புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடோத்கஜன்! Poll_c10கடோத்கஜன்! Poll_m10கடோத்கஜன்! Poll_c10 
70 Posts - 53%
heezulia
கடோத்கஜன்! Poll_c10கடோத்கஜன்! Poll_m10கடோத்கஜன்! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கடோத்கஜன்! Poll_c10கடோத்கஜன்! Poll_m10கடோத்கஜன்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கடோத்கஜன்! Poll_c10கடோத்கஜன்! Poll_m10கடோத்கஜன்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கடோத்கஜன்! Poll_c10கடோத்கஜன்! Poll_m10கடோத்கஜன்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கடோத்கஜன்! Poll_c10கடோத்கஜன்! Poll_m10கடோத்கஜன்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடோத்கஜன்! Poll_c10கடோத்கஜன்! Poll_m10கடோத்கஜன்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடோத்கஜன்! Poll_c10கடோத்கஜன்! Poll_m10கடோத்கஜன்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடோத்கஜன்! Poll_c10கடோத்கஜன்! Poll_m10கடோத்கஜன்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கடோத்கஜன்! Poll_c10கடோத்கஜன்! Poll_m10கடோத்கஜன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடோத்கஜன்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Wed Aug 31, 2011 3:37 pm

இது ஒரு பழைய செய்திதான், ஆனால் நான் இதனை தற்போதுதான் படித்தேன்.
"Empty Quarter" எனப்படும் தென் குழக்கு அரேபியன் பாலைவனத்தில் தொல்பொருள் வல்லுனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ராட்சஷ எழும்பு கூடு பற்றித்தான் இந்த பதிவு. இந்த செய்தி 2004ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

Aramco Exploration என்னும் குழுவினால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரானில் இறைதூதர்கள் அவதரிப்பு பற்றிய குறிப்பில் இறைதூதர்கள் நம்மைவிட பல மடங்கு அளவு, உயரம், ஆற்றல் கொண்டவர்களாக இருப்பர், மேலும் ஒரு மரத்தை கூட தனியாளாய் பிடிங்கிவிடக் கூடிய அளவு வலிமை கொண்டவர்களாய் இருப்பர் என்று குறிப்பிடபட்டுள்ளதாம். அதனால் அரேபியர்கள் இந்த எழும்புக் கூடுகளை இறைதூதர்களாக கருதுகின்றனராம்.

இதேபோல் இந்தியாவின் வட பகுதி தொல்லியல் ஆராய்ச்சியில் National Geographical தேடலில் இதே போன்ற ராட்சஷ எழும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாம், இன்றுவரை NG குழு தவிர்த்து யாரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லையாம், வட இந்திய இந்துக்கள் இந்த எழும்புக்கூடுகளை மகாபாரதத்தில் வரும் பீமனின் மகன் கடோத்கஜன் என்று நம்புகிறார்களாம்.

இந்த இரண்டு செய்திகளும் சித்தரிக்கப்பட்டவை என்றும் பல செய்திகள் வருகின்றன.
உண்மை என்னவென்று தெரியவில்லை. ஆனால் இந்த படங்களை பார்க்க பிரமிப்பாக உள்ளது.

கடோத்கஜன்! Giant

கடோத்கஜன்! Giant-skeleton-2

கடோத்கஜன்! Giant-skeleton3

கடோத்கஜன்! Giant-skeleton4

கடோத்கஜன்! Giant-skeleton-news

கடோத்கஜன்! Epic-prank02

கடோத்கஜன்! Epic-prank03

கடோத்கஜன்! Epic-prank04

கடோத்கஜன்! Epic-prank05

கடோத்கஜன்! Epic-prank06

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 31, 2011 3:39 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பகிர்தமைக்கு நன்றி



திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Aug 31, 2011 3:40 pm

may be connective tissue disorder அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



thiva
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 31, 2011 3:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பகிர்வுக்கு நன்றி

இந்த செய்தியை நேஷனல் ஜியோகிராபிக் மறுத்துள்ளது ....
பார்க்க...

http://news.nationalgeographic.com/news/2007/12/071214-giant-skeleton_2.html

http://news.nationalgeographic.com/news/2007/12/photogalleries/giantskeleton-pictures/index.html





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 31, 2011 3:42 pm

இவ்ளோ பெரிய எலும்பு கூடுகளை நான் இப்போது தான் பார்க்கிறேன்...அறிய செய்தி பகிர்ந்ததற்க்கு நன்றி சாவித்ரி...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Aug 31, 2011 3:46 pm

அச்சரியமான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 31, 2011 6:21 pm

இன்றைய நவீன உலகில் இதுபோன்ற வதந்திகள் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடுகிறது. சுதானந்தன் தந்துள்ள தளங்களில் இதற்கான விளக்கம் உள்ளது.

பகிர்வுக்கு நன்றி சகோதரி.



கடோத்கஜன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 31, 2011 6:29 pm

நன்றி !

தங்களுடைய ஒவ்வொரு பதிவும் வெவ்வேறு கருத்துகளை
கொண்ட கலவையாய் வருகிறது. நல்லது !



கடோத்கஜன்! Thank-you015
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 31, 2011 6:39 pm

கடோத்கஜன்! 12579210

கடோத்கஜன் பீமனுக்கும், இடும்பி எனும் ராட்சசிக்கும் பிறந்தவன். தன் தந்தையைப்போல் பலமும், தாயைப்போல் மாய வித்தைகளில் தேர்ச்சியும் பெற்று இருந்தான். மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்குப் பேருதவி புரிந்த அவனின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது. பாண்டவர்கள் தங்கியிருந்த அரக்கு மாளிகை துரியோதனால் தீக்கிரையாக்கப்பட்டது. தெய்வாதீனமாகப் பாண்டவர்கள் தீயில் சிக்காமல் தப்பியோடி விட்டனர்.

கங்கை நதியைக் கடந்து தென் திசையில் வெகுதூரம் நடந்து சென்ற அவர்கள், இறுதியில் களைத்துப்போய் ஓர் ஆலமரத்தினடியில் படுத்து உறங்கி விட்டனர். பீமன் மட்டும் உறங்காமல் காவல் காத்துக் கொண்டிருந்தான். அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பிரதேசத்தில் இடும்பன் என்ற ஒரு பயங்கர ராட்சசன் வசித்து வந்தான். அவன் கண்களில் மரத்தடியில் இருந்த பாண்டவர்கள் புலப்பட்டனர். உடனே அவன் தன் தங்கையான இடும்பியை அழைத்து, பாண்டவர்களைக் காட்டி “நீ அவர்களைக் கொன்று சமைத்து வை!” எனக் கூறி விட்டுச் சென்றான்.

இடும்பி உடனே அவர்களை அணுகினாள். காவல் காத்துக் கொண்டிருந்த பீமனைக் கண்டதும், அவள் தன் மனத்தைப் பறிகொடுத்தாள். உடனே தன் ராட்சச உருவத்தை மாற்றிக் கொண்டு, ஒரு அழகான மானிடப் பெண் போல் உருவமெடுத்து பீமனை நெருங்கினாள். “ஐயா! நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? இங்கு உறங்குபவர்கள் உங்களுடைய சகோதரர்களா?” என்று விசாரித்த இடும்பி, தொடர்ந்து, “உங்களைப் பார்த்தவுடன் என் மனதில் உங்களையே கணவராக அடைய வேண்டும் என்று ஆசை தோன்றி விட்டது. உண்மையில், உங்களைக் கொல்வதற்காக என் அண்ணன் இடும்பன் இங்கு என்னை அனுப்பினான். ஆனால், உங்கள் அழகில் மயங்கி அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்” என்றாள்.

அதற்குள் தொலைவிலிருந்து இடும்பியின் செயலை கவனித்த இடும்பன், அவள் மீது கோபம் கொண்டு கத்தினான். பிறகு பீமன் மீது பாய்ந்து அவனைத் தாக்க, பீமன் இடும்பனை அப்படியே தூக்கிக் கொண்டு தொலைதூரம் சென்று கீழே போட்டான். பிறகு இருவருக்கும் இடையே யுத்தம் மூண்டது. பீமன் இடும்பனை கால்களினால் மிதித்துத் துவைத்துக் கொன்று விட்டான்.

பீமனிடம் மனத்தைப் பறிகொடுத்த இடும்பி, குந்தியிடமும் யுதிஷ்டிரரிடமும் தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டாள். குந்தியும் அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். தாய் சொல்லைத் தட்டாத பீமன் இடும்பியை மணம்புரிய சம்மதித்தான். ஆனால் தங்களுக்கு ஒரு பிள்ளை பிறக்கும் வரை மட்டுமே இடும்பியோடு சேர்ந்து வாழ்வேன் என்று ஒரு நிபந்தனை போட்டான். பிறகு தாயின் ஆசியுடன் பீமன் இடும்பியை மணம் புரிந்தான். இடும்பி பீமனை அழைத்துக் கொண்டு ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்றாள்.

காலக்கிரமத்தில் இடும்பிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்தவுடனேயே பெரிதாகி விட்டது. அவ்வாறு விரைவாக வளர்ந்த அந்த இளைஞனின் தலையில் முடியே இல்லை. அதனால் அவனுக்குக் கடோத்கஜன் (தலையில் முடியற்றவன்) என்று பெயரிட்டனர். தன் பெற்றோரை வணங்கிய கடோத்கஜன் “நான் தனியாக வசிக்க விரும்புகிறேன். தேவைப்பட்டால் என்னை மனதில் நினைத்தால் போதும்! நான் எங்கிருந்தாலும் உடனே உங்களிடம் வந்து விடுவேன்” என்று சொல்லிவிட்டுப் பிரிந்தான்.

பிறகு அவன் வடக்குத் திசையில் சென்று, அங்கிருந்த ராட்சசர்களுக்குத் தலைவன் ஆனான். காலப்போக்கில் கடோத்கஜனுக்கு மேகவர்ணன், அஞ்சன்பர்வன் என்ற ஆண்பிள்ளைகள் பிறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மகாபாரத யுத்தம் மூண்டபோது, பீமன் தன் மகனை மனதில் நினைக்க, உடனே கடோத்கஜன் அங்கு பறந்து வந்து விட்டான். கௌரவர்களைச் சேர்ந்த பகதத்தன் ஒரு பெரிய யானைப்படைக்குத் தலைமை தாங்கி பாண்டவர்களின் படைக்கு பயங்கர சேதத்தை உண்டாக்கினான்.

ஓர் உயரமான யானையின் மீது அமர்ந்து அவன் நடத்திய பயங்கரத் தாக்குதலில், பாண்டவர்களின் படை வீரர்கள் சிதறியோடத் தொடங்கினர். அப்போது போர்க்களத்தில் நுழைந்த கடோத்கஜன் பகதத்தனை தைரியமாக எதிர்த்துப் போராடினான். இறுதியில் பகதத்தன் வீழ்ந்தான். அர்ஜுனனுடைய பிள்ளை ஐராவதன் போர்க்களத்தில் காயமுற்று மயக்கமானான். அப்போது அர்ஷபிருங்கன் எனும் பகைவன் அவன் மீது வாளைப் பாய்ச்சிக் கொன்றான். அதைக் கண்டுக் கொதித்தெழுந்த கடோத்கஜன் பூதாகாரமாகத் தன் உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டு கௌரவர்கள் மீது சீறிப் பாய்ந்தான்.

எதிர்ப்பட்ட துரியோதனனையே கடோத்கஜன் தாக்கத் தொடங்கினான்.இருவருக்குமிடையே கதை யுத்தம் தொடங்கியது. துரியோதனனை தனது சக்திவாய்ந்த கதையினால் கடோத்கஜன் அடிக்க, துரியோதனுடைய நண்பனான வங்க மன்னன்குறுக்கே வர, துரியோதனன் தப்பினான். கடோத்கஜனை சமாளிக்க முடியாமல்துரியோதனன் திணறுவதைக் கண்ட பீஷ்மர் உடனே சோமதத்தர், சைந்தவர், துரோணர்ஆகியோரை அங்கு அனுப்பினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து கடோத்கஜனைசூழ்ந்து கொண்டனர்.

தன் மகனைப் பல பகைவர்கள் சூழ்ந்து கொண்டதைக் கண்ட பீமன் உடனே உதவிக்கு விரைந்தான். பீமனும், கடோத்கஜனும் அனைவரின் ஒருங்கிணைந்தத் தாக்குதலைத் தவிடு பொடியாக்கினர். துரியோதனன் கடோத்கஜனைத் தவிர்த்து பீமனை தாக்கினான். இருவருக்குமிடையே பயங்கர யுத்தம் மூண்டது. அதில் பீமன் காயமடைய, அவனுக்கு உதவி செய்ய அபிமன்யு அங்கே வர, மீண்டும் போர் தொடங்கியது. ஆனால் கடோத்கஜன் தன்னுடைய மாய வித்தைகளினால், கௌரவர்களைப் பின் வாங்கச் செய்தான்.

அதற்குள் பீஷ்மரின் ஆலோசனைப் படி, காயமுற்று வீழ்ந்த பகதத்தன் சுப்ரதீக் எனும் தனது யானையின் மீது அமர்ந்துப் போர்க்களத்தில் புகுந்து, கடோத்கஜனை எதிர் கொண்டான். பகதத்தனாலும் அவனை சமாளிக்க இயலவில்லை. ஆகையால் பீஷ்மர் தானே கடோத்கஜனுடன் போரிட முன் வந்தார். இதைக் கண்ட அர்ஜுனன் சிகண்டியுடன் அந்த இடத்திற்கு விரைந்தான். அர்ஜுனனைத் தாக்க முயன்ற பீஷ்மர் அவனருகில் சிகண்டி இருப்பதால் தனது ஆயுதங்களைப் பிரயோகிக்க விரும்பாமல் குழம்பினார். உடனே, கர்ணனை அந்த இடத்திற்கு அனுப்பினார். ஆனால், கர்ணனால் கடோத்கஜனின் சாகசங்களுக்கு ஈடு செய்ய முடியவில்லை. கர்ணனிடம் இந்திரனுடைய சக்தி வாய்ந்த அம்புகள் இருந்தன.

அவற்றை அர்ஜுனன் மீது மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று கர்ணன் முன்னமே தீர்மானித்திருந்தான். ஆனால் கடோத்கஜனை உயிரோடு விட்டால், அவன் கௌரவ சேனையையே அழித்து விடுவான் என்று தோன்றியது. அதனால் வேறு வழியின்றி, கர்ணன் இந்திரனுடைய ஆயுதத்தை கடோத்கஜன் மீது ஏவ, கடோத்கஜன் உயிர் நீத்தான். இவ்வாறு, கடோத்கஜன் தன் முடிவை சந்தித்தான்.

சந்தமாமா.காம்



கடோத்கஜன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Wed Aug 31, 2011 6:42 pm

சுதானந்தன் கூறிய லிங்கை நான் தற்போதுதான் பார்த்தேன். தவறான செய்தியை பதிந்தமைக்கு வருந்துகிறேன், மன்னிக்கவும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக