புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_m10பூப்பு..பூப்பு.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூப்பு..பூப்பு..


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 11, 2011 8:53 am

First topic message reminder :

[flash][/justify]பூப்பு..பூப்பு.. - Page 2 Bridal-hand-mehndi-design5[/flash]

பூப்பு..பூப்பு..


காலம் கெட்டுத்தான் போயிருக்கு. கலிகாலம்னு சொல்றது இதைதானா? பத்து வயசுதான் அதுக்குள்ள இது நடந்து இருக்கு!!! என்னத்த சொல்ல? புலம்பல் ஒலி பரவலாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறது. உண்மைதான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே பூப்பு அடைந்த செய்தியும் கிடைத்து உள்ளது. என்ன செய்வது? சமைஞ்சிட்டா, பெரிய மனுஷி ஆயிட்டா, வயசுக்கு வந்துட்டா, என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த பூப்பின் வயது என்பது வயது 12 முதல் 16 என்றுதான் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆனால் சராசரியாகவும் நலமான பூப்பாகவும் கொள்ள வேண்டிய பூப்பின் வயது 12 முதல் 16 என்பதாம்.
மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப உணவுத் தேவை ஏற்படுகின்றது. உணவுப் பற்றாக்குறையைச் சரி செய்ய இயற்கையை மீறி பல்வேறு முறையில் உணவு உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக உற்பத்திக்கு முக்கியமாகப் பயன் படுவது ஈஸ்ட்ரோஜன். உணவுப்பொருள்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென் உடலின் தேவையைவிட அதிகரிக்கும் போது இந்த உரிய வயதுக்கு முன்பே பூப்பு அடைந்துவிடும் வைபவம் நடந்து விடுகிறது. ஏற்கனவே வறுமை. அதில் இந்த பூப்பு. வெந்த புண்ணில் தேளும் கொட்டியது போலத்தான். பின் என்ன? கவிஞர் வைரமுத்து கூறுவது போன்று ’ஏண்டியம்மா குத்தவச்சே’ என்று பூப்பு நீராட்டு விழாவை நம் மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளாத குறையாகக் கொண்டாடி விடுகின்றனர்.

அதிலும் மாமிச உணவு உண்பவர்களுக்கு இந்நிகழ்வு இன்னும் வெகு விரைவில் என்கிறது ஆய்வு அறிக்கைகள்.. காரணம் கறிக்காகவே வளர்க்கப்படுகிற கோழிகளுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஊசி போடப்படுகிறது. இது ஏன் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று எதிலும் கொழு கொழுதான் தேவை. கோழிக்கும் தேவை இக்கோழிகளைச் சாப்பிடுபவர்களுக்குப் பல நோய்கள் ஏற்படுவதாக அறிக்கைகள் வெளியாகிக் கொண்டே உள்ளன.
பெண்ணுக்குள் இருக்கும் இரண்டு அடிப்படை ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்டிரான். இவை இரண்டும் பெண்ணின் சினைப்பையில் உருவாகின்றன. குறைவாக அட்ரினல் சுரப்பியிலும் உருவாகிறது. கோழிகளின் அதிக வளர்ச்சிக்காகக் கொடுக்கப்படும் ஈஸ்ட்ரோஜென் இளம்பெண்களின் உடல் எடையைக்கூட்டி முன்பருவ பூப்புக்குக் காரணமாவதுடன், பொதுவாகப் பெண்களுக்கு கர்ப்பபை புற்று நோய், எடை கூடுதல், மார்பக வீக்க நோய் போன்றவையுடன் வரைவில் பூப்பு எய்துதலும் ஏற்படுகின்றன.
இதனால் இதனால் ஆண்களுக்கு ஒன்றும் இல்லையா என்று கேட்காதீர்கள். ஆண்களுக்குப் பெண் தன்மை ஏற்படுகிறதாம்!! ஆண்களுக்கு குறிப்பாகச் சிறுவர்களுக்கு ஆண்குறி

பூப்பு விரைவில் குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.

பெண் குழந்தைகள் விரைவில் பூப்பு எய்துவதற்கு பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகளும், அடிக்கடி இல்லத்தில் நடைபெறும் வாக்குவாதங்கள், சண்டைகள் முதலியவையும் காரணமாகின்றன. அத்துடன் விவாகரத்து ஆன இணையரின் குழந்தைகள் விரைவில் பூப்பு எய்துவதாக உளவியல் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.


மனப்பதற்றத்தை ஏற்படுத்தும் எச்சூழலும் விரைவில் பூப்பு எயத காரணமாக அமையும். விரைவு பூப்பின் முக்கிய காரணங்களில் தொலைக்காட்சியின் பங்கு அதி முக்கியமானது என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அதிலும் அடுத்த நாள் வரும் வரை என்ன ஆகுமோ பதற்றத்துடன் இருக்கத் தூண்டும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆற்று இச்சேவையை ஒருவரும் மறுக்க முடியாது.


பூப்பு என்றவுடன் இந்நிகழ்வு பெண்களுக்கு மட்டும் உரியதா? பூப்பு ஆண்களுக்கும் உண்டா என்ற வினா எழுகிறது. ஆண்களுக்கும் பூப்பு உண்டு. சிறுவர்கள் உடல், மனம் இரண்டும் முதிர்ச்சியை எட்டிப்பிடிக்கும் இப்பருவத்தை குமரப்பருவம் என்பர். அதாவது குழந்தைப்பருவத்திற்கும் முதிர்ந்த பருவத்திற்கும் இடையேயான ஒரு சிக்கலான இவ்வருவத்தைக் குமரபருவம் என்பர்.

அண்டச்சுரப்பிகள் இரண்டு பெண்ணின் உடலுக்கும், விந்துச் சுரப்பிகள் இரண்டு ஆணின் உடலுக்கும் சொந்தமானவை. இவையே இருபாலரிடமும் இனப்பெருக்கத்திற்கு உதவுபவை. இவற்றை இனப்பெருக்கச் சுரப்பிகள் என்பர். இது தவிர பிட்யூட்டரி சுரப்பி. இதுதான் இனப்பெருக்கத்துக்குத் தூண்டுவது. இனப்பெருக்கச் சுரப்பிகள் வேலை செய்யும் போது சுரக்கின்ற சுரப்பே ஆணுக்கு மீசை அரும்புதல், உடலளவிலும் பல மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. இக்காலமே இரு பாலருக்கும் பூப்புக் காலமாகக் கருதப்படுகின்றது.
அருந்தா என்ற இனக்குழு (மலைச்சாதி) வாழ்க்கையில் ஆணுக்கான பூப்பு சடங்கு கொண்டாடப்பட்டதாக அறிய முடிகிறது. அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண் மகன் வயதுக்கு வந்துவிட்டதை அறிவிக்கும் சடங்காக இதனைக் கொண்டாடினராம். இச்சடங்கை அக்குழுவின் முதியவர் ஒருவர் நடத்துவாராம். முதியவர் தன் தலையால் சிறுவனின் தலையில் இரத்தம் வரும் வரை பலமாக மோதுவாராம். பிறகு அச்சிறுவனை எறும்புகள் நிறைந்த குழிக்குள் தள்ளி சில நாட்கள் இருக்கச் செய்வார்களாம். இச்சடங்கினை மறுபிறப்பு என்றும் கூறுவார்களாம். (நன்றி கவிஞர் கனிமொழி). இச்சடங்கின் முதன்மையான அம்சம் என்பது அந்த ஆணிடம் வீரத்தையும் வலி பொறுக்கும் தன்மையையும் ஏற்படுத்துவதாம். வீர் யுகத்தில் போருக்கு ஆணை ஆயத்தபடுத்துவதே இச்சடங்கின் முக்கிய நோக்கமாக இருந்திருத்தல் கூடும்.

மேலை நாட்டு இனக்குழுவில் ஆண் பூப்படைதலை ”பிணை அறுத்தல்” க்யா மோட்டு டி செலி-டு ஸ்னாப் தி டீ (Kia mottu te sele – to snap the tie) என்றும் பெண் பூப்படைதலை பாவாடை அணிதலாகவும் (Hakatiti – titi skirt) கொண்டாடியதாகத் தெரிய வருகிறது. (நன்றி கவிஞர் கனிமொழி)

ரஷ்யாவில் பெண் பூப்பு அடைந்தவுடன் அவள் தாய் ஓங்கி ஒரு அரை கன்னத்தில் விடுவாளாம். அரையில் சிவக்கும் கன்னம் ஒரு நற்சகுணத்தின் அடையாளமாம். (என்ன சகுணமோ தெரியவில்லை, ஏண்டியம்மா குத்த வச்ச கதையாக இருக்குமோ!!)

நேபாளத்தில் பூப்பு அடைந்த பெண்ணை ஒரு இருட்டறையில் வைத்துப் பூட்டி விடுவார்களாம். உதிரப்போக்கு நாட்கள் முடிந்த பின்பு சூரியனுக்கும் அவளுக்கும் திருமணச்சடங்கு நட்த்துவார்களாம். (கேள்விதான் சரியாகத் தெரியாது)

ஆப்பிரிக்க சுளு இனத்தில் பூப்பு அடைந்த பெண்கள் தோழிகளுடன் சென்று நீராடி வந்த பின்பு அவள் உடலில் சிவப்பு நிற களிமண்ணைப் பூசுவார்களாம்.

இந்திய இனத்தில் ஒரு சாரார் ஒரு பெண் பூப்பு அடைந்து விட்டாளா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு குழூஉக்குறியாக வினவ ‘எள்ளு போட்டாச்சா?’ என்பர். மற்றொரு சாரர் ‘புட்டு போட்டாச்சா?’ என்பர். இவற்றைக் குழூஉக்குறி என்பர். இந்த எள்ளு, புட்டு இரண்டும் பூப்பின்போது பூப்படைந்த பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் வழக்கம் உள்ளதாம். இது போன்றே ஜப்பானில் ஒரு இனத்தாரிடம் சிவந்த அரிசியும் பீன்ஸும் கொடுக்கும் வழக்கம் உள்ளதாம்.

அதெல்லாம் சரி. பண்டைய காலத்தில் எத்தனை வயதில் பூப்பு எய்தினார்கள் என்ற அடுத்த வினா எழுகிறதே நம் மனத்தில்? பழைய காலத்தில் எத்தனை வயதில் பூப்பு அடைந்தார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு சங்கப் பாடலில் பெயர்க்குறிப்பிடப்படாத ஒரு சிற்றரசனின் மகளின் பூப்பு பற்றி குறிப்பு உள்ளது. பூப்பு விழா கொண்டாடிய அன்றைய வழக்கத்தை அறிய முடிகிறது எனினும் பூப்பான பெண்ணின் வயது தெரியவில்லை.

”பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்”


இச்சங்கப் பாடல் வழி பூப்பு அடைந்த பெண்ணை அயலார் காண முடியாதவாறு மனைக்குள் வைத்தனர் என்பது தெரிகிறது. இன்றும் மாமனைத்தவிர அப்பெண்ணை மற்ற ஆண்கள் பார்க்க்கூடாது என்று மாமன் ஓலைக்குடிசைக் கட்டுவதும் அதற்கு உரிமைப்போர் நடப்பதும் எண்ணற்ற திரைப்படங்கள் வழி நமக்கு கிடைக்கும் பூப்பு பற்றிய செய்திகள்.

சங்க காலப் பாவலர்கள் கவி எழுதுவதை நோக்க வியப்பே எஞ்சுகிறது. பார்ப்பதற்கு அருமையான, பரம்பு மலையின் சுனை பொல என்று பூப்பு அடைந்த பெண்ணை உவமிப்பது எண்ணி எண்ணி வியத்தற்குரியது.

பூப்பு அடைந்த பெண்ணை அயலார் காண இயலாது மனைக்குள் வைத்தனர் என்பதும், அம்மனையுள்ளும் தூய்மை, வெண்மை, குளிர்ச்சியான அகில் மணம் கமழும் விரிப்பில் அமர்த்தப்பட்டதும் அறியலாகிறது. இதில் அக்காலத்தில் பேணப்பட்ட சுகாதாரம் நன்கு விளங்குகிறது. பூப்பு நாட்களில் அதிமுக்கியமானது சுகாதாரமானச் சுற்றுச் சூழலே என்பதை அறிந்த நம் முன்னோர் எவ்விதத்தில் உடலியல், அறிவியல் அறிவில் குறைந்தவர்கள்? உளவியல் கூறுகளும் அவர்களிடம் நிரம்பியே இருந்துள்ளன என்பதற்கும் இப்பாடல் சான்றாகின்றது.

இது அந்நாளைய பூப்பு விழாவை ஒட்டிய சடங்குகள் எனலாம். பூப்பு அடைந்தவுடன் சிறுமியாக இருந்த அப்பெண்ணிடம் பெண்மை நிரம்பி வழிந்தது என்று சுட்டும் பாடலடிகளால் பூப்பு என்பது பெண்களுக்கு உடலளவிலும் மனத்தளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற உளவியல் உண்மை இப்பாடலால் பெறப்படுகின்றது. இதனை நோக்கும் போது அக்காலத்து மக்களிடம் நிலவிய உளவியல் அறிவு நம்மை வியக்க வைக்கிறது.

பூ(ப்பு) இன்னும் மலரும்....


நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்





பூப்பு..பூப்பு.. - Page 2 Aபூப்பு..பூப்பு.. - Page 2 Aபூப்பு..பூப்பு.. - Page 2 Tபூப்பு..பூப்பு.. - Page 2 Hபூப்பு..பூப்பு.. - Page 2 Iபூப்பு..பூப்பு.. - Page 2 Rபூப்பு..பூப்பு.. - Page 2 Aபூப்பு..பூப்பு.. - Page 2 Empty

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 13, 2011 6:26 pm

அருமையா எழுதி இருக்கீங்க அக்கா.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



பூப்பு..பூப்பு.. - Page 2 Uபூப்பு..பூப்பு.. - Page 2 Dபூப்பு..பூப்பு.. - Page 2 Aபூப்பு..பூப்பு.. - Page 2 Yபூப்பு..பூப்பு.. - Page 2 Aபூப்பு..பூப்பு.. - Page 2 Sபூப்பு..பூப்பு.. - Page 2 Uபூப்பு..பூப்பு.. - Page 2 Dபூப்பு..பூப்பு.. - Page 2 Hபூப்பு..பூப்பு.. - Page 2 A
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Tue Sep 13, 2011 6:34 pm

அருமையா எழுதி இருக்கீங்க அக்கா.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 13, 2011 8:36 pm

உதயசுதா wrote:அருமையா எழுதி இருக்கீங்க அக்கா.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நானும் என்னமோ எழுதறேன். நன்றி சுதா.

எப்படி இருக்கீக்க? ரொம்ப நாளாச்சு பேசி... என்ன விஷேசம்? தனிமடலில் அல்லது அரட்டைப் பகுதியில் சொல்லுங்க..



பூப்பு..பூப்பு.. - Page 2 Aபூப்பு..பூப்பு.. - Page 2 Aபூப்பு..பூப்பு.. - Page 2 Tபூப்பு..பூப்பு.. - Page 2 Hபூப்பு..பூப்பு.. - Page 2 Iபூப்பு..பூப்பு.. - Page 2 Rபூப்பு..பூப்பு.. - Page 2 Aபூப்பு..பூப்பு.. - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக