புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
40 Posts - 63%
heezulia
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
2 Posts - 3%
viyasan
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
232 Posts - 42%
heezulia
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
21 Posts - 4%
prajai
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_m10இதயத்தின்  பக்கவாட்டில் !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தின் பக்கவாட்டில் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 26, 2011 11:19 pm

மிக நெடிய பயணத்தை தொடங்கியிருந்தார் ரமணன், என்றுமே அவர் அவ்வளவு தூரம் நடப்பார் என்றாலும் அவருடன் கூட்டி செல்வாரே ஒரு ஜீவன் புஜ்ஜி குட்டி.....ரமணனின் செல்ல நாய் குட்டி அது...புஜ்ஜி குட்டிக்கு அது மிக நெடிய பயணம் தான். அதுவும் அது நாள் பூராவும் விளையாடி வேட்டையாடி காவல் காத்து இருப்பதால்.......உடல் அலுப்பில் சோர்ந்து போய் தூங்கிக் கொண்டிருக்கும்.....ஆனால் ரமணன் காலங் காத்தால புஜ்ஜி யை வந்து எழுப்பும் போது அதன் தலையை மெதுவாக தூக்கி ரமணனை பார்க்கும் பார்வை ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்....அவ்வளவு பாவமாக இருக்கும்........

இருந்தாலும் தினமும் கூட்டி செல்வதால் அதற்கு பழகி போனாலும்.......ஒவ்வொரு நாளும் காலை கண்ணை திறக்கும் போதும் அதற்கு நரக வேதனை தான்.........

புஜ்ஜி மிகவும் சாதுர்யமான ஒரு நாய் குட்டி.......மனிதர்களால் உணர முடியாத சில விஷயங்களையும் அது உணர்ந்து விடும்........இது எல்லா நாய்களுக்கும் இருக்கும் குணம் என்றாலும் புஜ்ஜியிடம் அது கொஞ்சம் அதிகம் என்றே கூறலாம்........


இப்படி தினமும் ரமணன் புஜ்ஜியை கூட்டி சென்றதால் தான் புஜ்ஜியால் அவளை காண முடிந்தது.....

அவள் பெயர் மிமி......புஜ்ஜிமிமி நல்ல பெயர் பொருத்தம்.....மிமி அழகில் அவளுக்கு இணை அவள் தான் என்று கூறலாம் அவ்வளவு அழகு...

புஜ்ஜி நம் நாட்டு நாய் என்பதால் அதற்கு கொஞ்சம் வெட்கம் உண்டு....ஆனால் மிமி ஜெர்மனி ஐ சேர்ந்தவள் அவளுக்கு இந்த கூச்சம் எல்லாம் கிடையாது ஆனால் சகஜமாக பழகுவாள்.....

அன்றும் ரமணன் புஜ்ஜியை கூட்டி சென்றார்

ஹாய் எப்டி இருக்கீங்க (என்ன ஜெர்மனி நாய் எப்டி தமிழ் பேசுதுன்னு பாக்கிறீங்க அது இங்க வந்து பழகிருச்சு) புஜ்ஜி வெட்கிக் கொண்டே தன் தலையை மிமி யை பார்த்து......

நான்..... நல்லா.... இருக்கேன்.... என்று சொல்வதற்குள் (சூரியன் ஒரு அடி நகர்ந்திருந்தார்) சரி.......நீங்க.....(எப்டி இருக்கீங்கனு கேட்க முடியாம நீங்க வோட நிறுத்திருச்சு நம்ம புஜ்ஜி)

ம்ம் நான் ரொம்ப நல்ல இருக்கேன்........சரி என்னோட பாஸ் கிளம்புராறு நேரம் ஆச்சு நாளைக்கு பார்க்கலாம்.....பை என்று சொன்னவள்.....பிளையிங் கிஸ் கொடுக்கவே........தடுமாறி போனான் நம்ம புஜ்ஜி.......

அடுத்த நாள், மிமி யும் அவளது பாஸ் ம் நடந்து வந்து கொண்டிருந்தனர்....அப்பொழுது மிமியின் பாஸ் மிமியிடம் எதோ கூறிக் கொண்டு வந்திருந்தவர் வழியில் புதியதாக தோண்டியிருந்த குழியை கவனிக்க மறந்து விட்டார்.......

ஆனால் இதை கவனித்து விட்ட புஜ்ஜி......அவர் குழியை நெருங்கவும்...சத்தமாக குரைத்து அவரின் கவனத்தை குழியின் பக்கம் திருப்பி அவர் குழியில் விழாமல் காத்தது......

இதை பார்த்திட்ட மிமி யின் பாஸ்.....புஜ்ஜியை நோக்கி வந்து......ரமணனிடம்.....ஹலோ சார் இது உங்க நாயா.....

ஆமாங்க சார்.....உங்க பேரு

என் பேரு காந்திபன்......இங்க ஒரு சாப்ட்வேர் கம்பெனி வச்சு ரன் பண்ணிட்டு இருக்கேன்.........உங்க பேரு சார்......இந்த ப்ரில்லியன்ட் பேரு என்ன சார்...

இவர்கள் பேச்சிற்கு இடையில் .....உங்க பேரு என்ன என்று மிமி கேட்க .......நான்.......பு...பு புஜ்ஜி .........உங்க........என்று புஜ்ஜி கேட்க ஆரம்பித்த போதே ......நான் மிமி என்று மிமியிடம் இருந்து பதில் வந்தது........

நான் ரமணன்........இவன் பேரு புஜ்ஜி குட்டி.......சார் பேரு தான் புஜ்ஜி குட்டி.....ஆனா மூளை செம கெட்டி.....

ஆமா சார் அது உண்மை தான்......அது என்ன காப்பாத்துனப்பவே நெனச்சேன்.....

என்று கூறிக்கொள்ள இருவரும் அவர் அவர் திசையினில் சென்றனர்.....

ரொம்ப சந்தோசம் சார்.....

என்று கூறி இருவரும் பிரிந்து அவரவர் திசையில் சென்றனர்......

ஆனால் புஜ்ஜி யின் மனது மட்டும் மிமி யின் கண்களுக்குள் அடைக்கலம் புகுந்து விட்டது......

தொடர்ச்சி நாளை....இதயத்தின்  பக்கவாட்டில் !!! Icon_smile



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 26, 2011 11:22 pm

நாய்க்குட்டிய பேச வைக்கிறீங்க ராமன் சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயத்தின்  பக்கவாட்டில் !!! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 26, 2011 11:26 pm

இளமாறன் wrote:நாய்க்குட்டிய பேச வைக்கிறீங்க ராமன் இதயத்தின்  பக்கவாட்டில் !!! 224747944

மிக்க நன்றி இலா........மொத்தம் நாலு பார்ட் தான் ஒண்ணா போற்றவா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 26, 2011 11:29 pm

பிஜிராமன் wrote:
இளமாறன் wrote:நாய்க்குட்டிய பேச வைக்கிறீங்க ராமன் இதயத்தின்  பக்கவாட்டில் !!! 224747944

மிக்க நன்றி இலா........மொத்தம் நாலு பார்ட் தான் ஒண்ணா போற்றவா......

வேண்டாம் ராமன் அப்புறம் பூஜ்ஜி கோவிசுக்க போகுது ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயத்தின்  பக்கவாட்டில் !!! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 26, 2011 11:30 pm

இளமாறன் wrote:
பிஜிராமன் wrote:
இளமாறன் wrote:நாய்க்குட்டிய பேச வைக்கிறீங்க ராமன் இதயத்தின்  பக்கவாட்டில் !!! 224747944

மிக்க நன்றி இலா........மொத்தம் நாலு பார்ட் தான் ஒண்ணா போற்றவா......

வேண்டாம் ராமன் அப்புறம் பூஜ்ஜி கோவிசுக்க போகுது இதயத்தின்  பக்கவாட்டில் !!! 755837

ஹா ஹா.........அப்பா சரி வேணாம்.......நாளைக்கே போற்றலாம்.... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 27, 2011 6:49 am

ஆனால் மிமியின் மீதிருந்த தன கண்ணை எடுக்காது புஜ்ஜி அதை நோக்கியவாறே சென்றது....

கண்டதில்லை உன்போல்
கண்ணெடுத்துப் பார்த்ததில்லை
ஒரு பெண்ணை
கட்டழகி உனைக்கண்ட பின்னே
கண்ணுறக்கம் அதை மறந்து
காதல் விதை அதை சுமந்து
இன்று துளிர் விட்டு மரமானேன்
மன்னவியே உன் மனம் தனை
தாராயோ??????????


மிமிக்கு புஜ்ஜியின் இந்த செயல் தெளிவாக புரிந்தது, காரணம் மிமிக்கும்
புஜ்ஜியின் மீது ஒரு வித அன்புண்டு..அந்த அன்பு இவ்வளவு சீக்கிரம் காதலாக
மாறும் என்று மிமி எதிர்பார்கவில்லை.....

புஜ்ஜியை இதில் சேர்க்க வேண்டியது இல்லை, காரணம் அது மிமியை பார்த்ததில் இருந்தே காதல் பூ அதனுள் மலர ஆரம்பித்திருந்தது...

மறுநாளும், ரமணன் புஜ்ஜியை கூடிக் கொண்டு நெடும் பயணத்தை
தொடங்கினார்....ஆனால் அன்று காந்திபன் மட்டும் தான் வந்திருந்தார்.....அதை
பார்த்த புஜ்ஜிக்கு ஏக்கம்.....தொற்றிக்கொண்டது.......

ஹாய் மிஸ்டர் காந்திபன் எங்கே மிமியைக் காணோம்.......

அதை ஏன் கேட்கிறீர்கள் ரமணன்....... யாரோ?? மிமியை தூக்கிச் சென்றுவிட்டார்கள் ...

என்ன சொல்கிறீர்கள் காந்திபன்.......காவல துறையில் புகார் கொடுத்தீர்களா.....

கொடுத்துள்ளேன் ரமணன், இன்று வாக்கின் வரவே எனக்கு விருப்பமில்லை,
இருந்தாலும் இந்த விஷயத்தை தங்களிடம் தெரிவிப்பதற்காகவே வந்தேன்.....

சரி காந்திபன் உங்கள் தொலை பேசி எண்ணை கொடுங்கள் என்று ரமணன் கேட்டுக் கொண்டிருந்தபோதே.....

புஜ்ஜி அந்த இடத்திலருந்து ஓடியது.......

காதலியவள் துயரில் இருக்க
கொண்டவன் காதிட்டு - சொல்
கேட்டு தான் இருப்பானா??


அதை பார்த்த காந்திபன், ரமணன்??? புஜ்ஜி எங்கே ஓடுகிறான் கூப்பிடுங்கள்...என்று கூற....

விடுங்கள் பார்த்திபன், இன்று இரவிற்குள் மிமி உங்கள் வீடு தேடி வருவாள்....
காரணம், ரமணனுக்கு புஜ்ஜியை பற்றி நன்கு தெரியும், புஜ்ஜி, மிமியை கண்டு
பிடிக்கவே செல்கிறது என்பதை உணர்ந்த அவர் புஜ்ஜியை கூப்பிடாமல் விட்டு
விட்டார்.......

புஜ்ஜி தனது அசாத்திய மோப்ப சக்தியையும் துப்பறியும் திறனையும் கைகொண்டு மிமியை தேடி சென்றது......

ஒருமுறை காந்திபன் ரமணனிடம் தன வீட்டின் முகவரியை கூறியிருந்தார், அதை
புஜ்ஜியும் கேட்டிருந்தது....அதே போல ஒருநாள் ரமணன் காந்திபன் வீடு வழியாக
சென்று கொண்டிருந்த பொழுது புஜ்ஜிக்கு இது தான் காந்திபன் வீடு என்று
காந்திபன் வீட்டை ரமணன் காண்பித்திருந்தார்..அன்று வீடு பூட்டி
இருந்தது....இதை மனதில் வைத்திருந்த புஜ்ஜி.....

தன துப்பறியும் பணியை காந்திபனின் வீட்டிலிருந்து தொடங்கியது.....

மிமி ஜெர்மனி ஐ சேர்ந்த விலையுயர்ந்த நாய் என்பதால், அதை திருடி
சென்றிருக்கலாம் என்று காவல் துறையினர் தங்கள் பங்கிற்கு, தங்கள்
துப்பறிதலையும் தொடங்கியிருந்தனர்......

புஜ்ஜி மிமியை தேடிக் கொண்டே சென்று கொண்டிருந்தது.....மதியம் ஆயிருந்தது........

திடீரென்று ஒரு இடத்தை நோக்கி வேகமாக ஓடியது, அது சாலை ஓரத்தில் இருந்த நில
பகுதி, அங்கே எதோ ஒன்று விழுந்து, வேகமாக பதறிக் கொண்டு ஓடியது போன்ற
தாரை தெரிந்தது....

புஜ்ஜி, மிமி தான் இங்கு விழுந்திருக்க வேண்டும் என்று
தீர்மானித்தது.......காரணம், விழுந்த அதிர்ச்சியில் மிமியின் கூந்தல் அங்கு
சிதறிக் கிடந்தது.....அது மட்டுமின்றி.....

அதற்கருகில் இருத்த பாறையில் சற்று ரத்தமும் ஒட்டிக் கொண்டிருந்தது.....

அந்த ரத்தத்தை மோப்பம் பிடித்த புஜ்ஜி, அதை வைத்துக் கொண்டு மிமி சென்ற
திசை நோக்கி சென்றது........மிமி சென்ற வழியெல்லாம்.....மண்ணில்
உராய்வுகளும்.....ரத்தமும் வடிந்த தடமும் இருந்ததால்.....தான் சரியான
பாதையில் தான் செல்கிறோம் என்பதை உறுதி செய்த புஜ்ஜி.......

மிமிக்கு எதுவும் நிகழ்ந்திருக்க கூடாது என்று கண்ணீருடன் வேண்டிக்கொண்டே சென்றது......

இறைவா!!
உனையன்றி
வேராரும் எனக்கில்லை
எனதருமை காதலியை தவிர
காத்திடுவாய் உன்பிள்ளையினை
எத்துன்பமும் அண்டாமல்


தொடர்ச்சிக்கு கீழே பார்க்கவும்....இதயத்தின்  பக்கவாட்டில் !!! Icon_smile



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 27, 2011 6:50 am

அங்கே, நான்காம் குடிநீர் திட்டத்திற்காக, வைக்கப் பட்டிருந்த, பாழடைந்து
கிடந்த, குழாயில் மிமி ரத்தக் காயங்களுடன் நடுங்கிக் கொண்டே
படுத்திருந்ததை கண்ட புஜ்ஜியின் இதயம் சுக்காய் தான் போனது.......

மிமியை மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்றிருந்தார்கள், மயக்கம்
தெளிந்ததும் அனைவரும் பார்க்காத நேரத்தில் வாகனம் சென்று கொண்டிருக்க
கொண்டிருக்க மிமி, தன்னை கடத்தியதில் ஒருவன் எச்சில் துப்புவதற்காக
கண்ணாடியை திறந்த வேகத்தில் ஒரே தாவலாக தாவி வெளியில் குதித்தது,
குதித்ததில் அதன் கால் எழும்பும், கல்லில் மோதியதில் தலை பகுதியில்
காயமும், உடல் முழுதும் சிராய்ப்புகளும் ஏற்பட்டிருந்தது......

மிமி நடுங்கிக் கொண்டிருப்பதையும் ரத்தக் காயங்களோடு கால் முறிந்த
நிலையில் சுயநினைவின்றி கிடப்பதையும் பார்த்து சில
நிமிடங்கள்...ஸ்தம்பித்து அப்படியே உறைந்து போய் நின்று விட்டது
புஜ்ஜி.......

மிமியால் நடக்க முடியாது, பிறகு எப்படி மிமியை கூட்டிச் செல்வது என்று
யோசித்துக் கொண்டிருந்த புஜ்ஜிக்கு, அங்கே இரண்டு கால்களும் இல்லாத
பெரியவர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தது....

அவருக்கு அருகில், அவர் அமர்ந்து செல்லும் சர்கரம் பொருந்திய பலகை இருந்ததை கண்டது......

அந்த சர்கர பலகையின் ஒரு முனையில் கயறு கட்டப் பட்டிருந்தது, பலகை
நகர்ந்து சென்று விட்டால், அந்த கயிற்றை பிடித்து தன் அருகில் கொண்டு
வர அந்த பெரியவர் அப்படி கட்டி இருந்தார்........

அவர் அந்த குழாயின் அருகில் இருந்தது புஜ்ஜிக்கு சுலபமாகி விட்டது....

புஜ்ஜிக்கு தோன்றிய எண்ணமென்னவென்றால், அந்த பலகையில் மிமியை படுக்க
வைத்து, தான் அதை இழுத்து இரவுக்குள் வீடு போயி சேர்ந்திடலாம்
என்பதுதான்........

மிமியை அதில் மெல்ல வந்து அமருமாறு புஜ்ஜி கூற, அப்பொழுது தான் மிமி, புஜ்ஜி அங்கு வந்திருப்பதை உணர்ந்தது.........

அந்த நேரத்தில் அதன் கண்களில் வழிந்த நீர், அதன் உள்ளம் கொண்ட மகிழ்ச்சி, இரண்டிற்கும் வேறெதையும் இணையாக கூற முடியாது.......

பாழடைந்த அந்த குழாயில் நான்காம் குடிநீர் திட்டம் தொடங்கி விட்டது போலிருந்தது.......

மிமி.........சீக்கிரம் இதில் படுத்துக்கொள்...என்று பலகையை புஜ்ஜி
காட்டியதும்.....மிமி....வலியினை பொறுத்துக் கொண்டு மெல்ல ஊர்ந்தும்
நகர்ந்தும் வந்தது....

அதைப் பார்த்த புஜ்ஜிக்கு இதயத்தில் லட்சம் ஊசிகளை ஒரே நேரத்தில் குத்தியது போன்று இருந்தது........

மிமி பலகையில் ஏறியதும்.....புஜ்ஜி அந்த கயிறை வாயில் கடித்து பலகையை இழுத்துக் கொண்டு சென்றது....

இதைப் பார்த்த ஒருவர் அந்த பெரியவரிடம்....

யோவ்.....அந்த நாய் உன் பலகையை இழுத்துட்டு போகுது பாருயா.......என்று கூற....

புஜ்ஜி..மிமியை..பலகையில் கிடத்தி இழுத்து செல்வதை பார்த்த.....நொடியில் அந்த பெரியவரின் மனதில் அவ்வளவு ஒரு பூரிப்பு.....

பரவாயில்லை விடப்பா...நிச்சயம்...அந்த நாய் என் பலகையை திருப்பிக் கொண்டு வரும்.....என்று சொன்னவரைக் கண்ட....

அந்த நபரின் மனம் சற்று ஈரத்தில் குளிர்ந்து........

புஜ்ஜி.....மிமியை.......எப்படியாவது வீடு சேர்த்திட வேண்டுமென்பதில் உறுதியாகவும் ஆர்வமாகவும் இருந்தது.....

அந்த கயிறின் அழுத்தத்தால்.....புஜ்ஜியின் வாய்ப்பகுதி கிழிந்து ரத்தம்
சொட்டுவதை.....அந்த ஆரவத்தில் அது கவனித்திருக்க வாய்ப்பில்லை
தான்.........

ஆனால்...ரத்தம்....அந்த கயிற்றின் வழியாக......அது ஒரு நைலான் கயிறு
என்பதால் அதன் வழியாக வழிந்து சென்று.....வலியில் அயர்ந்து
கிடந்த....மிமியின் மேல் சொட்டியது......

ரத்தத்தின் சூட்டினை உணர்ந்த மிமி கண் விழித்துப் பார்கையில்......நைலான்
கயிறு புஜ்ஜியின் வாய்ப்பகுதியை கிழித்துக் கொண்டிருந்ததை
பார்த்தது.......

தொடர்ச்சி இன்று மாலை இதயத்தின்  பக்கவாட்டில் !!! Icon_smile




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 27, 2011 5:13 pm

இதைப்
பார்த்ததும்...மிமி......புஜ்ஜியை.....புஜ்ஜி.....புஜ்ஜி.........என்று
சத்தமாக அழைத்தது.......மிமிக்கு எப்படி அவ்வளவு சக்தி கிடைத்தது என்று
தெரியவில்லை.....

உன்னுடல் துன்புறுதல் கண்டபின்
என் வலி எங்கு சென்றது - உனைக்
காக்க புது சக்தி பெற்றவளாய் நான்


மிமியின்...சத்தம் கேட்ட புஜ்ஜி...என்ன மிமி.....வலியில் ஏன் இப்படி
சந்தம் போட்டு கூப்டுற.....பிறகு வலி அதிகமாய் விடப்
போகிறது......அமைதியாய் படுத்துக்கொள்.....என்று புஜ்ஜி சொல்ல

இல்லை புஜ்ஜி..உன் வாய்ப்பகுதி தோல் கிழிந்து ரத்தம்
சொட்டுகிறது......என்று மிமி கூறியவுடன் தான் புஜ்ஜி தன் வாய்ப்பகுதியில்
ரத்தம் வழிவதை உணர்ந்தது........அப்படி இருந்தும்......புஜ்ஜி.......

என்துன்பன் நானறியேன்- உன்
துன்பமதை கண்டபின்னே
உனைக் காக்காமல் விடமாட்டேன்
நல்லிடம் கொண்டு உனைச்
சேர்க்காமல் ஓயமாட்டேன்.

பரவாயில்லை.......மிமி...இன்னும் சற்று தூரம் தான்....போயி விடலாம்....என்று கூறி தொடர்ந்து இழுத்துக்கொண்டு சென்றது.....

அந்த நேரத்தில்..புஜ்ஜியின் எதிரில்...கராக்........என்ற சத்தத்துடன்...வந்து நின்றது அந்த வாகனம்.....

வாகனத்தில் இருந்து..திடகாத்திரமான தோற்றத்தில் ஒருவர் இறங்கி...இங்கு தான் இருகிறீர்களா........என்று கூறியவர்.......

இருவரின் நிலையையும் பார்த்து........உடனே அருகில் வந்து குந்த வைத்து
அமர்ந்து.......மிமியையும்.....அதனை பலகையில் கிடத்தி இழுத்து வந்த
புஜ்ஜியையும் பார்த்து பிரமித்து போனார்.........

வந்தது வேறு யாரும் இல்லை...மிமியை தேடிக் கொண்டு வந்த காவல் துறை துணை
ஆய்வாளர்......திரு பொன்வண்ணன் அவர்கள் தான்......மற்றும் அவருடன் இரண்டு
கான்ஸ்டபில்களும் வந்திருந்தனர்....

காவல்துறையினரை கண்டதும்......புஜ்ஜி.......சரியானவர்களிடம் வந்து மிமியை சேர்த்துவிட்டோம்.......

காதலியை நல்லிடம் சேர்த்துவிட்டோம்
காக்க உதவியவரை மறந்தாலது தகுமா ?


இனி இந்த பலகையை அந்த பெரியவரிடம் ஒப்படைத்து விடலாம் என்று அந்த பலகையை
இழுத்துக் கொண்டு வந்த திசைக்கு எதிர் திசையில்......பலகையை இழுத்துக்
கொண்டு ஓடியது.....

இதை பார்த்த துணை ஆய்வாளர் பொன்வண்ணன்.....ஸ்டாப்
புஜ்ஜி..என்றதும்...புஜ்ஜி நின்று......அந்த பலகையில் காலை மிதித்துக்
கொண்டே குரைத்தது....

புஜ்ஜி........சொல்ல வருவதை உணர்ந்த...துணை ஆய்வாளர்
பொன்வண்ணன்....புஜ்ஜியையும்...காரில் ஏற்றிக்கொண்டு....அந்த திசை நோக்கி
புறப்பட்டனர்........

வாகனம்....ஐந்து கிலோ மீட்டரை கடந்திருந்தது...

அந்த இடம் வந்ததும்...புஜ்ஜி குரைத்தது......உடனே துணை ஆய்வாளர் டிரைவர் காரை நிறுத்துப்பா என்றதும்...வாகனம் நின்றது.......

வாகன கதவு திறந்ததும்.....புஜ்ஜி ஒரே தாவலாக தாவி வெளியே வந்து......அந்த
பலகையையும் இழுத்துக் கொண்டு வந்து....அந்த பெரியவர் முன் வைத்து
விட்டு.......

வந்துவிட்டேன் ஐயா உம்பொருள்
உம்மிடமே சேர்த்தேன் ஐயா - உதவும்
உள்ளம் கொண்ட உம்மை - என்
வாழ்நாள் முழுதும் மறவேன் ஐயா


என்று அவர் அருகில் நின்று அன்போடு வாலினை ஆட்டி...உடலை அவர் மீது உரசிக் கொண்டு நின்றது........

புஜ்ஜியின் அந்த கனிவான உன்னத குணத்தை கண்டு வியந்த அந்த பெரியவர்....புஜ்ஜியை தடவிக் கொடுத்து அதன் உச்சி முகர்ந்தார்......

உனைப்போலொரு பிறவி
இப்பிறவியில் இதுவரை
நான் கண்டதில்லை - உனை
நான், கண்டிட்டேன் இந்நாளில்
இனி எனக்கு நரகம் இல்லை


துணை ஆய்வாளர்........அந்த பெரியவரிடம்...நடந்ததை விசாரிக்க..அந்த பெரியவர் நடந்ததைக் கூற......

அவரின் கண்களிலும்...துணை ஆய்வாளர் மற்றும் சுற்றி இருந்த அனைவரின்
கண்களிலும் கண்ணீர் தடுப்பினை உடைத்துக் கொண்டு வருவதை போல்
வந்தது...........

சொட்டிய கண்ணீருடன்...பெரியவர் கூறி முடித்ததும்.....துணை
ஆய்வாளர்......புஜ்ஜியை அள்ளி தூக்கி....அவரின் அன்பை கொட்டி
தீர்த்தார்........இதயத்தின்  பக்கவாட்டில் !!! Icon_kissஇதயத்தின்  பக்கவாட்டில் !!! Icon_kissஇதயத்தின்  பக்கவாட்டில் !!! Icon_kiss


-முற்றும் -



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 5:23 pm

இந்தக் கதையில் 73 முறை புஜ்ஜி என்ற வார்த்தை வந்துள்ளது. இனிமேல் கதையைப் படிக்கத் துவங்குகிறேன்!



இதயத்தின்  பக்கவாட்டில் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 27, 2011 5:27 pm

ராமன் நீங்க கவிதையில் தான் கலக்குவீர்கள் என்று நினைத்து இருந்தேன்.கதையிலும் கலக்கிவிட்டீர்கள்.இதயத்தின்  பக்கவாட்டில் !!! 224747944 இதயத்தின்  பக்கவாட்டில் !!! 2825183110 இதயத்தின்  பக்கவாட்டில் !!! 677196 நன்றியுள்ள ஜீவன் என்றால் அது நாய் தான்.

இந்த கதையைப் படிக்கும் போது எனக்கு என்னுடைய பழைய நினைவு வந்து சென்றது.ஒரு முறை என் பக்கத்து வீட்டு அந்த ஜீவனால் (நாயால்) ஒரு பாம்பிடமிருந்து தப்பித்தேன்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதயத்தின்  பக்கவாட்டில் !!! Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக