புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
77 Posts - 36%
i6appar
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில்


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 12:56 pm

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும்,

புத்திர பாக்கியம் அருளும் திருத்தலம்


திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Thirubuvanam


தல இருப்பிடமும், கோயில் அமைப்பும்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருபுவன வீரபுரம் என்று ஆதி காலத்தில் அழைக்கப்பட்ட " திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில். வில்வவனம், திரிபுரவனம், தேஷேத்திரம், நிம்பாண்டியஷேத்திரம் என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உரியனவையே. முதற் கோபுரமாகிய திருத்தோரண வாயில், இரண்டாம் கோபுரமாகிய திருமாளிகைத் திருவாயில் மற்றும் அர்த்தத் திருவாயில் என மூன்று திருவாயில்களை கொண்டுள்ளது இத் திருக்கோயில்.

முதற் கோபுரம் ஏழு நிலைகளுடனும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளுடனும் காணப்படுகின்றது. இரு பிரகாரங்களை கொண்டுள்ள இத் திருக்கோயிலில், முதற் பிரகாரத்தின் மத்தியில் அமைந்துள்ளது "நடுக்கந்தீர்த்த பெருமான்" ஆலயம். இதன் விமானம் தஞ்சை பெரிய கோயிலையும், கங்கை கொண்ட சோழபுரத்தினையும் ஒத்ததை போல் அமைந்துள்ளது. முதற் பிரகாரத்தின் வட பகுதியில் அம்பாள் சந்நதியும், கீழ்ப் புறம் சரபேஸ்வரர் சந்நதியும் அமைந்துள்ளன. மூலவர் ஸ்ரீகம்பகரேஸ்வரர். தமிழில் நடுக்கந்தீர்த்த பெருமான் என்று அழைக்கபடுகின்றார். அம்பாள் தர்மசம்வர்த்தினி. தமிழில் அறம் வளர்த்த நாயகி.

பிரகலாதன் மற்றும் தேவர்களின் கம்பத்தினை ( நடுக்கத்தினை ) தீர்த்ததால் பெருமான் இப் பெயர் கொண்டார். இரணியனது குருதியை பருகிய நரசிம்மம் மதி மயங்கி ஆக்ரோஷம் கொண்ட வேளை, இத் தல மூர்த்தி சரபப் பறவை உரு கொண்டு நரசிம்மத்தினை சாந்தமடைய செய்ததால் சரபேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனிக் கோயில் கொண்டு இத் திருத்தலத்தில் அருள் பாலிக்கின்றார்.

வில்வம் தல விருட்சம். சரப தீர்த்தம், தேவ தீர்த்தம், ஞான தீர்த்தம், வியாச தீர்த்தம், பிருகு தீர்த்தம் மற்றும் சித்த தீர்த்தம் என ஆறு தீர்த்தங்கள் உள்ளன. விஷ்ணு, லஷ்மி தேவி, வருணன், நாரதர், ராஜராஜன், வரகுண பாண்டியன் போன்றோர் வழிபட்ட திருத்தலம் இது. இங்குள்ள வசந்த மண்டபம் அழகிய வேலைப்படுடன் காணப்படுகின்றது. நாற்புறமும் கருங்கற்களாலான சக்கரங்களை கொண்டு ஒரு ரதத்தை போன்று காட்சி தருகிறது.

ஆலயத்தின் சிற்பங்கள் யாவும் மிக அழகிய வேலைப்படுகளை கொண்டவை. சரபர் சந்நதியில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி சிலைகளும், சோமஸ்கந்தர் மண்டபத்தின் பரத நாட்டிய பாவங்களும் மிக அற்புதமானவை. கர்ப்பகிரக விமானம் முழுவதும் கருங்கல்லினால் ஆனது. அதில் உள்ள சிற்பங்களும் கருங்கற்களே.

எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.

திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 14


பிரகலாதனும், சரபமூர்த்தியும்

இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, " தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது " என்ற அரிய வரத்தினை பெற்றான். தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான்.

அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான். எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி "எங்கெ உன் நாராயணன்?" எனக் கேட்க, பிரகலாதணோ " என் நாராயணன் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் " என்று கூறினான். கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன்.

இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார். அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.

சரபரும், வழிபாடும்


நன்னா லிரண்டு திருவடியும் நனி நீள் வாலும் முகம் இரண்டம்

கொன்னார் சிறகும் உருத்திரமும் கொடும் பேரார்ப்பும் எதிர் தொற்றிச்

செந்நீர் பருகிச் செருக்கு நரமடங்கல் ஆவி செதுக்குரி கொண்டு

ஒன்னார் குலங்கள் முழுதழிக்கும் உடையான சரபத் திருவுருவம்



எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.

சரபம் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள். பட்சிகளின் அரசன். சிங்கத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டது சரபம். இத்திருவடிவம் "சிம்மக்ன மூர்த்தி", "சிம்ஹாரி", நரசிம்ம சம்ஹாரர்" என்றும் அழைக்கபடுகின்றது. பறவை போன்ற பொன்னிறம், இரு இறக்கைகள், சிவப்பேறிய கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய சிங்கத்தை போன்ற கால்கள் நான்கு. மனித உடல். கிரீடம் தரித்த சிங்க முகம். தந்தங்களை போன்ற கோரைப் பற்கள் என பயங்கர உருவமே சரபர் என்கின்றது காமிகாமகம்.

இம் மூர்த்தியை "அகாச பைரவர்" என்கின்றது உத்திர காமிகாமகம். சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள். பிரத்யங்கரா எனும் காளியும், துர்க்கையுமே இறக்கைகள். இந்திரனே நகங்கள். காலனே தொடைகள். சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும். தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி. சரப மூல மந்திரத்தினை 100 அலது 1000 முறை ஜெபித்து, அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாதம், சூலை போன்ற கொடிய நோய்கள் தீரும். மலட்டுத் தன்மை நீங்கும். சரப காயத்ரி மந்திரம் ஜெபிப்பது பாம்புகளிடமிருந்து காத்திடும்

நன்றி : kumbakonamtourism


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 12:59 pm

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும்,

புத்திர பாக்கியம் அருளும் திருத்தலம்




இத்திருத்தலத்தைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 677196 திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 1:02 pm

ஸ்தள வரலாறு அருமை சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 1:44 pm

நன்றிகள் கிச்சா நன்றி

நன்றிகள் பாலா கார்த்திக் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக