புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
29 Posts - 60%
heezulia
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
194 Posts - 73%
heezulia
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
8 Posts - 3%
prajai
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_m10மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 8:07 am

மண்ணுளி பாம்பை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த 14 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஆந்திராவில் இருந்து

கன்னியாகுமரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மண்ணுளி பாம்பு பதுக்கி வைக்கப்பட்டு லட்சக்கணக்கான பணத்திற்கு விற்பனை செய்வதாக கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கறுப்பு நிற பையில் 10 அடி நீள மண்ணுளி பாம்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

14 பேர் சிக்கினர்

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. புதுக்கோட்டை காரைïரை சேர்ந்த பாரதி என்ற பாரதிதாசன் (வயது 26), மதுரை கீளவளவூரை சேர்ந்த மாரிமுத்து (28), சிக்கந்தர் (48) ஆகியோர் ஆந்திராவில் இருந்து கன்னியாகுமரிக்கு சொகுசு காரில் மண்ணுளி பாம்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்காக கொண்டு வந்ததும், அது விற்பனையாகாததால் சுனாமிகுடியிருப்பு கிளாரஸ் நகரை சேர்ந்த நிக்கோலா ரிஸ்கோ என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து ஏலம் போட்டு வந்ததும் தெரியவந்தது.

இதை விற்பனை செய்ய 11 பேர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

அவர்கள் 14 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்த மண்ணுளி பாம்பையும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரொக்கபணம், 4 சொகுசு கார், 8 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

வனத்துறையிடம் ஒப்படைப்பு

இது குறித்து மேல் விசாரணைக்காக 14 பேரையும் வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அந்த மண்ணுளி பாம்பையும் வனத்துறையிடம் போலீசார் கொடுத்தனர். இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினதந்தி



மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 29, 2011 10:30 am

இத வச்சு என்ன பண்ணுவாங்க ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 10:36 am

மரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ளி பாம்பு

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த பாம்பை பல வடநாடுகளில உணவுக்கும், சூப்பாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

பாம்பு இனத்தில் சுமார் 300 வகைகள் இருப்பதாகவும், நம் இந்தியாவில் 200 வகையான பாம்புகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம், கட்டுவீரியன், கொம்பேறி மூக்கன் பல்வேறு பாம்புகளும் உண்டு.

இதே இனத்திலுள்ள ராஜநாகம் வகை பாம்புகளில் விலைமதிக்க முடியாத முத்துகளும் உண்டு. இந்த முத்துகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆங்கங்கே நடைபெற்று வருகின்றன. கொடூர விஷத்தன்மை கொண்ட பாம்புகளை பிடித்து விஷம் எடுத்து மருத்துவத்துக்கு பயன்படுத்துவதும் நாம் அறிந்ததே.

தற்போது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருதலைமணியன் என்று கூறப்படும் மண்ணுள்ளி பாம்புக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த மண்ணுளி பாம்பு மண்புழு வகையை சார்ந்தது. மண்ணுக்குள்ளேயே வாழ்ந்து அதனுள்ளேயே உணவை தேடிக் கொள்வதால் மண் உள்ளேயிருக்கும் பாம்பு என அழைக்கப்பட்டு மண்ணுளி பாம்பு என்ற பேச்சு வழக்கத்திற்கு வந்தது வேறு விசயம்.

இருதலை மணியன் என்றழைக்கப்படும் இந்த மண்ணுளி பாம்புக்கு கடிக்கும் தன்மை கிடையாது. நாக்கினால் நக்கும் தன்மை உண்டு. அப்படி நம் மீது அதன் எச்சில் பட்டால் தோலில் அலர்ஜி ஏற்பட்டு ஆங்கங்கே தடிப்பு, தடிப்பாய் ஏற்பட்டு மாற்றம் ஏற்படும்.

கடந்த ஆண்டுவரை இந்த பாம்பை யாரும் சீண்டியதாக தகவல் இல்லை. ஆனால் சமீபகாலமாக தமிழகமெங்கும் தீவிரவாதிகளை சல்லடைபோட்டு தேடும் போலீசார் போல இந்த பாம்புக்காக தமிழகமெங்கும் புரோக்கர்கள் கும்பல் கும்பலாக தமிழகமெங்கும் கிராமம் கிராமமாக போய் படையெடுத்து மண்ணுளி பாம்பை பிடித்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்ணையும், பொன்னையும் தேடி மக்கள் அலையும் இந்தக் காலத்தில், மண்ணுள்ளி பாம்புக்கு வந்த திடீர் கிராக்கிக்கு என்ன காரணம்...

இந்த வகை பாம்புகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கிடைப்பதுதான் முக்கிய காரணம். இந்த பாம்பை வீட்டில் வளர்த்தால் வாஸ்து-சாஸ்திரப்படி ராசி என்றும், இந்தபாம்பு இருக்கும் வீட்டில் மகாலெட்சுமி கடாட்சம் பெருகும் என்றும் அதற்காகத்தான் தொழிலதிபர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 6 மாதமாக மண்ணுளி பாம்பை கடத்தியவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வனத்துறை பணம், பாம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தது.

இதுகுறித்து விசாரிக்க நாம் களத்தில் குதித்தோம்....இதுபற்றி பெயர் கூறவிரும்பாத சிலர் கூறியதாவது..

இந்த மண்ணுளி பாம்பு வாஸ்து படி ராசியான பாம்புதான். இந்த பாம்பு பரவலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள விளைநிலங்கள், தரிசு நிலங்களிலும், அதிகம் கிடைக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், திசையன்விளை, மாறந்தை, விகேபுரம், பாபநாசம், சுரண்டை, வாசுதேவநல்லூர், குற்றாலம், வள்ளியூர், ராதாபுரம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், தெய்வ செயல்புரம், வல்லநாடு மற்றும் தேரிக்காட்டு பகுதிகளிலும் இந்த பாம்பை பெரிய கும்பல் வேட்டையாடி வருகின்றன.

ஆனால் அப்பாவிகள் சிலர் சில ஆயிரங்களுக்காக பாம்பு வேட்டையில் ஈடுபட்டு வனத்துறையிடம் மாட்டுவது, வாடிக்கையாகி வருகிறது. மேலும் பாம்பு கடத்தல் புரோக்கர்களோடு வனத்துரையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் கூட்டு சேர்ந்து இந்த வேட்டையில் ஈடுபட்டு வசூலில் கள்ளா கட்டி வருகின்றனர்.

மண்ணுளி பாம்புக்கு எடைக்கு தகுந்தாற்போல் பணம் கொடுக்கின்றனர். ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள பாம்புகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கொடுக்கின்றனர்.

ஆனால் இந்த பாம்புகளை மொத்தமாக வாங்கும் சென்னையை சேர்ந்த ஒரு புள்ளிக்கு புரோக்கர்கள் ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரையும் அதற்கும் மேலும் விற்பனை செய்து விடுகின்றனர். இதனை வாங்கும் அந்த சென்னை புள்ளி அதை வேறு ஒருவருக்கு விற்பனை செய்கிறாராம். அந்த பாம்பு கிடந்த மண் சுமார் 10 கிலோ வரை தேவையாம். அப்போதுதான் மாற்று பகுதியில் கொண்டு விட்டாலும் அந்த பாம்பு உயிருடன் எடை குறையாமல் இருக்குமாம்.

சென்னையைச் சேர்ந்த அந்த நபர் ஒரு மருத்துவராம். இந்த பாம்பு மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுவதாகவும், இந்த பாம்பின் உடலில் ஒரு மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு மருந்து தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டாலும், சிலர் ரகசியமாக கூறியது உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ்கும், கேன்சருக்கும்தான் இந்த பாம்பு அதிமகாக பயன்படுகிறாதாம்.

அது எப்படி என்று நாம் ஆர்வத்தோடு கேட்டோம். மண்ணுளி பாம்பின் உடலில் ஏராளமான வெள்ளை அணுக்கள் உண்டு. இந்த வெள்ளை அணுக்கள்தான் மனிதனுக்கு தேவைப்படுகிறதாம். காரணம், வெள்ளை அணுக்கள்தான் நோய் எதிர்ப்பை தரக் கூடியவை. இது குறைந்தால்தான் உடலில் நோய்கள் ஏற்படும்.

எய்ட்ஸ் நோய், கேன்சர் ஆகிய நோய் தாக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை அணுக்கள் செயல்பாடு குறைந்து விடுவதால் மரணத்தை நோக்கி தள்ளப்பட்டு விடுகின்றனர். அவர்களை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியான வெள்ளை அணுக்கள் தேவை.

அந்த வெள்ளை அணுக்கள் மண்ணுளி பாம்புக்கு அதிகம் இருப்பதால்தான் அதனை தேடி பலர் இன்று படையெடுக்க முக்கிய காரணம் என்கிறார்கள்.

எய்ட்ஸ், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் பணத்தை பற்றி கவலைப்படுவது கிடையாது. உயிர் மேல்தான் பயம் இருக்கும். அதற்கு எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்வதால்தான் நேற்று வரை அறுவெறுப்புடன் நாம் ஓதுக்கி தள்ளிய இருதலை மணியன் பாம்புக்கு இன்று கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்றனர்.

மண்ணுளி பாம்பின் உடலிலிருந்து எடுக்கப்படும் வெள்ளை அணுக்கள் மனிதனுக்கு செயல்படுத்துவது சாத்தியமா என்று மருத்துவர்களிடம் விசாரித்தோம்.

அதெல்லாம் கப்சா...

இதுகுறித்து (ஐஎம்ஏ) இந்திய மருத்துவர்கள் சங்க குற்றால கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏசி குமார் கூறுகையில்,

எய்ட்ஸ் மற்றும் கேன்சருக்கு இதுவரை உரிய மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. அதற்கான ஆய்வுகள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மண்ணுளி பாம்பிலிருந்து வெள்ளை அணுக்கள் எடுக்கப்பட்டு எய்ட்ஸ், கேன்சர் தாக்கியவர்களுக்கு செலுத்தப்படுவதாக கூறுவது பொய்யான சேதி.

கொடிய விஷ பாம்புகளிலிருந்து கொடிய விஷ முறிவு மருந்துகள் எடுக்கப்பட்டு அதனை ஆய்வு முலம் பரிசோதித்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மண்ணுளி பாம்பின் வெள்ளை அணுக்கள் ஆய்வு குறித்து இதுவரை உறுதியான செய்தி மருத்துவ துறையில் இருந்து வெளியாகவில்லை.

ஏற்கனவே கடல் ஆமைகளில் ஒரு வகை ஆமைகளை விரும்பி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்று ஒரு வதந்தி பரவியது. அதுபோல் இதுவும் இருக்கிறது.

கருப்பை வழியாக சென்று பெண்களை தாக்கும் தாக்கும்
HBV என்ற வகை புற்றுநோய் அணுக்கள் குறித்தும், ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் என நோய் கண்டறிந்தவர்களுக்கே 2008ம் ஆண்டுதான் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு நோய்க்கும் இதுவரை எந்த முழுமையான மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அப்பாவி மக்களை ஏமாற்றிட மண்ணுளி பாம்பு அணுக்கள் மூலம் இந்த நோய்களை குணப்படுத்திடலாம் என்று வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாந்துவிட கூடாது என்றார். - தட்ஸ்தமிழ்



மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 10:38 am

வயாக்ராவை விட ம்ம்ம்ம்.... 3 கிலோ மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம்

நாகர்கோவில் : ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 கிலோ மண்ணுளி பாம்பை ஸீ20 லட்சத்துக்கு விற்க பேரம் பேசிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரியில் ஒரு கும்பல் மண்ணுளி பாம்பை விற்பனை செய்வதற்காக வந்து தங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது,

காரில் மண்ணுளி பாம்பு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பாம்பை போலீசார் கைப்பற்றினர். 2 கார்களில் இருந்த 13 பேரை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். கைதானவர்கள் கன்னியாகுமரி, காவல்கிணறு, சிவகங்கை, மதுரை, குழித்துறை, புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். புரோக்கர்கள் மூலம் இவர்கள் கன்னியாகுமரியில் கூடி, மண்ணுளி பாம்பை விற்க முயற்சித்தது தெரியவந்தது. பிடிபட்ட பாம்பையும், கைதான 13 பேரையும் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்: பிடிபட்ட மண்ணுளி பாம்பு ஆந்திர மாநிலம் விசாகபட்டணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால், எளிதில் விற்பனை செய்து விடலாம் என்பதற்காக இவர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். அங்குள்ள லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் போல் தங்கி இருக்கிறார்கள்.

முதலில் ரூ.5 லட்சத்துக்கு விலை பேசப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாம்பை விற்க காரில் கொண்டு வந்தபோது சிக்கினர். மருந்துக்காகவும், வயாக்ரா வகைக்கு பயன்படுத்தவும் விற்பனை செய்வோம் என பிடிபட்டவர்கள் கூறியுள்ளனர்.

மாவட்ட வனத்துறை அதிகாரி ரிட்டோ சிரியாக் பிடிபட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தினார்.



மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Sep 29, 2011 1:07 pm

இந்தியாவில் அறிவுக்குப் பஞ்சமே இல்லை ; ஆனா பயபுள்ளைக நல்லவழியில் பயன்படுத்த 'மாட்டுதுக..!'



மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் 0018-2மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் 0001-3மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் 0010-3மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் 0001-3
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 29, 2011 2:21 pm

என்ன மனிதர்களோ...அவைகள் அதன் வழியில் சென்று கொண்டு இருக்கும்...அதை பிடித்து இப்படி சாகடித்து மருந்து, வாஸ்த்து அப்படி இப்படின்னு சாகடிக்கணும்....
இந்த மாதிரி வேட்டை யாடி அதன் பாவத்தை ஏற்றுக்கொள்கின்றனர்....
பாவம் அந்த பாம்புகள்.... சோகம்
மண்ணுலி பாம்பையும் மண்ணின் உள் சென்று திருடும் கயவர்கள்....
சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Sep 29, 2011 3:23 pm

பகிர்தமைக்கு மிகவும் நன்றி :வணக்கம்:



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் 1357389மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் 59010615மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Images3ijfமண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக