புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்ச்சுனன் சபதம் Poll_c10அர்ச்சுனன் சபதம் Poll_m10அர்ச்சுனன் சபதம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
அர்ச்சுனன் சபதம் Poll_c10அர்ச்சுனன் சபதம் Poll_m10அர்ச்சுனன் சபதம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அர்ச்சுனன் சபதம் Poll_c10அர்ச்சுனன் சபதம் Poll_m10அர்ச்சுனன் சபதம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அர்ச்சுனன் சபதம் Poll_c10அர்ச்சுனன் சபதம் Poll_m10அர்ச்சுனன் சபதம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அர்ச்சுனன் சபதம் Poll_c10அர்ச்சுனன் சபதம் Poll_m10அர்ச்சுனன் சபதம் Poll_c10 
19 Posts - 3%
prajai
அர்ச்சுனன் சபதம் Poll_c10அர்ச்சுனன் சபதம் Poll_m10அர்ச்சுனன் சபதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அர்ச்சுனன் சபதம் Poll_c10அர்ச்சுனன் சபதம் Poll_m10அர்ச்சுனன் சபதம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அர்ச்சுனன் சபதம் Poll_c10அர்ச்சுனன் சபதம் Poll_m10அர்ச்சுனன் சபதம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அர்ச்சுனன் சபதம் Poll_c10அர்ச்சுனன் சபதம் Poll_m10அர்ச்சுனன் சபதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அர்ச்சுனன் சபதம் Poll_c10அர்ச்சுனன் சபதம் Poll_m10அர்ச்சுனன் சபதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்ச்சுனன் சபதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 04, 2011 9:08 am

''அரசர்களே! யான் இப்போது சபதஞ் செய்கிறேன். நாளை நான் ஜயத்ரதனைக் கொல்வேன். தவறுவேனாயின் தழலிடை முழுகுவேன்.

என் மகனுடைய வதத்துக்குக் காரணமாக இருந்த பாபியாகிய சைந்தவனை நாளை கதிரவன் விழுமுன் கொல்லவில்லையானால் புண்ணியவுலகத்தையடைய மாட்டேன். நாளை சைந்தவனைக் காக்கும் பொருட்டுத் துரோணரும் கிருபரும் பிறகும் எதிர்ப்பட்டால், அவர்களைக் கணை மழையால் மூடுவேன். சைந்தவனைக் கொல்லவில்லையானால், தாய் தந்தையரைக் கொன்றர்களும், கோள் சொல்லுபவர்களும், குருவின் மனைவியைச் சேர்ந்தவர்களும் நல்லவர்கள்மீது பொறாமைப்படுகின்றவர்களும், பிறர்மீது பழி கூறுபவர்களும், அடைக்கலப் பொருளைக் கவர்ந்தவர்களும், பிரம்மகத்தி செய்தவர்களும், பசுவை வதைத்தவர்களும் அடைகின்ற நரகங்களையடைவேன்.

நாளை சைந்தவனைக் கொல்லேனாயின், வேதம் ஓதிய வேத வித்துக்களையும் சாதுக்களையும் குருவையும் அவமதிக்கின்றவர்கள் சேரும் நரகில் சேருவேன். அந்தணனையும், செந்தழலையும், பசுவையும் காலால் தீண்டுகின்றவனும், நீரில் கோழையையும் மலசலங்களையும் விடுகின்றவர்களும், ஆடையின்றிக் குளிக்கின்றவர்களும், அநியாயமாகப் பணம் வாங்குகின்றவர்களும், பொய் புகல்கின்றவர்களும், வஞ்சகர்களும், மனச்சாட்சிக்கு மாறாகக் காரியங்களைச் செய்கின்றவர்களும், தற்புகழ்ச்சி பேசுகின்றவர்களும், வேலைக்காரர்களும் மனைவி மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றபொழுது பங்கிட்டுக் கொடுக்காமல் உண்பவர்களும், கட்குடியர்களும், வரம்பு கடந்தவர்களும், நன்றி கொன்றவர்களும், எசமானனை இகழ்கின்றவர்களும், இடக்கையால் புசிக்கின்றவர்களும், மடியில் உணவை வைத்து உண்பவர்களும் அடையும் நரகங்களை அடைவேன்; நாளை சைந்தவனைக் கொல்லேனாயின், பலாச மரத்தால் ஆசனம் அமைத்தவனும், தும்பைச் செடியால் பல் துலக்குகின்றவனும், விடியற் காலத்தில் உறங்குகின்றவனும், குளிருக்கு அஞ்சுகின்ற பிராம்மணனும், போரில் அஞ்சுகின்ற அரசனும், ஒரு கிணறும் வேத வொலியும் இல்லாத ஊரில் ஆறுமாதம் வசித்தவர்களும், சாத்திரங்களை நிந்திக்கின்றவர்களும், பகலில் பெண்ணுடன் பணர்பவர்களும், பகலில் உறங்குகின்றவர்களும், குடியிருக்கும் வீட்ல் கொள்ளி வைத்தவர்களும், உணவில் நஞ்சிட்டவர்களும், அதிதிகளை வரவேற்காதவர்களும், பசுக்கள் குடிக்கும் தண்ணீரில் இடர் செய்கின்றவர்களும், மாதவிடாயானவளைச் சேருகின்றவர்களும், பணத்தை வாங்கிக்கொண்டு கன்னிகையைத் தருகின்றவர்களும், இன்னும் என்ன என்ன பாவங்கள் உளவோ அவைகளைச் செய்தவர்களும் அடையும் நரகங்களை நான் அடைவேனாக. சைந்தவன் எந்தவுலகில் சென்று ஒளிந்தாலும என் தவப் படைகளால் வதைப்பேன்'' என்று சபதம் புரிந்தான்.

அர்ச்சுனன் இவ்வாறு கூறி காண்டீபத்தை இடம் வலமாக டங்காரம் பண்ணினான். வில்லோசையும் சொல்லோசையும் விண்ணைப் பிளந்தது. பகவான் பாஞ்சஜன்யத்தை எடுத்து முழங்கினார். தனஞ்சயன் தேவதத்தம் என்ற சங்கநாதஞ் செய்தான். பாதலம், பூதலம், மீதலம் என்ற மூவுலகங்களும் நடுங்கின.

பீமன், ''தம்பீ! உன் சபதம் நிறைவேறுவதாக; சைந்தவன் மாண்டான் என்பது உறுதி'' என்றான்.

கண்ணபிரான், ''அர்ச்சுனா! என்னையும் உடன் பிறந்தாரையும் கலந்து யோசிக்காமல் இப்படி நீ சபதஞ் செய்துவிட்டாயே? சைந்தவனைக் காத்து, துரோணர் முதலியோர் நிற்கின்றார்கள். அதலால் இது எளிதாக முடியுமா? சபதத்தை நிறைவேற்ற வேண்டுமே'' என்றார். அர்ச்சுனன். ''மாதவரே! உமது கருணையும் சிவபெருமானுடைய அருளும் துணை செய்யும். என் ஆற்றல் முழுவதும் நாளை வெளிப்படும். விண்ணுலகமும் மண்ணுலகமும் சைந்தவனைக் காத்து நின்றாலும் அவன் உயிரை யமன் உலகுக்கு அனுப்புவேன். காண்டீபம் என்ற வில்லையும் தனஞ்சயனையும் சாரதியானமாதவரையும் போரில் எவன் வெல்லுவான்? என் வில் தெய்வத் தன்மையுள்ளது? சாரதியோ தேவரீர்; போர் புரிகின்றவன்யான். இவ்விதம் இருக்க எதைத்தான் செய்ய முடியாது?''என்றான்.

பகவான், ''அர்ச்சனா! நாம் சிவ மூர்த்தியைக் கண்டு புதிய வரங்களையும் வில்லையும் கண்களையும் பெறவேண்டும்'' என்று கூறி, அவனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். சுபத்திரையிருக்கும் இடத்தையடைந்தார்கள். சுபத்திரையும் உத்தரையும் நரநாராயணர்களுடைய பாதங்களில் வீழ்ந்து புலம்பினார்கள்.

கண்ணபிரான், ''தங்கையே நீ அழாதே. உன் மகன் உத்தமமான கதியை யடைந்தான். அரசனக்குப் போரில் அடைகின்ற மரணம் சிறந்தது. நீ வீரனைப் பெற்றவள். வீரனுடைய மனைவி, வீரனுடைய புதல்வி, வீரனுடைய சகோதரி. அம்மா! வருந்தாதே. நாங்கள் கயிலுக்குச் செல்லுகின்றோம். அபிமன்யு மறைந்தான். உலகம் உள்ள வரை அவன் புகழ் மறையாது. உன் மகனுடைய வதத்துக்குக் காரணமான ஜயத்ரதன் நாளை மாள்வான்'' என்றார்.

சுபத்திரை, ''அந்தோ! மகனே! உன் மலர் முகத்தை இனி நான் எப்போது காண்பேன்? அழகிய உன்னைக் காணாமல் கலங்குகின்றேன். உன்னைப் பாடகர்கள் பாடி யெழுப்புவார்களே! பஞ்சணையில் படுத்த நீ உதிரச்சேற்றில் படுத்திருக்கின்றனையே! உன் தந்தையும் தாய் மாமனும் மற்ற வீரர்களும் இருக்கம்போது நீ மாண்டனையே? உன் மதுர மொழியை இனி நான் கேட்க மாட்டேனே. என் வாழ்வு குலைந்ததே. கனவில் கண்ட பொருள்போல் மறைந்தனையே. என் அருமந்த மகனே! உன் மனைவியின் முகத்தைக் காண ஓடி வா! நாதனையிழந்து வருந்துகின்ற உன் அன்புக்குரிய உத்தரையைத் தழுவ ஓடி வா!Q கோடிக்கணக்காகக் கொடுத்தவர்களும், நன்றி மறவாதவர்களும், குருவுக்குப் பணிவிடை புரிநத்வர்களும், கோதானம் புரிந்தவர்களும், பதிவிரதைகளும், கடுமையான நோன்புளை மேற்கொண்டவர்களும், உயிரைக் கொல்லாதவர்களும், ஞானிகளும், பக்தர்களும் ,டைகின்ற உத்தம கதியை நீ அடைவாயாக'' என்று புலம்பினாள். திரெளபதியும் விழுந்து கதறியறுதாள்.

கண்ணபிரான் அழுகின்ற அன்னையரையும் உத்தரையையும் சமாதானஞ் செய்துவிட்டு, அர்ச்சுனனுடன் புறப்பட்டுச் சென்றார்.

வழியில் அர்ச்சுனன் பசி தாகத்ததால் களைத்துப்போனான். ''சுவாமி! நான் சிவபூஜை செய்யாமல் உண்பதில்லை. என் வழிபடு சிவலிங்கம் பாசறையில் நின்றுவிட்டது'' என்றான். கண்ணபிரான் ''என்னை சிவமாகப் பாவித்துப் பூசை செய். அது சிவமூர்த்தியைச் சாரும்'' என்றார். அதுபடியே மாத வரைச் சிவமாகப் பாவித்து மலரிட்டு வணங்கி வழிபாடு செய்தான் பின்னர் பழங்களை யுண்டான். ''சுவாமி! சற்றுக் களைப்பாக உள்ளது'' என்றான். தனஞ்சயனைப் படுக்க வைத்தார். கண்ணயர்ந்தான்.

கிரு7ணர் தன் சாரதியாகிய தாருகனை அழைத்து, ''தாருக! அர்ச்சுனனைப் பகைத்தவன் என் பகைவன். அவனுடைய நண்பன் என்னுடைய நண்பன். அர்ச்சுனன் என் உயிரினும் இனியவன். நீ என் தேரில் சகல ஆயுதங்களையும் சக்ராயுதத்தையும் வைத்து ஆயத்தமாக இரு. ஒரு வேளை அர்ச்சுனன் சைந்தவனை வதைக்கத் தவறுவானாயின், நான் என் சக்ராயுதத்தால் நாளை எல்லோரையும் வதைப்பேன். என் தேரில் பலாஹம், மேக புஷ்பம், சைப்யம், சுக்ரீவம் என்ற நான்கு புரவிகளைப் பூட்டி, கெளமேதகி என்ற கதாயுதத்தையும் வைத்துத் தயாராக இரு'' என்றார்.

இந்த கனமான உடம்படன் ஒரு இரவில் கயிலாயஞ் சென்று மீள முடியாது என்று பண்ணிய பகவான், அர்ச்சுனனுடைய சூட்சும சரீரத்தை யழைத்துக்கொண்டு புறப்பட்டார். விண் வழியே அர்ச்சுனன் கனவு காண்கிறவனைப் போல் குபேரனுடைய சைத்ரரதம் என்ற நந்தவனத்தையும் மேல் உலகங்களையும் பார்த்துக்கொண்டே சென்றான். பிரம்மலோகம், விஷ்ணுலோகம் இவைகளைக் கடந்து கைலாயத்தையடைந்தான். பூதகணங்கள் சூழ, இன்னிசைகள் ஒலிக்க, உமாதேவியாருடன் எழுந்தருளிய சிவபெருமானைத் தரிசித்தான். முக்கண்ணரும், மூவர் தேவர் முனிவர் சித்தர் முத்தர்கட்குத் தலைவரும், பரமயோகியும் பிறப்பில்லாதவரும், அகிலலோக ஏக நாயகரும், ஞானமே வடிவானவரும் ஆகிய மகா தேவரைக் கண்டு இருவரும் பல முறை வணங்கினார்கள். துதி செய்தார்கள்.

அர்ச்சுனன் மாதவரை வழிபட்ட மலர்கள் இறைவன் திருவடியில் இருக்கக் கண்டான். பரமேச்வரர் அருள் புரிந்தார். ''நர நாராயணர்களே! உங்களுக்கு நல்வரவு, உங்கட்கு என்ன வரம் வேண்டும்'' என்று கருணையுடன் கூறியருளினார். நானும் நாராயணரும தழுதழுத்த குரலுடன், ''சர்வேச் வரரே! சதாசிவமூர்த்தியே! பலகோடி வணக்கம். பாசுப தாத்திரத்தையும், அதற்குரிய சகல மந்திரங்களையும் வழங்க வேண்டும்'' என்றார்கள்.

''நர நாராயணர்களே! அந்தத் தடாகத்தில் இருக்கின்ற நமது வில்லை எடுத்து வாருங்கள்'' என்றார் இறைவர். சூர்ய மண்டலத்துகூக ஒப்பான அத்தடாகத்தை யடைந்தார்கள். நஞ்சைக் கக்குவதுமான மற்றொரு பாம்பையும் பார்த்தார்கள். சிவமூர்த்தியைத் தியானித்தார்கள். அந்த இரு நாகங்களும் வில்லும் அம்புகளுமாக ஆயின. அவற்றை யெடுத்துக் கொண்டு சிவமூர்த்தியை வணங்கினார்கள். வில்லையும் பாசுபதப் படையையும், அதற்குரிய மந்திரங்களையும் அருளி, ''நீவிர் பூபாரந் தீர்த்து நம்பால் வாருங்கள்'' என்று அருள் புரிந்தார். இருவரும் பாமுறை பணிந்து பைறப்பட்டார்கள்.

அர்ச்சுனன் கண் விழித்து எழுந்தான். ''இப்போது நான் கனவில் கயிலாயத்தை யடைந்தேன். ஆனால் சிவபெருமான் அருளிய வில்லும் அம்பும் இதோ உண்மையில் இருக்கின்றன. இது என்ன ஆச்சர்யம்?'' என்றான்.

''அர்ச்சுனா! இது கனவு அன்று. உன் நுண்ணுடம்பை யழைத்துக்கொண்டு கயிலை சென்றேன். விடியற் காலையாகிவிட்டது. வா போகலாம்'' என்று அவனை அழைத்துக் கொண்டு திரும்பினார்.



அர்ச்சுனன் சபதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 04, 2011 9:18 am

இது போன்ற புராண நூல்களில் வரும் கதைகள் மிக அருமையாக இருக்கும்.இது போன்ற கதைகள் எங்கிருந்து பதியபட்டது என்று கூறினால் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் அருமையிருக்கு :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அர்ச்சுனன் சபதம் 1357389அர்ச்சுனன் சபதம் 59010615அர்ச்சுனன் சபதம் Images3ijfஅர்ச்சுனன் சபதம் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக