பரிசோதனை, மார்புப் படம் (Xray chev) ஈ.சி.ஜி (E.C.G.) தைராய்டு பரிசோதனை (Thyroid), உயிர்க்கொல்லி நோய் (HIV) அறிய போன்ற சில பரிசோதனைகள் செய்யப்படும். தேவையானவர்களுக்கு மட்டுமே மூளை ஸ்கேன் எடுக்கப்படும். PET ஸ்கேன் மற்றும் SPECT ஸ்கேன் மூலம் ஒருவருக்கு அல்சிமியர் நோய் இருப்பது கண் டறியப்படும்.

மேற்கண்ட பரிசோதனைகள் மூலம் ஒருவருக்கு டிமென்ஷியா இருக்கிறதா என்பதை (80%) ஓரளவிற்கு கண்டறிய முடியும்.

டிமென்ஷியாவுக்குத் தக்க சிகிச்சை உண்டா?

இந்நோய்க்கு இன்னும் தக்க மருந்து கண்டறியப்படவில்லை. இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதற்குத் தக்க சிகிச்சையளித்து நோயின் வீரியத்தைக் குறைக்க முடியும்.

டிமென்ஷியா வருவதற்கு ஏதாவது காரணம் கண்டறியப்பட்டால் அதற்கு தக்க சிகிச்சை அளித்தால் ஞாபக மறதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். (உ.ம்.) டிமென்ஷியாவுடன் மனச்சோர்வு உள்ளவர்களுக்கு மனச்சோர்வுக்குண்டான சிகிச்சையளித்தால் டிமென்ஷியாவில் சற்று குணம் தெரியும்.

மதுவை நிறுத்தினாலும் நினைவாற்றல் திரும்பும்.
மருந்துகள் - தூக்க மாத்திரை, மனநோய்க்குக் கொடுக்கும் மாத்திரை இவைகளை குறைப்பது அல்லது நிறுத்துவதின் மூலம் நினைவாற்றலை மீண்டும் பெறலாம்.

தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் தைராய்டு மாத்திரை மூலம் மறதியை மீண்டும் பெறலாம்.

டிமென்ஷியா நோய்க்கான மருந்துகள்
இந்நோயை பூரணமாக குணப்படுத்தக் கூடிய மருந்துகள் இன்னமும் கண்டறியப்படவில்லை, இருப்பினும் அதன் வீரியத்தைக் குறைக்க ஒரு சில மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் நரம்பு மண்டலங்களை (neuroprotectives) பாதுகாக்கும் தன்மைகள் கொண்டவை. இவைகள் மூலம் சிகிச்சை அளித்துப் பார்க்கலாம்.

1. வைட்டமின் ணி, சி போன்ற மாத்திரைகள் (antioxidants).
2. வைட்டமின் ஙி6, ஙி12 மற்றும் பொலிக் ஆசிட் (திஷீறீவீநீ கிநீவீபீ) போன்ற மாத்திரைகள் இரத்தத்திலுள்ள ஓமோசிஸ்டினின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு, ஓமோசிஸ்டின் அளவைக் குறைத்து ஞாபகச் சக்தியை அதிகரிக்கும்.

3. இரத்தத்திலுள்ள கொழுப்புச் சத்தை குறைக்கக் கூடிய Statin போன்ற மாத்திரைகளும் சிறிது பயன் தரலாம்.

4. Ginkgobiloba என்ற தாவர சிகிச்சையும் ஒரு சிலருக்குப் பயன் அளிக்கும்.

5. Donepezil, Rivastigmine, Galantamine போன்ற மாத்திரைகள் ஆரம்ப நிலையிலுள்ள டிமென்ஷியா நோயாளிகளுக்கு மறதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இம்மருந்தினால் சில பின் னடைவுகளும் உண்டு.

அறிவுத்திறன் வீழ்ச்சியோடு மற்ற தொல்லைகளுக்கும் அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை அளிக்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைத்தல் மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரை மலச்சிக்கலுக்கான மாத்திரை ஞாபகப் பயிற்சிகள் மூளையிலுள்ள திசுக்களுக்கு (Cells) தவறாமல் தூண்டுதலை அளிப்பதின் மூலம் முதுமையில் மறதியை ஏற்படுவதை மெதுவாகக் குறைக்கக் கூடும்.

கண்பார்வை

வயது முதிர்ச்சி அல்லது நீரழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களினால் கண்பார்வை குறைகிறது. கண் பார்வை குறையக் குறைய, மூளை செயல்படும் சக்தியும் குறைய மறதி வர வாய்ப்பு அதிகமாகிறது. இவர்களுக்கு தக்க சிகிச்சையின் மூலம் கண் பார்வை கிடைக்கப்பெற்றால் ஞாபக சக்தி அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

காது கேட்கும் திறனை அதிகரித்தல் முதுமையில் மறதி உள்ளவர்களுக்கு காது கேளாமை பிரச்னையும் இருக்கலாம். அவர்களுக்கு தக்க மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று காது கேட்கும் திறனை அதிகப்படுத்தினால் மறதியின் அளவு சற்று குறையலாம்.

தொடுதல்

முதுமையில் மறதியுடையவர்களுக்கு தொட்டு அறியும் உணர்வுகளைத் தூண்டும் பயிற்சிகளை அளிக்க வேண்டும். (உ.ம்.) கண்களை மூடிக் கொண்டு பொருட்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு. உள்ளிருப்பதைக் காணமுடியாதபடி வெவ்வேறு பொருட்களை ஒரு பையில் போடவும். அவர் கையை உள்ளே விட்டு அந்தப் பொருகளை என்னவென்று யூகிக்க வேண்டும்.

நுகர்தல் மற்றும் ருசித்தல் ஒருவருடைய ருசியையும், நுகரும் தன்மையையும் அடிக்கடி தூண்டுவதற்கான பயிற்சியைக் கொடுக்கவும், (உ.ம்.) ஒரு கு றிப்பிட்ட உணவின் ருசி, அதன் நறுமணம் ஆகியவற்றை கூறச் சொல்வதே இப்பயிற்சியின் நோக்கமாகும். முதுமையில் மறதி அதிகரிக்க ருசி மற்றும் மணத்தின் உணர்வுகள் மாறுபடலாம். ஆகவே, ருசி அரும்புகள், மற்றும் நுகர்தலை மீண்டும் தூண் டுவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

முதுமையில் மறதியைத் தவிர்க்க ஏதேனும் வழிகள் உண்டா?

கீழ்காணும் குறிப்புகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால், மறதியை தவிர்க்க முடியும்.

உடற்பயிற்சி : தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மூலம், மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

பொழுதுபோக்கு : தோட்டக்கலை, சொற்பொழிவு கேட்பது, ஆன்மீகத்தில் ஈடுபடுவது, எதாவது ஒரு பொழுதுபோக்கு சங்கத்தில் உறுப்பினராகுதல் முதலியன.

தியானம் : நல்ல மனநலத்திற்கு முதுமையில் தியானம் ஒரு சிறந்த மருந்து. ‘‘உறங்கிக் கிடக்கும் மூளையில் உள்ள திசுக்களை உசுப்பிவிடும் சக்தி தியானத்திற்கு உண்டு’’ என்று பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி கூறியுள்ளார். ஆகையால் தினமும் தியானத்தைக் கடைப்பிடித்து வந்தால், மறதியை வெல்லமுடியும்.

மூளைக்கேற்ற சத்துணவு : சத்தான உணவு முக்கியமாகும். புரதச்சத்து அதிகமுள்ள உணவு மனநலத்திற்கு நல்லது என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.

தனிமையைத் தவிர்த்தல் : தனிமையில் உள்ளவர்களுக்கு மனச்சோர்வும், ஞாபக மறதியும் வர வாய்ப்புகள் அதிகம். தனிமையைத் தவிர்த்து, மற்றவர்களுடன் கலகலப்புடன் இருந்தால், முதுமையில் மனநலம் சீராக இருக்கும்.

டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வேறு எந்த வகைகளில் உதவலாம்?

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் உள்ளவர்கள் ஒரு குழந்தையைப்போல பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெ ன்றால், அம்முதியவருக்கு தான் ஒரு மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று அவருக்கே தெரியாது! ஆகையால் அதைப் புரிந்து கொண்டு வீட்டிலுள்ள உறவினர்கள் அவரை அனுசரித்துப் போக வேண்டும். இவரைப் பராமரிப்பதில், நோயாளியை விட அதிகம் கஷ்டப்படுபவர்கள் அவருடைய உறவினர்களே. (Caregivers) (உம்) வீட்டிலுள்ள பொருட்களை இடம் மாறி வைப்பது, கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பது, அடிக்கடி உடைகளைக் களைந்து விடுவது, சாப்பிட மறுப்பது அல்லது தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது.

டிமென்ஷியா நோயாளியை கவனிக்க உறவினர்களுக்கு மிகவும் சகிப்புத்தன்மை தேவை. மேலும், செய்யும் உதவிகளை பாசம் கலந்த உள்ளுணர்வோடு செய்வது நல்லது. முதியவரை அடிக்கடி தொட்டுப் பேசிப் பழகுவது அவருக்கு மனதில் ஒரு தன் னம்பிக்கையை ஊட்டும். முதியவரின் தனிமையைத் தவிர்க்க வீட்டிலுள்ள உறவினர்கள் அவரவர் பங்குக்காக சிறிது நேரமாவது முதியவரிடம் பேசுதல் அவருக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவருடைய அன்றாடத் தேவைகளை சிறிதும் குறைவில்லாமல் செய்ய வேண்டும். (உம்) குளிப்பது, உடை உடுத்துவது.
அவருடைய உணவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவருக்குப் பிடித்த, அதே சமயத்தில் சத்தான உணவை உறவினர்கள்தான் காலமறிந்து கொடுக்க வேண்டும். அவரை ஒரு போதும் அலட்சியப்படுத்தி விடக்கூடாது. இதில் உறவினர்கள் மிகவும் விழிப்புடன் நடந்து கொள்ளவேண்டும். முதியவரை முடிந்தளவிற்கு தனிமைப்படுத்தக்கூடாது. உறவினர்கள் உண்ணும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவரும் கூடவே இருக்கட்டும். அவருடைய அன்றாடத் தேவைகளுக்கு முடிந்தளவிற்கு உறவினர்கள் உதவி செய்யவேண்டும். இதை உறவினர்கள் ஒரு பாரமாக எண்ணக்கூடாது. முதியவர்களை கவனிப்பது தமக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரும் புண்ணியமாக எண்ணி செயல்பட வேண்டும்.

மறதியுள்ள முதியவர்களை கவனித்துக் கொள்பவர்கள் (சிணீக்ஷீமீ ரீவீஸ்மீக்ஷீs) பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியி ருக்கும். இரவில் கண் விழிப்பதால் தூக்கம் கெடும். முதியவரோடு இருந்து அவர்களின் தேவைகளை கவனித்துக் கொள்ளும்பொழுது உறவினர்களுக்கு உடல் சோர்வும், மனச்சோர்வும் ஏற்பட வாய்ப்பு அதிகமாகும்.

நிதி வசதியும் பாதிக்கப்படலாம்.இதனால் உறவினர்களிடையே மனக்கசப்பும், சண்டைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் இதைத் தவிர்க்க மறதியுள்ள முதியவரின் நிலையை நன்கு புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவாக வீட்டிலுள்ள உறவினர்கள் பெருந்தன்மையோடு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும்.

முதியோர் மருத்துவ நிபுணர்களும், மனநல மருத்துவ நிபுணர்களும் இத்தகைய உறவினர்களை அழைத்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி மனதில் ஒரு தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.

அன்பே மருந்து

அறிவுத்திறன் வீழ்ச்சிக்கு இன்னமும் தக்க மருந்து கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்குத் தக்க உணவு. அன்பான பராமரிப்பு, தக்க பொழுதுபோக்கு இவற்றை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு மனதாக தாராளமாகத் தர முன் வரவேண்டும். ஆகவே இந்நோய்க்கு தற்பொழுதிற்கு அன்பே மருந்து!

சிந்திப்பீர்!

டிமென்ஷியா வருவதை இரண்டு ஆண்டுகள் தள்ளிவைத்தால் அந்நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வாக குறைய வாய்ப்புண்டு.

டிமென்ஷியா வருவதை சுமார் 10 ஆண்டு களுக்குத் தள்ளிப் போட முடிந்தால் கடைசிக் காலத்தில் டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்று கூட கூறலாம்.

இது மேலை நாடுகளின் புள்ளிவிவரம் என்றாலும் நம் நாட்டிற்கும் ஓரளவுக்குப் பொருந்தும்சிந்திப்போம்! செயல்படுவோம்!

http://www.thedipaar.com/news/news.php?id=35441



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 17, 2011 8:54 pm

மிகவும் பயனுள்ள செய்திகள். படிப்பவர் யாவரும் எல்லா வயதினரும் மறக்காமல் பின்னூட்டம் இடவும்.
ரமணியன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக