புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
156 Posts - 79%
heezulia
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
3 Posts - 2%
Pampu
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
1 Post - 1%
prajai
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
321 Posts - 78%
heezulia
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_m10பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் !

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 15, 2012 11:04 am

பப்பாளி

பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! 7Sm5RzFpTCeuml4cIRzA+img1130207022_1_1

பப்பாளி உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் ஏராளமாக வளர்கிறது. இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பச்சையும், மஞ்சளும் கலந்த பப்பாளிப் பழங்களில் “என்ஸைம்” எனப்படும் நொதிகள் அடங்கியுள்ளன. இவை தோலிலுள்ள செல்களை மிருதுவாக்கி, அழுக்குகளையும் இறந்த செல்களையும் போக்கக் கூடியவை.

பழத்தின் மஞ்சள் நிற சதைப்பகுதியை எல்லாவித சருமத்தினரும், முகத்திற்கு மாஸ்க்காகப் போடலாம். மற்றைய பழங்களை விட பப்பாளியில் கரோட்டின், வைட்டமின் ‘ஏ’, ‘சி’ சத்துகள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் இனிய பழம் ஆகும்.

பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்னும் நொதிப் பொருள் ஜுரண சக்திக்கு ஏற்றது. கண்களின் கீழுள்ள கருவளையம் மற்றும் சருமத்தின் சுருக்கங்களை நீக்கும் (AHA) “ஆல்ஃபா ஹைடிராக்ஸி ஆஸிட்” எனப்படும் பழ ஆசிட் பப்பாளியில் இருப்பதால் இது சருமத்தை மிருதுவாக்கும்.

அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, தயாமின், ரிபோபிளேவின் மற்றும் நயாசின் சத்துகள் அடங்கியுள்ளன. சோடியம் பொட்டாசியம் சத்துகளும், குறைந்த சர்க்கரை அளவும் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

அழகு சாதனப் பொருட் தயாரிப்பிற்கும், தலை கழுவிகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. சருமத்தில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்.

பப்பாளி மரத்தின் உச்சியில் இலைகள் திரளாக இருக்கும். இது பனை ஒலை போன்று பரந்து அகன்று இருக்கும். பப்பாளி மரம் பூக்க ஐந்து ஆண்டுகளாகும். இதிலே ஆண்மரம், பெண்மரம் என உள்ளது. ஆண்மரம் பூத்தும் பலன் ஏதும் இல்லை. பெண் மரம் பூத்தால் தான் அது காயாகி கனியாகும். பழம் 7.5 முதல் 50 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதன் மேல் தோல் பருமனாக இருக்கும். உள்ளே பழச்சதை இறுகிய கூழ் போலிருக்கும். அதனுள் கறுப்பு நிறத்தில் சிறிய விதைகள் பொதிந்திருக்கும். சதைப்பகுதி இனிப்பாகவும், கஸ்தூரி மணத்துடனும் இருக்கும்.

பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது. உடல் பருமனைக் குறைக்கவும் தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது பப்பாளிக்காய்.

பப்பாளிப் பழத்திற்கு உடல்வலிமை, ஆண்மை தரும் சக்தி உண்டு. சொறி, சிரங்கு, காயம் ஆகியவற்றைப் போக்கிவிடும். கண்பார்வை கூர்மையடையவும், நீரடைப்பு குணமாகவும், இரத்தம் ஊறவும், பல் சம்பந்தமான கோளாறுகள் நீக்கவும் இது பயன்படுகிறது.

பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.

பப்பாளிக் காயால் உடலில் ஏற்படும் வாதவலி நீங்கும். இதை பாலூட்டும் தாய்மார்கள் சமைத்து உண்டுவர தாய்ப்பால் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு சிக்கல் தீரும். மேலும் வயிற்றிலுள்ள கிருமிகள் அழியும். பப்பாளிக்காயின் பாலை தேள்கொட்டிய இடத்தில் தேய்க்க விஷம் இறங்கும். இந்த பாலை நமைச்சல் உண்டாக்கும் படைகளுக்கு தடவிவர நமைச்சல் அடங்கி விரைவில் மறைந்து விடும்.

வாரம் இருமுறை பப்பாளிக் காயை சமைத்து உண்டு வர உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது. இதை அதிகமாக வேக வைத்தால் வைட்டமின் ‘இ’ சத்து குறைந்து விடும்.

வைட்டமின் ‘ஏ’ என்ற உயிரிச்சத்து நிறைந்தது. உடலில் அதிக இரத்தத்தை உண்டு பண்ணும். மனித உடல் வளர்ச்சியடையவும், உடல் பலம் பெறவும், இரத்தத்தை விருத்தி செய்யும் நரம்புகளுக்கு உறுதியைக் கொடுக்கவும், கண்பார்வையைக் கூர்மைப்படுத்தவும், பற்களைப் கெட்டிப்படுத்தி ஈறுகளுக்கு பலத்தைக் கொடுக்கவும், பல் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கவும், அறிவை வளரச் செய்யவும், நல்ல ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் கூடிய அபார சக்தி வைட்டமின் ‘ஏ’ உயிரிச்சத்துக்குத்தான் உண்டு.

அடிக்கடி பப்பாளிப்பழம் சாப்பிட்டு வருபவர்கள் எந்தவகையான வியாதிக்கும் ஆளாக வேண்டி இருக்காது. தொற்று நோய் இவர்களைத் தாக்காது. பப்பாளிப் பழத்தில் இயற்கையாகவே விஷக் கிருமிகளைக் கொல்லும் ஒரு வகைச் சத்து நிறைந்திருப்பதால் பழங்களில் இப்பழம் மிகவும் நல்ல பழம். அளவுக்கதிகமான உடல் பருமனை உடையவர்கள், முற்றிய பப்பாளிக்காயைத் தோல் சீவி, பருப்புடன் கூட்டு வைத்தோ, பொரியல், சாம்பார் வைத்தோ வாரம் இருமுறை சாப்பிட்ட வந்தால், நாளா வட்டத்தில் உடல் பருமன் குறையும். இளைத்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.

பப்பாளி இலையை வெந்நீரில் போட்டெடுத்து நரம்புத் தளர்ச்சி, நரம்பு வலி முதலியவைகளுக்கு ஒற்றிடமிடலாம் அல்லது நெருப்பில் வாட்டி வைத்து கட்டலாம்.

பப்பாளி பாலுடன் வெங்காயமும் நீரும் சேர்த்துக் குழப்பி, வேர்க்குரு போன்ற தோலில் எழும்பும் குருவிற்குத் தடவ அவை விழுந்து விடும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 15, 2012 11:06 am

ஆப்பிள்

பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! RJCqAjrMRpC5MLmPoy13+images

பொதுவாகவே பழவகைகளில் ஆப்பிள் உயர்ந்த பழம். நல்ல பலத்தை தரும். அதிக இரத்தம் விருத்தியாகும். பழவகைகளில் முக்கியமானது ஆப்பிள். ஸ்காண்டிநேவியர்கள் ஆப்பிளை, இறைவனின் உணவு என்கின்றனர். ஆப்பிளில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆப்பிள் சதைப்பற்றுள்ள பழம். 80 சதவிகிதம் தண்ணீர், குறைந்த கலோரிகள் கொண்டது. இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகளும், பாஸ்பரஸ், கால்ஷியம், இரும்பு, ப்ரக்டோஸ், சுக்ரோஸ் முதலான சர்க்கரை, மாவுச்சத்து, நார்ச்சத்து முதலானவை அடங்கியுள்ளன.

சுமார் 12 மீட்டர் உயரம் வரை வளரும். முட்டை அல்லது நீள்வட்ட வடிவமான இலைகள் அடிப்பகுதி அகன்று மேற்புறம் மழமழப்பாக இருக்கும். இலை விளிம்புகள் இரம்பம் போலிருக்கும். இலைகள் பச்சை, மஞ்சள் அல்லது சிவப்பு இந்த நிறங்கள் அனைத்தின் சாயலும் கொண்டதாக இருக்கும். இதன் மலர்கள் ஊதா அல்லது வெள்ளை நிறத்தில் பெரிய கொத்தாகப் பூக்கும். மலர்கள் மிகுந்த நறுமணம் உடையவை.

ஆப்பிளை பழமாக, சாறாக, ஜெல்லியாக, சர்பத்தாக உண்ணலாம். சரிவிகித சத்துணவில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆப்பிள் பழத்தைக் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்திகரிக்கப்படும். இரத்த சோகை குணமாகும். ஜலதோசம், மூச்சு சம்பந்தமான வியாதிகள், சருமநோய்கள், வயிறு சம்பந்தமான நோய்கள் முதலியன அவ்வளவமாகப் பாதிப்பதில்லை. சருமம், முகம் முதலியன பளபளக்கும்.

ஆப்பிள் பழத்திலுள்ள வைட்டமின் B1 உயிர்ச்சத்து உடலுக்குப் பல நன்மைகளை செய்யக் கூடியதாக இருக்கிறது. தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் சீதளத்தை உண்டு பண்ணும். பழத்திலுள்ள B1 உயிர்ச்சத்து இதயத்திற்கு நல்ல பலத்தைத் தரும். மனசந்தோஷத்தை உண்டு பண்ணும். மனோதைரியம் உண்டாக்கும். உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்கச் செய்யும். மலச்சிக்கலை நீக்கும். இரைப்பையிலிருந்து மலக்குடல் வரை நல்ல பலத்தைக் கொடுக்கும்.

அதனால் தானே சொன்னார்கள் "An Apple a day keeps Doctor away" என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 15, 2012 11:08 am

ஆரஞ்சு

பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Xr6tAHH1SW2aiRArBz5a+download(1)
எலுமிச்சை போன்றே முட்களுடன் கூடிய மரம். சிட்ரஸ் எனும் வேதிப் பொருள் நிறைந்த பழங்களுக்கிடையில், ஆரஞ்சு மிகக் குறைந்த அமிலத்தன்மையும், நிறைந்த மணமும், சுவையும் கொண்டது.

ஆரஞ்சு, சாத்துக்குடி எனப் பல பிரிவுகள் இருந்தாலும் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையே. ஆரஞ்சு சுளைகளின் மேலே போர்த்திருக்கும் வெள்ளை நிறத்திசுக்கள் போன்றே தோல்களில் கால்சியக் சத்து மிகுந்து காணப்படுகிறது.

பழங்களும், பூக்களும் மருத்துவ குணம் கொண்டவை. ஆரஞ்சு பூக்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகுந்த அரோமா குணம் கொண்டவை. ஆரஞ்சு பூக்களால் வடித்தெடுக்கப்படும் வடிநீர் முகத்திற்கான லோசன்களாக உபயோகிக்கப்படுகிறது. இந்நீர் சருமத்திற்கு நீர்ச்சத்தினை அளித்து சருமத்தை சமனப்படுத்துகிறது. வைட்டமின் ‘சி’ சத்து மிகுந்திருப்பதால் சருமத்திற்கு பளபளப்பையும் இளமைப்பொலிவையும் கொடுக்கிறது.

இம்மரம் வளர எளிதில் நீர்வடியும் ஈரப்பதமுள்ள நிலம் தேவை. மித வெப்ப நாடுகளில் இது அதிகமாக வளர்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இது பயிரிடப்படுகிறது.

நிறம் வேண்டுவோர் ஆரஞ்சுப் பழங்களை உட்கொள்வதுடன் ஆரஞ்சு சாறு கலந்த பொருட்களை உபயோகிக்கலாம். இதன் தோல் சிறந்த அழுக்கு நீக்கி. எனவே பழங்களின் தோல்களும் சோப் மற்றும் க்ரீம்களின் மூலப் பொருளாகின்றன.

இந்த வகைப் பழங்களில் சிட்ரிக் அமிலமும், சர்க்கரையும் உள்ளன. சிட்ரிக் அமிலம் அதிகமாக இருந்தால் புளிப்புச் சுவை அதிகமாக இருக்கும். சர்க்கரை அதிகமாக இருந்தால் இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். ஆரஞ்சில் பல வகைகள் உள்ளன. விதை, பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை திரவியங்களுக்கும் சிலவகை குடிபானங்களுக்கு நறுமணமூட்டவும் பயன்படுகிறது.

கமலாபழம், ஆரஞ்சுபழம் என்று சொல்லப்படுகிறது. வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் தான் இப்பழம் கிடைக்கும். ஆரஞ்சு பழம் நல்ல இனிப்பாகவும், சிலவகை இனிப்பு, புளிப்பாகவும் மற்றும் சில வகை வெறும் புளிப்பு ருசியுடனுமிருக்கும். ஆரஞ்சு பழத்தை, ஆரஞ்சுப் பழங்களில் சாத்துக்குடி வகைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இதில் வைட்டமின் டி, பி1, பி2, சி என உயிரிச்சத்துகள் நிறைய இருப்பதால் இது உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. நீண்டநாள் வியாதியினால் பாதிக்கப்பட்டுத் தேறி எழுந்தவர்கள் தொடர்ந்து ஆரஞ்சப்பழம் சாப்பிட்டு வர அவர்கள் நல்ல பலம் பெறுவார்கள். பலம் பெற இது ஒரு இயற்கை டானிக்காகவே இருந்து வருகிறது.

அரை கப் பழச்சாற்றில் 1 தேக்கரண்டி சுத்தமான தேனைக் கலக்கி படுக்கைக்குப் போகும் அரைமணி முன் சாப்பிட சுகமான நித்திரை தழுவும். ஆனந்தமான தூக்கம் வரும். தொற்றுநோய் பரவும் காலத்தில் அடிக்கடி ஆரஞ்சப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் தாக்காது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 15, 2012 11:11 am

எலுமிச்சை

பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! Q7fIo7qWRXuP39olKNwb+B4D9C0FC53C94E8BA211B3CD61DCE633

ந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் முட்கள் கொண்ட புதர்ச்செடி அல்லது சிறிய பரந்த மரம். கனிகள் நல்ல மஞ்சள் வண்ணமும், நறுமணமும் கொண்டவை. பூக்களும், கனிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. கனிகளில் சிட்ரிக் அமிலம் மிக முக்கியப் பொருளாகக் காணப்படுகிறது. இவை கிருமிகளுக்கு எதிரானவை.

எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன.

வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் இருப்பதால் சருமம் மற்றும் தலை கழுவியாகவும், சிறந்த சரும டானிக்காகவும் பயன்படுகின்றது. சருமத்திலுள்ள கறைகளை அகற்றுகிறது. சிட்ரிக் அமிலம் எடுக்கப்படுகிறது.

பசியைத் தூண்டல், ஜீரண உறுப்புகளை ஊக்குவித்தல், தசை இறுக்குதல், வயிற்றுவலி மற்றும் வாந்தியை நிறுத்துதல் போன்றவற்றுக்கு மருந்தாகிறது. மேலும் கனியின் சாறு தாகத்தினைப் போக்கி, உடல் எரிச்சலையும் போக்கி, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கவல்லது.

இயற்கையாகவே சருமத்திற்கு ஊறு விளைவிக்காமல் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றும் வேதிப் பொருட்கள் இருப்பதால் முகத்திற்குத் தேவையான களிம்புகள், மாஸ்க்குகள், கிரீம்கள், குளியல் சோப்புகள், ஷாம்புகள் என அனைத்திலும் இப்பழத்தின் ஆதிக்கம் அதிகம்.

விதைகள் மற்றும் தோலிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. எலுமிச்சை சாதாரணமாக இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளில் பலன் தர ஆரம்பிக்கும். நல்ல நீர் வளமும், நில வளமுமுள்ள இடத்தில் 50 ஆண்டுகள் வரை பூத்துக் காய்த்துக் கனிந்து பலன் தந்து கொண்டே இருக்கும். சில மரங்கள் நூறு ஆண்டுகள் வரை கூட பலன் தந்து கொண்டிருக்கும்.

எலுமிச்சைசாறு நேரடியாக பற்களின் மீது அடிக்கடி பட நேர்ந்தால் பற்களின் மேல் மின்னுகிற எனாமல் சிதைந்து கெட்டுவிடும். ஆகவே எந்த நிலையிலும் எலுமிச்சைசாறை தனியாக அருந்தவே கூடாது. தனியாக அருந்தும் போது தொண்டையும், மார்பும் வெகுவாகப் பாதிக்கப்படும். தேன் கலந்து பழரசங்களுடன் சேர்த்தே உட்கொள்ளலாம்.

உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும், அழகினையும் எலுமிச்சை மூலம் எளிதில் பெறலாம்.

எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப யானைக்கால் நோய் குணப்படும். எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு, உடலில் ஏற்படும் தேமலுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் பூசிக் காலையில் குளித்துவர தேமல் மறையும்.

பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும். வாரந்தோறும் எலுமிச்சை சாறை தலையில் தேய்த்துக் குளித்துவர பொடுகு அகலும்.

நெல்லிக் கனிகள் - சிலவற்றை நன்கு அரைத்து எலுமிச்சை ரசம் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடிகொட்டுவது நின்றுவிடும். முடி செழித்து வளர்ந்து கருநிறமாகவும் இருக்கும்.

ஆலமரத்தின் விழுதை அரைத்து எலுமிச்சை சாறுகளோடு கலந்து வாரந்தோறும் தலையில் இட்டுக் குளித்து வர தலைமுடி நன்றாக வளரும். வெள்ளைப்பூண்டை எலுமிச்சை சாற்றோடு கலந்து தேய்த்து வந்தால் பேன் தொல்லை நீங்கும். தலை சூடு தணிய பச்சை பயறு மாவோடு எலுமிச்சை கலந்து குளித்தல் நலம் பயக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 15, 2012 11:14 am

ஸ்ட்ராபெரி

பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! VvenKm5NRrGl9sslpSci+6a00d8341cbed153ef019aff8d4650970d

'பெரி  ' குடும்பத்தின் ‘ராணி’ எனப்படும் இந்த சிவந்த நிறப் பழங்கள் ‘வைட்டமின் சி’ சத்து மிகுந்தது. இரும்புச் சத்தும் மிகுந்துள்ளது. பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் இருப்பதால் மருத்துவ குணம் கொண்டது எனப் போற்றப்படுகின்றது.

இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.

சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2013 2:36 pm

பின்னூட்டம் எழுதுங்க 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 4:18 pm

பயனுள்ள பகிர்வு நன்றிமா பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! 103459460 பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! 1571444738 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Dec 11, 2013 5:18 pm

"An Apple a day keeps Doctor away"
இந்த விஷயம் டாக்டர் மனைவிக்குமா ?

தெரிந்த + தெரியாத அனைத்து பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள் பலப்பல.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2013 7:23 pm

ஈகரையன் wrote:
"An Apple a day keeps Doctor away"
இந்த விஷயம் டாக்டர் மனைவிக்குமா ?

தெரிந்த + தெரியாத அனைத்து பயனுள்ள தகவல்கள்.  பகிர்வுக்கு நன்றிகள் பலப்பல.

If the Doctor is Beautiful keep the Apple away  கண்ணடி அடுத்த வரி இது நண்பரே ! இது மனைவிக்கும் பொருந்தும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 2:06 pm

வாழை‌ப்பழ‌ம்

பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் ! UxD0gcYbTXuOTQi4tsuV+555318_427395360661894_1241679120_n

வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இரு‌க்‌கி‌ன்றன. ம‌ற்ற பழ‌ங்களை ‌விட பல ந‌ல்ல குண‌ங்களையு‌ம் வாழை‌ப் பழ‌ம் பெ‌ற்று‌ள்ளது. அதும‌‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பல நோய்களை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றலையும் வாழைப்பழம் பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது மிகவும் நல்லது. அதனால்தான் பழங்காலத்தில் எந்த விசேஷமாக இருந்தாலும் வெற்றிலையுடன் வாழைப்பழத்தையும் இணைத்து கொடுத்தனர்.

மலச்சிக்கல், குடல் பிரச்சினை, மனத் தளர்ச்சி ஆகியவற்றை நீக்கும் தன்மை உடையது வாழை‌ப்பழ‌ம். வாழைப்பழத்துடன் பால் சேர்த்து மில்க்ஷேக் சாப்பிட்டால் உடல் சோம்பல் ஓடிவிடும். புகைப்பழக்கத்தை விடமுடியாமல் தவிப்பவர்கள், வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புகைக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக