ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by T.N.Balasubramanian Today at 6:24 pm

» 3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» சாதனையாளர்கள் வாழ்வில்...
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» கால்நடை வளர்ப்பில் டெக்சாஸ் மாநிலம் (அமெரிக்கா)
by ayyasamy ram Today at 5:49 pm

» கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» அமெரிக்காவில் கல்விப் புரட்சி (1954)
by ayyasamy ram Today at 5:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:20 pm

» மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..
by மாணிக்கம் நடேசன் Today at 3:27 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
by Dr.S.Soundarapandian Today at 11:42 am

» கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!
by ayyasamy ram Today at 7:18 am

» திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:32 am

» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
by ayyasamy ram Today at 6:27 am

» மீம்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» கடமையில் உறுதியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» இணையே என் உயிர் துணையே...!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» குலம் தழைக்க பெரியவா சொன்ன பரிகாரம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» புதிய நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 8:52 pm

» டிரைவிங் ஸ்கூல்ல ஆன்லைன் கிளாஸ்…!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சில்வண்டு சாக்லேட்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஒரு குட்டிக் கதை!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» களை- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லூட்கேஸ் – இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» இயற்கையை காதலிக்கும் தனிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» பியூட்டி ஏஞ்சல் எமி ஜாக்சன்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:42 pm

» கருவி இல்லா சமையல் வேண்டுவோர் பெண் இனத்திற்கு எதிரானவர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:38 pm

» தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 4:12 pm

» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» ராமர்,சீதை,ராவண தேசங்களும் பெட்ரோல் விலையும்!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஜீ தமிழ் சீரியல் வில்லி நடிகை மகன் திடீர் மரணம்: சோகத்தில் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பணத்தால் மனத்தூய்மை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கோபத்தை அறிவால் அடக்குங்கள்!
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» போரில் இறந்த மகனுக்கு தாயார் நாட்டிய நடுகல்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு - விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» ப்ரொட்டோகால் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:17 pm

» இளமையை காக்கும் வால்நட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:13 pm

» முல்லாவிடம்,தளபதியின் சமரசம்…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» எவ்வளவு ஆழம் வெட்டணும்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Yesterday at 11:43 am

» உனக்கு என வரம் வேண்டும்...!
by aanmeegam Yesterday at 11:38 am

» இதற்கு இது பதில் இல்லையே!
by aanmeegam Yesterday at 11:36 am

» முனைவர் செளந்தரபாண்டியன் அய்யா அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by aanmeegam Yesterday at 11:35 am

» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 am

» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 am

» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 am

» ’பஞ்ச்’சோதி பராக்!
by T.N.Balasubramanian Thu Jun 17, 2021 9:21 pm

» எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான்…!
by aanmeegam Thu Jun 17, 2021 5:05 pm

Admins Online

தலைவலி: இளமைக்குச் சவால்!

Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Admin Sat Dec 20, 2008 12:03 pm

வாழ்நாளில் தலைவலியை எப்போதாவது ஒரு சமயம் அனுபவித்திருக்காதவர் இருக்கவே முடியாது. தலைவலிக்குப் பெரும்பாலும் பரபரப்புத் தன்மையே காரணம். ஒருவர் இளமைக் காலத்தில், 20 முதல் 40 வயது வரை பரபரப்புடன் செயல்படுவதால் அக் காலகட்டங்களில் தலைவலி வருவது இயல்பாக உள்ளது. முதுமையில் தலைவலியின் தாக்கம் குறையத் தொடங்கி விடும்.

வலி தலையில்தான் என்றாலும்கூட கண் கோளாறால் ஏற்படும் சாதாரண தலைவலி உள்பட ஒற்றைத் தலைவலி வரை அறிகுறிகள் வேறுபடும். தலைவலியைப் பொருத்தவரை அது வந்துபோகும் கால அளவு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். உதாரணமாக இரண்டு மாதத்துக்கு அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை வரும் தலைவலிக்கு தொடர் சிகிச்சை தேவை இல்லை. ஆனால் அடிக்கடி தலைவலி வரும் நிலையில் சுயமாக மாத்திரை சாப்பிட்டுக்கொண்டே இருக்காமல் மருத்துவ சோதனை அவசியம்.

இனி "தலை வலி' இல்லாதபோது நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ள...

தலைவலிக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு என்ன?

மூளையை அறுத்தால் எந்த வலியும் ஏற்படாது. ஏனெனில் மூளைக்குள் நரம்புகள் கிடையாது என்பதால் உணர்ச்சி கிடையாது. ஆனால் மூளைக்கு வெளியே உள்ள மூளை உறை, எலும்பு உறைகள், ரத்தக் குழாய்கள், தோல் ஆகியவற்றை ஒட்டி வலியை உணர்த்தக்கூடிய நரம்புகள் உள்ளன. இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் நிலையில் நரம்பு மூலமாக தலைவலி ஏற்படுகிறது. சைனுசைட்டிஸ் நோய்ப் பிரச்சினை இருந்தாலும் தலைவலி வரும்.

பரபரப்பு, சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருத்தல் உள்பட பல காரணங்களால் நோய்களின் பின்னணி இன்றி தலைவலி வரலாம். சைனுசைட்டிஸ்-மூளைக்காய்ச்சல் உள்பட நோய்கள் காரணமாகவும் தலைவலி வரக்கூடும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Admin Sat Dec 20, 2008 12:04 pm

பொதுவான தலைவலிகள் யாவை?

1. குறைத் தூக்கத்தால் ஏற்படும் தலைவலி; 2. அதிகத் தூக்கத்தால் ஏற்படும் தலைவலி; 3. பசியினால் ஏற்படக்கூடிய தலைவலி; 4. தாமதமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் தலைவலி; 5. குறைவாகச் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய தலைவலி; 6. விரதம் இருப்பதால் ஏற்படும் தலைவலி; 7. பழகிவிட்ட குறிப்பிட்ட நேரத்துக்கு காபி குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் தலைவலி; 8. ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற உணவுப் பொருள் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் தலைவலி; 9. பதற்றத்தால் ஏற்படும் தலைவலி; 10. பார்வைக் கோளாறு காரணமாக ஏற்படும் தலைவலி; 11. சைனுசைட்டிஸ் காரணமாக ஏற்படும் தலைவலி; 12. காதில் சீழ் பிடிப்பதால் ஏற்படும் தலைவலி; 13. மதுப் பழக்கம் காரணமாக ஏற்படும் தலைவலி; 14. மருந்துகளினால் ஏற்படும் தலைவலி. 15. எதிர்பார்ப்பு நிறைவேறாமல் ஆழ்ந்த மன வருத்தம் (Depression) காரணமாக ஏற்படும் தலைவலி; 16. வாகனப் புகை காரணமாக ஏற்படும் தலைவலி.

தலைவலி என்று ஒருவர் சொன்னாலே கண் மருத்துவ சோதனை செய்துகொள்ளுமாறு நண்பர்கள் கூறுவது வழக்கமாக உள்ளதே? இந்தக் கருத்து சரியா?

சரி அல்ல. கண் நரம்புகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது. எனினும் கண் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் புத்தகம் படித்தல், கம்ப்யூட்டரில் வேலை செய்தல், பார்வைக் கோளாறு ஆகியவை காரணமாக தலைவலி வந்தால் கண் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம். சாதாரணமாக தலைவலி வரும் நிலையில் கண் டாக்டரிடம் செல்லத் தேவை இல்லை. குடும்ப மருத்துவரிடமோ அல்லது நரம்பியல் மருத்துவரிடமோ சென்றால் போதும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Admin Sat Dec 20, 2008 12:05 pm

காய்ச்சல் காரணமாக தலைவலி வருவது ஏன்?

காய்ச்சலின்போது உடலில் ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து தலைவலி ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்த அளவு (Systolic Pressure) இயல்பான அளவைவிட அதிகரிக்கும் நிலையிலும் தலைவலி வரும்.

தலைவலியின் வகைகள் யாவை?

தலைவலியை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. பரபரப்புத் தன்மை காரணமாக ஏற்படும் தலைவலி (Tension Type Headache);

2. ஒற்றைத் தலைவலி (Migraine);

3. தொகுப்புத் தலைவலி (Cluster Headache);

4. நாள்பட்ட நித்தம் நித்தம் தலைவலி (Chronic Daily Headache).
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Admin Sat Dec 20, 2008 12:05 pm

"டென்ஷன்' காரணமாக ஏற்படும் தலைவலியின் குறிப்பிட்ட அறிகுறிகள் என்ன?

ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற டென்ஷன் காரணமாக தலைவலி ஏற்படலாம். வேலைப் பளு, அதிக தூக்கம், நீண்ட தூரப் பயணம், உடல் தசைகள் அதிக அளவுக்குச் சுருங்குதல் காரணமாக இத்தகைய தலைவலி வரும்.

பொதுவாக இந்தத் தலைவலி தாங்கக்கூடியதாக இருக்கும். இந்தத் தலைவலியில் வாந்தி, குமட்டல் இருக்காது. வெளிச்சத்தைக் கண்டால் கண் கூசுதல், ஓசையைக் கேட்டாலே வெறுப்பு ஆகிய உணர்வுகள் இருக்காது.

எனினும் தசைகள் அதிக அளவுக்குச் சுருங்குதல் காரணமாக டென்ஷன் தலைவலி ஏற்படும் நிலையில் தலையில் கை வைக்க முடியாத அளவுக்கு, சீப்பைக் கொண்டு தலையை வார முடியாத அளவுக்கு வலி இருக்கும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Admin Sat Dec 20, 2008 12:06 pm

ஒற்றைத் தலைவலியின் முக்கிய அறிகுறிகள் என்ன?

மாதக் கணக்கில், வருஷக் கணக்கில் விட்டு விட்டு வரும் தலைவலி ஒற்றைத் தலைவலி "மைக்ரேன்' (Migraine) எனப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல் இந்த வலி தலையின் ஒரு புறம் மட்டுமே வரலாம்; தலையின் இரு புறமும் மாறி, மாறியும் அல்லது பிடரியில் வலி வந்தாலும் ஒற்றைத் தலைவலிதான்.

மக்கள் தொகையில் 10-ல் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளது. ஒருவரது இயல்பான வாழ்க்கையை முடக்கும் ஆற்றல் ஒற்றைத் தலைவலிக்கு உண்டு. அதாவது மருத்துவ விடுப்பு எடுத்துச் சிகிச்சை பெறும் அளவுக்கு இந்தத் தலைவலி இருக்கும்.

சுத்தியல்களால் அடிப்பதுபோல் வலி மண்டையைப் பிளக்கும். வாந்தி, குமட்டல் இருக்கும். வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசும். இந்த வலி வரும்போது ஓசையைக் கேட்டாலே வெறுப்புணர்வு ஏற்படும்.

தலையைக் குனிந்தால் வலி ஏற்படும். நடந்தால் தலைவலி அதிகமாகும். உடலின் சிறு அதிர்வுகளுக்குக்கூட வலி அதிகமாகி வாந்தி வரும். வாசனை காரணமாகவும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். மேலே சொன்ன பொதுவான தலைவலிகளும் (குறைத் தூக்கம், பசி, ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற உணவுப் பொருள்கள்...) ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Admin Sat Dec 20, 2008 12:07 pm

ஒற்றைத் தலைவலிப் பிரச்சினைக்கு பாரம்பரியத் தன்மை உண்டா?

உண்டு. குடும்பத்தில் அப்பா, அம்மா, மாமா, சித்தப்பா, உடன் பிறந்தோர் ஆகியோரில் யாராவது ஏற்கெனவே ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தால் ஒற்றைத் தலைவலி பிரச்சினை வர வாய்ப்பு உண்டு. ஆண்களைவிட பெண்களே ஒற்றைத் தலைவலி பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாதவிடாய் வருவதற்கு முன்பு பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. கர்ப்பத் தடை மாத்திரைகள் சாப்பிடும் பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

தொகுப்புத் தலைவலியின் (Cluster Headache) அறிகுறிகள் என்ன?

ஒற்றைத் தலைவலியில் மிகவும் கொடியது இந்த வகை (Cluster Headache). இந்தத் தலைவலி பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வரும். இந்தத் தலைவலி தூக்கத்தில் வரும். தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளிக்கு வலியை உருவாக்கி அவரை எழச் செய்யும் ஆற்றல் இந்த வகை ஒற்றைத் தலைவலிக்கு உண்டு. ஏதாவது ஒரு பக்கம் மட்டுமே இந்தத் தலைவலி இருக்கும். வலி வரும் பக்கத்தில் உள்ள மூக்குத் துவாரத்திலிருந்து மூக்கில் நீர் ஒழுகும். ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு முறை இந்தத் தலைவலி வரும். வாந்தி, குமட்டல் இருக்காது. வலி போகும் வரை தூக்கம் வராது. மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுபோன்று தலைவலி வரும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Admin Sat Dec 20, 2008 12:08 pm

நாள்பட்ட நித்தம் நித்தம் தலைவலி (Chronic Daily Headache) அறிகுறிகள் என்ன?

பரபரப்புத் தன்மையால் ஏற்படும் தலைவலி (Tension Type Headache), ஒற்றைத் தலைவலி (Migraine) ஆகியவை காரணமாக தினந்தோறும் மருந்து சாப்பிடும் பழக்கத்தை சிலர் மேற்கொள்வர். ஒரு கட்டத்தில் மருந்துக்குக் கட்டுப்படாத தலைவலியாக மாறி நித்தம் நித்தம் தலைவலி வரக்கூடும். இத்தகைய வலி வருவோருக்கு வலி வருவதற்கு முன்பே தலைவலி மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

பிடரியில் (தலையின் பின்புறம்) வலி வந்தால் கழுத்தில் பிரச்சினை எனக் கொள்ள வேண்டுமா?கழுத்தில் ஏழு எலும்புகள் உள்ளன. இதில் மேல் புறம் உள்ள முதல் மூன்று எலும்புகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உண்டு. இந்த எலும்புகளில் பிரச்சினை ஏற்படும் நிலையில் தலையின் பின்புறம் வலி ஏற்படும். இந் நிலையில் கழுத்தைத் திருப்புவதும் சிரமமாக இருக்கும். எக்ஸ் ரே உள்பட பரிசோதனைகள் செய்துகொண்டு சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில் ஒற்றைத் தலைவலி காரணமாகவும் பிடரியில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Admin Sat Dec 20, 2008 12:08 pm


தலைவலி சிகிச்சையில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுவது என்ன?


ஒருவருக்கு எவ்வளவு கால இடைவெளி விட்டு தலைவலி வருகிறது என்பதைப் பொருத்து சிகிச்சை தேவையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு ஒரு மாதத்துக்கு ஒரு முறை தலைவலி வரலாம். ஒரு சிலருக்கு மூன்று நாளுக்கு ஒரு முறை மூன்று மணி நேரம் தலைவலி வந்து போகலாம். ஒரு சிலருக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை தலைவலி வரலாம். ஒரு சிலருக்கு தினந்தோறும் தலைவலி வரலாம். ஒரு சிலருக்கு தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தலைவலி இருக்கலாம்.

எப்போதாவது ஒரு முறை வரும் தலைவலிக்குச் சிகிச்சை தேவை இல்லை. பசி, நேரம் கழித்துச் சாப்பிடுதல், போதிய துக்கம் இல்லாமை உள்பட பொதுவான தலைவலிகளுக்கு அவற்றுக்கு உரிய காரணங்களை நோயாளிகள் தாங்களாக தவிர்த்துவிடுவதே எளிய சிகிச்சையாகும். குறிப்பாக அதிக அலைச்சலால் ஏற்படும் தலைவலிக்கு ஓய்வு எடுத்தாலே சரியாகிவிடும். ஆனால் ஒற்றைத் தலைவலி உள்பட அடிக்கடி வரும் தலைவலிக்கு மருத்துவப் பரிசோதனை செய்து உரிய காரணத்தைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிப்பது அவசியம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Admin Sat Dec 20, 2008 12:11 pm

சிகிச்சை தேவையா என்பதைக் கண்டறிவது எப்படி?

பாரம்பரியத் தன்மை உள்பட நோய் குறித்து நோயாளி கூறுவதை (Patient History) முதலில் கேட்க வேண்டும். பின்னர் நோயாளியின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பது அவசியம். இதையடுத்து மூளையின் அதிக அழுத்தம் இருந்தால் வெளிப்படுத்தக்கூடிய "ஆப்தல்மாஸ்கோப்' கருவி மூலம் கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டும். இப் பரிசோதனையில் மூளைக்குச் செல்லும் பார்வை நரம்பு வீக்கம் அடைந்திருந்தால் (Papilloedema) தெரிந்துவிடும்.இதனால் மூளையில் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதுபோன்ற நிலையில் மேற்கொண்டு சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. போன்ற மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும்.

ஒற்றைத் தலைவலியின் சாதக அம்சம் என்ன?

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோருக்கு வலி வருவதற்கு முன்பே தெரிந்துவிடும். இந் நிலையில் முன்கூட்டியே மாத்திரையைச் சாப்பிடுவதன் மூலம் வலி கடுமையாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Admin Sat Dec 20, 2008 12:15 pm

ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு ஆயுள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா?

முன்பே சொன்னதுபோல் வயது ஆக ஆக தலைவலிப் பிரச்சினை குறைந்துவிடும். எனவே ஆயுள் முழுவதுக்கும் மாத்திரைகள் சாப்பிடும் தேவை இருக்காது. தலைவலிக்கு உரிய காரணத்தைக் கண்டறிந்து மருந்து சாப்பிடுவது அவசியம்.

தலைவலிக்கான நிவாரண மருந்துகளை (Balms) நெற்றியில் தடவிக் கொள்வது நல்லதா?

தவறில்லை. எப்போதாவது வரும் தலைவலிக்கு இந்த நிவாரண மருந்துகள் பலன் அளிக்கக் கூடியவை. இதேபோன்று துணி-கர்சீப்பால் தலையை இறுகக் கட்டிக் கொள்வதிலும் தவறில்லை. துணியால் கட்டும்போது ரத்தக் குழாய்கள் விரிவடையாமல் தடுக்கப்பட்டு நிவாரணம் கிடைக்கிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும் நிலையிலும் இதுபோன்ற நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அடிக்கடி தலைவலி நிலையில் காரணத்தைக் கண்டறிந்து வராமல் தடுப்பதற்கு சிகிச்சை செய்துகொள்வது அவசியம். அடிக்கடி தலைவலி வரும் நிலையில் தடுப்புக்கு மட்டுமே மாத்திரைகள் உதவும்; அப்போது வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு மேலே சொன்ன கை வைத்திய முறைகள் பலன் அளிக்கும்.

தலைவலிக்கு யோகா, தியானப் பயிற்சி உதவுமா?

நிச்சயம் உதவும். யோகா, தியானப் பயிற்சி காரணமாக தலைவலி ஏற்படும் இடைவெளி அதிகமாகி நல்ல கட்டுப்பாட்டுக்கு வரும். மாத்திரை சாப்பிடும் தேவை குறையும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by சபீர் Mon Apr 12, 2010 2:22 pm

எனக்கு இந்த பதிவு ரொம்ப பிரயோசனம் தந்துள்ளது நன்றி தல
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by krishnaamma Wed Sep 18, 2013 8:41 pm

ரொம்ப நல்ல பகிர்வு அட்மின் புன்னகை நன்றி! லிங்க் தந்த சிவாவுக்கு ரொம்ப நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63953
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937

Back to top Go down

தலைவலி: இளமைக்குச் சவால்! Empty Re: தலைவலி: இளமைக்குச் சவால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum