புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
100 Posts - 48%
heezulia
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
7 Posts - 3%
prajai
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
sanji
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
227 Posts - 51%
heezulia
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
18 Posts - 4%
prajai
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:21 am

Dr.M.S.வசந்தகுமார்.(லண்டன்)

ஜாமக்காரனின் முகவுரை

மரித்த ஆவிகளைக்குறித்து வாசகர்கள் வாசிக்குமுன் பிசாசைக்குறித்து நீங்கள் அறியவேண்டும்.

தேவனுக்கு மூன்று முக்கிய தூதர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர். லூசிபர். இந்த பெயரை நம் வேதபுத்தகத்தில் எந்த மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மூலபாஷை வேதபுத்தகத்தில் மட்டும் லூசிபர் என்று பெயரை குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது.

முதலாம் தூதன்தான் லூசிபர்

இரண்டாம் தூதனின் பெயர் காப்பிரியேல்

மூன்றாம் தூதனின் பெயர் மிகாயேல்

லூசிபர் என்ற தூதனை ஏதேன் தோட்டத்தில் காவல்காக்க வைத்த விவரம் எசே 28:11-15ல் காணலாம். அப்போது லூசிபர் தன் உள்ளத்தில், தன்னை தேவனுக்கு சமமாக்க முயற்சித்ததையும் அது தேவனுக்கு கோபம் உண்டாக்கியதையும் ஏசா 14:11-15ல் வாசிக்கலாம். அதனால் தேவன் லூசிபர் என்ற தூதனையும் அவனோடு உள்ள தூதகணங்களையும் பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார்.

துரத்திவிடப்பட்ட லூசிபர் என்ற தூதன்தான் பிசாசு அல்லது தேவனுக்கு எதிரானவன் - சத்துரு - அதர்மமூர்த்தி - எதிர்கிறிஸ்து - அந்திகிறிஸ்து என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதால் தேவன்மேல் கோபம்கொண்டு தேவன் உண்டாக்கிய மனிதர்களை தேவனிடமிருந்து பிரிக்க பல வஞ்சக ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறான். அப்படி மக்களை ஏமாற்ற செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான். செத்துப்போன ஆ(வி)த்துமாக்களின் பெயரில் ஊழியர்கள் மூலமாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாகும்.

இப்போது தமிழ்நாட்டில் இந்த ஊழியங்கள்தான் அதிகமாக காணப்படுகிறது. இதனால் எத்தனை ஆயிரம் மக்கள் பயந்துக்கொண்டும், தைரியமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இந்த கட்டுரையை எழுதியவர் லண்டனில் உள்ள வேத ஆராய்ச்சி செய்யும் Dr.M.S.வசந்தகுமார் என்பவர் ஆவார். இவர் எழுதிய இந்த மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? என்ற கட்டுரை உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று இதை வெளியிடுகிறேன். இனி மற்ற விவரங்களை தொடர்ந்து வாசியுங்கள். எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய செய்தி. ஆகையால் இந்த ஆராய்ச்சி கட்டுரையை தொடர் கதையைப்போல் துண்டுதுண்டாக வெளியிடாமல் முழுமையாக நீங்கள் படித்து அறிய வேண்டும் என்பதற்காக அதிக பக்கங்களை இந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு என்று ஒதுக்கியிருக்கிறேன்.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:21 am

மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்கமுடியுமா?

கிறிஸ்தவர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்று, மரித்த மனிதர்களின் ஆவிகளைப்பற்றியதாகும். அதாவது, "மரித்த உறவினர்கள், மூதாதையர்களின் ஆவிகளினால் உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு ஆலோசனைகளும், ஆவிக்குரிய வழிநடத்துதல்களும் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்க முடியுமா?" என்பது பொதுவாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய ஒரு கேள்வியாகவே உள்ளது. சில கிறிஸ்தவர்கள், தாங்கள் வாழும் இடங்களிலுள்ள பாரம்பரிய நம்பிக்கைகளினதும் பிற மதச்சிந்தனைகளினதும் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக, மரித்தோரின் ஆவிகள் தங்களோடு தொடர்புக்கொள்வதாகவும், தங்களுக்கு மரித்தோரின் ஆவிகளின் மூலம் ஆலோசனைகளும் வழிநடத்துதல்களும் கிடைப்பதாகவும் கூறிவருகின்றனர்.

மரித்தோரின் ஆவிகள் தங்களுடைய வாழ்வில் அற்புதங்கள் செய்வதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவர்கள் மத்தியில், மரித்த பக்தர்கள் கனவில் வருவதுப்பற்றியும், நேரடியாகக் காட்சியளிப்பது பற்றியும், அவர்கள் உயிரோடிருப்பவர்களுக்குப் பலதரப்பட்ட ஆசீர்வாதங்களையும், ஆலோசனைகளையும் அருள்வதைப் பற்றியும் பலவிதமான பாரம்பரியக் கதைகளும் உள்ளன. எனவே, மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியுமா? என்பதற்கும், அவைகளினால் உயிரோடிருப்பவர்களுக்கு நன்மையளிக்க முடியுமா? என்பதற்கும் வேதாகமத்தில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்துப்பார்க்க வேண்டியது அவசியமாயுள்ளது.

கிறிஸ்தவ உபதேசங்கள், நம்பிக்கைகள், நடத்தை முறைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது தேவனுடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமமே! எனவே, வேதாகமத்திற்கு முரணான எந்த ஒரு நம்பிக்கையும் உபதேசமும், நம்பகமானதும், சரியானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல. நாம் சகல உபதேசங்களையும், நமக்கு கொடுக்கப்படுகின்ற ஆலோசனைகளையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இது வேதாகமம் நமக்கு கொடுத்துள்ள ஒரு முக்கியமான கட்டளையாகும். இதனால்தான் "பிரியமானவர்களே, உலகத்திலே அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்" (1யோவா 4:1) என்று அறிவுறுத்தும் வேதாகமம், சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிதானிக்கப் படவேண்டும் என்றும் கூறுகிறது (1கொரி 14:29). எனவே தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தை அடிப்படையாகக்கொண்டு தீர்க்கதரிசனங்களைச் சோதித்துப் பார்த்து நலமானதை ஏற்றுக்கொள்ளவும் பொல்லாங்காய்த் தோன்றுகிறவைகளை நிராகரிக்கவும் நாம் அறிந்திருக்கவேண்டும் (1தெச 5:20,22).

இத்தகைய தன்மை ஒருவனுக்கு இல்லாதிருந்தால், அவனுடைய கிறிஸ்தவ விசுவாசம் உண்மையானதாக இராது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆவிக்குரிய நிஜத்தையும் போலியையும் வேறு பிரித்து அறியக்கூடிய ஆற்றுலுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆவிகளை சோதித்தறியும்படி வேதாகமம் கட்டளையிட்டுள்ளது. உண்மையில், இத்தகைய மனிதர்களே மெய்யான கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். இதனால்தான், பிரசங்கிக்கப்பட்ட தேவ வசனத்தை மனோவாஞ்சையாய் ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தவர்கள் நற்குணசாலிகளாக இருந்தார்கள் என்பதை அப்போஸ்தலர் 17:11 அறியத்தருகின்றது. இவ்வசனத்தில் "ஆராய்ந்து பார்த்தல்" என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், நீதிபதி வழக்கை விசாரித்து உண்மையைக் கண்டறிவதைக் குறிப்பிடும் சொல்லாக உள்ளது. எனவே, ஒரு நீதிபதியைப்போல, தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின்மூலம், மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்கவும், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் முடியுமா? என்று இந்நூலில் ஆராய்ந்து பார்ப்போம்.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:23 am

முதலாம் அத்தியாயம்

1. மரணத்திற்கு அப்பால் மரித்தோரின் ஆவிகள்:

மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்கமுடியுமா என்பதை அறிந்து கொள்வதற்கு, மரணத்தின் பின்னர் அவைகள் எங்கு செல்கின்றன என்பதை நாம் அறிந்திருக்கவேண்டியது அவசியம். அப்பொழுது அவைகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வந்து மனிதரை ஆசீர்வதிக்கமுடியுமா இல்லையா என்பதை நம்மால் அறிந்துக்கொள்ளமுடியும். மரணத்தின் பின்னர் மனிதருடைய சரீரம் மண்ணில் அடக்கம் பண்ணப்படுகின்றது அல்லது எரிக்கப்படுகின்றது. வேதாகம காலத்தில் மரித்தோரின் சரீரங்கள் அடக்கம் பண்ணப்பட்டதினால் அவைகள் மண்ணுக்குச் செல்வதாக வேதாகம் கூறுகின்றது. உலகின் முதல் மனிதனுடைய மரணத்தைப்பற்றி தேவன் கூறும்போது "நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்" (ஆதி 3:19) என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்போலவே, பிரசங்கி 3:20ல் "எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது. எல்லாம் மண்ணிலே உண்டாகிறது. எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது" என்றும், சங்கீதம் 146:4ல் "அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்" என்றும் நாம் வாசிக்கிலாம்.

மரணத்தின் பின்னர் மண்ணுக்குச் செல்லும் சரீரம் அழிந்துபோனாலும் சரீரத்தைவிட்டுப் பிரிவடையும் ஆவி (சங் 146:4, பிர 12:7, யாக் 2:26) அழியாது என்றே வேதாகமம் கூறுகிறது. "ஆத்துமாவைக்கொல்ல வல்லவர்களாயிராமல் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்" (மத் 10:28, லூக் 12:4-5) என்னும் இயேசுகிறிஸ்துவின் கூற்றில் "ஆத்துமா" என்னும் சொல் மரணத்தின் பின்பும் உயிரோடிருக்கும் மனிதனுடைய ஆவிக்குரிய பகுதியைக் குறிக்கின்றது. எனவே, மனிதனுடைய ஆவிக்குரிய பகுதி அழியாது என்பதை இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் அறியத்தந்துள்ளார். மனிதனில் "சடப்பொருள் பகுதி" "ஆவிக்குரிய பகுதி" என்னும் இரண்டு பிரதான பகுதிகள் உள்ளன. தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது, மண்ணினால் அவனுடைய சரீரத்தைச் செய்து, அதற்கு தம்முடைய ஜீவசுவாசத்தைக் கொடுத்தார் (ஆதி 2:7). இதனால் மனிதன் சடப்பொருள் பகுதியையும், ஆவிக்குரிய பகுதியையும் உடையவனாக இருக்கின்றான். மனிதனின் சடப்பொருள் பகுதியில் மாம்சம், எலும்பு, இரத்தம் போன்றவை உள்ளன. ஆவிக்குரிய பகுதியில் மனிதனின் ஆவியும், ஆத்துமாவும் உள்ளன (1தெச 5:23) மனிதனின் சடப்பொருள் பகுதியான சரீரமும் ஆவிக்குரிய பகுதியும் பிரிவடைவதே மரணமாகும்.

மனிதன் மரிக்கும்போது, அவனுடைய பகுதியான ஆவியும், ஆத்துமாவும் சடப்பொருள் பகுதியான சரீரத்தை விட்டுச்செல்கின்றன (2 கொரி 5:8, பிலி 1:23) இதனால்தான் வேதாகமத்தின் சில பகுதிகளில் மரணத்தின்போது ஆத்துமா சரீரத்தைவிட்டு செல்வதாகவும், ஏனைய பகுதிகளில் ஆவி சரீரத்தைவிட்டுச் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு மரணத்தின்போது ஆவி சரீரத்தைவிட்டுப் பிரிந்து செல்வதாகப் பிரசங்கி 12:7, சங் 146:6, யாக்கோபு 2:26 என்னும் வசனங்கள் கூறுகையில், ஆதியாகமம் 35:18, லூக்கா 12:20, அப்போஸ்தலர் 7:59 என்னும் வசனங்களில் ஆத்துமா பிரிவடைந்து செல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போலவே, மரித்த பிள்ளை உயிர்ப்பிக்கப்பட்டபோது, "பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது. அவன் பிழைத்தான்" என்று 1 இராஜா 17:22ல் கூறுகிறது.

மனிதனுடைய ஆவிக்குரிய பகுதியில் ஆவியும், ஆத்துமாவும் இருக்கின்ற போதிலும் இவை எப்பொழுதும் ஒன்றாகவே உள்ளன. இதனால்தான் வேதாகமத்தின் மனிதன் "சரீரமும் ஆவியும்" (1கொரி 5:5, 2கொரி 7:1) என்று அல்லது "சரீரமும், ஆத்துமாவும்" (1கொரி 7:34, மத் 10:28) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இவ்வசனங்களில் "சரீரமும் ஆவியும்" முழுமனிதனையும் குறிப்பிடுவதுபோலவே "சரீரமும் ஆத்துமாவும்" முழுமனிதனையும் குறிக்கின்றது. இதைப்போலவே மரித்தவர்கள் ஆத்துமாக்களாக (வெளி 6:9) அல்லது "ஆவிகளாக" (1பேது 3:19) இருப்பதாக வேதாகமம் கூறுகிறது. மரணத்தின்பின் உயிருடனிருக்கும் மனிதனுடைய ஆவியையும் ஆத்துமாவையும் உள்ளடக்கிய ஆவிக்குரிய பகுதியைக் குறிப்பிட்ட "மரித்தோரின் ஆவி" என்னும் சொல் இந்நூலில் உபயோகிக்கப்பட்டுள்ளது. சரீர மரணத்தின்பின் இந்த ஆவிக்கு என்ன நடக்கின்றது என்று இவ்வத்தியாத்தில் ஆராய்ந்து பார்ப்போம்.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:24 am

1. மரித்தோரின் ஆவிகள் இவ்வுலகத்தைவிட்டுச் செல்கின்றன:

மனிதருடைய மரணத்தின் பின்னர் அவர்களுடைய ஆவி இவ்வுலகத்தைவிட்டுத் தேவனிடம் செல்வதாக வேதாகமம் கூறுகிறது. பழைய ஏற்பாட்டில் பிரசங்கியின் புத்தகத்தில் மரணத்தின்போது மனிதருடைய ஆவி "உயர ஏறுவதாகவும்" (பிர 3:21) "தேவனிடத்திற்குச் செல்வதாகவும்" (பிர 12:7) குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சரீரத்தைப்போல அவைகள் மண்ணுக்குச் செல்லாமல், மேலே தேவனிடத்திற்குச் செல்கின்றன என்று பிரசங்கி கூறுகிறார். சகல மனிதருடைய ஆவிகளும் மரணத்தின் பின்னர் தேவனிடம் செல்வதாகப் பிரசங்கி கூறுவது நமக்கு குழப்பத்தை ஏற்ப்படுத்தலாம். ஆனால் மரணத்தின் பின்னர் மனிதருக்கு நியாயப் தீர்ப்பு இருப்பதனால் (பிர 12:14, எபி 9:27) சகல மனிதரின் ஆவிகளும் தேவனிடம் செல்வதாகப் பிரசங்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், மரணத்தின் பின்பான வாழ்வைப்பற்றி பழைய ஏற்பாட்டில் பொதுவான விஷயங்கள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ஏற்பாட்டிலேயே மரணத்தின் பின்னர் தேவனை அறிந்தவர்களுக்கும் அவிசுவாசிகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

மரணத்தின் பின்னர் தங்களுடைய ஆவி தேவனிடம் செல்லும் என்னும் நம்பிக்கையுடன் பழைய ஏற்பாட்டுக் பக்தர்கள் இருந்துள்ளதை சங்கீதம் 73:23-25 அறியத்தருகின்றது. "உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்" (சங் 73:24) என்னும் சங்கீக்காரனின் கூற்று, மரணத்தின் பின் அவன் தேவனோடு பரலோகத்தில் இருப்பதைப்பற்றிய அறிவிப்பாகவே உள்ளது. ஏனெனில் "மகிமையில் ஏற்றுக்கொள்வீர்" என்னும் சொற்பிரயோகம், "பரலோகத்தில் வரவேற்கப்படுவதையே" குறிக்கின்றது. தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த ஏனோக்கைத் தேவன் தம்மோடு இருக்கும்படி எடுத்துக் கொண்டதும் (ஆதி 5:24, எபி 11:5) தீர்க்கதரிசியாகிய எலியா பரலோகத்திற்குச் சென்றதும் (2இராஜ 2:11) இதை உறுதிப்படுத்தும் சம்பவங்களாக உள்ளன. "நான் கர்த்தருடைய வீட்டியே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" என்று தாவீது கூறும்போது தான் தேவனுடன் நித்திய காலமாக இருப்பதைப்பற்றியே அவன் குறிப்பிட்டுள்ளான். மேலும் "நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?" என்று கேட்ட இயேசுகிறிஸ்து. (மத் 22:31) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்போர் சரீரப்பிரகாரமாக மரித்தாலும், அவர்கள் ஆவிக்குரிய பிரகாரம் உயிரோடு பரலோகத்தில் இருப்பதை அறியத்தரும் விதத்தில், "தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்" என்று அடுத்த வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் (மத் 22:32). இதிலிருந்து இவர்களுடைய ஆவிகள் பரலோகத்தில் தேவனுடன் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது. மேலும், எபி 12:1ல் பழைய ஏற்பாட்டு பக்தர்கள் அனைவரும் "மேகம் போன்ற திரளான சாட்சிகளாகப் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதாகச்" சித்தரிக்கப்பட்டுள்ளதும் அவர்கள் பரலோகத்தில் தேவனுடன் இருப்பதற்கான ஆதாரமாக உள்ளது. மறுரூபமலையில் மோசேயும், எலியாவும் காட்சியளித்ததும் (மத் 17:3). இவர்கள் தேவனுடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

புதிய ஏற்பாட்டில் லாசருவையும், ஐசுவரியவானையும் பற்றிய உவமையில் தேவனை அறிந்தவர்களும் அவரை அறியாதவர்களும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதை இயேசுகிறிஸ்து சுட்டிக் காட்டியுள்ளார். (லூக் 16:19-31). இவ்வுமையின்படி மரணத்தின் பின்னர் லாசருவின் ஆவி "ஆபிரகாமின் மடிக்கும்" ஐசுவரியவானின் ஆவி "பாதாளத்திற்கும்" செல்கின்றன (லூக் 16:22-23). யூதர்களுடைய மொழிவழக்கில் "ஒருவருடைய மடியில் இருப்பது" மிகவும் நெருக்கமான உறவைக் குறிப்பிடும் முறையாகும். எனவே மரணத்தின்பின் லாசரு ஆபிரகாமுடன் மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய இடத்திற்குச் சென்றுள்ளான். யூதர்களுடைய நூல்களில் ஆபிரகாமின்மடி பரலோகத்தைக் குறிப்பிடும் சொற்பிரயோகமாகவே உள்ளது. ஆபிரகாம் பரலோகத்தில் இருப்பதனால், ஆபிரகாமுடன் மிகவும் நெருக்கமாக இருக்க கூடிய இடத்திற்குச் சென்ற லாசரு உண்மையில் தேவனிடத்திற்கே சென்றுள்ளான். இயேசு கிறிஸ்து இவ்வுமையில் சொல்லும் சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டு "ஆபிரகாமின் மடி" என்பது பிற்காலத்தில் பரலோகத்திற்கான பெயர்களில் ஒன்றாக மாறியது. எனவே தேவனை அறிந்தவர்கள் மரிக்கும்போது அவர்களுடைய ஆவி தேவனிருக்கும் பரலோகத்திற்கே செல்கின்றது என்பது தெளிவாகின்றது.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:24 am

பழைய ஏற்பாட்டைப்போலவே (பிர 3:21, 12:7) புதிய ஏற்பாடும் மரித்தோரின் ஆவிகள் தேவனிடம் செல்வதாகவே கூறுகின்றது. இதனால்தான் "தேகத்தைவிட்டுப் பிரிந்து இயேசுகிறிஸ்துவுடன் இருக்க ஆசைப்பட்ட" (பிலி 1:23) பவுல், "இந்த தேகத்தைவிட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார் (2கொரி 5:8. வேதாகமத்தில் "கிறிஸ்துவுடனேகூட இருத்தல்" என்னும் சொற்பிரயோகம் மரணத்தின் பின்னர் அல்லது, இயேசுகிறிஸ்துவின் வருகையின் பின்னர் விசுவாசிகள் அவருடன் இருப்பதற்கே உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே "சரீரத்தைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவுடனிருத்தல்" என்னும் சொற்பிரயோகம் மரணத்தின்பின் இயேசுகிறிஸ்துவோடு இருப்பதையே குறிக்கின்றது. இதனால்தான், ஸ்தேவான் என்னும் பக்தன் மரிக்கும்போது, தன்னை வரவேற்பதற்காக இயேசுகிறிஸ்து பரலோகத்தில் இருப்பதைக் கண்டதோடு, கர்த்தராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று இயேசுகிறிஸ்துவிடம் தன்னை அர்ப்பணித்தான் (அப் 7:55-56,59). மேலும் "இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்போது,

அவருக்குள் மரித்தவர்களும் அவரோடுகூட வருவதாக" 1தெசலோனிக்கேயர் 4:14 கூறுவதனால், இயேசுகிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் தற்பொழுது அவரிடமே இருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. இதனால்தான், கிறிஸ்துவுக்குள் மரித்து தற்பொழுது தேவனுடன் இருப்பவர்களையும், உலகிலிருக்கும் பக்தர்களையும் உள்ளடக்கியதாக கிறிஸ்தவ சபை இருப்பதை எபேசியர் 3:14ல் அறியத்தருகின்றது. சபையானது "பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பமாக" இவ்வசனத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. நீதிமான்களின் ஆவிகள் பரலோகத்தில் தேவனிருக்கும் இடத்தில் இருப்பதாகவே எபிரேயர் 12:22-23 கூறுகிறது. இதனால்தான் கிறிஸ்தவர்கள் தேவனை ஆராதிப்பதற்காகக் கூடிவரும்போது, அவர்கள் பரலோகத்தில் தேவனுடைய பிரசன்னத்திற்கு மட்டுமல்ல, அங்கிருக்கும் "பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளின் பிரசன்னத்திற்கும்" வந்துள்ளதை இவ்வசனங்கள் அறியத்தருகின்றன. உண்மையில் மரித்த பழைய ஏற்பாட்டு பக்தர்களினதும், கிறிஸ்தவர்களினதும் ஆவிகளே எபிரேயர் 12:22-23ல் "பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டின்படி, இயேசுகிறிஸ்துவுக்குள் மரிப்பவர்களின் ஆவிகள் அவர் இருக்கும் பரலோகத்திற்குச் செல்கையில், அவரை அறியாதவர்களின் ஆவிகள் பாதாளத்திற்குச் செல்கின்றன என்பதை லாசருவையும் ஐசுவரியவானையும் பற்றிய உவமை அறியத் தருகின்றது (லூக் 16:22,23) தமிழ் வேதாகமத்தில் பாதாளம் என்னும் சொல் இரு ஏற்பாடுகளிலும் ஒரே அர்த்தமுடையதாக இல்லை. ஏனெனில் பழைய ஏற்பாட்டில் "ஷியொல்" என்னும் எபிரேயச் சொல்லைத் தமிழில் "பாதாளம்" என்று மொழி பெயர்த்தவர்கள், புதிய ஏற்பாட்டில் "ஹேதீஸ்" என்னும் கிரேக்கச் சொல்லையே பாதாளம் என்று குறிப்பிட்டுள்ளனர். பழைய ஏற்பாட்டில் "ஷியொல்" என்பது மரித்தோரின் சரீரங்கள் செல்லும் "கல்லறையை" அல்லது "புதைக்குழியைக்" குறிக்கின்றது. இதனால் ஆங்கில வேதாகமத்தில் இச்சொல் "கல்லறை" என்னும் அர்த்தத்தில் Grave என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உண்மையில் மரித்தவர்களின் சரீரங்கள் செல்லுமிடமே பழைய ஏற்பாட்டில் "ஷியொல்" (தமிழில் பாதாளம்) என்று அழைக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் மரித்தவர்கள் "பாதாளத்தில் இறங்குவதாகவும்" (ஆதி 37:35, 42:38, 44:29,44:31, எண் 16:30). மரணத்தின் பின் துன்மார்க்கர் மட்டுமல்ல, நீதிமான்களும் பாதாளத்திற்குச் (மூலமொழியில் ஷியொல்) செல்வதாகவும் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஏசா 38:10, ஆதி 37:35,42:38, எண் 16:30, யோபு 17:13-16,24:19-20,21:13, 24:19, சங் 31:17). பழைய ஏற்பாட்டில் பாதாளம் மரித்தோரின் சரீரங்கள் வைக்கப்படும் கல்லறையாக இருப்பதினாலேயே அங்கு புழுக்களும், பூச்சிகளும் இருப்பதாகவும் வேதாகமம் கூறுகிறது. (ஏசா 14:11, யோபு 17:13-14, 24:19-20). எனவே பழைய ஏற்பாட்டில் "ஷியொல்" (தமிழில் பாதாளம்) என்னும் சொல் மரித்தோரின் சரீரங்கள் செல்லும் இடமான கல்லறையை அல்லது புதைக்குழியையே குறிக்கின்றது. ஆனால் புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பில் பாதாளம் என்னும் சொல், (மூலமொழியில் "ஹேதீஸ்" என்னும் சொல்) துன்மார்க்கரின் ஆவிக்குரிய பகுதி செல்லுமிடத்தைக் குறிக்கின்றது. எனவே மரணத்தின்பின் தேவனை அறியாதவர்களின் ஆவிகள் ஹேதீஸ் என்னுமிடத்திற்குச் செல்கையில், தேவனை அறிந்தவர்களின் ஆவிகள் தேவனிடம் செல்கின்றன என்பதே வேதாகமம் அறியத்தரும் சத்தியமாகும்.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:26 am

2. மரித்தோரின் ஆவிகளினால் இவ்வுலகத்திற்கு வரமுடியாது:

மரித்தோரின் ஆவிகள் எங்கு செல்கின்றன என்பதைக் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின் மூலம் அறிந்துக்கொண்ட நாம், அவ்வாவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியுமா என்பதையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம். இவ்வுலகத்தைவிட்டுச் செல்லும் மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியாது என்றே வேதாகமம் கூறுகிறது. இயேசுகிறிஸ்து லாசருவையும், ஐசுவரியவானையும் பற்றிய உவமையில் இதைப்பற்றி நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார். இவ்வுமையில் லாசரு என்பவனுடைய ஆவி மரணத்தின் பின்னர் ஆபிரகாமின் மடிக்கும், ஐசுவரியவானின் ஆவி பாதாளத்திற்கும் செல்கின்றன. பாதாளத்தில் இருக்கும் ஐசுவரியவான் தன்னுடைய வேதனை காரணமாக லாசருவை அனுப்பும்படி பரலோகத்தில் இருக்கும் ஆபிரகாமிடம் கேட்கின்றான் (லூக் 16:23-26). ஆனால் ஆபிரகாமோ, மரித்தோரின் ஆவிகளினால் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து எவ்விதத்திலும் வெளியே செல்லமுடியாது என்பதை அறியத்தந்துள்ளார். இதை ஐசுவரியவானுக்குச் சுட்டிக்காட்டும் ஆபிரகாம், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடி, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருகிறது என்றான். (லூக் 16:26). மரணத்தின்பின் மரித்தோரின் ஆவிகள் எங்கு செல்கின்றனவோ, அங்கிருந்து அவைகளினால் வெளியே வரமுடியாது என்பதையே ஆபிரகாமின் வார்த்தைகள் அறியத்தருகின்றன. மூலமொழியில் இவ்வாக்கியத்தித்தின் இலக்கண அமைப்புமுறை, இது தேவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே மரித்தோரின் ஆவிகள் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வருகின்றன என்று கூறுவது தேவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள செயல்முறையையே முரண்படுத்தும் தவறான ஒரு போதனையாகவே உள்ளது.

மரித்தோரின் ஆவிகள் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்பதை மாத்திரமல்ல, அவ்வாவிகளை மறுபடியும் இவ்வுலகத்திற்கு அனுப்புவது தேவனுடைய சித்தம் அல்ல என்பதையும் லாசருவையும், ஐசுவரியவானையும் பற்றிய உவமை அறியத்தருகின்றது. மரணத்தின் பின்னர் லாசருவினால் தான் இருக்கும் இடத்திற்கு வரமுடியாது என்பதை அறிந்துக்கொண்ட ஐசுவரியவான் (லூக் 16:24-26), அவனைத் தன்னுடைய தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி ஆபிரகாமிடம் கேட்டான் (லூக் 16:27-28). ஐசுவரியவானின் இக்கோரிக்கைக்கு ஆபிரகாம் கொடுத்த பதில், உலகிலிருப்போருக்கு சத்தியத்தை அறிவிப்பதற்கு மரித்தோரை அனுப்புவது தேவனுடைய சித்தம் அல்ல என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றது. இதனால்தான், தன்னுடைய சகோதரர்கள் தானிருக்கும் இடத்திற்கு வந்து வேதனைப்படாதபடி அவர்களை எச்சரிப்பதற்காக அவர்களிடம் லாசருவை அனுப்பும்படி கேட்ட ஐசுவரியானுக்கு, அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு.

அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்று ஆபிரகாம் கூறினார் (லூக் 16:29). ஆபிரகாமின் கூற்றில் மோசேயும் தீர்க்கதரிசிகளும் பழைய ஏற்பாட்டையே குறிக்கின்றது. ஏனெனில் அக்காலத்தில் பழைய ஏற்பாடானது "மோசேயினதும், தீர்க்கதரிசிகளினதும் ஆகமங்கள்" என்று (லூக்கா 24:27,24:44, அப் 28:23) அல்லது "நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசிகளும்" (லூக் 16:16, யோவ 1:45) என்று அழைக்கப்பட்டது. இதிலிருந்து மரித்தோரின் ஆவிகள் மூலமாக அல்ல, எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின்மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதே மனிதரைத் தேவன் சந்திக்கும்முறை என்பது தெளிவாகின்றது. மரித்தோரை மறுபடியும் இவ்வுலகத்திற்கு அனுப்பவுது தேவனுடைய சித்தம் அல்ல என்பதனால், மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியாது. இதனால்தான், தேவன் பல தடவைகள் தம்முடைய தூதர்களை இவ்வுலகத்திற்கு அனுப்பியுள்ளபோதிலும், அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மரித்தோரின் ஆவிகளை இவ்வுலகத்திற்கு அனுப்பிள்ளதாக வேதாகமத்தில் எவ்வித குறிப்பும் இல்லை.

மரித்தோர் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்பதை 2 சாமு 12:15-23ல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் சிறப்பான விதத்தில் அறியத்தருகின்றது. இச்சம்பவத்தில் தேவனுடைய தண்டனை காரணமாக மரிக்கும் நிலையை அடைந்த தன்னுடைய பிள்ளைக்காக ஏழு நாட்கள் உபவாசித்து ஜெபித்த தாவீது, பிள்ளை மரித்த பின்னர் ஜெபிப்பதைவிட்டுவிட்டான். மேலும், பிள்ளை மரிக்கும்வரை எதுவும் சாப்பிடாமல் வேதனையோடு இருந்தவன், பிள்ளை மரித்தபின்னர் ஆலயத்திற்குச் சென்று தேவனை வழிபட்டதோடு சாப்பிடவும் செய்தான். இதற்குக் காரணம், பிள்ளை உயிரோடிருக்கும் வரை தேவனால் அப்பிள்ளையைக் காப்பாற்ற முடியும் என்னும் நம்பிக்கையுடனிருந்த தாவீது, பிள்ளை மரித்த பின்னர், அது மறுபடியுமாகத் தன்னிடம் வராது என்பதை அறிந்திருந்தயோகும். இதனால், அவன் பிள்ளைக்காக ஜெபிப்பதை நிறுத்திவிட்டான். 2சாமு 12:15-23ல் இதைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார். அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது. அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனைப்பண்ணி, உபவாசித்து, உள்ளேபோய் இராமுழுவதும் தரையிலே கிடந்தான். அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான். ஏழாம் நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள். பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை. பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக் கொண்டார்கள். தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்கிறதைக் கண்டு பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: பிள்ளை செத்துப்போயிற்றோ என்று கேட்டான். செத்துப்போயிற்று என்றார்கள்.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:27 am

அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம் பண்ணி, எண்ணெய் பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்திலே பிரவேசித்து, பணிந்துக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து போஜனம் கேட்டான். அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான். அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனைநோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர். பிள்ளை மரித்த பின்பு, எழுந்திருந்து அசனம் பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்கு கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப் பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப்போவேனே அல்லாமல், அது என்னிடத்திற்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான். 2 சாமு 12:21-23.


தாவீதின் செயல்களும் அவனுடைய பேச்சும், மரித்தோரைப்பற்றி அவன் அறிந்திருந்த வேதாகம சத்தியத்தை அடிப்படையாக் கொண்டிருந்தன. மரித்தோரினால் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வரமுடியாது என்பதைக் தாவீது அறிந்திருந்தினால், பிள்ளை மரிக்கும்வரை அழுது புலம்பி உபவாசத்துடன் ஜெபித்தான். ஆனால், பிள்ளை மரித்தவுடன் ஜெபிப்பதை நிறுத்திவிட்டான். மரித்தோர் "திரும்பி வராத வழியே போகிறவர்களாகவும்" (யோபு 16:22) போனால் "திரும்பி வராத தேசத்துக்குப் போகிறவர்களாகவும்" (யோபு 10:21) இருப்பதைத் தாவீது அறிந்திருந்தான். இதனால்தான், "மரித்த பிள்ளை சென்ற இடத்திற்கு நான் செல்வேனேயல்லாமல் அப்பிள்ளைத் என்னிடத்திற்கு வராது" என்று அவன் கூறினான். "உலகத்திலிருப்பவர்கள் மரித்தோரிடம் செல்வார்களே தவிர, மரித்தோர் இவ்வுலகத்திற்கு வரமாட்டார்கள்" என்பதை அவன் அறிந்திருந்தான்.

வேதாகம காலத்தில் மரித்த ஒரு சிலர் உயிர்ப்பிக்கப்பட்டது உண்மை என்றாலும், அவர்கள் மறுபடியுமாக மரித்தார்கள். மேலும், இவை தேவனுடைய வல்லமை வெளிப்பட்ட அற்புதச் சம்பவங்களாகவே உள்ளன. இவை வழக்கமாக நடைபெறும் காரியம் அல்ல. "சாதாரண இயற்கை விதிமுறைகளுக்கும் அப்பால் தேவன் செய்யும் காரியமே அற்புதம்" என்பதனால் அற்புதச் சம்பவங்களை வழமையாக நடைபெறும் சாதாரண செயல்களாகக் கருதுவது தவறாகும். இதனால், வேதாகமத்தில் மரித்தோர் உயிர்ப்பிக்கப்பட்ட சம்பவங்களை, மரித்தோரின் ஆவிகள் இவ்வுலகத்திற்கு வருவதற்கான ஆதாரமாக எடுக்கமுடியாது. மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டவர்கள் ஆவிகளாக அல்ல சரீரங்கள் உடனேயே இவ்வுலகத்திற்கு வந்தனர். உண்மையில் இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்போது அவருக்குள் மரித்தவர்கள் அவரோடு இவ்வுலகத்திற்கு வருவார்கள் (1தெச 4:14). அதுவரையில் மரித்தவர்களோ, இல்லையென்றால் அவர்களுடைய ஆவிகளோ இவ்வுலகத்திற்கு வருவதில்லை. ஏனென்றால் அவைகள் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியாத நிலையில் உள்ளன. மேலும், அவற்றை இவ்வுலகத்திற்கு அனுப்புவதும் தேவனுடைய சித்தம் அல்ல.

மனிதருடைய மரணத்தின் பின்னர் அவர்களைவிட்டுப் பிரிவடையும் ஆவிகள் எவ்வித செயற்பாடுகளும் அற்ற நிலையில் இருப்பதாகவும் வேதாகமம் கூறுகின்றது. இதனால் அவைகளினால் உயிரோடிருப்பவரை ஆசீர்வதிக்கவோ அல்லது அவர்களுக்கு ஆலோசனையளிக்கவோ முடியாது. மரணத்தின் பின்னர் தேவனிடம் செல்லும் நீதிமான்களின் ஆவிகள் "இளைப்பாறுதலடைவதாகவும்", பாதாளத்திற்குச் செல்லும் துன்மார்க்கரின் ஆவிகள் "வேதனைப்படுவதாகவும்" இயேசுகிறிஸ்து லாசருவையும், ஐசுவரியவானையும் பற்றிய உவமையில் தெரிவித்துள்ளார். (லூக் 16:25). இதுவே மரணத்தின் பின்னர் மரித்தோரின் ஆவிகளுக்குத் தேவன் நிர்ணயம் பண்ணியுள்ள நிலையாக உள்ளது. இதனால், இந்நிலையைமீறி அவற்றினால் செயற்படமுடியாது.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:28 am

3. பிசாசுகளின் ஆவிகளே இவ்வுலகத்தில் உலாவுகின்றன.

மனிதர்கள் மரிக்கும்போது அவர்களுடைய சரீரத்தைவிட்டுச் செல்லும் ஆவிகள் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்பது தேவனுடைய வார்த்தையான வேதாகமம் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும். இது உண்மை என்றால் மரித்தோரின் ஆவிகள் தங்களோடு தொடர்புகொள்வதாகவும், ஆலோசனைகள் தருவதாகவும் கூறுகிறவர்களின் அனுபவங்கள் எத்தகையவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். மரித்தோரின் ஆவிகள் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்று வேதாகமம் கூறுவதனால், எவராலும் மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ளவும் முடியாது. உண்மையில் அவைகள் மரித்தோரின் ஆவிகள் அல்ல. பிசாசின் ஆவிகளே. இவ்வுலகத்தில் உலாவுவதாக வேதாமம் கூறுகிறது. "உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச்சுற்றித் திரிகிறான்" என்பதை அறியத்தரும் வேதாகமம் (1பேதுரு 5:8, அவன் "ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வான்" (2கொரி 11:14) என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், சாத்தான் அற்புதங்கள் செய்யும் ஆற்றல் உள்ளவனாகவும் இருப்பான் என்றும் வேதாகமம் கூறுகிறது (மத் 24:24, 2தெச 2:9).

எனவே சாத்தானும் அவனுடைய தூதர்களான பிசாசுகளுமே மரித்தோரின் உருவத்தில் மனிதர்களிடம் வந்து அவர்களை வஞ்சிக்கின்றன (1தீமோ 4:1) என்பதே தேவனுடைய வார்த்தையான வேதாகமம் நமக்கு அறியத்தரும் உண்மையாகும். "பிசாசுகளினால் மரித்தோரைப்போல தோற்றமளிக்கமுடியும் என்றாலும், அவைகளினால் மரித்தோரை இவ்வுலகத்திற்கு கொண்டுவரமுடியாது". ஏனென்றால் மரித்தோரின் ஆவிகள் மீது பிசாசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. தேவனுடைய கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் மரித்தோரின் ஆவிகளுடன் பிசாசுகளினால் தொடர்புக்கொள்ளமுடியாது. ஆனால், அவைகள் மரித்தோரைப்போல காட்சியளித்து மக்களை வஞ்சிக்கின்றன.

மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்வதாகக் கூறுபவர்கள் உண்மையில் பிசாசின் ஆவிகளின் உதவியுடனேயே செயற்படுகின்றனர். இவர்களுடைய செயல்கள் மூலம், பிசாசின் ஆவிகள் மரித்தோரின் உருவத்தில் வந்து மக்களை வஞ்சிக்கின்றன என்றே வேதாகமம் கூறுகிறது. வேதாகமத்தில் மரித்தோரின் ஆவிகளிடம் தொடர்புக் கொள்வதாகக் கூறுபவர்களை "அஞ்சனம் பார்ப்பவர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேதாகமத்தின் மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள எபிரேயச் சொல் KJV.ஜேம்ஸ் அரசனின் ஆங்கில வேதாகமத்தில் Having familiar spirits என்று விளக்கமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் "கீழ்ப்படிவுள்ள அல்லது பணிவிடை செய்கின்ற பிசாசுகளை தன் உபயோகித்துக்கு வைத்திருத்தல்" ஆகும். உண்மையில், இத்தகைய மனிதர்களுக்குள் பிசாசுகள் குடியிருப்பது வழக்கம். இவர்களுக்குள் நல்லஆவிகள், அதாவது பரிசுத்த ஆவியோ அல்லது தேவதூதர்களோ இருப்பதில்லை.

தீய ஆவிகளான பிசாசின் ஆவிகளே இவர்களுக்குள் இருக்கும். உண்மையில் அஞ்சனம் பார்ப்பவர்கள் தங்களுக்குள் குடியிருக்கும் பிசாசுகளின் உதவியுடனேயே செயற்படுகின்றனர். இதனால்தான் 1 சாமுவேல் 28:7ல் "அஞ்சனம் பார்க்கும் ஸ்திரீ" என்பது மூலமொழியில் "குறிசொல்லும் பிசாசையுடைய பெண்" என்று உள்ளது. ஜேம்ஸ் அரசனின் ஆங்கில வேதாகமத்தில் a women that hath a familiar spirit அதாவது, "பணிவிடைச் செய்யும் பிசாசையுடைய பெண்" என்று இவ்வாக்கியம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் இத்தகைய அர்த்தம் நேரடியாக வெளிப்படும் விதத்திலேயே இவ்வாக்கியம் உள்ளது. எனவே, மரித்தோரின் ஆவிகளிடம் தொடர்பு கொள்வதாகக் கூறுபவர்கள் பிசாசுகளின் உதவியுடன் செயல்படுகிறார்கள் என்றே வேதாகமம் கூறுகிறது.

உண்மையில், அஞ்சனம் பார்ப்பவர்கள் மரித்தோரின் ஆவிகளை அல்ல, மரித்தோரைப்போல நடிக்கக்கூடிய பிசாசுகளையே மனிதர் காணும்படிச் செய்கின்றனர். வேதாகமத்தில் "செத்தவர்களிடத்தில் குறிகேட்டல்" என்னும் சொற்பிரயோகமும் (உபா 18:11) பிசாசுகளிடத்தில் குறிகேட்பதையே குறிக்கின்றது. அஞ்சனம் பார்ப்பவர்கள், தாங்கள் மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்பு கொள்வதாகக் கூறி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களாக உள்ளனர். ஏனெனில், இவர்களால் தேவனிடமிருக்கும் மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ளமுடியாது. உண்மையில், இத்தகைய செயல்கள் பிசாசின் செல்வாக்கிற்கு உட்ப்பட்டவைகளாகவே உள்ளன. அஞ்சனம் பார்ப்பவர்கள் மரித்தோரின் ஆவிகளிடத்தில் அல்ல, பிசாசுகளின் ஆவிகளிடமே தொடர்பு கொள்கின்றனர். இதனால் இத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கூறும் தேவன், இவற்றுக்கு மரணதண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:28 am

அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள், அவர்களாலே தீட்டுப்படவேண்டாம். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். (லேவி 19:31).

மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிக் கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். (உபா 18:11)

அஞ்சனம் பார்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனைத் தன் இனத்தில் இராதப்படிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன். (லேவி 20:6).

அஞ்சனம் பார்க்கிறவர்களும், குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும், ஸ்திரீயாகிலும் கொலை செய்யப்பட வேண்டும். (லேவி 20:27).


மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ள முற்படுவது தேவன் வெறுக்கும் ஒரு காரியமாகவே உள்ளது. இதற்குக் காரணம் இவை பிசாசின் வஞ்சிக்கும் செயல்களாக இருப்பதேயாகும். உண்மையில் உலகிலிருக்கும் எந்த ஒரு மனிதனாலும் மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ள முடியாது. பிசாசுகளே மரித்தோரைப்போல தோற்றமளித்து, மரித்தோரைப்போல பேசி மக்களை வஞ்சித்து வருகின்றன. இதனால் தம்முடைய ஜனங்கள் இத்தகைய வஞ்சனைகளில் அகப்பட்டுத் தவறான வழிகளில் செல்வதைத் தடுப்பதற்காகத் தேவன் இதற்கு எதிராகக் கடுமையான கட்டளைகளைக் கொடுத்துள்ளார்.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:30 am

இரண்டாம் அத்தியாயம்

சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு சரியான பதில்கள்

மரித்தோரின் ஆவிகளினால் மனிதர்களோடு தொடர்புக்கொண்டு அவர்களுக்கு ஆலோசனையளிக்க முடியும் என்னும் தவறான உபதேசத்திற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டப்படும் வேதப்பகுதி 1சாமுவேல் 28:3-25 ஆகும். இவ்வசனங்களில், இஸ்ரவேல் ராட்சியத்தின் முதலாவது அரசனான சவுல் என்பவனோடு மரித்துப்போன தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் ஆவி பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மரித்தோரின் ஆவிகளினால் உயிரோடிருக்கும் மனிதருக்கு ஆவிக்குரிய ஆலோசனையும், வழிநடத்துதலும் கொடுக்கமுடியும் என்று சிலர் வாதிடுகின்றனர். மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வரமுடியாது என்னும் வேதாகமப் போதனையை முரண்படுத்தும் விதத்தில் இச்சம்பவம் இருப்பதாகப் பலர் எண்ணுவது வழக்கம். வேதாகமத்தில் இதற்கு ஒப்பான அல்லது இதைப்போன்ற வேறு சம்பவங்கள் எதுவும் இல்லை. மேலும் இது தெளிவற்ற ஒரு பகுதியாக, வாசிப்பவருக்குப் பல குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. உதாரணத்திற்கு, தன்னிடம் வந்திருப்பது சவுல் என்பதை அஞ்சனம் பார்க்கும் பெண் எப்படி அறிந்துக்கொண்டாள் என்பது இவ்வசனங்களில் சரியான விதத்தில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, அஞ்சனம் பார்க்கும் பெண் உண்மையிலேயே மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொண்டாளா? என்பதையும் இச்சம்பவம் அறியத்தரவில்லை. இதனால் இச்சம்பவம் கிறிஸ்தவ உலகில் அதிக சர்ச்சைக்குரிய ஒரு பகுதியாக உள்ளது.

எனவே, மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா என்பதை அறிந்து கொள்வதற்கு இச்சம்பவத்தை இவ்வாத்தியாயத்தில் ஆராய்ந்துப்பார்ப்போம். இதற்கு வேதாகம சம்பவங்களை வியாக்கியானம் செய்யவேண்டிய முறையை நாம் முதலில் அறிந்திருக்கவேண்டியது மிக அவசியம்.


1. வேதாகம சம்பவங்களின் வியாக்கியானம்:

வேதாகத்திலுள்ள சம்பவங்களை, வேதாகம உபதேசங்களை அடிப்படையாகக்கொண்டே வியாக்கியானம் செய்யவேண்டும் என்பதை நாம் முதலில் அறிந்திருக்கவேண்டும். இந்நூலின் முதலாம் அத்தியாயத்தில் நாம் பார்த்த விதமாக, மரித்தோரின் ஆவிகள் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்றும், பிசாசின் ஆவிகளே இவ்வுலகில் உலாவுகின்றன என்றும், இவைகளே மரித்தோரைப்போல காட்சியளிக்கின்றன என்றும் வேதாகமம் கூறுவதனால், மரித்த சாமுவேலின் ஆவி சவுலிடம் வந்திருக்க முடியாது. உண்மையில் சாமுவேலைப்போல தோற்றமளித்த பிசாசின் ஆவியே சவுலோடு பேசியது. பிசாசு ஒளியின் தூதனுடைய வேஷம் தரித்து வருவதாக வேதாகமம் கூறுவதனால் (2கொரி 11:14). அவனால் மரித்த மனிதர்களைப்போலத் தோற்றமளிக்கவும், மரித்தவர்களின் ஆவிகள் பேசுவதுபோல பேசவும் முடியும். மேலும், நாம் ஏற்கனவே முதலாம் அத்தியாயத்தில் பார்த்தப்படி 1சாமுவேல் 28:7ல் "அஞ்சனம் பார்க்கும் ஸ்திரீ" என்பது மூலமொழியில் "குறிசொல்லும் பிசாசையுடைய பெண்" என்றே உள்ளது. இப்பெண் பிசாசுகளுடன் தொடர்புக்கொள்ள கூடியவளாக இருந்தாளே தவிர, மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ளக்கூடிய ஆற்றலும், தகுதியும் இவளுக்கு இருக்கவில்லை.

இதனால் பிசாசின் ஆவியே இப்பெண்ணுடைய அஞ்சனம் பார்க்கும் செயலின் மூலம் சாமுவேலின் தோற்றத்தில் வந்துள்ளது. இதை அறியாத சவுல், உண்மையிலேயே மரித்த சாமுவேலின் ஆவி வந்துள்ளதாக எண்ணினான். மேலும் அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டுவந்த ஆவியை சவுல் தன் கண்களினால் பார்க்கவில்லை. அப்பெண் கூறியவற்றை ஆதாரமாகக் கொண்டே வந்திருப்பது சாமுவேலின் ஆவி என்று அவன் எண்ணினான் (1சாமு 28:13-14). அவன் ஆவி பேசியதை மாத்திரமே கேட்டான். ஆவியை நேரடியாகக் காணவில்லை. அதேபோல சவுல் ஆவியோடு நேரடியாகப் பேசவுமில்லை. அஞ்சனம் பார்க்கும் பெண்ணூடாகவே பேசினான். ஏனெனில் அஞ்சனம் பார்ப்பவர்கள் கொண்டுவரும் ஆவிகளுடன் மனிதரால் நேரடியாகப் பேசமுடியாது. இதனால், சவுல் பிசாசின் ஆவியுடன் பேசும்போது சாமுவேலிடம் பேசுவதாகவே நினைத்துப் பேசினான். இதைப்பற்றி 13ம் 14ம் வசனங்களில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக