புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திகில் கதை !! - Page 2 I_vote_lcapதிகில் கதை !! - Page 2 I_voting_barதிகில் கதை !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகில் கதை !!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 17, 2011 3:12 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே
இது மோகனன் என்பவர் எழுதிய திகில் கதை உண்மை சம்பவமும் கூட உங்களுக்குக்காக இதோ

********************

சங்கரும் ராமுவும் ஒரே சீராக டிவிஎஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நேரம் இரவு பனிரெண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்த்து.

அன்று அமாவாசையானதால் ஊரெங்கும் இருளடித்திருந்தது. பியூஸ் போனதால் தெருவிளக்குகள் தேமே என்று நின்று கொண்டிருந்தன.
டிவிஎஸ் வண்டி தெருவை விட்டு சாலையில் திரும்பியது. அந்த சாலையில் இவர்களது
வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் தென்படவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம்
வரையில் ஒரு வெளிச்சப் புள்ளிகூட கண்ணில் படவில்லை.
டிவிஎஸ்ஸின் வெளிச்சம் தார்ச்சாலையில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது.
‘குறுகிய பாலம் மெதுவாக செல்லவும்’ என்ற அறிவிப்புப் பலகையின் மேல் பட்ட
வெளிச்சம், இடது வளைவின் காரணமாக மின்னி மறைந்தது.
பாலம் மெல்ல மெல்ல இவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது. டிவிஎஸ் வண்டியின்
சத்தத்தினூடே தூரத்தில் நாய் ஒன்று குரைக்கும் சப்தம் மெலிதாகக் கேட்டது.
“டேய் சங்கரு... ஊர் போய் சேர்றதுக்கு... இன்னும் எவ்வளவு நேரம்டா..?”
என்று வண்டியை ஓட்டியபடியே கேட்ட ராமுவுக்கு வயது முப்பதிருக்கும்.
சங்கருக்கு ஒன்று விட்ட முறையில் மாமன்.
“ஆச்சி மாமா. இன்னும் ரெண்டு கிலோ மீட்டர்தான்..?” என்று சொன்ன சங்கருக்கு
வயது 20 இருக்கும். திடகாத்திரமான உடம்பு. பார்வைக்கு இந்திப்பட வில்லன்
போல இருப்பான்.
ராமுவும், சங்கரும் பண விஷயமாக சிங்கபுரம் வரை சென்றிருந்தனர். பணம்
வசூலாவதற்கு நேரமானதால் இருட்டிவிட்டது. அதனால்தான் இந்த நள்ளிரவில்
குன்றத்தூருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
குன்றத்தூரில் மாடுகளை வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வருபவர் சங்கரின்
அப்பா வேதாசலம். பணவசூலுக்காகத்தான் இருவரையும் சிங்கபுரம் வரை அனுப்பி
வைத்திருந்தார்.
பாலத்தின் மீது விர்ரென்று சென்று கொண்டிருந்த டிவிஎஸ், பாலத்தைக்
கடந்த்தும் திடீரென ஊமையாகி, மெதுவாய் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது.

“என்னடா இது வண்டி திடீர்னு நின்னுடிச்சி... பெட்ரோல் இருக்குல்ல..?” என்று ராமு கேட்டான்
“வரும் போதுதான் ரெண்டு லிட்டர் பெட்ரோல் போட்டேன். அதுக்குள்ள தீர்ந்து
போயிடுமா என்ன. அதெல்லாம் இருக்கு மாமா... வண்டியை என்கிட்ட கொடு மாமா நான்
பார்க்கிறேன்” என்றபடி டிவிஎஸ்ஸை கைப்பற்றினான் சங்கர். கிளட்ச்சை
பிடித்த படி வண்டியை உதைத்தான்.
வண்டியை பல முறை உதைத்தும் உசுப்பேத்தியும் பார்த்தான். ம்ஹீம் வண்டிக்கு
உயிர் வருவதாக இல்லை... ஏதோ டிபி நோயாளி குறட்டை விடுவதைப் போல
“டொர்..டொர்..டொர்..” என முனகியபடி முடங்கிப் போனது.
“தள்ளுடா நான் பார்க்கிறேன்...” என்ற ராமு டிவிஎஸ்ஸின் என்ஜின் பகுதிக்குள் கையை விட்டு சோக்கைத் தேடினேன்.
டிவிஎஸ்ஸின் வெளிச்சம்தான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அதன் இயக்கமும் நின்று போகவே எங்கும் இருள் மயமாயிருந்தது.
நல்லவேளையாக இருவரும் வெள்ளை சட்டை போட்டிருந்த்தால் இருவரின் உருவங்களும் தோராயமாக தென்பட்டது.
மின்மினி பூச்சிகள் ஆங்காங்கே வட்டமடித்துக் கொண்டிருந்தன. தூரத்தில்
இரண்டு நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்த சத்தம் இருவரின் காதுகளிலும்
தெளிவாக விழுந்தது.



“டேய் ரொம்ப இருட்டா இருக்குது... ஏதாவது இருந்தா எடுடா..?”
“இந்தா மாமா பென் டார்ச்...”[/b]திகில் கதை !! - Page 2 Halloween_demons_138

[b]“ம்ஹீம்... என்ன ஆச்சிடா இந்த சனியன் புடிச்ச வண்டிக்கு... ச்சே…“ ராமு சலித்துக் கொண்டே டிவிஎஸ்ஸிற்கு உயிர் கொடுக்கப் பார்த்தான்.

ம்ஹீம்... ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்பது போல “ட்ர்ர்.. ட்ர்ர்… ட்ர்ர்…” என
குறட்டை சத்தம் மட்டும் கொடுத்துவிட்டு அப்படியே தூங்கிப் போனது.
ராமுவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சங்கர், பாலத்திற்கு இடது புறம் உள்ள இறக்கத்தில் பார்வையை ஓடவிட்டவன் சற்று நிதானித்தான்.
அந்த கும்மிருட்டிலும் அங்கே வெள்ளை வெளேரென ஒரு நிழலுருவம் படுத்துக்
கிடப்பது போல் சங்கருக்குத் தோன்றியது. “அடச்சே பிரம்மைடா…” என தனக்குத்
தானே ஆறுதல் சொல்லிக் கொண்டபடி பார்வையை வேறு பக்கம் திருப்ப
முயற்சித்தான். ஆனால் திருப்ப முடியவில்லை.
படுத்துக் கிடந்த நிழலுருவம் மெல்ல மெல்ல எழுந்து உட்கார ஆரம்பித்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கருக்கு பயம் கவ்விக் கொண்டது...
“மாமா... மாமா... மாமா...” என ராமுவைக் கூப்பிட்டானே தவிர அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வரவில்லை.
அந்த உருவம் அவனையே பார்த்தபடி எழுந்து நின்றது.
ராமு அருகிலிருக்கிறான் என்ற தைரியத்தில் வாய் திறந்து “மாமா.. மாமா...
அங்க பாரு ஏதோ ஒன்னு வெள்ளையா தெரியுது…” என்று கத்தினான். அவன் கத்தியது
அவனுக்கு மட்டுமே கேட்டது. அவனுடைய வார்த்தைகளை பயம் விழுங்கிக் கொண்டது.
அவனுடைய உள்நாக்கு, வெளிநாக்கு என எல்லா நாக்கும் உலர்ந்து
போய்விட்டிருந்தது.
அந்த பயத்திலும் அந்த வெள்ளை உருவத்தை உற்றுப் பார்த்தான் சங்கர். அந்த
உருவம் பார்ப்பதற்கு மனித உருவம் போல தோன்றியது. அதன் முகம் பஸ்ஸில்
அரைபட்டதைப் போல மிகவும் நசுங்கிப் போயிருந்தது.
எழுந்து நின்ற உருவம் ஒரு கையை அவனை நோக்கி நீட்டியது. அப்போது சாலை ஓரமாக
நின்றிருந்த கம்பத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஆந்தை ஒன்று, அங்கிருந்த
அமைதியை கிழிப்பது போல், வேகமாய் அலறியபடி பறந்தோடியது.
ஆந்தையின் அலறலைக் கேட்டு திடுக்கிட்ட ராமு, சங்கரைப் பார்த்தபடி “டேய்
வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது... வண்டியைத் தள்ளு ஸ்டார்ட் ஆகுதான்னு
பார்ப்போம்…” என்றான்.
சில்லென்று வீசிக்கொண்டிருந்த இரவு நேரக் காற்று மட்டும் ராமு சொன்னதை
காதில் வாங்கிக் கொண்டது போல அவன் முகத்தை வருடி விட்டு போனது. தான்
சொன்னதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், சிலை போல சங்கர் நின்றிருப்பதை
பார்த்த ராமுவுக்கு கோபம் ஏற்பட்டது.
“டேய்... நட்டநடு ராத்திரியில, வெட்டவெளியில மாட்டிகிட்டிருக்கோம்... வண்டியத் தள்ளுடாங்கறேன்...” அப்போதும் சங்கர் திரும்பவில்லை.
“டேய் சங்கர் உங்கிட்டதாண்டா சொல்றேன்.. அங்க என்னடா பார்வை...” என்றபடி சங்கர் பார்த்த இடத்தை ராமுவும் பார்த்தான்.
அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. கோபம் தலைக்கேறவே... “டேய்…” என்றபடி சங்கரின் முதுகில் அடித்தான்.
அப்போதும் அவன் அசையாமலிருக்கவே... “டேய்.. சங்கர்... உன்னைத்தாண்டா...” என்றபடி அவனைப் பிடித்து உலுக்கினான்.

“மாமா... மாமா... மாமா...” என்றான்



"என்னடா..?" என்றபடி சங்கரின் முகத்தைப் பார்த்த ராமு அதிர்ந்து போனான்.
சில்லென்று காற்று வீசிக்கொண்டிருக்கையில் சங்கரின் முகம் குப்பென்று
வியர்த்துப் போயிருந்தது. அவனது கண்கள் பீதியில் இருந்ததை அந்த இரவிலும்
தெளிவாகத் தெரிந்தது.
“என்னடா மாப்ள... என்னடா..?” என்றான் ராமு

“மாமா.. அங்க ஏதோ வெள்ளையா ஒரு உருவம் தெரியுது மாமா..?” என்று சொன்னானே தவிர, அந்த திசையிலிருந்து அவன் பார்வையை திருப்பவே இல்லை.
அவன் சொன்ன இடத்தில் பென் டார்ச் அடித்துப் பார்த்த ராமுவிற்கு ஒன்றும்
தெரியவில்லை. “டேய்… இதுக்குத்தான் பேய் படம் எல்லாம் பாக்காதங்கறது. அங்க
ஒண்ணுமே இல்ல... ஏண்டா உளர்ற... நீ முதல்ல வண்டியைத் தள்ளு…” என்றபடி
வண்டியில் உட்கார்ந்து கொண்டான் ராமு.





ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 17, 2011 3:36 pm

நவநீதன் பாய் வீட்டின் அருகே இருந்த சந்து வழியாக கடையை நோக்கி நடந்தான்.

அவன் மனதில் அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள் துளைத்துக் கொண்டே இருந்தது. ‘பேயே இல்லங்கறவனாச்சே நான்... என்னை அது என்ன பண்ண முடியும். இதை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல... ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கண்ணாலயே பார்த்தேனே..? இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம கூட வந்த தடியனுங்க ஏன் கடைக்கு வர்றதுக்கு கூட பயப்படறானுங்க..? பேய் பிடிச்சிடும்னா பயப்படறானுங்க... ஆளுதான் வளர்ந்திருக்கானுங்களே தவிர அறிவு வளரலயே...’ என குழப்பமாய் யோசித்துக் கொண்டே வந்தான்.


அதற்குள் கடை வந்து விடவே, நூறு ரூபாயை நீட்டி “ஒரு பெப்ஸி, நாலு முறுக்கு கொடுங்க...” என்றான்.


“சில்லறை இல்ல தம்பி... வேணும்னா ஒரு பாக்கெட் முறுக்கும் பெப்ஸியும் வாங்கிக்கோங்க… சில்லறை தரேன்” என்றார் கடைக்காரர்.


“சரி... அப்படித்தான் கொடுங்க...” என்றவன், கடைக்காரரைப் பார்த்து “ஏங்க... இந்த பஷீர் பாய் எப்படிப்பட்ட ஆளுங்க... பேய் ஓட்டுவாரா..? இல்ல எல்லாம் சும்மா ஏமாத்து வேலையா..?”


“எனக்கு தெரியாது தம்பி, என்னோட அண்ணனோட கடை இது. அவர்தான் தினமும் இந்த கடையில இருப்பார். நான் இன்னிக்குத்தான் இந்த கடைப்பகமே வரேன்…” என்றார்.


கேட்ட தகவல் கிடக்காமல் போனதில் மனதிற்குள் சற்று வருத்தப்பட்டாலும், கடைக்காரர் கொடுத்த பெப்ஸியையும், முறுக்கு பாக்கெட்டையும், மீதி சில்லறையும் வாங்கிக் கொண்டு, அந்த இருண்ட சந்தினுள் நவநீதன் திரும்பி வந்தான்.


நவநீதன் வரும் வரை அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஆவி, நவநீதன் கையில் தான் கேட்ட பொருள்கள் இருப்பதை பார்த்து, முகத்தைப் பிரகாசப் படுத்திக் கொண்டது.


அதே சமயத்தில் “டேய்... கடைக்கு போனவன்... முழுசா திரும்பிட்டான்டா” என்று அருகிலிருந்த நண்பனின் காதில் கிசுகிசுத்தான் வெள்ளியங்கிரி,.
பெப்ஸியையும், முறுக்கு பாக்கெட்டையும் பாயிடம் கொடுத்து விட்டு, முன்பு எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தானோ, அந்த இடத்தினில் போய் நின்று கொண்டான் நவநீதன்.


நவநீதன் கொடுத்த பொருட்களை வாங்கிய பஷீர் பாய், ஆவியிடம் கொடுக்காமல் தன் கையில் வைத்துக் கொண்டார்.


தன்னிடம் உடனே கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ஆவி, பாயின் இந்த செய்கையால் ஏமாற்றமடைந்த ஆவி, பஷீரை ஏக்கத்துடன் பார்த்தது.


“என்ன பாக்கற... இதெல்லாம் உனக்கு தரலன்னா..?”

‘உம்’ என்பது போல் தலையை ஆட்டியது ஆவி.


“தரேன்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு... இதெல்லாம் வாங்கி சாப்பிட்டதும், இந்த பையனை விட்டு விட்டு போயிடறேன்னு சத்தியம் பண்ணி கொடுக்கணும். இந்த பையன் உடம்பை விட்டு போயிடணும்... இதெல்லாம் செய்யறேன்னு சொல்லு தரேன்...” என்றார்.


“ம்ம்... நீங்க சொன்ன படி சத்தியம் செய்யறேன்...” என்றது ஆவி.


“உன்னை நம்பறேன்... ஏமாத்து வேலை ஏதாச்சும் பண்ணினா, உன்னை எங்கயும் போகமுடியதபடி பண்ணிடுவேன்... ஜாக்கிரதை...” என்ற படியே பஷீர் முறுக்கு பாக்கெட்டையும், பெப்ஸியையும் ஆவியிடம் கொடுத்தார்.


“ம்ம்... இந்தா தின்னுட்டு.... சத்தியம் பண்ணிட்டு ஓடிப்போ...” என்றார் பஷீர்.

முறுக்கு பாக்கெட்டை ஆவலாக வாங்கிய ஆவி, அடுத்த சில நிமிடத்திற்குள் அனைத்தையும் காலி செய்தது. முறுக்கு சாப்பிடும் போது எழுந்த “நறுக்... முறுக்...” சப்தம், அங்கிருந்தவர்களின் காதுகளில் மிகத் துல்லியமாக விழுந்தது. அடுத்ததாக பெப்ஸியை எடுத்த ஆவி, ஒரே மூச்சில் குடித்து விட்டு வெறும் பாட்டிலை கீழே வைத்தது.

இத்தனையும் 5 நிமிடத்தில் ஆவி சாப்பிட்டதைப் பார்த்த நவநீதனுக்கு, ஐந்து நாள் பட்டினி கிடந்தவன் சாப்பிட்டதைப் போல் தெரிந்தது.

‘ம்... சாப்பிட்டு விட்டேன். இப்போ நான் என்ன செய்யணும் சொல்லு’ என்று கேட்பது போல் பஷீரின் முகத்தை ஆவி பார்த்தது.

“என்ன பாக்கற.. நான் சொல்ற மாதிரி, சொல்லி சத்தியம் பண்ணிட்டு ஓடிப் போயிடணும்... செய்வியா..?” என்றார்.

“நான் என்னான்னு சொல்லணும்... சொல்லுங்க..?”என்றது.

“பஷீர் பாய் மீது சத்தியமா, நாகூர் ஆண்டவர் மீது சத்தியமா, இன்ஷா அல்லா மீது சத்தியமா இந்த பையன விட்டு ஒடிப் போயிடறேன். இனி இந்தப் பையன மட்டுமில்ல, யாரையுமே பிடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்” என்றார் பஷீர்.

நம்மை போகச் சொல்றாங்களே என்பது போல் ஒரு பரிதாபமான பார்வையை ஆவி பார்த்தது.

“டேய்... நீ கேட்டத வாங்கிக் கொடுத்தாச்சு... தின்னதும் பையனை விட்டுடுறேன்னு சொல்லியிருக்க.. இப்ப நீ சத்தியம் பண்ணறியா... இல்ல என் வேலையை காட்டட்டுமா?” என்றபடி, அவரது கட்டிலுக்கு கீழே வைத்திருந்த எருக்கங் குச்சியை கையிலெடுத்தார் பஷீர்.

எருக்கங் குச்சியைப் பார்த்த ஆவி... “இல்ல வேணாம். நான் சத்தியம் பண்ணிடறேன்” என்றபடி, பஷீர் பாய் சொன்னது போல் சொல்லி, தரையில் மூன்று தரம் கையால் அடித்து சத்தியம் செய்தது.

அடுத்த சில வினாடிகளில் சங்கரின் முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் அப்படியே விலக ஆரம்பித்தது. திடீரென்று சங்கர் பேச ஆரம்பித்தான் “தோ போவுது... அங்கே போவுது...” என்றான்.

பஷீர் பாய் சங்கரிடம் கேட்டார் “யாருப்பா போறது.. சொல்லு”
“வெள்ளையா ஒரு உருவங்க.. அது என்ன பாத்துகிட்டே போகுது. ரோட்டோரமா இருகிற புளியமரத்தை நோக்கி போகுது…” என்றான் சங்கர்.

சங்கர் தெளிவாகப் பேசியதைக் கேட்ட உடனே வேதாசலத்தின் முகத்திலும், கமலம்மாளின் முகத்திலும் சந்தோஷப் புன்னகை பூத்தது.

அதற்குள் பஷீர் பாய் சொம்பிலிருந்த நீரை எடுத்தார். தன் வாய்க்குள் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தபடி, அந்த தண்ணீரை சங்கரின் மீது தெளித்தார்.

தண்ணீர் உடல் மேல் பட்டதும்.. “ம்ம்.. ப்ச்...” என்றபடியே ஒரு விதமாக உடலை சிலிர்த்துக் கொண்டான் சங்கர்.

அதுவரை அமைதியாக இருந்த வேதாசலம் மெல்ல சங்கரை அழைத்தார். “சங்கரு... யப்பா சங்கரு...”

சங்கரிடமிருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

இதைக் கண்ட பஷீர் பாய், மறுபடியும் தண்ணீரை எடுத்து மந்திரமொன்றை முணுமுணுத்தபடியே சங்கரின் முகத்தில் தெளித்தார்.

“ம்ம்...ப்ச்சே...” என்றான் சங்கர்.

“தம்பி… தம்பி... ஏன் பேச மாட்டேங்கற…” என்று சங்கரைப் பார்த்து பஷீர் பாய் கேட்டார்

“அந்த வெள்ளை உருவம், புளிய மரத்து மேல உக்காந்துகிட்டு என்னையே பார்த்து சிரிக்குது…” என்றான் சங்கர்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நவநீதன், சங்கர் காட்டிய திசையில் தன் பார்வையை தீர்க்கமாக ஓடவிட்டான். அவன் சொன்னது போல் ஒரு உருவத்தையும் காணோம். தூரத்தில் புளியமரம் தேமே என்று நிற்பதும், அதன் ஊடே கருமை நிறம் இருப்பதும்தான் அவனுக்குத் தெரிந்த்து. ‘எதைப் பார்த்து விட்டு, இவன் உருவங்கறான்..’ என்று யோசித்தான்.

அவனது யோசனையை பஷீரின் குரல் கலைத்தது.

“அத விடு தம்பி... நான் பாத்துக்கறேன்...” என்று அருகிலிருந்த வேதாசலத்தைக் காண்பித்து “யாரு இவரு..?” என்று பாய் கேட்டார்

அதுவரை பஷீரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சங்கர் , முதல் முறையாக வேதாசலத்தை திரும்பிப் பார்த்து “எங்கப்பா” என்றான்.

அருகிலிருந்த கமலம்மாளை காண்பிக்கவும் “எங்கம்மா” என்றான்.

வேதாசலம் முகத்தில் சந்தோஷம் இன்னும் அதிகமாக வந்து ஒட்டிக்கொண்டது.


பஷீர் பாயை நோக்கி “நீங்கதான் பாய்… எம் பையன காப்பாத்திய தெய்வம்…” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்

அதற்கு பஷீர் பாயிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.


அப்போது நவநீதன், “டேய் சங்கர்…” என்றான்

நவநீதன் பக்கம் திரும்பிய சங்கர் “என்னடா நவநீ” என்று பதிலளிக்கவும், நவநீதன் மனதில் ஆயிரம் டன் ஆச்சர்யம் கிளம்பியது. ‘அட பரவால்லயே தெளிவா பேசறான்’ என நவநீதன் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

சங்கரின் சித்தி இடைமறித்து கேட்டாள் “சங்கரு.. எப்படிப்பா இருக்க..?”

அவள் பக்கம் திரும்பிய சங்கர் “நல்லா இருக்கேன் சித்தி…” என்றான்.

நவநீதன் சங்கரை உற்றுப் பார்த்தான். சங்கருடைய முகம் இப்போது மிகவும் தெளிவாக இருந்தது. பஷீர் பாய் அதற்குள் பெட்டியில் வைத்திருந்த, தாயத்து ஒன்றை கையிலெடுத்து, கண்ணை மூடியபடி சில மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் சங்கரை நோக்கி தம்பி உன் சோத்தாங்கைய நீட்டு என்றார்.

அதுவரை அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்த சங்கரின் முகம் அஷ்ட கோணலாகியது.



"அடி செருப்பால.. சைத்தான் கி பச்சா... யாருகிட்ட விளையாடுற.. இந்த பையன விட்டுட்டு போறேன்னு சொல்லி சத்தியம் செஞ்சிட்டு, மறுபடியும் இவன் மேலேயே வந்து உக்காந்துகிட்டியா..?" என்று கோபாவேசமாக கத்தினார் பஷீர் பாய்.

அதைக்கேட்ட அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 17, 2011 3:38 pm

பஷீர் பாயின் குரலைக் கேட்டதும், சங்கரை சுற்றி நின்றிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அவரவர் முகத்தில் ஆயிரம் டன் அதிர்ச்சி அப்பிக் கொண்டது.

சங்கரின் மேல் அந்த ஆவி மறுபடியும் வந்து அமர்ந்து கொண்டதும், அவனுடைய முகம் பழையபடி இறுக்கமாக மாறிவிட்டது. அவனுடைய முகம் மறுபடியும் இருண்டு போனது.

ஆவியைப் பார்த்து பஷீர் ஆவேசமாய் கத்த ஆரம்பித்தார் “சரிடா... நீயா... இல்ல இந்த பஷீரான்னு பார்த்துடறேன், யாருகிட்ட விளையாடுற” என்றபடியே, தன்னிடமுள்ள தாயத்தை எடுத்து, வாயினருகே வைத்தபடி, ஏதேதோ மந்திரங்களை முணுமுணுத்தார்.

அந்த ஆவி பாயின் முகத்தைப் பயத்தோடு பார்த்தது.

மந்திரத்தை சொல்லி முடித்த பஷீர், சட்டென்று எழுந்து சங்கரின் உச்சிமுடியை எட்டிப் பிடித்தார். பிடித்தஅதுமே அவர் வாயில் சில மந்திரங்களை உதிர்க்க ஆரம்பித்தார்.

சங்கரின் மேல் இருந்த ஆவி “ஐயோ... என்னை விடுங்க, வலிக்குது பாய்...” என அலறியது.

வேதாசலத்தை சைகை மூலம் அருகில் அழைத்த பாய், சங்கரின் முடியை கண்ணால் காட்டி “இந்த முடியில ஒரு முடி கூட பிரிஞ்சிடக் கூடாது. அப்படியே கெட்டினா பிடிச்சுக்குங்க” என்றார்.

சங்கரின் அருகே வந்த வேதாசலம், பஷீர் பாய் சொன்னபடியே பயத்தோடு சங்கரின் உச்சி முடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

“விட்டுடுங்க பாய்.. நான் போயிடறேன்...வேணாம் பாய் என்னை விட்டுடுங்க.. நான் எங்கயாச்சும் ஓடிப் போயிடறேன்” என ஆவி கத்திக்கொண்டே இருந்தது.

அதன் குரலை சிறிதும் சட்டை செய்யத பஷீர், அருகிலிருந்த தாயத்து டப்பாவிலிருந்து, கத்தரிக்கோலை கையிலெடுத்தார். வேதாசம் பிடித்திருந்த உச்சி முடியை கவனமாக கத்தரித்தார்.

சங்கரின் உச்சி முடி கத்தரிக்கப்பட்டதும் சங்கரின் மீதிருந்த ஆவியின் குரல் அடங்கிப் போய்விட்டது. சங்கர் மயக்கமானவன் போல் கீழே விழப்போனான்.

ஒரு கையில் சங்கரின் உச்சிமுடியைப் பிடித்துக் கொண்டு, மறுகையால் அவனை தாங்கிப் பிடித்தார்.

அவரது கையிலிருந்த உச்சி முடியை மிகவும் பத்திரமாக வாங்கிய பஷீர், சில மந்திரவ்களை முணுமுணுத்தபடி அதை தாயத்துப் பெட்டியில் வைத்து பத்திரமாக மூடினார்.

ஏற்கனவே மந்திரித்து வைத்திருந்த தாயத்தை எடுத்து, சங்கரின் வலது கையில் கட்டி விட்டார்.

வேதாசலத்தைப் பார்த்து “இனி பிரச்சினை இல்லை. பயப்படாம உல்கபையன நீங்க கூட்டிகிட்டு போகலாம். நான் மந்திரிச்சு கொடுக்கறதை வாங்கிக்கிட்டு, நான் சொல்றதை மறக்காம செஞ்சுடுங்க” என்றார் பஷீர் பாய்.

அதற்குள் கமலம்மாளும், சங்கரின் சித்தியும் வந்து, அவனை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டனர். சங்கர் ஆழ்ந்த உறக்கத்திற்குப் போய்விட்டது போல் தோன்றியது.

வேதாசலத்தை தனியே அழைத்துச் சென்ற பஷீர் பாய், அவரிடம் எதையோ ரகசியமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.

கமலம்மாள் பஷீரைப் பார்த்து “பாய்.. எம்பையன ஆட்டோவுக்கு கூட்டிகிட்டு போகலாமா” என்றார்.

“ம்ம்... தாரளமா கூட்டிகிட்டு போங்க... பயப்பட வேண்டாம்” என்றுவிட்டு, மீண்டும் வேதாசலத்திடம் ரகசியமாய் கிசுகிசுக்க ஆரம்பித்தார்.

அதுவரை ஓரமாக நின்று கொண்டிருந்த ராமுவையும், வெள்ளியங்கிரியையும் கூப்பிட்ட கமலம்மாள் “சங்கரை ஆட்டோவுக்கு கூட்டிகிட்டு போங்கப்பா” என்றார்.

ஒரு வித பயத்தோடு வந்த ராமுவும், வெள்ளியங்கிரியும் சங்கரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டனர்.

ராமுவை விட்டு சற்று தூரம் தள்ளி நின்று கொண்டிருந்த நவநீதனைப் பார்த்து “நவநீ, எங்க்ககூட நீயும் வாயேன்” என்றான் வெள்ளியங்கிரி.

‘இனிமேல் கிளம்ப வேண்டியதுதான்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, நவநீதனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

ஐந்து நிமிடம் கழித்து வேதாசலம் தனது கையில் மூன்று எலுமிச்சம்பழம், யந்திரத் தகடு என சில மந்திர சமாச்சாரங்களை எடுத்து வந்தார்.

வேதசலத்திற்காக காத்திருந்தவர்கள், அவர் வந்ததும் வரும்போது எப்படி ஆட்டோவில் உட்கார்ந்திருந்தார்களோ, அதே இடங்களில் இப்போதும் உட்கார்ந்து கொண்டனர்.

ராமுவும் வெள்ளியங்கிரியும் டி.வி.எஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.
ஆட்டோ கிளம்பியது. கமலம்மாள் தனது மடியில் சங்கரை கிடத்திக் கொண்டார். சங்கரின் சித்தி மறுபுறம் அமர்ந்திருக்க, அவருக்கு பக்கத்தில் நவநீ உட்கார்ந்திருந்தான்.

வேதாசலம் பின்புறம் உட்கார முயல, ஆட்டோ டிரைவர் உதறலோடு கூப்பிட்டான்.

“அண்ணே... முன்னாடி என்னோட வந்து உட்காருங்க... எனக்கு தனியா முன்னாடி உட்கார்ந்திருக்க பயமாயிருக்கு” என்றான்.

“அடச்சே.. நல்ல ஆம்பளடா நீ...” என்று அவனை திட்டியவாறு, ஆட்டோ டிரைவரோடு முன்புறம் உட்கார்ந்து கொண்டார்.

அட போண்ணே... நான் இந்த மாதிரி என் வாழ்க்கையில பார்த்ததே இல்ல. உங்க பையன் ஆவி பிடிச்ச மாதிரி இருந்தான். திடீர்னு நல்லாயிட்ட மாதிரி தெரிஞ்சான். மறுபடியும் ஆவி வந்து ஒட்டிகிச்சு... இதெல்லாம் நான் பார்த்ததே இல்லண்ணே... அங்க என்னால நிக்கவும் முடியல... அங்கிருந்து நகரவும் முடியல... எனக்கு பேயின்னாலே பயம்ணே... ஆட்டோவுக்கு கூட காசு வேணாம்.. பத்திரமா என்னை குன்றத்தூர்ல போய் விட்டுடீங்கன்னா போதும்ணே... என்றான்.

அடேய் பாவி... எல்லாம் சரியாயிடுச்சிடா... நீதான்டா பயப்படமா, ஒழுங்கா ரோட்டை பாத்து வண்டிய ஓட்டணும். எங்களை பத்திரமா நீதாண்டா கொண்டு போய் விடணும். என்றார் வேதாசலம்

“அதுக்குத்தாண்ணே உங்களை என் பக்கத்திலயே உட்காரச் சொன்னேன்…” என்றபடி ஆட்டோவை குன்றத்தூரை நோக்கி விரட்டினான்.

வேதாசலமும், ஆட்டோ டிரைவரையும் பேசிக்கொண்டு வந்த்தை, கேட்டு முடித்த நவநீதன் தனது கடிகாரத்தைப் பார்த்தான். அந்த ரேடியம் வாட்ச் மணி இப்போது 11.30 என்று தெளிவாய்க் காட்டியது.

அந்த தேசிய நெடுஞ்சாலையில் சுத்தமாய் ஜனநடமாட்டமில்லை. பெரிய பெரிய டேங்கர் லாரிகளும், அரசு விரைவுப் பேருந்துகளும், தனியார் டீலக்ஸ் பேருந்துகளும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஆட்டோவை கடந்து சென்றன.

குன்றத்தூரிலுள்ள வேதாசலம் வீட்டிற்கு ஆட்டோ போய்ச்சேரும் வரை யாரும் பேசிக் கொள்ளவில்லை.

வேதாசலம் வீட்டின் முன்பு ஆட்டோ வந்து நின்றது. பின்னாடியே ராமுவும், வெள்ளியங்கிரியும் டி.வி.எஸ்ஸில் வந்து சேர்ந்தனர்.


ஆட்டோவின் சத்தம் கேட்டதும், பப்பி நாய் குலைக்க ஆரம்பித்தது. “டேய் பப்பி...” என்று வேதசாலம் அதட்டவும், பப்பி அமைதியானது.

சங்கரை கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்து வந்தனர். அதுவரை அவர்களுடன் இருந்த நவநீதன், நேரே வேதாசலத்திடம் சென்று “நான் போயிட்டு வர்றேங்க” என்றான்.

நீ எங்க கூட வந்ததுக்கு ரொம்ப நன்றிப்பா நவநீ... உங்களுக்கும் எங்களுக்கும் சண்டை நடந்திருந்தாலும் அத மனசில வச்சிக்காம கூட, இந்த அர்த்த ராத்திரியில எங்க கூட வந்தியே.. உனக்கு ரொம்ப நல்ல மனசுப்பா... போய்ட்டு வாப்பா’’ என்றார்

அட ஏங்க, பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க, அவன் என்னோட பிரண்டு... சரி நான் வர்றேங்க..? என்று விட்டு, பக்கத்து தெருவில் இருக்கும் வீட்டை நோக்கிப் போனான்.

ஒரு நிமிட நடையில் வீட்டை அடைந்தான். வீட்டிற்கு வெளியே நவநீதனின் அம்மாவும், அப்பாவும் தூங்கிக் கொண்டிருக்க, சத்தம் காட்டாமல் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

உள்ளே வந்த்தும் டியூப் லைட்டை எரிய விட்டான். மணி 12 என்பதற்கு அடையாளமாக சுவர் கடிகாரம் மெல்லிசை ஒன்றை இசைக்க விட்டு, சில மணித்துளிகளில் அமைதியானது.

சில நிமிடங்களில் லுங்கிக்கு மாறியவன், பாயை விரித்து படுத்துக் கொண்டான். அவன் மனதில் இன்று மாலை முதல் இரவு வரை நடைபெற்ற சம்பவங்கள் வந்து போயின.

அடுக்கடுக்காய் கேள்விகளும், குழப்பங்களும் அலைகழித்தன.
இதையெல்லாம் நம்புவதா? வேண்டாமா? என்று குழம்பிக் கொண்டே இருந்தவன், எப்படியோ தூங்கிப் போனான்.

அதே நேரம் மற்றொரு இடத்தில்..!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

இதுக்கு மேல அவர் பதிவு போடலா அவர் பதிவை போட்டதும் உங்களுக்கு சொல்ல்ட்றேன்

நன்றி மோகனன்




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 17, 2011 3:40 pm

dsudhanandan wrote:ஏன் இன்னைக்கு உங்களுக்கும் உமாவுக்கும் ஏதாவது பிரச்சனையா? ஒரே திகிலா போட்டு அவங்கள பயமுறுத்தறீங்க... சில நாட்களுக்குமுன்தான் அவங்கள குசலம் விசாரிக்க பேய் வந்ததா சொன்னாங்க... திகில் கதை !! - Page 2 865843
அப்படி இல்ல அண்ணா படிக்க நல்லா இருந்தது அதான் இங்கே போட்டுட்டேன்
சண்டை மூட்டி விடுறீங்களா திகில் கதை !! - Page 2 211781



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 17, 2011 3:44 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:ஏன் இன்னைக்கு உங்களுக்கும் உமாவுக்கும் ஏதாவது பிரச்சனையா? ஒரே திகிலா போட்டு அவங்கள பயமுறுத்தறீங்க... சில நாட்களுக்குமுன்தான் அவங்கள குசலம் விசாரிக்க பேய் வந்ததா சொன்னாங்க... திகில் கதை !! - Page 2 865843
அப்படி இல்ல அண்ணா படிக்க நல்லா இருந்தது அதான் இங்கே போட்டுட்டேன்
சண்டை மூட்டி விடுறீங்களா திகில் கதை !! - Page 2 211781

கூல் இளவரசி கூல்.... கதை நான் படிச்சிட்டு இருக்கேன்...பேய் பயத்தப்பத்தி சொல்லி இருந்தாங்க... நடுவுலே அது நினைவுக்கு வந்தது புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 17, 2011 3:45 pm

வின்சீலன் wrote:ரேவதி இத தான் எதிர் பார்த்தேன் திகில் கதை !! - Page 2 677196
திகில் கதை !! - Page 2 838572 திகில் கதை !! - Page 2 838572



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 17, 2011 3:59 pm

பாருங்க சுதன்..இவ்ளோ பெரிய போஸ்டிங் ....படிக்கவே இல்ல நானு...வீட்ல போனா தான் பொறுமையா படிக்க முடியு அய்யோ, நான் இல்லை ம்..
நீங்க சொல்ட்ரத பார்த்த கொடுமையா இருக்கும் போல.;




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 4:55 pm

ரேவதி , ரொம்ப நல்லா இருந்துச்சு கதை மகிழ்ச்சி நன்றி

ஆனா கடைசீல முடிவ சொல்லாம ,
இப்படி சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே . சோகம்

சீக்கிரமே முடிவ போடுங்கப்பா புன்னகை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 17, 2011 4:56 pm

பகுதி இரண்டில் முடிவு வரும்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 17, 2011 5:53 pm

aathma wrote:ரேவதி , ரொம்ப நல்லா இருந்துச்சு கதை திகில் கதை !! - Page 2 677196 திகில் கதை !! - Page 2 678642

ஆனா கடைசீல முடிவ சொல்லாம ,
இப்படி சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே . திகில் கதை !! - Page 2 440806

சீக்கிரமே முடிவ போடுங்கப்பா புன்னகை
எனக்கு மட்டும் ஆசையா என்ன திகில் கதை !! - Page 2 440806 இந்த பதிவை எழுதியவர் இன்னும் முடிவை போடலா பொறுத்திருங்கள் புன்னகை



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Sep 17, 2011 8:34 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
கொஞ்சம் திகில் என்பது போல தான் இருந்தது... சிரி
முனி படத்தில் வரும் சில காட்சிகள் இதை படிக்கும் போது ஞாபகம் வந்தது...
நவநீதனை போலவே எனக்கும் பல சந்தேகங்கள்...ஓரக்கண் பார்வை






புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக