புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_m10நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 10:30 pm

அகிலம் அனைத்தையும் படைத்தவளும், அதை ரட்சிப்பவளும் சாட்சாத் அந்த ஆதிபராசக்தியே ! பொற்கரங்கள் பதினெட்டும், ஒளி வீசும் திருமுகமும் துலங்க, எல்லோருடைய அதிதேவதையாகவும் திகழும் அந்த துர்காதேவியே மகிஷாசுரமர்த்தினியாகவும் சண்டிகாவாகவும்... இன்னும் பற்பல திருநாமங்களில்- திருவடிவங்களில்.. நம்மைக் காக்க அவதாரம் எடுத்து வந்தாள் என்கின்றன புராணங்கள். பரசுராமர், ஸ்ரீராமர், கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களே துர்காதேவியை வழிபட்டு, தேவி வழிபாட்டின் சிறப்பை நமக்குத் தெரியப்படுத்தி உள்ளனர். வரமுனி என்றொரு முனிவர் இருந்தார். மிதமிஞ்சிய அவரது கர்வத்தின் காரணமாக, கடும் சாபம் பெற்றார். அதன் விளைவு, முனிவர் மகிஷனாக மாறினார். தேவலோகத்தை இன்னல்கள் சூழ ஆரம்பித்தது. இந்திரன் முதலான தேவர்களை பலவாறு துன்புறுத்திய மகிஷன், அவர்களை விரட்டியடித்துவிட்டு தேவ லோகத்தைக் கைப்பற்றினான்.

பரிதவித்துப்போன இந்திரன், பிரம்மதேவரை சந்தித்தான். அவருடன் சென்று சிவனாரிடமும் மகாவிஷ்ணுவிடமும் சரணடைந்தான். மும்மூர்த்தியரின் சக்திகளும் ஒன்றுகூடி உருவானவளே துர்கை. தனது திருக்கரங்களில்...ஈசனின் சூலம், விஷ்ணுவின் சக்ராயுதம், பிரம்மனின் கமண்டலம், இந்திரனின் வஜ்ராயுதம், அக்னி-வருணன் ஆகியோரின் சக்தி, வாயு பகவானின் வில், ஐராவதத்தின் மணி, எமதருமனின் தண்டம், நிருதி தேவனின் பாசம், காலனின் கத்தி-கேடயம் ஆகியவற்றை ஏந்தி நின்றாள் தேவி. அத்துடன், சமுத்திர தேவன் தாமரை மலரையும், குபேரன் பாணங்கள் நிறைந்த பாத்திரத்தையும், ஹிமவான் சக்தி மிக்க சிம்மத்தை வாகனமாகவும், சூரிய தேவன் தேக காந்தியையும், இன்னும் பிற தேவர்கள் பல்வேறு ஆடை-ஆபரணங்களையும் அளித்ததால், சர்வலங்கார பூஷணியாக திகழ்ந்தாள் ஸ்ரீதுர்கா.

மகிஷாசுரன் பெற்றிருந்த வரத்தின்படி, அந்த அசுரன் எந்தப் பெண்ணை மோகிக்கிறானோ, அவளால்தான் அவனுக்கு மரணம் நிகழும். துர்காதேவி அசுரனைத் தேடி அவனது இருப்பிடத்துக்குச் சென்றாள். அவளது அழகைக் கண்டு மோகித்தான் மகிஷன்; தன்னை மணக்கும்படி வேண்டினான். யுத்தத்தில் என்னை ஜெயித்தால், உன்னை மணக்கிறேன் என நிபந்தனை விதித்தாள் தேவி. யுத்தம் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நிகழ்ந்த யுத்தத்தின் முடிவில், மகிஷாசுரன் கொல்லப்பட்டான். தேவர்களும் ரிஷிகளும் அம்பிகையின் மீது பூமாரி பொழிந்தனர். மகிஷனின் தலையின் மீது ஏறி நின்று, மகிஷனாக வந்த வர முனிக்கும், தேவர்களுக்கும் திருவருள் புரிந்தாள் தேவி. தேவி துர்கையின் வெற்றியைக் கொண்டாடிய திருநாளே விஜயதசமி. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய துர்கையின் மகாத்மியத்தைப் போற்றுவதே நவராத்திரி வைபவம். முதல் மூன்று நாட்கள் துர்காதேவியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவார்கள். புரட்டாசி மாதம், வளர்பிறை பிரதமை துவங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. கடைசி (10-வது) நாள் விஜயதசமி! இந்த நிகழ்வுகளையெல்லாம் பொம்மைகளாக வைத்து சித்திரிப்பதே கொலு வைபவமாகப் பரிணமித்தது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 10:32 pm

நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? TN_110924114017000000

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகைக்கு உரியவை. முதல்நாளில், அவளை சாமுண்டியாக அலங்கரித்து வழிபட வேண்டும். முண்டன் என்னும் அசுரனை சம்ஹரித்தவள் இவள். சாமுண்டா என்றும் இவளை அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. கோபம் இல்லாத அரசனிடம் குடிமக்கள் அஞ்சமாட்டார்கள். மன்னனிடம் மக்கள் பயப்படவில்லை எனில் அவனால் நீதியை காப்பாற்ற முடியாது. எனவே, நீதியை காக்க இவள் கோபமாக இருக்கிறாள். இவளை "ராஜராஜேஸ்வரி என்றும் அழைப்பர். ராஜராஜனான சிவபெருமானுக்கே தலைவியாக இருந்து நம்மை பரிபாலிப்பவள் அம்பிகை. அதனால் தான் அவளுக்கு "ராஜராஜேஸ்வரி என்ற திருநாமம் உண்டானது. அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம் என்றால் "உலகம். "சரம் என்றால் "அசைகின்ற பொருட்கள். "அசரம் என்றால் "அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துகிறாள். தவறு செய்யும் போது மகாராணியைப் போல் கண்டிக்கிறாள். அதே சமயத்தில் தன் குழந்தைகளின் மீது பரம காருண்யத்தோடு பேரருளையும் பொழிகிறாள். நவராத்திரி முதல் நாளான நாளை, ராஜ ராஜேஸ்வரியை பக்தியோடு பூஜித்து மகிழ்வோம். நாளைய நைவேத்யம்சர்க்கரைப் பொங்கல் பாட வேண்டிய பாடல் அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே ஆலவாய் ÷க்ஷத்திர ஒளியே உமையே வருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனிநீயே வைகைத் தலைவியே சரணம் தாயே.

நவராத்திரி நாமாவளி

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

துர்க்கா தேவி

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

ஸ்ரீசரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம.
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

ஸ்ரீசரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 10:37 pm

அம்மா ஒரு பின்னூட்டத்தில் நான் கேட்டு இருந்தேன் நவராத்திரி ஏன் கொண்டாடுகிறார்கள் என்று,நீங்களும் அதைப் பற்றி விரிவாக தனிப் பதிவு செய்கிறேன் என்று சொல்லி இருந்தீங்க,சொன்னது போல் தனிப் பதிவு.நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 224747944 நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 2825183110 நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196 நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196 நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196

மிக்க மகிழ்ச்சி அம்மா.நன்றி (சொன்னதைச் செய்யும் எங்கள் அம்மா) நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642 நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642 நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 10:39 pm

உங்களுக்காக த்தான் போட்டேன் கிச்சா , தனி மடலும் அனுப்பி இருக்கேன் பாருங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 10:40 pm

நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 10:42 pm

நான் கஷ்டப்பட்டு அடிக்க வேண்டாம் என்று தினமலரில் போட்டுவிட்டார்கள் கிச்சா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி என் வேலை சுலபம் ஆகிவிட்டது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 10:44 pm

ஒரு வருடம் கெடாத தேங்காய்

நவராத்திரி சமயத்தில் நெமிலி திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமலிருக்கும். அந்தத் தேங்காயை மறுவருட நவராத்திரியின்போது உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.

அம்பிகையின் வாகனத்திற்கு தேங்காய் நீர்

மும்பை மும்பாதேவி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள் அம்பிகை. இங்கே நவராத்திரி ஒன்பது நாட்களும் தேங்காய் உடைத்து அதன் நீரை அம்பிகையின் வாகனத்தில் ஊற்றி விடுகின்றனர். நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோமத்தின் சாம்பலை புருவத்தில் பூசிக் கொள்கின்றனர்.

வளையல் அணியும் சரஸ்வதி

நாகை மாவட்டம் கடலங்குடி சிவாலயத்தில் சரஸ்வதி வளையல்கள், கொலுசுகள், முத்துச்சரங்கள், நெற்றிப்பட்டம், கிரீடம் ஆகியவற்றுடன் சகல ஆபரண பூஷணியாகக் காட்சியளிக்கிறாள்.

கலஞ்சன்

இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்து பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்பூஜைக்கு கலஞ்சன் என்று பெயர். விஜயதசமி நாளில் பாலித்தீவில் தம்பாத்ஸைரிம் என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள்.

மாணவி வடிவில் சரஸ்வதி!

சிருங்கேரியில் ஆதிசங்கரர் சாரதாம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இங்கு தற்போதும் தேவி ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். கைகளில் சுவடி, ஜபமாலை, கெண்டி, ஞானமுத்திரை கொண்டு சர்வ ஆபரணங்களுடன் பத்மாசனத்தில் காட்சி தருகிறார். இங்கு சாரதா நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

லட்சுமியின் வாகனம் ஆந்தை

வங்க தேசத்தில் லட்சுமியின் வாகனமாக ஆந்தையைப் போற்றி வழிபடுகின்றனர். நவராத்திரி நாட்களில் தங்களது வீட்டு மேற்கூரையில் ஆந்தை அமர்வது அதிர்ஷ்டம் என்கின்றனர். ஆந்தை குரல் எழுப்பினால் சுபகாரியங்களுக்கு திருமகள் சம்மதம் தெரிவித்து விட்டதாக நம்புகின்றனர்.

பூஜிக்க உகந்த நேரம்...

நவராத்திரி நான்கு வகைப்படும். பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி, ஸ்ரீராமநவமி வரை நடைபெறுவது வசந்த நவராத்திரி. மாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்குவது ராஜமாதங்கி நவராத்திரி. ஆடி அமாவாசைக்கு மறுநாள் துவங்குவது மகா வராஹி நவராத்திரி. புரட்டாசி வளர்பிறையில் துவங்கி அனுஷ்டிப்பது சாரதா நவராத்திரி! இந்த வருடம், வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி, புதன்கிழமை (புரட்டாசி - 11) அன்று நவராத்திரி ஆரம்பம். அக்டோபர் 5-ஆம் தேதி புதன்கிழமையன்று (புரட்டாசி - 18) சரஸ்வதி பூஜை. அன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணிக்குள் ஏடு அடுக்கி, சரஸ்வதிதேவியை பூஜித்து வழிபடுவது உத்தமம்.

ஏடு பிரிக்கும் நேரம்: மறுநாள் அக்டோபர் 6-ஆம் தேதி, வியாழன் அன்று (புரட்டாசி-19) விஜயதசமி. அன்றைய தினம், காலை 7.00 மணிக்குமேல் பூஜித்து, ஏடு பிரிக்கலாம். விஜயதசமிக்கு மறுநாள் கொலுவை எடுத்து வைப்பது வழக்கம். இந்த முறை வெள்ளிக்கிழமை என்பதால், இரண்டு பொம்மைகளை அப்படியே சாய்த்து வைத்துவிட்டு, மறுநாள் (சனிக்கிழமை) பொம்மைகளை எடுத்து வைக்கவேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 10:46 pm

ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரியும் பெருமாள்!

உப்பிலியப்பன் கோயிலில் பெருமாள் தாயாரை விட்டு எங்கும் பிரிவதில்லை. எல்லா விழாக்களிலும் சேர்ந்தே காட்சி தருவாராம். ஆனால் நவராத்திரி அம்பு போடும் வைபவத்தின்போது ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரிந்து தனியே இருப்பாராம்.

வந்தாள்... மகாலட்சுமியே....

மகா என்ற சிறப்பான அடைமொழி லட்சுமிக்கு, மேலும் பெருமையைத் தருகிறது. லட்சுமி என்ற சொல்லுக்கு அழகு, செல்வம், அன்பு, அமைதி, அறிவு, கருணை, இன்பம், நோயற்ற வாழ்வு, பொருள், வெற்றி என்றெல்லாம் அர்த்தங்கள் இருப்பதாக ஞான நூல்கள் கூறுகின்றன. லட்சுமியை வழிபட்டால் பதினாறு பேறுகள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கீர்த்தி, வீரம், வெற்றி, சந்தானம், மேதை, கல்வி, துஷ்டி, ஞானம், சக்தி, சாந்தி, சாம்ராஜ்யம், ஆரோக்கியம், மோட்சம், செல்வம் என்பவையாகும். சாந்த குணம் கொண்ட லட்சுமி, ஒருமுறை அசுரன் ஒருவனை வதம் செய்யும்படி நேரிட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயிலிருந்து சுமார் இருநூறு கி.மீ. தொலைவில் உள்ளது கோலாப்பூர். இத்தலத்தில் அசுரன் கோலா என்பவனை சிம்மவாகினியாக வந்து லட்சுமி அழித்தாள். எனவே, இத்தலம் கோலாப்பூர் எனப்பட்டது.

ஒரிசாவில் காமகலா பீடேஸ்வரி என்னுமிடத்தில் சந்தான லட்சுமியாகவும், பீகாரில் சித்தேஸ்வரி வடிவில் சித்த லட்சுமியாகவும், அஸ்ஸாம் மாநிலத்தில் ஆதிலட்சுமி என்ற பெயரிலும், திரிபுராவில் சௌம்ய லட்சுமியாகவும், உத்தரப் பிரதேச காசி மாநகரில் அன்னபூரணியாகவும், மத்தியப் பிரதேசத்தில் யோக லட்சுமியாகவும், நாகாலாந்தில் நாகலட்சுமியாகவும், அரியானா மாநிலத்திலும் பஞ்சாபிலும் சண்டியின் வடிவமாக தைரிய லட்சுமியாகவும், இமாசலப் பிரதேசத்தில் வைஷ்ணவிதேவி ரூபமாகவும், ராஜஸ்தானில் மகாகாளியின் வடிவமான தான்ய லட்சுமியாகவும் போற்றப்படுகிறாள். குஜராத்தில் லட்சுமி பூஜை மிகவும் பிரபலமானது மட்டுமல்ல. வித்தியாசமானதும்கூட! லட்சுமியின் கையில் வீணை இருக்கும். அங்கு ஸ்வஸ்திக் திருவுருவை சக்கரம் போல் பாவித்து அதற்குரிய மந்திரம் சொல்லி லட்சுமியாக வழிபடுகிறார்கள்.

தாமரை மலரில் அமர்ந்திருக்கும் லட்சுமியின் வாகனம் முதலை என்று சொல்லப்பட்டாலும், வங்காளிகள் ஆந்தையை லட்சுமியின் வாகனமாகப் போற்றுகிறார்கள். மகாராஷ்டிராவில் விவசாயிகள் லட்சுமியைப் பயிர் வளத்தைச் செழிக்க வைக்கும் தெய்வமாக வழிபடுகிறார்கள். தமிழகத்தில் லட்சுமியை ஆவணி மாதத்தில் வளம்தரும் வரலட்சுமியாக பூஜிக்கிறார்கள். ஆந்திர மாநிலத்திலும் ஆவணியில் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், கர்நாடகாவிலும் கேரளாவிலும் மகாலட்சுமி வழிபாடு மிகவும் போற்றப்படுகிறது. நவராத்திரி காலங்களில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி, ஆகிய முப்பெரும் தேவியர்களை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களில் வசிப்பவர்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது யாவரும் அறிந்ததே! லட்சுமிதேவியை வழிபட்டால் செல்வ வளம் சேரும்; புகழ் கிட்டும்; வளமான வாழ்வு நிரந்தரம் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஷரத் பூர்ணிமா!

தமிழகத்தில் வீரம், செல்வம், கல்வி வரம் தரும் முப்பெருந்தேவியரை நவராத்திரியில் வழிபடுகிறார்கள். வங்காளத்தில் தேவி பூஜை விசேஷம். பெரிய பெரிய காளி விக்கிரகங்களைச் செய்து வைத்து வழிபட்டு, விஜயதசமி தினத்தன்று அவற்றை நீரில் கரைப்பார்கள். வெளி மாகாணங்களில் வசிக்கும் வங்காளிகளும், காலி பாரி என்பது போன்ற சங்கங்களை அமைத்து 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். பந்தல் அலங்காரத்தில் போட்டிகள் வைத்து, மிகச் சிறந்தவற்றுக்கு பரிசுகளும் வழங்குவார்கள். தொடர்ந்து வரும் பவுர்ணமியை ஷரத் பூர்ணிமா என்பர். இந்த நாள் வரையிலும் நண்பர்களுக்கு இனிப்புகள், மிஷ்டி எனப்படும் பால் பாயசம் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் செய்யப்பட்ட ஜாமூன்களை விநியோகித்து மகிழ்வார்கள்.

குஜராத்தில்... இரவு நேரங்களில் பெண்கள் கூடி, கர்பா மற்றும் தாண்டியா நடனங்கள் ஆடுவார்கள். மலர்களாலும் வெற்றிலையாலும் அலங்கரிக்கப்பட்ட குடத்தின்மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் கும்மியடித்து ஆடுவது கர்பா; தாண்டியா என்பது நம்மூர் கோலாட்டம் போன்றது. பஞ்சாபிலும் தேவியை பூஜித்து பஜனை மற்றும் ஜாகரணை (இரவு கண் விழித்தல்) செய்து வழிபடுவர். மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் விஜயதசமி... ராவணனை வென்று ஸ்ரீராமன் வெற்றி சூடிய நாளாகக் கொண்டாடப் படுகிறது. அன்றைக்கு ஸ்ரீராம் லீலா வைபவம் சிறப்பாக நடைபெறும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 11:17 pm

எங்களுக்காக அழகாக இத்தனை பெரிய கட்டுரையை, விபரங்களை பகிர்வு செய்த உங்களுக்கு மிகப் பெரிய நன்றிகள் அம்மா நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 678642நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? 677196

அறியாத பல விஷயங்களை அறிந்து கொண்டேன் இந்தப் பதிவின் மூலம்,வாழ்த்துகள் நன்றிகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 11:44 pm

நன்றி கிச்சா புன்னகை நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக