புதிய பதிவுகள்
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
98 Posts - 46%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
5 Posts - 2%
i6appar
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
2 Posts - 1%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
443 Posts - 46%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
334 Posts - 35%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
30 Posts - 3%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
5 Posts - 1%
i6appar
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:29 am

மருத்துவரீதியாக பார்த்தால் வெறும் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் பெண்களுக்கு மட்டும்தான் முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது கன்னித்திரை கிழிந்து ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாற்பத்தேழு சதவிகிதம் பெண்களுக்கு இந்தக் கன்னித்திரை ஏதோ எலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலுறவு முடிந்ததும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறது. அதனால் இவர்களுக்கு முதல் தடவை உறவின்போது இது கிழியவும் கிழியாது... ரத்தக் கசிவும் இருக்காது... வலியும் இருக்காது!

தடய அறிவியல் நிபுணர்கள்தான் இதைக் கண்டு பிடித்தார்கள். விலைமாதர்கள் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவர்களில் பலரது கன்னித் திரை கிழியாமல் பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிபுணர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இத்தனைக்கும் ஆண்டுக்கணக்கில் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் அவர்கள். அதைப் பரிசோதித்த பிறகே இந்த எலாஸ்டிக் சமாச்சாரம் தெரிய வந்தது.

இந்த இரண்டு ரகம் தவிர, இன்னொரு பதினோரு சதவிகிதம் பெண்களுக்குக் கன்னித்திரை மிகவும் மெல்லியதாக இருப்பதால் சின்ன வயசிலேயே கிழிந்து விடும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பைக்கில் காலைத் தூக்கிப் போட்டு உட்காரும் போதோ, சைக்கிள் ஓட்டும் போதோ இது சிம்பிளாகக் கிழிந்துவிடும். இவர்களில் சிலர் கன்னித்திரை என்ற பாகமே இல்லாமல் பிறக்கிறார்கள் என்பதும் மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை. மொத்தத்தில் பார்த்தால், ஐம்பத்தெட்டு சதவிகிதம் பெண்களுக்கு கன்னித்திரை கிழியாது... ரத்தக் கசிவும் இருக்காது. அப்படியிருக்கும்போது... இவர்களை ‘கெட்டுப் போனவர்கள்’ என முத்திரை குத்துவது எவ்வளவு பெரிய கொடுமை?!
பெண்களின் பிறப்பு உறுப்பின் உட்பக்கமாக ஒரு இஞ்ச் தூரத்தில் இந்தக் கன்னித்திரை இருக்கிறது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க மேல்பக்கம் ஒரு ஃபாயில் பேப்பர் மாதிரி ஒட்டி வைக்கிறார்களே... அது மாதிரி மெல்லிய சவ்வு இது!

இது ஒவ்வொரு பெண் ணுக்கும் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். பொதுவாக பிறைநிலா மாதிரி பெரும் பாலானவர்களுக்கு இருக்கும். மாதவிடாயின்போது ரத்தம் வெளியேறுவதற்காக இந்த வடிவம். சில பெண்களுக்குக் கன்னித் திரை சுத்தமாக மூடியிருக்க, மாதவிடாயின்போது ரத்தம் வெளியில் வராமல் அப்படியே அடைத்துக் கொள்ளும். அவர் களுக்கு ஆபரேஷன் செய்து கன்னித் திரையை அகற்றுவார்கள். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். ‘கன்னித்திரையை அகற்றப் போகிறோம்’ என சொல்லிவிட்டுத்தான் இந்த ஆபரேஷனை டாக்டர்கள் செய்வார்கள். பின்னால் பிரச்னை வந்துவிடக் கூடாது என்ற அக்கறை தான் காரணம்!
வேடிக்கை என்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி மகத்தான வளர்ச்சி கண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஏதோ கண்ணில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவது மாதிரி பெண்களுக்குக் கன்னித்திரையைக்கூட புதிதாகப் பொருத்துகிறார்கள்.

திருமணத்துக்கு முன்பாக இதை யார் வேண்டுமானாலும் ஆபரேஷன் மூலம் பொருத்திக் கொள்ளலாம். இந்த ஆபரேஷனில் பிறப்பு உறுப்பின் உட்புறச் சுவரையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள். இதன்பிறகு முதலிரவின்போது ரத்தக் கசிவும் இருக்கும்... தாங்க முடியாமல் வலியும் இருக்கும். ‘செக்ஸ் பற்றி ஆத்திச்சூடிகூட தெரியாத பெண் நமக்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்’ என கணவர் பெருமைப்பட்டுக் கொள்வார். இன்னமும் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல பெண்கள் இப்படிப்பட்ட ஆபரேஷனுக்காகவே மேற்கத்திய நாடுகளுக்குப் போகிறார்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:30 am

அமெரிக்கப் பணக்கார பெண்கள் மத்தியில் இது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்! தங்களது இருபதாவது திருமண நாளுக்கு முன்னால் இதைச் செய்துகொண்டு குழந்தைகளோடு கிளம்பி ஹனிமூன் போகும் ஜோடிகள் அங்கே நிறைய!

இது ஒரு பக்கம் என்றால், விலைமாதர்களுக்கும் இது வசதியாகி விட்டது. எய்ட்ஸ் பயம் பீடித்திருக்கும் அமெரிக்காவில் புதிதாகத் தொழிலுக்கு வரும் விலைமாதர்களுக்கு மவுசு அதிகம். பணக்கார கஸ்டமர்கள் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுப்பார்கள். இதற்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பெண்கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். ‘எந்தெந்த சமுதாயம் கற்புக்கும், கன்னித்தன்மைக்கும் மதிப்பு கொடுக்கிறதோ அங்கெல்லாம்தான் தவறுகள் அதிகம் நடக்கின்றன’ என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஒரே வித்தியாசம்... பெண்கள் நேரடியான செக்ஸ் உறவில் ஈடுபடுவதில்லை. சுய இன்பம், பிறவழி இன்பம் என மற்ற எல்லா விவகாரங்களையும் செய்கிறார்கள். திருமணத்துக்கு முன் ஆண்களுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்த்துத் தங்கள் கன்னித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ‘டெக்னிக்கல் கன்னிப்பெண்கள்’ என இவர்களைச் சொல்லலாம்.

தன்னுடைய மகாராணி தன்னை ஏமாற்றி விட்டு வேறு யாருடனோ செக்ஸ் உறவு வைத்திருப்பதாக சந்தேகிக்கும் ஒரு மன்னர் தினமும் ஒரு கன்னிப் பெண்ணை மணந்து, அவளோடு செக்ஸ் அனுபவித்துவிட்டு, மறுநாள் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுவார். காரணம்... அவளும் அவரை ஏமாற்றக் கூடாது என்பதுதான்! புகழ்பெற்ற செக்ஸ் புத்தகமான ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ கதை இது. இப்படி சந்தேக மன்னர்களாக ஆண்கள் இருந்தால், கன்னித்திரை பொருத்தும் ஆபரேஷன்கள் நம்முடைய குக்கிராமத்தில்கூட பாப்புலர் ஆகக்கூடும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:44 am

கைகளைத் தட்டியபடி அவர்கள் பிச்சை கேட்டு வந்தால் கடைக்காரர்கள் விரட்டுவார்கள். சினிமாக் களில் காமெடி நடிகரை இந்தக் கும்பல், "மாமா" என்ற படி துரத்தும் காட்சிகள் சகஜம். எல்லா இடங்களிலும் மக்களின் ஏளனப் பார்வை அவர்கள் மீது படியும். தியேட்டர்களில், பஸ்களில், இன்னும் ஏராளமான பொது இடங்களில் அவர்களை ஆண்களாக நடத்துவதா... இல்லை, பெண்கள் பிரிவில் அனுமதிப்பதா என்று இன்னமும் குழப்பம். அரவாணிகளைப் பற்றித்தான் சொல்கிறேன். அலி, நபும்சகன், பேடி என பல பெயர்களில் இவர்களைக் கூப்பிடுகிறார்கள். ஆணுமாக இல்லாமல், பெண்ணுமாக இல்லாமல் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று பலருக்கும் குழப்பம். மருத்துவ நிபுணர்களேகூட இதற்கான காரணங்கள் குறித்து இன்னமும் தீர்மானமான முடிவுக்கு வரவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை... இப்போதைய சமூக சூழலில் இவர்கள் ஏளனமாகப் பார்க்கப்பட்டாலும், பழங்காலத்தில் இவர்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அரவாணிகளுக்கு ஆங்கிலத்தில் "யூனக்" (Eunuch) என்று பெயர். இதில் நான்கு ரகங்கள் உண்டு (இந்த ரகங்கள் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்). குழப்பமான குணங்களோடு பிறக்கிறவர்களை வகைப்படுத்தும் இந்த எல்லா ரகங்களுக்கும் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. எல்லாவற்றையும் அரவாணிகள் என்ற ஒரே பெயரால்தான் இங்கே சொல்கிறார்கள்! யூனக் என்பது கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. "படுக்கைக் காவலர்" என இதற்கு அர்த்தம்.

பெரிய அரசாங்கங்கள் உருவான அந்த சமயத்தில், மன்னர்களின் அந்தரங்கமான வேலைகளைச் செய்ய யாரை அனுமதிப்பது என குழப்பம் இருந்தது. அந்தப் புரத்தில் காவல் புரிவது, மன்னரின் படுக்கை அறையை அலங்கரிப்பது, வாசனை திரவியங்களைப் பூசிக் குளிப் பாட்டுவது, மசாஜ் செய்து விடுவது... இப்படி ஏகப்பட்ட வேலைகள். ஆண்களை அனுமதித்தால் சிக்கல் வந்தது. அந்தப்புரம் வரை போவதற்கு கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்தி அவர்கள் தப்பு செய்ய ஆரம்பித்தனர். மகாராணிகளோடு முறை கேடான தொடர்பு வைத்திருப்பது ஒருபுறமிருக்க, அரசருக்கு எதிரான சதிவேலைகளிலும் இறங்கினர். பெண்களை இந்த வேலைகளைச் செய்ய அனுமதிப்பதில் மகாராணிகளுக்குத் தயக்கம் இருந்தது. பணிப்பெண் அழகாக இருந்தால், மன்னருக்குப் பணிவிடை செய்ய கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தானும் மகாராணியாகி விடுவார். இப்படிப்பட்ட சூழலில் ஏதோ ஒரு ஐரோப்பிய பேரரசில், புத்திசாலி மன்னர் ஒருவர் அரவாணிகளை இதற்கு பயன்படுத்த ஆரம்பிக்க, அதுவே எல்லா நாடு களுக்கும் பரவியது. பிறக்கும்போது ஆணாக இருந்தாலும் பெண்மைக்குரிய குணங்களைக் கொண்ட அரவாணிகள், அந்தக் காலத்திலேயே தங்களது விதைப்பைகளை அகற்றி ஆண்மையைப் போக்கிக் கொண்டனர்.

இவர்களை அந்தரங்க வேலைக்கு வைத்துக் கொள் வதில் பல வசதிகள் இருந்தன. மன்னரைத் தொட்டுப் பணிவிடைகள் செய்தாலும் தப்பாகப் படாது. மாமனார், கணவர், மகன் என உறவுகள் இவர்களுக்குக் கிடையாது. அதனால் பதவி ஆசையில் மன்னருக்கு எதிராக சதி செய்ய மாட்டார்கள். அப்படியே தப்பு செய்தாலும், இவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தலையை வெட்டினால்கூட கேட்க ஆளில்லை... சமுதாயத்தில் மிகவும் கீழான நிலையில் இருப்பவர்கள்தானே!

மன்னர்களோடு பெரும்பாலான நேரத்தைக் கழிப்ப வர்கள் என்பதால், இவர்களது பேச்சை மன்னர்கள் தட்டு வதில்லை. "மன்னரின் காது" என்று இவர்களைத்தான் சொல்வார்கள். முதல்மந்திரியேகூட மன்னரிடம் அவசர மாகப் பேச வேண்டும் என்றால் இவர்களின் அனுமதி தேவை. இப்படி இருந்த அரவாணிகள் பல நாடுகளில் அமைச்சர் பதவி வரை கூட போனார்கள்.

மாமன்னர் அலெக்சாண்டரின் அந்தரங்க ஆலோச கராக இருந்த பாகோஸ், ஓர் அரவாணி. போரில் வென்ற பகுதிகளைக் குழப்பமின்றி ஆட்சிபுரிய இவரது ஆலோ சனைகளைத்தான் கேட்பார் அலெக்சாண்டர்.

வீரத்திலும் அவர்கள் குறைந்தவர்கள் இல்லை. ஜூலியஸ் சீசரைத் தோற்கடித்து, அவரது மேலங்கியை உருவிக்கொண்டு விரட்டிய புகழ்பெற்ற தளபதி கனிமீட்ஸ், ஓர் அரவாணி. சீசரைவிட சிறந்த வீரராக அவர் கருதப்பட்டார்.

இந்தியாவில் அரவாணிகளுக்கு நெடிய வரலாறு உண்டு. பழங்கால இந்திய நூல் களில் இவர்களைப் பற்றி பலவிதமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்திரனின் தேவசபையில் இருந்த பிரதானிகள் பற்றிய வர்ணனையில் "கிம்புருஷர்கள்" என்ற ரகம் பற்றி சொல்லப்படுகிறது. இவர்கள் நாட்டியம் ஆடுவதில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருந்தனர். கிம்புருஷர் என்றால், ஆணாக இல்லாதவர் என்று அர்த்தம். இது அரவாணிகளையே குறிக்கும் என்கிறார்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:45 am

வியாசர் எழுதிய மகாபாரதத்தில் காலப்போக்கில் இடைச்செருகலாக நிறை கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படி வரும் கதைகளில் அரவாணி களைப் பற்றி செய்திகள் உண்டு. திரௌபதிக்கு ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் சிகண்டி. பெண்ணாக இருந்தபோதும், ஆண் மாதிரி நினைத்து சிகண்டியை வளர்த்தனர் பெற்றோர். இளவரசன் போல உடை அணிவித்து, போர்ப் பயிற்சியும் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஆணாகவே வளர்க்கப்பட்ட சிகண்டிக்கு கடைசியில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். உண்மை வெளிப்பட்டு விடும் என பயந்து முதலிரவு சமயத்தில் சிகண்டி ஓடிவிட, யாரோ ஒரு கந்தர்வன் தனது ஆண் தன்மையை சிகண்டிக்குக் கொடுத்ததாக ஒரு கதையில் இருக்கிறது. பகவான் கிருஷ்ணர்தான் சிகண்டி மீது பரிதாபப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வைத்து ஆணாக மாற்றியதாகக் கதையில் சொல்லப்படுகிறது. கதை உண்மையோ பொய்யோ... அரவாணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பழக்கம் அப்போதே இருந்தது என்பதை இதில் உணர முடிகிறது.

இதே மகாபாரதத்தை வைத்து இன்னொரு கதையும் இருக்கிறது. குருஷேத்திரப் போர் ஆரம்பிக்க வேண்டிய சமயம்... பஞ்ச பாண்ட வர்களில் சகாதேவன், ஜோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவன், ""முப்பத்தி இரண்டு லட்சணங்களும் பொருந்திய ஒரு ஆண் மகனை களப்பலி கொடுத்து விட்டு, போரை ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்"" என்று சொல்கிறான்.

பாண்டவர் தரப்பில் பார்த்தால், மூன்றே பேர்தான் இப்படி சர்வ லட்சணங்கள் பொருந்திய ஆண்களாக இருந்தனர். ஒருத்தர் கிருஷ்ணர்... போருக்கு வியூகங்களை வகுத்துத் தரும் பகவானை பலியிட முடியாது. இன்னொருத்தர் அர்ஜுனன்... பாண்டவர் படைக்குத் தளபதியே அவன்தான். அவனை பலியிட்டுவிட்டுப் போர் நடத்த முடியாது. இவர்கள் இல்லாமல் மூன்றாவது நபர் அரவாண். அர்ஜுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்த மகன். அவனிடம் பாண்டவர்கள் இதுபற்றி சொன்னபோது, தன் உயிரைத் தியாகம் செய்ய ஒப்புக் கொண்டான்.

ஆனால், அவன் அடிமனதில் ஓர் ஆசை இருந்தது. ""இன்னமும் எனக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்து, தாம்பத்ய வாழ்க்கையை ஒரு நாளாவது அனுபவித்து விட்டு, பிறகு பலியாகிறேன்"" என்று தன் ஆசையை அரவாண் சொல்ல, அவசரமாக அவ னுக்கு பெண் பார்த்தனர். ஒரே நாளில் சாகப் போகிறவனை மணந்துகொள்ள யாரும் தயாராக இல்லை. கடைசியில் பகவான் கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து, பெண்ணாக மாறி அவனை மணந்தார். அவர்கள் ஒருநாள் தாம்பத்ய வாழ்க்கை நடத்தினர். மறுநாள் அரவாண் பலி கொடுக்கப்பட, சம்பிரதாயப்படி கிருஷ்ணர் விதவைக் கோலம் பூண்டு, அரவாணுக்காக அழுதார். வியா சர் எழுதிய மகாபாரதத்தில் இந்தக் கதை இல்லை. ஆனால், பல்வேறு இடங்களில் புழக்கத்தில் இருக்கும் வேறு பாரதங்களில் இதுவும் ஒரு இடைச்செருகலாக சேர்ந்து விட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கூவாகம் கிராமம் அரவாணிகளின் புனிதத்தலம். குருஷேத்திரப் போரில் அரவாண் பலியிடப்பட்டதாகக் கருதப்படும் சித்ரா பௌர்ணமி நாளில் இங்கு திருவிழா நடக்கும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் அரவாணிகள், அந்த இரவில் அரவாணுக்கு மனைவி ஆகிறார்கள். பகவான் கிருஷ்ணர் எடுத்த மோகினி அவதாரமாகவே தங்களை அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். அரவாணின் சார்பில் கோயில் பூசாரி அவர்களுக்குத் தாலி கட்டுகிறார். மறு நாள் எல்லோரும் தங்கள் நெற்றிப் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, வெள்ளைப் புடவை உடுத்தி விதவைக் கோலம் கொள்கிறார்கள்.

அரவாணிகளைப் பொறுத்தவரை, சாதார ணமான குடும்பங்களில் மற்றவர்கள் மாதிரியேதான் பிறக்கிறார்கள். வளர வளர, அவர்களுக்குள் மாற்றம் நிகழ்கிறது. தங்கள் குழந்தைக்கு உயிரைக் கொல்லும் பயங்கர நோய் இருந்தால்கூட பாசம் காட்டும் குடும்பம், இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏற்பதில்லை. கேலிப் பேச்சுகளுக்குப் பயந்து அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் சித்ரவதை செய்ய, அதைத் தாங்க முடியாமல் ஊரைவிட்டு ஓடுகிறார்கள் அரவாணிகள். பிச்சை எடுப்பதும், பாலியல் தொழிலும்தான் அவர்களது கடைசிப் புகலிடமாகிறது.

அவ்வளவாக தேர்ச்சி பெறாத சாதாரண டாக்டர்களிடம் அறுவை சிகிச்சை செய்து தங்கள் ஆணுறுப்பை அகற்றிக்கொள்ளும் அரவாணி களில் பலர், வேறொரு ஆணை திருமணம் செய்து கொள்வதும் உண்டு.

சட்டம் இவர்கள் விஷயத்தில் இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது. தேர்தல் கமிஷனே அனுமதித்தும் பல மாநிலங்களில் இவர்களுக்கு ஓட்டு ரிமை இல்லை. ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் என எல்லாவற்றிலும் ஆண், பெண் என இருபாலினங்கள் மட்டுமே இருப்பதுதான் பிரச்னை. மூன்றாவது வகையை மனதளவில்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லாத நிலைதான்!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:45 am

ஊனமுற்றவர்கள் மீது கருணை காட்டுவது போல அரவாணிகளையும் சமூகம் நடத்த வேண்டும். அறிவியல் ரீதியாகப் பார்த்தால் அவர்கள் அப்படித்தான்... பாலியல் ஊனமுற்றவர்கள்!

மனித சமுதாயம் இரண்டுவிதமான தோற்றங் களைத்தான் இயல்பாகப் பார்க்கப் பழகி இருக்கிறது. ஒன்று ஆண்... இன்னொன்று பெண்! இந்த இரண்டு மாதிரியாகவும் இல்லாமல் ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழ முயலும் (இதேபோல பெண்ணாகப் பிறந்து ஆணாக வாழ முயலும்) குழப்பமான அடையாளங்களைக் கொண்டவர்கள், மூன்றாவதுவிதமான தோற்றம் கொண்டவர்கள். இவர்களை அறிவியல்பூர்வமாக "ட்ரான்ஸ் ஜெண்டர்" (Transgender) என்கிறார்கள். இதற்குத் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. இந்த ட்ரான்ஸ் ஜெண்டர் என்பதை நான்கு ரகங்களாகப் பிரிக்கிறார்கள். இதற்கும் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. "அரவாணி"கள் என்று சமூகத்தில் அழைக்கப்படுபவர்கள், இந்த நான்கு ரகத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதுகூட அறிவியல்ரீதியில் எந்த அளவுக்குச் சரி என்று சொல்ல முடியாது. காரணம்... அரவாணி என்பதற்கு சரியான பொருள் என்ன என்பது இங்கே தெளிவுபடுத்தப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை.

சரி, நாம் அறிவியல் அடிப்படையில் மேலை நாட்டினர் பிரித்து வைத்திருக்கும் நான்கு ரகத்தினரையும் வரிசையாகப் பார்ப்போம்.

முதல் ரகத்தினர், "டிரான்வெஸ்ட்" என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் செயல்பாடுகள் "டிரான்ஸ்வெஸ்டிஸம்" எனப்படும். இவர்களுக்கு உடைகளை மாற்றிப் போட்டுக் கொண்டால்தான் செக்ஸ் உணர்வு எழும். மனைவியின் புடவையைக் கட்டினால்தான் "மூட்" வரும். செக்ஸுக்கு முன்னதாகக் கட் டாயம் இப்படி அவர் உடை மாற்றிக் கொள்வார். அதன்பிறகே பரவசப்பட ஆரம்பிப்பார். இதுதவிர வேறெந்த குறையும் இருக்காது. இந்த உடை சிக்கல் தவிர மற்றபடி, "நான் இயல்பான ஆண்" என்கிற உணர்வு இவர்களுக்கு இருக்கும். பெண்களிடம்தான் செக்ஸ் உணர்வு கொள்வார்கள். இதே குறைபாடு கொண்ட பெண்களுக்கு அப்படியே உல்டாவாக ஆண்களின் உடைமீது ஆசை வரும். அதுமட்டுமல்ல, செயல்களிலும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.

இரண்டாவது ரகத்தினர் "டிரான்ஸ் செக்ஸுவல்கள்". இவர்களது உடலும், உணர்வும் வேறுவேறாக இருக்கும். உடல்ரீதியாக இவர்கள் ஆணாக இருப்பார்கள். அதற்கான அடையாளங்களாக மீசை, தாடி, ஆணுறுப்பு எல்லாம் இருக்கும். ஆனால், மனோரீதியாகத் தங்களை பெண்ணாக உணர்வார்கள். "நான் பிறக்கும்போதே ஒரு பெண்தான்! ஆனால், கடவுள் ஏதோ ஞாபகத்தில் தப்பு செய்து விட்டார். என்னைக் கொண்டுவந்து இந்த ஆம்பளை உடம்பில் போட்டுவிட்டார்" என நினைப்பார்கள். தன்னை அமுக்கிக் கொண்டிருக்கும் இந்த ஆண் உடம்பிலிருந்து விடுபட முயற்சிப்பார்கள். ஆணுறுப்பின் மீது வெறுப்பு வரும். பெற்றோர், சமூகம் என எல்லோரும் ஆணாகப் பார்த்தாலும் "நான் பெண்தான்" என்ற உணர்வு இவர்களுக்கு ஆழமாக இருக்கும். இவர்களுக்கு சக ஆண்களைப் பார்த்தால்தான் செக்ஸ் உணர்வு வரும். பெண்களுடன் சகோதர பாவத்தில் பழகுவார்கள். இதன் காரணமாக ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டு பெண்ணாக முயற்சிப்பார்கள். இதேபோல பெண்ணாகப் பிறந்தவர்கள், ஆணாகத் துடிப்பார்கள். மார்பகங்களை அகற்றிவிட நினைப்பார்கள். மிகுந்த சிரமப்பட்டு ஆண் குறியையும் உருவாக்கிக் கொள்வார்கள். இந்த வகையினரில்... ஆணாகப் பிறந்து, பெண்ணாகத் துடிப்பவர்கள்தான் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆனால், இப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் இவர்கள் முழுமையான பெண்ணாகவோ... ஆணாகவோ ஆக முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.
மூன்றாவது ரகத்தினர், "இன்டர்செக்ஸ்" (நம்மூரில் "அரவாணிகள் என்று அழைக்கப்படுபவர்களை இந்த ரகத்தினர் என்று சொல்லலாம். ஆனால், அறுதியிட்டுக் கூற முடியாது. அதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் இங்கே நடக்கவில்லை). பிறப்புக் கோளாறு காரணமாக ஆண் அல்லது பெண் ஜனன உறுப்புகள் பரிபூரணமாக வளர்ச்சி அடைந்திருக்காது. இந்த ரகத்தினரில் ஆண்களாக நினைக்கப்பட்டவர்களுக்கு, ஆண் குறி இருக்கும். ஆனால், அது முழுமையாக இருக்காது. கூடவே பெண் குறி போன்ற அமைப்பும் இருக்கும். முக்கியமாக விதை இருக்காது.

பெண்ணாக நினைக்கப்பட்டவர்களுக்கு... பெண் குறி முழுமையாக இருக்காது. பக்கத்தில் ஆண் குறி போன்ற முழுமை பெறாத அமைப்பு இருக்கும். முக்கியமாகக் கருப்பை இருக்காது.

இந்த ரகத்தினர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாகவே... அல்லது பெண்ணாகவோ மாறிவிட்டதாக சொல்வார்கள். ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை. செக்ஸ் உணர்வு என்பது அதன் மூலம் பரிபூரணமாகக் கிடைக்காது. கர்ப்பப் பை என்பது இல்லாததால் குழந்தையும் பெற்றுக்கொள்ள முடியாது. விதை இல்லாததால் தந்தையாகவும் முடியாது.

நான்காவது ரகத்தினர் "யூனக்" என்று அழைக்கப் படுவார்கள் (கடந்த இதழில் அரவாணிகள்தான் "யூனக்" என்றும் அதில் நான்கு ரகங்கள் உண்டு என்றும் தவறான தகவல் இடம் பெற்றுவிட்டது... ஸாரி). ஆண்கள் மட்டுமே இந்த ரகத்தில் உண்டு. விதை மற்றும் ஆண்குறியை வெட்டி எடுத்துவிடுவார்கள். இவர்கள் முழுமையான ஆண்கள்தான் என்றாலும் சூழல் காரணமாகக் குறியை வெட்டிக்கொள்கிறார்கள். இதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று... அந்தக் காலத்தில் அந்தப்புர பாதுகாப்புக்காக மன்னர்களால் இப்படி விதை மற்றும் ஆண் குறி நீக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டார்கள். இரண் டாவது காரணம், ஹோமோசெக்ஸ். இது சமுதாயம் ஏற்றுக்கொள்ளாத விஷயம் மட்டுமில்லை... சட்ட விரோதமும்கூட. மாட்டிக் கொண்டால் தண்டனை கிடைக்கும். இதற்கு பயந்து, விதை மற்றும் ஆண் குறியை வெட்டிக்கொள்வார்கள். மூன்றாவது காரணம்... குரல் வளம். பிறந்ததிலிருந்து இருக்கும் மென்மையான குரல், பருவ வயதை எட்டும்போதுதான் மாற்றம் அடையும். அதாவது ஆணாக இருந்தால் கரடு முரடாக மாறும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:45 am

இப்படி மாறாமல் மென்மையான குரலே வேண்டும் என்பதற்காக விதை மற்றும் ஆண்குறியை வெட்டிக் கொள்வார்கள். அதாவது, ஹார்மோன் சுரந்தால்தான் பருவத்தை எட்ட முடியும். குறியை அகற்றிவிட்டால், ஹார்மோன் சுரப்பது குறைந்து... குரல் மாறாமல் அப்படியே இருக்கும்.

இப்படி வெட்டிக்கொள்வதன் மூலம் இவர்கள் பெண்ணாக முடியாது என்பது முக்கியமான விஷயம்! சரி.. சராசரி ஆணாகவோ... பெண்ணாகவோ பிறந்தவர்கள்... "டிரான்ஸ்வெஸ்ட்" மற்றும் "டிரான்ஸ் செக்ஸுவல்கள்" ஆகிய இரண்டு ரகங்களாக மாறக் காரணம்?

டிரான்வெஸ்ட் மற்றும் டிரான்ஸ் செக்ஸுவல்கள் என்று இரண்டு ரகங்களாக, மனிதர்களில் சிலர் மாறுவதற்கு உளவியல் நிபுணர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். குழந்தையிலிருந்து வளர்க்கப்பட்ட முறையில் தப்பு இருப்பதுதான் முக்கிய காரணமாகப் பலருக்கும் படுகிறது. சின்ன வயசிலிருந்து பையன் அம்மாவிடம் நெருக்கமாகப் பழகி வளர்வான். அவனுக்கு ரோல்மாடலே அம்மாதான்! கோலம் போடுவது, சமைப்பது என அம்மாவை மாதிரியே செய்ய ஆரம்பித்து, கடைசியில் தன்னைப் பெண்ணாக உணர ஆரம்பித்து விடுகிறான் என்பது ஒரு தியரி.

இன்னும் சில வீடுகளில் பெண்குழந்தை வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், வரிசை யாக ஆண் குழந்தைகள் பிறக்கும். இதில் ஏதாவது ஒரு குழந்தையைப் பெண் மாதிரி உடை போட்டு, சடை பின்னி, பொட்டு வைத்து வளர்ப்பார்கள். இப்படி வளர்க்கப்படும் குழந்தை, தன்னைப் பெண் என்றே கற்பனை செய்து கொள்கிறது... அதுதான் குழப்பத்துக்குக் காரணம் என்பது இன்னொரு தியரி.

இதைத் தவிர, சின்ன வயதில் செக்ஸ் சித்ரவதையை அனுபவிப்பது, செக்ஸ் பற்றிய விபரீதமான கற்பனைகளோடு வளர்வது, ஹோமோசெக்ஸ் ஆசையை
அடக்கி வைத்துத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது... இப்படி பல காரணங்களும் சொல்லப்படுகிறது. டிரான்ஸ்செக்ஸுவல்களில் பலர் சீரியஸாக ஆபரேஷன் செய்து, தங்களை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். வட இந்தியாவின் பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த அபர்ணா, நாற்பது வயதில் ஆபரேஷன் செய்து அஜய் என்ற பெயரோடு ஆணாக மாறிய பிறகு, இந்த ஆபரேஷன் பற்றி அதிகம் செய்திகள் வருகின்றன.

ஒருகாலத்தில் உலகம் முழுக்க இந்த மாதிரி பாலினம் மாற்றும் ஆபரேஷன்கள் சட்டவிரோதமாகக் கருதப்பட்டது. ஆனால், ரகசியமாக டாக்டர்கள் இதைச் செய்தபடிதான் இருந்தார்கள். இதை பாப்புலராக்கியது, ஜார்ஜ் ஜார்ஜென்சன் சீனியர் என்ற அமெரிக்க ராணுவ வீரர். சின்ன வயதிலிருந்தே இவருக்குத் "தான் ஒரு பெண்" என்ற உணர்வு இருந்தது. இருந்தாலும் இவர் தேர்ந்தெடுத்தது, ராணுவ வேலையை! ஒன்றரை வருஷம் ராணுவத்தில் வேலை பார்த்த ஜார்ஜ், உடம்பு சரியில்லாததால் ராஜினாமா செய்தார். அப்போது டென்மார்க்கில் மட்டும் அரசு அனுமதியோடு இந்த ரக ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. தனது இருபத்தாறாவது வயதில் டென்மார்க் போன ஜார்ஜ், ஆபரேஷன் செய்து கொண்டு கிறிஸ்டி ஜார்சென்சன் என்ற பெயரோடு பெண் தோற்றத்தில் திரும்பி வந்தார்.

அது 1952-ம் வருஷம். இவரது ஆபரேஷன் பற்றி "நியூயார்க் டெய்லி நியூஸ்" பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. "முன்னாள் ராணுவ வீரர், அழகான பெண்ணாக மாறினார்" என்பதுதான் தலைப்பு. அந்த செய்தி உலகம் முழுக்கப் பற்றிக்கொண்டது. கிறிஸ்டி அழகாக வேறு இருந்தார்... அதனால் ஒரு பத்திரிகை விடாமல் அவரது போட்டோ வந்தது.

இந்த பாப்புலாரிட்டியை அவர் புத்திசாலித் தனமாகப் பயன்படுத்திக் கொண்டார். கல்லூரிகள், சமூக சேவை அமைப்புகளின் கூட்டங்கள் என பல இடங்களில் போய் அரவாணிகளுக்கு ஆதரவாகப் பேசினார் (ஒரே ஒரு தடவை டி.வி. "டாக் ஷோ" ஒன்றில் மட்டும் கிறிஸ்டி அவமானப்பட நேர்ந்தது. நிகழ்ச்சியை நடத்தியவர், தடாலடியாக ஒரு கேள்வி கேட்டார். ஆபரேஷனுக்கு முன் ஜார்ஜாக இருந்தபோது அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். "கிறிஸ்டி என்ற பெண்ணாக மாறியபிறகு உங்கள் மனைவியுடன் எப்படி ரொமான்ஸ் செய்கிறீர்கள்?" என கேள்வி வந்தபோது, அவர் திகைத்துப் போனார். ஒன்றும் சொல்ல தெரியாமல் அவமானத்தோடு வெளிநடப்பு செய்தார்).

மேடைகளில் பாடுவது, இரவு விடுதிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவது என சம்பாதித்து சொகுசாக வாழ்ந்த கிறிஸ்டியின் கதை, ஹாலிவுட் படமாகவும் வந்து நன்றாக ஓடியது.

ஆனால், எல்லோருக்கும் கிறிஸ்டி மாதிரி அமைந்து விடுவதில்லை. அமெரிக்கரான ரீனி ரிச்சர்ட்சன் ஒரு கண் டாக்டர். ரிச்சர்டு ரஸ்கின்ட் என்ற பெயரோடு ஆணாகப் பிறந்தவர். கல்யாணமாகி ஒரு குழந்தையும் பிறந்த பிறகு பாலின மாற்று ஆபரேஷன் செய்துகொண்டு பெண்ணாக மாறினார். டென்னிஸ் விளையாட்டில் அவருக்கு உயிர். பெண்ணாக மாறிய பிறகு அமெரிக்க ஓபன் பெண்கள் பிரிவில் அவர் விளையாடப் போனபோது தடுத்து விட்டார்கள். கோர்ட்டில் வழக்குப் போட்டுத் தன் உரிமையை நிலைநாட்டி, அடுத்த ஆண்டு விளையாட வந்தார் அவர். ஒரு தடவை வெற்றியும் பெற்றார். ஆனால், தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் ஒரு டி.வி. பேட்டியில், "ஆபரேஷன் செய்துகொண்டு பெண்ணாக மாறியதற்கு இப்போது வருத்தப்படுகிறேன்" என மனம் நொந்து சொன்னார்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:46 am

சமூகம் சில விஷயங்களை அவ்வளவு எளிதாக ஜீரணித்துக் கொள்ளாது. ஆபரேஷன் செய்து தனது பாலின அடையாளத்தை மாற்றிக்கொண்டு, சமுதாயத்தின் கேலிப் பார்வைகளை சகித்துக்கொண்டு வாழ, உறுதியான மனப்பக்குவம் வேண்டும். அது இல்லாத பலர், தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறார்கள். சிலர் அனுபவமற்ற டாக்டர்களிடம் ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். இதில் தப்பு நடந்து இறந்துபோகிறவர்கள் நிறைய பேர்.

இந்த ஆபரேஷனுக்கு என்று சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் உளவியல் பரிசோதனை செய்வார்கள். ஆபரேஷனுக்குப் பிறகு அவர்களால் சமுதாயத்தில் வாழமுடியுமா என்பதை அறிய இந்த சோதனை. இதன்பிறகு அவர்கள் இதற்கு சட்டப்படி கோர்ட் அனுமதி வாங்க வேண்டும். இதைப் பெற்ற பிறகே ஆபரேஷன் செய்யலாம். இது ஒருநாளில் செய்து முடிக்கிற ஆபரேஷன் இல்லை.

ஆணாக இருந்து பெண்ணாக மாற விரும்பும் ஒருவருக்கு, பெண்களின் ஹார்மோன்களை செலுத்துவார்கள். இதுதவிர முகத்தில் மீசை, தாடி ஆகியவற்றை அகற்ற லேசர் சிகிச்சை தரப்படும். இந்த சிகிச்சை தரப்படும் இரண்டு ஆண்டுகளும் அந்த ஆண், பெண்களின் உடையை அணிய வேண்டும். அரைகுறையாக முகத்தில் இருக்கும் தாடி, மீசையோடு பெண்களின் உடை அணிந்து பொது இடங்களுக்குப் போகிறபோது, மற்றவர்களது விசித்திரமான பார்வைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும்.
இதன்பிறகே பிரதான ஆபரேஷன்! பிளாஸ்டிக் சர்ஜன், உளவியல் நிபுணர் அல்லது செக்ஸாலஜி நிபுணர், ஹார்மோன் ஸ்பெஷலிஸ்ட், சிறுநீரகவியல் நிபுணர் இப்படி ஒரு குழுவே சேர்ந்து ஆபரேஷன் செய்யும். ஆபரேஷனுக்குப் பிறகும் நிரந்தரமாக ஹார்மோன் மருந்துகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை இப்படி ஆபரேஷன் செய்துகொண்ட பிறகு திரும்பவும் பாலினம் மாற முடியாது. அது மட்டுமில்லை... இப்படி ஆபரேஷன் மூலம் முழுமை பெற்ற பெண்ணாகவோ, ஆணாகவோ ஒருவர் மாறிவிட முடியாது. ஆண், பெண்ணாக மாறும்போது வெளிப்புற தோற்றங்களில்தான் மாற்றம் நிகழும். அவர்களுக்குக் கருப்பை கிடையாது என்பதால், குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. இதே நிலைதான் பெண்ணாக இருந்து ஆணாக மாறுபவர்களுக்கும். சிகிச்சை முறையும் அதே போலத்தான். இருந்தாலும் விதை, விந்து தயாரிப்பு இல்லாததால் இவர்களால் தந்தையாக முடியாது.

ஒட்டுமொத்தமாக நாம் ஒரு விஷயத்தை உணர வேண்டும்... அரவாணிகளாக இருப்பவர்களை சமூகம் கேலிப் பார்வையோடுதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தான். இயற்கைதான் அவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது. சக மனிதர்களான நாம் செயற்கையாகவேறு தண்டனைகள் கொடுத்துத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்.

நாம் இருவர் நமக்கு இருவர்" என குடும்பக் கட்டுப் பாடு பிரசாரம் செய்துவந்த அரசு இப்போது, "ஒன்று பெற் றால் ஒளிமயம்" என சொல்லி வருகிறது. "நாமே இருவர், நமக்கு எதற்கு ஒருவர்?" என அரசாங்கம் கேள்வி கேட்கும் காலம் சீக்கிரமே வரக்கூடும்.

நாகரிகம் கற்ற காலத்திலிருந்தே குடும்பக் கட்டுப்பாடு குறித்த அக்கறை மக்களுக்கு இருந்து வந்திருக்கிறது. விதம் விதமான தடுப்பு முறைகளைப் பல நாடுகளில் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பலவித உபகரணங்களை மக்கள் பயன்படுத்தினர். ஆனால், இவை நூறு சதவிகிதம் நம்பகமானவை என்று சொல்ல முடியாது. இவற்றை மாட்டிக்கொண்டு உறவு கொண்டும்கூட பல பெண்கள் கர்ப்பமாகி, குழந்தை பெற்றனர்.

1960--ம் ஆண்டுகளில் கருத்தடை மாத்திரையும், காப்பர் "டி" போன்ற கருத்தடை வளையங்களும் அறிமுகமான பிறகுதான், குடும்பக் கட்டுப்பாடு மகத்தான முன்னேற்றம் கண்டது. பெண்களும் கர்ப்பம் பற்றிய பயத்தை உதறித் தள்ளி விட்டுத் தைரியமாக இருக்க முடிந்தது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரின் செக்ஸ் செயல்பாட்டில் பெரிய மாற்றம் வந்தது. அதேசமயம், "இந்தக் கருத்தடை சாதனங்கள் மக்களைக் கெடுக்கும். கள்ளத்தனமான உறவுகளைத் தேடுகிறவர்களின் எண்ணிக்கை இதனால் அதிகமாகும்" என கலாசார பாதுகாவலர்கள் ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவித்தபடிதான் இருந்தனர்.

பழங்காலத்திலிருந்து இந்த நவீன யுகம் வரை கர்ப்பத்தைத் தவிர்க்கும் பொறுப்பு பெண்களின் தலையில்தான் விழுகிறது. இப்போதும்கூட அரசாங்கத்தின் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெண்களை மையப்படுத்தியே இருக்கிறது. அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பெண்களுக்குதான் அதிகமாகக் கருத்தடை ஆபரேஷன் செய்கிறார்கள். ஆண்களுக்கு செய்கிற "வாசக்டமி" ஆபரேஷன் ரொம்ப சிம்பிளானது. ஆனால், செய்து கொள்கிறவர்கள் குறைவு.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:47 am

முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட கருத்தடை மருந்து, முதலை சாணம்தான். கி.மு. 1800-ம் ஆண்டு இதைப் பயன்படுத்திப் புரட்சி செய்தவர், அழகி கிளியோபாட்ரா. முதலை சாணத்தை காயவைத்துப் பொடி யாக்கி, அத்துடன் சமையல் சோடா மாவு, தேன் ஆகிய இரண்டையும் கலந்து நன்றாகக் குழைத்து பசை மாதிரி ஆக்கி, செக்ஸுக்கு முன்னால் உபயோகிப்பாராம் கிளியோபாட்ரா. உறவின்போது விந்தணுக்கள் உள்ளே நுழைந்ததும், அவற்றின் வேகத்தை இந்த மருந்து தடால டியாகக் குறைத்து, எல்லாவற்றையும் கொன்றுவிடுமாம். கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்டாட்டில், "ஆலிவ் ஆயிலையும், தேவதாரு மர எண்ணெயையும் கலந்து, செக் ஸுக்கு முன்னால் உபயோகித்தால் கர்ப்பம் ஆகாது" என எழுதி வைத்திருக்கிறார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த சொரானஸ் என்ற மகப்பேறு நிபுணர் கர்ப்பத்தைத் தடுக்க ஒரு டிப்ஸ் கொடுத்தார். இரும்பு அடிக்கும் கொல்லுப் பட்டறைகளில், இரும்பை பழுக்கக் காய்ச்சிய பிறகு அதை சுத்தியலால் அடித்து, தேவையான வடிவத்துக்கு வந்தபிறகு தண்ணீரில் போட்டுக் குளிர வைப்பார்கள். "இப்படி காய்ச்சிய இரும்பைக் குளிரவைக்கப் பயன்படுத்திய தண்ணீரைக் குடிக்கும் பெண்கள் கர்ப்பிணி ஆக வாய்ப்பில்லை" என்பதுதான் சொரானஸ் கொடுத்த டிப்ஸ்.

அரேபிய பாலைவன நாடுகளில் வியாபாரிகள் மாதக்கணக்கில் ஒட்டகங்களின் முதுகில் மூட்டைகளை வைத்து எடுத்துப் போவார்கள். அப்படி சுமை தூக்கிச் செல்லும் ஒட்டகங்கள் கர்ப்பமாகி விட்டால், அவற்றால் பயணம் செய்ய முடியாது. அதனால் ஒட்டகத்தின் ஆசனவாய் வழியாகக் கூழாங்கற்களை அதன் கருப்பைக்குள் போட்டு விடுவார்கள். கருப்பையில் இப்படி வேறு ஏதோ ஒரு பொருள் இருக்கும்போது ஒட்டகம் கர்ப்பமாகாது (இந்த "ஒட்டக டெக்னிக்"தான் இப்போது உலகம் எங்கும் பாப்புலராக இருக்கும் கருத்தடை வளையங்களுக்கு அடிப்படையாக இருந்தது!).

கி.பி. எட்டாம் நூற்றாண்டுவாக்கில் வட இந்தியாவில் பெண்கள் ஒரு விநோதமான உபாயத்தைக் கையாண்டனர். கல் உப்பை தேன் அல்லது எண்ணெயில் நனைத்து, உறவுக்கு முன் உபயோகித்தனர். இப்படி செய்தால் கர்ப்பம் தரிக்காது என்று அவர்கள் நம்பினர். அரேபிய பெண்களும் இதேபோல எண்ணெயை ஒரு மிருதுவான துணியில் நனைத்து உபயோகிப்பது வழக்கம். சீனா போன்ற ஆசிய நாடுகள் பலவற்றில் துணிக்குப் பதிலாக பேப்பரில் எண்ணெய் தடவி, பெண்கள் பயன்படுத்தினர்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வேறொரு பழக்கம் இருந்தது. தேன் கூடு இருக்கிறதே... அதில் தேனைப் பிழிந்து எடுத்தபிறகு மெழுகு மாதிரி பொருள் மிச்சமிருக்கும். அதைப் பயன்படுத்தினால் கர்ப்பமடைய வாய்ப்பில்லை என அங்கு பெண்கள் நினைத்தார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை "புருஹத்ரண்யக உபநிடதம்" என்ற நூலில் கர்ப்பத்தைத் தடுக்க மந்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது. காமசூத்திரம், கர்ப்பத்தைத் தடுக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகள் பற்றி சொல்கிறது. எந்தெந்த நாட்களில் செக்ஸ் வைத்துக் கொண்டால் கர்ப்பத்தைத் தவிர்க்கலாம் என மனு தர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது.
இப்படி வரலாற்று காலத்திலிருந்து குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக நிகழ்ந்த ஆராய்ச்சிகளுக்குப் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு பிரேக் விழுந்தது. தொழிற்புரட்சி ஆரம்பித்த நேரம் அது! பல நாடுகளும் படையெடுப்புகளை நிகழ்த்தித் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதில் பிஸியாகின. "நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருந்தால்தான் படையில் சேர வீரர்கள் கிடைப்பார்கள்... தொழிற்சாலைகளுக்குக் குறைந்த கூலியில் தொழிலாளர்களும் கிடைப்பார்கள்" என தலைவர்கள் நம்பினர். அதனால் குடும்பக் கட்டுப்பாடு முயற்சிகளை அவர்கள் தேசவிரோத செயலாகக் கருதினர்.

ஆனால், கருத்தடை சாதனங்களை கலாசார பாதுகாவலர்கள் எதிர்த்தால்-சமூக ஆர்வலர்களோ இதை ஆதரித்தனர். "மக்கள் தொகை குறைவாக இருக்கும்போதுதான் வாழ்க்கைத் தரம் மேம்படும். எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும்படி செய்தால் மட்டுமே ஒரு நாடு முன்னேறும்" என்றனர் இவர்கள்.
1798-ல் தாமஸ் மால்தூஸ் என்ற பாதிரியார், "மக்கள் தொகை தத்துவம் பற்றிய ஒரு கட்டுரை" என்ற நூலை வெளியிட்டார். ""உலகத்தின் மக்கள் தொகை எப்போதும் இரட்டிப்பாகப் பெருகுகிறது. ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக இப்படி அதிகரிக்கிறது. ஆனால், உற்பத்தியாகும் உணவின் அளவு இந்த வேகத்தில் அதிகரிக்கவில்லை. ஒரு கட்டத்தில் உற்பத்தியாகும் உணவைவிட, உண்பதற்கு தயாராக இருக்கும் மக்கள் பெருகி விடுவார்கள். அந்த நிலையில் விளைநிலங்கள் சக்தியிழந்து தரிசாகும்... பஞ்சமும், நோய்களும் தலைவிரித்தாடும்... பிணக்குகள் பெருகி சமூக ஒழுங்கு குலைந்து போர்மூளும்"" என்று எச்சரித்தார் அவர்.

இதன்பிறகு அவரது பெயரில் "மால்தூசியன் லீக்" என பல நாடுகளில் அமைப்புகள் தோன்றின. அமைப்புரீதியாகக் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் செய்த முதல் கோஷ்டியினர் இவர்கள்தான்! இதில் இந்தியாவும், குறிப்பாக தமிழகம் காட்டிய வேகமும் பிரமிக்க வைப்பது!

குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்பு உணர்வு உலகம் முழுக்கக் கிளம்பிய அதே வேகத்தில் இந்தி யாவிலும் பற்றிக் கொண்டது. சொல்லப் போனால், இந்த விஷயத்தை அரசாங்க திட்டமாக எடுத்துக்கொண்டு செயல்படுத்திய முதல் நாடு இந்தியாதான்!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:49 am

புதுமையான விஷயங்களுக்கு எப்போதும் கிளம்பும் எதிர்ப்பு இதற்கும் வந்தது. ஆனால், டாக்டர் களுக்கு இணையாக சமூக அக்கறை கொண்ட பல தனிநபர்களும் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார்கள். ஒருவேளை, இவர்களின் முயற்சி வெற்றிபெறாமல் போயிருந்தால் இப்போது உலகத்தின் மக்கள் தொகை சுமார் அறுநூறு கோடியே சொச்சம் என்றில்லாமல், ஆயிரம் கோடியைத் தாண்டி எல்லோருக்கும் மூச்சுத் திணறியிருக்கும்.

1820-ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த ஃபிரான்சிஸ் பிளேஸ் என்பவர், கருத்தடை முறைகளைப் பற்றி ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார். இதுதான் முதல் "குடும்பக் கட்டுப்பாடு" அட்வைஸ் முயற்சி. இவருடைய நண்பரான டாக்டர் வேக்லிக்கு இது பிடித்துப் போனது. புகழ்பெற்ற மருத்துவ இதழான "லேன்செட்" பத்திரிகையை நிறுவியவர் இந்த வேக்லி. கருத்தடை மற்றும்

குடும்பக் கட்டுப்பாடு பற்றி இவர் மருத்துவரீதியாகப் பத்திரிகைகளில் எழுதினார்.

ஆனால் "குடும்பக் கட்டுப்பாடு" என்ற வார்த்தையை பிரிட்டனில் பிரபலமாக்கியது, ஒரு விநோத வழக்குதான்! அமெரிக்காவில் அந்த சமயத்தில் பலரும் இதுபற்றி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டபடி இருந்தனர். இதில் ஒன்றை லண்டனைச் சேர்ந்த பிராட் லா, பெசன்ட் என்ற இரண்டு பேர் பிரிட்டனில் மறுபிரசுரம் செய்தனர். அது 1877-ம் ஆண்டு. பிரிட்டனை விக்டோரியா மகாராணி ஆட்சி செய்த காலம். குடும்பக் கட்டுப்பாடு பற்றி பேசுவது, எழுதுவது எல்லாமே அரசாங்கம் வரையறுத்து இருந்த சமூக ஒழுங்குக்கு எதிரான விஷயம்! அதனால் மக்களைக் கெடுப்பதாகக் குற்றம்சாட்டி பிராட் லா, பெசன்ட் இருவரையும் போலீஸ் கைது செய்தது. ஆனால், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. இந்த வழக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பக் கட்டுப்பாடு பற்றி தெருமுனைகளில்கூட விவாதம் நடக்க இது காரணமாக அமைந்தது.

பெண்களும்கூட இந்தப் பிரசாரக் களத்தில் குதித்தனர். இதில் முன்னோடி, அமெரிக்காவைச் சேர்ந்த மார்கரெட் சாங்கர். நியூயார்க்கில் நர்ஸாக இருந்தவர் இவர். குடிசைப் பகுதி பெண்கள் பலர் பிரசவத்தில் உடல்பலத்தை இழந்தே படுத்த படுக்கை ஆகிவிடுவதை இவர் கண்கூடாகப் பார்த்தார். பலர் பிரசவம் சிக்கலாகி இறந்தே போனார்கள்.
பதினோரு குழந்தைகளைப் பெற்றெடுத்து தனது அம்மா பட்ட கஷ்டங்களையெல்லாம் கூடவே இருந்து பார்த்தார் சாங்கர். அடுத்த தலைமுறையை உருவாக்கும் வேகத்தில், பெண்கள் தங்களது ஆரோக்கியத்தை சீரழித்துக் கொள்வதை உணர்ந்தார் அவர். "ஒரு பெண்ணின் வாழ்க்கை நன்றாக அமைய, பிரசவத்தின் மீது அவளுக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும்" என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

நர்ஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இதுபற்றி புத்தகங்கள் எழுத ஆரம்பித்தார். அப்போது அமெரிக்காவில் "காம்ஸ்டாக் சட்டம்" அமலில் இருந்தது. ஆபாசப் புத்தகங்களைத் தடுக்க உருவான இந்த சட்டம், சாங்கரின் புத்தகங்களையும் ஆபாசம் என்றது. "குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்கள் மத்தியில் ஆபாசத்தைப் பரப்புகிறார்" என்று சாங்கர் மீது வழக்குப் போட்டார்கள். அவர் தலைமறைவாகி ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடினார்.

ஒரு வருஷம் கழித்து அமெரிக்கா திரும்பியபோது, சாங்கர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தை அவர் நிறுத்தவில்லை. ஒரு மாதம் ஜெயிலில், ஒரு மாதம் வெளியில் என அவர் வாழ்க்கை போனது. பெண்ணுரிமை அமைப்புகள் அவருக்காகக் குரல் கொடுக்க, கடைசியில் சட்டத்தை மாற்ற முயற்சி நடந்ததுதான் எதிர்பாராத திருப்பம்.

அமெரிக்காவுக்கு சாங்கர் என்றால் பிரிட்டனுக்கு மேரி ஸ்டோப்ஸ். பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர் இவர். கண்ணியமான குடும்பத்தில் பிறந்த ஒரு பிரபுவுக்கு இவரைத் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் கழித்துதான் மேரிக்கு ஓர் உண்மை தெரியவந்தது... "கணவர் ஆண்மையற்றவர்." செக்ஸுக்கு முக்கியத்துவம் தராத மணவாழ்க்கையை அரசாங்கம் வலியுறுத்திய காலம் அது! அதனால் அவர்கள் ஒருமுறைகூட செக்ஸ் அனுபவிக்காமல் பதினைந்து ஆண்டுகளைக் கழித்து விட்டனர். இதேபோல நாட்டில் எத்தனை பெண்கள் இருப்பார்கள் என யோசித்த மேரிக்கு செக்ஸைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்தது. பிரிட்டிஷ் மியூஸியத்தில் போய் புத்தகங்களைத் தேடிப் படித்தார். அதை வைத்து, "திருமண வாழ்க்கையில் காதல்" என்ற புத்தகத்தை எழுதினார். "செக்ஸ் இயற்கையானது... ஆரோக்கியமானது" என்று சொன்ன மேரி, "குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே செக்ஸின் நோக்கம் இல்லை. கர்ப்பத் தடை முறைகளைப் பெண்கள் பின்பற்ற வேண்டும்" என்றும் எழுதினார். அந்தப் புத்தகம் பத்து லட்சம் பிரதிகள் விற்றது. பல மொழிகளுக்குப் போனது. ஐரோப்பாவே பரபரப்பாக, மதகுருக்கள் பயந்து போனார்கள். மேரியைக் கைது செய்ய வேண்டும் என அரசாங்கத்தை வற்புறுத்தினர். ஆனால், அவர் மீது சட்டம் பாயவில்லை. ஆத்திரம் கொண்ட ஒரு குழுவினர், அவரது வீட்டைக் கொளுத்தினர்.

மேரி ஸ்டோப்ஸ் அசராமல் லண்டனில் ஒரு ஆலோசனை மையம் திறந்தார். கருத்தடை முறைகளை நர்ஸ்களுக்குக் கற்றுத்தரும் இடமாக அது இருந்தது.

இதன்பிறகு பல நாடுகளிலும் படிப் படியாக இந்தப் பிரசாரம் பரவியது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:49 am

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் தமிழகம் முன்னோடியாக இருந்தது.

அப்போதைய சென்னை மாகாணத் திலும், புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் இதற்காகப் பல அமைப்புகளைத் தமிழர்கள் உருவாக்கினர். மார்கரெட் சாங்கர் இந்தியா வந்தபோது மகாத்மா காந்தியையும், தாகூரையும் சந்தித்துக் குடும்பக் கட்டுப்பாடு பற்றி பேசினார். காந்தி எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால் தாகூர், "பெண்களின் ஆரோக்கியத்துக்கு இது மிக முக்கியம்" என்றார். 1931-ம் ஆண்டு இந்தியாவில் முதல் தடவையாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதன்பிறகு குடும்பக் கட்டுப்பாடின் அவசியம் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகே முயற்சிகள் வேகமெடுத்தன. 1952-ம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு பற்றிய சர்வதேச கருத்தரங்கு இந்தியாவில் நடந்தது. இதனை "இந்திய குடும்பக் கட்டுப்பாடு அமைப்பு" ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொள்ள கூப்பிட்ட போது மத்திய சுகாதார அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர் வரமறுத்து விட்டார். "குடும்பக் கட்டுப்பாடு" பற்றி பேசுவதே அவருக்கு அதிர்ச்சியான விஷயமாக இருந்தது.

ஆனால், பிரதமர் நேரு வாழ்த்துச் செய்தி அனுப்பி யிருந்தார். துணை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்து பேசினார். அவரது பேச்சுதான் அரசாங்கத்தை உலுக்கியது எனலாம்.

""குழந்தைகளை, பெண்களின் கருப்பைக்கு கடவுள் தான் அனுப்பி வைக்கிறார்... அவரது விருப்பத்தில் நாம் எப்படிக் குறுக்கிடுவது என்று சிலர் கேட்கிறார்கள்... குழந்தையைக் கொடுக்கும் அதே கடவுள், நமக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார். பயன் படுத்துவதற்குதான் அறிவு! எதிர்கால விளைவுகளையும், பெண்களின் ஆரோக்கியத்தையும் கருதி நாம் இதை செய்தாக வேண்டும். இதற்கு அறிவைப் பயன்படுத்தாவிட்டால் மனித இனம் அழிந்துவிடும்"" என்றார் ராதாகிருஷ்ணன்.

இந்தியர்களின் மன சாட்சியை உலுக்கி எடுத்த பேச்சு அது! இதைத் தொடர்ந்து நேரு, சுகாதார அமைச்சகத்துக்கு 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி னார். நாட்டின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது என அரசு தீர்மானித்தது.

இப்படி பொறுப்பை அரசாங்கம் ஏற்றது உலகிலேயே முதலாவதாக இங்குதான்! இன்னமும்கூட அமெரிக்காவில் "குடும்பக் கட்டுப்பாடு" தனிநபர்களின் பொறுப்பாகவே இருக்கிறது.

புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வந்துசேரும் ஒரு பொருளை "ஒரு முழுச்சுற்று வந்துவிட்டது" என்பார்கள். ஆணுறையின்கதையும் அதுதான்! ஆரம்பத்தில் பால்வினை நோய்களை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட அயிட்டம் அது! "குடும்பக் கட்டுப்பாடுக் கருவியாக" அது மாறியது, தற்செயலாக நடந்த விஷயம். இப்போது எய்ட்ஸ் நோய் உருவாக்கிய பீதியில் பழையபடி அது "நோய் கட்டுப்பாடுக் கருவி"யாக அவதாரம் எடுத்திருக்கிறது.

ஆணுறையின் வரலாறு கி.மு. 1350-ல் ஆரம்பிக்கிறது. எகிப்து நாட்டில் வசித்த நாடோடிகள் ஆணுறுப்பை பூச்சிகள் கடிக்காமல் இருக்கவும், அதில் காயங்கள் ஏற்படாமல் இருக்கவும் ஓர் உறை மாட்டிக் கொள்ளும் வழக்கத்தை உருவாக்கினர். மனித இனம் கண்டுபிடித்த முதல் ஆணுறை இதுதான்!

ஃபிரான்ஸின் காம்பரெல்ஸ் குகைகளில் கி.பி.முதல் நூற்றாண்டில் வரையப்பட்ட தொல்லோவியங்கள் உள்ளன. இவற்றில் ஆணுறை அணியும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.

கி.பி. 1500-ம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் பல நாடுகளை "சிபிலிஸ்" என்ற பால்வினை நோய் அச்சுறுத்தி யது. செக்ஸ் எண்ணத்தோடு மனைவியைத் தொடக்கூட பலரும் பயந்தனர். இவர்களுக்கு ஆறுதல்தரும் விதமாக

இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற உடற்கூறியல் நிபுணர் கேப்ரியேல் ஃபெலோபியஸ், ஆணுறை போன்ற பையை உருவாக்கினார். மெல்லிய லினன் துணியால் இது செய்யப்பட்டது. நோய் பரவாமல் தடுக்க இதை வேதிப் பொருட்களில் நனைத்துப் பிறகு காயவைத்து ஆண்கள் பயன்படுத்தினர். அப்போதுதான், "இது நோயை மட்டும் தடுக்கவில்லை... விந்தணுக் களையும் பெண்ணுறுப்புக்குப் போகாமல் வடிகட்டி, கர்ப்பத்தையும் தடுக்கிறது" என்ற உண்மை தெரிந்தது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக