புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
124 Posts - 51%
heezulia
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
62 Posts - 25%
Dr.S.Soundarapandian
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
30 Posts - 12%
mohamed nizamudeen
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
9 Posts - 4%
prajai
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
2 Posts - 1%
cordiac
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
251 Posts - 53%
heezulia
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
145 Posts - 30%
Dr.S.Soundarapandian
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
18 Posts - 4%
prajai
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
5 Posts - 1%
Barushree
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_m10மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட தூக்குப் படுகொலை


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Aug 30, 2011 9:59 am


30 ஆகஸ்ட் 2011

- • குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழகத்திலிருந்து தமிழ்மாறன்

உயிருக்கு எந்த மதிப்புமில்லாது பலியெடுக்கப்படும் ஒரு காலத்தில் அதற்கான போராட்டங்கள் மிகுந்த அவசியமாகின்றன. ஏனெனில் மனித உயிர்களை கொன்று பலி தீர்த்து உண்பவர்களால் ஆளப்படும் உலகில் மனிதப்பலியால் மனிப்பலிக்காக சனங்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்தின் மீதான தாக்குதலிலும் ஈழத்து மக்கள்மீதான படுகொலையிலும் பெரும் பங்கு வகிக்கும் ராஜீவ்காந்தி கொலையின் பழி தீர்த்ததிலில், இன்னும் பசியடங்காமல் மீண்டும் மூன்று உயிர்ப் பலிக்கு தமிழினம் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழகம் உயிர்களை காக்க பொங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட தமிழர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி தூக்கிலிடுவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு மாத்திரமல்ல மனித உயிர்கள்மீது மதிப்பும் அக்கறையும் கொண்டு அதற்காக போராடும் ஒவ்வொருவரையும் பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. மூன்று தமிழர்களுக்காக முழுத் தமிழினம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித இனமும் போராட வேண்டியிருக்கிறது.

இதையும் ஒரு படுகொலையாகவே வல்லாதிக்க திமிரதிகாரம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. அதிகாரங்களின் கூட்டுச் சதியாகவும் பழி தீர்த்த்தலின் உச்ச வெறியாகவும் மகிவும் பரிதாபகரமான பலியாகவும் இதை திட்டமிட்டிருக்கிறது. மனித உயிர்களுக்காக ஒவ்வொருவரையும் ஈடுபாடு அடையச் செய்யும் இந்த நடவடிக்கை தமிழகத்தை மிகவும் அதிகமாக உலுப்பி விட்டிருக்கிறது. மூன்று தமிழர்களின் உயிர்களை காக்கும் போராட்டம் என அடையாளப்படுத்தப்பட்ட போராட்டங்கள் தமிழகம் எங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. இனம் மொழி கடந்து மனித உயிர்களை நேசிக்கும் அனைவரும் இந்தப் போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்கள். மொழி தெரியாத பொழுதும் உணர்வை புரிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகார வர்க்கத்தை நோக்கி மனித உயிர்களை கொல்லாதே! என்ற கோசங்களை போராடும் மக்கள் எழுப்பி வருகிறார்கள். அதிகாரங்களும் கதிரைகளும் உயிர்களின் மதிப்பை அறியாது கொத்துக் கொத்தாய் கொன்று தீர்த்த காலத்தில் அதற்கு எதிராய் போராட வேண்டிய அவசியத்தை மூன்று தமிழர்களுக்காய் அறிவிக்கப்பட்ட படுகொலை இன்னுமின்னும் அவசியமாக்குகிறது.

இந்தப் படுகொலைக்கும் தமிழினம் சந்தித்த ஏனைய படுகொலைகளுக்கும் இடையில் எந்த வித்தியாசங்களும் கிடையாது. ஈழத்தில் பல படுகொலைகள் அறிவிக்கப்பட்டு நடந்திருக்கின்றன. படுகொலையாளர்கள் எப்பொழுதும் காரணங்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள். போராடும் மக்களின் உணர்வுகளை அடக்கி அழிப்பவர்கள் அதற்கு எதிராக துப்பாக்கி தூக்குவதையும் அதிகாரத்திற்கு எதிராய் கல்லெறிவதையும் அதிகாரத்தினை அசைக்க முற்படுவதையும் பயங்கரவாதம் என்று சொல்லி தமது நடவடிக்கைகளை மிகவும் சுகந்திரமாகச் செய்து எதிர்ப்புக் குரலை அழித்து விடுகிறார்கள். நாட்டிலும் சனங்களிடையிலும் குழுமங்களிலும் ஏன் இத்தகைய எதிர்ப்புக்கள் எழுகின்றன என்பதை அவர்கள் சுய பரிசோதனை செய்வது கிடையாது. அவர்களது நடவடிக்கைகள் எல்லாமே தமக்குத் தேவையான அதிகாரத்தை கொலுக்க வைப்பதிலும் அதை அகலமாக்குவதிலுமே தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

கருணைக்கு தவிக்கும் இந்த உலகத்தில் ஒடுக்கப்பட்டு கொன்றொழிக்கப்படும் தமிழினத்தில் இன்று பேரவலத்தை உருவாக்கி உலகத் தமிழர்கள் அனைவரையும் தவிக்க வைக்கிற மூன்று தமிழர்கள் மீதான மரணதண்டனை அறிவிப்பு தமிழினத்தை கொதிப்படைய வைக்கிறது. பலிக்கு பலி என்ற வகையில் தமிழினம் பெரும் இழப்பை சந்தித்து விட்டது. இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய அழிவுகளும் அநியாயங்களும் ஈழத் தமிழ் இனத்தால் என்றும் மறந்து விட முடியாது. ஈழத்தின் நான்காம் கட்டப் போரில் இந்திய வல்லாதிக்கதின் ஆசியோடும் ஆதரவோடும் இலங்கை அரசு ஈழத் தமிழ் இனத்தின்மீதும் ஈழப் பேராட்டத்தின் மீது ஏற்படுத்திய அழிவுகளும் ஈழத் தமிழ் இனத்தால் என்றும் மறந்துவிட முடியாதவை. ஈழப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசை அதன் ஜனாதிபதியைக் கொண்டாடி வரவேற்கும் இந்தியா இந்தத் தமிழர்களுக்கு எவ்வளவு பயங்கரமான தண்டனையை வழங்குகிறது? இன்னும் பசியடங்காத பெரும் மிருகத்தைப் போல இந்திய வல்லாதிக்கம் மூன்று தமிழர்களின் உயிர்களை மிகக் கொடுமையாய் பறிக்கத் துடிக்கிறது.


தண்டனை என்பது ஒரு மனிதரை திருத்த வேண்டியது. ஒரு சமூகத்தை திருத்த வேண்டியது. ஆனால் அதுவே மனிதப் பலி எடுப்பதாகவும் ஒரு சமூகத்தை வதை செய்து பழி தீர்ப்பதாகவும் அமைவது எத்தகைய கொடுமை? முருகன், பேரறிவாளன், சாந்தன் முதலியோர்மீதான தூக்கு மரண தண்டனை என்பது ஈழப் போராட்டத்தின் நியாயத்தை தூக்கிலிட்டு கொல்லுவதற்கு சமனானது. பெரும்பாலான போராட்டக்காரர்களது நிலைப்பாடும் இப்படித்தானிருக்கிறது. சிறையிலிருக்கிற இந்த மூன்று தமிழர்களது நிலைப்பாடும் இப்படித்தானிருக்கிறது. ஈழப் போராட்டத்தை ஒடுக்கவும் ஈழத் தமிழர்களதும் தமிழகத் தமிழர்களதும் நெருக்கத்தை வெளிப்படையாக எச்சரிக்கும் விதமாக இந்தப் படுகொலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தேசிய மயத்தை பக்திபோலாக்கி தமிழினத்தின்மீது அச்சுறுத்தல் தன்மையுடன் இந்தத் தீரப்பை திணிக்கும் அதேவேளை இந்திய வல்லாதிக்க திமிரை அரங்கேற்றவும் இந்தப் படுகொலை நடத்த திட்டமிடப்படுகிறது. ஆளும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நீதிபதிகளும் கொஞ்சமும் இரக்கமில்லாது காட்டுமிராண்;டித்தனமாக மரணதண்டனை தீர்ப்பை அப்பாவி ஏழைகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். இதை ஒடுக்கப்படும் இனத்தின் ஏழை கீழ் வர்க்கத்தினருக்கு வழங்கிய தீர்ப்பு என்று மராட்டியத்தைச் சேர்ந்த மும்பை; நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எச். சுரேஷ் குறிப்பிட்டார்.

இந்திய பாராளுமன்றத்தில் 1952இல் மரணதண்டனை ஒழிப்புக் குறித்து தனிநபர் மசோதா கொண்டு வரப்பட்டது. 1967இல் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் மரணதண்டனை தேவையற்றது என்று தெரிவித்திருந்தார். 1967இல் மரணதண்டனைகளை குறைக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 1985இல் மரண தண்டனை ஒழிப்பு விவாதிக்கப்பட்டது. 1989இல் மரண தண்டனை ஒழிப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. 2007இல் ஐக்கிய நாடுகள் சபையில் மரண தண்டனை ஒழிப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட பொழுது அதை இந்தியா எதிர்த்தது. ஐக்கிய நாடுகள் சபையில் மரண தண்டனை ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 52 நாடுகள் எதிர்த்தன. 99 நாடுகள் மரண தண்டனை ஒழிப்பு தீர்மானமத்தை ஆதரித்தன. 18 நாடுகளில் போர்க்காலக் குற்றங்களுக்கு மாத்திரம் மரணதண்டனைகள் என்று வரையறை செய்யப்பட்டன. ஆனால் மரண தண்டனையை கொண்டாடும் நாடுகளைவிடவும் அந்தக் கொடும் தண்டனை ஒழிக்கப்பட்ட நாடுகளில் குற்றங்களும் குறைந்துள்ளன.



தண்டனைகளில் மரண தண்டனை வழங்கும் முறை மிகக் கொடியது என்ற கருத்து இன்று உலகத்தில் வலுப்பெற்று வருகிறது. பலரும் மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள நீதிபதிகள் பலரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னாள் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இந்தப் போராட்டத்டதில் ஈடுபட்டு வருகிறார்கள். மரணதண்டனையை வழங்காமல் ஒரு சமூகத்தின் நீதியை காப்பாற்றுவதையே ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலரும் தமது சாதனையாகக் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் மரணம் என்பது இயற்கையாக நிகழ வேண்டியது. அதை ஒரு தனி நபர் இழைத்தால் அதன் பெயர் கொலை. ஒருவருக்கு தன்னைத்தானே கொலை செய்யும் உரிமைகூட இல்லை. ஒருவரை மற்றவர் கொலை செய்தால் அது படுகொலை. ஒருவர் ஒரு கொலையைச் செய்தால் அது எந்தளவு கொடியதும் உரிமை மீறலுமோ, அதைப்போலவே அதற்கு குற்றம் என்ற பெயரில் தண்டனையாக அதை ஒரு அரசோ, நீதிமன்றோ யார் இழைத்தாலும் அது கொடியதும் மனித உரிமை மீறலுமே. ஒரு உயிரை பறித் தெடுக்கின்றன உரிமையை ஒரு நீதிமன்றுக்கோ, அரசுக்கோ கிடையாது.

சனநாயக அரசு என்பது எவ்வளவு போலி முகத்தை அணிந்து சொந்த மக்களையே இப்படிப் பலி கொள்ளுகிறது என்ற துயரம் உலகம் எங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையை சிறப்பாக கட்டமைத்து சமூக ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய சட்டமும் நீதியும் அந்தச் சமூகம் உடைந்து கொட்டி பேரதிர்ச்சி அடையும் தீர்ப்புக்களை வழங்குவது எவ்வளவு கொடியது? காலத்திற்கும் அரசியலுக்கும் ஏற்ப சட்டங்கள் உருவாக்கப்படும் நிலமைதான் இன்று பொதுச்சனத்திற்கு மிகுந்த அபாயமாகியிருக்கிறது. சட்டத்தை மதிக்க வேண்டும் என்பது ஒரு கொடிய ஒடுக்குமுறைத்தனமான சொல்லாக மாறியிருக்கிறது. சனநாயகத்தின் தேசிய மயக்கங்களில் பொதுச்சனங்கள் இப்படித்தான் பலியிடப்படுகிhர்கள். நாட்டுக்காக ஒருமைப்பாட்டிற்காக என்ற தேசிய மயக்கம் கற்பிக்கப்பட்டு மனிதர்களால் ஆளப்படும் நாட்டில் சக மனிதர்களே கொல்லப்படுவதும்; அதற்கான சட்டங்களை உருவாக்கி நியாயப்படுத்துவதும் என்ன நீதீ? ராஜீவ்காந்தி ஒரு மனிதர் என்பதைப்போல இந்த மூன்று தமிழர்களும்; மனிதார்கள்தான் என்பதை ஏன் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதிருக்கிறது?

ராஜீவ் சாவை வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை தமிழர்களை பழி தீர்க்கப் போகிறீர்கள் என்று போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புக்களும் மக்களும் கேள்வி எழுப்புகின்றனர். ராஜீவ் காந்தியின் உயிருக்காக பலிக்கு பலி என்ற கொலைத்தனத்தையும் வெறித்தனமான தீர்த்துக் கொள்ளலையும் சட்டம், நீதி என்று எப்படி ஏற்றுக் கொள்வது? மூன்று தமிழர்களின் தூக்கு மரண தண்டனை தீர்ப்பில் யாரும் தலையிடக்கூடாது என்றும் மக்கள் சட்டத்தையும் நீதியும் மதித்து இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலு கேட்டிருக்கிறார். கொஞ்சமும் இரக்கமில்லாமல் ஒரு உயிரை பலியிடும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கேட்கிற இந்த வேண்டுதல் எவ்வளவு கொடுமையானது. உயிர்களை காக்க மக்கள் போராடும் பொழுது அரசியல் இப்படித்தான் சட்டத்தை தனக்கேற்ப அமைக்கிறது. சட்டமும் நீதியும் ஆளுக்கு ஆள் மாறுபாடுகின்றன. அதில் எதிர்பார்க்கப்படுகிற கருணையும் நீதியும் மட்டும் ஒரு பொழுதும் இருந்துவிடுவதில்லை என்பதுதான் இதில் பெரிய துக்கமானது.



இங்குதான் இன்றைய காலத்தின் நீதியையும் சடட்டத்தையும் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. மிகவும் சாதாரணமாக ஊடகங்களை சமாளித்துப் பேசும் இந்த வார்த்தைகளில் என்ன நீதியும் சட்டமும் இருக்கின்றன? இது காங்கிரஸ் கட்சியின் அரசியலாகவும்; பழி தீர்த்தலாகவும் இருக்கிறபடியினால்தான் தங்கபாலுவால் இப்படிக் கூற முடிகிறது. அப்படி என்றால் அந்தச் சட்டத்தையும் நீதியையும் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்ளுவது? இந்தத் தீர்ப்பை அறிவித்து நீதிபதிகள் வெளியிட்ட அறிக்கையில் பல தவாறன தகவல்களும் அணுகுமுறைகளும் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மரண தண்டனை மிகவும் கொடியது என்கிற பொழுது இந்தியச் சட்டம் மரணதண்டனையை வழங்கும் குற்றங்களுக்குச் சில விதிகளை கூறுகின்றன. மரணதண்டனையை வழங்குவதற்குரிய அந்த விதிகளில் எந்த விதிகளில் உள்ளடங்காத வேவ்வேறான மூன்று தமிழர்களும் இப்படி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இணைந்து ஒப்பமிட்டு இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை அமைதியை நிலை நாட்டச் சென்ற இந்தியப்படைகள் ஈழத்தில் அநீதிகளை இழைத்தனர் என்றும் அந்த அறிக்கைதான் தெரிவிக்கிறது. மரணதண்டனை என்பது அரிதிலும் அரிதான குற்றங்களுக்காக வழங்கப்படுபவை. அதிலும் குற்றங்களை நேரடியாக இழைத்தவர்களுக்கு இந்தத் தண்டனைகளை வழங்க முடியும். தண்டனைக்காலத்தில் சமூகத்தில் இணைந்து வாழ்வதில் ஈடுபடு காட்டுபவர்களுக்கும் முன் மாதிரியாக நடந்து கொள்பவர்களுக்கும் அவதானிக்கப்பட்ட நிலையில் தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும் என்று விதிகள் சொல்லுகின்றன.



21 ஆண்டுகாலச் சிறைத் தண்டனையே பெரும் தண்டனையாக அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள். ராஜீவ்காந்திமீதான தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்காக பற்றிகளை வாங்கிக் கொடுத்தாக குற்றம் சாட்டப்பட்டே பேரறிவாளனுக்கு இந்தத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன?

பேரறிவாளனின் குடும்பம் தந்தை பெரியாரின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வந்த குடும்பம். அவரது தந்தை குயில்தாசனும் பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். பேரறிவாளன் இளம் வயதில் மிகவும் அன்பானவராகவும் சமூகத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டுபவராகவும் வாழ்ந்து வந்தாக அவரது கிராமத்தில் அவரது வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். 19 வயதில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். தனது இளமைக்காலத்தை சிறைக்குள்ளேயே கழித்தவர். தனது வாழ்வின் பாதிக்காலத்தை இழந்தவர். இன்று கேட்பது உயிர்ப் பிச்சையல்ல? மறுக்கப்பட்ட நீதி என்றும் நான் நிரபராதி என்றும் நம்பிக்கையுடன் நீதியைக் கோரி பேரறிவாளன் போராடி வருகிறார்.

குற்றம் சுமத்தப்பட்டு 21 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தத் தமிழர்கள் அந்தக் காலத்தில் முன் மாதிரியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். பேரறிவாளன் சிறையில் உள்ளவர்களுக்கு கல்வி கற்பித்திருக்கிறார். முருகன் சிறையில் இலக்கிய ஈடுபாட்டுடன் செயற்பட்டிருக்கிறார். பேரறிவாளன் சிறையிலிருந்து புத்தகங்களை எழுதியிருக்கிறார். சிறையில் அவர்கள் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கான பலவிதமான நல் வெளிப்படுகளை காட்டியிருக்கிறார்கள். தவிரவும் இந்தத் தமிழர்களின் பெயர்களில் வேறெந்த குற்றங்களும் பதிவாகியிருக்கவில்லை. இவர்களது இந்த வாழ்க்கையும் வெளிப்பாடுகளும் மரண தண்டனையை வழங்கும் விதிகளுக்கு முரணாகவே இருக்கிறது என்று கூறப்படுகிறது. நல்லெண்ண அடிப்படையிலும் சமூகத்தின் ஒழுங்கை வலியுறுத்தி மன்னிப்பை காட்டி குற்றங்களை தடுக்கும் நோக்கிலும் மரணதண்டனைகளை அகற்றி ஆயுள் தண்டனையாக்குவதும் விடுதலை செய்வதும் பல வழக்குகளில் நடந்திருக்கின்றன. விடுதலை பெற்றவர்களும் தண்டனை குறைக்கப்பட்டவர்களும் சமூகத்திற்கு முன் மாதிரியாகச் செயற்பட்டிருப்பதும் முக்கியமானது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் முதலியோர் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறை மிகுந்த பாதுகாப்பின் மத்தியில் துப்பாக்கி ஏந்திய பொலிசாரினால் பாதுகாக்கப்பட்டுகிறது. தூக்குத் தண்டணையை நிறுத்தக் கோரும் போராட்டங்கள் தமிழகம் எங்கும் மிகவும் வலுவடைந்து வருகின்றன. செங்கொடி என்ற சட்டக் கல்லூரித் தோழி ஒருவர் தீக்குளித்து தன்னை மாய்த்து இந்த நடவடிக்கையை நிறுத்தக் கோரியிருக்கிறார். நீதிமன்றங்களின் முன்பாகவும் கல்லூரிகளிலும் வழக்கறிஞ்ர்களும் மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வீதிகளிலும் புகையிரத வழிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னையில் கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு அருகில் மூன்று தமிழர்களின் உயிர்களை காக்க மூன்று வழக்கறிஞர்கள் பட்டினிச்சாவுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வழக்கறிஞர்களான அங்கயற்கன்னி, வடிவாம்பாள், சுஜாதா முதலிய வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு மனித உரிமைக்கு மதிப்புக்கு கொடுக்கும் விதமாக பலரும் கலந்து கொண்டு உயிர் காப்பை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினியும் முருகனும் சாந்தனும் ஈழத்தைச் சேர்ந்தவர்கள். சிறையில் அடைக்கப்படும் பொழுது முருகனின் மனைவி நளினி கருவுற்றிருந்தார். ஹரித்திரா சிறையில் பிறந்த குழந்தை. ஒரு இலங்கைப் பிரஜையாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். முருகன் நளினி தம்பதிகளின் மகள் ஹரித்திராவும் தனது தந்தையை காப்பாற்றுங்கள் என்று அவலக் குரல் எழுப்பியிருக்கிறார். தனது தந்தையை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் என்று ஹரித்திரா கருணைக் கோரிக்கை விடுத்திருக்கிறார். பிறந்திற்கு ஒரே ஒரு முறை பெரும் போராட்டங்களின் மத்தியில் தனது தந்தையைப் பார்த்த ஹரித்திரா அவர்களை தான் நிரந்தரமாக இழந்து போக முடியாது என்று பெரும் துக்கத்தோடு தவிப்போடும் சொல்லியிருக்கிறார். தூக்குத்தண்டனையை ஆயுள் தண்தனையாகக் குறைக்கும்படியும் இடைக்காலத் தடை விதிக்கும்படியும் கோரி சென்னை உயர்நீமிமன்றில் வழக்கறிஞர்களால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், ஈழ ஆதரவு போராட்ட அமைப்புக்கள், மாணவர் புரட்சி அமைப்புக்கள், தொழிலாளர் அமைப்புக்கள், தாழ்த்தப்பட்டோர் எழுச்சி அமைப்புக்கள், திரைத்துறையினர், ஊடகவிலாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அரசியலவாதிகள் எனப் பலரும் போராட்டங்களில் ஈடுபட்டு மூன்று தமிழர்களின் உயிர்களையும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அத்தோடு வௌ;வேறு இடங்களிலும் மரண தண்டனைக்கு எதிரான கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலுள்ள பல கிராமங்களில் கறுப்புக் கொடிகள் கட்டி எதிர்ப்பு வெளிப்படுத்தப்படுகிறது. இந்தப் போராட்டங்களில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக தேதி குறிக்கப்பட்ட பேரறிவாளனின் தயார் அற்புதமும் முருகனின் தாயாரும் ஈடுபட்டு தமது பிள்ளைகளை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களும் தமிழக முதலமைச்சரை நோக்கி தமது பிள்ளைகளை காப்பாற்றுமாறு கோரிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று தமிழகத்தில் ஈழத்திலும் பலரது குரல்களும் முகங்களும் இன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நோக்கியே திரும்பியிருக்கின்றன. இதே கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நளினிக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்ட பொழுது முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நடவடிக்கையால் தண்டனை குறைக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சரிற்கு இந்தப் படுகொலையை தடுப்பதற்கான அதிகாரம் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார். இதனால் உலகத் தமிழினமே இன்று தமிழக முதலமைச்சரை நோக்கி விழித்திருக்கிறார்கள். பேரறிவாளனின் தாய் உட்பட மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் நமது கடைசி நம்பிக்கையாக தமிழக முதலமைச்சரை நோக்கியே குரல் எழுப்புகிறார்கள். ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதினால் மாநில முதல்வர் தலையிட அதிகாரம் இல்லை என்று ஜெயலலிதா தெரிவித்த கருத்து மிகுந்த ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் முதல்வர் இந்த விடயத்தில் தலையிடும் அதிகாரம் உள்ளவர் என்றும் கடந்த காலத்தில் தமிழக முதல்வர்கள் தலையிட்டு தூக்குத் தண்டனைகளை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஈழத் தமிழர்களின் விடயத்தில் ஆரோக்கியமான வெளிப்பாடுகாளை காட்டி உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலிதா கருணை அடிப்படையில் இந்த தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் விடுத்து வருகிறார்கள்.

யாருடைய உயிரையும் கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது என்ற அடிப்படையில் ஒரு அரசும் நீதித்துறையும் நாள் குறித்து நிறைவேற்ற இருக்கிற இந்த மரணதண்டனை என்கிற தூக்குப் படுகொலை உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டியது. மூன்று தமிழர்களை கொன்று பழி தீர்ப்பது என்பது ஈழப் போராட்டத்தின் நியாயத்தை கொன்று பழி தீர்க்கும் விடயத்திற்கு ஒப்பானது என்ற வகையிலும் உலகத் தமிழச் சூழலில் இன்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. உணர்ச்சி ரீதியான மக்களின் போராட்டங்களும் சட்ட ரீதியான நியாயங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகளும் இந்த மனிதர்களின் படுகொலை தடுத்து நிறுத்தப் போராடிக் கொண்டிருக்கிறது. உலகத் தமிழனமே கூடித்திரண்டு இந்தப் படுகொலையை நிறுத்துங்கள்! மனித உயிர்களை காப்பாற்றுங்கள்!! என்று கோசமிட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் உணர்வுகளையும் மக்களுக்கான உண்மையான வாழும் நீதியையும் மறுக்காமல் புரிந்து கொண்டு மூன்று தமிழர்களின் உயிர்கள் காக்கப்படுமா என்ற பெரும் துடிப்போடு போராட்டங்கள் வலுவாகத் தொடர்கின்றன.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக