புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
87 Posts - 64%
heezulia
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
1 Post - 1%
prajai
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
423 Posts - 76%
heezulia
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
8 Posts - 1%
prajai
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
3 Posts - 1%
sram_1977
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_m10மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ராஸ் டே - ஆகஸ்ட் 22


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 11:21 am

மெட்ராஸ், சென்னை இந்த இரு பெயர்களைக் கேட்டதும் இனம்புரியாத ஒருவித
ஈர்ப்பு மனதில் ஒட்டிக் கொள்கிறது. பெரும் நகருக்கே உரிய பரபரப்பு, மக்கள்
அடர்த்தி, வாகனங்களின் இரைச்சல், பலதரப்பட்ட கலாசாரம் என்ற வழக்கமான
அடையாளங்களையும் தாண்டி, சென்னை ஏதோ ஒரு விதத்தில் நம்மைப் பாதிக்காமல்
இல்லை.

ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி,
இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை
சென்னையின் பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் ரசிக்கத்தக்கவை;
வியப்புக்குரியவை.
பொதுவாக ஒரு விஷயத்தை அல்லது வரலாற்றை விவரிப்பது
எனில், குறிப்பிட்ட செயலுக்கு முன், குறிப்பிட்ட செயலுக்குப் பின் எனப்
பிரிப்பது வழக்கம். இவ்வகையில் சென்னையின் வரலாறு ஆங்கிலேயரின் வருகைக்கு
முன், வருகைக்குப் பின் என இருவகையாகப் பார்க்கப்படுகிறது.

ஆங்கிலேயரின்
வருகைக்கு முன், ஆங்காங்கு இருந்த குடியிருப்புகளும், மன்னர்களின்
ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுமான சம்பவங்களுமே வரலாற்றில்
இடம்பெறுகின்றன. அதுவும் அதிக அளவில் இல்லை. காரணம் 1639ம் ஆண்டுக்கு
முந்தைய வரலாற்றுக்கு போதிய ஆதாரங்களும், விவரங்களும் இல்லை. கிடைக்கும்
ஒரு சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், கர்ணபரம்பரைக் கதைகளை
வைத்து ஒருவாறு யூகிக்க முடிகிறது.
சென்னை ஒரு பெருநகராக வளர்ச்சி
பெற்றது, ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்தான்.
ஆகவே, சென்னையின் வரலாற்றில் ஆங்கிலேயேர்கள் தவிர்க்க இயலாத
இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்வதானால், சென்னையில் ஆங்கிலேயர்கள் என்பதே
சென்னையின் வரலாறாகவும் ஆகி விட்டது.

சில உணர்வுப்பூர்மான
நிகழ்வுகள், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி,
அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி சத்தியாக்கிரக ஒலியை
எழுப்பிய இடம், முதன்முதலில் மதுவிலக்கு அமலாக்கப்பட்ட இடம் என சரித்திரப்
புகழ் வாய்ந்த சம்பவங்களும், நிகழ்வுகளும் சென்னையில் நடந்தேறி
இருக்கின்றன.
மும்பையும், கல்கத்தாவும் ராஜதானி நகரமாக மாறுவதற்கு
முன்னரே, சென்னை இந்தியத்துணைக்கண்டத்தின் ராஜதானி நகரமாக
உருவெடுத்திருக்கிறது. இன்னும் இன்னும் ஏராளமான சிறப்புகளைத் தன்னகத்தே
கொண்டுள்ள சென்னை கொண்டாடப்பட வேண்டிய நகரம்.

எனவேதான்,
ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப
நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆக.,22ம் தேதியை சென்னை தினமாக அறிவித்து,
அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
1639 ஜூலை 22 என்று ஒருசாரர்
வாதிட்டாலும், ஆக., 22ம்தேதிதான் பதிவு செய்யப்பட்டது என சில ஆவணங்கள்
மூலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்னும் வேறு ஆதாரங்களும்,
சான்றுகளும் கிடைக்கும் வரை ஆக., 22 ம் தேதிதான் சென்னை தினமாகக்
கொண்டாடப்படும்.

பல்வேறு தரப்பினரும் தத்தமது விருப்பப்படி
குழுவாகவோ, தனியாகவோ சென்னை தின (மெட்ராஸ் டே) கொண்டாட்டத்தில்
பங்கேற்கின்றனர். பிறரின் கொண்டாட்டங்களுக்கு தங்கள் மகிழ்ச்சியைத்
தெரிவிக்கின்றனர்; நாமும் பங்கேற்போம்.
சென்னை தினக் கொண்டாட்டத்தில்
பங்கேற்க நாம் சென்னைவாசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு
பெருநகரத்தின் பெருமிதம் மிக்க வரலாற்றைப் பகிர்ந்து கொள்வோம். வாருங்கள்
கொண்டாடுவோம் சென்னையை; நம் பெருமையை.

மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110816152949



மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110816173001

மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110816173058


மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110816173155

மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110817195255

சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள செனட் இல்லம்.
.
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110816155154

மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110816155317

மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110816155452

மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110816173240


பாரிமுனை மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110817194501


மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110817195533

ஸ்பென்செர் ப்ளாசாவின் பழைய தோற்றம்
.
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110817195750

புனித தாமஸ் மலை

.
மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110817200046

தாஜ் ஓட்டல் பணியாளர், தன் பாரம்பரிய உடையில்..


மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110817200335

புனித தாமஸ் மலை அருகே உள்ள ஆர்மீனியன் பாலம்..


மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110817200604

புனித ஜார்ஜ் கோட்டை..


மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Madraslarge_20110817200822

புனித தாமஸ் மலையின் அருகே ஒரு மாலை நேர நிகழ்வு.

நன்றி தினமலர்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 11:23 am

நல்ல பதிவு ரேவதி இருந்தாலும் சென்னையில் எங்கள் வீடுபற்றி ஒண்ணுமே சொல்லாதது கொஞ்சம் வருத்தமே சூப்பருங்க மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 11:28 am

மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Large_65096
தமிழக அரசின் முயற்சியால் சென்னை மாநகரின் பல பாரம்பரிய
கட்டடங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. அவற்றில் தமிழ்நாடு காவல்துறை
தலைமை அலுவலகமும் ஒன்று.

தற்போது காவல்துறை தலைமை அலுவலகம் மின்
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்கின்றது. புதிய கட்டடமும்
பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பழைய கட்டடத்தின் பாணியிலேயே
கட்டப்பட்டுள்ளது. பழமையையும் பாரம்பரியத்தை பேணிகாத்து வருகிறது சென்னை
மாநகரம் என்பதை இது நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடற்கரை
சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தை மேம்படுத்தும் வகையில் அதை போலவே புதிதாக
இரண்டாவது நேப்பியர் பாலமும் அமைக்கப்பட்டது. இரண்டும் ஒரே மாதிரி தோற்றம்
அளிப்பது சென்னை மாநகர மக்களின் மனதை கவர்ந்துள்ளது.

சென்னையில்
உள்ள பாரம்பரியம் மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வெளிப்புறம்
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போர் மனதை கொள்ளை கொள்கிறது.
சென்னை கன்னிமாரா நூலகத்தின் பழைமையான கட்டடமும், 2007 ஆம் ஆண்டு
பழையவடிவமைப்பு மாறாமல் புதிப்பிக்கப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாவே
சென்னையில் உள்ள மே தின பூங்கா, மை லேடி பூங்கா, பனகல் பார்க், டாக்டர்
நடேசன் பூங்கா போன்ற அனைத்து பூங்காக்களும் புதுப்பிக்கப்பட்டு சென்னையை
பசுமையாக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

சென்னை மெரினா
கடற்கரையை ஒட்டியுள்ள நடைபாதை, புல்வெளி போன்ற பகுதிகள்
அழகுபடுத்தப்பட்டுள்ளதும் காண்போரை மகிழ்விக்கின்றன. இதைபோன்ற சென்னை
மாநகரத்தின் பழைமையான பாரம்பரியமிக்க நினைவு சின்னங்கள், கட்டடங்கள்,
சிலைகள் போன்றவற்றை தொடர்ந்து பராமரிக்கவும், பாதுகாக்கவும்,
பேணிக்காக்கவும் சென்னை பாரம்பரிய சின்னங்களுக்கான ஒரு பாதுகாப்பு சட்டத்தை
இயற்ற வேண்டும் என்பது சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கை.



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 20, 2011 11:28 am

பழைய சிங்காரசென்னையை அறியதந்தமைக்கு நன்றி ரேவதி..!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 11:29 am

balakarthik wrote:நல்ல பதிவு ரேவதி இருந்தாலும் சென்னையில் எங்கள் வீடுபற்றி ஒண்ணுமே சொல்லாதது கொஞ்சம் வருத்தமே மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  224747944 மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  677196

உங்க வீட்டை போட்டோ எடுக்க முடியவில்லை அண்ணா.......நான் சென்று அவர்களிடம் சண்டை போட போகிறேன்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 11:31 am

அருண் wrote:பழைய சிங்காரசென்னையை அறியதந்தமைக்கு நன்றி ரேவதி..!

அதுவும் உண்மைதான் அருண் இப்பொழுது எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயிலுக்காக அணைத்தயும் நோண்டி அசிங்கபடுத்திவிட்டார்கள் இன்று எங்கள் பச்சையப்பன் கல்லூரியில் இதர்க்காக உண்ணாவிரதம் வேறு நடக்கிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 11:33 am

1640 ல் “தொழிற்சாலை’ என்று அழைக்கப்பட்ட தங்கும் வசதி கொண்ட கிடங்கு ஒன்றை
ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதுதான் பின்னாளில் புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
இக்
கோட்டையின் வடக்குப் பகுதியில் ஓர் இந்திய நகரம் உருவாக்கப்பட்டது.
கருப்பு நகரம் (முத்தியால் பேட்டையும் பெத்தநாயக்கன் பேட்டையும் இணைந்தது)
என்று அழைக்கப்பட்ட இந்நகரில்தான் ஆரம்ப காலத்தில் கிழக்கிந்திய
கம்பெனியுடன் வணிகம் செய்த வணிகர்கள் வாழ்ந்து வந்தனர்.
பிரிட்டிஷாருக்கும்
பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த பல போர்களில் இந்தப் பகுதி முற்றிலுமாக
அழிக்கப்பட்டது. இந்த நகரம்தான் பின்னாளில் ஜார்ஜ் டவுன் என்று பெயர்
பெற்றது. இந்தியாவுக்கு வந்த மன்னர் ஜார்ஜ் நினைவால் இந்தப் பெயர்
வைக்கப்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் வாழ்வதற்கு
சவுகர்யமற்றது. இப்பகுதியில் கடல் சீற்றம் மிகுந்து காணப்படும். இங்கு
எங்கு தோண்டினாலும் உப்பு நீர்தான் கிடைக்கும். அன்று கோட்டைக்குள்ளும்
வெள்ளை டவுனிலும் இருந்த ஆங்கிலேயர்களுக்கு பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து
மாட்டு வண்டிகளிலும் தலை சுமையாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
1722
ல் கேப்டன் பேகர் என்பவர் வகுத்துக் கொடுத்த “ஏழு கிணறு தண்ணீர்
திட்டத்’<<<<<<தின்படி கோட்டையிலிருந்து இரண்டு மைல்
தூரத்திலும் கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரத்திலும்
பெத்தநாயக்கன்பேட்டைக்கு வடக்கில் நல்ல தண்ணீருக்காக 7 கிணறுகள்
வெட்டப்பட்டன. ஏழு கிணறுகள் என்று அழைக்கப்பட்டாலும் அங்கு பத்து கிணறுகள்
வெட்டப்பட்டன. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்தக் கிணறுகள் நீர் தந்து
கொண்டு இருந்தன.
ஜார்ஜ் டவுனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி, 1700 ல்
ஆங்கிலேய மேலாண்மையால் சில பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏழு
ஆண்டுகள் நடந்த முடிந்த பணியில் 17 அடிகள் அகலத்துக்கு சுற்றிலும்
பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டது. அதன் மேல்பகுதியில் பீரங்கிகள் வைக்க
சுவர் ஏதுவானதாய் இருந்தது. இதற்கு உண்டான செலவை பொதுமக்களும் ஏற்றுக்
கொள்ள வேண்டும் என விரும்பியது அரசாங்கம்.
அதற்காக கவர்னர் பிட் அனைத்து ஜாதியினரையும் அழைத்துப் பேசி ஜாதி அடிப்படையில் எவ்வளவு கொடுக்க வேண்டுமென பட்டியலிடப்பட்டது.
மைசூர்
ஹைதர் அலி, 18 ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் வலிமை மிகுந்த அரசனாக
இருந்த நிலையில், அவ்வரசரின் படை சாந்தோமையும், மதராசபட்டினத்துச்
சுற்றுப்புற இடங்களையும் 1767 ல் தாக்கியது. அத்துடன் அப்படையினர்
அங்கிருந்த இடங்களையும் கோயில்களையும் சூறையாடியதைக் கண்டு ஜார்ஜ் டவுன்
மக்கள் பீதியடைந்தனர். இதனால், வட பகுதியையும், மேற்குப் பகுதியையும்
பாதுகாக்க மூன்றரை மைல் தூரத்துக்கு பாதுகாப்புச் சுவர்கள் கட்டப்பட
வேண்டியிருந்தது.
எனவே, வெளியார் தாக்குதலின்றி இவ்விடத்தைக் காக்க
வேண்டிய பாதுகாப்புக்காக கஜானாவிலிருந்து வேண்டிய முன்பணம் தரவும் அரசு
முடிவு செய்தது. அந்த முன்பணத்தை வரி மூலம் வசூலிப்பதற்காக ஹென்றி புரூக்
என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டு, அவர் கோடை வரி வசூலிக்கும் கலெக்டர்
என்று அறியப்பட்டார்.
இதன்படி சுவர் கட்டுவதற்கான செலவும், பாதுகாப்புச்
செலவும் 12 வருடங்களில் திரும்பிப் பெற முடியும் எனவும் கூறப்பட்டது.
(இப்படி சுற்றி அமைக்கப்பட்ட சுவரின் உள் பகுதிதான் இன்றும் வால்டேக்ஸ்
ரோடு என்று அழைக்கப்படுகிறது)

இத்திட்டத்தின்படி , பீரங்கிகள் வைக்க
ஏதுவாக கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. வடபுறச்சுவர் சற்றே வளைந்து,
தண்டையார்பேட்டையை நோக்கியிருந்தது. சுற்றுச்சுவர், கோக்ரேன் கால்வாயான
வடக்கு ஆற்றை ஒட்டியிருந்தது. சுவர்களின் வெளிப்புறங்கள், பீரங்கி வைத்துச்
சுட ஏதுவாகக் கட்டப்பட்டிருந்தன. அவை நல்ல அகலமாக, நடப்பதற்கு ஏற்றவையாக
இருந்ததால் அவை “எஸ்பிளனேடுகள்’ என்று அழைக்கப்பட்டன.
தென்பகுதி 19 -ம்
நூற்றாண்டின் மத்தியில், “பீப்பிள்ஸ் பார்க்’ ஆக்கப்பட்டது. அந்த
சுவர்களில் பல தலைவாயில்கள் இருந்தன. அப்போது “எலிபென்ட் கேட்’ என்று
அழைக்கப்பட்ட தலைவாயில் இருந்த இடம் இப்போது வாயிலில்லாது போனாலும்
அப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.
ஆனால், முன்னர் திட்டமிட்டபடி ஆங்கிலேய
மேலாண்மையால் வரி வசூலிக்க முடியவில்லை. அதற்குக் காரணம்
வங்காளத்திலிருந்து வந்த கடிதமொன்றுதான் என்றும், கோட்டைக்கு வரி
வசூலிக்கும் அதிகாரம் கம்பெனிக்குக் கிடையாதென்றும் அதில்
தெரிவிக்கப்பட்டிருந்ததாக அப்போதைய கவர்னர் ட்யூ ப்ரே
தெரிவித்திருக்கிறார். இதனால், இங்கிலாந்தின் அனுமதியின்றி வரி வசூலிக்க
முடியாததாயிற்று.

1640 ல் இந்தியாவில் தங்கிவிட்ட
போர்த்துகீசியர்களால் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தேவாலயமான “அஷம்சன் ஆப்
அவர் லேடி சர்ச்’ மின்ட் அருகில் கட்டப்பட்டது. இச் சாலை போர்த்துகீசிய
சாலை என்றே அழைக்கப்படுகிறது.
கேசவ பெருமாள் கோயில், மல்லீசுவரர்
கோயில், கந்தசாமி கோயில் என ஜார்ஜ் டவுனின் ஒவ்வொரு வீதியும் ஒரு
கோயிலையும் அதன்பின்னே ஒரு கதையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆர்மேனியர்கள்
இங்கு தங்கி வணிகம் செய்ததன் அடையாளமாக ஆர்மேரியன் வீதி என்றும் அவர்களது
தேவாலயம் ஆர்மேனியன் சர்ச் என்றும் அழைக்கப்படுகிறது.
1862 ல் ராணி விக்டோரியா பிறப்பித்த கடித உரிமத்தின் மூலம் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் தொடங்கப்பட்டது.
1788 ல் இந்தியாவுக்கு வந்த வணிகர் தாமஸ் பாரியின் நினைவாக பாரி முனை என்று பெயர் வைக்கப்பட்டது.
“மாமரங்கள்,
தென்னை மரங்கள், கொய்யா மரங்கள் என பல்வேறு மரங்கள் நடப்பட்டிருந்தன...
அங்கு யாரும் சுதந்திரமாக நடக்கவும் மலிவான விலையில் பழங்களை வாங்கவும்
முடிந்தது ...’ என ஜார்ஜ் டவுனின் அகலமான வீதிகளையும் கணக்கற்ற
தோட்டங்களையும் பற்றி 1739 ல் ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர்
விவரித்திருக்கிறார்.



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 20, 2011 11:36 am

அருமையான புகைப்படங்கள் ரேவதி.பகிறிவுக்கு நன்றி



மெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Uமெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Dமெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Aமெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Yமெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Aமெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Sமெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Uமெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Dமெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  Hமெட்ராஸ் டே  - ஆகஸ்ட் 22  A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Aug 20, 2011 11:45 am

அருமையிருக்கு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக