புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_lcapகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_voting_barகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 6:15 pm

First topic message reminder :



முன்னுரை
உண்ணா விரதம் நடக்கிற இடங்களில் காந்தியம் பேசப்படுவது போல ,
தமிழகத்தில் மக்கள் செய்கிற போராட்டங்களில் ராஜீவ் காந்தி பேசபப்டுகிறார். அந்த வகையில் 1988 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியும் ரஷ்ய அதிபர் mikhail gorbochov அவர்களும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். இந்த ஒப்பந்தம் தமிழகத்திர்க்கு ஒளிதரும் தீப்பந்தம் என்று மத்திய அரசியல் கூறுகிறது. இல்லை இல்லை ,, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என மூன்று மாவட்ட மக்களுக்கு கொள்ளிவைக்கிற தீப்பந்தம் என இம்மாவட்ட மக்கள் கூறுகிறார்கள். இதில் எது உண்மை ?

கூடங்குளம் அணுமின் நிலையம் :

நம் இந்தியா , சில வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் நாம் என்ன என்ன பெறுகிறோம் என்று கூறுகிறார்களே தவிர , அதற்காக நாம் எதை தருகிறோம் என்று நமக்கு தெரியப்படுத்துவதில்லை. இதே ஒப்பந்த கொள்கையின் அடிப்படையில் தான் 1985 ஆம் ஆண்டு திட்டமிடபப்ட்டு 1988 ஆம் ஆண்டில் போடப்பட்டது . 1989 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் , அணு அபாயம் பற்றி ஆராய்ச்சி செய்ய மத்திய அரசிர்க்கு பரிந்துரைத்தார். பின்பு சோவியத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் தேவ கௌடா பிரதமராக இருந்த போது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கபட்டது. அதன் பின்பு 1300 கோடிகளை சீரணித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கிறது. மின்சாரம் தரவா ? வேறு எதற்குமா என்று காலம் தான் கூறவேண்டும் .

கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதம்

1996 ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் செர்நோபில் அணு
உலைகள் விபத்திற்கு உள்ளானது. அதில் 3,50,000 மக்கள் இடம் பெயர்ந்தனர்.4000 மக்கள் உயிர் துறந்தனர். 60,000 மக்கள் புற்று நோயால் படிக்க பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு பின்பு , ரஷ்யா தன்னிடம் உள்ள VVER வகையிலான அணு உலைகளை வெளியில் கடத்த முழுமூச்சாக செயல்பட்டது. தற்போது கூடங்குளத்தில் இயங்க காத்திருக்கிற அணு உலையும் இந்த செர்நோபிலில் இருந்தது போன்ற வகைதான். ஆகவே இதில் என்றும் ஆபத்து உள்ளது என்கிறார்கள்

கல்பாக்கத்தில் கதிரியக்கத்தினால் கோலன் என்கிற ஒருவகையான புற்று நோயில் மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் இன்னும் .....

ஆதரிப்பவர்களின் வாதம்

அமைதியான வாழ்க்கைக்கு கூட இன்று மின்சாரம் அத்தியா
அவசியமாகிவிட்டது. இந்தியாவில் 20 அணுமின் திட்டங்கள் இயக்கத்தில் இருக்கிறது. அதன் பாதுகாப்பு மிகவும் நம்பிக்கை அளிக்கும் ஆவாகியில் இருக்கிறது. தேவையற்ற பயம் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள்.

வேற்று நாட்டு சக்திகள் இத்திட்டத்தை முடக்க தூண்டிவிடுவதாக திசை
திருப்பவும் செய்கிறார்கள். 1300 கோடி வீணாக வேண்டுமா ? இத்திட்டம் தொடர்ந்தால் தான் நல்லது என்பது பா.ஜ.க கருத்தும் கூட .


இந்தியாவும் அணு உலை விபத்துகளும் ;

சில தமிழ் பத்திரிக்கைகளில் கதிர்வீச்சு , நெருப்பு பொறி
தோன்றுதல் , இன்னும் சில குறைகளைதான் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால் INDIAN AGE என்கிற மேகசீனில் (magazine) ஒரு ஆர்டிகில் படித்தேன். அதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 2 கருத்துகளை அப்படியே தருகிறேன்.

the recent nuclear radiation in kakrapar nuclear plant in gujarat is a such type of case four laborer were exposed to low levels of radiation at the end of may after ,an error in control room but it was reported in media on 2nd august 2011. the kakrapar authority tried to down play the incident

India currently has twenty nuclear reactors in operation and this safety record is very clear, ........... there maybe many other accidents that we do not know about இதுதான் உண்மை நிலையும் கூட ..


1000 மெகாவாட் மின்சாரம் வேண்டுமே !


சாதாரண நிகழ்வில் கூட ஆபத்து இருக்கிறது. ஆனால் இந்த அணு
உலைகளை சரியான பாதுகாப்பு அம்சங்களுடன் இயக்குவோம் என்கிறது மத்திய அரசு. இங்கே 1000 மெகாவாட் மின்சாரம் பிரதானமாக பேசபப்டுகிறது. 2001 லேயே நம்க்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. கடந்த 5,6 வருடங்களாகத்தான் அதன் தேவை அதிகமாக அதிகரித்திருக்கிறது . ஆனால் இத அணு ஒப்பந்தம் 1988 இலேயே போடப்பட்டுவிட்டது. ஆக மின்சாரம் என்பதையும் தாண்டி இங்கு வேறொன்றிற்காக இந்த அணு உலைகள் இயங்கியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது. மத்திய அரசின் உண்மையான தேவை என்ன ?

யுரேனியம் புளுட்டோனியம்



சர்க்கரை ஆலையில் சர்க்கரை தான் உற்பத்திசெய்யபடுகிறது. ஆனால்
அதன் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்ப்ரிட் அங்கு கொள்ளை லாபம் தருகிறது. இது போன்று சில இடங்களில்தான் main product ஐ விட by product அதிக முக்கியத்துவம் பெரும். இதே போன்றுதான் அணு உலைகளிலும் மின்சாரம் என்கிற முக்கிய உற்பத்தி பொருளைவிட யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் கழிவுகளில் இருந்து தயரிக்கப்படும் அணு ஆயுத மூலக் காரணிகள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அணு ஆயுத மூலகாரணிகளை இந்தியாவே வைத்துகொள்ளுமா? இல்லை ரஷ்யாவிற்கு விற்றுவிடுமா என்று மத்தியில் அரசாள்கிறவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.


மாற்று வழி இல்லையா ?

உயிர்மை , சமநிலை சமுதாயம் போன்ற நல்ல ஊடகங்கள் கூட
கண்மூடித்தனமாக கருத்து சொல்லியிருக்கிறது. இங்கே புதிய தலைமுறையின் ஒரு பதிவு முக்கியமாக கருதத் தக்கது. யுரேனியம் , புளுட்டோனியம் பயன்படுத்தாமல் , தோரியம் மற்றும் நியுட்ரான் பயன் படுத்தி அணுஉலைகள் இயக்கலாம் என்று கூறியிருக்கிறது. அதை செய்து பார்க்கலாம். ஆபத்துகள் மிகவும் குறைவுதான். நாம் கட்டுப்பாட்டில் இயங்கும் உலைகள் நமக்கு கிடைக்கும்.

முடிவுரை

மின்சார தேவைக்காக தான் அணுஉலைகள் என்றால் தோரியம்
பயன்படுத்தி கூடங்குளம் அணு உலைகளை இயக்கட்டும். இல்லை யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் பயன்படுத்திதான் கூடங்குளம் அணு உலைகள் இயக்கப்படும் என்றால் .. தாராளமாக இயக்கட்டும் கூடங்குளத்தில் அல்ல .. டெல்லி பாராளுமன்றத்தில் .. பாதிப்பு இல்லாததுதானே .. அவர்களுக்கு ஒன்றும் ஆகாது.




கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Thank-you015

2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Mon Oct 17, 2011 7:31 pm

தெளிவான கட்டுரை... இதை படிக்கும் போது தமிழகத்தின் மின்சார பிரச்சனை தற்போதைக்கு தீராது என்றே தோன்றுகிறது..

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 10:49 pm

ஒரு நல்ல கட்டுரை..... பதிவுக்கு நன்றி தம்பி... (சில எழுத்துபிழைகளை சரி செய்துள்ளேன் தம்பி)



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Oct 17, 2011 11:57 pm

உங்களுடன் கருத்தில் வேறுபடுவதற்கு வருந்துகிறேன்!!

* முதலில், செர்னோபில் விபத்து நடந்தது 1996 ஆம் ஆண்டு அல்ல... 1968 ஆம் ஆண்டு. சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்தே ஒப்பந்தம் போடப்பட்டது.

*செர்மோபில் அணுஉலை RBMK (reaktor bolshoy moshchnosti kanalniy) வகையைச் சார்ந்தது. கரிப்பொருள் (Graphite) கொண்டு இயங்ககூடியது...கூடன்குளத்தில் உள்ளதோ VVER, Vodo-Vodyanoi Energetichesky Reactor; Water-Water Energetic Reactor) வகை. தண்ணீரை அடிப்படையாக கொண்டது.

* திட்டம் கிடப்பில் போடப்பட காரணம் அமெரிக்காவின் நெருக்கடியே தவிர, எந்த போராட்டமும் இல்லை.
அன்று குரல் எழுப்பிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலைத்து விடப்பட்டனர்.
* அணுஉலைகளைப் பொறுத்தவரை, அவற்றில் இருந்து வரும் துணைப்பொருட்கள் (by products) மிகவும் குறைந்த நிலை தனிமங்களே (அணு அளவை வைத்து!!) - அதிகபட்சம் சீசியம் (Ceasium-137 அணு எடை ) தான் வரும். இவை கதிரியக்கத் தன்மையுடன் இருந்தாலும், இவற்றைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியாது. அணு ஆயுதம் தயாரிக்க குறைந்தபட்சம் 220 அணு எடை இருக்க வேண்டும்.
* தோரியம் பயன்படுத்துவதில் தவறில்லை... ஆனால், அதற்கு பன்மடங்கு முதலீடு தேவை. மேலும், நிர்ணயிக்கப்பட்ட மின்சாரத்தைப் பெற அதிக காலம் ஆகும்.
* எந்த அணுஉலையாக இருந்தாலும், செயல்பாட்டிற்கு நியூட்ரான் தேவை. நியூட்ரான் மட்டும் கொண்டு நிச்சயமாக அணு உலையை நடத்தலாம்... ஆனால், நியூட்ரான்களை உற்பத்தி செய்ய தனியே ஒரு அணு உலை வேண்டுமே? பரவாயில்லையா???

//1989 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் , அணு அபாயம் பற்றி ஆராய்ச்சி செய்ய மத்திய அரசிர்க்கு பரிந்துரைத்தார்//
இது தவறான தகவல்.
அப்படியே இருந்தாலும், அதன் பின் 5 ஆண்டுகள் அவர் ஆட்சியின் கீழ்தானே
பணிகள் நடைபெற்றன (அதுவும் மத்தியில் கூட்டணி)... தமிழினத்திற்கு இடையூறு என்றால் தடுத்திருக்கலாமே???

மேலே நான் கூறியுள்ளவை அனைத்தும் தவறான தகவல்களைப் பரவாமல் களையவே!!

இன்று கூடன்குளம் அருகில் நடக்கும் போராட்டத்தின் நோக்கமே வேறு. அது
அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் தொடர்புடையது! அவற்றைத் தீர்க்காமல்,
அணுஉலை செயல்படுவதில் எனக்கும் உடன்பாடில்லை.

ஆனால், அதனை 'தமிழின எதிர்ப்பு' என்று சில தீய சக்திகள் தான் போராட்டத்தைத் திசை திருப்ப முயற்சி செய்கிறன.. அவற்றை நம்பாதீர்!!

அணு உலைகளே மனிதருக்கு எதிரானது என்பது என் கருத்து



கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 17, 2011 11:58 pm

அருமையான கட்டுரை அய்யம்.
அறிவியலின் வளர்ச்சியால் நாம் எந்த அளவிற்கு நன்மையை பெறுகிறோமோ அதைவிட அதிகமாக நாம் பாதிக்கம்படுகிறோம் என்பது மறுக்கமுடியா உண்மை.

"விஞ்ஞானம்" அது சொர்க்கத்தில் திறவுகோலாக இருக்கவேண்டும் ஆனால் அதுவே நரகத்தின் அளவுகோலாக ஆகிவிட கூடாது என்றார் அண்ணா. அதுபோல் விஞ்ஞானத்தை மனித அழிவிக்கோ அல்லது மனித இனத்தை அழிவுபாத்தைக்கு கொண்டு செல்லும் அறிவியல் நமக்கு தேவை இல்லை....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 12:17 am

கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட வில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரஷ்ய விஞ்ஞானிகளின் ஆதாரங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை(site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கை யும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட வில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடி யாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உப யோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்க வில்லை. i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங் களும் வசிக்கிறார்கள். ண்ண்) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள். ண்ண்ண்) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.

ண்ஸ்) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று ஆஊதஇ சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப் பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.

அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரஷ்யாவில் இருந்து தாறுமாறாகவும் தலை கீழாகவும் வந்த உதிரி பாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடி வயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?

உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளி வரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலிலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.

பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. (முதல்வர் ஜெயலலிதா அறிக்கை) 2003 பிப்ரவரி 9-ஆம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலிலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன் குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர் களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நில நடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுஷிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை. அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகஸ்ட் 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ் பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக் களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.

2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழக மும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரஷ்ய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரஷ்யா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரஷ்யா கையை விரித்தது. 2008-ஆம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரஷ்யா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.

அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப் படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப் படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன் படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளி யிடும் இந்த கொடிய நச்சை 24, 000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக் குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாய கரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப் படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்பநிலை அதிகரித்து கதிர் வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படு வார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப் படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வரு கின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசிலியம் 134, 136, 137 ஐ சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடி தண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக் குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.



1988-ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் துவக்க மதிப்பீடே 17, 000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006-ஆம் ஆண்டு இயங்கும் என்றும், 15, 500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001-ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6, 755 கோடி முதலீடு செய்ய, ரஷ்யா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத் தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரஷ்ய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.

நமது நாட்டைவிட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலிலியில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத் திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக் கின்றன. புகுஷிமா விபத்து நடந்த ஜப்பான் நாட்டிலே கட்டப் பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்ட னர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.

நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்ஜி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரஷ்ய உதவியுடன் கட்டப் படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன. கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன் வருவார்கள் என எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.

இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டு கின்றன. மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற் காக மக்களா? ரஷ்யா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா? சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 12:37 am

மக்கள் உணர்ச்சிசமீபத்தில் ஜப்பான், புக்குஷிமாவில் நடந்த அணுமின் நிலைய விபத்து, உலக மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில், அணுகுண்டு வீச்சினால் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த மக்கள், அதைப் பெரிது பண்ணாமல், தங்கள் நாட்டின் மின் தேவையை அணுசக்தி மூலமாகவே பெற முடிவு செய்து, குறுகிய காலத்திலேயே, 25 சதவீதம் வரை நாட்டின் மொத்த உற்பத்தியில் பெறுமளவுக்கு உயர்ந்து, அதன் பலனாக உலகிலேயே பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக திகழ்கிறது.இன்று இந்த நாட்டில் கூட, அணுசக்தியை எதிர்த்து முழக்கங்கள் எழுந்துள்ளன. இது மிகவும் துர்ப்பாக்கியமானது; ஏனெனில், உண்மைக்குப் புறம்பான துர்ப்பிரசாரங்களால் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கூடங்குளம், புக்குஷிமா அணு உலைகள் - ஒரு ஒப்பீடு
அதிநவீனமான, பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட வி.வி.ஈ.ஆர்.,ரக அணு உலைகளே கூடங்குளத்தில் நிறுவப்படுகின்றன. புக்குஷிமாவில் விபத்து நடந்த அணு உலைகளோ மிகப் பழமையான, பாதுகாப்பு அமைப்புகள் குறைந்த, பி.டபிள்யு.ஆர்., ரக அணு உலைகள். எனவே, இவையிரண்டையும் ஒப்பிட்டுத் தேவையற்ற, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான வகையிலே கூடங்குளத்திலும், ஜப்பானில் நடந்தது போன்ற விபத்துக்கள் ஏற்படும் என்று பிரசாரம் செய்யப்பட்டு, அங்கு சுற்று புறங்களில் வசித்து வரும் மக்களிடையே ஒரு பீதி ஏற்பட்டுள்ளது.தவிரவும், ஜப்பானில் நடந்த அணு விபத்தின் சூழ்நிலைகள், மிகவும் மாறு பட்டவை. ஜப்பான் முழுவதுமே ஒரு பூமி அதிர்வுப் பிரதேசம். நம் தென்னிந்தியப் பகுதியோ, பூமி அதிர்வைப் பொறுத்தவரை ஒரு நிலையான பகுதி. அதற்காக இயற்கையின் சீற்றத்தாலோ அல்லது மனிதனின் கவனக்குறைவாலோ விபத்துக்களே ஏற்படாது என்று பொருளல்ல. நாம் கவனிக்க வேண்டியதெல்லாம், சுனாமி நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ளும் அளவுக்கு அணுமின் நிலையத்தில் தகுந்த பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளனவா என்பதே. விபத்துச் சூழ்நிலையில் அணு உலை தன்னைத் தானே செயலிழக்கச் செய்து கொண்டால் கூட, அதில் கதிரியக்க வெப்பம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். எனவே, இதைச் சமாளிக்கும் வகையில் உலையைக் குளிரூட்டும் சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சுற்றுச் சூழலையும், மக்களின் பாதுகாப்பையும் தலையாயக் கடமையாகக் கருத்தில் கொண்டே சம்பந்தப்பட்ட பொறியியல் வல்லுனர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு பாதுகாப்பு முறைமைகளைக் கொண்ட அணு உலைகளேயே வடிவமைத்திருக்கின்றனர். அணுசக்தித் துறைதான் உலகிலுள்ள தொழில் நுட்பத்துறைகளிலேயே மிகவும் அதிகக் கவனத்தோடு, மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழும் அளவிற்கு பொதுமக்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் செயல்பட்டு வருகிறது.ரஷ்யாவின் உதவியுடன் கூடங்குளத்தில், அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் தற்கால தொழில் நுட்பங்களைக் கொண்ட, அதிநவீன வகைப் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டவை, உலையைக் குளிர்விப்பதற்கான சாதனங்கள் எல்லாமே, இரட்டிப்பு செய்யப் பட்டுள்ளன. (ஒன்று பழுதடைந்தாலும், மற்றொன்று வேலை செய்யும்) புவியீர்ப்பு முறையிலே மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்ட நிலையிலும், குளிர்விக்கும் நீரோட்டம் தொடர்ந்து நடைபெறும் வகையிலும், சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் விபத்துக்கள் ஏற்படவே வாய்ப்பில்லை என்று ஒருவராலும் (எந்த ஒரு வாழ்க்கைத் துறையிலும்) அறுதியிட்டுக் கூற முடியாது. அணு உலையைப் பொறுத்த மட்டிலும், விபத்தின் விளைவுகள் மற்றத் தொழில் துறைகளோடு ஒப்பிடும்போது, ஏற்றுக் கொள்ளக் கூடியனவாகவும், மிகுந்த ஆபத்தான விளைவுகளைக் கொண்ட விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு மிகக் குறைவாகக் கொண்டதாகவே அமைக்கப் படுகின்றன.அணுமின் நிலையத்தைச் சுற்றிலும், 30 கி.மீ., தூரத்திற்குள் வசிக்கும் மக்கள் எல்லாரும் விரட்டி அடிக்கப்படுவர் என்று, துர்ப்பிரசாரம் செய்வது நாட்டு நலனில் அக்கறை இல்லாதார் செய்யும் விஷமம். ஒரு பேரிடர் ஏற்பட்டால் அதை எப்படி எதிர்க் கொள்ள முடியும் என்பதற்கான, ஒரு ஒத்திகை பார்ப்பது என்பது, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே செய்யப் படுவதாகும். இது வேறு ஒரு துறையிலும் செயல்படுத்தப் படுவதில்லை!இதைப் புரிந்துக் கொள்ளாதவகையில் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, அச்சுறுத்தும் வண்ணம் அவர்களிடையே ஒரு மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துவது நாகரீகமானதல்ல. நாட்டிற்கு உகந்ததும் அல்ல. இதுபோலவே, மீன்பிடித் தொழிலும் முடங்கிப் போய் விடும் என்று கூறுவதும் அபத்தமானதே.தேசப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, மின் நிலையத்திலிருந்து கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது. (மற்ற இடங்களை போலவே). தமிழகத்திலேயே கல்பாக்கம் அணுமின் நிலையம், 25 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு, இந்த மாநிலத்தை பல ஆண்டுகளாக, மின் பற்றாக் குறையைத் தாக்குப் பிடிக்கத் துணையாய் இருந்து வருகிறது. மாநிலத்திற்குள்ளேயே, ஒரு தலைச் சிறந்த உதாரணத்தை வைத்துக் கொண்டே, தவறான வழியிலே பொதுமக்களைத் திசை திருப்புவது நாட்டு நலனின் அக்கறை உள்ளோர் செய்யும் காரியமல்ல.

அணுசக்தித் துறையின் சிறந்த செயல்பாட்டுவரலாறு
புக்குஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்தில், கதிர்வீச்சினால் ஒருவருமே இறக்க வில்லை. சுனாமித் தாக்குதலினாலும், அதையொட்டிய ஏனைய காரணங்களாலும், பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர் என்பது தான் உண்மை.குறிப்பாக ஒருவருமே பன்னாட்டுக் கதிர்வீச்சித் தற்காப்புக் குழுவினரால் பரிந்துரைக்கப் பட்டுள்ள கதிர்வீச்சு உச்ச அளவைப் பெறவில்லை. இவ்வுண்மைகள் நம்புவதற்கே கடினமாக இருந்தாலும், உண்மைகளைப் புறக்கணிக்கவோ, திரித்து பேசவோ கூடாது என்பதுதானே முறை?மேலும், நம் நாட்டிலே சில கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலே கரையோரங்களில் படிந்துள்ள தோரியம் கனிமம் காரணமாக அணு உலைகளில் வேலை செய்யும் இடங்களிலுள்ள கதிர்வீச்சளவைக் காட்டிலும், அதிகமான அளவிலே சுற்றுச் சூழலில் கதிர்வீச்சு காணப்படுகிறது. இவ்விடங்களில் மக்களும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்குக் கதிர்வீச்சினால் உடல் நலம் பாதிக்கப் பட்டிருக்கிறதா என்பதை திருவனந்தப்புரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற மண்டலப் புற்று நோய் ஆராய்ச்சி மையம், கண்டறிந்து வருகிறது. 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து கண்காணித்து வந்த போதிலும், இதுவரை திட்டவட்டமாக கதிர்வீச்சு விளைவுகளைப் பதிவு செய்ய முடியவில்லை. சீனாவிலும் இம்மாதிரியே ஆய்வுகள் கூறுகின்றன. கூடங்குளம் அருகிலேயே மணவாளக்குறிச்சியில் அதிகக் கதிர்வீச்சுக் கொண்டச் சுற்றுச் சூழல் உண்டு. இங்கு கடற்கரையை ஒட்டி வாழும் மக்களைக் காட்டிலும், குறைவான அளவிலேயே கூடங்குளத்தைச் சுற்றிலுமுள்ளவர், அணுமின் நிலையம் செயல்படும்போது, கதிர்வீச்சுப் பெற வாய்ப்பிருக்கிறது. இடிந்தகரை கிராமத்திலேயே கூட சில இடங்களில் இயற்கையாகவே கதிர்வீச்சு அதிகமாக உள்ளது என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இம்மாதிரியான உண்மைச் செய்திகளை மக்களுக்குத் தெரியப் படுத்தி, அவர்களின் மனோபாவங்களை செப்பனிட வேண்டியது, அரசின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை.தவிர, 40 ஆண்டுகளாக, 20 அணு உலைகளுக்கும் மேலாக இந்நாட்டில், ஒரு கதிர்வீச்சு விபத்தும் ஏற்படா வண்ணம், அணுசக்தித் துறை இயங்கி வந்திருக்கிறது என்பதனையும் மறக்கலாகாது. ஆக, இயற்கைப் பேரிடர் பற்றி மட்டிலுமே நாம் கவலைக் கொண்டு அதை முடிந்த அளவு எதிர் கொள்ளும் வகையிலே நம் செயல்பாடுகள் அமைய வேண்டும். இம்மாதிரியான நெறிமுறைகள் கூடங்குளம் அணு உலைகளில் கடை பிடிக்கப் பட்டுள்ளன என்பதை, நம் அணுமின் சக்திக் கழகம் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறது. எனவே, பொது மக்கள் அச்சமுறத் தேவையே இல்லை.

மக்களின் நம்பிக்கையைப் பெற அரசின் வெளிப்படை இயக்கம் தேவை
இன்று நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம், அரசின் வெளிப்படை இல்லாத செயல்பாடுகளே. பிரச்னைகள் பூதாகாரமாக உருவெடுத்த பின்னரே அரசு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முன்வருகிறது. (உதாரணமாக, புக்குஷிமா விபத்து நடந்து, சில நாட்கள் வரை அது ஒரு சாதாரணமானதுதான் என்றும் ஒன்றும், கவலை கொள்ளத் தேவையில்லை என்ற ரீதியில்தான் செய்திகள் அறிவிக்கப்பட்டு வந்தன) கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தொடங்கி வைப்பதில், மிகவும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் இதுவரை சரியாகத் தெரிவிக்கப் படவில்லை. இந்நாட்டின் முன்னேற்றத்தில் விருப்பமில்லாத அயல்நாட்டவரின் மறைமுகச் செயலாக இருக்கலாமோ என்று, சந்தேகிப்பதற்குக் கூட இடமுண்டு. 40 ஆண்டுகளாகக் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஒரு துறையில், நம்மைத் தரம் தாழ்த்துவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு இடம் கொடுப்பது விவேகமல்ல. நினைத்தால் இழுத்து மூடி, பின் நினைத்தவுடன் செயல்படுத்தும் தொழில் நுட்பமுமல்ல. அதே சமயம் அரசும் திரும்பத் திரும்பத் தன்னிச்சையாகத் தொடங்கும் தேதியைத் தெரிவிப்பதும், பின் ஒருவிதக் காரணமும் காட்டாது தள்ளிப் போடுவதும் மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்யும். இம்மாதிரியான செய்திகளில் உண்மை நிலையை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுவதுதான், ஒரு அரசின் வெளிப்படை இயக்கத்திற்கு உதாரணம்.

மக்கள், "தராசு நிலைப்பாட்டுடன்' இருப்பது அவசியம்
கூடங்குளத்தைச் சுற்றிலும் வாழ் மக்கள், இப்போது எடுத்துக் கொண்டுள்ள நிலைப்பாடும் ஏற்புடையது அல்ல. ஜப்பானிலும், அவ்வப்போது அணுமின் உற்பத்திக்கு எதிராக, முழக்கங்கள் எழுந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், செயல்படுத்துவதில்தான் எவ்வளவு வேறுபாடு!நம் நாட்டில் வரலாறு வழியாகப் பெற்ற ஒரு நடைமுறை, தனிப்பட்ட ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் ஒரு கருவியாகக் போய்விட்டது. பொதுமக்களைத் தூண்டிவிடுவதென்பது மிக எளிதாக நடந்து விடுகிறது. சீரான சிந்தனையற்ற ஒரு நிலையை ஏற்படுத்தி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதுதான் சுதந்திரம் என்று தப்புக் கணக்குப் போடப் படுகிறது. உண்மையான நன்மை - தீமைகள், லாப - நஷ்டங்கள் என்னென்ன என்று சிந்தித்துப் பார்ப்பதுதான் அறிவுப் பூர்வமான முறை. இது எல்லாத் தொழில் நுட்பங்களுக்கும் பொருந்தும். திருவள்ளுவரும் இதைத் தானே கூறுகிறார்: "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான் றோர்க்கு அணி' (குறள்118)கூடங்குளம் அணு உலையைப் பொறுத்த மட்டில், எல்லாப் பாதுகாப்பு நெறிமுறைகளும் செயல் படுத்தப் பட்டிருக்கின்றனவா என்று அரசைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வது, மக்களின் உரிமை. அவசியமும் கூட. ஆனால், முற்றிலுமாகக் கட்டி முடிக்கப்பட்ட நிலையத்தைத் தொடங்க விடாமல் தடுப்பது எவ்விதத்தில் நியாயம்? அதுவும் கோடானக் கோடி பொருட் செலவு செய்துள்ள நிலையிலும், தற்போது, மின்வெட்டினால் மக்கள் அவதியுற்று வரும் நிலையிலும், இவ்வெதிர்ப்பு இயக்கம் வரவேற்கத் தக்கதல்ல. கூடங்குளம் அணுமின் உற்பத்தியின் மூலம் கிடைக்கக் கூடிய வாழ்க்கை தர உயர்வைக் கருத்தில் கொண்டு, அறிவியல் ஆதாரமற்ற விபத்தையும், அதன் பின்விளைவுகளைப் பற்றிய வீணான கற்பனைகளையும் உதறி விடவேண்டும்.

அணுசக்தி பற்றிய பயம் ஒரு மனநிலையே
அணுசக்தி பற்றிய ஒரு பயம் ஏற்படக் காரணமாக அமைந்தது, ஜப்பான் நாட்டின் மீது வீசப் பட்ட அணுகுண்டின் விளைவுகளே. இது துரதிருஷ்டவசமாக நடந்த ஒன்று. அணு உலை செயல்பாட்டை அணுகுண்டு வெடிப்புடன் ஒப்பிடுவது அறிவியல் உண்மைக்கு முற்றிலும் மாறானது. இதை ஏற்றுக் கொள்ள ஏனோ பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் தயங்குகின்றனர். தற்காலத்திய அணு உலைகளில் நிறுவப்பட்டு வரும் பாதுகாப்பு நுட்பங்கள், பல ஆண்டுகளுக்கு முன்னதாகக் கட்டப் பட்ட புக்குஷிமா, செர்னோபில் அணு உலைகளைவிட, பல படிகள் உயர்ந்தவை. இவை விபத்து ஏற்படக் கூடிய செயல்பாடும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதிலேயே கருத்தாயிருக்க வேண்டும். அதிக மின் உற்பத்தி மூலமே இது சாத்தியம். இதை அடைவதற்கு உண்டான எல்லா முற்சிகளையுமே நாம் மேற்கொள்ள வேண்டும். எல்லாத் துறைகளிலுமே சிறிதளவேனும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கையில் அணுமின் உற்பத்தித் துறையில் இது மிக மிகக் குறைவே.

நிவாரணங்களுக்கு சீரான தீர்வு வழிகள்
அரசின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்திய அணுசக்திப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது அணுசக்தித் துறையினின்றும் சுதந்திரமாகச் செயல்படும் வண்ணம் சீர்திருத்தங்களும் கொண்டுவரப் பட்டுள்ளன. எந்த ஒரு தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ மேற்கூறப்பட்ட ஆணையத்தின் ஆணை மூலமாக ஏற்படும் பாதிப்புகளைக் களைந்தெடுத்துக் கொள்ள உதவியாக ஒரு மேல்முறையீடு ஆணையமும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறான வழிமுறைகளையே, மக்கள் தங்கள் பயங்களைப் போக்கிக் கொள்ளப் பயன் படுத்திக் கொள்ள வேண்டுமே அல்லாது, தெரு நிலைப் போராட்டமாக ஆக்கிவிடக் கூடாது.எனவே, சீரான சிந்தனைகளுடன் இரு தரப்பினரும் செயல்பட்டு, கூடிய சீக்கிரமே தமிழகத்திற்கும், ஏனைய இந்தியப் பகுதிகளுக்கும் அதிக அளவு மின்சாரம் கிடைத்து, நாடு முன்னேற்றப் பாதையில் துரிதமாகச் செல்லும் என்று எதிர் பார்ப்போம். கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்குக் கிடைத்த ஒரு வரமே தவிர சாபமல்ல!

கூடங்குளம் அணுமின் உற்பத்தியின் பயன்கள்
இதுவரை கூடங்குளம் பகுதி, மிகவும் பின்தங்கிய, சரியான போக்குவரத்துக் கூட இல்லாத பகுதியாகத்தான் இருந்தது. இன்று சகல உள்கட்டு வசதிகளைப் பெற்றிருக்கிறது. மின் உற்பத்தி ஆரம்பித்தவுடன் இப்பகுதி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதிற்குமான மின்தேவை வெகுவாகப் பூர்த்தி செய்யப்படும். அதன் மூலம் வாழ்க்கைத் தரம் பல்வேறு விதங்களில் உயரும். தொழிற்சாலைகள் பெருகும். 2000 மெ.வா., அளவு மின் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தை இழப்பது, நம் கால்களில் நாமே கல்லைக் கட்டிக் கொண்டு, நம் முன்னேற்றத்தைத் தடை செய்து கொள்வதாகும். இதுவரை தொடர்ந்து, நாம் மின்வெட்டினால் அவதிப் பட்டு வந்தது போதாதா?

(கட்டுரையாளர்கள் இருவருமே மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி நிறைவு பெற்றவர்கள். இவர்கள் அணுக்கதிர் வீச்சுப் பாதுகாப்புமற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடு பற்றிய துறைகளுக்குத் தலைவர்களாக இருந்தனர். தொடர்பு கொள்ள:iyermr2007@gmail.com; ksvnambi@ yahoo.com)



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Oct 18, 2011 7:45 am

அருமையான கட்டுரை பல விஷயங்களை இதன் மூலமாக அறிந்து கொண்டேன் நண்ட்ரி

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Oct 18, 2011 9:37 am

ஜப்பானின் அணுசக்தி பேரழிவுக்கு யார் பொறுப்பு?

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையோரங்களில் பேரழிவை உண்டாக்கிய பூகம்பம் மற்றும் சுனாமியின் விளைவாக, நான்கு அணுஉலைகள் நெருக்கடியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன; வெடித்துச்சிதறும் சாத்தியக்கூறும் உள்ளது. ஜப்பானிய நேரப்படி, புதனன்று காலை, உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 3,373ஐ எட்டி இருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை 10,000த்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கூஷிமா வளாகத்தில் மூன்று அணுஉலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அணுசக்தியின் கழிவு பட்டைகளை கிடப்பில் வைத்திருக்கும், எண் நான்கு ஒன்றின் குளிரூட்டும் அமைப்புமுறை இரண்டு பெரிய தீவிபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இருபது மில்லியனுக்கும் மேலான மக்கள் வாழும் ஒரு மகாநகர பிரதேசமான டோக்கியோவிற்கு ஓரளவிற்கு தொலைவில், அளவிடக்கூடிய பாதிப்புகளுடன், கதிரியக்க கசிவுகள் கணிசமாக ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா, நாகாசாகி சம்பவத்திற்குப் பின்னர் நாடு அதன் மிகப்பெரிய பேரழிவை முகங்கொடுத்திருப்பதாக ஜப்பானிய பிரதம மந்திரி அறிவித்துள்ளார். ஜப்பானிய அணுசக்தி முறிவு அதன் நீண்டகால தாக்கத்தில், இறுதியாக, செர்னோபில் சம்பவத்தையும் கடந்து செல்லக்கூடும் என்று குறிப்பிட்டுக்காட்டி, ஜப்பானிய நிலைமைகளை வரையறுக்கையில், அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் "இயற்கை சீற்றம்" என்ற சொற்களைப் பயன்படுத்தி உள்ளன.

குறிப்பாக ஒரு சுவாரசியமான கட்டுரை ஒன்றில், நியூ யோர்க் டைம்ஸ், அந்த நீளமான தீவு குறித்து புரூக்ஹெவன் தேசிய ஆய்வகத்தால் 1977இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வை நினைவுபடுத்தியது. ஓர் அணுஉலையின் குளிரூட்டு அமைப்புமுறைக்குள் எரிசக்தி கழிவால் தூண்டப்பட்டு ஒரு கட்டுப்பாடில்லாத பேரழிவின் முக்கிய விளைவுகள் குறித்து, அந்த ஆய்வறிக்கை ஆய்வு செய்திருந்தது.

டைம்ஸ் செய்தியின்படி, “500 மைல் தூரத்திற்குள் 100 உடனடி உயிரிழப்புகளும், 138,000 படிப்படியான உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும் என்று அது மதிப்பிட்டது. நிலத்தில் 2,170 மைல் தூரத்திற்கு பாதிப்பு இருக்கும்; சேதங்கள் $546 பில்லியனை எட்டக்கூடும் என்றும் அந்த ஆய்வு கண்டறிந்தது. புரூக்ஹெவன் ஆய்வின் அந்த பகுதி, ஜப்பான் நெருக்கடியின் இதயமாக விளங்கும், அதேவகையான நீர்-உலை கொதிகலன்களைக் கொண்ட அணுஉலைகளையே அந்த ஆய்வும் கணக்கில் எடுத்திருந்தது.”

ஜப்பானில் இதுவரை முன்னொருபோதும் இந்தளவிற்கு மோசமாக நிகழ்ந்திராத, சென்டாயில் ஏற்பட்ட அந்த 9 ரிக்டர் அளவிலான பூகம்பமும், மற்றும் கடற்கரையை வந்து தாக்கிய அந்த பிரமாண்ட அலையும் இயற்கையின் விளைபொருள் தான். ஆனால் அதற்கடுத்து நிகழ்ந்த அணுசக்தி சார்ந்த சம்பவங்கள் சமூக சக்திகளின் விளைவுகளாகும். அவை பூமிக்கடியில் நகர்ந்த அடுக்குகளின் மோதல்களால் ஏற்பட்டதல்ல. மீண்டுமொருமுறை, இந்த முதலாளித்துவ அமைப்புமுறை உலகை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த வழிமுறையில் பெருநிறுவன ஆளும் வர்க்கம் அதன் இரக்கமற்றதனத்தை, பொறுப்பற்றதனத்தை முழுமையாக எடுத்துக்காட்டி உள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டுக் காட்டியதைப் போல (ஜப்பானிய பேரழிவின் தாக்கங்கள்), பூகம்பம் ஏற்பட மிக அதிக சாத்தியமுள்ள உலகின் இந்த பகுதிக்கருகில், 50க்கும் மேலான அணுசக்தி உலைகளை நிறுவுவதில் மிக வெளிப்படையான ஆபத்துகள் இருந்த போதினும், நாடு எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்தில்லாமல் இருக்கச் செய்ய, ஜப்பானிய ஆளும் மேற்தட்டு அணுசக்தியை பணயத்தில் வைத்தது.

இது வெறுமனே ஜப்பானில் மட்டும் ஏற்பட்ட ஒரு சம்பவமல்ல. கடந்த 40 ஆண்டுகளாக அணுசக்தி தொழில்நுட்பத்தின் அபாயங்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கைகள் அளிக்கப்பட்டு வந்துள்ளன. அத்துடன் விண்ட்ஸ்கேல், பெர்மி I, த்ரீ மைல் தீவு, செர்னோபில் போன்ற பல தொடர்ச்சியான சம்பவங்களும் மில்லியன் கணக்கான மக்களின் நிஜ-வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் அணுசக்தி உற்பத்தியில் பில்லியன்களை முதலீடு செய்வதிலிருந்து, ஒன்று மாறி ஒன்றாக ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவ ஆளும் மேற்தட்டின் உந்துதலை, எதனாலும் நிறுத்திவிட முடியவில்லை.

இதேபோன்ற பேரழிவிற்கு சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கும் ஒரு டஜனுக்கும் மேலான அணுசக்தி உலைகள் அமெரிக்காவில் உள்ளன. கலிபோர்னியாவில் உள்ள இரண்டு அணுசக்தி வளாகங்கள், அதாவது டியப்லோ கேன்யன் மற்றும் சான் ஒனோப்ரீ இரண்டும், சான் ஆண்ட்ரியஸ் அபாயப்பகுதிக்கு (San Andreas Fault) அருகாமையில் உள்ளன. 1986இல் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில் ஓர் ஓஹியோ ஆலை, நியூ மேட்ரிட் அபாயப்பகுதியிலிருந்து வந்த தூண்டுதலுடன் சேர்ந்து, செயல்பாடுகளை நிறுத்தும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதே மாநிலத்திலுள்ள மற்றொன்று டோர்னாடோவால் சீரழிக்கப்பட்டது.

டெக்சாஸ், லூசியானா, அலாபாமா, புளோரிடா, ஜோர்ஜியா மற்றும் வடக்கு கலிபோர்னியா ஆகியவற்றின் கடற்கரை பகுதிகளிலும், பெரும் புயல்களால் தாக்கப்பட்டிருக்கும் ஏனைய பகுதிகளிலும் பல அணுஉலைகள் உள்ளன.

மிசிசிபி வளைகுடா கடற்கரை பகுதியில், கத்ரீனா புயல் வந்து தாக்கிய இடத்திலிருந்து 100 மைல் தூரத்தில் இருந்தாலும் கூட, லூசியானாவில் உள்ள வாட்டர்போர்ட் அணுசக்தி உலையை, அந்த புயல் தாக்கிய போது, “ஓர் அசதாராண சம்பவத்திற்காக நிறுத்தப்படுகிறது" என்ற அறிவிப்புடன் நிறுத்தும் நிலை ஏற்பட்டது. குஷ்தவ் புயல், லுசியானாவின் செயிண்ட் பிரான்ஸிஸ்வெலில் உள்ள ரிவர் பெண்ட் ஆலைக்கு அருகில் வந்து தாக்கியது.

மியாமிக்கு தெற்கில் பிஸ்கானி வளைகுடாவிலுள்ள Turkey Point அணுஉலையை Florida Power & Light நிறுவனம் நிர்வகித்து வருகிறது. “இந்த ஆலை இரண்டாண்டுக்கொரு முறை பூமிக்கடியில் நிகழும் புயல்களையும், ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடுமையான காற்றுவீசும் புயலையும் சந்திப்பதாக” ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. 1992இல், ஆண்ட்ரூ புயலின் பார்வை நேரடியாக இந்த ஆலையின் பக்கம் திரும்பியது. இது பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு, புறநகர் மின்சார வினியோகத்தையும் ஐந்து நாட்களுக்கு நிறுத்திப் போட்டிருந்தது. அந்த இடியும், மின்னலும் அவசரகால மின்சக்தியை நிறுத்தியிராவிட்டால், Turkey Pointம் இன்று புக்கூஷிமாவின் அதே நிலைமையில் இருந்திருக்கும்.

இதில் எதுவுமே, அணுசக்தி மீதிருக்கும் ஒபாமா நிர்வாகத்தின் பேரார்வத்தைக் குறைத்துவிடவில்லை. ஜப்பானில் நிகழ்ந்த மோசமான பேரழிவின் விளைவு எந்தளவிற்கு இருக்கின்றது என்று தெரியாத நிலையிலேயே, புதிய அணுசக்தி ஆலைகளைக் கட்டியமைக்கும் வேலைக்கு $39 பில்லியன் கடன் உத்தரவாதங்களை அமெரிக்கா அளிக்க ஒப்பு கொண்டிருப்பதாக செவ்வாயன்று எரிசக்தித்துறை செயலாளர் ஸ்டீவன் சூ காங்கிரஸின் ஒரு துணைக்குழுவிற்கு முறைப்படி அறிவித்தார். இது மூன்று தசாப்தங்களாக, அதாவது Three Mile தீவு விஷயத்திலிருந்து, தொடர்ந்து கொண்டிருக்கிறது. Three Mile தீவில் இத்தகைய கட்டுமானம் நிறுத்தப்பட்டிருந்தது.

அணுசக்தி ஆலைகளை நிறுவுவதில் காட்டப்படும் பொறுப்பற்றத்தனம் ஒரு சர்வதேச விஷயமாகும். துருக்கி அதன் Akkuyu Bay அணுஉலையை, அபாயகரமான எகிமிஸ் அபாயப்பகுதிக்கு அருகில் கட்டியுள்ளது. விரைவிலேயே நான்காவது மிகப்பெரிய அணுசக்தி உற்பத்தி நாடாக ஆகப்போகின்ற, 27 ஆலைகளைக் கட்டியமைத்து வருகின்ற சீனா, உலகிலேயே அதிகளவில் பூகம்பம் பாதிக்கும் சாத்தியக்கூறு உள்ள நாடுகளில் ஒன்றாகும்.

மேற்கு ஐரோப்பாவின் மக்கள்தொகை நிரம்பிய நாடுகள் பலவும், பெரிதும் அணுசக்தியைச் சார்ந்துள்ளன. முதலிடத்தில் பிரான்ஸ் 58 ஆலைகளுடன் இருக்கிறது. பிரிட்டன் 19, ஜேர்மன் 17, ஸ்வீடன் 10, குட்டி பெல்ஜியம் 7, சுவிட்சர்லாந்து 5. கனடா 18 அணுசக்தி ஆலைகளைக் கொண்டிருக்கிறது. இதில் 16 ஆலைகள், உலகிற்கு அதிகளவில் சுத்தமான நீர் வழங்கும் கிரேட் லேக்ஸை ரேடியோ கதிர்வீச்சால் மாசுபடுத்தும் அளவிற்கு ஒரு பேரழவு ஏற்படலாம் என்று கருதப்படும், தெற்கு ஒன்டாரியோவில் அமைந்துள்ளன.

இயற்கை பேரிடர்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள மற்றும் மக்கள்தொகை மிகுந்த இடங்களுக்கு அபாயகரமாக அண்மையில் இருக்கும் மையங்கள் துடைத்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் மின்சக்தி உற்பத்தியிலிருந்து இலாபங்களைக் கொழிக்கும் சக்திவாய்ந்த பெருநிறுவனங்கள் மற்றும் நிதியியல் நலன்களுக்கு அல்லது ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்கு இதுபற்றி எந்தக் கவலைகளும் இல்லை. அவை தொடர்ந்து அதிகரித்துவரும் போட்டி நிறைந்த சர்வதேச சூழலில், எரிசக்தி வினியோகத்திற்கு உத்தரவாதமளிக்க முயல்வதாக கூறிக் கொள்கின்றன.

செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதலில் இருந்தே, அமெரிக்காவும், ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் அணுசக்தி பயங்கரவாதத்தின் அபாயம் குறித்து ஓயாமல் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா ஈராக்கில் உடனடியாக தலையிட்டு, சதாம் உசேனிடமிருந்து “பேரழிவு தரும் ஆயுதங்களை" பறிக்கவில்லையென்றால், “திடீரென்று பிடித்துக் கொள்ளும்” பிசாசை புஷ் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்புத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ் தூண்டிவிட்டிருந்தார்.

அணுசக்தி பேரழிவின் முக்கிய அபாயம் பயங்கரவாதத்திடமிருந்து அல்ல, மாறாக முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறையின் தொழிற்பாடுகளிலிருந்து வருகிறது என்பதையே ஜப்பானில் நடந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் (TEPCO), டோஷிபா மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக், இவற்றின் நடவடிக்கைகள் தான் இன்று ஜப்பானை தரிசாக மாற்றிவிட அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

அணுசக்தி உலைகளில் பெரும் பாதுகாப்பு பிரச்சினைகளை மூடிமறைத்ததற்காக, ஜப்பானில் TEPCO அவப்பெயரை பெற்றுள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் செய்தியின்படி, ஜெனரல் எலெக்ட்ரிக்கால் வடிவமைக்கப்பட்ட புக்கூஷிமா வளாகத்தைக் கட்டியமைத்த டோஷிபா, ஓப்பீட்டளவில் சிறிய மற்றும் மலிவான வடிவமைப்பைப் பயன்படுத்தியதன் ஒரு பாகமாக, அதை மலிவாகவும், எளிதாகவும் கட்டியதாக கூறப்பட்டது.”

முதலாளித்துவ அமைப்புமுறையால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றன்பின் ஒன்றாக பல பேரழிவுகளைக் கடந்த தசாப்தம் சந்தித்துள்ளது: ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் காலனித்துவ யுத்தங்கள்; கத்ரீனா புயலின் போது அணை உடைத்துக் கொண்ட போது நியூ ஓர்லியனில் ஏற்பட்ட பேரழிவு; உலகை பொருளாதார வீழ்ச்சிக்குள் மூழ்கடித்த, உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய நிதியியல் பொறிவு; பிரிட்டிஷ் பெட்ரோலியத்தால் மெக்சிக்கோ வளைகுடா விஷமாக்கப்பட்டது. இதில் எந்தவொரு பேராபத்துக்கும் ஒரு பெருநிறுவன தலைமை செயல் நிர்வாகியோ அல்லது ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியோ பொறுப்பாக்கப்படவில்லை.

இந்த சம்பவங்கள் திட்டமிடலில் தோற்று போயிருக்கும், அவசியமான சமூக உள்கட்டமைப்பைக் கட்டியமைப்பதில் அல்லது நிர்வகிப்பதில் தோற்று போயிருக்கும், பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிப்பதில் தோற்று போயிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் குற்றம்மிக்க பொறுப்பற்றதனத்தையும், முதலாளித்துவ அமைப்புமுறையின் உள்ளார்ந்த குளறுபடியையும் எடுத்துக்காட்டுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் உழைப்பு, வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பெரும் செல்வவளத்தை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் பெருளாதார வாழ்வின் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் செல்வம்-குவிக்கும் நோய்க்கு அடிபணிந்துள்ளதால், இந்த வளங்கள் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கிடைப்பதில்லை.

இந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் பேரழிவுகளிலிருந்து, உழைக்கும் மக்கள் அவசியமான தீர்மானங்களைப் பெற வேண்டும். நவீன சமூகத்தின் பரந்த பொருளாதார வளங்கள் நிதியியல் பிரபுத்துவத்தின் கைகளிலிருந்து எடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட வேண்டும். சந்தை குளறுபடிக்கு மாற்றாக, திட்டமிட்ட பங்கீட்டு வினியோக முறை நிறுத்தப்பட வேண்டும். போட்டிமிக்க தேசிய-அரசுகளின் மோதல்களுக்கு மாற்றாக, உலக பொருளாதாரத்தின் இணக்கமான அபிவிருத்தி கொண்டு வரப்பட வேண்டும். இது சர்வதேச சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தைக் குறிக்கிறது.









தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Oct 18, 2011 10:23 am

25 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Chernobyl-burial

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பேரழிவுப் போராயுதம்
இரகசியமாய்த் திட்ட மிட்டு
உருவாக்கி
ஹிரோஷிமா மீது வீசி
நிர்வாண மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும் அணுக் குண்டால்
நாசமாக்கப் பட்டது !
திட்ட மின்றி
தென்னாலி ராமன் போல்
மூடர் அணு உலையைச்
சூடாக்கி
வெடிப்பு சோதனை அரங்கேறி
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
மரித்தனர் மாந்தர்,
மடிகிறார் மாந்தர், மரிப்பார் மாந்தர்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை !
மன்னிக்க முடியா
மனிதத் தவறால் நேர்ந்த முதல்
அணுயுகப் பிரளயம்!

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Fig-1-chernobyl-1

“25 ஆண்டுகள் கடந்தும் சிதைந்து புதைபட்ட செர்நோபில் கதிரியக்கக் கழிவுகளும், எரிக் கோல்களும் நிரம்பி யுக்ரேன் நாடு உட்பட மற்ற உலக நாடுகளையும் பயமுறுத்தி வருகிறது. இப்போது அந்த அணு உலைச் சமாதியைச் சுற்றி மாபெரும் ஓர் இரும்புக் கவசக் கோட்டைக் கட்டப்பட்டு வருகிறது. செர்நோபில் விபத்து நூதன நிகழ்ச்சி. ஆனால் அத்தகைய விபத்து மீண்டும் நிகழ்வது அபூர்வம்.”

இகோர் கிரமாட்கின் [Igor Gramatkin, Manager Chernobyl Nuclear Power Plant, Ukraine (April 1, 2011)

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைக் கட்ட ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840--1928]

மனிதக் கரங்கள் மூளைக்கு முந்திச் செய்த அவசரத் தவறை அறிந்த வுடனே விரைவாய்த் திருத்தச் செல்கையில் மீண்டும் ஒரு தவறைப் புரிகின்றன ! பிறகு இரண்டு தவறுகள் நான்கு பழுதுகளை உண்டாக்கும் ! அப்படியே தவறுச் சங்கிலித் தொடரியக்கம் விரிந்து கண்ணிமைப் பொழுதில், மீள முடியாத ஒரு கோர விபத்து கண்முன்னே அரங்கேறுகிறது !

கட்டுரையாளர்
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Fig-5-chernobyl-layout

“25 ஆண்டுகளுக்கு முன்னே நேர்ந்த செர்நோபில் அணு உலை விபத்தில் விளைந்த கதிரியக்க மூலங்களின் தீவிரம் அருகிலிருக்கும் பிரிபயாட் நகரில் தேய்ந்து குறைய 900 ஆண்டுகள் ஆகலாம்.”

“பேராற்றல் படைத்த அமெரிக்கா ஒவ்வோர் ஆண்டும், அணு ஆயுதங்களுக்கும், அவற்றைச் சார்ந்த திட்டங்களுக்கும் 27 பில்லியன் டாலர் செலவழித்து வருகிறது.”

“அணு ஆயுதங்கள் தயாரிக்கும் விஞ்ஞானப் பொறியியற் திறமையுடைய தேசங்கள் எகிப்து, தென் கொரியா உள்பட உலகில் நாற்பது நாடுகள் இருப்பதாக ஊகிக்கப் படுகிறது.”

இஸ்ரேல் நாடு வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 200 என்பதாக மதிப்பிடப் படுகிறது.”

“தி இண்டிபென்டன்ட்” யுத்தமும், பேரழிவுகளும் (The Independent Aug 5, 2005)
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Fig-2-chernobyl-location

முன்னுரை: 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் முடிவு காலத்தில் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்களில் திட்டமிட்டு அமெரிக்கா அணு ஆயுதங்களை வீசி லட்சக் கணக்கான மாந்தர் மரித்ததுடன், எண்ணற்ற ஜப்பானியர் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு இன்றைய நாளிலும் துயர்க் கடலில் தத்தளித்து வருகிறார்கள். ஆயினும் மனித இனம் அணு ஆயுதங் களின் கோர விளைவுகளைப் பற்றி இன்னும் கற்றுக் கொள்ளவில்லை! அந்த தாக்குதலுக்குப் பிறகு 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் நிலையத்தில் மனிதத் தவறு களால் அணு உலையில் பேரளவு வெப்பசக்தி உண்டாகி, வெப்பம் நீக்க மடையாது, நல்ல வேளை வெடிப்பு ஏற்படாது அணுவியல் எரிக் கோல்கள் மட்டும் உருகின! அணு உலை உருக்கு அழுத்தக் கலனும் சிதைந்து, கதிரியக்கம் சூழ்வெளி மண்டலத்தில் பரவாது பாதுகாப்பு அரணுக்குள் அடங்கிச் சீர்ப்படுத்த பெரும் நிதிச் செலவை உண்டாக்கியது. அடுத்து சோவியத் ரஷ்யாவில் யுக்ரேன் நாட்டின் கீவ் [Kiev] நகருக்கு அருகே 1986 ஏப்ரல் 26 ஆம் நேர்ந்த செர்நோபில் அணு உலை விபத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் உண்டாகி எரியும் அணுவியல் எரிக்கோல்கள் உடைந்துருகி, கதிரியக்கம் பெருகி சூழ் மண்டலத்தில் வீசி எறியப் பட்டன!

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Damaged-reactor

சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டி கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும், மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம் செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர்! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள் கட்டாய மாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். ஆனால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத் துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர் பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப் பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது! உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவுகள் விளைக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை விபத்து கருதப் படுகிறது!

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Reactor-building-damage

செர்நோபில் அணு உலையில் (யூனிட் -4) என்ன நேர்ந்தது?

செர்நோபில் அணுமின்சக்தி நிலையம் பழைய சோவித் ரஷ்யாவைச் சேர்ந்த யுக்ரேன் நாட்டின் தலைநகரான கீவ் [Kiev] நகருக்குச் சுமார் 80 மைல் [130 கி.மீடர்] தூரத்தில் உள்ளது. 1986 ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலையில் செர்நோபில் நிலையத்தின் நான்காவது அணு உலையில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டு இடி முழக்கின. அணு உலை இயக்குநர்கள் சோதனைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தற்காலியமாக முடக்கி ஆய்வுகளைத் தொடர்ந்த போதுதான் அணு உலையில் வெப்பம் பேரளவில் பெருகி, வெப்பம் தணிக்கப் படாமலும், வெப்பசக்தி பெருக்கும் நியூட்ரான் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப் படாமலும் தாறுமாறாக அணு உலை யியக்கம் அலங்கோலமான வேளையில் வெடிப்புகள் நிகழ்ந்தன. வெப்பம் மிகுந்து நீராவியின் அழுத்தம் பன்மடங்கு ஏறியதால், முதல் வெடிப்பு நேர்ந்து அணு உலையின் கனக் கவசமான உருக்கு மூடியை தூக்கி எறிந்தது. அடுத்து அணு உலைக் கவசக் காங்கிரீட் அரணும் பிளக்கப்பட்டு, கதிரியக்கத் துணுக்குகள், தூசிகள் சூழ்மண்டலத்தில் பரவின.
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Contol-rod-positions
சூடான எரிக்கோல்கள் யாவும் உடைந்து, வெளிக்காற்று உலைக்கலன் உள்ளே நுழைந்து தீப்பிடித்தன. இரண்டாவது வெடிப்பு உலைக் கலனில் சேமிப்பான ஹைடிரஜன், ஆக்ஸிஜன் தீவிரப் பிணைப்பால் ஏற்பட்டு உடைந்து போன கதிரியக்கக் கோல்களை மீண்டும் தூளாக்கித் தூக்கி விளியே எறிந்தது. எரிக்கோல்களில் பற்றிய தீமூட்டம், டன் கணக்கில் அடுக்கப்பட்டு மிதவாக்கியாகப் பயன்படும் திரட்கரியில் [Moderator Graphite Bricks] பிடித்துக் கொண்டு 10 நாட்களாய் அணைக்க முடியாமல் எரிந்தது. அணு உலை 1800 டிகிரி C உஷ்ணம் அடைந்து யுரேனியக் கோல்கள் உருகிப் பாறையாகின! 200 டன் கதிரியக்க எரிக் கோல்களும், முறிந்து போன பிற உருக்குச் சாதனங்களும் காங்கிரீட் கவசத்தால் மூட வாகனங்களும், சாதனங் களும் தயாரிக்கப் பட்டன. அவசர அவசரமாக சுமார் 700,000 டன் உருக்கு உத்தரங்களும், இரும்புத் தட்டுகளும் சுற்றி அமைக்கப்பட்டு, 400,000 டன் காங்கிரீட் ஹெலிகாப்டர் மூலமாக ஊற்றப்பட்டது.

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Fig-2-rbmk-reactor

சிதைந்து போன செர்நோபில் அணு உலையில் தீயணைக்கச் சென்றவரும், இயக்குநர் சிலரும் ஆக 31 நபர் ஒருசில நாட்களில் உயிரிழந்தனர். மற்றும் செம்மைப் படுத்தப் புகுந்து, திடீர் வீரியக் கதிரடி பட்ட [Acute Radiation Dose] 209 நபர்களில், 19 பேர் மரித்தனர். மற்றும் மிகையானக் கதிரடி பெற்ற 134 நபர்கள் தப்பிப் பிழைத்துக் கொண்டார்கள். செர்நோபிலைச் சுற்றி யிருந்த பெலரஸ், யுக்ரேன், ரஷ்யா நாடுகளின் நகர்ப்புறத்தில் வாழ்ந்த மாந்தர் மில்லியன் கணக்கில் சிறிதளவுக் கதிரடி வாங்கினர். 2006 ஏப்ரல் மாதம் வரைச் செர்நோபில் விபத்தில் இறந்தவர் எண்ணிக்கை 65 என்று சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் உடல்நல நிபுணர் 600 பேர் [UN World Health Organization & Govts of Russia, Ukraine, Belarus] வெளிவிட்ட ஓர் நம்பத் தகுந்த அறிக்கை கூறுகிறது. மரணமடைந்த அந்த 65 பேர்களில் 50 நபர் தீயணைப்புக் குழுவினர்; மற்றும் தைராய்டு புற்றுநோய் தாக்கப்பட்ட 14 குழந்தைகள். மேலும் வரும் ஆண்டுகளில் புற்று நோயில் மடிந்து போவோர் எண்ணிக்கை 9000 ஆக ஏறலாம் என்று அந்த நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்! ஆனால் அந்த எண்ணிக்கையை ஒப்புக் கொள்ளாத கிரீன்பீஸ் வாதிகள் [Greenpeace Activists] அதை விட பத்து மடங்கு நபர்கள் [93,000 பேர்] மரணம் அடைவார் என்று வெளியிட்டிருக்கிறார்கள்!

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Fig-10-sealing-the-leaks

25 ஆண்டுகளுக்குப் பிறகு செர்நோபில் சமாதியில் கதிரியக்கக் கசிவுகள் !

சீர்குலைந்த நான்காவது யூனிட் செர்நோபில் அணு உலை 1986 இல் நிரந்தரக் காங்கிரீட் சமாதியில் அடக்கம் ஆயினும் தற்போது சுற்றுச் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டுக் கதிரியக்கக் கசிவுகள் வெளியாவதாக அறியப் படுகிறது. ஆரம்பத்திலேயே மேற்தளக் கூரைப் பகுதி சரிவரக் கட்டுமானமாகி மூடப் படவில்லை. அவசர அவசரமாய் வேலை செய்வோர் தீவிரக் கதிரடிகளைப் பெற்றுக் கொண்டு தரப்பாடில்லாமல் கட்டிய காங்கிரீட் சுவர்கள், தற்போது சிதைவதால் புதிய கவசக் கட்டடம் கட்டும் திட்டங்கள் தயாராக உள்ளன. அந்த அகில நாட்டுக் கவசச் சுவர் திட்டம் [Internatioanal Shelter Implementation Plan] நிறைவேற 715 மில்லியன் டாலர் நிதி தேவைப்படும். அத்திட்டத்தில் சமாதிக்குள் உடைந்து கதிர்வீசிக் கொண்டிருக்கும் யுரேனிய எரிக்கோல்களை நீக்கும் பணியும் சேர்க்கப் பட்டிருக்கிறது. மேற்தளம் ஏற்கனவே மீண்டும் செம்மை ஆக்கப் பட்டுள்ளது. 2001 மார்ச்சில் 36 மில்லியன் டாலர் செலவில் கதிரியக்கக் கழிவுச் சுத்தீகரிப்பு ஏற்பாடுகள், புதைப்புக் குழிகள் கட்டும் திட்டம் தயாராயின.

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Fig-11-the-ill-fated-control-room

990 ஆண்டுகளில் 400 மில்லியன் டாலர் செலவு செய்து, எஞ்சியுள்ள செர்நோபில் மாடல் அணு உலைகளின் பாதுகாப்பு, கட்டுப்பாடு ஏற்பாடுகள் பெருமளவில் செம்மையாகி மேம்படுத்தப் பட்டன. சுமார் 6000 பேர் ஒவ்வொரு நாளும் வேலை செய்து, நிலையத்தின் கதிர்வீச்சளவுகள் அகில நாட்டு நடப்புக்கு ஒப்பும்படி சுத்த மாக்கப் பட்டு ஒழுங்கு நிலைக்கு மீட்சி அடைந்தன. செர்நோபிள் சமாதிக்கு அருகிலிருந்த அறையில் ஒரு சிறு விஞ்ஞானப் பொறியியல் குழு ஒன்றும் சீர்ப்படுத்தும் பணிகளில் வேலை செய்தது. தளப் பெயர்ச்சியான பணியாட்களும் அவரது குடும்பத்தினரும் தற்போது 20 மைல் தூரத்தில் உள்ள “ஸ்லாவுட்ச்” [Slavutich] என்னும் நகரில் வாழ்கிறார்கள். இயங்கிக் கொண்டிருந்த மற்ற செர்நோபில் அணுமின் உலைகள் 2000 ஆம் ஆண்டில் நிரந்தரமாய் நிறுத்தம் அடைந்தன! 1.1 பில்லியன் டாலர் செலவில் பாதி வட்ட வளைவுக் கவசக் கட்டடம் ஒன்று சமாதியைச் சுற்றிலும் அமைக்கும் திட்டம் தயாராக்கப் படுகிறது. அது அடுத்து 100 ஆண்டுகள் வரை செர்நோபில் அணு உலைக் கசிவுகளிலிருந்து பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Fig-3-chernobyl-children

கதிரியக்க நோய்வாய்ப் பட்ட செர்நோபில் சிறுவர்கள்

“செர்நோபில் சிறுவர்கள்” என்று புற்றுநோயில் பாதிக்கப்பட்ட பரிதாபக் குழந்தைகள் அழைக்கப்பட்டனர்! எண்ணற்ற சிறுவர், சிறுமியர் 20 ஆண்டுகள் கடந்தும் துன்பத்தில் செத்தும் சாகாமலும் மருத்து மனைகளில் தனியாகக் காலம் தள்ளி வருகிறார்கள். பலர் தைராய்டு புற்றுநோயிலும், இரத்த நோயிலும், இதரப் புற்று நோயிலும் இன்னலுற்று தலை மயிரிழந்து, எடை யிழந்து கவலை முகத்தோடு காண்பது மறக்க முடியாத காட்சியாகும்! பெலரஸ் தைராய்டு புற்றுநோய் மையத்தில் 20 ஆண்டுகள் கழித்தும் தற்போது தாக்கப்பட்ட சிறுவரும், வாலிபரும் அநேகர் காணப்படுகிறார். செர்நோபில் விபத்துக்குப் பிறகு அண்டை பகுதிகளில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 மடங்கு பெருகி உள்ளது என்று அறியப் படுகிறது! விபத்து நடப்பதற்கு முன்பு பெலரஸில் எட்டுப் பேர்தான் தைராய்டு புற்று நோயில் துன்புற்றனர். ஆனால் 13 ஆண்டுகள் கழிந்து அந்த எண்ணிக்கை 90 மடங்காகப் பெருகி எண்ணிக்கை 726 ஆனதாய்த் தெரிகிறது!

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Fig-14-chernobyl-school

செர்நோபில் நகர்ப் புறங்களில் நீடிக்கும் கதிரியக்கத் தீங்குகள்

செர்நோபில் விபத்தால் பரவி மக்களைப் பாதிக்கும் கதிரியக்கத் தீங்குகள், ஜப்பானில் போட்ட ஹிரோஷிமா அணுகுண்டின் வீரியத்தை விட 400 மடங்கு மிகையானவை என்று சொல்லப் படுகிறது. மனிதருக்கும், மாட மாளிகைகளுக்கும் விரைவாக நேர்ந்த விளைவுகள் அணு ஆயுதத்தைப் போல் அத்தனைக் கோரமாக இல்லா விட்டாலும், செர்நோபில் விபத்தின் கதிர்வீச்சு நோய்கள் மக்களுக்குப் பல்லாண்டுகள் நீடித்து, கதிர்த் தீண்டல் நிலவளம், நீர்வளத்தை நெடுங்காலம் பாதிக்கும் என்று அறியப் படுகிறது. அணுகுண்டு வெடிப்பில் நொடிப் பொழுதில் 140,000 பேர் வெப்பத்தாலும், அதிர்ச்சியாலும், வெடிப்பாற்றலாலும் மரணம் அடைந்தனர். வெளிப்பட்ட அணு ஆயுதக் கதிரியக்கத்தில் மாந்தர் சிலர் உடனே மடிந்தாலும், செர்நோபில் கதிரியக்கத் துணுக்குகளின் வீரியமும், அளவும், பரவிய நிலப் பகுதிகளும், அவற்றால் விளையும் பாதிப்புகள், விளையப் போகும் பாதிப்புகள் மிக மிக அதிகமானவை. ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டால் 90% நகர்ப் பகுதி சில நிமிடங்களில் தகர்க்கப் பட்டுத் தரை மட்டமாயின. ஆனால் செர்நோபில் விபத்தால் அணு உலைக் கருகில் உள்ள பிரிபயாட் நகரக் கட்டிடங்களில் கதிர்த் தீண்டல் படிந்தாலும் அவை எதுவும் தகர்க்கப் படவில்லை.
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Fig-15-biological-hazard-of-rad-doses

செர்நோபில் மற்றும் சுற்றுப்புறச் சீரமைப்பில் பங்கேற்ற 600,000 இராணுவப் படையினரும் கதிர்த் தாக்குதலில் பாடுபட்டனர். அவரில் ஒருவரான ஓய்வு பெற்ற கர்னல் எகினி கிர்யூஸின் வயிற்றுப் புற்று நோய் தாக்கப் பட்டு பாதி வயிறு நீக்கப்பட்டு விட்டது. அவரது உயிர் நண்பர் கதிரியக்கத்தால் உயிரிழக்க நேர்ந்தது. ரஷ்ய விஞ்ஞானக் கழகத்தின் தனியார் சூழ்வெளிக் கண்காணிப்பு மையக் குழுவினர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு ரஷ்யாவில் செர்நோபில் விபத்தின் விளைவால் மரிப்போர் எண்ணிக்கை திடீரென்று ஏறி யிருப்பதாகக் கூறுகிறது. மேலும் கதிரியக்கம் உடம்பின் நோய்த்தடுப்பு ஏற்பாடுகளைச் [Immune Systems] சிதைக்கிறது என்றும், மக்கள் மனநோயில் வேதனைப் படுகிறார் என்றும், மனிதரின் வயதேற்றம் விரைவாகிறது என்றும் கருவுக் குள்ளிருக்கும் சிசுக்கள் சிதைவாகின்றன என்றும் இருதயக் குருதிக் கோளாறு நோய்கள் பெருகியுள்ளன [Cardiovascular & Blood illness] என்றும் அந்த அறிக்கை மூலம் அறிய வருகிறது. யுக்ரேன் கதிர்வீச்சு மருத்துவ மையத்தின் பேராசிரியர் வொலாடிமைர் பெபஸ்கோ, “செர்நோபில் விபத்தால் சுற்றுப் புறத்தில் தைராய்டு புற்றுநோய், முலைப் புற்றுநோய், இரத்த நோய், மற்ற குருதிக் கோளாறு நோய்கள் மிகையாகிப் பரவியுள்ளன,” என்று சொல்கிறார்.

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Fig-9-radioactive-vehicles

மேலும் http://jayabarathan.wordpress.com



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 11:20 am

பாமரன் அவர்களின் பதிவிலிருந்து சில
இப்பிடிக் கூப்பிடறனேன்னு கோவிச்சுக்காதீங்க. ஏதோ உங்கள மாதிரி
நாலெழுத்துப் படிக்கிலீன்னாலும் அங்கியும் இங்கியும் காதுல உளுந்தத
வெச்சுத்தான் இந்தக் கடுதாசிய எழுதறேன். எனக்கு அவ்வளவாப் படிப்பறிவு
கெடையாதுங்க.

அந்தக் காலத்துல எங்க அப்பத்தா நெலாவைக் காட்டித்தான் சோறு ஊட்டும்.
அப்பறம் நெலாவைப் பாம்பு முழுங்கறது… பாம்பைப் போட்டு கடலைக் கடையறது…
அப்பிடி இப்பிடின்னு கதையெல்லாம் சொல்லும். கொஞ்சம் பெரிசாக பெரிசாக
நம்மூர்ல பெரியார் வேற மூலமூலைக்கு நின்னுகிட்டு “அடப் பைத்தியக்காரா!
நெலாவென்ன லட்டா? ஜிலேபியா? பாம்பு வந்து முழுங்கறதுக்கு? கொஞ்சம்
யோசிச்சுப் பாருங்கடா முட்டாப்பசங்களா…”ன்னு கன்னா பின்னான்னு திட்டீட்டு
இருந்தது புரிய ஆரம்பிச்சுது.

பத்தாததுக்கு திடீர்ன்னு ஒரு நாள் உங்கள மாதிரி நாலு பெரிய மனுசனுங்க
சேந்து நெலாவுலயே போய் குதிச்ச சேதி கேட்டதுமே சின்ன வயசுல கேட்ட
சமாச்சாரங்க மேலெயெல்லாம் சந்தேகம் பொறந்துடுச்சு.

அப்புறம் ஒருநாளு நம்ம ஊட்டுல மாட்டீருந்த சங்கிலிக்கருப்பராயன்ல
இருந்து சரசுவதி வரைக்கும் அத்தனையையும் கழுட்டி பொடக்காழில போய்
போட்டுட்டு வந்தேன்.

என்ன இருந்தாலும் நீங்க என்னோட கண்ணத் தொறந்தவுங்க. நம்ம சனங்களோட
முட்டாத்தனத்துக்கெல்லாம் ராப்பகலா ஆராஞ்சு பதிலு கண்டுபுடிச்சவுங்க….

இருந்தாலும்பாருங்க….

இது இந்த சனங்களுக்குப்புரியவே மாட்டேங்குது….

என்னவோ நீங்களும் கூட ராக்கெட் உடறப்ப புள்ளையாருக்குத் தேங்கா
ஒடச்சுட்டுத்தான் மேல உடறீங்களாமா? உங்கள மாதிரி விஞ்ஞானிங்க கூட
திருப்பதில மொட்டை அடிச்சுக்கிட்டு லட்டுக்காக சண்டப் போட்டுக்கறீங்கன்னு
கேள்விப்பட்டேன். அதக் கேட்டதும்தான் கோபம் பத்தீட்டு வந்துருச்சு.
சங்கிலிக்கருப்பராயன பொடக்காழில போட்டதுக்கு பதிலா உங்களத் தூக்கிப்
போட்டிருக்கலாமோன்னு தோணிச்சு. ஆனாலும் நம்மூர் பசங்கள நம்ப முடியாது.
ஏதாவது புளுகுனாலும் புளுகுவானுகன்னு தெரிஞ்சுதான் இந்தக் கடுதாசிய
எழுதறேன்.

அதென்னவோ கூடங்குளத்துல அணு உலையக் கொண்டுவரப் போகுது நம்ம கவர்மெண்டு…
அது வந்தா ஊரே காலியாயிடும்…. புல் பூண்டு கூட மொளைக்காது….ன்னு மொளச்சு
மூணு எலை கூட உடாத பசங்கெல்லாம் பேசீட்டுத் திரியுதுங்க. ஏங்க அணு ஒலை நம்ம
விஞ்ஞானத்துக்கு எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய கெவுர்த்தி. இதப் புரிஞ்சுக்காம
ஆபத்து கீபத்துன்னு அளந்துகிட்டு இருக்கானுங்க சிலபேரு. ஆனா அவனுக
சொல்றதுலயும் ஒண்ணு ரெண்டு நல்லது இருக்கத்தான் செய்யுதோன்னு ஒரு
சந்தேகங்க….

அமெரிக்காவுல என்னமோ இந்த ஒலைகளை வருசத்துக்கு கொறஞ்சது அறநூறு
தடவையாவது மூடறானுங்களாமா? ஏங்க மூடறதுக்காகவா தொறக்கிறது? ஒரு எழவும்
புரிய மாட்டேங்குதுங்க. ஏதோ உங்கள மாதிரி வெவரம் தெரிஞ்ச நாலுபேரு
வெளக்கிச் சொன்னாத்தானே எங்குளுக்குப் புரியும்.

“அது” வந்தா இந்த நாட்டுக்கே வெளக்குப் போடலாம்… பேக்டரி ஓட்டலாம்….ன்னு
சொல்ற ஆளுங்களும் இருக்காங்க. அப்புறம் என்னங்க இந்த நாட்டுக்கே வெளக்கு
வருதுன்னா ஒரு ஊரு செத்தாத்தான் என்ன? அதுவும் பொதைக்கற வேல மிச்சம்னு
சொல்றாங்க. அப்படியே சாம்பலாயிருமாமா? தூக்கற வேலயும் இல்ல… பொதைக்கற
வேலயும் இல்ல.

ஒரு நாட்டுக்கு கரண்டு கெடைக்குதுன்னா ஒரு ஊரையே கொளுத்தலாம்…. இந்த
ஒலகத்துக்கே கரண்டு கெடைக்குதுன்னா ஒரு நாட்டையே கொளுத்தலாம். எத்தன பேரு
பஸ்சுலயும் ரயில்லயும் அடிபட்டுச் சாகறானுங்க… இதுல செத்தா எவ்வளவு
கவுரவம். விஞ்ஞானத்துக்காக செத்தவன்னு பேராவது மிஞ்சுமில்லீங்களா?

இருந்தாலும் பாருங்க….

இது இந்தசனங்களுக்குப்புரியவே மாட்டேங்குது….

அதென்னவோ அப்பிடிக் கிப்பிடி இந்த ஒலை வெடிக்கறமாதிரி தெரிஞ்சா ராவோட
ராவா ஊர்சனத்த வேற தூரத்து ஊருக்கு கொண்டுபோற அளவுக்கு நெறைய பாதுகாப்பு
சமாச்சாரமெல்லாம் செஞ்சிருக்கோம்; அதனால யாரும் பயப்பட வேண்டாம்னு
கவர்மெண்டு சொல்றதா கேள்விப்பட்டேங்க. இதுலதாங்க ஒரு சின்ன சந்தேகம்…..
என்னடா இது இவனே இப்பிடிக் கேக்கறானேன்னு கோவுச்சுக்கக் கூடாது.

ஏங்க நம்மூர் மூலைல தீப்புடிச்சாலே இந்த பயருசர்வீசு வர்றதுக்கு ஏழு மணி
நேரமாவுது….. வந்தாலும் தண்ணி வந்தா பைப்பு கழுண்டுரும்…. பைப்பு செரியா
இருந்தா தண்ணி வராது…. எல்லாஞ் சேந்து வர்றதுக்குள்ள தீ தானா அணஞ்சுரும்.
அப்புறம் எப்பிடீங்க இந்த ஒலைல ஏதாவுதுன்னா நாங்க உங்கள நம்பீட்டு
உக்காந்திருக்கிறது? ஏதோ கேக்கோணும்னு தோணுச்சு கேட்டுட்டேன்…. சரி அத
உடுங்க….

உலைல கெடக்கற கசடாமா….? அது பேரு புளூட்டோனியமோ என்னமோ…. அதுல இருந்து
ஏதோ சக்தி வெளியே வந்துட்டே இருக்கும்னு சொல்றாங்க. அந்தக் காத்து நம்ம மேல
பட்டாலேயே கண்ட கண்ட நோவெல்லாம் வரும்னு சொல்றாங்களே…. இது நெசந்தாங்களா?

ஆனா அதுக்கும் வழி இருக்கிறதா நம்மூர்ல பேசிக்கிறாங்க. அந்தக் கசட
பத்திரமா எடுத்துட்டுப்போயி பொதைச்சிருவாங்க…. இல்லேன்னா நம்ம நாயர் கடை
பார்சல் மாதிரிப் பண்ணி கடலுக்குள்ள கடாசிருவாங்கன்னு கேள்விப்பட்டேன்.

உங்குளுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு….

நீங்குளுந்தான் இந்த சனங்க உசுரக் காப்பாத்தறதுக்காக தலைல இருக்குற மசிரெல்லாம் போயி பாடாப்படறீங்க….

இருந்தாலும் பாருங்க….

இது இந்தசனங்களுக்குப்புரியவே மாட்டேங்குது….

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Scientist-2

கசடைத் தூக்கி கடலுக்குள்ள போட்டா என்னைக்காவுது அதுல ஓட்டை
விழுந்துச்சுன்னா மீனெல்லாம் சாகும்…. அதத் தின்னா நம்ம சனமெல்லாம்
சாகும்னு சொல்றானுகங்க. ஏங்க…. இவனுக மீன் புடிக்க வேற எடமே கெடைக்காதா….?
கடல்தான் கெடைச்சுதா….? ஏன் நம்மூர் வாலாங்கொளம் மாதிரி வேற ஏதாவது
கொளத்துல மீன் புடிச்சா போதாதா….? அப்பிடி அதுலயும் தீந்து போச்சுன்னா நம்ம
கெவர்மெண்டே ஊருக்கு ஏழு கொளம் வெட்டி அதுக்குள்ள மீனைக்கொட்டி நம்ம
“பஞ்சாயத்து ராசு” மாதிரி “மீன் ராசு”ன்னு ஒரு திட்டம் கொண்டாந்தா எல்லாம்
செரியாயிடுங்க…. இது புரியாம இவனுங்க…..

என்னமோ…. எந்த உலையா இருந்தாலும் முப்பதே வருசந்தான் ஆயுசு…. அதுக்கு
அப்பறம் அதை சமாதி மாதிரி காங்கிரீட்டு போட்டு மூடி காவல் வேற வெக்கணும்….
அதக் கட்டறத விட மூடறதுக்கு பல மடங்கு செலவாகும்…. அப்பிடீன்னெல்லாம்
சொல்றாங்க…. அதிலிருந்து வர்ற கதிரியக்கக் காத்தாமா….. அதுவேற பத்தாயிரம்
வருசம் வரைக்கும் அடிக்கும்னு வேற சொல்றாங்க…. அப்ப ஒண்ணு பண்ணுங்க…..
“நம்ம” தலைவருக்கு ஓட்டுப் போடாத ஊராப் பாத்து உலையை ஆரம்பிச்சிருங்க….

அது ஓடவும் வேண்டாம்….

அத மூடவும் வேண்டாம்….

ஒரேடியா அந்த ஊரையே மூடீறலாம். இப்பிடியே ஒவ்வொரு ஊரா மெரட்டுனா
போதுங்க…. அப்புறம் ஊரென்ன…… நாடே நம்ம கைல….. ஏன்…. இந்த உலகமே நம்ம கைல…
எப்புடி நம்ம “ஐடியா”?

இந்தக் கடுதாசிய எழுதி முடிக்கறப்ப இன்னொரு சமாச்சாரம் கைக்குக்
கெடைச்சதுங்க. அதுவும் நீங்களே எழுதி வெளியிட்டதுங்க. ஆனா…. அது
கெடைச்சப்பறந்தாங்க கொளப்பமே அதிகமாயிடுச்சு…..

தப்பித்தவறிஉலைலஇருந்துகதிரியக்கம்கெளம்பீடுச்சுன்னா….. ஜீப்புலமைக்கக்கட்டீட்டுஊர்ஊராப்போயிதெரியப்படுத்துவோம்னு போட்டிருக்கீங்க…..

ஏங்க….. கதிரியக்கம் கெளம்பீருச்சுன்னு தெரிஞ்சவுடனே எந்தப் பயலாவது
ஜீப்பை ஊருக்குள்ள ஓட்டுவானுங்களா…..? இல்ல ஊரை உட்டே ஓடுவானுங்களா….?

சரி….. அது கெடக்கட்டும்…. அப்புடி என்னாவது சந்தேகம்னா அவுங்கவுங்க
ஊட்டு ரேடியோப் பொட்டியையும், டீவீப் பொட்டியையும் தெறந்து கேளுங்கன்னு
போட்டிருக்கீங்க…..

ஏங்க…. இந்த நாட்டுல என்னைக்காவுது டீவியும் ரேடியோவும் உண்மை பேசி
கேட்டுருக்கீங்களா? பெரியவர் செயப்பிரகாசு நாராயணன் குண்டுக் கல்லாட்டம்
உயிரோட இருந்தப்பவே நம்மூர் ரேடியோ அவரைக் கொன்னு போட்டுது. ஊர்ல ஏதாவது
பிரச்சனை….. கடையடைப்புன்னா….. ரோட்டுல திரியற கழுதை….. மாடு…. இதையெல்லாம்
பாத்துட்டு உங்க ஆளுங்க பஸ்சுகள் பறந்தன….. ரயில்கள் மிதந்தன…. ”மாமூல்”
வாழ்க்கை கெடவில்லை….ன்னு கப்சா உடுவாங்க. இந்த லட்சணத்துல நீங்க
டீவீயையும் ரேடியோவையும் கேக்கச் சொல்றீங்களே….. இது உங்குளுக்கே நாயமாப்
படுதா…..? வேண்ணா ஒண்ணு பண்ணச் சொல்லுங்க….. டீவீலயும் ரேடியோவுலயும்….உலைகள்பத்திரமாஇருக்கு. கதிரியக்கம்துளிக்கூடவெளியேறல….” அப்பிடீன்னு சொல்லச் சொல்லுங்க…. அப்பத்தான் சனங்க துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஊரைக் காலி பண்ணுவாங்க.

சரி…. இதுவும் கெடக்கட்டும்….. ஊட்டுல இருக்குற சன்னல்…. கதவையெல்லாம் இறுக்கமா மூடீட்டு உள்ள இருக்கச் சொல்றீங்க…..

சரிதான்…. ஆனா இங்க சனங்க ஊடே இல்லாம நாயும் பன்னியும் மாதிரி பசில
பராரியா சுத்தீட்டு இருக்குறப்ப எப்புடீங்க ஊட்டுக்குள்ள பூந்து கதவச்
சாத்தறது…..சன்னலை மூடறது? கண்டவன் ஊட்ல பூந்தா கதவச் சாத்த முடியும்?
அப்பிடியே ஊடே இருந்தாலும் ஓடே இல்லாம….. மழை வந்தா தலைக்கிட்டயும்
கால்கிட்டயும் கக்கத்துலயும் ஓட்டைச் சட்டிகளை வெச்சுட்டுக் கெடக்குற எங்கள
மாதிரி சனங்க எதப்போயி அடைக்கிறது? எதப்போயி மூடறது? அப்படீன்னா….
ரோட்டோரமாப் படுக்குறவனும்….. பாட்டுப்பாடிப் பொழைக்கிறவனும்…..
கழைக்கூத்தாடியும்……. எங்க போயி ஒடுங்குவாங்க…..? யார் ஊட்ல
பதுங்குவாங்க…..?

இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நம்ம நாட்டுக்கு அவமானமா இருக்குதுன்னு
ஒருவேளை இந்தத் திட்டமோ என்னவோ…. ஆனா இதுக்குப் பதிலா ஊடில்லாம இருக்குற
இதுகள ஓட்டீட்டுப் போறதை விட உலைக்குள்ளயே தூக்கிப் போட்டா…. ஏழ்மைய ஒழிச்ச
மாதிரியும் இருக்கும்…. ஏழையவே ஒழிச்ச மாதிரியும் இருக்கும்.

இருந்தாலும் உங்குளுக்கு நல்ல மனசுங்க.

எது எப்பிடியோ ஊரைச் ”சுத்தம்” பண்றதுன்னு நீங்க தீர்மானிச்சாச்சுன்னா
அதுக்கு “அப்பீலே” கெடையாதுங்க. அந்தக் காலத்துல பிளேக் நோவு வந்து ஊரையே
தூக்கீட்டுப் போனாப்பல இந்தக் காலத்துல பிளேக்குக்கு அப்பனா அணு உலை வருது.

இந்த மடம் இல்லைன்னா வேற எந்த மடமாவது போக வேண்டியதுதான்….

அதுக்கும்….

உங்க விஞ்ஞானம்…..

உசுரோட உட்டு வெச்சா….


கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 2 Scientist





Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக