புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
2 Posts - 1%
prajai
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
435 Posts - 47%
heezulia
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
30 Posts - 3%
prajai
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_m10தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் மாசுபடுதல் ( கட்டாயம் படிக்கவும் )


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 13, 2011 3:58 pm




மேலோட்டம்

நீர் மாசுபாடு என்பது எஏதேனும் அன்னிய பொருள்களினால் நீரின் தூய்மை கெடுக்கப்பட்டு அதன் தரம் குறைவதே ஆகும். நீர் மாசுபாடு என்பது நீர் ஆதாரங்களான ஆறுகள் மற்றும் கடல்களில் ஏற்படுவதாகும். நீர் மாசுபாடு என்பது பெருங்கடல்கள், ஏரிகள், நீரோட்டங்கள், ஆறுகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் உள்ள இடங்கள் அனைத்திலும் ஏற்படக்கூடிய தூய்மைக்கோடாகும். இதனால் நச்சுப்பொருள்கள் தேவைப்படும் பொருட்கள், எளிதில் கரையக்கூடிய பொருள்கள் கதிர்வீச்சுகள் ஆகியவற்றின் வெளியீடு ஏற்பட்டு நிலத்தின் அடியில் மாற்றம் படிந்துவிடும். இதனால் நீர் நிலைகளின் சூழிடத்தில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக வளம்குன்றிய நீர்நிலைகள் (Entrophication) என்று நிலைமை ஏற்படும். அதாவது நீர் நிலையில் மாசுபடுத்திகளினால் அதிகமாக வளர்ந்து பரவுவதால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.

சுற்றுப்புறத்திற்கு மணிச்சத்தினால் (phosphorus) ஏற்படும் தாக்கம்:

அதிகமான மணிச்சத்து கேடு விளைவு
வளம் குன்றிய நீர்நிலைகள்
பிரணவாயுவின் பற்றாக்குறையினால் ஏற்படும் இரசாயன மாற்றத்தில் நச்சுப்பொருள்கள் உண்டாகும்.
குடிநீரை தூய்மைப் படுத்துவதற்கான செலவு அதிகமாகுதல்.
அப்பகுதியின் சூழிடத்தில் மாற்றம் ஏற்படுதல்
வண்டல் படிவங்கள் அதிகரிப்பதால் பொழுதுபோக்கிற்கான நீர் உபயோகித்தல் தடை ஏற்படுதல்
நீரின் மேற்புறத்தில் ஏற்படும் படிவங்கள் மற்றும் துர்நாற்றம்
பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தல்
வளம் குன்றிய நீர்நிலைகள்



வளம் குன்றிய நீர்நிலைகளை குறைக்கும் வழிமுறைகள் :



நீர் பிழப்பு பகுதிகளின் மேலாண்மை முறைகள்
மணிச்சத்து உரங்களை தேவையான அளவு உபயோகித்தல்
மணிச்சத்து உரங்களின் வகை
அங்கக உரங்கள் உபயோகப்படுத்தல்
வடிகால் வசதிகளை மாற்றியமைத்தல்
இரசாயன நேர்த்தி :

நீர் சுழற்சி மற்றும் மாசுபாடு :

நீர் சுழற்சி என்பது நீர் சுழலும் பாதையாகும். பூமியில் நீரானது மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்படுகின்றது. இதுவே பூமி மற்றும் வளிமண்டலத்தின் இடையே ஏற்படும். நீர் சுழற்சி (அ) தொடர் நீர் இயக்கம் என்றழைக்கப்படுகிறது. பின்வரும் முறைகளில் இது நடைபெறுகின்றது.

ஆவியாதல்: நீரானது திரவத்திலிருந்து வாயுத்தன்மையாக மாறுதல் இலைத்துளை மூலம் ஆவியாகுதல்
படிந்துவிடுதல்: ஆவியானது குளிர்ந்த பதத்தில் படிந்துவிடுதல் (குளிரூட்டப்பட்ட அறை)
மழை பெய்தல்: பூமிக்கு மீண்டும் வரக்கூடிய நீர் (மேகங்களில் உள்ள நீர்த்துளிகள் பெரியதாகி மழையாக பெய்யும்)
நீர் சுழற்சி மற்றும் மாசுபாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு :

நீர் சுழற்சியின் படி, இயற்கையின் நிகழ்வாக நம்மைச் சுற்றி உள்ள நீரானது நிலத்தினுள் உறிஞ்சப்பட்டு ஆறுகள் மூலம் நீரோடைகளாக சென்று கடலினை அடையும். உயிர்சிதைவு ஏற்படும் நீர்வாழ் உயிரினங்களுக்கு நன்மை அளிக்கும் முறையில் மாற்றப்படும். அதுபோல் கனிம மாசுபடுத்திகள் பரந்து இருப்பதால் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிப்பது இல்லை.

சிறிய அளவிளான அங்கக மற்றும் கனிம மாசுபடுத்திகள் நீரோடைகளில் பாதுகாப்பாக சிதைக்கப்பட்ட கடலுள் கலந்து விடுவதால் சூழிலடத்திற்கு ஏதும் தீங்கு இல்லை. ஆனால் அவை மிகப் பெரிய அளவில் இருந்தால் கடலோர உயிரினங்களை பாதிக்கும்.

வழிகள் மற்றும் முறைகள் :

நீர் மாசுபாடு ஏற்படுத்தும் முக்கிய வழிகள் பின் வருவனவாகும் :

பெட்ரோலிய பொருட்கள்
செயற்கை வேளாண் இரசாயனங்கள்
கடின உலோகங்கள்
தீங்கு ஏற்படுத்தும் கழிவுகள்
அளவிற்கு அதிக அங்கக பொருட்கள்
படிமானங்கள்
தொற்று ஏற்படுத்தும் கிருமிகள்
காற்று மாசுபடுதல்
வெப்ப மாசுபாடு
மண் மாசுபாடு
நீர் மாசுபாடு மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு :

மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நீர்மூலம் பரவும் நோய்கள் :

டைபாய்டு
அமிபியாசிஸ்
ஜியார்டியாசிஸ்
அஸ்காரியாசிஸ்
கொக்கி புழுக்கள்
மாசுபட்ட கடல் நீரால் ஏற்படும் நோய்கள் :


தோல் நோய்கள், காதுவலி, கண்கள் சிவந்து போகுதல்
மூச்சு திணறல் நோய்கள்
மூளைக்காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றோட்டம், வாந்தி மற்றும் வயிற்றுவலி
வாந்தி மற்றும் வயிற்றுவலி

இரசாயனங்கள் (பூச்சிக்கொல்லிகள், ஹைட்ரோகார்பன், அங்கக மாசுபடுத்திகள், கடின உலோகங்கள்) போன்றவற்றால் ஏற்படும் தீங்குகள்.



புற்று நோய் – இரத்தப் புற்று நோய்
இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிப்பாதைகளை தடுக்கும் ஹார்மோன் பிரச்சனைகள்
நரம்பு மண்டலங்களுக்கு சேதம்
சிறுநீரகம் மற்றும் கல்லுரலுக்கு சேதம்
டிஎன்ஏ விற்கு சேதம்
பாதரசத்தினால் ஏற்படும் பாதிப்பு :


கர்ப்பத்தினுள்: நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றது, குறைந்மத பதிவுகள், கற்பதற்காக ஏற்படும் கோளாறுகள், காது கேளாண்மை மற்றும் மூளை பாதிப்பு
பெரியவர்களுள்: நியாபக மறதி, உறுப்பின் காழ்ப்பு, பக்கவாத நோய்கள், இதய நோய்கள் மற்றும் மரணம்.
பிற தகவல்கள்:

நீர் மற்றும் மாசுபட்ட மண்ணும் சேர்ந்தால் நீர் மாசுப்பாடு ஏற்படும் (அ) காற்று தொற்றுகள் (உதாரமாண அமில மழை) போன்றதும் நீரினை மாசுபடுத்தும்.

மாசுபட்ட நீரில் வளரும் மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால் பாதிப்பு ஏற்படும். (உதாரணமாக மீனில் உள்ள அதிக பாதரச அளவு)

மாசுபட்ட நீரில் வளர்ந்த காய்கறிகளை உட்கொண்டாலோ, கைகளை அலம்பினாலோ பாதிப்பு ஏற்படும்.

நீர் மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு:

உரம் மாசுபாடு (நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை) அதிக உரங்களினால் பாசிகள் தேவைக்கதிகமாக வளர்ந்து அதனை நீர்வாழ் உயிரினங்கள் உண்ணும்பொழுது இறக்க நேரிடும். மேலும் மீன்களில் நோய்களை பரப்புகின்றது.


எண்ணெய் பூசப்பட்ட வாத்து

இரசாயன மாசுபாடினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிரான பாதிப்புகள் ஏற்படும். அவற்றின் இனப்பெருக்கம், வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும்
நீரில் உள்ள பாதரசம் நேர் எதிரான அசாதாரண குணங்கள் குன்றிய வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் மரணம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்
அழியாத அங்கக மாசுபடுத்திகள் மீன் இனங்களுக்கு மரணம் மற்றும் குறைபாடுகளை எற்படுத்தும்
நீரில் உள்ள அதிக உப்பு உயிரினங்களை அழித்து விடும்.
நீர் மாசுபாட்டினால் மரம் மற்றும் செடிகளுக்கு ஏற்படும் பாதிப்பு:

நீரில் வளரும் செடிகளை ஒளித்தொகுப்பினை பாதித்து அதனால் அவற்றின் சூழ்பத்தினையும் பாதிக்கும்.

நீரில் உள்ள மாசுபடுத்திகளை உட்கொள்ளும் செடிகள் அவற்றை உணவுச் சங்கில் மூலம் உண்ணும். மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பரவச்செய்கிறது.

நீரில் உள்ள அதிகப்படியான உப்பு (சோடியம் க்ளோரைடு) செடிகளை அழித்துவிடும்.

கட்டுமானங்களில் இருந்து விழும் மரக்கட்டைகள் களிமண் மற்றும் மணல் போன்றவை சரிவதாலும் செடிகள் அழிந்து விடும்.

நீரில் உள்ள களைக்கொல்லிகள் செடிகளை அழித்துவிடும்.

நீர் மாசுபாடு மேலாண்மை:

உயிர்வழி நிவர்த்தி:

நுண்ணுயிர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி நிலைப்பட்ட வலயினுள் உள்ள அங்கக பாகங்களின் உணிர்சதைவை துரிதமாக்குதல்.

முழுமையடைந்த பெட்ரோலியம் ஹெட்ரோகார்பன் பொருள்களுக்கு (எம்.டி.பி.இ தவிர்த்து நீள் சங்கிலி அதிக மூலக்கூறு எடை மற்றும் கரையாத பொருள்களால் ஆன அனைத்தும்) பொருந்தும்.

பிற நிலைப்பட்ட வலய நிவர்த்தி தொழில் நுட்பங்கள் (எ-டு. மண் நீராவி பிரித்தெடுத்தல், உயிர்காற்றோட்டம்)

வரையறை முறைகள்: மின்னணு ஏற்பான் (ஆக்ஸிஜன், நைட்ரேட்), ஊட்டச்சத்தி (நைட்ரஜன், பாஸ்பரஸ்), ஆற்றல் மூலம் (கார்பன்).

நிவர்த்தி முறைகள்: காற்றுள்ள (பிராணவாயு சுவாசம்), காற்று மாறுபட்ட (நைட்ரேட் சுவாசம்), காற்றில்லாத (பிராணவாயு அல்லாத சுவாசம்), ஒன்றுபட்ட வளர்சிதை மாற்றம்.

இரு நிலை பிரித்தெடுத்தல்:

நிலத்தை நீரினை மாசுபடுத்தும் அனைத்து பொருள்கள் பெட்ரோலிய பொருள்களின் தனிப்பட்ட நிலை, நிலத்தடியிலிருந்து ஆவியாகும் ஹைட்டேரா கார்பன் ஆகியவற்றை வெளியேற்றுதல்
அதிகமான வெளியேற்றம் ஆற்றல் கொண்டதால், பெட்ரோலிய பொருட்களின் உயிர்சிதைவினை அதிகப்படுத்துவதுடன் நிலத்தடியிலுள்ள பல்வேறு நிலை கொண்ட பொருட்களையும் அகற்றிவிடும்
வரையறை முறைகள்: காற்றற்ற , நீரளவையியல் மற்றும் நீர்
நேர்த்தி முறைகள்:
ஒரு குழாயினை கொண்டு நிலத்தடி திரவ மற்றும் திட வாயுக்களை அதிவிரைவு இரு நிலைஓட்டமாக வெளியேற்றுதல்
இரு (அ) அதிகமான குழாய்களை கொண்டு நிலத்தடி திரவ மற்றும் திட வாயுக்களை வெளியேற்றுதல்
இயற்கையாக அளவினை குறைத்தல்:

இயங்கா நேர்த்தி முறையான இது இயற்கையான முறைகளை கொண்டு பங்குகளை சிதைத்தல் மற்றும் பரவவிடுதல் ஆகியவற்றை சார்ந்து இருக்கும்
பெட்ரோலிய பொருட்கள் வெளியேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமன்படுத்தி குறைப்பதுடன் விரைவில் தாக்குதல் ஏற்படும் பொருட்களுக்கு அது பரவாமல் தடுக்கும்.
இயக்க நேர்த்தி முறைகளின் மூலம் மாசுபடுத்திகளின் அளவினை குறைக்கும் இடங்களுக்கு பொருந்தும்.
முறைகள்:

அழித்தல் (உயிரியல் முறைகள்): காற்றுள்ள (பிராணவாயு சுவாசம்), காற்றற்ற (பிராணவாயு அற்ற சுவாசம்), மற்றும் குறைந்த காற்றுள்ள (குறைந்த பிராணவாயு அளவு)
அழித்தல் அல்லாத மறைகள் (இயற்பியல் முறைகள்): ஆவியாக்குதல், பரப்புதல் (இயந்திர முறை கலப்பு மற்றும் மூலக்கூறு பிரித்தல்) மற்றும் உறிஞ்சுதல்
உயிரியல் முறைகள்:

இயற்கையான உயிர்சிதை முறைகள் ஏற்படும் வேகத்தினை இரசாயனங்கள் (அ) உயிரினங்களை கொண்டு அதிகப்படுத்துதல்

சிந்திய எண்ணெய்களை கடலோரங்கள் மற்றும் நன்செய் நிலங்களில் உள்ள சூழிலடம் பாதிக்காமல் அகற்றுதல்.

வரைமுறை முறைகள்:

காற்றுள்ள (அ) காற்றல்லாத நுண்ணுயிர்கள் மூலம் மக்குதல் (எ-டு. பாக்டீரியா)

நேர்த்தி முறைகள்:

உரமிடுதல்: உயிர்சிதைவு ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு மாசுபட்ட சுற்றுப்புறத்தில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் உரங்களை சேர்க்க வேண்டும்
விதையிடுதல்: நுண்ணுயிர்களை இருக்கும் இளங்கை மண்ணில் சேர்த்தல்
பரவச் செய்யும் பொருள்:

புறஈர்ப்பான்களை கொண்ட இரசாயனங்கள் எண்ணெயினை சிறு துகள்களாக உடைத்து நீரினுள் கலந்து பின்னர் காற்று அலைகள் மற்றும் ஓட்டங்கள் போன்ற இயற்கை செயல்களினால் மேலும் உடைந்துவிடுதல்
கடலில் உள்ள நீரின் உப்பு அளவு, வெப்பநிலை மற்றும் உள்ள நிலைகள் பரவும் திறனை நிர்ணயிக்கும்
இயந்திரங்கள் மூலம் அல்லது தூய்மைபடுத்துதல் கடினமாகும் பொழுது கடலின் நிலை கரடுமுரடாக அமைந்திருந்தால் இம்முறையை பின்பற்ற வேண்டும்.
ஈர்ப்பான்கள்:

நீரினை முழுக்கிவிடும் அதாவது எண்ணெய் விரும்பும் மற்றும் நீர் விரும்பாத பொருள்கள்
எண்ணெய் சிந்தியுள்ள நிலைகளில் உபயோகிக்கலாம். இது பின்வரும் காரணிகளை நிர்ணயம் செய்யும்
ஈர்பான்கள் வகை மற்றும் எண்ணெயின் வகையை கொண்டு உறிஞ்சும் திறன் வேறுபடும்
நீர் வழிந்தோடும் தன்மையை பொறுத்து எண்ணெய் தக்க வைத்துக் கொள்ளுதல் அமையும்.
சுலபமாக உபயோகிக்கும் முறை ஈர்ப்பான்களின் வகை மற்றும் மண்ணின் வகையை கொண்டு அமையும்.
ஈர்க்கும் பொருள்
இயற்கை அங்கக பொருள்: மிதப்பான்களில் இணைக்கப்பட்ட மரத்தூள்கள் தங்களது எடையில் 3 முதல் 15 முறை வரையில் எண்ணெயினை முழ்கடிக்கும்.
இயற்கை கனிம: களிமண், பெர்லைட், வெர்மிகுலைட், கண்ணாடி நூல், மணல் அல்லது எரிமலை சாம்பல் ஆகியவை தங்களது எடையில் 4 முதல் 20 முறை, எண்ணெய் எடையினை உறிஞ்சு கொள்ளும்.
செயற்கை: பாலியுரேத்தேன், பாலித்தீன், நைலான் இழைகள் தங்களது எடையில் 70 முறை எண்ணெய் எடையினை உறிஞ்சு கொள்ளும். இவற்றில் சிலவற்றை தூய்மைபடுத்தி மீண்டும் உபயோகிக்கலாம். மற்றவை ஒரு முறை உபயோகித்த பின் அழித்து விட வேண்டும்.
பொதுமக்களின் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த பக்குவத்தின் அடிப்படையில் தொழிற்சாலையின் தொடர்ச்சியான மேம்பாட்டினை அப்பகுதியை பொருத்து சரிவிகிதமாக்குதல்.
ஆதாரம்: http://library.thinkquest.org/co111040/types/types.php

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?



முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.

இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.

ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ….

1.சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?

நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.

2. புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?

குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.

3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?

குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.

4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?

காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.

5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?

நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.

6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?

இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.

7. போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?

தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?

சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்

நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.
நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்)
தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.
கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன. அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.

உதவி இயக்குநர், (நில வேதியியல்)

நிலவேதியியல் உட்கோட்டம்,

தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,

தரமணி, சென்னை-600113

போன்:044-22541373



நன்றி-RADO




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 13, 2011 4:34 pm

பயனுள்ள பதிர்வு.பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) Image010ycm
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 13, 2011 4:34 pm

மிக பெரிய பயனுள்ள பகிர்வு ... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 13, 2011 4:37 pm

மிகவும் பயனுள்ள பதிவு அருமையிருக்கு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 13, 2011 4:40 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Oct 13, 2011 4:45 pm

பகிர்வுக்கு நன்றி.

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Fri Nov 11, 2011 1:21 pm

பயனுள்ள பகிர்வு பாராட்டுகள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 11, 2011 1:24 pm

பகிர்வுக்கு நன்றி தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) 677196 தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) 677196 தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 11, 2011 1:41 pm

பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) 678642



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 11, 2011 3:40 pm

பள்ளியிலே படித்தது மறந்தவருக்கு ஒரு நினைவூட்டல்.
அருமையான கட்டுரை அண்ணா. தண்ணீர் மாசுபடுதல்  ( கட்டாயம் படிக்கவும் ) 2825183110
ஆனா ரொம்ப பெரிது. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக