புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10 
3 Posts - 6%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - பைபிள்


   
   

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 12:05 am

First topic message reminder :

நண்பர்களே

இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினமும் பைபிளில் இருந்து வாசகம் ஒன்று இடலாம் என்று எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் சொல்லுங்களேன்


உதாரணமாக 03/செப்டம்பர் 2011

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
21-23


சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய்
இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து
வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு
ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக்
கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப்
பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில்
உறுதியாக நிலைத்திருங்கள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 28, 2011 10:32 am

லூக்கா 9:57-62

பொதுக்காலம், வாரம் 26 புதன்



57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.

58 இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.

59 இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றிவாரும்" என்றார். அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்" என்றார்.

60 இயேசு அவரைப் பார்த்து, "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்" என்றார்.

61 வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்" என்றார்.

62 இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" என்றார்.

இயேசு தம்மைப் பின்பற்றும்படி பலரிடம் கேட்டதுண்டு. ஒரு சிலர் அவருடைய அழைப்பை ஏற்றனர். வேறு சிலர் தாம் பெற்ற அழைப்பை ஏற்கவில்லை. இத்தகைய ஒரு மனிதர் இயேசுவிடம், ''முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்'' எனக் கேட்கிறார் (லூக் 9:59). இக்கோரிக்கை நமக்கு விசித்திரமாகப் படலாம். ஆனால் இயேசு வாழ்ந்த காலத்தில் நிலவிய ஒரு பழக்கத்தை நாம் இங்குக் காண்கிறோம். அதாவது, வீட்டில் பெற்றோர் இறந்துவிட்டால் அவர்களை நல்லடக்கம் செய்யும் பொறுப்பு பிள்ளைகளைச் சார்ந்தது. அவர்கள் இப்பொறுப்பை மிக்க கரிசனையோடு நிறைவேற்ற வேண்டும் என்னும் பழக்கம் இஸ்ரயேலர் நடுவே நிலவியது. யூத குருக்களும் தம் பெற்றோரை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கடமை இருந்தது. இறந்தோரை அண்டிச் செல்லும்போது வழிபாடு தொடர்பான தூய்மை கெட்டுவிடும் என்னும் சட்டம் இருந்தாலும் இறந்தோரை அடக்கம் செய்யும் கடமை அதைவிட மேலானதாகக் கருதப்பட்டது. எனவே, வீட்டுக்குச் சென்று ''முதலில்'' தன் தந்தையை அடக்கம் செய்துவிட்டு இயேசுவைப் பின்பற்ற விருப்பம் தெரிவித்த அந்த மனிதர் தம் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டினார் என நாம் அறியலாம். அக்கடமையை ''முதலில்'' நிறைவேற்றிவிட்டு, அதற்குப் ''பிறகு'' இயேசுவைப் பின்செல்வதாகக் கூறிய அம்மனிதருக்கு இயேசு அளித்த பதில் நமக்கு வியப்பாகத் தோன்றலாம்.

-- இயேசு ''இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்'' என்றார் (லூக் 9:60). இது மூல மொழியில் ''இறந்தோர் இறந்தோரை அடக்கட்டும்'' என்றுள்ளது. இதற்கு, ''ஆன்மிக முறையில் செத்துப் போனவர்கள் இறந்தவர்களை அடக்கும் பொறுப்பை நிறைவேற்றட்டும்'' என்று பலர் பொருள்கொள்வர். இருப்பினும் அக்கால வழக்கப்படி இரண்டு அடக்கச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. இறந்தவரின் சடலத்தை முதலில் அடக்கம் செய்வார்கள். பின், ஏறக்குறைய ஓர் ஆண்டு கழிந்த பிறகு கல்லறையைத் தோண்டி இறந்தவரின் எலும்புகளை எடுத்து இன்னோர் இடத்தில் அடக்கம் செய்வார்கள். எனவே, ''முதலில் அடக்கம் செய்யப்பட்டு, பின் இரண்டாம் முறையாகவும் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இப்போது இறப்போரை அடக்கம் செய்துகொள்வாhகள்'' என இயேசு ஓர் முரண்பாட்டு வகையான செய்தியைச் சிலேடையாகக் கூறியதாகப் பொருள்கொள்வதும் வழக்கம். எப்படியாயினும், இயேசு இங்கே ஒரு புரட்சிகரமான போதனையை வழங்குகிறார். அதாவது, குடும்பக் கடமைகளையும் பொறுப்புகளையும் அப்படியே விட்டுவிட்டு, இயேசுவைப் பின்செல்ல வேண்டும். இறையாட்சியைப் பற்றி அறிவிக்கும் கடமை குடும்பக் கடமைகளை விடவும் முக்கியமானது. இவ்வாறு இயேசு போதித்தது அக்கால சமூக-சமய அமைப்புகளைப் புரட்டிப் போடும் விதத்தில் அமைந்திருந்தது. இன்றும் கூட, இயேசுவை முழு மனத்தோடு பின்பற்ற விரும்புவோர் சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து, இறையாட்சியின் மதிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க அழைக்கப்படுகிறார்கள்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 12:35 pm

லூக்கா 10:17-24

பொதுக்காலம், வாரம் 26 சனி





17 பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, "ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர்.

18 அதற்கு அவர், "வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.

19 பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.

20 ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" என்றார்.

21 அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்" என்றார்.

22 "என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.

23 பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, "நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்.

24 ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்


இயேசுவின் சீடர்கள் தம் நற்செய்திப் பணியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, மகிழ்ச்சியின் படிமுறை பற்றி அவர்களுக்குப் பாடம் எடுக்கிறார் இயேசு. இயேசுவின் பெயரைச் சொல்லி பேய்களை ஓட்டிய பெருமையைப் பறைசாற்றும் சீடர்கள் தீய ஆவிகளை அடிபணிய வைத்தது பற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர். இயேசு அவர்களின் மகிழ்ச்சியை ஏற்பிசைவு செய்கிறார். இயேசு கொடுத்த அதிகாரம் அவர்களுடன் இருப்பதால் எதுவுமே அவர்களுக்குத் தீங்கு இழைக்காது என்று உறுதி அளிக்கிறார். ஆனாலும், தீய ஆவிகள் தங்களுக்கு அடிபணிகின்றன என்பதைவிட தங்களின் பெயர்களின் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழவேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.

நாமும் மகிழ்ச்சியி;ன் இந்தப் படிமுறையை நம் வாழ்வாக்கிக் கொள்வோம். இரண்டு வகையான மகிழ்ச்சிகள் நம் வாழ்வில் ஏற்படலாம். உலகு சார்ந்த வெற்றிகள், பரிசுகள், பொருளாதார இலாபங்கள், நிறைவேறிய கனவுகள்... போன்றவை நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், இவை மேலோட்டமான மகிழ்ச்சிகளே. இவற்றைவிட மேலான, ஆழமான மகிழ்ச்சியை இறைவன் மட்டுமே தரமுடியும். நம் வாழ்வு இறைவனுக்கு ஏற்புடையதாக அமையும்போது, நாம் இறைவனின் வார்த்தைகளின்படி வாழும்போது, நமது பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்படுகின்றன. அந்த மகிழ்ச்சியே நிறைவான, நிலையான மகிழ்ச்சி. அத்தகைய மகிழ்ச்சிக்காக உழைப்போமாக!





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 2:04 am

லூக்கா 10:38-42

பொதுக்காலம், வாரம் 27 செவ்வாய்



38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.

39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரிய அவளிடம் சொல்லும்" என்றார்.

41 ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார்


மார்த்தாவும் மரியாவும் இரண்டு துருவங்கள் என்றும், ஒருவர் மற்றவருக்கு எதிரான நிலைக்கு உருவகமாகக் காட்டப்படுகிறார் என்றும் விளக்கம் தருவது வழக்கம். மார்த்தா செயல்முறை வாழ்வுக்கும் மரியா தியான வாழ்வுக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா இவ்வுலக நிலைக்கும் மரியா மறுவுலக நிலைக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா யூத மரபுக்கும் மரியா கிறிஸ்தவ மரபுக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா செயல்வழி மீட்பு என்பதற்கும் மரியா நம்பிக்கைவழி மீட்பு என்பதற்கும் உருவகம் என்பார்கள். இவ்வாறு மார்த்தாவையும் மரியாவையும் எதிர் துருவங்களாகக் காண்பது சரியல்ல. விவிலிய அறிஞர் கருத்துப்படி, மார்த்தாவும் மரியாவும் இயேசுவை நாம் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளார்கள். மார்த்தா என்னும் சொல்லுக்குத் ''தலைவி'' என்பது பொருள். மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்கிறார். அவர் பல பணிகளைச் செய்கிறார். ஏதோ உணவு தயாரித்துப் பரிமாறுவது மட்டுமல்ல இப்பணி. மார்த்தா உண்மையிலேயே வீட்டுத் தலைவியாக இருந்ததால் எல்லாப் பொறுப்புகளும் அவரிடம் இருந்தன. அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடி இறைவார்த்தையைக் கேட்டு, நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்தினார்கள். இத்தகைய ஒரு ''இல்லத் திருச்சபை''யில் நிகழும் பணிகளுக்கு மார்த்தா உருவகமாகிறார். மரியா இயேசுவின் காலடி அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். லூக்கா நற்செய்தியில் இயேசு பல முறை ''கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதைச் செயல்படுத்தவேண்டும்'' எனக் கூறுகிறார் (காண்க: லூக் 8:21). அவ்வாறு செயல்படுவோர் இயேசுவின் குடும்பத்தினர் ஆவர் (லூக் 8:21).

-- எனவே, மரியா இயேசுவின் வார்த்தையைக் ''கேட்டுக்கொண்டிருந்தார்'' என்றால் மரியா அந்த வார்த்தையைச் ''செயல்படுத்திக் கொண்டிருந்தார்'' எனலாம். மார்த்தா இயேசுவிடம் சென்று முறையிட்டார் என்பதை விட ஒரு கோரிக்கையை அவர்முன் வைத்தார் என்பதே பொருத்தம். அந்த வேண்டுதலுக்கு இயேசு அளித்த பதில்மொழி நமக்குச் சிறந்த பாடமாக உள்ளது. அதாவது, மார்த்தாவும் மரியாவும் சகோதர உறவால் இணைந்தவர்கள். அவர்களிடையே நிலவியது இரத்த உறவு மட்டுமல்ல, மாறாக, இயேசுவிடம் நம்பிக்கை கொண்ட குழுவைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒரு புதிய குடும்பத்தில் உறுப்பினராக உள்ளனர். அந்த உறவின் அடிப்படையில் அவர்களிடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பும் ஒற்றுமையும் நிலவ வேண்டும். இயேசுவின் சீடர்களாக அழைக்கப்பட்டவர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அதைச் செயல்படுத்தவும் வேண்டும். செயல்பாட்டில் தங்கள் கவனத்தை முழுவதும் செலுத்தாமல் தொடர்ந்து கடவுளின் வார்த்தையைக் கேட்க வேண்டும். வார்த்தைக்குச் செவிமடுத்தலும் அதைச் செயல்படுத்தலும் இணைந்து செல்லும்போது அங்கே நிறைவான சீடத்துவம் துலங்கும். அதாவது, இயேசுவின் சீடராக விரும்புவோர் இறைவார்த்தையைக் ''கேட்க வேண்டும்''; அதைச் ''செயல்படுத்த வேண்டும்''. அப்போது மார்த்தாவும் மரியாவும் ஒன்றிணைந்து நமக்கு முன்மாதிரியாக மாறுவார்கள்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 05, 2011 10:50 am

லூக்கா 11:1-4

பொதுக்காலம், வாரம் 27 புதன்



1 இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றார்.

2 அவர் அவர்களிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக!

3 எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.

4 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்") என்று கற்பித்தார்.


''கர்த்தர் கற்பித்த செபம்'' எனவும் ''இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்'' எனவும் அழைக்கப்படுகின்ற மன்றாட்டு மத்தேயு நற்செய்தியிலும் லூக்கா நற்செய்தியிலும் சிறிது மாறுபட்ட வடிவத்தில் உள்ளன (காண்க: மத் 6:9-15; லூக் 11:2-4). கடவுளை நாம் ''தந்தை'' என அழைக்கும்படி இயேசு கேட்கின்றார். இயேசுவே கடவுளைத் ''தந்தை'' எனவும் ''என் தந்தை'' எனவும் பட தருணங்களில் அழைக்கிறார். மிக நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த இச்சொல் ''அப்பா'' என்னும் பொருள் தருவது. இயேசு பேசிய அரேமிய மொழிச் சொல்லும் ''அப்பா'' என்னும் வடிவம் கொண்டதே. கடவுளைத் தந்தை என அழைப்பதன் பொருள் மூன்று விதங்களில் வெளிப்படுகிறது: அதாவது, கடவுள் அனைத்தையும் படைத்தவர், அனைத்தையும் ஆள்பவர், அனைத்தையும் பேணிக்காப்பவர். இவ்வாறு மனிதருக்கு அனைத்து நலன்களையும் அளித்து, அவர்களைக் காப்பவர் என்பதால் கடவுளைத் தந்தை என அழைப்பது பொருத்தமே. உரோமை மன்னர்களும் ''நாட்டுத் தந்தை'' என அழைக்கப்பட்டார்கள். ஆனால், ஆண்வழி சமுதாயத்தில் ஆணாதிக்கம் நிலவிய பின்னணியில் கடவுளைத் தந்தை என அழைத்து, அதிலிருந்து ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்பவர்கள் என நாம் பொருள்கொண்டு, கடவுளை அப்பாணியில் ஓர் ஆணாகவும் தந்தையாகவும் உருவகிப்பது தவறாகும். ஏனென்றால் விவிலியம் காட்டுகின்ற கடவுள் இத்தகைய ஆணாதிக்கக் கடவுள் அல்ல.

-- கடவுள் நம் தந்தை என்பதன் உண்மைப் பொருள் அவர் நமக்கு ஊற்றாகவும் தோற்றுவாயாகவும் இருக்கிறார் என்பதும், நம்மை அன்போடு பராமரித்துக் காக்கிறார் என்பதும் ஆகும். இப்பண்புகளை நாம் பெண்மைக்கும் ஏற்றி உரைக்கலாம். எனவே கடவுள் நமக்குத் தந்தையும் தாயுமாக இருக்கிறார் என நாம் கூற முடியும். அது மட்டுமல்ல, கடவுள் தம் ஆட்சியில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு சிறு குழந்தைபோல நாம் மாற வேண்டும் எனக் கேட்கின்றார். எனவே, ஆட்சி அதிகாரமும் அடக்குமுறையும் கடவுளின் பண்பல்ல, மாறாக, அன்போடு அனைவரையும் அரவணைத்து, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோரையும் உரிமை மறுக்கப்பட்டோரையும் மதித்து ஏற்கும் பண்பே கடவுளின் உள்ளார்ந்த இயல்பு. இவ்வாறு நாம் கடவுளை உருவகித்து, அவரை அணுகும்போது நம் உள்ளத்தில் பிள்ளைக்குரிய பாசமும் பணிவும் தோன்றும். கடவுளின் பாதுகாப்பு நமக்கு எப்போதும் உண்டு என்னும் உணர்வும் நம்மில் ஆழமாக வெளிப்படும்.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 11:08 am

லூக்கா 11:5-13

பொதுக்காலம், வாரம் 27 வியாழன்



5 மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்; "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு.

6 என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

7 உள்ளே இருப்பவர், "எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது" என்பார்.

8 எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

9 "மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.

10 ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

11 பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?

12 முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?

13 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! "

இறைவேண்டல் கிறிஸ்தவ வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. இயேசு இறைவேண்டல் பற்றி அளித்த போதனைகளையும், தாமே இறைவேண்டலில் பல முறை நேரம் செலவிட்டதையும் லூக்கா பதிவுசெய்துள்ளார். பிள்ளைகள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தம் பெற்றோரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்கள். பிள்ளைகளுக்கு நல்லது செய்யவே பெற்றோர் விரும்புவர். அதுபோல, கடவுளை நாம் அண்டிச் சென்று நமக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என இயேசு கற்பிக்கிறார். கடவுளிடம் நாம் கேட்பவை எல்லாம் எப்போதும் நாம் கேட்டபடியே கிடைத்துவிடும் என்று கூற முடியாது. ஆனால் கடவுள் நமக்குத் தம் நற்கொடைகளையே தருவார் என்பது மட்டும் உறுதி.

-- நாம் கடவுளிடம் கேட்பது நமக்குக் கைகூடாவிட்டாலும் ஒன்று மட்டும் உறுதியாக நமக்கு அளிக்கப்படும். அந்த நற்கொடையின் பெயர் ''தூய ஆவி''. இயேசுவே இதைத் தெளிவாகப் போதித்துள்ளார்: ''விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பார்'' (காண்க: லூக் 11:13). இது நமக்குச் சிறிது வியப்பாக இருக்கலாம். நாம் கேட்கும் மன்றாட்டு எதுவாக இருந்தாலும் கடவுள் நமக்குத் ''தூய ஆவியை''க் கொடுப்பார் என்பதன் பொருள் என்ன? தூய ஆவி என்பது கடவுளிடமிருந்து நமக்கு வழங்கப்படுகின்ற கொடை. கடவுள் நம்மோடு தங்கியிருந்து நம்மை அன்போடு வழிநடத்துகிறார் என்பதற்கு அவர் நமக்கு வழங்குகின்ற தூய ஆவியே சான்று. கடவுளிடமிருந்து வருபவர் தூய ஆவி; அவரே கடவுளாகவும் இருக்கிறார். எனவே, நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உறுதியாகத் தூய ஆவி வழங்கப்படும். கடவுள் வழங்கும் தூய ஆவி நம்மில் ''வல்லமையோடு'' செயலாற்றுபவர். நம்மை உண்மை வழியில் இட்டுச் செல்பவர். நன்மை தீமையை வேறுபடுத்தி உணர நமக்குச் சக்தி தருபவர். எனவே, நாம் நம்பிக்கையோடு கடவுளிடம் வேண்டுதல் செய்யும்போது கடவுளின் துணை நமக்கு உண்டு.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 11:09 am

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 1-2

குருக்களே, சாக்கு உடை உடுத்திக் கொண்டு தேம்பி அழுங்கள்; பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின. உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்; ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்; ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள். மிகக் கொடிய நாள் அந்த நாள்! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும். சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; என்னுடைய திருமலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்; நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது. அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; விடியற்கால ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல், ஆற்றல்மிகு வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது; இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை; இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதும் இல்லை.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 07, 2011 12:11 pm

இன்றய சிந்தனை ஆண்டவரின் வருகயை குறிக்கிறது பவங்களின் இருந்து விடுபட்டு ஆண்டவரின் வருகையை எதிர்பார்ப்போம்..!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 12:13 pm

லூக்கா 11:27-28

பொதுக்காலம், வாரம் 27 சனி



27 அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார்.

28 அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்றார்.

அன்னை மரியா இயேசுவைக் கருத்தாங்கி, பத்துமாதம் சுமந்து, இவ்வுலகிற்குப் பெற்றளித்தார். எனவே அவரை நாம் ''பேறுபெற்றவர்'' எனப் போற்றுவது பொருத்தம்தான். இதையே இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரும் வெளிப்படையாகப் பறைசாற்றினார். இயேசுவின் தாய் பேறுபெற்றவர் என்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. முதலில், மரியா இயேசுவைத் தம் வயிற்றில் தாங்கி, அவரைத் தம் மகனாக இவ்வுலகிற்கு அளித்தார். மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல, கடவுளும் மனிதருமாகிய இயேசுவைப் பெற்றதால் அவர் ''கடவுளின் தாய்'' எனவும் அழைக்கப்படுகிறார். ஆனால், மரியா பேறுபெற்றவர் எனப் போற்றப்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. அதாவது, மரியா ''கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடித்தார்'' (காண்க: லூக்கா 11:28). கடவுளின் தாய் ஆவதற்கு இசைவு தெரிவித்தார் மரியா. கணவரோடு கூடி வாழ்வதற்கு முன்னரே இயேசுவைத் தம் வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் கருத்தாங்கிய மரியா கடவுளின் வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். இதுவே அவரைப் ''பேறுபெற்றவர்'' ஆக மாற்றிற்று.

-- மரியாவைப் போல நாமும் பேறுபெற்றவர் ஆக வாய்ப்பு உள்ளது. நாமும் மரியாவைப் போல இறைவார்த்தையைக் கேட்க வேண்டும். கடவுளின் வார்த்தை நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற நடத்தை நமதாக மாற வேண்டும். அப்போது நாமும் பேறுபெற்றவர் ஆவோம். இவ்வாறு கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர் தம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தம் வாழ்க்கையை அமைக்காமல் கடவுளின் விருப்பத்தின்படியே செயல்பட முன்வருவார்கள். கடவுளின் விருப்பம் நாம் அவரை அன்புசெய்து வாழ்வதும் நம்மை அடுத்திருப்போரை நம்மைப்போல அன்புசெய்வதுமே ஆகும். எனவே, கடவுளில் நாம் முழுமையாக நம்பிக்கை கொண்டவர்களாக மாற வேண்டும்; அன்புக் கட்டளையை நாம் செயல்படுத்த வேண்டும். அப்போது நாம் எதிர்நோக்கிக்; காத்திருக்கின்ற பேரின்ப வாழ்வு நமதாகும். நாம் உண்மையிலேயே ''பேறுபெற்றோர்'' ஆவோம்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 08, 2011 12:24 pm

மரியாவும் பேரு பெற்றவள் தான்! மரிய அன்னை மூலம் நிறைய அற்புதம் நிறைவேறி உள்ளது. மரிய அன்னை பக்தர்கள் ஏராளம்..! சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 09, 2011 11:52 am

மத்தேயு 22:1-14

போதுக்காலம் 28ஆம் ஞாயிறு,



1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது;

2 "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.

3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், "நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்" என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.

6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலைர செய்தார்கள்.

7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

8 பின்னர் தம் பணியாளர்களிடம், "திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.

9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்" என்றார்.

10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.

11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.

12 அரசர் அவனைப் பார்த்து, "தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?" என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.

13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், "அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார்.

14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்."


இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறும் உவமையைக் கொஞ்சம் கூர்ந்து ஆய்வு செய்தால், நிச்சயம் நமக்கு வியப்பு மேலிடும். அரச மகனுக்குத் திருமணம். அந்தத் திருமணத்தில் பங்கேற்பது மிகவும் பெருமை வாய்ந்த ஒரு செயல். ஆனால், அழைக்கப்பெற்றவர்கள் வர விரும்பவில்லை என்று உவமை கூறுகிறது. என்னே ஒரு மனநிலை!மீண்டும் அவர் தன் பணியாளர்களை அனுப்பி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். வாருங்கள் என்று அழைக்கிறார். அவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை.

இப்போது நமக்குப் புரிகிறது. இந்த உவமை கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அரச மகனின் திருமணத்திற்கு வரமாட்டேன் என்றோ, பொருட்படுத்தாமலோ யாரும் இருக்கப் போவதில்லை.ஆனால், இறையாட்சியின் பார்வையில் இத்தகைய மனிதர்களாக நம்மில் பலர் இருக்கிறோம் என்பதையே இந்த உவமை வழியாக இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

இறைவன் தருகிற நிறைவான மகிழ்ச்சி, ஆறுதல், நிறைவு.. இவற்றை வேறு யாரும், எதுவும் தரப்போவதில்லை. ஆனால், நாம் இறைவனின் அழைப்பை பொருட்படுத்தாமல் இருக்கிறோம். அவர் தரும் விருந்துக்கு வர விரும்பாமல் இருக்கிறோம். காரணம், இந்த உலகம் காட்டும் ஈர்ப்புகள். அன்றாட வாழ்வின் கடமைகள், பணிகள். அந்த உவமையில் வரும் மனிதர்களைப் பார்த்து வியக்கும் நாம், இப்போது நம்மைப் பார்த்தே கொஞ்சம் வியப்போமா?





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 4 Ila
Sponsored content

PostSponsored content



Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக