புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தத்துவக் கவிதைகள் Poll_c10தத்துவக் கவிதைகள் Poll_m10தத்துவக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவக் கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 5:33 pm


தூக்கங்கள்


முன்னைக்காலத்தில்,
என் தூக்கங்கள்
இறுக்கமானவை,
சிலரது துக்கங்கள்போலவே.

கனவுகள் அங்கே
உருகிக்கொட்டா.
எனக்கு வெறும் இருட்டும்
பிறர்க்கு வெறுப்பு குறட்டையுமே.

எப்போதாவது
புணர்ந்தபின்,
புழுக்கை பொத்தென்று போட்டபின்,
பசித்த ஒற்றைப் பழுப்பு எலி மட்டும்
வால்நுனி சொடுக்கித் தட்டி
எனை எழுப்பி ஓடும்
என் நாட்டில் தூங்குகையில்,
-வான் குண்டுகள்,
கட்டியம் ஏற்கனவே சொல்லியிருக்காவிடின்.

ஆனாலும்,
குண்டுகள் மத்தியிலும்
தூங்கியிருந்திருக்கின்றேன்;
சொல்லப்போனால்,
குண்டுச்சத்தம் கேட்காமற்
தூக்கம் வராது கெட்ட சில
பிற்காலநாட்களும் உள.

இங்கேயோ,
எனது தூக்கங்கள்,
இளகியவை,
-மழை பட்டுக் கசிந்த ரொட்டித்துண்டுபோல,
மார்பு தொட்டுத்தூங்கும் மனையாளின்
நகவளைவு நெற்றியிலிடும் குளிர்முத்தம்போல....

மீமெய்யுந்தற்கனவுகள்
தூக்கத்தின் இருட்டறைக்
கதவுகள்,
சாளரங்களூடே
உருகிக் கொட்டும்,
வண்ணங்களில்.

நேற்றைய கனவில்,
மதகுருக்கள் உருகிப்போகக்கண்டேன்.
உருகிப்போனவர்களில் இருந்து,
உருட்டி எடுத்த பொருள்,
நிலத்தில்
ஆழப்புதைத்து,
மேலொரு சமாதி கட்டிவைத்தேன்.

இன்றைய கனவில்,
சமாதி உருகி,
இன்னொருமுறை, உருகிப்போனவர்கள்
உருப்பட்டு உருப்பெருத்தார்.
இன்றைக்கும் நான் விழிக்க,
உருகிச் சமாதிக்குட் பொருளாய்த்
திரும்பப்போனார்கள்,
மதகுருக்கள்.

நாளைக்குத் தூங்க
எண்ணம் ஏதுமில்லை
என்னகத்துள்ளே.

"மீமெய்யுந்தற் கனவுகள்,
என் தூக்கத்தைக் கெடுக்க வருகின்றனவா?
இல்லை,
என் துக்கத்தைத் தவிர்க்க வருகின்றனவா?"

யோசித்துக்கிடப்பேன்.

நாளைக்குத் தூங்க
எண்ணம் ஏதுமில்லை
என்னகத்துள்ளே.

ரசித்த கவிதைகள் - loga.tripod.com



தத்துவக் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 5:35 pm

முகவரி

முகவரிகளின் முக்கியத்துவம்
எனக்கொன்றும்
முழுமையாய்ப் புரிந்ததில்லை.

இருப்பு மட்டுமே
அர்த்தப்பட்டதென்பதாய்
அபிப்பிராயம்
இன்னுமுண்டு.

வார்த்தைகள் எனது
என்பதே என் குறி;
வரிகளின்
இருப்பிடமும்
அதன் முன்பின் தொங்கும்
வேற்றுமுகப்பதிவுகளுமல்ல.

அறிந்தவர்கள்
கூறட்டும்...
இடம்வலமாய்
எழுத்துக்களை இடம் நகர்த்துவதால்
அவற்றின் முக-வரிகள்
புது ஒழுக்கிற் பயணப்படுமா,
அல்லது,
வரிவடிவச்சூத்திரம் வளையாது
அமைவுத்தளம் மட்டும்
வேறாகுமா?

எனக்கேதும் தெளிவில்லை;

முகவரிகளின் முக்கியத்துவம்
எனக்கொன்றும்
முழுமையாய்ப் புரிந்ததில்லை.

அறிந்தவர்கள்
கூறட்டும்...
கருத்தின் இருப்பு
என்பதென்ன,
ஒரு திசைசார் காவிக்கணியமா?
தனக்கெனவொரு திசைசாரா
எண்ணிக்கணியமா?

முகவரிகளின் முக்கியத்துவம்
எனக்கொன்றும்
முழுமையாய்ப் புரிந்ததில்லை.

அறிந்தவர்கள்
கூறட்டும்...

அதுவரை காத்திருப்பேன்,
என் கருத்தெதுவும் மாற்றாது
அகலிகைக்கல்லாய்
நான்.

ரசித்த கவிதைகள் - loga.tripod.com



தத்துவக் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 5:36 pm

தொலைந்து போனவை

ஒற்றைத் துயர்
மட்டும்
உள்ளே,
செத்துப் போயினவே
கவிக்கருத்துயர்களென்று

தனிமைத்துயர் தோய்ந்த,
இறந்த
இனிமைக் காலத்துக்காய்
ஏக்கம் கொக்கியிட்டுத்
தூக்குண்டு
நான்.

தொலைந்து போயின
துயர்களுடன்,
என் உணர்வுகளும்
அவை உருக்கி எழுதிய
ஓவியங்களும்
கவிதைகளும்.

நேற்றைக் கவிதைகளின்
நேர்த்திகொள் உலைக்களங்கள்,
சிறுகல்லும்
எறிபட்டுக் கலங்கா
நித்திரைக் குளங்கள்,
இன்று.

சலனம் செத்த
மனதின் கண்கட்கு,
முன்னெறி பட்டுப் பரவியெறி
மோனத்தே வெறித்திருக்க
மட்டுமே
முழுமோகம்.

ஓர் இற்றைப் புத்தனின்
சத்தமற்ற சகப்பிறப்பில்
எழுத்தாணி தூக்க
ஏனோ
இயக்கமற்று,
சுத்தமாய்
சுருங்கிச் சுருண்டு
செத்தான்,
அற்றைச் சிறு கவிஞன்
ஒருவன்.


-இரமணிதரன், க.



தத்துவக் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 5:38 pm

நிலம் பட வாழ்.....

தொலைவின்
நெருப்பு மண்
நினைவு படும்.
இரவுகள் சுடும்,
எண்ணச்சுரப்புகள்
பொத்தற்படுத்தும்
நைந்த பஞ்சு நெஞ்சு.

நித்திரைமுன்
காற்றுவழிச் சேதிகள்
கட்டும்
கதையாய்க் கட்டிடங்கள்;
சுதை பூசி,
ஞாபகங்கள்;
சாளரங்கள்,
தவித்த முயற்குட்டி
ஆசைகள்.

இங்கே
தூசு தட்ட
அங்கது,
காற்றேகி
அழிந்திடலாமென்று
தொடவும் தயங்குவேன்
என் தீநிலத்து
நிழற்பட்ட நேரங்கள்.

அதில்,
அன்னை முடிக்கற்றை
இன்னும்
கறுத்திருக்கும்;

தம்பி,
தரைமூலையிற்
சுவர்தடவி தவழும்
சிறு குழவி.

நாய்கட்கும்
வயதேறாது;
புளியமரங்களோ,
பூவரசுகளோ,
பூப்பூப்பும் வற்றிப்
பட்டுப்போகாது.

நிலைபெயராது,
என் ஊர்ப்
பெயர்ந்த
கோவிற்காரைச்சுவர்வீழ்த்து
குறுக்குக் கறுப்பு நிழல் கூட,
பெருங்காற்றுக்கும்
என்னுள்ளே...

&&&&&&

காலவெளியில்,
கனவுக்குமிழ்படு
தூரச்சுமை
தோள்தாளா
நாளொன்றில்
மீளத்
தேடி நகர்ந்தேன்,
தீக்குழி குளி
என்
நீர்த்துளித் தேசம்.

&&&&&&

வெட்டி வீழ்ந்த
பூவரசுகளில்
புழுக்கள் ஊர,
பூச்சிகள்
நின்றென்னைப்
புதினம் பார்த்தன.
புளிய மரங்கள்
காற்றிலே
காலம்,
கால்சுற்றிக் கடக்க,
வேர்
கரைந்து போயின,
என் நாட்டு விழுமியங்கள் போல.

வேறு
நாய்கள்
புதுவேட்டைப்பற்களால்
முறைத்தன,
கண்கள்
தரையெல்லாம்
வெறி,
அவை தெறித்த
பரலதுவாய்
சிரித்துதிர்த்தி.

மூலைகள் வெறிச்சோட,
சுவர்கள் முகம்மூடியிருந்தன,
வேறு நிழற் படங்களால்.
தூக்கி வளர்த்தவன்,
தோள்மீறி உயர்ந்து
தோழன் ஆகி
நின்ற பருவம்.

கருமைத்தூறல்
விழுந்த கற்றைகளாய்
முகில் வற்றித்
தாய்த்தலைமுடி.

&&&&&&

ஆனாலும்,
கண்ட
எல்லோரும் சொன்னதென்னவோ,
-நான் மட்டும் மாறிப்போனேனாம்,
ஆள் கூட அடையாளம் தெரியாமல்.

&&&&&&

திசை திரும்பி
தொலைதேசம்
திரும்ப ஏகையிலே,
நான் மிதித்த
தாய்நிலத்து
மனத்தேசப்படங்கள்
அழித்து
மீள வரையப்படும்,
இன்னொரு
கைப்பிடிக் காலத்துகள்கட்கு,
வழி பார்த்து
நான் நகர.

என்றோ,
எங்கோ
எரிந்து போன
விண்நட்சத்திரங்களும்
மணல்வன யாத்திரீகனுக்கு
வழி காட்டும்
என்பதறிவு.

-இரமணிதரன், க.



தத்துவக் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 5:39 pm

தூக்கங்கள் கவிதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது தத்துவக் கவிதைகள் 224747944



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தத்துவக் கவிதைகள் Image010ycm
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 28, 2011 5:56 pm

மீமெய்யுந்தற் கனவுகள்,
என் தூக்கத்தைக் கெடுக்க வருகின்றனவா?
இல்லை,
என் துக்கத்தைத் தவிர்க்க வருகின்றனவா?"


"மீமெய்யுந்தற் கனவுகள்,-- அரிதான சொல்லாடல், நம் ஈகரை கவிஞர்கள் கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டிய ஒன்று .

நிலம் பட வாழ்.....

தொலைவின் நெருப்பு மண் நினைவு படும்.
இரவுகள் சுடும்,
எண்ணச்சுரப்புகள்பொத்தற்படுத்தும்
நைந்த பஞ்சு நெஞ்சு.

இரமணிதரன், க.

மிகவும் ரசிக்கவேண்டிய சோகம் !

மற்றபடி நிலம் பட வாழ் -- என்கிற தலைப்பே ஒரு பி‌எச்‌டி ஆய்விற்கு உட்படுத்தபட வேண்டியது.


ரசிக்க தந்தமைக்கு நன்றி சிவா !!



தத்துவக் கவிதைகள் Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 5:58 pm

சிவ ஸ்தோதிரமும் அருமை பெருமாள் வாக்கும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தத்துவக் கவிதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Sep 28, 2011 7:35 pm

சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 29, 2011 12:37 am

இதுவரை நான் படித்திராத பாணியில் அமைந்த கவிதைகள்.
இங்கே நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன்.
அருமையான பகிர்வுக்கு நன்றி..சிவா சாருக்கு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 29, 2011 12:42 am

மீமெய்யுந்தற் கனவுகள்...அர்த்தம் என்ன?....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக