புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10 
30 Posts - 50%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10 
72 Posts - 57%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:24 am

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சார்ந்த காரணங்கள் அல்லது இருவரையும் சார்ந்த காரணங்கள் என மூன்றுவிதமான காரணங்கள் உண்டு. குழந்தையின்மைக்கு ஆண் சார்ந்த காரணங்கள் 40லிருந்து 45 சதவிகிதம் இருக்கலாம். பெண் சார்ந்த காரணங்கள் 50லிருந்து 55 சதவிகிதம் இருக்கலாம். 5 முதல் 15 சதவிகிதம் வரை இருவரையும் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.

முதலில் ஆண் சார்ந்த காரணங்களைப் பார்க்கலாம்:


அ. சம்பந்தப்பட்ட ஆணுக்குத் தரமான உயிரணு உற்பத்தியாவதில் பிரச்னை இருப்பது:

ஒரு ஆண் செக்ஸில் ஈடுபடும்போது, அவனிடமிருந்து கண்டிப்பாக 2 மில்லி லிட்டர் விந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் குழந்தையை உருவாக்க முடியும். இப்படி வெளிவரும் விந்தில், ஒரு மி.லிக்கு 20 மில்லியன் உயிரணுவாவது இருக்க வேண்டும். இதில், 30 சதவிகித உயிரணு ஆரோக்கியமான தரத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், இந்த 20 மில்லியன் உயிரணுவில் 50 சதவிகிதம் நல்ல நீந்தும் திறனைப் (மொடிலிட்டி) பெற்றிருக்க வேண்டும். 20 மில்லியன் உயிரணுவில், 25 சதவிகிதமாவது மிகமிக வேகமாக நீந்தும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

மேற்சொன்ன அளவுகள் குறைந்தபட்ச அளவுகள்தான். இது உலக சுகாதார நிறுவனம் 1992ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் வந்த தகவல். இப்போதும் நம் நாட்டில் சில சோதனைக் கூடங்களில், பழைய அளவுகளை வைத்துக்கொண்டு குழந்தை இல்லாத தம்பதிகளைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், இந்த லேப்களை நடத்துபவர்களுக்கு நிகழ்கால அறிவு இல்லாததுதான்.

ஆண் உறுப்பில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருந் தாலோ, தொற்று நோய் ஏற்பட்டிருந்தாலோ, பிறவிக் கோளாறு இருந்தாலோ தரமான உயிரணு உற்பத்தி யாவதில் பிரச்னை ஏற்படும்.

சத்தான உணவு, உடற்பயிற்சி, சரியான ஓய்வு இவற்றுடன் புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதிருக்கும் ஆணுக்குத் தரமான விந்தணு உற்பத்தியாவதில் பொதுவாகத் தடையேதும் இருப்பதில்லை.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:24 am

ஆ. உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்னை:

சந்ததி உருவாக்குதல், இன்பம் அடைதல், உறவு களின் கட்டமைப்பு என செக்ஸுக்கு மூன்றுவித நோக்கங்கள் உண்டு. செக்ஸின் முதன்மையான, முக்கியமான நோக்கம் சந்ததியை உருவாக்குவதுதான். இனப்பெருக்கம் ஒன்றுக்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையின் ஏற்பாடுதான் இது. வெறும் இனப்பெருக்கம் என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது என்பதால், போனஸாக ஒருவிதமான இன்பத்தையும் செக்ஸுக் குள் இணைத்து வைத்துள்ளது இயற்கை! செக்ஸ் இன்பத் துக்காக இணைசேரும் ஆணின் உயிரணு பெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக்குகிறது. சில தம்பதிகளில், கண வனின் உயிரணு மனைவியின் உறுப்பில் டெபாஸிட் ஆகாத சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம். இப்படியரு நிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன.

ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மை இல்லாதிருப் பது, தீவிரமான துரித ஸ்கலிதம் காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயே விந்து வெளியேறி விடுவது, நல்ல விறைப்புடன் பெண் உறுப்புக்குள் நுழைந்தும் விந்து வெளியேறாமல் போவது போன்ற காரணங்களால் விந்து, பெண் உறுப்புக்குள் டெபாஸிட் ஆகாமல் போகலாம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:24 am

இ. உடலுறவு கொள்ளும் கால அவகாசத்தில் பிரச்னை:

ஒரே நாளில் எத்தனை தடவை உடலுறவு கொள்ள வேண்டும்? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ள வேண்டும்? எத்தனை முறை ஈடுபட் டால் குழந்தை உண்டாகும்? குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இதுபோன்ற கேள்விகள் எழுந்து அவர்களைப் பாடாய் படுத்தக்கூடும்.

என்னிடம் பிரச்னைகளுக்காக வருபவர்களில் சிலர், "சார்... நான் டெய்லி ரெண்டு மூணு தடவை செக்ஸ் வெச்சுக்கறேன். ஆனாலும் புள்ளை பொறக்க மாட்டேங்குதே!" என்பார்கள். ஒரு நாளில் முதல் தடவை உடலுறவு கொள்ளும்போதே போதுமான அளவில் விந்தும் அதில் போதுமான அளவு உயிரணுவும் இருக்கும். அதே நாளில் அடுத்தடுத்த முறை உடலுறவு கொள்ளும்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைவதுடன், அதில் போதுமான அளவில் உயிரணுவும் இருக்காது.

இன்னும் சிலர், "சார்... டெய்லி செக்ஸுல ஈடுபடாம கருமுட்டை வெளிவரும் நாள்லதான் (மாதவிடாய்க்கு முன்பு) ஈடுபடுவேன். அப்படியும் குழந்தை பாக்கியம் இல்லையே!" என்று வருத்தப்படுவார்கள். இதுவும் தவறான அபிப்பிராயம். நிறைய இடைவெளிவிட்டு உறவு கொள்வதால், உயிரணுவின் மூவ்மென்ட் பாதிக்கப்பட்டு, நீந்தும் திறன் குறைந்துவிடும். அதுமட்டுமல்ல, உயிருடன் இருக்கும் உயிரணுவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். பணிச்சூழல் காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியரில் சிலருக்கு, ஊர்சுற்றுவதையே தொழிலாகக் கொண்ட மனிதர்களில் சிலருக்குக் குழந்தை பிறக்காமல் போக இதுதான் காரணம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:25 am

ஈ. செக்ஸில் தவறான டெக்னிக்குகளைப் பின்பற்றுவது:

ஒரு சங்கீத கச்சேரியாக இருந்தால், அதில் ஆலாபனைகள் அவசியம். சுதி சுத்தமாக இருந்தால்தான் பாட்டில் இனிமை ததும்பும். அதுபோலத்தான், இனிமையான செக்ஸ் இன்பத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்வதில் "ஃபோர் ப்ளே" எனப்படும் முன்விளையாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. மீட்டினால், இதயம் நனைக்கும் இசையைப் பொழியும் வீணையின் தந்திகளை முடுக்கித் தயார்ப்படுத்துவது மாதிரிதான் "முன்விளையாட்டும்". ஆனால் பல ஆண்களுக்குப் பொறுமை இருப்பதில்லை. மனிதர்களில் பலர் "பார்த்தேன்... ரசித்தேன்" ரகமல்ல; "எடுத்தேன்... கவிழ்த்தேன்" ரகம்தான்!

முன்விளையாட்டில் ஈடுபட்டுப் பெண்ணைத் தயார்நிலைக்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும்போது, பெண் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி இருக்கும். செக்ஸ் விளையாட்டுகள் மூலம் இயற்கையாக ஈரப்பதம் உண்டாக்குவதற்குப் பதில் விளக்கெண்ணெய், வாஸலின், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகித்து செயல்படுவார்கள். உண்மையில் இவை, உயிரணுவைக் கர்ப்பப் பைக்குள் போகவிடாமல் தடுக்கவே செய்கின்றன. மேலும், இவை கர்ப்பப்பை, ஃபெலோப்பியன் குழாய் போன்றவற்றில் கிருமித் தொற்றையும் உண்டாக்குகின்றன. இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படும். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக் கிருமித் தொற்று ஏற்படுத்திவிடும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:26 am

உ. ஆண் ஜனன உறுப்பில் பிறவிக் கோளாறு இருப்பது:

பெண்குறிக்குள் ஆண்குறி நுழைந்து உயிரணு வெளிப்படும்போதுதான் கரு உருவாகும். ஆனால், சில ஆண்களுக்குப் பிறவியிலேயே ஆண் குறியின் முனையில் இருக்கவேண்டிய துவாரம் கீழ்ப்பக்கம் தள்ளி இருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள் நுழைந்தாலும், உயிரணு கர்ப்பப் பைக்குள் போகாமல் வெளியிலேயே வெளியேறிவிடும். இது ஒரு பிறவிக் குறை. இதற்கு "ஹைபோஸ்பேடியாஸ்" என்று பெயர். இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் இக்குறையை நீக்க ஆபரேஷன் இருக்கிறது. இதன் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்துவிடலாம்.

சில ஆண்களுக்கு, பிறவிக் குறைபாட்டால் ஆண்குறி அளவுக்கதிகமாக வளைந்திருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள் போகவே போகாது. இந்தக் குறையையும் ஆபரேஷன் மூலம் சரிசெய்துவிட முடியும்.

மேலே சொன்னவை எல்லாம் குழந்தை பிறக்காமைக்கு ஆண்சார்ந்த காரணங்கள். சரி, பெண் சார்ந்த காரணங்கள்..?

நான் இறந்தால்
என்னை எரித்து விடாதீர்கள்...
தயவு செய்து
புதைத்து விடுங்கள்
அப்போதாவது_
என் வயிற்றில்
புழு நெளியட்டும்!"


-குழந்தை பிறக்காததால் தான் சந்தித்த அவமானங்களை ஒரு பெண் சொல்லும்விதமாக புனையப்பட்ட புதுக்கவிதை இது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:26 am

ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லை எனில் அதற்கு கணவனோ, மனைவியோ அல்லது இருவருமேகூட காரணமாக இருக்கலாம் என்பதை சமூகம் சிந்தித்துப் பார்க்காததன் விளைவுதான் பெண்களின் இந்த வேதனைக்குக் காரணம். குழந்தையின்மைக்குப் பெண் சார்ந்த காரணங்கள் பல இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் வேண்டுமென்றே ஒரு பெண் உருவாக்கிக் கொள்வாளா என்ன? ஆணோ, பெண்ணோ... எல்லாமே இயற்கையின் படைப்பு எனும்போது, இன்னல்களும் அங்கிருந்தேதானே படைக்கப்படுகின்றன!
கருமுட்டை வெளியாகும்போதுதான் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்க முடியும். சில பெண்களுக்குக்கருமுட்டை வெளியாகாமல்கூட இருக்கலாம். சில பெண்களுக்குக் கருமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கரு உருவானாலும் கூட உருவான கரு, ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கருப்பைக்கு வராமலேகூட இருந்து விடலாம். அப்படியே வந்தாலும் கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலைமை ஏற்பட லாம். இதனால் இந்தப் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமல் போகும்.

உயிரணுவானது கருப்பாதை, ஃபெலோப்பியன் டியூப், கர்ப்பப்பை போன்ற இடங்களை நீந்திச் சென்றால்தான் கர்ப்பம் தரிக்க முடியும். ஆனால், சில பெண்களுக்கு உயிரணுவானது நீந்திச் செல்ல முடியாத அளவுக்குத் தடைகள் ஏற்பட்டு, அதனால் குழந்தை இல்லாமல் போகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் டியூப்பில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக குழந்தை பாக்கியமற்றுப் போகலாம். அல்லது ஜனன உறுப்பில் கிருமி தொற்றிப் பாதிப்பு ஏற்பட்டு இக்குறை ஏற்படலாம். ஹார்மோன் கலாட்டா:

பொதுவாக ஒரு பெண்ணுக்கு இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு தடவை மாதவிடாய் வந்தது என்றால், பதினான்காம் நாள் கருமுட்டை வெளிவரும். அப்படி வரும் கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம்தான். இந்தத் தருணத்தில் உடல் உறவு கொண்டால்தான் கரு உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால், கரு முட்டையே வெளிவராவிட்டால் கரு எப்படி உருவாக முடியும்? கருமுட்டை வெளிவராமல் போவதற்குக் காரணம் ஹார்மோன் குறைபாடுகள்தான். உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்களில் சிலருக்கும் குழந்தை இல்லாமல் இருக்கும். ஆம்... இவர்களுக்கு ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை வெளிவராமல் போய்விடலாம். இதுமட்டுமில்லை, தீவிர மன அழுத்தம்கூட கருமுட்டையை வெளிவராமல் செய்துவிடும் என்பது மருத்துவ உண்மை.

கரு உருவானாலும்கூட கர்ப்பப் பையில் தங்கி வளர இயலாத நிலைமை ஏற்படும் என்றேன் அல்லவா? பொதுவாக கரு ஃபெலோப்பியன் டியூப்பில்தான் உருவாகும். அதன் பின்னர், நான்கிலிருந்து ஏழு நாட்களுக்குள் கரு நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வர வேண்டும். ஒருவேளை கருப்பையின் உட்சுவர் (எண்டோமெட்ரியம்) பலவீனமாகிப்போனால், ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப்பைக்கு வரும் கருவானது, அங்கு தங்கி வளரமுடியாத சூழல் ஏற்படும். இந்த எண்டோமெட்ரியம் ஆரோக்கியமில்லாமல் போவதற்குரிய காரணங்களில், ஹார்மோன் கலாட்டாவும் ஒன்று.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:28 am

பெண் குறியின் பாதை எப்போதும் அமிலத்தன்மை கொண்டிருக்கும் என்றும், இந்த அமிலத்தன்மையை விந்தில் உள்ள காரத்தன்மை மட்டுப்படுத்திவிடும் என்றும் ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருந்தேன். சில பெண்களுக்குக் கிருமித் தொற்றால், அமிலத் தன்மை அதிகரித்துவிடும். இதனால் உயிரணுக்கள் இறந்து விடும்.

கர்ப்பப் பையின் வாசலில் மியூக்கஸ் என்கிற அடர்த்தியான சளிப்படலம் ஒரு கதவுபோல இருக்கும். கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இது நீர்த்துப்போய் கசிந்து வெளியேறிவிடும். ஆனால், சில பெண்களுக்குக் கரு முட்டை வெளிவரும் நாளில் இந்த சளிப்படலத்தின் அடர்த்தி குறையாமல் போய்விடும். அப்போது இதுவே கர்ப்பப் பையின் வாசலில் தடையாக இருந்து

உயிரணுவைப் பைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விடும். இதன் காரணமாகவும் குழந்தைப் பிறப்பு தடைபடும். சில பெண்களுக்கு பெண்குறி பாதையிலும், கர்ப்பப்பை வாசலிலும் உயிரணுவை எதிர்க்கிற ஒருவித ரசாயனம் சுரக்கும். இதனால் உள்ளே வரும் உயிரணுவின் வீரியம் குறைந்துவிடும் அல்லது உயிரணு இறந்து விடலாம்.

ஃபெலோப்பியன் டியூப் பிளாக்:


கரு முட்டையும், உயிரணுவும் சந்திக்கும் ஃபெலோப்பியன் டியூப்பில் அடைப்பு இருந்தாலும் கரு உருவாகாமல் போகலாம். பிறவி குறைபாடு, பால்வினை நோய், காச நோய் போன்றவற்றால் ஃபெலோப்பியன் குழாயில் அடைப்பு ஏற்படலாம். மிகவும் அரிதாக, சில பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஃபெலொப்பியன் டியூப்பில் பிளாக் ஏற்படலாம்.

கர்ப்பப் பைக்கு இரண்டு பக்கமும் உள்ள இரண்டு ஃபெலோப்பியன் டியூப்களில் ஏதாவது ஒன்றில் அடைப்பு இருந்தால், குழந்தை பிறக்க 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் அடைப்பு இருந்தால், அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:29 am


பெண் ஜனன உறுப்பில் பிறவிக் குறைபாடு:


பிறவியிலேயே கருமுட்டைப் பை, கர்ப்பப்பை, பெண்குறி பாதை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்திருக்கும் பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் எட்டாக் கனவுதான். இன்னும் சில பெண்களுக்கு ஜனன உறுப்பு படைக்கப்பட்டிருக்கும். ஆனால், சரியாக வளர்ச்சி அடைந்திருக்காது.

சில பெண்களுக்கு ஜனன உறுப்பு சரியாகவும் உரிய வளர்ச்சியும் பெற்றிருக்கும். ஆனால், பிறவியிலேயே ஜனன உறுப்புக்குப் பாதை இருக்காது. சிலருக்கு ஜனன உறுப்பில் பாதை இருக்கும். ஆனால், அது அடைபட்டிருக்கலாம். இது போன்றவர்களுக்கு உடலுறவிலும் பிரச்னை இருக்கும். ஆனால், அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் விதிமீது பழிபோட்டு, பேசாமல் இருப்பார்கள். இந்தக் குறையை ஆபரேஷன் மூலம் குணப்படுத்தலாம்.

செக்ஸ் பிரச்னையால் குழந்தை இல்லாமை:


சில பெண்களுக்கு செக்ஸ் ஆசை இருக்கும். உணர்ச்சிவசப்படவும் செய்வார்கள். ஆனால், உடல் உறவில் ஈடுபட்டால் வலி எடுக்குமோ என்ற தேவையற்ற பயத்தில் உழல்வார்கள். அதன் காரணமாக அவர்களையும் அறியாமல்

பெண்குறி பாதையை இறுக்கமாக்கி விடுவார்கள். திருமணமான புதிதில் சில பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். சில பெண்களின் இல்லற வாழ்வில் இதுவே தொடர்கதையாகவும் இருக்கும். இதன் காரணமாகவும் குழந்தை பிறப்பு தடைபட்டுப் போகும்.

குழந்தை இல்லை என்பதற்காக மருமகளை திட்டித் தீர்க்கும் மாமியார்களுக்கு இப்போது தெளிவு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

குழந்தையின்மையைப் பொறுத்தவரை, கணவன்மனைவி இருவருக்கு மான காரணங்கள் 5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகித ஜோடிகளுக்குஇருக்கும். சில தம்பதிகளில் கணவருக்கும் சரி, மனைவிக்கும் சரி, எந்த பிரச்னையும் இருக்காது... ஆனால், குழந்தை பிறக்காமல் இருக்கும். இதற்கு மருத்துவரீதியில் "இடியோபதிக் இன்ஃபெர்டிலிட்டி" (Idiopathic infertility) என்று பெயர். இன்னாதென்று அறியவே முடியாத ஏதோ ஒரு காரணத்தால்தான் இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை இன்றைய அதி நவீன மருத்துவ விஞ்ஞானத்தால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:30 am

இந்த விஷயங்களை இதோடு நிறுத்திக் கொள்வோம்... பலரின் மனதில் எப்போதுமே "டக்டக்" என்று ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கேள்விக்கு இனி பதிலைத் தேடுவோம்...

"செக்ஸை கட்டுப்படுத்தலாமா... கூடாதா?"


சிகிச்சைக்கு போறீங்களா?

சிகிச்சை முறைகள் எப்போதும் காரணத்தை பொருத்தே அமையும். இதனை ஒரு டாக்டர்தான் முடிவு செய்ய வேண்டும். இன்னொரு விஷயம், பல டாக்டர்களைப் பார்த்து சலிப்படைவதற்குப் பதிலாக ஒரே டாக்டரை அணுகிப் பொறுமையுடன் சரியான சிகிச்சை பெறுவதும் அவசியம்.

சித்தாவிலிருந்து அலோபதி, அலோபதியிலிருந்து ஆயுர்வேதம்... ஆயுர்வேதத் திலிருந்து ஹோமியோபதி என்று வைத்திய முறைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால் டைம் வேஸ்ட், பணம் வேஸ்ட்... அத்துடன் உங்கள் ஆரோக்கியமும் வேஸ்ட் என்ற நிலை வந்துவிடும். பத்து பேர் சாம்பாரில் உப்பு போட்டால்... அந்த சாம்பாரை வாயில் வைக்க முடியுமா?

அதனால் விளம்பரம் பார்த்து, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காக முறையற்ற சிகிச்சை முறைகளை, தகுதியற்ற மருத்துவர்களை நாடாதீர்கள். படித்த அனுபவம்மிக்க மருத்துவர்களைத் தேடிப் போங்கள். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். தம்பதிகள் இருவருமே மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஏனெனில்,
இருவரில் யாரிடம் வேண்டுமானாலும் பிரச்னை இருக்கலாம்.

அழுக்குத் தீர குளித்தவனுமில்லை; ஆசை தீர சுகித்தவனுமில்லை" என்று கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. இதில், "ஆசை தீர சுகித்தல்" என்பது செக்ஸ் இன்பத்தைதான் குறிப்பிடுகிறது. அதேபோல், "போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து..." என்றொரு பழமொழியும் உள்ளது. போதும் என்ற மனம் எதற்கு இருக்கிறதோ இல்லையோ, செக்ஸ் விஷயத்தில் போதும் என்ற நினைப்புக்கே இடமில்லை! செக்ஸ் என்பது ஒரு வலை மாதிரி. ஆம்... விரித்தவர்களே அகப்பட்டுக் கொள்கிற சந்தோஷ வலை! ஆனால், இந்த செக்ஸைப் பற்றிதான் மக்களிடம் எத்தனை அபத்தமான எண்ணங்கள்!

சுகங்களிலேயே ராஜ சுகம் செக்ஸ்தான் என்று அதில் திளைக்கும் அதே மக்களிடம் ஒரு மூடத்தனமான நம்பிக்கையும் இருக்கிறது. அதாவது, "செக்ஸில் அதிகம் ஈடுபட்டால் உடம்பு கெட்டு வீக்னஸ் ஆகிவிடும்... ஆயுள் குறைந்து விடும்... செக்ஸில் அதிதீவிர நாட்டம் இருந்தால் அது உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும்..." என்ற தவறான பயம் மக்கள் மனதில் உள்ளது.

செக்ஸ் பற்றிய அறிவுபூர்வமான தெளிவின்மைதான் இதுபோன்ற தவறான நம்பிக்கைகளுக்குக் காரணங் களாகும். இதுபோன்ற காரணங்களால் தான், மக்கள் "பிரம்மச்சர்யம்" உயர்ந்தது என்று நினைக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? மக்களுக்கு "செக்ஸ்" பற்றியும் தெரிய வில்லை. "பிரம்மச்சர்யம்" பற்றியும் தெரியவில்லை என்பதுதான்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 1:30 am

செக்ஸில் ஈடுபடாமல் இருப்பதுதான் பிரம்மச்சர்யம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம். சமஸ் கிருதத்தில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இடத்தைப் பொறுத்து, சூழலைப் பொறுத்து அந்த வார்த்தையின் அர்த்தங்கள் வேறுபடும். பிரம்மச்சர்யத்தில் உள்ள "பிரம்ம" என்பது "சத்தியம்" என்று பொருள்படும்.

பிரம்மச்சர்யத்தில் உள்ள "சர்" என்பது "சாதனை" செய்வது என்று பொருள்படும். பிரம்ம + சர் இரண்டும் சேர்ந்து சத்தியத்தை (கடவுள்) தெரிந்து கொள்வதற்காக சாதனை செய்வது என்ற பொருளில் அமையப்பெற்றது. இதுதான் பிரம்மச்சர்யம். இன்னும் சொல்லப் போனால், பிரம்மச்சர்யம் என்பது மொத்தத்தில் மாணவன், சீடன் என்கிற பொருள்படும் வார்த்தை.

ஆதிநாட்களில் மனிதனின் மொத்த வாழ்நாளை (ஆயுள்) 100 ஆண்டுகளாகக் கணக்கிட்டு, அதனை நான்கு கட்டங்களாகப் பிரித்திருந் தார்கள். பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வனபிரஸ்தம், சந்நியாசம் என்ற இந்த நான்கு கட்டங்களும் "மனுஸ்மிருதி" என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டமும் இருபத்தைந்து இருபத்தைந்து ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குருகுலத்தில் சேர்ந்து குருவிடம் தன்னையே ஒப்படைத்து, ஒழுக்கத்துடன் கல்வி கற்று அறிவுள்ளவனாக மாறும் ஒருவனின் வாழ்க்கையின் முதல் கட்டம்தான் பிரம்மச்சர்யம். ஒரு ஆண்மகன் கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்க வேண்டிய பிரம்மச்சர்ய கட்டத்தில், அவனை வேறு எந்த சிந்தனையும் திசை திருப்பிவிடக் கூடாது என்பதற் காகவே, செக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாது, செக்ஸ் பற்றி சிந்திக்க கூடாது, செக்ஸில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்பட்டது.

சந்நியாசியாகி போகிறவர்களும் பிரம்மச்சர்யத்தைக் கடைபிடிப்பார்கள். எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்து விட்டோம்... உடல் சுகம் எல்லாம் மாயை, உண்மையான சுகம் என்பது இறைவனை அடைவதுதான் என்று சொல்லிக் குடும்பம், மனைவி, மக்கள், ஆஸ்தி அனைத்தையும் துறப்பவர்களைதான் சந்நியாசி என்கிறோம். ஆக, மாணவனோ, சந்நியாசியோ இருவரும் பிரம்மச்சர்யத்தைக் கடைப் பிடிக்கலாம். ஆனால், செக்ஸ் இன்பத்தை மட்டும் தவிர்ப்பவர்களே பிரம்மச் சாரிகள் என்று நினைப்பதுதான் தவறானது.

உலக வாழ்வில் சுகம் தருகிற அனைத்தையும் அதாவது ருசியான உணவு, நல்ல இதமான படுக்கை, சொகுசான வீடு, நல்ல உடைகள், கைநிறைய செல்வம், அணிகலன்கள், கமகமக்கும் வாசனைகள்... இவற்றை எல்லாம் தவிர்ப்பவர்களே பிரம்மச்சாரிகள்.

பிரம்மச்சர்யத்தை மாணவனுக்கும், சந்நியாசிக்குமாக வரையறுத்து வைத்ததற்கு காரணம் அவர்களின் நோக்கத்திலிருந்து, லட்சியத்திலிருந்து துளிகூட பின்வாங்கிவிடக்கூடாது என்பதற்குத்தான்!.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக