புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காணாமற்போன கிளிகள்! I_vote_lcapகாணாமற்போன கிளிகள்! I_voting_barகாணாமற்போன கிளிகள்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணாமற்போன கிளிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 2:30 am



கிளிகள் மிக அழகானவை. அவை சிறகமிழ்த்துப் பறக்கும் போது மேலும் அழகணிந்து கொள்கிறது. ஒரு நூறு கிளிகள் ஒரே சமயத்தில் சொல்லி வைத்தாற்போல் பறப்பதை நீங்கள் சினிமாவிலோ கனவிலோ அல்லது ஓவியத்திலோ கண்டிருக்கலாம். அதுவும் ஒரு முறையோ, ஒரு தினத்திலோ பார்த்திருக்கக்கூடும். ஆனால், அப்படியோர் அரிய காட்சியைத் தினமும் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கும்போது மனத்துக்குள் பெருமகிழ்ச்சி சூழ்கிறது. அந்தக் காட்சியைத் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்க்க விரும்புகிறது மனது. அந்தக் காட்சிக்குப் பின்னணி இசையாய் அதே பழைய ஒலி காலங்கடந்தும் தனது வினோதத் தன்மையை உதிர்த்துவிடாமல் இன்னமும் தொடர்கிறது.

பால்ய காலத்தில் பார்த்த அக்காட்சி மன அடுக்குகளில் நிரந்தரமாய்த் தங்கி விடுவதற்கான வலுவை அது எங்கே பெற்றிருக்கும் என வியப்பாயிருக்கிறது. அதன் ஒட்டுமொத்த சிறகடிப்பின் ஓசைகளும் இனி எப்போதும் எங்களை உனக்குக் காண்பிக்கமாட்டோம் என்ற சொற்களைத் தான், இறகென உதிர்த்துப் போகிறதென்பதை உணராமல், அதை காமிக்ஸ் புத்தகத்தினுள் பத்திரப்படுத்தினேன். இந்த நகர வாழ்வும், அவசரமாய்ச் சுழலும் உலகும்தான் அதை உணர வைத்து, பத்திரப்படுத்தியிருந்த அந்த இறகினை மேலும் மேலும் கற்பனையில் மிதக்க விட்டு அதை, கிளிதான் என என்னிடம் காண்பிக்கிறது.

நகரத்துத் தெருக்களில் நெல்மணிக்காக கூண்டினுள்ளிருந்து வெளிப்பட்டு, மீண்டும் உள்ளேயே சென்றுவிடும் ஒரு சில கிளிகளைப் பார்த்தாலும்; உயிரியல் பூங்காவில் வலைக் கூண்டுக்குள் கொய்யா கொறிக்கும் சில கிளிகளைப் பார்த்தாலும்; அருங்காட்சியகத்தில் பார்வைக்கெனப் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் உறைந்த விழிகளுடைய கிளியைப் பார்த்தாலும்; கயிற்றாலான முடிவில்லாப் பாதையை, சிறகிருந்தும் மிதிவண்டியில் கடக்கும் சில சர்க்கஸ் கிளிகளைப் பார்த்தாலும்; மதுரை மீனாட்சியிடம் சிக்கிக் கொண்டிருக்கும் கிளியைப் பார்த்தாலும்; பால்யத்தில் நான் பார்த்த கிளிகளைப் போல் எவையும் இல்லை. என் கிளிகள் சுதந்திரமானவை. வானத்தில் எல்லைகளை வரையறுக்காதவை. எந்த உயரதிகாரப் பருந்திடமும் மண்டியிடாதவை. இலையுதிர் காலத்து அரசமரத்தில் அமர்ந்துகொண்டு மரத்தை உயிர்ப்பிப்பவை.

எப்போதும் என்னை அம்மாதான் எழுப்புவாள். அவள் எழுப்புவதை வெறுமனே எழுப்புவாள் என்று மட்டுமே கூறவிட முடியாது. அதில் அத்தனை பரிவும் கருணையும் ததும்பியிருக்கும். அப்பா எப்போதாவது ஓரிரு நாளில்தான் எழுப்புவார். அம்மா எழுப்பியதற்கும், அவர் எழுப்பியதற்கும் ஆயிரம் வித்தியாசங்களை என்னால் பட்டியலிட முடியும். நன்றாக எழுப்பக் கூடத் தெரியவில்லையே என்ன மனிதர் இவர் என, தற்போது யோசிக்கிறேன். ஏதேனுமொரு வினோதமான கனவு வந்து என்னை அச்சுறுத்தும் நாட்களிலெல்லாம் அவர்தான் எழுப்பியிருக்கிறார். அதேபோல அன்றும் அவர்தான் என்னை எழுப்பினார். ஒருமுறை எழுப்பினாலே தூக்கத்தை உதறிவிட்டுத் துள்ளியெழ வேண்டும், இன்னும் கொஞ்சம் தூங்க முற்பட்டு புரண்டு படுத்தாலோ, படுக்கையிலேயே குளிப்பாட்டிவிட்டு விடுவார்.

அன்று அவர் எழுப்பும்போதே அந்தச் சத்தத்தை உணர்ந்தேன். நாராசமான ஒலியை உற்பத்தி செய்துகொண்டே, சூனியக்கார கிழவனைப் போல வித்தியாசமான தோற்றத்தில், வளைந்த கால்களுடைய ஒருவன், கையில் வைத்திருந்த தகரத்தைத் தட்டிக்கொண்டே தொலைவிலிருந்து வந்து கொண்டிருந்தான்.

இரவில் தூங்கப்போகும் முன்பு சிறுநீர் கழித்துவிட்டுப் படுத்தால் அப்புறம் காலையில்தான். நள்ளிரவில் அதற்கென எழும் பழக்கமெல்லாம் கிடையாது. காலையில் எழுந்து டிச்சியோரம் போய் பம்புசெட்டைத் திறந்துவிட்டால், அதுபாட்டுக்கு ஓடும். நின்றுகொண்டே தூங்குகிறேனா என்று அப்பா சோதிப்பதுமுண்டு. நாங்கள் வசித்த வீட்டுக்கருகில் சுற்றிலும் காடுதான். எதிர்ப்புறம் நெல்லும், பக்கவாட்டில் சோளமும் பயிரிட்டிருந்தனர். சோளம் அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போதே, அதைத் தின்னுவதற்கு, கிளிக்கூட்டமும் தயாராகிவிட்டிருந்தன. காலை நேரத்திலேயே இரைதேட சோளக்காட்டை ஆக்கிரமித்துவிடும் கிளிகளை விரட்டும் பொருட்டு நியமிக்கப்பட்டிருக்கும், மேல் சட்டையற்ற அவரது வயிறும் உள்ளொடுங்கித்தான் இருந்தது.

காலை மாலையும் சோளம் தின்னவரும் கிளிகளை இரு நேரமும் விரட்ட வேண்டும். அதற்காகத்தான் அந்தத் தகரத்தைத் தட்டிக் கொண்டே வருகிறார். வரும் போது தட்டிக் கொண்டே வந்தவர் சற்று நேரம் நிறுத்திவிட்டு, சோளக்காட்டின் மையத்தைச் சமீபித்து வேகமாய் ரெண்டு தட்டு தட்டியதும், அதிலிருந்து புறப்பட்ட ஒலி அத்தனை களிகளுக்கும் பறப்பதற்கான கட்டளையை விட, ஒட்டுமொத்தமாய் அத்தனை கிளிகளும் பறப்பதைப் பார்த்ததும், ஓடிக்கொண்டிருந்த பம்புசெட்டே நின்றுவிட்டது. தூக்கக் கலக்கமும் சென்றுவிட்டது. அன்றைய தினம் முழுவதும் காணும் எல்லோரிடமும் வாய்வலிக்கச் சொல்லிச் சொல்லி, ஓய்வில்லாமல் அவற்றைப் பறக்க வைத்தேன்.

அடுத்த நாள் யாரும் எழுப்பாமலேயே நானே சுயமாய் முயன்று, தூக்கத்தினுள்ளிருந்த என்னை வெளியே எடுத்துப் போட்டுக் கொண்டேன். ஒருசேரப் பறக்கும் கிளிக் கூட்டங்களைப் பார்க்கப் பார்க்க, நமக்கொரு சிறகில்லையே என்றதொரு பெரு ஏக்கம் முளைவிடும். அடுத்து வந்த என் பத்துப் பதினைந்து தினங்களும் பச்சை நிறங்களாலே புலர்ந்தன. ஒலியெழுப்பி கிளி விரட்டுபவர், ஒவ்வொர தினமும் ஒவ்வொன்றை எடுத்து வந்தார். முதல் நாள் சதுரமான தகரம். அடுத்த நாள் பழைய பிளாஸ்டிக் குடம். மூன்றாம் நாள் முகம் தெளிந்த அலுமினியக் குண்டா என மாற்றி மாற்றிக் கொண்டு வந்து, தட்டித் தட்டிச் சத்தத்தை உற்பத்தி செய்து கொண்டேயிருந்தார். அவர் எதனைக் கொண்டு வந்து தட்டினாலும், அதில் அவரது வயிறு வரையப்பட்டிருந்தது என்பது மறுக்கவியலாதது.

அறுவடைக்கு முன்பாக ஏதாவது ஒரு தினத்தில், அவர் வருவதற்குள், சோளக் காட்டின் நடுவில் இருக்கும் பொம்மைக்குப் பின்புறமாய் ஒளிந்துகொண்டு, அதைப் போலவே கைகளை விரித்தபடி நின்று கொண்டால், அவர் வந்து சத்தமிட்டதும் பறக்கும் கிளிகளைப் போலவே, நமக்கும் பறக்கும் வல்லமை வந்தாலும் வரலாம் தானே என்றொரு கற்பனை எனக்குள் இருந்தது.

அத்தனை கிளிகளையும் பறக்கவைக்கும் சக்தி படைத்த அந்தச் சத்தம் நம்மையும் ஒரு பத்தடி தூரமேனும் பறக்க வைக்காதா என்ன, என்று நானே கேட்டுக் கொண்டாலும், விடிந்தும் விடியாத அந்த நேரத்தில் சர்ப்பங்கள் ஊர்ந்திடும் அக்காட்டுக்குள் செல்ல வேண்டுமே என நினைக்கும்போதே பம்பு செட் ஓடத் தொடங்கிவிடும். அறுவடைக் காலம் முடிவதற்குள் பக்கத்து ஊரிலிருக்கும் அத்தைப் பெண் திலகவதியிடம் தகவல் சொல்லி, எப்படியாவது அந்தக் காட்சியை அவளும் பத்திரப்படுத்தி, பரவசப்படும்படிச் செய்ய வேண்டும் எனவும், நானளிக்கும் மிக உயர்ந்த பரிசாய் காலத்துக்கும் அது இருக்க வேண்டும் எனவும் நினைத்தேன். ஆனால் நினைத்த மாத்திரத்தில் தகவலனுப்பி அவளை வரவழைக்கும் வலு, என் அப்போதைய வயதுக்கு இல்லாமல் போனது.

பிறகொரு தினத்தில் திருவிழாவுக்கு வந்திருந்தபோது, அவளிடம் சொல்லி, கிளிகள் பறந்த இடத்தைக் காட்டினேன். வெறும் வானத்தைப் பார்த்து, கிளிகள் பறப்பதாய் அவள் கற்பனை செய்வதாய்ப் பட்டது எனக்கு. அந்தக் கிளிக்கூட்டத்தோடு அவளுடன் கைகோத்து நாங்களிருவரும் பறப்பதைப் போல நான் கற்பனை செய்தேன். திருவிழா முடிந்து ஓரிரு மாதத்திலேயே அப்பாவுக்கு வேலை மாற்றல் ஏற்பட்டதால் அந்த ஊரிலிருந்து வெளியேறி இங்கே வர நேர்ந்தது.

இந்த ஊருக்கு வந்தும் கூட இருபது வருடங்களாகிவிட்டன. பால்யகால நண்பர்களில் தேவராஜ் மட்டும் இன்னமும் தொடர்பில் இருக்கிறான். தொடர்ந்து கடிதம் எழுதுவான். நேரிலும் சில முறை வந்து போலிருக்கிறான். என்னை ஊருக்கு வரச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டேயிருந்தான். நானும் அதோ இதோவெனப் போக்குக் காட்டிக் கொண்டேயிருந்தாலும், இன்றுதான் அதற்கான சூழல் வாய்த்திருக்கிறது. நாளைக்கு அங்கே திருவிழா. அதனால் கம்பெனியில், சில பொய்கள் தூவப்பட்ட விடுமுறைக் கடிதமளித்துவிட்டு பேருந்தேறிவிட்டேன். இந்தப் பேருந்திலேறி ஜன்னலோர இருக்கையில் ஆயாசமாய் அமர்ந்து தலை நிமிர்ந்தால், ஓட்டுனர் இருக்கைக்குப் பக்கத்தில் பறப்பது போலான ஒரு கிளி தொங்கியபடி அசைந்து கொண்டிருந்தது.

ஊரைப் பற்றியும் கிளிக்கூட்டம் சிறகடித்த நினைவுகள் குறித்தும் அசை போட்டுக் கொண்டே வந்ததில் பயணக் களைப்பே தெரியவில்லை. இன்னும் பத்து நிமிடங்களில் எனதான நிறுத்தம் வந்துவிடும் என்பதால் இறங்குவதற்கு ஆயத்தமாகிறேன். எதிர் இருக்கையில் எனக்கு மிகப் பிடித்த தாமரை மலரைச் சூடியிருந்த அந்த யுவதியும் இறங்கத் தயாராகி எனதான நிறுத்தத்திலேயே இறங்கினாள். மனது ஏனோ இனம்புரியாத மகிழ்வில் மூழ்கியது. பின்பு அவளொரு திசையிலும், நான் அவளுக்கெதிர் திசையிலுமாய்ப் பிரிந்தோம்.

பழைய அடையாளங்களை உதிர்த்து விட்டிருந்த ஊர், தற்காலத்தை உடுத்திக் கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்திலிருந்த ஆலமரம் காணாமற்போய் அங்கொரு செல்ஃபோன் டவர் வளர்ந்திருந்தது. நண்பனுக்கு ஃபோன் செய்து விட்டதைச் சொல்லலாம் என நினைத்தேன், பிறகு அவனை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று அப்படியே நிதானமாய் நடந்தேன். காலத்தால் புதிய திரை போடப்பட்டிருக்கும் அந்த ஊரின் பழைய முகத்தை, மனத்துக்குள்ளாகவே திரை விலக்கி, திரை விலக்கி, இந்தக் கட்டடம் இருந்த இடத்தில் முன்பு என்ன இருந்தது, இந்த பேக்கரி எப்போது வைத்திருப்பார்கள் என்று கேள்விகளின் பின்புறமாய் நடந்து கொண்டேயிருந்தேன்.

வளர்ந்தவர்களின் செருப்பணிந்து நடக்கும் குழந்தையாய், எனது பால்ய காலத்துக்குள் நடப்பதாகவே பட்டதெனக்கு. அப்படியே நடந்து நாங்கள் முன்பிருந்த இடத்தை அடைந்ததும் அதிர்ச்சியாய் இருந்தது. எண்ணற்ற கிளிகள் இரையுண்டு பறந்த சோளக்காடு, வீட்டு மனைகளாய்ப் பிரித்துப் போடப்பட்டு, அதில் ஒருசில வீடுகளும் முளைத்திருந்தன.

பா. ராஜா



காணாமற்போன கிளிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக