புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆடை பிறந்ததால் காதலும்   I_vote_lcapஆடை பிறந்ததால் காதலும்   I_voting_barஆடை பிறந்ததால் காதலும்   I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடை பிறந்ததால் காதலும்


   
   
சரவண மகேஷ்
சரவண மகேஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 23/09/2011

Postசரவண மகேஷ் Sat Oct 01, 2011 3:35 pm


ஆடை பிறந்ததால் காதலும்


சிறு பிள்ளையாக இருக்கும் போது போன மாமா , சித்தப்பா கல்யாணமாக இருக்கட்டும் , அங்கே நாம் தான் ராஜா அனேக கல்யாணங்களில் பார்த்திருக்கிறேன் குழந்தைகள் தான் ரொம்ப குஷியாக விளையாடிக் கொண்டிருக்கும் என் சிறு வயதில் நான் போன கல்யாணங்கள் சிலவும் அப்படியே நியாபகத்தில் இருக்கிறது ... கல்லூரி பருவத்தில் போன சொந்த அக்கா , அண்ணா , இல்லை நண்பனின் அக்கா , அண்ணா கல்யாணமாக இருக்கட்டும் ,அங்கே மேக்கப் போட்ட மெலிய பெண்களை கண்கள் தேடி ஓயும் , அழகிய காலம் அது .... அப்புறம் உடன் படித்த தோழர் , தோழிகளின் கல்யாணங்கள் , ஒன்றாய் படித்து பின் காலை பனியாய் கலைந்து சென்ற நண்பர்களை சந்திக்கும் மறக்க முடியா நேரங்கள் ... பிறகு நமது கல்யாணம் ... பின் மனைவியோடு சேர்ந்து செல்லும் சொந்தங்களின் கல்யாண நிகழ்ச்சிகள் ... இப்படியென கல்யாணங்கள் ஒவ்வொன்னும் அந்த அந்த வயதில் அழகாய் அமைந்து ஒரு இனிமையான நினைவலைகளை விட்டுச் செல்லும் ...

நாங்கள் போய்க் கொண்டிருப்பதும் எங்களுடன் கல்லூரியில் கூட படித்த பிரெண்ட் ப்ரியாவின் கல்யாண வைபோகம் தான் ... அவளின் சொந்த ஊரான வள்ளளார் வாழ்ந்த வடலூரில் தான் நாளை கல்யாணம் ... கோவையிலுருந்து போய்ச் சேர எப்படியும் இரவை தாண்டி விடும் ... ப்ரியாவின் நட்பு வட்டாரம் பெரிசு , அதிலும் ஒரு நண்பன் இருந்தாலும் நம்பிக்கையான நண்பனாய் கிடைப்பது கஷ்டம் , இவளோ அத்துனை பேரிடமும் உரிமையுடன் பழகுவாள் பேசுவாள் ஆக நாளை உடன் படித்த நண்பர்கள் எல்லாரும் நிச்சயம் வருவார்கள் ... இப்ப என் கூட வர்ர ப்ரெண்ட்ஸ் எல்லாருக்குமே இது ஒரு இனிமையான பயனம் ... மூனு வருசத்துக்கப்புறம் இப்போ தான் எல்லாரும் ஒன்னா சந்திக்கிறோம் , ஒல்லி மகா குண்டாயிருப்பானு கதிரும் வெங்கியும் 200 ரூவா பெட் கட்டி வெச்சுருக்குரானுக ... குண்டு மல்லிகா ஒல்லியாருப்பானு சுண்டுவும் சங்கரும் 300 ரூவா க்ட்டியிருகிறானுக ... படிச்சு முடியுரப்போ சின்ன பிரச்சனையில சட்டைய கிழிச்சுட்டு சண்ட போட்டு அப்பொதிலிருந்து பேசாம கொள்ளாம இருக்கிற சத்தியையும் முருகேசையும் எப்படியாச்சும் பேச வைக்கனும்னு பெரிய திட்டம் போட்டுட்டு இருக்குறானுக மூனு பேர் , மூனு வருசமா சேத்து வெக்கனும்னு தோனுல !! பரவயில்ல இப்பவாச்சும் தோனுச்சே !!! ... இதில எல்லாருக்குமே பெரிய சங்கடம் என்னான்னா எப்புடி ப்ரியா கிட்ட சரக்குக்கு வாங்க காசு வசூல் பண்றதுனு தான் ... இன்னிக்கு கல்யாணத்துல சாப்பாட விட சரக்கு முக்கியம் ஆயிடுச்சுல ... ஒருவேள எங்களுக்கு அப்படி அயிடுச்சோ என்னமோ ?? ...

இந்த வேடிக்கை விளையாட்டிலும் கேளிக்கைகளிலும் நான் எந்த விதத்திலும் கலந்துக்க முடியல ... என்னோட நியாபகங்கள் எல்லாம் அந்த ஒரு நாள் , நான் எடுத்த முடிவு சரியா தவறா என்று இன்று வரை முடிவுக்கு வர முடியாத அந்த பொழுது ,இப்ப வரைக்கும் மறக்க முடியாத அந்த நாளையே சுத்தி சுத்தி இருக்கிறது , ... நாளை அந்த நியாபங்கள் அழிக்கப் பட்டுவிடலாம் என்பதனாலோ ?? அல்ல அதை அழிக்கச் சொல்லி மனசாட்சியே கூட கட்டாயபடுத்தலாம் என்கிற பயத்தினாலோ என்னவோ கடைசி கடைசியாக நினைத்துக் கொள்கிறேன் என்று மனம் இன்று அதை சுற்றியே வளைய வருகிறதோ என்னவோ ?????

என் பெயர் அல்லவா அந்த கல்யாணப் பத்திரிக்கையில் அவள் அருகே இருக்க வேண்டும் என ஒரு காலத்தில் இதே ப்ரியா தானே விரும்பினாள் ... இன்று எப்படி எதோ குமாருக்கு மனைவியாக சம்மதிச்சாள் ?? விரும்பித்தான் கல்யாணம் நடக்கிறதா ?? எப்படி ஒருவனை முழுதாய் நினைத்துவிட்டு பின்பு அதை சுலபமாக மறந்தும்விட்டு ச்சச ... ... நாளை என்னை நேரில் பார்த்தால் என்ன செய்வாளோ ??? எனக்கு உறுத்துவது எப்படி அவளுக்கு உறுத்தவில்லை ... அவள் பழகியதும் அவளது காதலும் பொய்யோ ??? நிச்சயமாக அவளது பாசம் பொய்யாய் இருக்க வாய்ப்பில்லை , எங்கள் பழக்கம் அப்படி !!!!

என் முழுப்பெயரைக் கூட சொல்ல மாட்டாள் அவள் எப்பொழுதும் அப்பு என்றே அழைப்பாள் அபினவ் என்கிற பேரை .... நானும் அவளை பேர் சொல்லியதில்லை , அம்மு தான் அவள் எனக்கு ... அப்படி தான் அவளுடைய அப்பா கூப்பிடுவாராம் அதனால் யாரும் அவளை அம்மு என்று அழைத்தால் பிடிக்காது ... அப்பாவை போல் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வேன் என்கிற உறுதியில் நான் அம்முனு உரிமையாக கூப்பிட அதே நம்பிக்கையில் அவளும் கண்டுக்கவில்லை ...

எல்லா பசங்களோடும் பாரபட்சம் இல்லாம பழகுவாள் ... ஆனால் என்னிடம் எனோ கொஞ்சூண்டு அதிக உரிமை எடுத்துக் கொண்டாள் ... எனக்கும் அது பிடித்தது ... எல்லாம் ஒரு நற்பாச தான் , பார்க்க அழகாய் இருப்பாள் , நண்பர்களும் ரொம்ப அதிகம் ... அதில் நமக்கு கொஞ்ச அவ நெருக்கம் சொல்லிக்கிறது ஒரு சின்ன ஆசைதான் ,, அதை பெண்களும் அழகாய் பயன்படுத்தி கொள்வார்கள் !!!! ஆனால் ஏன் அப்படி என்னிடம் இருந்தாள்னு இப்ப வரைக்கும் தெரியல சோகம்சோகம்சோகம்சோகம்

அதுலாம் ஒரு கனா மாதிரி இருக்கிறது இப்போது ... எத்துனை எத்துனை நியாபகங்கள் ... காலையில் யார் முதலில் குளிப்பதுனு போட்டி வெச்சு 6 மணிக்குலாம் எழுந்து குளித்தது ... தினமும் ஒரு லாலி பாப் வாங்கி கொடுத்தது ... விரல் ஓய்ந்து போகிற அளவுக்கு sms பன்னுனது ... இரவில் வீட்டுக்கு தெரியாமல் மெல்ல மெல்ல போன் பேசியது ... யாரும் பார்க்காத போது தலையை கலைத்து விடுவது ... பரிட்சைக்கு ஒன்றாய் தனியாய் படித்தது ... பிறந்தநாளுக்கு அவ கொடுத்த வாட்ச் தான் இன்னும் என் கையில் ... நான் கொடுத்த புத்தகம் அவளிடம் இப்ப இருக்குமா ?? .... நெருங்கிய தோழியாய் இருந்தாள் எனக்கு , ஆனால் என்ன செய்ய , ஆண் பெண் நட்பில் மட்டும் , நட்பு நெருங்கிய நட்பு ஆவதற்குள் ஒருமுறையேனும் காதல் காற்று தொட்டுவிடுகிறது ...

அவளிடம் அளவு கடந்த பாசம் இருந்தாலும் , நெருக்கம் இருந்தாலும் , காதல் என்னும் பித்து வர வில்லை ... அவளுடன் பேசிய போது ஒரு நாள் காதலில் போய் நிற்கும் என்று எதிர்பார்த்தது தான் ... அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதும் அவள் தான் ... அதுக்காக அந்த நட்பை என்னால் விடவும் , தட்டி கழிக்கவும் முடியவில்லை ... அவளிடம் கடைசி வரை நண்பனாக இருக்கவே விரும்பினேன் ....

எனக்கு கிருஷ்ணர் ரொம்ப பிடிக்கும் என்பேன் ... அவள் அதற்கு " உனக்கு கிருஷ்ணர் தான் புடிக்கனும்னு வேண்டீட்டு இருந்தேன் அப்பு " என்பாள் ...

நான் வருஷா வருஷம் சபரி மலைக்கு போவேன்னு சொன்னதற்கு " அப்பாடா இதுவும் ok " என்றாள் ..."

ஜாதி மாத்தி கல்யாணம் பன்ன விடுவார்களா உன் வீட்டில் ? " என்றாள் ஒருநாள் ...

இது எங்கோ தப்பாக செல்வது போல் இருந்தது ... இதை தவிர்க்கவே விரும்பினேன் ... ஆனால் அவளை தவிர்க்க விருப்பமில்லை ... வாலிப இரசாயனங்கள் பெண்னை துளியளவும் வெறுக்க முடியாமல் பன்னிவிடுகிறது !!!

காதலையும் அவளே சொன்னாள் கல்லூரியின் கடைசிநாள் ... என்ன தான் அளவுகடந்த காதல் இருந்தாலும் அதை சொல்வது கூட ஒரு கஷ்டமான விஷயம் தான் ... அதை சொல்லிவிட்டு அதற்கான பதில் பிரியமானவர்களிடமிருந்து வரும் வரை ஒவ்வொரு நொடியும் வெந்து நோகும் ... ஆனால் அவளை அந்த துன்பத்தை அனுபவிக்க என் மனம் விரும்பவில்லை ...

நட்பு காதலாகாது என்றேன் ...

எனது லட்சியம் அடையவேண்டும் ஆக காதல் எல்லாம் ஒத்துவராது என்றேன் ...

30 வயதில் தான் பன்னிக்கலாம்னு இருக்கேன் அதுவரை உன்னால் முடியாது அதனால் காதல் எல்லாம் முடியாது என்றேன் ...

அவள் எதையும் கேட்டுகொள்வதாக இல்லை ... அழுதாள் விம்பி விம்பி அழுதாள் ... அங்கே தான் பெண்னின் அனைத்து பலமும் அடங்கி இருக்கிறது ... விவாதம் பெரிதானது ... எமாற்றிவிட்டாய் என்று சொன்னாள் ... நான் இல்லாமல் வாழ முடியாது என்றாள் ... கல்யாணமே பனனிக் கொள்ள மாட்டேன் என்றாள் ????? ... இன்னும் சொல்லிக் கொண்டே போனாள் ... இறுதியாய் கேட்டாள்
" கல்யாணம் பன்னிக்குவயா மாட்டியா ?? "

நான் முடியாது என்று சொல்லி விடலாம் என்று தீர்மானித்து , எப்படி சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதை கண்டு பிடித்தவள் போல் அடுத்த கேள்வியை கேட்டாள்
" ஏண்டா இப்படி என்னை ஏமாத்துன ??? "

என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை , அவளும் அதற்கு பதில் எதிர்பார்க்கவில்லையோ இல்லை அவசியம் இல்லை என்று நினைத்தோ அழுது கொண்டே ஓடிவிட்டாள் ...அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பிறக்க வில்லை எங்களுக்குள் இந்த மூன்று வருடத்தில் ...

என்னிடம் இருந்து எதோ ஒன்று பிரிந்து சென்றதை நன்றாக உணர்ந்தேன் ... காதலை மறுத்தது சரியா தப்பானு தெரியவில்லை ... ஒருவேளை என்னுடைய முதல் காதலை அவளிடம் சொல்லியிருந்தால் என்மேல் அவளுக்கு காதல் வந்திருக்காதோ ?? முதல் காதல் என்று சொல்வது கூட தவறாக நினைக்கிறேன் ... காதலில் எது முதல் கடைசி எல்லாம் ?? ... என்னுடைய கீதாவையும் அவளுடை காதலையும் என் மனம் மறக்க மறுக்ககிறது ... அவள் அழகி கிடையாது , அது காமத்துக்கு பிறந்த காதலும் அல்ல ... இங்கே உன்மையான காதல் எதுவும் தோற்பதில்லை மாறாக அழிக்கப்படுகிறது , கொல்லப்படுகிறது , அப்படி கொல்லப்பட்ட காதல் என்னுடையது ...வேண்டாம் அது என் வாழ்வின் இருண்ட பக்கம் ... அதை திரும்பி பார்க்கவும் வேண்டாம் ... இந்த உலகில் 90 சதவிகித காதல்கள் ஆடை தோன்றிய காரத்தினால் தானே வந்தது , ஒருநாள் அந்த ஆடையும் அவிழ்க்கப்பட அவர்கள் காதலும் ஓய்ந்து விடுகிறது !!! ... ஆனால் என்னால் இன்னொரு காதலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை ...

வடலூர் வந்தது ... என்னில் ஏனோ ஒரு கலக்கம் , எப்படி போய் அவள் முகத்தை பார்ப்பேன் , பழகிய பழக்கத்திற்காக , அழைத்ததுகாகவும் வந்தாச்சு ... எப்படி அவள் முகத்தை பார்க்கப் போரேன் ... என்னை விட அவளுக்குத் தானே என்னை பார்ப்பதில் கலக்கம் இருக்க வேண்டும் ... அவள் அழுது கொண்டே ஓடியது இன்னும் என் அப்படியே நெஞ்சில் இருக்கிறது ... எந்த மனதோடு எனக்கு பத்திரிக்கையும் அனுப்பி வைத்தாள் போனிலும் அழைத்தாள் ... ஒருவெளை நேருக்கு நேரெ பேசுவதற்கு முடியாது என்பதால் தான் நேரில் வருவதை தவிர்த்துவிட்டாளோ ?? அப்பவும் மூன்று வருட மவுனத்திற்கு பிறகு என்னுடன் தொலைபேசியில் பேசும் போழுது அந்த மாதிரி எந்த சலனமும் அவள் குரலில் தெரியவில்லையே தெளிவாய் பேசினாளே ??? ஒரு வேளை இந்த மூன்று வருடமும் நேரம் இல்லாத்தால் தான் என்னுடன் பேசவில்லையோ ?? , பிடிக்காதவர்களிடம் பேசுவதிற்கு யாருக்குத்தான் நேரம் இருக்கும் !!! நான் தான் அதை பெறும் மவுனம் என்று நினைத்துக் கொண்டேனோ என்னவோ ??? பிடிக்காதவனுக்கு எதுக்கு பத்திரிக்கை வைத்தாள் ?? விரும்பாமல் அழைத்தாலும் பரவாயில்லை , என்னை எதோ இந்த கல்யாணத்துக்கு போக சொல்லி மனம் தள்ளியது .. வந்தும் ஆகியது இனி அதை யோசித்து என்ன செய்ய ???

தூங்குவதற்கு எல்லாம் நேரம் இல்லை ... அறை எடுத்து குளித்துவிட்டு மண்டபம் செல்ல செல்ல ஒரு இனம் புரியாத தயக்கம் ... பேசாமல் அப்படியே போய் விடலாம் போல் இருக்கிறது ... நண்பர்கள் எல்லாரும் சந்தோஷமாய் பேசிக் கொண்டு வர நான் எனக்கு நானே பேசிக் கொண்டு வரேன் ... மேக்கப் போட்டு கொண்டிருந்தாள் அம்மு , எங்களை பார்த்ததும் ரூமுக்குள் அழைத்தாள் ... என் பயம் , நான் கற்பனை செயத்தது , யூகித்தது எல்லாம் ஒரே நொடியில் சுக்கு நூறானது ... கை குலுக்கினாள் , கண்ணுக்கு கண் பார்த்து பேசினாள் , நெருங்கிய நண்பன் என்று அருகில் இருந்த சொந்தங்களிடம் அறிமுகம் செயதாள் , வாய்விட்டு சிரிக்கிறாள் ... மொத்தத்தில் நான் செய்ய முடியாத . இயலாத அத்தனையும் செய்கிறாள் ... எல்லவற்றையும் மறந்துவிட்டாளா ??? இல்லை வெளியே நடிக்கிறாளா ?? கேள்வி முடியும் முன்னரே அந்த அறைவிட்டு வந்துட்டேன் ....

மேள தாளங்கள் முழங்கிக் கொண்டு இருக்கின்றன ... சிறு பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன ... பெண்களை தேடி ஒரு கூட்டம் ... தலை காட்டி விட்டு செல்லலாம்னு வந்திருக்கிற சில சொந்தகாரர்கள் ... பழைய நண்பர்களை பார்த்த சந்தோஷத்தில் எல்லாரும் குஷியாக பேசிக் கொண்டிருந்தார்கள் ... ஆனால் எனக்குள்ளே தான் எத்துனை எத்துனை கேள்விகள் ... நான் அன்று எடுத்த முடிவு தவறோ ... அது நன்றாக யோசித்து தான் எடுத்தது ... ஆனாலும் அது தவறோ என்ற கேள்வியும் எங்கோ இன்னுமும் இருக்கிறது ...

ஒரே காதல் தான் என்று நான் நினைப்பது யதார்தத்தில் உண்மையில்லையோ !!! ...

அப்படி அவளுக்கு என் மேல் இருந்தது உண்மையான காதல் என்றால் இப்படி வேறோருவனுக்கு மனைவியாக சம்மதிப்பாளா ???

இது என்ன கொடுமை நான் முடியாது என்றால் அவள் வேறு யாரையும் கல்யாணம் பன்னக் கூடாதா ???

ஒரு வேளை நான் தான் முட்டாள்த்தனமாக இருக்கிறேனோ இல்லை இந்த உலகம் தான் முட்டாள்த்தனமாக காமத்தை காதல் என்று பெயர் வைத்து கொண்டாடுகிறதோ ????

இல்லை இல்லை நான் சரியாகத்தான் முடிவெடுத்தேன் , அவளின் அழகை பார்த்து தானே பழக நினைத்து அது காதலாக ஆனது , ஒரு வேளை நாளை அவள் குண்டாகி அசிங்கமாகி விட்டாள் காதல் அழிவயவும் கூட செய்யலாம் இல்லையா ???

என்னுடைய கல்யாணத்தை பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை , ஒரு வேளை கல்யாணம் செய்தால் , நானும் கீதா அல்லாத ஒருத்தியை மணந்து தானே ஆக வேண்டும் ?? ...

எப்படியும் அப்போது நானும் ஒரு அழகான பெண்ணை தானே எதிர் பார்பேன் !! பின் ஏன் அழகை பார்த்து வரும் காதல் மட்டும் உண்மையில்லை என்று நான் சொல்வது ???

அப்படியானால் நான் அன்றே ப்ரியாவின் காதலை ஏற்றிருக்கலாமே ???

நீ யோசிக்கும் நேரம் இதுவல்ல என்று சொல்வது போல் ஒரு பெண் மஞ்சரிசி கொண்டு வந்து நீட்டினாள் ... நினனைப்பை எங்கோ வைத்துகொண்டு கொஞ்சம் அரிசியை எடுத்துகிட்டேன் ... இப்போது இரண்டு கேள்விகள் கடையாய் என்னை நானே கேட்டுகிறேன் ...

கீதா என்ன செய்வாள் ?? அவளும் ஒருநாள் இப்படித்தான் மணக்கோலம் கொள்ளுவாளோ ???

ப்ரியாவின் வாழ்க்கையில் ஒரே அப்பு தானா வேறு சில அப்புகளும் இருந்திருக்க ஏன் வாய்ப்பில்லை ???

கெட்டி மேளம் கொட்டியது ... ப்ரியாவின் கழுத்தில் தாலி மெல்ல மெல்ல ஏறிக்கொண்டு இருந்தது ... அவள் கண்களில் கண்ணீர் குளமாய் நிரம்பியிருந்தது ... இதுவும் என்னை நினைத்து தான் என்று கண்டிப்பாக நினைக்க மாட்டேன் , நிச்சயமாக வாய்ப்பும் இல்லை ... ஏனோ அரிசியை அவள் மேல் தூவ மனம் வரவில்லை ... தாலிக் கயிரையும் அவள் கழுத்தில் பார்ப்பதுக்கு இஷ்டமுமில்லை ...

அப்படியே அரிசியை கொண்டு போய் ஜன்னலில் கொட்டி வைக்க போனால் அங்கே ஏற்கனவே கொஞ்சம் அரிசி கொட்டி வைக்கப்பட்டிருந்தது !!!!!!

[center][b]


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக