புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருந்ததியின் பன்னிரு பொய்கள்
Page 1 of 1 •
ஜன்லோக்பால் பற்றிய அருந்ததியின் கட்டுரைக்கு Clear Visor அளித்த பதில் கட்டுரையின் தமிழாக்கம்.
மொழிபெயர்த்தவர் : எழுத்தாளர் திரு. சூரியன்.
ஜன்லோக்பால் இயக்கத்துக்கு எதிராக இன்றைய தி ஹிந்து நாளேட்டில் அருந்ததி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் வழக்கம் போலவே திறமையாகவும், இந்த இயக்கத்தின் மைய விஷயத்தைக் கோட்டை விட்டிருக்கிறார், அதுவும் அவரது வழக்கம் போலவே. இந்தக் கட்டுரையில் நான் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து பேசலாம் என்றிருக்கிறேன். இந்த இயக்கத்தைப் பற்றி அருந்ததி கட்டமைத்துள்ள பார்வையைவிட பரவலான பார்வை அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தேடுவதன்மூலம் நமக்குக் கிடைக்கக்கூடும் என்று நம்புகிறேன்.
ஜன்லோக்பால் இயக்கம் வெற்று முழக்கங்களின் மயக்கம் என்பது அருந்ததியின் முதல் பொய்.
(அ) வந்தே மாதரம் (ஆ) பாரத் மாதா கி ஜெய் (இ) இந்தியாதான் அண்ணா, அண்ணாதான் இந்தியா (ஈ) ஜெய் ஹிந்த் என்ற முழக்கங்களை இந்த இயக்கத்தினர் எழுப்புவதுதான் அருந்ததியின் முக்கியமான பிரச்சனை ஆக இருக்கும் போலுள்ளது. இதைவிட நல்ல ஒரு அமைப்பை இந்திய அரசு நமக்காக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் தெருவுக்கு வரும்போது (அ) இந்தியா ஹை ஹை (ஆ) இந்திய அரசு மர்தாபாத் (இ) ஜீவே ஜீவே பாகிஸ்தான் என்று அவர்கள் முழங்கினால் அருந்ததிக்கு விருப்பமாக இருக்குமா?
ஜன்லோக்பால் குறித்து நீங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்த முழக்கங்கள் மட்டுமே விடையாகக் கிடைக்கின்றன என்று அவர் சொல்லும்போது பொய் பேசுகிறார். ஜன்லோக்பால் யாருக்கெல்லாம் அக்கறை இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவருடனும் ஜன்லோக்பால் குறித்துப் பேசி அவர்களது சந்தேகங்களைத் தெளிவிக்க ஆனவரை இந்த இயக்கத்தினர் முயற்சி செய்துள்ளனர். ஜன்லோக்பாலில் வடிவமைக்கப்பட்டுள்ள ஷரத்துக்கள் குறித்து பல மாதங்கள் பொது விவாதம் நடந்துள்ளது. இதை வெளிப்படியாக விவாதித்து பல ஷரத்துக்கள் நிராகரிக்கப்பட்டன, பல மாற்றங்கள் செய்யப்பட்டன, பொதுமக்களின் கருத்துகளுக்கு செவி சாய்த்து அவை திருத்திய வடிவில் இணைக்கப்பட்டன. இதுதான் உண்மை. அருந்ததி சொல்வது அல்ல.
இப்போதும் அண்ணா ஹசாரே மற்றும் அவரது இயக்கத்தினர் ஜன்லோக்பால் குறித்த எந்த பொது விவாதத்துக்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவே அறிவித்துள்ளனர். இதில் உள்ள எந்த பிரச்சினை குறித்து யார் கேள்வி எழுப்பினாலும் அதற்கு பதிலளிக்க அவர்கள் தயாராக உள்ளனர். நேற்றும் அரவிந்த் கேஜ்ரிவாலும் பிரஷாந்த் பூஷனும் ஒரு தொலைகாட்சி சேனலில் இத்தகைய விவாதத்தில் பங்கு பெற்றனர். ஜன்லோக்பாலின் வெவ்வேறு அம்சங்கள் குறித்தும் அவற்றின் அவசியம் குறித்தும் அவரது குழுவினர் பேசும் காணொளிகள் உள்ளன. அவை இணையத்தில் பல மாதங்களாக காணக் கிடைக்கின்றன.
அருந்ததி, இது உங்கள் முதல் பொய்.
அண்ணா அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்க்கிறார் என்பது அருந்ததியின் இரண்டாம் பொய்.
ஜன்லோக்பால் இந்திய அரசைக் கவிழ்க்கும் முயற்சி என்பது அருந்ததியின் இரண்டாம் வாக்கு. இன்னொரு பொய். ஓராண்டுக்கும் மேலாக ஜன்லோக்பால் குழுவினர் அரசுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஊழலுக்கு எதிராக வலிமையான ஒரு சட்டத்தை வடிவமைப்பதில் ஆர்வமுள்ள அரசு உறுப்பினர்கள் அனைவரையும் கலந்தாலோசித்துள்ளனர். தற்போதுள்ள அரசின் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருடனும் பேசியுள்ளனர், அவர்களிடம் நம் நாட்டுக்கு ஏன் ஊழலுக்கு எதிரான ஒரு வலிமையான சட்டகம் தேவையென்று விளக்கியுள்ளனர். இதுதான் அரசைக் கவிழ்க்கும் முயற்சியா?
இவர்கள் தங்களிடம் விரோதம் பாராட்டும் ஒரு அரசின் குழுவில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த அரசு விரும்பிய வகை எதுவாக இருப்பினும் அந்த வடிவத்தில் தங்கள் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்துள்ளனர். இந்த தேசத்தின் நேரத்தை வீணாக்கி ஜன்லோக்பால் சட்டத்தின் ஒரு திட்டம், கவனியுங்கள் ஒரே ஒரு திட்டத்தையும் ஏற்க மறுத்த அரசுக் குழுவினர் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிக்கக்கூடிய ஒரு ஜன்லோக்பால் சட்டத்தை இயற்ற முயற்சி செய்தனர். அந்த நிலையில் அரசு ஒரு வலுவான சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஜன்லோக்பால் அமைப்பினர் தர்ணா செய்யத் தீர்மானித்தனர்.
இத்தனையும் முழுக்க முழுக்க சட்டப்படி, வன்முறையில் ஈடுபடாமல் செய்யப்பட்டன என்பதை அருந்ததி நினைத்துப் பார்க்கட்டும். அண்ணாவின் கோரிக்கை வேறொரு ஆட்சி வேண்டுமென்பதில்லை, ஜன்லோக்பாலை நடைமுறைப்படுத்தச் சொல்லி மட்டுமே இந்த நிர்வாகத்தை வலியுறுத்துகிறார் அண்ணா.
அதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
அருந்ததி, இது உங்கள் இரண்டாம் பொய்.
அண்ணா "புதிதாய் வார்த்தெடுத்த புண்ணியாத்மா" என்பது அருந்ததியின் மூன்றாம் பொய்.
அடுத்து அவர் அண்ணா "புதிதாய் வார்த்தெடுத்த புண்ணியாத்மா" என்று சொல்லிச் செல்கிறார். அதாவது பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் குறித்துப் பேசும் உரிமை .அவருக்கு இல்லையாம். புளித்துப் போன புண்ணியாத்மாக்களுக்கு மட்டுமே இந்தியாவில் போராடும் உரிமை இருக்கிறதோ என்னவோ.
ஆனால் பாருங்கள், இந்த புதிய வார்ப்பு விஷயத்தில் கூட உண்மை இல்லை போலிருக்கிறது. 1978ல் அண்ணா ஹசாரே ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதைத் தொடர்து ராலேகோன் ஸித்தியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் போராட்டத்தைத் துவங்கினார். அடுத்த பத்தாண்டுகள் முழுமையும் அவர் தன் கிராம மக்களுக்காக கடுமையாக உழைத்தார். மதுவிலக்கு, ஏழைகளுக்கான தானிய வங்கிகள், சிறப்பான பால் உற்பத்தி, மேலும் பல பள்ளிகளைத் துவக்குதல் (இதற்காக அவர் உண்ணாவிரதமிருந்தார்), தீண்டாமைக்கு எதிரான போராட்டம், சமஷ்ட்டித் திருமணம் என்று பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியிருக்கிறார் அண்ணா. 1991ல் அவர் ப்ரஷ்டசார் விரோதி ஜன ஆந்தோலன் இயக்கத்தைத் துவங்கினார். அருந்ததி அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்? இருங்கள், அப்போது அவர் தன் முதல் புத்தகத்தை கூட இன்னும் எழுதி முடித்திருக்கவில்லை.
அண்ணா ஹசாரே ஊழல் செய்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். அதிகாரத்தில் இருப்பவர்கள், வலியவர்கள். அவர் மீது அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டுமிருக்கிறார். அதிகாரத்தைக் கைப்பற்றி ஊழல் செய்தவர்கள் அவருக்கெதிராய் செலுத்திய அத்தனை அத்துமீறல்களையும் அவர் கடந்து வந்திருக்கிறார். அவர் அருந்ததி போல புரட்சிகரமான அறிக்கைகள் வெளியிடுவது அல்ல அவரது ஒட்டுமொத்த சாதனை. அருந்ததி போன்ற ஒருவர் அண்ணா போன்ற ஒரு செயல் போராளியை "புதிதாய் வார்த்தெடுத்த புண்ணியாத்மா" என்று அழைப்பது என்ன ஒரு கேவலம்.
அருந்ததி, இது உங்கள் மூன்றாம் பொய்.
அண்ணா சிறையில் ஒரு மரியாதைக்குரிய விருந்தினராக இருந்தார் என்பது அருந்ததியின் நான்காம் பொய்.
அண்ணா திகார் சிறைச்சாலையில் இருந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒரு திரிக்கப்பட்ட விவரணையைத் தருகிறார் அருந்ததி. அண்ணா திகாரில் ஒரு "மரியாதைக்குரிய விருந்தாளியாக' இருந்தார் என்று சொல்கிறார். அருந்ததி, நீங்கள் மரியாதைக்குரிய விருந்தாளிகளைத் தேடுவதானால் சுரேஷ் கல்மாடி, கனிமொழி, ஆ ராசா, மனு ஷர்மா, விகாஸ் யாதவ், ஏன், அப்ஸல் குருவைப் பாருங்கள். அண்ணா அவர்களில் ஒருவரல்ல.
அண்ணா தில்லி காவல்துறையால் அவரது இருப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் அதற்கு முந்தைய நாள் இரவில் தெருவில் உள்ள பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து கொண்டிருக்கவில்லை. அவர் ராஜ்காட்டில் ஒரு மணி நேரம் தியானம் செய்து கொண்டிருந்தார்.
காவல் துறை அண்ணாவை ஏழு நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து திகார் சிறைக்கு அனுப்பியது. இது எதைத் தடுக்க? இந்தியாவில் ஊழலுக்கு எதிரான ஒரு அமைதியான போராட்டத்தைத் தடுக்க. ஆகஸ்ட் 16 அன்று புது தில்லியிலும் மும்பையிலும் ஏறத்தாழ 15000 பேர் சிறைச்சாலை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் ஜேபி பூங்கா, ஆசாத் மைதான் என்று அவர்கள் ஊரில் இருக்கும் ஒரு பொது இடத்துக்குச் சென்று காவல் துறையிடம் தம்மைக் கைது செய்யச் சொல்லிப் போராடினர்.
அண்ணாவுக்காகப் போராட யாரும் வர மாட்டார்கள் என்று அரசாங்கம் நம்பிக் கொண்டிருந்தது. பாபா ராம்தேவை சமாளித்ததுபோல் அண்ணாவையும் சமாளித்து விட முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் அரசாங்கத்தின் துரதிருஷ்டம் இந்திய மக்களுக்கு நிறைய பட்டுவிட்டார்கள், பொறுமை போய் விட்டது. அவருக்காக பலர் சிறைசென்றதாலும், தெருவில் இறங்கி ஆதரவு தெரிவித்ததாலும், உங்கள் சொற்களில் சொல்வதானால் அண்ணா, "மரியாதைக்குரிய விருந்தாளியாக' சிறைப்படுத்தப்பட்டார்.
அண்ணா ஏன் வெளியே வரவில்லை? அவரை வீட்டுக்குச் செல்லவும் ஊரை விட்டு வெளியேறவும் சொன்னார்கள். தில்லியில் முன்நிபந்தனையற்ற ஆர்ப்பாட்டம் நடத்த அண்ணா அனுமதி கேட்டபோது தில்லி காவல்துறை அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. விடுதலை செய்யப்பட்டால் தான் ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கப் போவதாகவும், எப்படியும் தான் திரும்பவும் கைது செய்யப்படுவது உறுதி என்பதால் அரசு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தர ஒப்புக் கொள்ளும்வரை தான் சிறையிலேயே இருப்பது நல்லது என்று சொன்னார் அண்ணா.
பொதுவாக ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு அதற்கான ஆயத்தங்களை செய்து முடிக்க அவகாசம் இருக்கும். போதுமான இடம் தேவைப்படும், அங்கே கூடும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமலிருக்கத் தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டியிருக்கும். எந்த ஏற்பாடும் செய்யாமல் அண்ணா ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் அது பெரும் குழப்பத்தில் முடிந்திருக்கும், அங்கு கூடக்கூடிய மக்களுக்கு பேராபத்து நிகழ்ந்திருக்கும். அருந்ததிக்கு இது புரியுமா?
அண்ணாவின் குழுவினர் சிறைக்கு உள்ளே போய் வெளியே வந்தனர் என்று அவர் சொல்கிறார், இந்த வசதி யாருக்கும் கொடுக்கப்படவில்லையாம். தாம் விடுதலை செய்யப்பட ஒவ்வொருவரும் ஒப்புக் கொண்டதும் அண்ணாவின் குழுவினர் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அண்ணா சிறையைவிட்டுச் செல்ல மறுத்தும் கிரண் பேடியும் மற்ற குழு உறுப்பினர்களும் அண்ணாவிடம் பேச்சுவார்த்தை வேண்டும் என்று கோரி அரசால் அழைக்கப்பட்டனர். இதையும் சில நாட்களுக்கு முன் வார்டனுடன் டீ பிஸ்கட் சாப்பிட்ட கல்மாடியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கிறது? திருட்டுத்தனமாக பரோலில் சென்ற மனு சர்மாவை நினைத்துப் பாருங்கள். அவர்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
அருந்ததி, இது உங்கள் நான்காம் பொய்.
எம்சிடி அண்ணாவுக்காக தனிக்கவனம் செலுத்தி அரங்கைத் தயார் செய்தது என்பது அருந்ததியின் ஐந்தாம் பொய்.
அவரது அடுத்த குற்றச்சாட்டு தில்லி முனிசிபல் கார்பரேஷன் (எம்சிடி) அரங்கைத் தயார் நிலையில் வைத்திருக்க கடுமையாக உழைத்தது என்பதாகும். ஆனால் அது உண்மையா என்ன? அரங்கம் தயார் செய்யப்பட்டபோது அதைப் பார்வையிட அருந்ததி அங்கு செல்லவில்லை என்று உறுதியாக நம்புகிறேன், அவர் மீண்டும் தன் தலைக்கு வெளியே வந்து பேசுகிறார் என்று நினைக்கிறேன். நான் அந்த அரங்குக்கு சென்றேன், அது எந்த நிலையிலிருக்கிறது என்பதைப் பார்த்திருக்கிறேன். அருந்ததி, இதோ உங்களுக்காக ஒரு புகைப்படம். இங்கே எம்சிடி இருக்கிறதா? இல்லை, இங்கே ஈரமான சகதியைச் சுத்தப்படுத்த இளைஞர்கள் ஓடியாடி வேலை செய்வதைப் பார்க்கிறீர்களா? ஒன்றுபட்டு, ஆனவரை உழைத்து பன்றிக் கொட்டடிக்கு மேல் என்ற நிலைக்காவது கொண்டு வந்து மக்கள் நிற்பதற்குத் தகுந்த ஒரு இடத்தை அவர்கள் உருவாக்குவதைத்தான் பார்க்கிறீர்கள்
அப்படியே இந்த இளைஞர்கள் எதுவும் செய்யவில்லை, எம்சிடி தன் ஊழியர்களை அரங்குக்கு அனுப்பி அங்கு அண்ணா ஹசாரே ஆர்ப்பாட்டம் நடத்த அதைத் தயார் செய்தது என்றே வைத்துக் கொள்வோம், அது என்ன குற்றம் சாட்டக்கூடிய குற்றமா? எம்சிடி தன் வேலையைதான் செய்தது. மாபெரும் கூட்டங்கள் சேரக்கூடிய இடமாக ராம் லீலா அரங்கை நிர்வகிப்பதுதான் எம்சிடியின் வேலை. எம்சிடி தன் வேலையைச் செய்யாமல் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் மிகுந்தால் அது அங்கிருக்கும் அனைவரின் சுகாதாரத்துக்கும் கேடாகிறது. எம்சிடி அனைத்து பொது ஆர்ப்பாட்டங்களுக்கும் தன் அரங்கைத் தயார் செய்து தருகிறது. சில மாதங்களுக்குமுன் சோனியா காந்தியின் கூட்டத்துக்கும் இதையே செய்தது. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு அரசியல் கட்சியால் நடத்தப்படவில்லை என்பதால் எம்சிடி தன் வேலையை செய்திருக்கக்கூடாது என்கிறாரா அருந்ததி?
அருந்ததி, இது உங்கள் ஐந்தாம் பொய்.
லோக்பாலுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்பது அருந்ததியின் ஆறாவது பொய்.
லோக்பாலுக்கு விசாரணை நடத்தவும், துப்பறியவும், வழக்கு தொடரவும் பரந்துபட்ட அதிகாரம் இருக்கிறது என்பது அருந்ததியின் கோபமாக இருக்கிறது. அதன்பின் அவரது பிரமிக்கத்தக்க எழுத்துத் திறனைப் பயன்படுத்தி லோக்பாலுக்கு 'தனக்கென்ற சிறைக்ளைத்' தவிர மற்ற அத்தனை அதிகாரமும் இருக்கும் என்று சொல்கிறார்.
இந்திய சட்ட அமைப்பை இவ்வளவு வெளிப்படையாக கேள்வி கேட்பவருக்கு அதைப் பற்றி இன்னும் சற்று அதிகமாகத் தெரிந்திருக்கும் என்று நாம் எதிர்பார்ப்போம். காவல் துறைக்கு விசாரிக்கவும், துப்பறியவும், வழக்கு தொடுக்கவும் அதிகாரம் இருக்கிறது. சிபிஐக்கும் இந்த அதிகாரம் உண்டு. இவற்றிலிருந்து லோக்பாலின் அதிகாரம் எந்த வகையில் வேறுபடுகிறது? அண்ணாவின் ஒரே கோரிக்கை இதுதான்: லோக்பால் ஊழலை ஒழிக்க பயன்படக்கூடிய சிறப்புத் துறையாக இருக்க வேண்டும், ஊழல் செய்த ஒருவர் பதவியில் இருக்கும்போது அவர் மேல் வழக்கு தொடுக்க யாருடைய அனுமதியையும் அது கேட்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. விசாரணைத் துறைகளின் செயல்பாடுகளை நம் தற்போதைய அமைப்பு கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் பிரதமரின் கீழ் இருக்கும் சிபிஐ ஆ ராசாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை. அதுவே உச்ச நீதி மன்றம் விசாரணையைத் தன் கையில் எடுத்துக் கொண்டவுடன் அதே ஆ ராசா சிறைக்கு அனுப்பப்பட்டார்.
லோக்பாலின் அதிகாரம் விசாரணை, தடயம் சேகரித்தல் மற்றும் வழக்கு தொடுத்தல் என்ற அளவில் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை வலிய மறைக்கிறார் அருந்ததி. லோக்பால் வழக்கை நீதி மன்றத்துக்கு கொண்டு வரும், அங்கே அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் எந்த ஒரு நபரும் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிபதிதான் முடிவு செய்வார். இது எப்படி பயங்கரமான அச்சுறுத்தலாகும்?
அருந்ததி, இது உங்கள் ஆறாம் பொய்.
லோக்பால் தெருவுக்குத் தெரு மாமூல் வாங்க ஆள் அனுப்பும் என்பது அருந்ததியின் ஏழாம் பொய்.
தன் வாசகனின் மனதை ஜன்லோக்பாலுக்கு எதிரான குப்பையால் நிறைக்க அருந்ததியால் எவ்வளவு கேலிக்குரிய தூரமும் போக முடிகிறது என்பது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இந்திய அரசுக்கும் இவருக்கும் இருக்கிற பிரச்சினைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்காவிட்டால், நீங்கள் இந்தக் கட்டுரையை எழுத இவருக்கு அரசாங்கம் காசு கொடுத்திருக்கிறது என்பதை சுலபமாக நம்பிவிட முடியும். சாலையோரங்களில் கடை வைக்கும் வர்த்தகர்கள் இனி கான்ஸ்டபிள்களுக்கு பதிலாக "லோக்பால் பிரதிநிதிக்கு" காசு தர வேண்டும் என்பதுபோல் சொல்கிறார் அருந்ததி!
லோக்பால் பிரதிநிதியா? இனி அவர் இந்த சொற்களுக்கு சட்டம் போட்டு அதை அனைவரும் பார்க்க செங்கோட்டையில் மாட்டி வைக்கலாம். அப்போதும் அது மெய்யாகிவிடாது. இல்லாத ஒரு பிரதிநிதியை இவராக உருவாக்கி முன்வைக்கிறார். லோக்பால் காவல் துறையல்ல. அவர்கள் சாலையோரக் கடைகளுக்குப் போய் மாமூல் வசூலிக்க முடியாது.
நிலவுடைமையாளர்களின் நிலம் சட்டத்துக்குப் புறம்பாக கையகப்படுத்தப்பட்டு அங்கே ஒரு வணிக அங்காடி கட்டப்படும்போதோ அல்லது ஒரு ஏழையின் பெட்டிக கடை அநியாயமாக அப்புறப்படுத்தப்ப்படும்போதோ அல்லது உள்ளூர் கான்ஸ்டபிள்களோ எம்சிடி ஆட்களோ அன்றி வேறு அரசு அதிகாரிகளோ மனசாட்சியில்லாமல் மக்களிடம் லஞ்சம் கேட்கும்போது, அங்கே இருக்கிறது ஊழல். லோக்பால் அதை கண்காணிக்கத்தான் அமைக்கப்படுகிறது.
ஜன்லோக்பால் சட்டத்தின் ஷரத்துக்களின்படி பதவியில் இருக்கும் ஒருவரின்மீது எந்த ஒரு குடிமகனும் குற்றச்சாட்டு பதிவு செய்யலாம், லோக்பால் அந்த குற்றச்சாட்டை விசாரிக்கும். குற்றம் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். லோக்பால் ஏழைகளிடம் மாமூல் வசூலிக்க யாரையும் அனுப்பப்போவதில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று சொல்வது முட்டாள்தனமானது. அலங்காரமாய் ஜோடிக்கும் கற்பனைகளுக்கு மட்டுமே தோன்றும் விஷயம் இது.
அருந்ததி, இது உங்கள் ஏழாம் பொய்.
லோக்பால் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களின் நர்த்தனம் என்பது அருந்ததியின் எட்டாம் பொய்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் போல் இதன் நடன அமைப்பும் தீவிரமான தேசியமும் இருப்பதாக சொல்கிறார் அருந்ததி. இது ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து தலித்களைத் தனிமைப்படுத்தும் அப்பட்டமான முயற்சியாகும். ஆனால் இது எவ்வளவு பொருத்தமற்ற முயற்சி! ஊழலால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் தலித்கள்தான். உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களே பணக்காரர்களாகவும் அதிகாரத்தில் இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள்தான் தற்போதுள்ள அமைப்பைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவர்களிடமே பணபலம், பதவி பலம் மற்றும் ஆள் பலம் இருக்கிறது.
இனி நடன அமைப்புக்கு வருவோம். இந்த மொண்ணையான சொல்லின் பொருள் என்ன? நடன அமைப்பு. இதைக் கொண்டு நாம் என்ன புரிந்து கொள்வதாம்? இவர் கோஷங்களைப் பற்றி பேசுகிறார் என்றால், நாம் அதை ஏற்கனவே பார்த்து விட்டோம். வேறென்ன சொல்கிறார் இவர்?
இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் தெருக்களில் வன்முறை நேர்ந்தது, தீக்குளித்தார்கள். இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களைப் பூட்டினார்கள், பெருந்துகளைக் கொளுத்தினார்கள், சட்டத்துக்கு எதிராக மோதினார்கள், தங்களைக் கொளுத்திக் கொண்டார்கள். அண்ணாவின் இயக்கத்தில் இது எதுவும் நடக்கவில்லை. இந்த இயக்கம் முழுக்க முழுக்க அமைதியாகவும் நெறிமுறைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது. மக்கள் ஊர்வலம் செல்லும்போதும்கூட சிவப்பு விளக்கிக் கண்டதும் நிற்கிறார்கள், சந்திப்புகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் தங்கள் ஊர்வலத்தைத் தொடர்கிறார்கள். "நடன அமைப்பு' என்று என்ன சொல்கிறார் அருந்ததி?
அருந்ததி, இது உங்கள் எட்டாம் பொய்.
அண்ணா அதிகார வர்க்கத்துக்கு ஆதரவானவர் என்பது அருந்ததியின் ஒன்பதாம் பொய்.
இனி வருவது மிகவும் குரூரமானது. அவர் ஐரோம் ஷர்மிளா, பஸ்தார், ஜைதாபூர் அனைத்தையும் இந்த உண்ணாவிரதத்தில் இருந்து தன் நுண்ணரசியலால் பிரிக்கப் பார்க்கிறார். அண்ணா ஹசாரே போஸ்கோவை எதிர்க்கவில்லை, மகராஷ்டிராவின் விவசாயச் சாவுகளை எதிர்க்கவில்லை, நம் நாட்டில் உள்ள ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் எதிர்க்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறார். இதைவிட அப்பட்டமான பொய் இருக்க முடியாது.
அருந்ததி போலல்லாது நம் தேசம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் பற்பலவும் ஊழலின் நேரடி விளைவுகள் என்பதை அண்ணா உணர்ந்திருக்கிறார். அதனால்தான் ஆதிவாசிகளைச் சேர வேண்டிய பல்லாயிரம் கோடி பணம் ஒரு மது கோடாவுக்கு லஞ்சமாகக் கிடைக்கிறது. ஊழல் செய்ய முடிவதால்தான் எடியூரப்பா சட்டத்துக்குப் புறம்பாக சுரங்க வளங்களைக் கொள்ளையடிப்பவர்களை இஷ்டம் போல் செயல்பட அனுமதிக்க முடிகிறது. இதனால்தான் பஸ்தாரும் ஐரோமும், நியாம்கிரியும் இருக்க முடிகின்றன. அனைத்துக்கும் காரணம் ஊழல்.
நமது சட்ட அமைப்பு பொறுப்பில் இருப்பவர்களைத் தவறுகளுக்குப் பொறுப்பாக்கக் கூடியதாக இருந்திருந்தால், இந்த பிரச்சினைகள் அனைத்திலும் அது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்திருக்கும. வனவளங்களை சூறையாடாத, சுரங்க வளங்களைக் கொள்ளையடிக்காத, நில வளங்களைத் திருடாத ஒரு பஸ்தார் இருப்பதை நினைத்துப் பாருங்கள். அரசின் நலப்பணித் திட்டங்கள் அனைத்தும் உண்மையாகவே செயல்படுத்தப்படும் மகாராஷ்ட்ரிய கிராமத்தை நினைத்துப் பாருங்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். நேர்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மன்ரேகா மக்களுக்கு என்னவெல்லாம் செய்யக் கூடும் என்பதை மட்டுமாவது நினைத்துப் பாருங்கள்..
அண்ணா மகராஷ்டிராவிலும் மற்ற இடங்களிலும் உள்ள விவசாயிகளிடம் அக்கறை இல்லாமல் இருக்கிறார் என்று சொல்கிறார் அருந்ததி. அண்ணா வெளிப்படையாக தன் வாழ்நாளை ஏழைகளுக்கும் உரிமை மறுக்கப்பட்ட கிராமத்தாருக்கும் உழவர்களுக்கும் ஆதரவாகப் போராடியிருக்கிறார் என்பதுதான் உண்மை. ஒரு வேளை இந்தியாவின் மீது வெறுப்பை உமிழ்பவர்களுடன் கூடிக் களியாடிக் கொண்டிருந்ததால் அருந்ததி இதை எல்லாம் கவனிக்கத் தவறியிருக்கலாம்.
அருந்ததி சுட்டிக் காட்டும் மக்களுக்கு ஆதரவாகப் போராடுவதென்பது ஊழலுக்கு எதிராகப் போராடுவது. ஊழலுக்கு எதிரான போராட்டம் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு எதிரான போராட்டமல்ல. இதற்கு மாறான அருந்ததி நினைப்பாரானால், அதற்கான காரணங்களைச் சொல்லட்டும்.
அருந்ததி, இது உங்கள் ஒன்பதாம் பொய்.
அண்ணா இந்துத்துவர் என்பது அருந்ததியின் பத்தாம் பொய்.
அடுத்த அவதூறுதான் அண்ணாவின் மீது தூற்றப்படக்கூடியனவற்றில் அதிபயங்கர ஆயுதம், அவர் ராஜ் தாக்கரே அல்லது நரேந்திர மோடியின் குற்றங்களை ஆதரிக்கிறார். இது நகைப்புக்குரிய விஷயம். பிஜேபி, இந்துத்துவர்கள் மற்றும் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர்கள் அண்ணா ஹசாரேவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை கவனித்தால் இது எவ்வளவு கேவலமான நகைச்சுவை என்பது புரியும். அண்ணா ஹசாரே காங்கிரசின் கைக்கூலி, ராகுல் காந்திக்கு முடி சூட அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் தூக்கி நிறுத்துகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகளுக்கு ஹசாரே தோழரல்ல. வலது சாரிகளுக்கு ஹசாரே வேண்டியவரல்ல. காங்கிரசின் நேசத்துக்குரியவரல்ல ஹசாரே. கடவுளே! இவர்கள் அனைவருக்கும் வேண்டியவர் அல்ல என்றால் அவர் உத்தமராகத்தான் இருக்க வேண்டும்.
இந்த இயக்கத்திலிருந்து இசுலாமியர்களைப் பிரித்து விடலாம் என்பது அருந்ததியின் கேடுகெட்ட நோக்கமாக இருந்தால், அதில் அவர் தோற்றுவிட்டார். ஒரு சமூகமாக இசுலாமியர்கள் அண்ணா ஹசாரேவுக்கு ஏகோபித்த ஆதரவு அளிக்கிறார்கள். பல இமாம்களும் மௌல்விகளும் அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். டர் உல் உலூம், இந்தியாவில் உள்ள இசுலாமியர்களின் மிகப் பெரும் அமைப்பு, அது இந்தியாவில் உள்ள இசுலாமியர் மற்றும் குடிமகன் ஒவ்வொருவனின் கடமையும் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவளிப்பது என்று கூறியுள்ளது. அவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால், அவர்களுக்குத் தெரியாத ரகசியம் அருந்ததிக்குத் தெரிந்திருக்கிறது. அதை அவர் பகிர்வாரா?
‘Youth for equality’ என்ற அமைப்பையும் அவர் இதில் வலிய புகுத்தியிருக்கிறார். அண்ணாவின் இயக்கத்துக்கு ‘Youth for equality’ ஆதரவளித்தால் என்ன? அவருக்கு All India Youth Federationம் ஆதரவு கொடுக்கிறது. அண்ணாவுக்காக ஊழலுக்கு எதிராக ஊர்வலத்தில் அவர்கள் கலந்து கொண்டதற்கு புகைப்படம் உள்ளது. யாரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பே AIYF என்பதை மறந்திருக்க முடியாது.
[அவர்கள் ஊழலற்ற இந்தியாவை நாடியதால் அண்ணாவை ஆதரித்தார்கள். ]
ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அண்ணா யார் தமக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பது அருந்ததிக்குப் புரியுமா? அனைவருடைய ஆதரவையும் அவர் நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறார். அவர் இந்த ஆதரவுக்குப் பிரதிபலனாக ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்டத்தைத் மட்டுமே தருகிறார்.
அதனால்தான் அயோத்தியாவின் கியான் தாஸ் அகராவும், அங்கே கோயில் காட்டப்படக் கூடாதென்று வழக்கு தொடுத்துள்ள ஹஷிம் அன்சாரியும் ஒன்றிணைத்து தங்கள் ஆதரவை அண்ணா ஹசாரேவுக்கு அளித்துள்ளனர். உங்கள் சிறுமதியைத் தாண்டி சிந்திக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா?
அருந்ததி, இது உங்கள் பத்தாம் பொய்.
ஊழலுக்கு எதிரான இயக்கம் அந்நிய சக்திகளின் சதித்திட்டம் என்பது அருந்ததியின் பதினொன்றாம் பொய்.
அருந்ததிக்குக் கிடைத்துள்ள தகவல்கள் பிழையானவை, அல்லது அவர் தவறான தகவல்களை மக்கள் முன்னெடுத்து வைக்கிறார். கபீர் என்ற NGO அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோதியா ஆகிய இருவரும் இணைத்து செயல்படுத்தும் அமைப்பு என்று சொல்கிறார் அருந்ததி. அர்விந்த் கேஜ்ரிவால் கபீரை வழிநடத்துவதில்லை. அவர் அதில் ஒரு செயற்குழு உறுப்பினர் மட்டுமே. பரிவர்த்தன் என்ற அமைப்பில் மனிஷ் சிசோதியா இணைந்து பணியாற்றி இருந்ததால் கேஜ்ரிவால் கபீரில் இருக்கிறார். ஆனால் அவர் அதை நிர்வகிப்பதில்லை, அதன் பணிகளில் இடையீடு செய்வதில்லை. அது மனிஷ் சிசோதியாவால் நிர்வகிக்கப்படுகிறது. அர்விந்த் கேஜ்ரிவாலின் அமைப்பின் பெயர் PCRF. அவர்கள் போர்ட் நிறுவனத்திடம் இருந்து நன்கொடை பெற்றதில்லை. அவர்களது வரவு செலவு கணக்கு பொது மக்கள் பார்வைக்குத் தங்கள் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அர்விந்த் இந்த அமைப்பை வெறும் பதினான்கு லட்சங்களில் துவங்கினார். இந்தப் பணமும் அவருக்கு மக்சேசே விருதாக வழங்கப்பட்ட தொகை. அவர் அதை பொதுநலச் சேவைக்கு பயன்படுத்தினார். இந்தியாவில் தகவல் அறியும் சட்டத்த்துக்கு ஆதரவு திரட்டப் பயன்படுத்தினார்.
ஊழலுக்கு எதிரான தற்போதைய இயக்கத்துக்கும் PCRF முழு கணக்கு வழக்குகளையும் வெளிப்பார்வைக்கு வைத்துள்ளது. யார் யார் எவ்வளவு நிதியுதவி செய்கிறார்கள் என்பது ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பின் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் செலவு விவரங்களும் அங்கே காணக்கிடைக்கிறது. அதை ஒரு பார்வை பார்ப்பது நல்லது.
போர்ட் நிறுவனம் கபீருக்குக் கொடுத்த தொகை இருபதாயிரம் டாலர்கள். அருந்ததி சொல்வது போல் நாலு லட்சம் டாலர் அல்ல. போர்ட் பவுண்டேஷன் வலைத்தளத்தில் இதை உறுதி செய்துகொள்ளலாம். (http://www.fordfoundation.org/grants/search). இந்த நன்கொடைக்கும் தற்போதைய இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை யாரும் கவனித்திருக்கலாம், ஆனால் அருந்ததிக்கு அது தெரியாது. இதோ பாருங்கள்- இந்தியாவில் தகவல் அறியும் சட்டத்தின் பயன்பாட்டை பரவலாக்க இந்த நன்கொட 2011ல் கபீருக்குக் கொடுக்கப்பட்டது. இதற்கும் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அருந்ததி, இது உங்கள் பதினொன்றாம் பொய்.
லோக்பால் சட்டம் தனியார் நிறுவன ஊழலுக்கு எதிரானதல்ல என்பது அருந்ததியின் பன்னிரெண்டாம் பொய்.
தனியார் நிறுவனங்களையும் தன்னார்வ நிறுவனங்களையும் லோக்பாலின் வரம்புக்கு உட்படுத்தவில்லை என்று சொல்கிறார் அருந்ததி. தற்போதுள்ள நம் சட்ட அமைப்பில் இது சாத்தியமா? தனியார் நிதியைக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களை அரசு அமைப்புகளைப் போல் கண்காணிக்க நம் சட்டத்தில் இன்று இடம் இருக்கிறதா? சட்ட வல்லுனர்கள் இது முடியாது என்று சொல்கிறார்கள், அதனால்தான் தற்போது இவை லோக்பாலின் வரம்புக்கு வெளியே உள்ளன.
ஊழல் என்று வந்தால் அரசு அமைப்புகளே மிக மோசமானவை என்பதை அருந்ததி மறந்துவிட்டார். அருந்ததி குறிப்பிடும் பிரச்சினைகளுக்குக் காரணம் அரசின் ஊழல் அமைப்புகள் தனியாரின் தவறான பயன்பாட்டை அனுமதிக்கிறது என்ற உண்மையே. தனியார் துறையில் உள்ள தவறுகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது, ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு அமைப்புகள் தனியாரின் ஊழலில் துணை போகின்றன, அல்லது அந்த துறைகளின் மந்திரிகள் ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறார்.
அரசு அமைப்புகள் ஒழுங்காக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தும் சட்டத்தை நாம் உருவாக்குவது ஒரு துவக்கம். இது தனியார் துறையை இன்னும் நன்றாகக் கையாளத் துணை செய்யும். டெலிகாம் நிறுவனங்களுக்காக ஆ ராசா வேலை செய்யவில்லை என்றால் 2G இது போல் அவர்களுக்கு சாதகமாக இருந்திருக்குமா? CWG டெண்டர்கள் கல்மாடி மற்றும் ஷீலா தீக்ஷித்தின் ஆதரவு இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு இவ்வளவு பெரிய லாபம் கொடுத்திருக்காது.
அண்ணாவின் அணி தொடர்ந்து போராடுவோம் என்று உறுதிமொழி அளித்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், ஜன்லோக்பால் சட்டம் நிறைவேறியதும் ஊழலை ஒழிக்க மேற்கொண்டு தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் போராட அவர்கள் தயாராக இருக்கின்றனர். ஜன்லோக்பால் சட்டத்தை சாக்காக வைத்துக் கொண்டு வெவ்வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசி ஊழலுக்கு எதிரான இயக்கத்தை முடக்கப் பார்க்கிறார் அருந்ததி. அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடுவது தனியாரின் ஊழலுக்கு எதிராகப் போராடுவதைவிட எந்த விதத்தில் புனிதமில்லாமல் போய் விட்டது?
அருந்ததி, இது உங்கள் பன்னிரெண்டாம் பொய்.
அருந்ததி சொல்வதில் சாரமுள்ள ஒரே பகுதி அவரது கட்டுரையின் கடைசி பத்தியில் வருகிறது. மக்களின் பிரதிநிதியாக இல்லாத கிரிமினல்களும் கோடிகளில் புரளும் அரசியல்வாதிகளும் நிறைந்த சட்ட அமைப்பின் தோல்வியின் விளைவே அண்ணாவின் இயக்கம் என்று அருந்ததி சொல்வது முழுக்க சரி. ஏன், அதைத்தான் அண்ணாவும்சொல்கிறார். தம் மக்களின் தேவைகள் மற

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இதை விரிவாக விளக்கியவர்கள்
விவசாயிகளின் நில அபகரிப்பும் விவசாயிகள் வெளியேற்றம் பற்றியும்்
ஐரம் ஷர்மிளா மற்றும்் மணிப்பூரில் ஏற்பட்டு கொண்டிருக்கும் கொடுமைகள் பற்றியும்
இன்னும் அருந்ததி ராய் அவர்கள் குறிப்பிட்டட சில பிரச்சினைகளுக்கு ஏன் அவர்கள் பதில் அளிக்க வில்லை என்பது என் கேள்வி.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இந்த பிரச்சனைகள் இருப்பது உண்மை ...அதற்காக...அண்ணாவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கொச்சை படுத்தும் அருந்ததி போன்றோரின் செயல் கண்டிக்க தக்கது ,பிஜிராமன் wrote:இதை விரிவாக விளக்கியவர்கள்
விவசாயிகளின் நில அபகரிப்பும் விவசாயிகள் வெளியேற்றம் பற்றியும்்
ஐரம் ஷர்மிளா மற்றும்் மணிப்பூரில் ஏற்பட்டு கொண்டிருக்கும் கொடுமைகள் பற்றியும்
இன்னும் அருந்ததி ராய் அவர்கள் குறிப்பிட்டட சில பிரச்சினைகளுக்கு ஏன் அவர்கள் பதில் அளிக்க வில்லை என்பது என் கேள்வி.........
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இளமாறன் wrote:உங்கள் கட்டுரை சிந்திக்க வைக்கிறது .. பின் ஏன் அண்ணாவில் குழுவில் பிளவு ஏற்பட்டது ? அதன் பின்னணி பற்றியும் அறிய முடியவில்லை ...
அன்னா வின் குழுவில் பிளவு ஏற்படவில்லை. கருத்து வேறுபாடுதான். அரசு தரப்பிலிருந்து இதை பெரிது படுத்த முயற்ச்சிக்கிறார்கள்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஆங்கிலத்தில் படித்தேன்... தமிழ் பதிவுக்கு நன்றி பாலா...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
.இந்த இயக்கத்தைப் பற்றி அருந்ததி கட்டமைத்துள்ள பார்வையைவிட பரவலான பார்வை அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தேடுவதன்மூலம் நமக்குக் கிடைக்கக்கூடும் என்று நம்புகிறேன்
உண்மைதான் அய்யா, அறிய பல தகவல்கள். ஆரம்ப கால கட்டுரை எழுத்தாளர்களுக்கு சிறப்பான பாடம்.
நாம் என்னதான் லோக்பால் மசோதாவை பற்றி அருந்ததியிடம் எடுத்து சொன்னாலும் அது விழலுக்கு இறைத்த நீராய் வீணாய் போகும் போல.
நன்றி பாலா சார் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|