புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_lcapஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_voting_barஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_lcapஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_voting_barஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_lcapஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_voting_barஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_lcapஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_voting_barஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_lcapஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_voting_barஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_lcapஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_voting_barஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:17 am

First topic message reminder :

முன்னுரை

கதையோ, கவிதையோ எல்லாமே செய்யப்படுவதுதான். யுகங்களாக நீள விரியும் கணங்களோ, திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதுமான வருடங்களோ, மனதில் சூல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும்போது, செயற்கைத் தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது.

அதையும் மீறிப் படைப்பு வெற்றி பெறுகிறது என்றால், ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார். எழுத்துக்கும் எனக்கும் உள்ள இருபதாண்டு உறவு கவிதையில் தொடங்கியது. என் உரைநடையைச் செம்மைப் படுத்தியது கவிதையே. சிறுகதையிலும், குறுநாவலிலும் மும்முரமான பிறகு, இந்தக் கவிதைகளைத் திரும்பப் படிக்கும்போது, ஒவ்வொன்றுக்குள்ளும் இருக்கும் கதைதான் உடனடியாக மனதில் படுகிறது. இதை எல்லாம் கதையாக எழுதியிருந்தாலும் இந்தத் தொனிதான் இருந்திருக்கும் என்ற நினைப்பும் கூடவே ஆசுவாசமாக எழுகிறது. கவிஞர் மீராவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் ஊர்க்காரரும், என் கல்லூரி ஆசிரியருமான அவருடைய பிரபலமான ’கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ என்னைப் பாதித்திருக்காவிட்டால் முதல் கவிதையை எழுதியிருக்க மாட்டேன்.

இந்தக் கவிதைகளில் பெரும்பான்மையானவை கணையாழியில் வெளியானவை. இருபத்தைந்து வருடங்களாகக் கணையாழியில் கவிதைகளும், "முன்பிருந்த தரத்தில் கவிதைகள் இல்லை. கவிதைத் தேர்வில் கவனம் தேவை" என்று கடிதங்களும் தொடர்ந்து வருவதிலிருந்து ஆங்காங்கே எல்லோரும் அடிக்குச்சிக் கவிதைகளை வைத்திருப்பது புலப்படுகிறதோ இல்லையோ, ’இன்றைய தேதியில் எழுதப்படுவது மோசமான எழுத்து’ என்ற எண்ணம் பரவலாக இருப்பதாகத் தெரிகிறது. சங்க காலத்திலும், இப்படி அதற்கு முந்திய காலத்தை உற்சாகமாகக் கையைக் காட்டித் திருப்திப்பட்டிருக்கலாம்!

என் கவிதைகளை வெளியிட்ட கணையாழிக்கும், மற்றப் பத்திரிகைகளுக்கும் நன்றி. சிற்றிதழ் வட்டாரத்தில் மட்டும் தெரிந்திருந்த என்னை வெகுஜனப் பத்திரிகை வாசக வட்டத்திலும் பலமாக அறிமுகம் செய்த ’எங்க வாத்தியாரை’ (சுஜாதா) இங்கே நினைக்காவிட்டால், "இன்றைக்கு ராத்திரி சோறு கிடைக்காது;"

’ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ சென்னை ஸ்நேகா பதிப்பகம் வெளியீடாக வந்தது. நேர்த்தியான அச்சமைப்போடு கூடிய அதன் முகப்போவியத்தைச் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ஆதிமூலம் வரைந்திருந்தார். என் நண்பர் எழுத்தாளர் - கவிஞர் - ஓவியர் யூமா வாசுகி புத்தகத்துக்கு உள்ளே தான் இக்கவிதைகளை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் அற்புதமான கோட்டோவியங்களை வரைந்தளித்திருந்தார். இருவருக்கும் என் நன்றி.

இரா.முருகன்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:23 am

நாளை, இல்லை மறுநாள், இல்லை என்றாவது

ராத்தங்கக் கூடாத
கிட்டப்பாவை
சாயந்திரமே எரித்தபோது
வெட்டியானுக்கு விறைப்பு.
ரெண்டு பொங்கலுக்கு
வாசலிலே நின்னு
வசவுதான் கிடைத்ததாம்.
’கட்டிக்கிட்டா போனாரு?’
கொள்ளி போட பிள்ளை
தாராள மனதோடு
கொடுத்தது இருபது ரூபாய்.
பம்பாயிலிருந்து இனிமேல்
மாதாந்திர மணியார்டர் மிச்சம்.
ஊருணிக் குளியல்.
சொறிந்து கொண்டு
கோனார் கடையில் பரோட்டா.
இழுத்து நின்ற நாய்களைப்
பிரித்து விட்டு
இரண்டாம் ஆட்டம்
பழைய படம்.
இடைவேளையில்
மூத்திரப் புரையில்
ஒருத்தன் சொன்னான் -
நாளைக்கு இண்டர்வ்யூ.
கொஞ்ச நேரத் தூக்கத்தில்
பம்பாயிலிருந்து வந்து
வெட்டியானுக்கு நூறுரூபாய்
கொடுத்தேன்.
பக்கத்தில் நின்று
அப்பா சிரித்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:23 am

சூழல்

என்மேல் எச்சமிட்டுப் போன
பறவைக்கு
நீலச் சிறகுகள்.
தொழிற்சாலைப் புகை சேராத
சுத்த வானிலும்
பறவைகள் இருந்தன.
கொடிக் கம்பத்தில்
அலகு தேய்க்கும் ஒன்று.
நாயர் கடையின் தகர அடைப்பைத்
தட்டிப் பார்க்கும் வேறொன்று.
பட்டுப் போன தொட்டிச் செடிகளில்,
சைக்கிள் Šடாண்ட் விநாயகர் தோளில்,
கண்ணாடி உடைந்த ஆபீŠ ƒன்னலில்,
எங்கும் பறவைகள்.
சங்கக் கட்டிடக் கூரையில் சிலவோ
தலைவர் போல நடைகள் பழகும்.
உச்சி வெய்யிலில் ஊர்வலம் வந்து
வெட்ட வெளியில் வியர்த்து நின்று
இன்னும் கொஞ்சம் உரைகள் கேட்டு
அடைத்த கதவைப் பார்த்துப் போகிறார்.
வெய்யில் தாழப் பறவைக் கூட்டமும்
விண்ணில் ஏறி மறைந்து போகும்.
இரைச்சலும் புகையும் இல்லா இடங்களில்
பறவைகள் இனியும் திரும்பி வரும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:24 am

இடம் பெயர்தல்

பழைய நகரம். பாதை மறந்து
குழம்பித் தவிக்க ஒருவன் சொன்னதால்
கிழக்கே போனேன். சுற்றி வந்தால்
பலகை அடைத்த செருப்புக் கடையின்
வாசலில் நின்று திரும்பவும் அவனே
மேற்கு என்றான் சிரித்த படிக்கு.
நடந்த வழியும் அவனில் முடிய
இன்னும் எங்கோ கையைக் காட்டினான்.
தேடல் மறந்து சூரியன் போல
விரியும் கைகளின் திசைகள் சார்ந்து
இருண்ட தெருக்களில் அலைந்து திரும்பித்
தளரும் நேரம் கண்ணை விழிக்கிறேன்.
காலை எடுத்து நாலு நாளாச்சு.
கட்டைகள் வரும்வரை பொறுக்க வேணுமாம்.
அப்புறம் படுத்தால் ஏழெட்டுப் பேரை
ஒன்றாய்க் கிடத்தித் தூக்கிப் போகும்
ஊர்வலம் ஒன்று. அழுக்குத் தலையணை
வேண்டா மென்று மறுக்க மறுக்கச்
சுமந்து போயினர். எழுந்த போது
வந்து இருந்தன கட்டைக் கால்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:24 am

நாயம்

கோவாலுக்குக் கொள்ளைப் பிரியம்.
மிட்டாய்க் கடைக்கும் மீன் சந்தைக்கும்
சிட்டுக் குருவி லேகியம் வாங்கவும்
கூட்டிப் போவான் சைக்கிளில் ஏற்றி.
ராமே சரத்தில் வாளிக்காரன்
பின்னே நடந்து ஈரத்தோடு
தீர்த்த மாடப் போனதாய்க் கேள்வி.
கோவாலு மச்சினிக்குக் குமட்டல் எடுத்தால்
கோவாலைக் குரைப்பதில் என்ன நாயமாம்?
கொன்று புதைத்தான் கோவாலு.
எலுமிச்சை மரத்தின் கீழ் நாய் தூங்க
ஏணையில் கோவாலு மகன் கிடக்கக்
குச்சு நாய் வேணுமாம் குழந்தை விளையாட.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:24 am

கணக்கெடுப்பு

முகமுடி யணிந்தோம்
எனது நீலம்
பழுப்பாய்த் தாடை மயிர் துருத்த
மற்றவர் அணிந்தனர்.
கறுப்பும் இருந்தது.
காற்றில் நெடிகள் ஏறின.
வெளியே ஊர்திகள்
வேகம் கொண்டன.
வானம் சுருங்கக்
காகிதம் ஒட்டிய சுவர்கள்
உள்வளைந்து தொடமுயல
யந்திரம் ஒன்று பாடியது.
சூழ்ந்து நீரழுத்தும்
ஒழுங்கை யுள்ளே
மெல்ல நடந்தோம்.
செவ்வகமாகக் கிடந்த அறை.
வெளிர் நீல விளக்கில்
படுத்திருந்தார்கள்.
எண்ணத் தொடங்கினோம்.
எல்லாம் சரிதான்.
போகலாம்.
மணி ஒலித்தது.
சுகாதாரமான அலுவலகத்தில்
தட்டச்சுப் பொறிகள் நிறுத்திப்
பெண்கள் கேட்டனர் -
’எத்தனை இருந்தது?’
முகங்கள் கழற்றினோம்.
நாளை எனக்கு நீலம் -
நண்பன் சொன்னான்.
’எத்தனை இருந்தது’?
மறுபடி அவர்கள்.
விரித்த கோப்பில்
என்பெயர் கண்டேன்.
எண்ணத் தொடங்கினர்.
ஒன்று என்று நீண்ட விரல்கள்
என்னைச் சுட்ட.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:25 am

வீடு விற்பனைக்கு

என்ன கேட்டீர் வண்டிக் காரரே?
ஊருக்கு நானொன்றும் புதுசு இல்லை.
மாறிப் போச்சுங்க ஊர் முச்சூடும்.
மாறாதது நானும் என் குதிரையும்.
பூட்டிய வீட்டு வாசலில் நிறுத்தும்.
போட்டுக் கொடுங்க முதல் சவாரி.
கதவைத் திறக்கப் புழுதி படிந்த
வாசல் திண்ணை. (’சுதந்திரச் சங்கு’
வீசிப் போவார் சுதேசி நாயக்கர்.)
(தீபாவளிக்குக் காந்தி சொற்படி
கதர்தான் வாங்கணும். சிந்தாமணியில்
பாகவதர் டாக்கி. சீட்டுக் கிடைச்சுதா?)
சவுக்கிய மெல்லாம் எப்படீங்க?
வெங்கடா சலமா? தவறிப் போய்
வருசம் நிறைய ஆகிப் போனதே.
’சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’
சுக்கலாய் உடைந்து கிடந்தது.
ராட்டைப் பெட்டியில் வண்டுகள்.
ரிƒ¢Šதர் ஆப்பீசில்
பத்திரம் பதிந்தேன்.
வழக்கம் போல் ரயிலடிப் பலகை
விசாரிக்கிறது -
’இந்த வாரம் விகடன் படித்தீர்களா?’
மாதுங்காவில் போய்த்தான் வாங்கணும்.
நல்ல வரனாய்ப் பெண்ணுக்கு அமையணும்.
தெரிஞ்சால் சொல்லும் பம்பாய்க் குள்ளே.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:28 am

வெளி

சைக்கிள் படிக்கும் சிறுவன் தவிர
மைதானத்தில் யாரையும் காணோம்.
தூங்கும் மரத்தின் வெள்ளைப் பூக்கள்
சிதறிய தரையில் முள்ளால் எழுதிய
பெயர்கள் மற்றும் உருளைக் கற்கள்.
கிடந்த வாக்கில் சக்கரம் சுழலச்
செங்குத் தாகவோர் வெறுமை நின்றது.
குதிரைகள் வந்தன. முதலில் ஒன்று
வெறுமை தகர்த்து வெட்ட வெளியில்
சாம்பல் பூசி மெல்ல நடந்தது.
அழியும் முன்னர் மற்றொன் றாங்கே
மேலும் அந்நிறம் பூசிச் சென்றது.
செம்மண் பரப்பில் நீளநட்ட
சாம்பல் தளத்தின் எல்லைகள் விரிய,
இன்னும் வந்த குதிரைகள் எல்லாம்
வேகம் கொண்டு வெளியை நிறைத்தன.
சாம்பல் பூசிய காற்றும் அதிர,
அடிப்படைப் பரப்பும் காலில் மறைய,
புதிய தளத்தில் இயக்கம் மிகுந்தது.
ஒதுங்க நினைத்தேன். ஓடலானேன்.
முதுகில் விசிறும் ஈர வால்களும்
முகத்தில் எழுத முற்படும் கால்களும்
தவிர்த்து விரையப் பரப்பு நீண்டது.
சைக்கிள் சிறுவன் போய்விட் டிருந்தான்.
வியர்வைத் துளிகளில் சாம்பல் உதிரத்
திரும்ப நோக்கினேன். இருட்டு மழையில்
தொலைப்புலம் எல்லாம் மசங்கித் தெரிய
வண்டுகள் ஒலிக்கும் நிசப்தம் கிழித்து.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:29 am

401

தலையலங் கானத்துச் செருவில் பொருத
நடந்த படையில் ஒருத்தன் வழியில்
வயிற்றுப் போக்கால் இறந்து பட்டான்.
விழுப்புண் இன்றித் துஞ்சிய சங்கதி
வெண்புறாக் காலில் விரைந்து பறந்தது.
குப்பைக் கோழிகள் மேயும் முன்றிலில்
அரவம் கேட்டு வெளியே வந்தவள்
ஈன்று அளித்த கடமை முடித்தவள்.
யவனக் கப்பலில் முத்தும் மிளகும்
ஏற்றி ஏற்றிக் களைத்துத் திரும்பித்
தகப்பன் உள்ளே உறங்கிக் கிடந்தான்.
ஆறுதல் சொல்லிக் கூட்டம் கலைந்தது.
அழுது முடித்துப் பெற்றவள் ஓய்ந்தாள்.
பார்ப்பார் போயினர் அரிசி பெற்று.
பல்கிப் பெருகின குப்பைக் கோழிகள்.
அரபிக் கப்பலில் குதிரை வந்ததால்
அடுத்த போருக்கு ஆள்சேர்த் தார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:29 am

படம்

நிறைய உடுத்திக் கொண்டு
கல்யாணக் களைப்போடு
பத்துப் பேர். யார் மடியிலோ
அப்பா அழத் தொடங்கி.
வெள்ளை யடிக்கக் கழற்றிக்
கையில் வைத்துப் பார்த்தபோது
ஞாபகம் இல்லையாம் எதற்கென்று.
எடுத்துக் கொடுத்த ராமாச்சாரி
ஞானக் கிறுக்காய்த்
துணி துறந்து திரிந்ததும்,
அவன் வண்டியில்
கட்டிலும் சருவமும்
அக்காள் திரட்சிக்குச்
சீர் ஏற்றிப் போனதும்,
தள்ளி வைத்தபோது
அழைத்து வந்து
படைக்கும் வெய்யிலில்
இறங்கிய தளர்ச்சியும்,
முறைக் காய்ச்சலில்
அடங்கியவளுக்கு
மருந்து வாங்கித்
தெருமுனையில் வரும்போதே
குரல் எழுந்த சோகங்களும்
வெற்று மார்போடும்
வெறித்த கண்களோடும்
கொண்டு வைக்க வேண்டிக்
கூட்டமாய்ப் போனதும்
நினைவிருக்காம்.
யார் மடியில் அன்றைக்கு - எதற்கு?
இங்கே பக்கத்தில்
கண்கலங்கும் கிழவருக்கு
நினைவில்லையாம் அது ஒன்றும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 9:30 am

கி.பி 2099 மற்றும் ஒரு வீதி

பழைய உலோகம் மலிவு விலையில்
இவ்விடம் கிடைக்கும். இறந்து போன
விமான றக்கையில் பிய்த்து எடுத்தது.
கம்ப்யூட்டர் நாடாவையும் சானிட்டரி நாப்கினையும்
சேர்த்து வாராதே. குப்பை எல்லாம்
தொட்டியில் சேர். சுத்தம் சுகந்தரும்.
அவர்கள் எதிரகத்துப் பேராசிரியரை
நேற்றே அழைத்துப் போனார்கள்.
இவரா? வம்புக்கே போகமாட்டார்.
அரசாங்க ஊர்தி. வரிசையில் வரணும்.
அடையாள அட்டை கையில் உள்ளதா?
காடாத் துணி வழங்கப் படும்.
பிள்ளைகளே! கவச வண்டிகள் போனபிறகு
சாலையைக் கடக்கலாம். பிராணவாயுக்
கவசம் பத்திரம். போய் வாருங்கள்.
நமது வீரர்கள் இன்றும் வென்றனர்.
தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழியுங்கள்.
அடுத்த ஒலிபரப்பு நாளைக்காலை ஐந்துக்கு.
மின்சாரம் இல்லை. செய்தித்தாள் விசிறத்தா.
கரப்பு வராது ƒலதாரை அடைத்துக்
கவனமாக வந்துபடு. உறை இருக்கா?

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக