புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
29 Posts - 62%
heezulia
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
194 Posts - 73%
heezulia
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
8 Posts - 3%
prajai
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_m10நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவரச நாயகி (என் 3000வது பதிவு)


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 12:59 pm

First topic message reminder :

வக்கீல் 'விவாகரத்து’ வண்டுமுருகனின் அலுவலகத்தில் 'நவரசநாயகிபோண்டாஸ்ரீயும் அவரின் கணவர் பேயாண்டியும் உட்கார்ந்திருந்தனர்.

"நான் இவ கூட வாழ்ந்திருவேன்! ஆனா, இவ வளர்க்குற ஒன்பது நாயோட என்னாலே குப்பை கொட்டவே முடியாது வக்கீல் சார்!" என்று பேயாண்டி உறுதியாகக் கூறினார்.

"இவரு போனாப் போறாரு! முதல்லே டைவர்ஸுக்கு ஏற்பாடு பண்ணுங்க சார்!" என்று அலட்சியமாகக் கூறினார் நவரசநாயகி.

"என்னம்மா இது? ஒன்பது நாய்க்குத் தீனி போட்டு வளக்குறீங்க? பத்தாவதா உங்க புருஷனுக்கும் கொஞ்சம் போட்டா அவரு பாட்டுக்கு வாலைக்குழைச்சிட்டு இருப்பாரில்லே?" என்று பஞ்சாயத்து பண்ண முயன்றார் வண்டுமுருகன்.

"என்ன பேச்சுப் பேசறீங்க வக்கீல் சார்? இவரை நம்பி ஒரு அவுட்-டோர் ஷூட்டிங் கூட போக முடியலீங்க! உங்களுக்குத் தெரியுமா? மொத்தம் பத்து நாய் இருந்திச்சு எங்க வீட்டுலே, அதிலே ஒரு நாய் எப்படி செத்துப்போச்சுத் தெரியுமா?" என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கேட்டாள்.

"எப்படிங்க?" என்று கரிசனத்தோடு கேட்டார் விவாகரத்து வண்டுமுருகன்.

"நாயை இவரு துணிக்குப் போடுற சோப்புப்பவுடரைப் போட்டுக் குளிப்பாட்டியிருக்காருங்க! கடைக்காரர் வாங்கும்போதே இவர்கிட்டே சொல்லியிருக்காரு, அந்த சோப்புப்பவுடரப் போட்டுக் குளிப்பாட்டினா நாய் செத்துப்போயிருமுன்னு...! இவர் கேட்காமப் பண்ணி ஒரு நாய் செத்தெ போச்சு!" என்று மூக்கைச் சிந்தினாள் போண்டாஸ்ரீ.

"ஏன் சார், மேடம் சொல்றது உண்மையா?" என்று கேட்டார் வண்டுமுருகன்.

"அப்பட்டமான பொய் வக்கீல் சார்! அந்த நாய் சோப்புப்பவுடராலே சாகலே! அதை வாஷிங் மெஷின்லே போட்டதுலே தான் செத்துப்போச்சு!" என்று ரோஷமாகக் கூறினார்.

"ஆ! இது வேறயா...?" என்று வாய்ப்பிளந்தாள் போண்டாஸ்ரீ.

"என்ன சார் இது? யாராவது வாஷிங் மெஷினிலே நாயைப் போடுவாங்களா?" என்று அதிர்ச்சியோடு கேட்டார் வண்டுமுருகன்.

"என்ன பண்ணுறது சார்? எங்க வீட்டு மெஷினிலே நாயைத் தான் போட முடியும்," என்று பெருமூச்சு விட்டார் பேயாண்டி.

"கேட்டீங்களா வக்கீல் சார்? அந்த நாய் எவ்வளவு புத்திசாலி நாய் தெரியுமா? தினமும் வாசலிலேருந்து பால்பாக்கெட், நியூஸ் பேப்பரெல்லாம் எடுத்திட்டு வந்து கொடுக்கும்," என்று கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள் போண்டாஸ்ரீ!

"அது எல்லா நாய்ங்களும் செய்யுறது தானே?" என்று கேட்டார் வண்டுமுருகன்.

"சார், மத்த நாயெல்லாம் அந்தந்த வீட்டுக்கு வர்ற பேப்பரையும் பால்பாக்கெட்டையும் தானே எடுத்திட்டு வரும்? என்னோட நாய் அடுத்த வீடு, எதிர்த்த வீட்டுக்கு வர்ற பால்பாக்கெட், பேப்பரையுமே தூக்கிட்டு வந்திரும் சார்! ரொம்பப் பொறுப்பான நாய்!" என்று விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள் போண்டாஸ்ரீ.

வக்கீலின் அனுதாபத்தை போண்டாஸ்ரீ பெற்றுவிடப் போகிறாளே என்ற் ஆத்திரத்தில், பேயாண்டி பேசினார்.

"வக்கீல் சார்! அதுலே ஒரு நாய்க்கு வேறே இவ பேசறதுக்குக் கூட டிரைனிங் கொடுத்திட்டா சார்! ஒரு வாட்டி அதை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போறபோது, எதுத்தாப்புலே வந்த ஒருத்தர் 'என்ன, கழுதையைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் போறீங்களா?-ன்னு கேட்டாரு! நான் கோபமா, 'யோவ், இது கழுதையில்லை, நாய்’-ன்னு சொன்னேன். உடனே இந்த நாயி, ’எசமான், அவரு என் கிட்டேத் தானே கேட்டாரு, நீ ஏன் பதில் சொல்றே?-ன்னு கேட்குது சார்! எவ்வளவு அவமானமாயிருச்சு தெரியுமா?" என்று வினவிய போது அவரது தொண்டையைத் துக்கம் அடைத்தது.

"எதுக்கும்மா நாய்க்கெல்லாம் பேசறதுக்கு டிரைனிங் கொடுக்கறீங்க?" என்று வியப்போடு கேட்டார் விவாகரத்து வண்டுமுருகன்.

"என்ன சார் பண்ணுறது, வீட்டுலே புத்திசாலித்தனமாப் பேச ஒரு நாயாவது வேண்டாமா?" என்று அழுகைக்கு நடுவே வினவினாள் போண்டாஸ்ரீ.

"வக்கீல் சார், நாய்க்கு பிஸ்கெட் போடுவாங்க, கறிபோடுவாங்கன்னு கேள்விப்பட்டிருப்பீங்க! இவ வளர்க்கிற நாய்க்கு சனிக்கிழமையான பிஸ்ஸா வேணுமாம்! அசந்தா அதுவே போன் பண்ணி வரவழைச்சிடுதுங்க!" என்று ஆதங்கப்பட்டார் பேயாண்டி.

"வாயில்லா ஜீவன் கிட்டே கொஞ்சம் அன்பு காட்டுறது தப்பா சார்?" என்று கேட்டார் போண்டாஸ்ரீ.

"அதுக்குன்னு இவ்வளவு அன்பா? இந்த உலகத்துலேயே ஃபேர் அண்ட் லவ்லி போட்டுக்கிறது எங்க வீட்டு நாயிங்க மட்டும் தான் சார்," என்று தேம்பத்தொடங்கினார் பேயாண்டி. "இதுலே கொடுமை என்ன தெரியுமா? 'நான் நாயிங்களோட வெளியே போறேன்; நீங்க வீட்டுக்குக் காவலா இருங்க,’ன்னு எங்கிட்டேயே சொல்லிட்டுப் போறா சார்!" என்று பொருமினார்.

"ஏம்மா பாவம் புருஷனைத் தனியா விட்டுட்டுப் போறீங்க?" என்று விசனத்தோடு விசாரித்தார் வண்டுமுருகன்.

"ஏன், தனியா இருக்க பயமா? மத்த நேரங்களிலே எப்படியோ, இவரு வீட்டுலே தனியா இருந்தார்னா, வாசல்லே 'நாய் ஜாக்கிரதை,’ போர்டு மாட்டிட்டுத் தான் போவேன் தெரியுமா?" என்று பதிலடி கொடுத்தாள் போண்டாஸ்ரீ.

"வக்கீல் சார்! இந்த நாய்ங்களாலே என்னாலே வெளியே தலையைக் காட்ட முடியலே சார்! தனியாப் போகும்போது தெருநாய்ங்களெல்லாம் ’இவன்தாண்டா அந்த ஒன்பது நாய் வளர்க்குறவனு-ன்னு என்னை ரவுண்டு கட்டித் துரத்துது சார்!" என்று வாய்விட்டு அழுதே விட்டார்.

"பொய் சொல்லுறாரு சார்! எங்க தெருவிலே இப்போ ஒரு நாய் கூட கிடையாது தெரியுமா?" என்று மேஜையைக் குத்திச் சொன்னார் போண்டாஸ்ரீ.

"எப்படியிருக்கும்? இந்த ஒன்பது நாய்க்கும் கிடைக்கிற ராஜமரியாதையைப் பார்த்து வாழ்க்கை வெறுத்துப்போயி, மொத்தத் தெருநாயும் அதுங்களே கார்ப்பரேஷன் ஆபீசுக்கு அட்ரஸ் கண்டுபிடிச்சுப் போய்ச் சேர்ந்திருச்சு சார்!" என்று விளக்கினார் பேயாண்டி.

"பேயாண்டின்னு பேரை வச்சுக்கிட்டு நாயைக் கண்டு பயப்படுறாரு பாருங்க!" என்று நக்கலடித்தார் போண்டாஸ்ரீ.

"இந்த நாய்ங்களாலே எனக்கு மட்டுமில்லீங்க, அக்கம்பக்கத்திலிருக்கிறவங்க எல்லாருக்கும் தொல்லைங்க! ஒரு நாள் அசந்து தூங்கிட்டிருக்கும்போது, அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு பக்கத்து வீட்டுக்காரர் போன் பண்ணி ’உங்க நாயுங்க ரொம்ப குரைக்குது; தூங்க முடியலே-ன்னு கம்ப்ளெயிண்ட் பண்ணினாருங்க! எவ்வளவு டென்சன் பாருங்க இதுங்களாலே?" என்று தானும் டென்சன் ஆனார் பேயாண்டி.

"க்கும், இவரு மட்டும் என்னவாம்?" என்று இடைமறித்தாள் நவரசநாயகி. "யாரோ ஒருத்தர் போன் பண்ணிக்கேட்டுட்டாருங்கிறதுக்காக, இவரும் தினமும் அர்த்தராத்திரிக்கு அலாரமெல்லாம் வச்சு, எழுந்திரிச்சு, எல்லாருக்கும் போன் பண்ணி, ’இன்னிக்கு எங்க நாய் குரைச்சுதா, எல்லாரும் நல்லாத் தூங்கிட்டுத்தானே இருக்கீங்க-ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாரு! இவரோட தொல்லைக்கு நாயே மேலுன்னு எல்லாரும் செல்போனை பீச்சிலே போய் போட்டுட்டு வந்திட்டாங்க!" என்று பதிலடி கொடுத்தார் போண்டாஸ்ரீ.

"இவங்க சொல்றதுலேயும் ஒரு நாயம், அதாவது நியாயம் இருக்கே மிஸ்டர் பேயாண்டி?" என்று கேட்டார் வண்டுமுருகன்.

"சார், என் அவஸ்தை உங்களுக்குத் தெரியாது! தினமும் காலையிலே எழுந்து ஒன்பது நாய்களையும் ’வாக்கிங்’ கூட்டிக்கிட்டுப் போகணுங்க! அதுவும், தனித்தனியா கூட்டிக்கிட்டுப் போகணும். காலையிலே ஆறு மணிக்கு ஆரம்பிச்சேன்னா சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் ’மார்னிங் வாக்கிங்’ போற ஒரே ஆளு நான் தானுங்க!" என்று குரல் தழுதழுக்கக் கூறினார் பேயாண்டி.

"எதுக்குத் தனித்தனியா கூட்டிக்கிட்டுப்போகணும்? எல்லா நாயையும் ஒரே சமயத்துலே கூட்டிக்கிட்டுப் போகலாமே?" வண்டுமுருகன் விடுவதாக இல்லை!

"நீங்க வேறே! ஒரு நாய் இழுக்கிற இழுப்புக்கு என்னாலே ஓட முடியலே! ஒன்பது நாயும் இழுத்திட்டு ஓடுனா என்னாவுறது? அப்படியும் ஒருவாட்டி முயற்சி பண்ணினேனுங்க! வடபழனியிலேருந்து செங்கல்பட்டு வரைக்கும் இழுத்துட்டுப் போயிருச்சுங்க! அங்கேருந்து லாரி புடிச்சு மெட்ராஸ் வர்றதுக்குள்ளே போதும் போதுமுன்னு ஆயிருச்சு! அதுக்கப்புறம் தான் இது சரிப்படாதுன்னு காருலே வாக்கிங் போக ஆரம்பிச்சேன்!" என்று பரிதாபமாகக் கூறினார் பேயாண்டி.

"மிஸ்டர் பேயாண்டி! குரைக்கிற நாய் கடிக்காதுன்னு எங்க ஊருலே பெரியவங்க சொல்லுவாங்க!" என்று சமாதானப்படுத்த முயன்றார் வண்டுமுருகன்.

"அது உங்க ஊருப் பெரியவங்களுக்குத் தெரிஞ்சாப் போதுமா? எங்க வீட்டு நாய்ங்களுக்குத் தெரிய வேண்டாமா? என் உடம்பைப் பாருங்க சார்! எந்தெந்த நாய் என்னென்னிக்கு எங்கெங்கே கடிச்சிருக்குன்னு கஜினி சூர்யா மாதிரி உடம்பு முழுக்க அங்கங்கே பச்சை குத்தி வச்சிருக்கேன்! ஒன்பது நாய் ஷிஃப்டு போட்டு ஒரு மனிசனை மாத்தி மாத்திக் கடிச்சா என்னாகுறது?" என்று வெம்பினார் பேயாண்டி.

"அடடா! ஊசி போட்டீங்களா இல்லியா?" கொஞ்சம் அக்கறையும் நிறைய அச்சமுமாய் வண்டுமுருகன் கேட்டார்.

"எத்தனை ஊசி போடுறது சார்? அடுத்த தெருவிலே இருக்கிற ஆஸ்பத்திரியிலே ஆயுள்சந்தா கட்டி வாரத்துக்கு நாலு நாள் போய் ஊசி போட்டிட்டிருக்கேன். ஒரு வாட்டி ஒன்பது நாயும் சேர்ந்தே கடிச்சிருச்சுங்க! ஒரு நாய்க்கு பதினாலு வீதம் ஒன்பது நாய்க்கு நூத்தி இருபத்தாறு ஊசி போட்டு, என் வயிறு ஜாங்கிரி மாதிரி ஆயிருச்சுங்க! இப்பெல்லாம் வாய்வழியா சாப்பிடவே வேண்டாம். ஸ்பூனாலே டைரக்டா வயித்துக்குள்ளேயே போட்டுக்கிறேன் தெரியுமா?"

"ஏன் மேடம்? இவ்வளவு வருஷமா நாய் வளர்க்கறீங்க? உங்களை எப்பவாவது நாய் கடிச்சிருக்கா?" என்று ஆர்வத்தால் கேட்டார் வண்டுமுருகன்.

"ஐயோ, என்னோட நாய்ங்க ரொம்ப நல்லதுங்க! மனுசங்களைக் கடிக்கவே கடிக்காதுங்க சார்" என்று போண்டாஸ்ரீ சொல்லவும் பேயாண்டியின் முகம் பேயறைந்தது போலானது.

"வக்கீல் சார்! இவளைப் பத்தி சரியாப் புரிஞ்சிக்கணுமுன்னா, ஒரு வாட்டி இவ வளர்க்குற ஒன்பது நாயோட பெயரையும் சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம்!" என்றார் பேயாண்டி.

"இவ்வளவு தானா? வரிசையா சொல்றேன் கேளுங்க, பெப்பர், டொமாட்டோ, பல்சர், பைனா, கார்லீ, ஜிஞ்சி, மைசீ, நீமா, ஜீரா! கரெக்டா சொல்லிட்டேனா?" என்று ஒரே மூச்சில் ஆயிரத்து முன்னூற்றி முப்பது திருக்குறளையும் சொன்ன பெருமையோடு கேட்டார் போண்டாஸ்ரீ.

"இப்போ, எங்க அப்பா அம்மா பேரைச் சொல்லச் சொல்லுங்க!" என்றார் பேயாண்டி.

"அது... வந்து... அதாவது... இவங்க அம்மா பேரு வந்து..." என்று தடுமாறினார் போண்டாஸ்ரீ.

"பார்த்தீங்களா சார்? நாய்ங்களோட பேரு ஞாபகத்துலே இருக்கு! மனுசங்க பேரு மறந்து போச்சு!" என்றார் பேயாண்டி, வெற்றிப் பெருமிதத்துடன்.

"இது ஒரு பிரச்சினையா?" என்று கேட்டார் வண்டுமுருகன். "மேடம், நீங்க பெரிய நடிகை! உலகமே உங்களை நவரசநாயகின்னு சொல்லுது! பேசாம உங்க நாய்க்கு இவங்க சொந்தக்காரங்களோட பெயரை வச்சிட வேண்டியது தானே? பெயரையும் மறக்க மாட்டீங்க! அவருக்கும் சந்தோஷமாயிருக்குமே!" என்று ஆலோசனை தெரிவித்தார் வண்டுமுருகன்.

"யோவ் வண்டுமுருகா!" பேயாண்டி இறைந்தார். "இவளா நவரசநாயகி? சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடி ஓட்டல்லே வேலை பண்ணிட்டிருந்தாய்யா! இவ நாய்க்குப் பேரு வச்சிருக்காளே, அதோட அர்த்தம் என்னான்னு சொல்லுறேன் கேட்டுக்கோங்க! மிளகு, தக்காளி, பருப்பு, பைனாப்பிள், பூண்டு, மைசூர், வேப்பம்பூ, ஜீரகம்! ஏதாவது புரியுதா? மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், பைனாப்பிள் ரசம், பூண்டு ரசம், மைசூர் ரசம், வேப்பம்பூ ரசம், ஜீரக ரசம்! இப்படி ஒன்பது நாய்க்கும் ஒன்பது ரசத்தோட பேரை வச்சிருக்கிறதுனாலே தான் இவளை எல்லாரும் ’நவ-ரச-நாய்-கி-’ன்னு கூப்பிடுறாங்க தெரியுமா?" என்று குட்டை உடைத்தார்.

"முதல்லே ரெண்டு பேரும் எழுந்திரிச்சு வெளியே போங்க!" என்று இரைந்தார் விவாகரத்து வண்டுமுருகன். "இல்லாட்டி கார்ப்பரேஷனுக்கு போன் போட்டு உங்களைக் கூட்டிக்கிட்டுப் போக நாய்வண்டியை வரவழைச்சிருவேன்!"

பி.கு: இந்த பதிவுக்கும் நாய்களை வளர்க்கும் நம் நடிகைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை அப்படீன்னு உங்க தலையிலே அடிச்சு சத்யம் பண்ணினா நீங்க நம்பவா போறீங்க?

என்னுடைய 1000-வது பதிவு : Gum.. Bug... பப்புள்கம்

என்னுடைய 2000-வது பதிவு : சதுர டி‌வி -- காதல் நோய்




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Oct 13, 2011 8:21 am

அருமையிருக்கு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 1357389நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 59010615நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Images3ijfநவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Images4px
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 13, 2011 10:33 am

Aathira wrote:சுதானந்தன்,

விழுந்து விழுந்து சிரித்ததில் நெற்றியில் அடி. நாற்பத்து நான்கு தையல் போட்டுள்ளார்கள். மருத்துவ செலவு இப்போது வரை ரூ 9999. 99 பை. உடனடியாக செலவுத்தொகையை அனுப்பி வைக்கவும். கொட்டிய இரத்தத்துக்கு ஈடாக மீண்டும் இரத்தம் சேர 500 ரூபாய்க்கு பழங்கள் வாங்கி அனுப்பி வைக்கவும். தொகையை உடனே அனுப்பவும். மீறினால தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Smilie_bettநவரச நாயகி (என் 3000வது பதிவு) - Page 6 Spacer

உங்களுக்கு நம் ஈகரையின் அரை வைத்தியர் திவா ரஷியாவிலிருந்து வந்து இலவசமாக மருத்துவம் பாக்கிறதா சொல்லியிருக்கார் புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 13, 2011 10:38 am

மிக்க நன்றி கேசவன்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 13, 2011 10:39 am

நேற்று எனக்கு அலைபேசியில் அழைத்து நேரிடையாக வாழ்த்து தெரிவித்த ஆதிரா அக்காவுக்கும், நண்பர் உதயாவுக்கும் என் நன்றிகள்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 20, 2011 6:09 pm

"அப்பட்டமான பொய் வக்கீல் சார்! அந்த நாய் சோப்புப்பவுடராலே சாகலே! அதை வாஷிங் மெஷின்லே போட்டதுலே தான் செத்துப்போச்சு!" என்று ரோஷமாகக் கூறினார்.

"சார், மத்த நாயெல்லாம் அந்தந்த வீட்டுக்கு வர்ற பேப்பரையும் பால்பாக்கெட்டையும் தானே எடுத்திட்டு வரும்? என்னோட நாய் அடுத்த வீடு, எதிர்த்த வீட்டுக்கு வர்ற பால்பாக்கெட், பேப்பரையுமே தூக்கிட்டு வந்திரும் சார்! ரொம்பப் பொறுப்பான நாய்!" என்று விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள் போண்டாஸ்ரீ.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆனாலும் இதெல்லாம் ஓவேறு...
மண்டையில் அடி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக