புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 20, 2009 8:15 am

திருக்குர் ஆன் ரமலான் மாதத்தைப் பற்றி குறிப்பிடும்போது நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டது போல, உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது" என பகர்கிறது. முந்தைய நபிமார்கள் இபுராஹிம் ( ஆப்ராஹாம்), ஈஸா கடமையாக்கப்பட்டிருந்ததையே இது சுட்டிக் காட்டுகிறது.

இந்து, கிறித்துவ, யூத, புத்த மதங்களிலும் நோன்பு இன்றும் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தில் (Lunar) காலண்டர் அடிப்படையில் மாதங்கள் கணக்கிடப்படுகிறபடியால், ஆண்டில் எல்லா நிலைகளிலும் குளிர், வெப்பம், வசந்தம், இப்படி மாறி மாறி 36 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சியாக வருகிறது.

"தன்னை அறிந்தவன் தான் தன் இறைவனை அறிவான்" என்பது முகம்மது நபி (ஸல்) அவர்களின் திரு வாக்கு. ""மனிதனை மனிதனாக வாழவைப்பதே சிரமம் அதையே எம் பாட்டனார் செய்தார்கள். அதுதான் ஷரியத்" என்று திரு நபி அவர்களின் திருப்பேரர் சங்கை மிகு இமாம் சையத்; கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹா ஷிமிப் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். மேலும் அவர்கள் திருவாய் மலருகின்றார்கள். "மானிடன் இறையை அறிவதான தன்னைத்தானறியும் அறிவைப் பெற்றுக் கொள்வதாயின், திடசித்தமும் சுத்த பக்தியும் பூரண நம்பிக்கையும், உண்மையும் அவனிடத்திருத்தல் மிக முக்கியமாகும் இதற்கு புனித நோன்பு மாத பயிற்சிகள் வழி வகுக்கின்றன.

இந்த நோன்பு மாதத்தில் இறைவனுக்காக செய்கிறோம் என்னும் தூய்மையான எண்ணத்துடன் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை, உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது போன்ற சுகங்களை தவிர்த்து இறைவனின் நினைவில் வழக்கமான பணிகளையும் மற்றும் தியான வணக்கங்களையும் மேற்கொள்வதின் மூலம் உள்ளம் தூய்மை அடைகிறது.

11 மாதங்கள் தொடர்ந்து இயந்திரமாக வேலை செய்த ஜிரண உறுப்புகள், இந்த மாதத்தில் ஓய்வு கிடைப்பதால் புத்துணர்வு அடைகின்றன. நோன்பினால் உடல் மட்டுமின்றி உள்ளமும் தூய்மை அடைகின்றது. இன்றைய காலத்தில் கொலஸ்ட்ரால், இனிப்பு மன்றும் டிஜிஎல் என பல நோய்கள் உள்ள மனிதர்களிடம் மருத்துவர்கள் கூறுவது டயட் என்றுதான். இந்த டயட் நிச்சயமாக குடலுக்கு ஓய்வு தருவதால் அதன் தொடர்ச்சியாக மற்ற உறுப்புகளுக்கும் சரியான முறையில் ஓய்வு கிடைப்பதினால் நோய்கள் அகல உதவுகிறது.

உண்ணாமல், குடிக்காமல், உறவு கொள்ளாமல் இருப்பது சாதாரண, சாமானிய மக்களின் நோன்பாகும். அவயங்கள் ஐந்தையும் அடக்கியாள்வதே "மாண்பான நோன்பு என்பர் மேன்மக்கள். இவையனைத்தையும் விட இறையம்சத்தை பெறுவதே உண்மையான பேரானந்த நோன்பு. இந்த ஒருமாத கால பயிற்சி, மற்ற நாட்களிலும் தீமைகளை விட்டகன்று தூய்மை அடைய பயிற்சி களமாக அமைகிறது. பணக்காரர்கள் முதல் வயது வந்த அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளதால், பணக்காரர்கள் பசியின் தன்மையினை உணர ஒரு பெரும் வாய்ப்பு ஏற்பட்டு ஏழைகள் எப்படி பசியினால் கஷ்டப்படுவார்கள் என்பதனை உணர்ந்து அவர்கள், ஏழைப் பெருமக்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு கண்டிப்பாக பிறக்கும் என்பதில் ஐயமில்லை. ஏழைகளின் பசியின் கொடுமைகளை அறிய இந்த நோன்பு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்கள், நோன்பு நோற்பவர்கள் எல்லா தீய செயல்களை விட்டும் அகன்று, பொய் சொல்லாமல், புறம் பேசாமல், சண்டையிடாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.

மேலும் "நோன்பானது பொறுமையின் பாதி, பொறுமையானது உண்மையின் பாதி என்பது கூற்று. "பசியினால் சிடு சிடுவென இருப்பவர்கள், நற்செயல்களை தவறவிடுபவர்கள், இவர்கள் பசி, தாகம் போன்றவற்றை அடக்குகிறார்களே தவிர வேறு எதுவும் பிரயோஜனம் நோன்பு நோற்பதினால் ஏற்படாது என்பது திரு நபி (ஸல்) அவர்களின் வாக்கு.

எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் அவர்கள் வேறு நாட்களில் நோன்பு நோற்றுக் கொள்ளலாம் என்பதும், நோன்பு நோற்க சக்தியற்றவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது என்பதும் கடமையாகும் என்று திருக்குர் ஆன் நோன்பு நோற்க இயலாதவர்களுக்கு சலுகையும் அளிக்கிறது என்பதனையும் அறிய வேண்டும்.

ஆனால் எவரேனும் விரும்பி (கடமைக்கு மேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் நோன்பின் பலனை அறிந்தவர்களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க பலமானதாகும் என்பது திருமறை வாக்கு உடல் ஆரோக்கியம், மனக்கட்டுப்பாடு, இரக்கம், இறையச்சம் ஆகிய உயர் பண்புகள் மூலம் மனிதன் தூய நிலை அடைய இந்த நோன்பு காரணமாகிறது.

இந்த புனித மாதத்தில்தான் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வானவர் கோமான் ஜிப்ரில் (அலை) (கேப்ரியேல்) அவர்கள் மூலமாக, அவர்கள் ஹிரா என்னும் குகைக்குள் தொடர்ந்து தவமிருந்த நாட்களில் ஒரு நாள் "உம் இறைவன் பெயரால் (அறிவை) படியும் ( அறிவை) ஓதும் என்ற பொருள் கொண்ட முதல் வேத வசனம் இறக்கப்பட்டது. அந்த இரவே, இம்மாதத்தின் 27ஆம் நாளில், "புனித லைலதத்துல் கத்ரு என்னும் இரவாக கொண்டாடப்படுகிறது.

கத்ரு என்ற அரபி பதத்திற்கு கண்ணியம் என்று பொருள். லைலத்துல் கத்ரு என்றால் கண்ணியமிக்க இரவு என்று பொருள். இந்த சமயத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுவது நலம். கதர் ஆடை என்பது சுதந்திர போராட்ட நாட்களில் தேச பிதா காந்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடை. இதற்கும் லைலத்துல் கத்ருக்கும் தொடர்பு உண்டு. காந்தி அவர்கள் இந்த துணியை அறிமுகப்படுத்தும் பொருட்டு, இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அவர்களின் நெருங்கிய தலைவர்களுடன் ஆலோசனை செய்யும் போது, மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள், அன்றைய நாள் அதிருஷ்டவசமாக "லைலத்துல் கத்ரு நாளாக இருப்பதை உணர்ந்து "கதர் கப்டா (கதர் ஆடை) அதாவது கண்ணியமிக்க ஆடை எனப் பெயர் வைக்கலாம் என்று உரைத்தார்கள் என்பது வரலாறு. இப்பெயரே இன்றும் அந்த ஆடைக்கு நிலைத்துவிட்டதை காண்கிறோம்.

இந்தியாவில் பல நகரங்களில் கிராமங்களில் இந்த ரமலான் மாதம், சகோதர வாஞ்சையுடன் கொண்டாடப்படுவதை பார்த்து மகிலாம். எனது சொந்த ஊர் ( கட்டுரையாளர்) அய்யம்பேட்டை அருகிலுள்ள வழுதூர். மாணவப் பருவத்திலேயே ஊரில் இருக்கும் காலங்களில் முஸ்லிம்கள் இந்து, கிருத்துவ சகோதரர்கள் அனைவருடனும் ஒன்றாக பள்ளிவாசல்களுக்கு சென்று நோன்பு திறப்பதற்காக வழங்கப்படும் கஞ்சி வாங்குவதும், அவர்களுடன் சேர்ந்து அருந்துவதையும் நினைவு கூர்கிறேன். இன்றும் பல இடங்களில் முஸ்லிம்களை கண்ணியப்படுத்தும் பொருட்டு பிறமத சகோதரர்கள், அவர்கள் முன்னால் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்ன ஒரு சகோதர வாஞ்சை!

முஸ்லிம் சகோதரர்கள், பிறமத சகோதரர்களை இன் முகத்துடன் வரவேற்று உபசரிப்பதும், இந் நிலை நமது இந்திய திருக்கண்ணடத்தில் என்றும் மலர்ந்து கெண்டிருக்க வேண்டும் என்பதே பெரியோர்களின், நல் மனம் கொண்டவர்களின் பேரவா.

அடியான் நோற்கும் நோன்பிற்கு நானே அதற்குரிய கூலியைத் தருவேன் என்று இறைவன் கூறகிறான் என்பது திருநபி (ஸல்) அவர்களின் வாக்கு. உலகம் உய்வு பெற, எல்லாச் சமயங்களும் வேறுபாடற. எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவ அனைத்துமொன்றே எனும் ஞானத்தை தாமடைய ஒவ்வொருவரும் முன் வரல் வேண்டும் என்று சங்கைமிகு இமாம் சையத் கலீல் அவ்ன் மௌலானா அல் ஹசனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் வாக்கிற்கேற்ப இப்புனித மிக்க நோன்பில், நோன்பின் மாண்பை அறிந்து, மனித நேயம், மனிதர்களிடையே ஒற்றுமை இவற்றை கடைப்பிடித்து சாந்தியும், சமாதானமும் எங்கும் நிலவ இந்த நோன்பு மாதத்தினை இஸ்லாமிய சகோதரர்கள் பயிற்சி காலமாக எடுத்துக் கொண்டால் என்றும் ஆனந்தம்! ஆனந்தமே!



புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Sep 20, 2009 10:28 am

இஸ்லாமியா சகோதர, சகோதரி அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள். புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் 154550 புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் 154550 புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் 154550

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 17, 2010 8:18 pm

புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் 678642 புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் 678642 புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 17, 2010 8:27 pm

ரமலானின் பெருமைகளை எடுத்துரைக்கும் பதிவுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 8:31 pm

புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் 677196 புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் 678642 புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் 678642




புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் Power-Star-Srinivasan
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon Jul 19, 2010 9:04 pm

ஜஸாஹல்லாஹு கைறா. புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் 154550



புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக