புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
52 Posts - 61%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
244 Posts - 43%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
13 Posts - 2%
prajai
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - பைபிள்


   
   

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 12:05 am

First topic message reminder :

நண்பர்களே

இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினமும் பைபிளில் இருந்து வாசகம் ஒன்று இடலாம் என்று எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் சொல்லுங்களேன்


உதாரணமாக 03/செப்டம்பர் 2011

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
21-23


சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய்
இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து
வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு
ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக்
கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப்
பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில்
உறுதியாக நிலைத்திருங்கள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 15, 2011 11:42 am

லூக்கா 19:01-10

ஆண்டின் பொதுக்காலம் 33 செவ்வாய்



1 இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.

2 அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.

3 இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.

4 அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.

5 இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார்.

6 அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.

7 இதைக் கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்" என்று முணுமுணுத்தனர்.

8 சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று அவரிடம் கூறினார்.

9 இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!

10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" என்று சொன்னார்.
பல முறை வாசித்து, மகிழ்ந்த பகுதி சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வு. லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடும் இந்த நிகழ்வில் சக்கேயுவின் மனமாற்றத்தையும், அவரது வாழ்வை இயேசு தலைகீழாக மாற்றிப்போட்டதையும் நாம் எண்ணி வியக்கிறோம். ஒரு மாற்றத்துக்காக இன்று இந்த நிகழ்வில் சக்கேயுவைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, இயேசுவின் செயல்பாட்டைச் சிந்திப்போம். சக்கேயுவின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் இயேசு எடுத்த முதல் முயற்சிதான். இயேசு சக்கேயு ஏறியிருந்த அத்திமரத்தை அண்ணாந்து பார்த்து, அவரை விரைவாய் இறங்கிவர அழைத்திருக்காவிட்டால், சக்கேயு மரத்தின்மேலேயே இருந்திருப்பார். இயேசுவைக் கண்களால் கண்டதோடு அவரது ஆவல் நிறைவேறியிருந்திருக்கும். இயேசு தாமாகவே முன்வந்து அவரை அழைத்ததுதான் சக்கேயுவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மனமாற்றத்தைத் தந்தது.

இயேசு எடுத்த இந்த முன் முயற்சியைத்தான் தன் முனைப்பு, தன்னார்வம் என்று சொல்கிறோம். இது ஒரு தலைமைப்பண்பு. நல்ல தலைவர்கள் எப்போதும் தன் முனைப்பு, தன்னார்வம் உடையவர்களாகவும், மாற்றங்கள் தாமாகவே விளையும் என்று காத்துக்கொண்டிராமல், தாங்களாகவே மாற்றத்தை உருவாக்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். இயேசுவின் தன் முனைப்பை, தன்னார்வத்தை நற்செய்தி நூல்களி;ன் பல பக்கங்களில் பார்க்கிறோம். சக்கேயுவைப் போலப் பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் தன்முனைப்புதான். நாமும் இயேசுவைப் போல ஏன் தன் முனைப்பு உடையவர்களாக, தன்னார்வம் கொண்டவர்களாக, முதல் முயற்சியை நாமே எடுப்பவர்களாக இருக்கக் கூடாது. நல்ல மாற்றங்களை நிகழ்த்துவதற்கு வாய்ப்புகளுக்காகக் காத்திராமல் நாமே ஏன் வாய்ப்புகளை உருவாக்கக்கூடாது!





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 11:40 am

மத்தேயு 14:22-36

ஆண்டின் பொதுக்காலம் 33 பேதுரு, பவுல் ஆலய நேர்ந்தளிப்பு



22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.

23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.

24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.

25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.

26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி," ஐயோ, பேய்" என அச்சத்தினால் அலறினர்.

27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார்." துணிவோடிருங்கள் ; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்.

28 பேதுரு அவருக்கு மறுமொழியாக," ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்" என்றார்.

29 அவர், "வா" என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.

30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது," ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கத்தினார்.

31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து," நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்றார்.

32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.

33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து," உண்மையாகவே நீர் இறைமகன்" என்றனர்.

இன்றைக்கு மனிதனுக்கு கடவுளைப்போல தானும் செய்ய வேண்டும் என்று ஆசை,பேதுருவுக்கு இயேசுவைப்போல கடலின்மேல் நடக்கவேண்டும் என்று ஆசை வந்ததுபோல.இயேசுவும் இதைத் தவறு என்று சொல்லவில்லை. பேதுருவை அனுமதித்ததுபோல மனிதனின் ஆசைகளை அனுமதிக்கிறார்.

இன்று மனிதனின் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் எல்லாவற்றையும் இறைவன் அனுமதிக்கிறார்.

ஆனால் பேதுரு கடலில் மூழ்கியதுபோல மூழ்கிவிடக்கூடாதே. பேதுருவுடைய நம்பிக்கையின்மை, பயம், ஆணவம், தெய்வீக வலுவின்மை, இவையே அவர் மூழ்குவதற்கு காரணமாயிருந்தன.ஆசைப்படுவதில் தவறில்லை. ஆண்டவனைப்போன்ற ஆற்றல் இருக்கிறதா? தெய்வீக ஆற்றலால், இறை உணர்வுகளால் மனிதன் நிரம்பியிருக்கிறானா?

இயேசு இறைமகனாய் இருந்தும், 'அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்'.14'23 தெய்வீக ஆற்றலால் தன்னை நிறைத்துக்கொண்டார். கடல் மீது நடக்குமுன் கடவுள் அருளால் நிரப்பிக்கொண்டார்.

இந்த தெய்வீக ஆற்றல் இல்லாத ஆசை, ஆபத்தில் முடிவது எதிர்பார்க்கக்கூடியதே.

அருளால் ஆண்டவனோடு இணைத்து ஆசைப்படுவோம், கடலிலும் நடக்கலாம், மலையையும் தாண்டலாம். 'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.' பிலிப் 4'13



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 18, 2011 12:06 pm

இதுவரை இந்த திரிக்கு நான் வந்ததே இல்லை இளா .மன்னிக்க. நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக படிக்கிறேன்.தொடர்ந்து பதியுங்கள். இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 20, 2011 2:09 pm

மத்தேயு 25:31-46

தவக்காலம் -முதல் வாரம் திங்கள்



நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,

`என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள்.

அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.''

நம் வாழ்வு ஒரு தண்டனையாக மாறுவதும் ரம்மியமான நிலை வாழ்வாக மாறுவதும் உங்கள் கையில் உள்ளது. இந்த உலகில் வாழும்போதும் இனிய இதய மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக அதை மாற்றுவதும், வேதனையும் விரக்தியும் நிறைந்த நரக வாழ்வாக மாற்றுவதும் உங்களிடமே உள்ளது.

தனக்காக வாழும் எவரும் தங்கள் வாழ்வை ஒரு தண்டமாக, தண்டனையாக மாற்றிவிடுகின்றனர். பிறருக்காக வாழும் அனைவரும் தங்கள் வாழ்வை எல்லாம் பெற்ற நிறை வாழ்வாக அமைத்துவிடுகின்றனர். இன்னும் சிறப்பாக, சமுதாயத்தின் சின்னஞ்சிறியோர்க்காக நாம் வாழும்போது, அந்த நிறைவான வாழ்வின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறேரம்.

"நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்"

இத்தகைய சின்னஞ்சிறார்களுக்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு இழப்பும் தியாகமும் உங்களுக்கு ஒரு முதலீடு. உங்கள் நிறை வாழ்வின் மூலதனம்.இனிது வாழ்வோம்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 21, 2011 11:55 am

மத்தேயு 20:20-28

ஆண்டின் பொதுக்காலம் 34ம் வாரம் திங்கள்




நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4

அக்காலத்தில் இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார். அவர், ``இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்றார்.


-- இயேசு வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தால் ஓரம் தள்ளப்பட்ட மக்களுள் கைம்பெண்களும் உண்டு. கணவனே வீட்டுக்குத் தலைவன் என்னும் கருத்து நிலவிய அக்காலத்தில் பெண்கள் கணவனுக்கும் வீட்டிலுள்ள பிற ஆண்களுக்கும் கட்டுப்பட்டே நடக்கவேண்டியிருந்தது. நற்செய்தியில் வருகின்ற கைம்பெண் இவ்வாறு சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட ஒருவராகவே இருந்தார். ஆனால் அவர் கடவுளின் இல்லமாகிய எருசலேம் கோவிலுக்குச் செல்கிறார். அங்கே காணிக்கை செலுத்துகிறார். அவர் அளித்த காணிக்கை மிகச் சிறியதுதான். ஆனால் அவருடைய தாராள உள்ளத்திற்கு எல்லையே இல்லை. தன்னிடமிருந்து எல்லாவற்றையுமே அவர் கடவுளுக்கென்று கொடுத்துவிட்டார். கோவில் நிர்வாகத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தலைமைக் குரு, பிற குருகுலத்தார் எல்லாருமே பேராசை பிடித்தவர்கள் என நாம் கூற இயலாது. ஆனால் அவர்களில் சிலராவது ஏழை மக்களைப் பிழிந்து தங்களுக்குச் செல்வம் தேடிக்கொண்டார்கள் என அறிகிறோம் (காண்க: லூக் 20:47).

-- இன்றைய சமுதாயத்திலும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் பல்லாயிரம் பேர் உண்டு. அவர்கள் சமுதாயத்தில்ல நிலவுகின்ற அநீதிகளின் காரணமாகப் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றார்கள். ஆனால் சமுதாயத்தில் நிலவுகின்ற சுய நலத்தின் காரணமாக ஒடுக்கப்படுகின்ற மக்கள் கடவுள் பெயராலும் அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுவது பெரும் கொடுமையே. ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள், அன்னியர் போன்றோரை வெறுத்து ஒதுக்காமல் அவர்கள் மட்டில் தனிக் கரிசனை காட்ட வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டுச் சட்டம் (காண்க: விப 22:22; இச 24:18). ஆனால் இயேசுவின் காலத்தில் பலர் இச்சட்டத்தை மறந்துவிட்டிருந்தார்கள். இயேசு கோவிலில் காணிக்கை போட்ட கைம்பெண்ணின் தாராள குணத்தைப் போற்றினார். ஏனென்றால் அக்கைம்பெண் ''தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' (லூக் 21:4). கடவுள் நம்மீது இவ்வாறே நடந்துகொள்கின்றார். அவர் தம் அன்பை நமக்கு அளந்து கொடுப்பதில்லை. அவருடைய அன்பு எல்லையற்றது; எந்தவொரு மனித அன்பையும் விட ஆயிரம் மடங்கு மேலானது. கடவுளின் எல்லையற்ற இரக்கமும் அன்பும் நம் வாழ்விலும் துலங்க வேண்டும். நம் உள்ளத்தின் நேர்மையைக் காண்கின்ற கடவுள் நாம் தாராள உள்ளத்தோடு அவரையும் அவர் மதிக்கின்ற மானிட உலகையும் அன்புசெய்திட நம்மை அழைக்கின்றார்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 11:49 am

லூக்கா 21:20-28

ஆண்டின் 34ஆம் வாரம்வியாழன்



20 "எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்.

21 அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம்.

22 ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.

23 அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள் மீது கடவுளின் சினமும் வரும்.

24 அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும் வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

25 "மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.

26 உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.

27 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.

28 இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது



இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை இறைமகன் இயேசுவின் இரு வருகைகளைப் பற்றியும் நமக்கு நினைவூட்டுகிறது திருச்சபை.

முதல் வருகை மீட்பின் வருகை. வரலாற்றில் நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒன்று. அந்த வருகையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டாடவும், நன்றி கூறவும், மீட்பின் ஒளியில் வாழவும் அழைக்கப்படுகிறோம். இரண்டாம் வருகை தீர்ப்பின் வருகை. இனிமேல்தான் நடக்க இருக்கிற வருகை. அந்த வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கவும், ஆயத்தமாயிருக்கவும் நினைவூட்டப்படுகிறோம். இந்த நினைவூட்டலில் மூன்று தளங்கள் இருக்கின்றன: 1. எப்பொழுதும்: நம் ஒவ்வொருவரின் இறப்பும் நமக்கு இரண்டாம் வருகைதான். அது எந்த நேரத்திலும் நிகழலாம். 2. விழிப்பாயிருந்து: எல்லா நேரமும் நமது சிந்தனையும், சொற்களும், செயல்களும் இறைவனுக்கேற்றதாக இருக்கும்படி கவனமாக வாழ்வது விழிப்புணர்வு. 3. மன்றாடுங்கள்: இந்த விழிப்புணர்வோடு சேர்ந்து செல்வது மன்றாட்டு. செபிக்கும்போதுதான் நாம் விழி;ப்பை அடைகிறோம். விழி;ப்பாயிருந்தால்தான் நாம் செபிக்கவும் முடியும். எனவே, விழிப்பும் செபமும் ;இணைந்தே செல்ல வேண்டும். தாய்;த் திருச்சபையின் இந்த நினைவூட்டல் அழைப்பை முழு மனதோடு ஏற்று, எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடுவோமாக!





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 11:38 am

லூக்கா 21:29-33

ஆண்டின் 34ஆம் வாரம்வெள்ளி



29 இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமை சொன்னார்; "அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள்.

30 அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.

31 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

32 அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

33 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.


இன்றைய நற்செய்தி வாசகத்தின் கடைசி வரிகள் இயேசுவின் வார்த்தைகளின் வலிமையை, சீர்மிகு செழுமையைப் பறைசாற்றுகின்றன. விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா என்று ஆண்டவர் இயேசு ஆணித்தரமாகச் சொல்கிறார். இயேசுவைத் தவிர வேறு யார் இத்துணை அதிகாரத்தோடும், தன் உணர்வோடும் இந்த வார்த்தைகளைச் சொல்ல முடியும்? இறைவார்த்தையின் சிறப்பை இதைவிட வலிமையாக யார் சொல்ல முடியும்? எனவேதான், பேதுரு ஆண்டவரே, நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நாங்கள் வேறு யாரிடம் போவோம் என்று அறிக்கையிட்டார்.

நாள்தோறும் இறைவார்த்தையை வாசிக்கின்ற, கேட்கின்ற, சிந்திக்கின்ற நாம் அனைவருமே பேறுபெற்றவர்கள் என்பதை நாம் உணர்கிறோமா? ஒருநாளும் அழியாத, நிலைவாழ்வு தருகின்ற இயேசுவின் வார்த்தைகளில் நாம் நம்பி;க்கை கொள்வோம். அந்த வார்த்தைகளைப் பற்றிக்கொள்வோம். அந்த வார்த்தைகளின்படி வாழ்ந்து பலன் தருவோம்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 2:34 pm

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 2825183110 இளா நான் ஏற்க்கனவே கேட்டிருந்தேன்
இத்தகவலை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்று. சிரி
கூறமுடியுமா pls இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 440806

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 12:24 am

ஜேன் செல்வகுமார் wrote:இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 2825183110 இளா நான் ஏற்க்கனவே கேட்டிருந்தேன்
இத்தகவலை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்று. சிரி
கூறமுடியுமா pls இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 440806

http://www.bibleintamil.com/indextamil.html



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 1:13 pm

லூக்கா 21:34-36

ஆண்டின் 34ஆம் வாரம்சனி



34 மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.

35 மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.

36 ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்றார்.

இயேசுவின் சீடர்களுக்கு இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவான எச்சரிக்கையைத் தருகிறது. அவர்களது உள்ளங்கள் மந்தம் அடைவதற்கான மூன்று காரணிகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார்: 1. குடிவெறி 2. களியாட்டம் 3. இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலைகள். இந்த மூன்றிலும் ஈடுபடுபவர்கள் இறையாட்சியில் பங்கேற்க முடியாது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். குடிவெறி என்பது நிச்சயமான மந்தப் பொருள். அது உடலையும், உள்ளத்தையும் மட்டுமல்ல ஆன்மாவையும் மந்தப்படுத்துகிறது. களியாட்டம் என்பதோ தேவைக்கதிகமான பொழுதுபோக்கு, உல்லாசம். பயணம், தொலைக்காட்சி, விளையாட்டு ... முதலியவற்றைக் குறிக்கிறது. எப்போது இவை நம் வாழ்வின் பெரும் பகுதியை எடுத்துக்கொள்கின்றனவோ, அல்லது இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றனவோ, அப்போது பொழுதுபோக்குகளும், மகிழ்ச்சி;ச் செயல்பாடுகளும்கூட களியாட்டமாக மாறிவிடுகின்றன. உலக வாழ்க்கைக்குரிய கவலைகளில் சொந்தமாக வீடு கட்டுவது, பதவி உயர்வு, வங்கியில் பணம் சேர்ப்பது, குடும்பக் கவலைகள் அனைத்தும் சேரும். இவை எப்போது வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் எடுத்துக்கொள்கின்றனவோ, அல்லது இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றனவோ, அப்போது உலகக் கவலைகளும் நம்மை மந்தப்படுத்தும் பட்டியலில் சேர்ந்துவிடுகின்றன. நம் வாழ்வைக் கொஞ்சம் ஆய்வு செய்து, குடிவெறி, களியாட்டம், உலகக் கவலைகள் நம் அகவாழ்வை மந்தப்படுத்தியுள்ளனவா என்று கண்டறிவோம். ஆம் என்றால், இவை மூன்றிலிருந்தும் விடுபட்டு, இறைப்பாதம் சேர்வோம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 8 Ila
Sponsored content

PostSponsored content



Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக