புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
69 Posts - 40%
heezulia
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
3 Posts - 2%
manikavi
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
2 Posts - 1%
prajai
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
320 Posts - 50%
heezulia
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
22 Posts - 3%
prajai
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
3 Posts - 0%
manikavi
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கடி  Poll_c10கடி  Poll_m10கடி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Sep 14, 2011 12:32 pm

***********************************************************************************

அங்கே அடிக்கடி போயிட்டு போயிட்டு சாப்டதால இப்ப வீட்டுச் சாப்பாடு பிடிக்காம போயிடுச்சு

ஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா?

ஊஹும் ஜெயில்ல.

***********************************************************************************

இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல?

என்ன சொல்றீங்க?

உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?

***********************************************************************************

கருப்பசாமி : உங்களுக்கு போன் பில் எவ்வளவு வரும்?

வெள்ளைச்சாமி : ஏன் கே‌க்குற? எ‌ப்பவுமே ஒண்ணே ஒண்ணுதான் வரும்!

***********************************************************************************

சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!

ஏன் அப்படிச் சொல்றீங்க?

கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!

***********************************************************************************

காலைல எழுந்ததும் உடற்பயிற்சி, அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்...

இ‌வ்வளவு செ‌‌ஞ்சு‌ம் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு?

அட, இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!

***********************************************************************************

கவலப்படாதீங்க சார் நாம அ‌ந்த துறைமுகத்துக்கு செய்தி அனுப்பி அத திருப்பி கொண்டுவர சொல்லிறலாம்!

அடப்பாவி என் மானம் கப்பலேறிடுச்‌சின்னு சொன்னா உனக்கு இவ்வளவு நக்கலா போச்சா?

***********************************************************************************

அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்!

முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்?

உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.

***********************************************************************************

ஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....

தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்?

ஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்

தலைமை ஆ‌சி‌ரிய‌ர் :?!?!
***********************************************************************************

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?
***********************************************************************************

கணவ‌ன் : எ‌ன் பொ‌ண்டா‌‌ட்டி எ‌ன்ன ‌தி‌ட்டி‌ட்டாடா...

ந‌ண்ப‌ன் : ஏ‌ன்

கணவ‌ன் : கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்க‌க் கூட வரலை, போய் உங்க அப்பா‌க்‌கி‌ட்ட க‌த்து‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ண்ணு சொ‌ல்‌லி‌ட்டா...
***********************************************************************************

‌கலா : எ‌லி‌க்கு பே‌ண்‌ட் போ‌ட்டா எ‌ன்ன ஆகு‌ம்?

மாலா : எ‌ன்ன ஆகு‌ம் ‌நீயே சொ‌ல்லு.

கலா : எ‌லிபே‌ண்‌ட் ஆகு‌ம்.

***********************************************************************************

ஒருத்தி : எங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தை மாதிரி!

மற்றொருத்தி : இருக்கலாம். அதுக்காக என் பொ‌ண்ணு‌ கூட ஓடி‌‌ப்‌பிடி‌ச்‌சி ‌விளையாடறது எ‌ல்லா‌ம் ச‌ரி‌யி‌ல்ல..
***********************************************************************************

புதுமனைவி: நீங்கள் பிரெட்டை டோஸ்ட் செய்து காபி போட்டு விட்டீ‌ர்கள் என்றால், மாலை உணவு தயாரா‌கிவிடும்.

கணவன்: அ‌ப்படியா மாலை உணவு என்ன?

புதுமனை‌வி : டோஸ்டும், காபியும்தான்!

***********************************************************************************

அங்கே அடிக்கடி போயிட்டு போயிட்டு சாப்டதால இப்ப வீட்டுச் சாப்பாடு பிடிக்காம போயிடுச்சு
ஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா?
ஊஹும் ஜெயில்ல.

***********************************************************************************

எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு, கிளார்க் இருக்காங்க
இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

***********************************************************************************

நல்ல காலம் பொறக்குது இந்த வூட்டு அய்யாவுக்கு வேலைல பதவி உயர்வு கிடைக்கப்போவுது... பிள்ளைங்கள்லாம் நல்லா படிக்கப் போவுது...
இந்தாப்பா குடுகுடுப்பாண்டி இந்த அய்யா கிய்யாவெல்லாம் விட்டுத் தள்ளு! கோலங்கள்ல அபியோட பிரச்சனை எப்ப தீரும், ஆனந்தம்ல அந்த கடங்காரன் அபிராமியோட அப்பனுக்கு தண்டனை கிடைக்குமா கிடைக்காதா? கஸ்தூரில டெல்லி கணேஷ் குடும்பத்துக்கு என்ன ஆகும்? இதெல்லாம் சொல்லு உனக்கு வேண்டியதைத் தரேன்.

***********************************************************************************

அதோ அங்கப் போறாரே அவர் சஸ்பென்ஸ் கதை எழுதருதல கில்லாடி!
அப்டியா?
ஆமாம்! முதல் வரி என்ன எழுதப்போறாருன்னு அவருக்கே தெரியாதுன்னா பாத்துக்கயேன்.

***********************************************************************************
என்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா?
அதெல்லாம் இல்ல. பைலட்டை தேடி கீழே கடன் கொடுத்தவங்க வட்டமடிச்சுட்டுருக்காஙக அதான்.

***********************************************************************************

புருஷன்: டாக்டர்...என் பொண்டாட்டி அவசரத்துல "பெப்சி"ன்னு நினைச்சிட்டு "பெப்சி" பாட்டில்ல இருந்த "பெட்ரோல" குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர்?

டாக்டர்: ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போய்டும்..

புருஷன்: ?????????????????

****************************************

டீச்சர்: டாய். நான் இங்க நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், கடைசி பென்ச்ல உக்காந்து இருந்த மனோ எங்கடா காணோம்?
மாணவன்: உங்களுக்கு தான் பொறை பிஸ்கட் வாங்க போயிருக்கான் டீச்சர்..
டீச்சர்: ????????????

*****************************************

அப்பா அழுது கொண்டிருக்கும் மகனிடம் கேட்கிறார்..
அப்பா: ஏன்டா அழுதுட்டு இருக்கே?மகன்: அம்மா அடிசிட்டாங்கப்பா...

அப்பா: அதுக்கு போய்யா அழுவற...
மகன்: போய்யா, உன்னை மாதிரிலாம் என்னால வலி தாங்க முடியாது..
அப்பா: ????????????

****************************************

பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...

****************************************

எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...
எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...
"ஒங்கையால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?"

***************************************

பள்ளிகூடத்துல வாத்தியாரும் குறும்புக்கார மாணவனும்...

வாத்தியார்: ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்: 4
வாத்தியார்: Total?
மாணவன்: 5
வாத்தியார்: Stupid
மாணவன்: 6வாத்தியார்: What
மாணவன்: 4வாத்தியார்: Nonsense
மாணவன்: 8
வாத்தியார்: ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்: அது..

********************************************

ஆர்யா: 24 மணி நேரமும் நான் டிவி பார்க்கணும், வருஷம் முழுக்க பாக்கணும், ஒரு நிமிஷம் விடாம பாக்கணும், ஆனா கண்ணு மட்டும் கெடாம இருக்கணும்..

சந்தானம்: அதுக்கு நீ டிவிய ஆப் பண்ணி தான் பாக்கணும்..

********************************************

பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலை புரியவைக்கலாம், உதாரணமாக...

நியுட்டன் தன்னோட மூன்று விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..
உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..
"An object continue to moves, unless it's stopped"

நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..

"F = M A"

சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது. உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..

"Every action has equal and opposite reaction"

*************************************************

தத்துவம்:

தேங்காய்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு..

அதுக்காக தேங்காயில போர் போட முடியாது..

பூமியில ஸ்ட்ரா போட முடியாது...

****************************************************

**********************************************************************************
கணக்கு ஆ‌சி‌ரிய‌ர் : மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்கு‌ள்ள இரு‌க்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்?

சிறுவன் : ஒண்ணுமே இருக்காது டீ‌ச்‌ச‌ர்

ஆ‌சி‌ரிய‌ர் : உனக்கு கணக்கே தெரியலை

சிறுவன் : டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும்.

**********************************************************************************

பிரகாஷ் : தாய்க்கு பின் தாரம்னு சொல்லுரது சரியாத்தான் இருக்கு...

சசி: எப்புடி??

பிரகாஷ் : சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்ப பொண்டாட்டி அடிக்குரா......

**********************************************************************************

ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட ஃபிரெண்ட் ஒருத்தன் திருச்சில 5000 ரூபாய் வாங்கிண்டு இருந்தான், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கான்.

மாணவர்: என்ன கடனா?

**********************************************************************************

தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...

பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....

**********************************************************************************

ஒரு L.K.G பெண்ணு கவனக்குறைவா Road Cross பண்ணிச்சாம்!

Traffic Police : நான் விசில் அடிச்சும்,கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கல?

L.K.G Girl : நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல!

அன்று மாலையில் ஒரு L.K.G. பையன் கோபத்துடன் அந்த Traffic Police யிடம்!

L.K.G.Boy : இன்னொரு தடவ என் ஆளப் பார்த்து விசில் அடிச்ச, மவனே நீ! செத்தடா!

Traffic Police : !!!!!!

**********************************************************************************

GIRL : நான் MOBILE நீ SIM CARD …

BOY : ஒ , நாம எப்பவும் சேர்ந்தே இருபோம்னு சொல்றியா?

GIRL : இல்ல , நல்ல OFFER வந்தா வேற SIM CARD கு மாறிடுவேன்.

**********************************************************************************

பிரகாஷ் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி..

சசி : அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா?

பிரகாஷ் : இல்லைடா, பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்..

**********************************************************************************

ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு "பாக்ட்டிரியா" படம் வரையுங்கள்..

நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா...

ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்டாயா..... ஆனால் உன் நோட்டில் எதுவுமே இல்லையே....

நம்ம மாணவன் : ஐயா நீங்கள் தானே சொன்னீர்கள் பாக்ட்டிரியாவை வெறும் கண்களால் காண முடியாது........நுண்ணோக்கியால்​ மட்டுமே காண முடியும் என்று......அதனால் தான் உங்களால் அதை காண முடியவில்லை...

ஆசிரியர் : !!! எப்படியேலாம் யோசிக்கிறாங்க..

**********************************************************************************

நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.

டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.

**********************************************************************************

கோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

**********************************************************************************

அப்பா; என்னடா உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா..?

பையன்; அம்மா ''lipstick'' கேட்டாங்க நான் தெரியாம ''fevistick'' வாங்கி கொடுத்துட்டேன்பா...

அப்பா; நீ என் மகன் இல்லடா.., என் சாமிடா....!!!!!!

**********************************************************************************

மனைவி:- உண்மையை சொல்லுங்க நேத்து ராத்திரி கனவுல யார் வந்தா….?

கணவன்;- நீதான் வந்த..

மனைவி;- பொய் சொல்லாதிங்க நீங்க தூக்கத்தில நல்லா பேசிகிட்டு இருந்த்தீங்களே..

**********************************************************************************

மனைவியை அடிக்கும் ஆண்களுக்கெல்லாம் என்ன தண்டனை தரலாம் மன்னா..?”

“தண்டனையாவது… உடனே அந்த வீரர்களை நம் படையில் சேர்த்துவிடுங்கள்!”

**********************************************************************************

மனைவி: என்னங்க! இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா, ரசம் வைக்கட்டுமா?

கணவர்: முதல்ல வை… அப்புறம் பேர் வைச்சுகலாம்…

**********************************************************************************

*****************************​****************************************************

கணவன் : ஏண்டி ! உன்னை யாரு ஆபீசுக்கு வரச்சொன்னது ?

மனைவி : வீட்டுல வேலைக்காரியைக் காணோம்,....

அதனாலத்தான் நீங்க ஆபீசுல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் !

******************************​****************************************************

மனைவி : என்னங்க... வேலை செய்யும் போது
இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தனை தடவை சொல்றது !

வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா, நானும் எத்தனையோ தரம்

சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல !

******************************​****************************************************

கணவன் : இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு மனைவியா

வரணும்....

மனைவி : அப்படீன்னா எட்டாவது ஜென்மத்தில எவ கூட சேர்ந்து
வாழப்போறிங்க ?

******************************​****************************************************

கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?

மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி

சொல்றீங்க..!

******************************​****************************************************

கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ?

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா

இருக்கேன்னு..!

******************************​****************************************************

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?

கணவன் : எப்படி கண்டுபுடிச்சே?

மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில
நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!

******************************​****************************************************

கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ?

மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா?
தினமும் S T D போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு...

******************************​****************************************************

மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..

கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..

******************************​****************************************************

டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ?

கணவன் : அதுதான் தெரியல டாக்டர்!

ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப்

பேசுறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!

******************************​****************************************************

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன்: ஒண்ணுமில்ல!

மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட

பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

******************************​****************************************************

மனைவி: டின்னர் வேணுமா?

கணவன்: சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: வேணுமா?வேண்டாமா?

******************************​****************************************************

பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்
நான் பங்கெடுத்துகுவேன்!

ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

**********************************************************************************

வ‌ந்தவர் : இன்‌ஸ்பெக்டர் சார்.. எ‌ன் பையன‌க் காணோ‌ம்.. எ‌ப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள க‌ண்டு‌பிடி‌ச்‌சிடு‌ங்க.

இன்‌ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?

வ‌ந்தவர் : இல்லேன்னா ‌வீ‌ட்ல இரு‌ந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.

**********************************************************************************

டே‌ய் ம‌ச்சா‌ன் தல‌ை‌க்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா! இ‌ல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!

மொ‌த‌ல்ல ‌நீ பாத்ரூமு‌க்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி. அதுதா‌ன் எ‌ங்களு‌க்கு நல்லது!

**********************************************************************************

ஏகப்பட்ட விருந்து நடக்குது. ஒண்ணு‌த்துக்குமே போக முடியல..

ஏன் உடம்பு சரி இல்லையா?

‌நீ‌ங்க வேற.. யாருமே கூப்பிடலே

**********************************************************************************

நீ செய்த கொலைக் குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.

எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்.

**********************************************************************************

எ‌ன்னடா சா‌ப்பாடு இது.. முத‌ல்ல உ‌ங்க ‌வீ‌ட்டு சமைய‌ல்காரனை மா‌த்து‌ங்க

டே‌ய் எ‌ங்க‌ப்பாவ ‌வி‌ட்டு வேறு ஒரு‌த்தர வேலை‌க்கு சே‌க்குறது எ‌ங்க‌ம்மாவு‌க்கு புடி‌க்காதுடா.

**********************************************************************************

பெ‌ரிய மனுஷ‌ன்னா பெ‌ரிய மனுஷ‌ன்தா‌ன்யா..

எ‌ப்படி சொ‌ல்ற..

‌நீ‌ங்க ரொ‌ம்ப ந‌ல்லவரு‌ன்னு எ‌த்தனை முறை பொ‌ய் சொ‌ன்னாலு‌ம் உ‌ண்மை‌ன்னு ந‌ம்‌பி ‌சி‌ரி‌‌ச்‌சி‌க்‌கி‌ட்டே இரு‌க்காரு பாரே‌ன்

**********************************************************************************

அடடா ஆள் ரொம்ப மாறிட்டியே, பழைய ராமு மாதிரியே இலலையே!

நான் ராமு இல்லை‌ங்க.. கோ‌பி.

அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையு‌ம் மா‌த்‌தி‌ட்ட..

**********************************************************************************

__._,_.___
.

__,_._,___

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 12:40 pm

எல்லாமே அருமையாக இருந்தது.சூப்பர் [You must be registered and logged in to see this image.]

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 12:43 pm

எல்லாம் சரி யாரை கடிக்கனும் சொல்லவே இல்ல அதிர்ச்சி

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 14, 2011 2:12 pm

Manik wrote:எல்லாம் சரி யாரை கடிக்கனும் சொல்லவே இல்ல அதிர்ச்சி

வீட்டில் எழும்பு துண்டு இருந்த கடி மாணிக்..! சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 14, 2011 2:21 pm

அருண் wrote:
Manik wrote:எல்லாம் சரி யாரை கடிக்கனும் சொல்லவே இல்ல அதிர்ச்சி

வீட்டில் எழும்பு துண்டு இருந்த கடி மாணிக்..! சிரி
அப்போ எங்க அண்ணவ நீங்க நாய்னு சொல்ல்றீங்களா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 14, 2011 2:25 pm

ரேவதி wrote:
அப்போ எங்க அண்ணவ நீங்க நாய்னு சொல்ல்றீங்களா [You must be registered and logged in to see this image.]

நான் ஜாடைய சொன்ன வெட்ட வெளிச்சமா நீ சொல்லிட்டா என் மேல தப்பு இல்லப்பா..! சிரி அய்யோ, நான் இல்லை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 14, 2011 2:25 pm

அருமையான கடி தொகுப்பு சிரிப்பு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 14, 2011 2:26 pm

அருண் wrote:
ரேவதி wrote:
அப்போ எங்க அண்ணவ நீங்க நாய்னு சொல்ல்றீங்களா [You must be registered and logged in to see this image.]

நான் ஜாடைய சொன்ன வெட்ட வெளிச்சமா நீ சொல்லிட்டா என் மேல தப்பு இல்லப்பா..! சிரி [You must be registered and logged in to see this image.]
இருங்க அவர் வரட்டும் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 2:44 pm

அருண் wrote:
Manik wrote:எல்லாம் சரி யாரை கடிக்கனும் சொல்லவே இல்ல அதிர்ச்சி

வீட்டில் எழும்பு துண்டு இருந்த கடி மாணிக்..! சிரி

அடப்பாவி அருண் சைவம் மட்டும் சாப்பிடும் என்னைப் பார்த்து எலும்பு துண்டை கடின்னு சொல்லிட்டியே சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 2:45 pm

அருண் சுமமா சொன்னாலும் நீ விடமாட்டியா ரேவா உன்னைய மண்டையில் அடி

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக