புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
21 Posts - 3%
prajai
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_m10திமிங்கலமும், அயிரை மீனும்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமிங்கலமும், அயிரை மீனும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 11:38 pm

திமிங்கலமும், அயிரை மீனும்! Vmalar10


அறைக்கதவை தள்ளியபடி உள்ளே போனான் நவாப். ஒரு பிரபல தமிழ் எழுத்தாளன் நவாப்; வயது 48; உயரம் 160செ.மீ., மத நல்லிணக்கத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் ஆதரித்து, சிறுகதைகள் எழுதி குவிப்பவன்.

""குட்மார்னிங் பாஸ்!''

"ஸிஸிடிவி' பதிவுகளை ஒரு பார்வை பார்த்தபடி, ""வாடா, நவாப்!'' என்றார் சங்கரலிங்கம்.

எதிரில் அமர்ந்தான்.

""என்ன ரெண்டு மாசமா நீ கதைகளே எழுதி அனுப்பல. கைல இருக்ற கதைகள், அக்டோபர் வரைக்கும் தான் தாங்கும். இன்னும் பதினைந்து நாட்களில் ஆறு சிறுகதைகளாவது எழுதி அனுப்ப பார். அட்வான்ஸ் எதுவும் தேவையா?'' என்றார் எடிட்டர் சங்கரலிங்கம்.

ரோமானிய சாயல்; நவாப்பின் இறைத்தந்தை.

""என் மக ஆசியாவுக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்ருக்கேன். அதனால கதைகள் எழுதுறதில கவனம் போகவில்லை. இருந்தாலும், மூணு சிறுகதைகளையாவது எழுதி அனுப்ப பாக்றேன். அட்வான்ஸ் வேணாம் பாஸ்; கல்யாணம் முடிவான பிறகு உங்க கிட்ட அழகிய கடன் வாங்கிக்கிறேன்!''



""மகளுக்கு மாப்பிள்ளை பாக்கும் அனுபவம் எப்படி?''
""ஒரு மாப்பிள்ளை, பொண்ணு அதிகம் படிச்சிருக்கு வேணாங்கிறான்; இன்னொரு மாப்பிள்ளைக்கு நடிகை ஜெனிலியா மாதிரி பொண்ணு வேணுமாம்; மாதம் பத்தாயிரம் சம்பாதிக்ற ஒரு மாப்பிள்ளைக்கு, நூறு பவுன் நகையும், இனோவா காரும் தேவையாம்.

""உருது மாப்பிள்ளை, ராவுத்தர் பொண்ணு மேட்ச் ஆகாதுன்றான்; "நஜாத்' மாப்பிள்கைள், வேணும்மின்னா கட்டிக்குவம், வேணாம்மின்னா, வெட்டி விட்ருவம்ன்றான்; ஒரு படி எறங்கி வந்து மாப்பிள்ளை பார்த்தா என் மக ஆயிரம் குறை சொல்றா...''

""உன் மகளை நான் குட்டீசா இருக்கும் போது பாத்தது. அவ எந்த மாதிரி மாப்பிள்ளை கேக்றா?''

""பாஸ் மார்க் அழகும், உயரமும். குறைந்தபட்சம், ஒரு இளங்கலை பட்டம், பணி பாதுகாப்பு கொண்ட வேலை. மாதம் இருபதாயிரம் சம்பளம். நூறு வருஷமானாலும் தீராத அன்பும், சகிப்புத்தன்மையும்!''

""பேசாம இப்டி பண்ணிட்டா என்னடா?'' கண் சிமிட்டினார் சங்கரலிங்கம்.

""எப்படி?''

""என் மகன் அமெரிக்கால எம்.பி.ஏ., படிக்கிறான். அவனுக்கு உன் மகளை கட்டிக் குடுத்துடேன்!'' சிரித்தார்.


கள்ளங்கபடமில்லாத சிரிப்பு. அவரது முத்துப்பற்களுக்கு இணையாக, கண்களும் சிரித்தன.

அவர், அந்த வார்த்தைகளை உதிர்த்தது தான் தாமதம்... குளிர்பதன மூட்டப்பட்ட அறையிலும் வியர்த்துப் போனான் நவாப்.

""என் பையனுக்கு உன் மகளை கட்டித்தருவியா பாய்?''

திக்குமுக்காடி போனான் நவாப். சங்கரலிங்கத்துக்கும், நவாப்புக்கும் 25 வருட நட்பு, நட்பு என்ற வார்த்தை கூட தவறு தான். சங்கரலிங்கத்தின், "நிலா' பத்திரிகையில் தான், எழுத்தாளனாக அறிமுகமானான் நவாப். சங்கரலிங்கத்தை இறைத்தந்தையாக வரித்துக் கொண்டான் நவாப்.

நவாப்பை பொறுத்தவரை சங்கரலிங்கத்துக்கு எத்தனை வயதாக இருந்தாலும் வயது 28 வயது தான்; சங்கரலிங்கம் எது சொன்னாலும் சரிதான்; எதிர்கேள்வி கேட்கமாட்டான். ஒரு கோடீஸ்வர பிராமணனையும், ஒரு லோயர் மிடில்கிளாஸ் முஸ்லிம் எழுத்தாளனையும் இலக்கியம் ஒன்று சேர்த்து வைத்தது.

""பா... பாஸ், ஆர் யூ சீரியஸ்?''

""இம்!''

""போங்க, பாஸ்... விளையாடாதீங்க!''

நவாப்பின் திணறலை ரசித்தார் சங்கரலிங்கம்.

""உன் பொண்ணு ஒத்துக்க மாட்டாளா?''

""அது, அப்படியில்ல பாஸ்!''

""பிராமண மாப்பிள்ளை பாத்தா, உன்னை மதத்தை விட்டு தள்ளி வச்சிருவாங்களா?''

""உங்க ஸ்டேட்டசுக்கு அனில் அம்பானி குடும்பத்ல பொண்ணு எடுக்கலாம்!''


சில நொடிகள் மவுனித்தார் சங்கரலிங்கம். மேஜையிலிருந்த பென்சில்களை வைத்து விளையாடினார். பின் ஸ்கிரிப்ளிங் பேடில், "பிராமண மாப்பிள்ளை, இஸ்லாமிய மணப்பெண் - மத நல்லிணக்கம்' என கிறுக்கினார்; நிமிர்ந்தார்.

""டேய்... உன் ஒய்ப், எனக்கு தங்கச்சி. அவகிட்ட போய் சொல்லு. என் மருமகளுக்கு மாப்பிள்ளை பாக்றதில எந்த காம்பர்மைசும் பண்ணக் கூடாதுன்னு. மாப்பிள்ளை பாக்றதை ரொம்ப பொறுமையா செய்.

""மாப்பிள்ளை சார்ந்திருக்கும் ஜமாத்தை நீ விசாரி; மாப்பிள்ளையின் பணியிடத்தை நான் விசாரிக்கிறேன். மாப்பிள்ளை உன்னை மாதிரி முன் கோபியாவும், ஓட்டைக் கையனாகவும் இருந்திடாம பாத்துக்க.''

""ஓ.கே.,பாஸ்!''

""உன்னுடைய, "கீக்கா' கதை படிச்சேன். பிரமாதமான சட்டயர்; ஆனா, பப்ளிஷ் பண்ண முடியாது. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை புதுச்சேரி வருவேன். கெஸ்ட் ஹவுசுக்கு சாயங்காலம் வந்திரு!''

""ரைட்டோ பாஸ், நான் கிளம்பவா?'' எழுந்தான் நவாப்.

""என்னுடைய ரிக்குவஸ்ட்டையும் கலந்து பேசி கன்சிடர் பண்ணு!''



திமிங்கலமும், அயிரை மீனும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 11:38 pm

ஒன்றும் பேசாமல் கிளம்பினான் நவாப். நடந்தததை மனைவியிடம் விவரித்தான் நவாப். விக்கித்துப் போனாள் தில்ஷாத்.

""நிஜமாவா கேட்டாரு, நிஜமாவா கேட்டாரு?''

""ஆமா... ஆமா!''

சிலபல நிமிடங்கள் மவுனத்தில் உறைந்தாள். பின், ""உங்ககிட்ட ஏன் அப்டி உங்க பாஸ் கேட்டார்ன்னு யோசிச்சேன் ; பல விதமான பதில்கள் கிடைத்தன!''

""சொல்... சொல்... என்னென்ன பதில்கள்?''

""ஒன்று: உங்க பாஸ் ஒரு பான்டசி உலகத்ல மிதக்கிறார். உங்க கதைகளை படிச்சு, படிச்சு, தன்னை பாடிய புலவனுக்கு தன் ராஜியத்தையே கொடுக்க விழையும் பேரரசன் போல் இருக்கிறது இவர் நடவடிக்கை. யதார்த்தத்துக்கு இந்த புரபோசல் ஒரு நாளும் ஒத்துவராது!''

""பேன்டசி பலூன்களை உயர்த்தி பிடித்திருக்கும் ரியலிச லட்சிய மனிதர் அவர்!''

""இரண்டு: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் உங்க தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டம், கோடீஸ்வர பிராமணன், ஏழை முஸ்லிம் எழுத்தாளன் சம்பந்தி ஆவது என, உங்க பாஸ் நினைக்கிறார் போலும்; ஆனால், மதநல்லிணக்கத்துக்கு இது நிரந்தர தீர்வல்ல; பூமியின் கடைசி நாள் வரைக்கும், மதம் சார்ந்த பூசல்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்.''

தலையசைத்தான் நவாப்.


""மூன்று: தகுதி மீறி ஆசைபடுவானா நவாப் என சோதித்து பார்த்திருப்பார் உங்க பாஸ்!''

""ஒருக்காலும் இருக்காது!''

""நான்கு: உங்க பாசுக்கு எப்பவுமே முஸ்லிம்களின் மேல் ஒரு பரிவு உண்டு. அவர் தன் காரில் கூட, நாகூர் அனீபா பாடல்களை போட்டு கேட்பார் என சொல்லி இருக்கிறீர்கள். அதன் வெளிப்பாடாய் இருக்கலாம், அவர் உங்ககிட்ட பேசினது!''

மவுனித்தான் நவாப்.

""ஐந்து: இந்த இடத்தில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு ஒரு குட்டிகதை சொல்லப் போகிறேன். கடலும், நதியும் கலக்கிற இடத்ல முகத்துவாரம் இருக்கும். அந்த முகத்துவாரத்துக்கு ஒரு திமிங்கிலம் அடிக்கடி வந்திட்டு போகும். அப்ப முகத்துவாரத்ல வசிக்ற ஒரு அயிரை மீனை சந்திச்சு ப்ரண்ட்ஷிப் ஆய்ருச்சு.

""அப்றம்... ஆட்டமென்ன, பாட்டமென்ன? ஒரே கோலாகலம் தான், கொண்டாட்டம் தான் ரெண்டுக்கும். அயிரை மீனோட மகளுக்கு மாப்பிள்ளை பாக்ற விஷயம் தெரிஞ்சு திமிங்கலம், தன் மகனை கட்டிக்கச் சொல்லுச்சு. கதையை இந்த இடத்ல நிறுத்துவோம்.

""கதைல வர்ற திமிங்கிலம் தான் உங்க பாஸ்; அயிரை மீன் தான் நீங்க. திமிங்கலத்தின் எடை, அயிரை மீனை விட பத்தாயிரம் மடங்கு அதிகம். இரண்டும் நீரில் நீந்துவனவாக இருந்தாலும் இரண்டின் ஆயுள், வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம் வேறு,வேறு.

""நீல நிற திமிங்கலத்துக்கு, பச்சை நிற திமிங்கலமோ, கறுப்புநிற திமிங்கலமோ, மணமகளாக வரலாம்; ஆனால், ஒருக்காலும் அயிரை மீன் மணமகளாக வரமுடியாது. உங்க பாஸ் சிந்திக்கும் அலைவரிசையில் அவரின் மகன் இருக்க மாட்டார்; நீங்க சிந்திக்கும் அலைவரிசையில் உங்க மக இருக்கமாட்டா.


""மதங்களே இல்லாத சமுதாயத்தை எந்த கொம்பனாலும் கொண்டு வர முடியாது. மதப்பூசல்களை வேண்டுமானால், சங்கரலிங்கம் - நவாப் இலக்கிய முயற்சிகள் குறைக்கலாம்; ஆனா, முற்றிலும் அகற்றாது.''

""கல்யாணம் ஆகிவரும்போது பேசாமடந்தையா இருந்த, இப்ப சுட்டுத் தள்ற!''

""இருபத்தி ஐந்து வருடம் உங்களோட குடும்பம் நடத்திட்டு பேச கத்துக்கிடலைன்னா எப்படி!''

""சரி, நம்ம மக விஷயத்துக்கு வருவம்!''

""திருநெல்வேலி பேட்டை மாப்பிள்ளை எனக்கு பிடிச்சிருக்கு. எம்.சி.ஏ., படிச்சிருக்கான்; சென்னை மல்ட்டி நேஷனல் கம்பெனில நல்ல வேலைல இருக்கான். கல்யாணத்துக்கு பிறகு நம்ம மக லெக்சரர் வேலைக்கு போகவும் சம்மதிக்கிறான்.

""மாப்பிள்ளை கேரக்டர் பத்தி அவங்க சொந்த ஊர் ஜமாத்ல விசாரியுங்க. மாப்பிள்ளையின் வேலை, சம்பளம், வேலை பார்க்கும் திறன், பணி பாதுகாப்பு பற்றி உங்க பாஸ் விசாரிக்கட்டும்!''

""திரும்ப பாஸ் ஏதாவது கேட்டா?''

""கேக்கமாட்டார்!''

""கேட்டா?''

""சிரிச்சுக்கிட்டே திமிங்கலமும், அயிரை மீனும் ஒரு நாளும் சம்பந்தி ஆக முடியாது பாஸ்ன்னு சொல்லிருங்க.''

""சரி, பாப்பா!''

""மருமகன் வரப்போறான்; மருமகன் வந்த ஒரு வருஷத்துல பேரன் வரப் போறான். இன்னும் பொண்டாட்டியை, பாப்பா, போப்பான்னு கொஞ்சிக்கிட்டு... கொஞ்சம் எட்டி நில்லு தாத்தா!''

""சரி, எட்டி நிக்றேன் கிழவி!'' சிரித்தான் நவாப்.ரிவால்விங் சேரில் அமர்ந்தபடி வரவேற்றார் சங்கரலிங்கம்.

""வாடா, நவாப்!''

""வந்தேன், பாஸ்!''

""இந்தாங்க, மூணு புது சிறுகதைகள்!''

வாங்கி ஆர்வமாய் வாசித்தார். ஒரு கதையில் கண்ணீர் கசிந்தார்.

""வெரிகுட்... மூணுமே வெளியிடக் கூடியவை தான்!''

""தாங்க்யூ பாஸ்!''

""தாங்க்ஸ் எதுக்குடா?''

""பாஸ்... திருநெல்வேலி மாப்பிள்ளை ஒண்ணோட பயோ-டேட்டா இதோ இருக்கு. அலுவலக முகவரி இணைஞ்சிருக்கு. மாப்பிள்ளையை பத்தி விசாரிச்சு, ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட் குடுங்க பாஸ்!''

பயோ-டேட்டாவை வாங்கி திருநெல்வேலி மாப்பிள்ளையின் புகைப்படத்தை உன்னித்தார்.

""என் பய்யனை விட இவன் நல்லாவா இருக்கான்?''

""ஏழைக்கேத்த எள்ளுருண்டை பாஸ்!''

""அப்படின்னா, என் பய்யனுக்கு உன் பொண்ணை தரமாட்ட?''

""திமிங்கலமும், அயிரை மீனும் ஜோடி சேர முடியாது பாஸ்!''

""அட, உதாரணம் நல்லாயிருக்கே... உதாரணம் உன் சொந்த சரக்கா, என் தங்கச்சிகிட்டயிருந்து இரவல் வாங்கினீயா?'' சங்கரலிங்கத்தின் கைவிரல்கள் பென்சில்களுடன் விளையாடின. ஒரு பென்சிலால் ஸ்கிரிப்ளிங் பேடில், "பணக்கார முதலாளிகள் தங்கள் இடங்களிலிருந்து பலபடிகள் இறங்கி வர முயற்சித்தாலும், ஏழைத் தொழிலாளிகள் சிலபடிகள் ஏறி வர விரும்புவதில்லை!' என கிறுக்கினார்.

""சரி, விட்றா, உன் பய்யனுக்காகவது எங்கள்ல பொண்ணு பாத்திருவம்!''
திமிங்கலம் கடலுக்குள் பாய்ந்தது; நதிக்கு அயிரை மீன் திரும்பியது.
* * *

- ஆர்னிகா நாசர்



திமிங்கலமும், அயிரை மீனும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 11:41 pm

meenuvum shivaa annaavum



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 23, 2009 12:01 am

meenuga wrote:meenuvum shivaa annaavum
திமிங்கலமும், அயிரை மீனும்! Affraid



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 12:09 am

இதில் அதிர்ச்சியடைய என்ன உள்ளது?



திமிங்கலமும், அயிரை மீனும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:04 am

சிவா wrote:இதில் அதிர்ச்சியடைய என்ன உள்ளது?

திமிங்கலமும், அயிரை மீனும்! 838572



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக