புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
9 Posts - 82%
heezulia
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
1 Post - 9%
mruthun
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_m10ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 05, 2011 7:49 am

வகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.



மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.


இனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.

குப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.


அதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் "" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே! இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்'' என்று பல முறை சொல்லியும் அந்த மாணவர் அழுக்கான குல்லாவையே அணிந்து வந்தாராம். இதைச் சகித்துக் கொள்ள முடியாத அந்த ஆசிரியர், மாணவரின் தலையிலிருந்த குல்லாவை அவரே எடுத்துக்கொண்டு போய் சுத்தமாகத் துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தாராம்.


ஆசிரியரே தனது அழுக்குக் குல்லாவைத் துவைத்துச் சுத்தமாக்கிக் கொண்டு வந்து கொடுத்ததைக் கண்டதும் அந்த மாணவர் வெட்கித் தலைகுனிந்தார். அதன் பிறகு அந்த மாணவர் குல்லாவை எப்போதும் சுத்தமானதாகவே அணிந்து வந்தாராம்.


கல்வியை மட்டும் மாணவருக்குக் கற்றுத் தராமல் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுத்தந்த இந்த ஆசிரியர் யார்?

தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் துணைவேந்தராக இருந்தவர். ஜெர்மன் நாட்டுக்குச் சென்று படித்து பி.எச்டி. டாக்டர் பட்டம் பெற்றவர். மிகச் சிறந்த கல்வியாளர். அவர் தான் டாக்டர் ஜாகீர் ஹுசைன்.
அவர் நடத்தி வந்த பல்கலைக்கழகத்துக்கு காந்தி, நேரு போன்ற தேசியத் தலைவர்கள் உள்பட பலரும் நிதியுதவி செய்து வந்துள்ளனர். இவரது பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தவர்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்த பலரும் திடீரென நிதியுதவி செய்வதை நிறுத்திவிட்டனர்.


நிதி நிலைமை மோசமான நிலையிலும்கூட கல்விக் கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பாத ஜாகீர் ஹுசைன், நிதி நிலைமையைச் சரிசெய்ய தன்னுடைய சம்பளத்தையும் மற்ற ஆசிரியர்களின் சம்பளத்தையும் குறைத்துக் கொள்வதென முடிவு செய்தார். அவரிடம் பணிபுரிந்த ஆசிரியர்களும் அதற்கு உடன்பட்டார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.

அனைவரும் மாதம் ரூ.300 சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தார்கள். ஆனால் மற்ற பல்கலைக்கழகங்களில் பணி செய்த ஆசிரியர்களின் சம்பளமோ ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்த நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ரூ.300 மட்டுமே சம்பளமாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த செய்தி மிகப்பெரிய தியாகமாகப் பேசப்பட்டது.

ஊதியக் குறைவுக்காக எந்தவித ஆர்ப்பாட்டங்களோ, பேரணிகளோ நடத்தவில்லை. அப்படி இருந்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை மேலும் மோசம் அடைந்தது. மாதம் ரூ.300 சம்பளமாகப் பெறும் தொகையையும் குறைத்துக் கொண்டு ரூ.200 சம்பளமாகப் பெற்றனர். இதுவும் அதைவிட பெரிய தியாகச் செயலாகப் பேசப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு நிதி நிலைமை மேலும் மோசமாகவே ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தை ரூ.150 ஆகவும் குறைத்துக் கொண்டனர்.


ஆனால் ஜாகீர் ஹுசைனோ தனது சம்பளத்தை ரூ.95 ஆக குறைத்துக் கொண்டார். இந்த 95 ரூபாய் மாதச் சம்பளத்தில் தான் சுமார் 20 ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.



இந்த தேச உணர்வும், தியாக உணர்வும் இருந்த கல்வியாளரைத்தான் இந்தியா தனது குடியரசுத் தலைவருக்கான கட்டிலில் மூன்றாவது முறையாக அமரவைத்து அழகு பார்த்தது.



இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த முதல் இஸ்லாமியர். கீழே இருப்பவர் மேலே போக ஏறிச்செல்ல உதவும் ஏணியும், இக்கரையில் இருப்பவர் அக்கரைக்குச் செல்லத் தோணியும் உதவுவதைப் போல மாணவச் செல்வங்களுக்காகவே தங்களை உருக்கிக் கொண்டு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கும் இந்த மெழுகுவர்த்திகள் போற்றுதலுக்குரியவர்கள். வணக்கத்துக்கு உரியவர்கள்.

ஆசிரியர் மட்டும் மனது வைத்துவிட்டால் அனைத்து மாணவர்களையும் அப்துல் கலாம்களாக மாற்றி விட முடியும். அவமானங்களும், அலட்சியங்களும் விண்ணைத் தொடும் வெற்றிகளுக்கான எரிசக்திகள் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சம்பவங்கள் மூலம் விளக்கி அவர்களை உருக வைக்க முடியும்.மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்துவோம்!



www.ghskattimedu.blogspot.com




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Sep 05, 2011 8:01 am

ஆசிரியர் என்பதில் பெருமை கொள்வோம். திடமான மாணவ சமுதாயத்தை உருவாக்குவோம். நன்றி பாலா சார்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 8:04 am

தேச உணர்வும், தியாக உணர்வு மட்டுமல்லாது தானே ஒரு முன்னுதாரணமாக விளங்கிய உயர்திரு. ஜாகீர் ஹுசைன் அவர்கள் பற்றிய கட்டுரை பகிர்வுக்கு நன்றி....

உங்களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 05, 2011 8:07 am

நன்றி மகாபிரபு, நன்றி
மிக்க நன்றி சுதானந்தன் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 05, 2011 8:16 am

மிக அருமையான பதிவளித்த ஆசிரிய பெருந்தகை பாலா அவர்களுக்கு நன்றிகள் மற்றும் என் இனிய ஆசிரிய தின நாள் வாழ்த்துக்கள்......

நானும் ஒரு தகவல் கூற விரும்புகிறேன்...உயர்திரு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆசிரியர் திரு அய்யாதுரை அவர்கள் ஆசிரியர் மற்றும் மாணவர் பற்றி இவ்வாறு கூறுகிறார்....ஒரு கெட்ட மாணவன் ஒரு சிறந்த ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொள்வதை விட ஒரு சிறந்த மாணவன் ஒரு கெட்ட ஆசிரியரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம் என்கிறார்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 05, 2011 8:37 am

நன்றி பி.ஜி. ராமன் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 05, 2011 8:45 am

ஆசிரியர் தினத்தில்...ஒரு அருமையான..மாணவர்கள் மட்டுமின்றி..
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..கே.பாலா சார்.
பகிர்வுக்கு நன்றி.

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Mon Sep 05, 2011 9:37 am

ஆசிரியர் தினத்தில் ஒரு நல்ல கட்டுரையை வழங்கியிருக்கிறீர்கள் பாலா . ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

உதயா

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 05, 2011 12:03 pm

rameshnaga wrote:ஆசிரியர் தினத்தில்...ஒரு அருமையான..மாணவர்கள் மட்டுமின்றி..
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..கே.பாலா சார்.
பகிர்வுக்கு நன்றி.
: நன்றி நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக