புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
yuktha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2011

Postyuktha Thu Aug 18, 2011 5:50 pm

இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...

இன்றைக்கு மட்டுமல்ல. என்றைக்கும் நம் வாழ்வை வளமாக்கக் கூடிய ஒளவை அருளிய அழியாச் செல்வம்.
மூன்றாவது அவ்வையார், (அதென்ன 3..ம் ஒளவையார் என கேட்கிறீர்களா ? அதை முடிவில் சொல்கிறேன் ) ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். மூன்றாம் அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்தவர். குழந்தைகளுக்காக நீதி நூல்களை எழுதியவர். சிறுவயதில் மனப்பாடம் செய்து கொண்டு, வயதான பின்பு பொருளைத் தெளிவாக உணரும் நிலையில் அமைந்தவை இவர் பாடல்கள்.
. இதில் 91 அடிப்பாக்கள் உள்ளன. அனைத்திற்கும் நமக்கு விளக்கம் தெரியுமா என நம்மையே சோதித்து பார்ப்போமா?


கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது

ககர வருக்கம் ( என்றால் சிங்காரவேலன் பட பாடல் போல் க, கா, கி, கீ, கு கூ, கெ, கே,கை.....)

கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை

கற்பு எனப் படுவது சொன்ன சொல் மாறாமை என்பதுதான் இதன் பொருள்.
இறுதிவரை உனக்கு நான் எனக்கு நீ ....என வாக்க்களித்துவிட்டுப்
பின் மாறுதல் கூடாது என்பது பொருள் என்று தான் நான் நினைக்கிறேன்...

சரி இப்போ ஒளவையார்கள் களுக்கு வருவோம்

.அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அவ்வை என்றால் அம்மை என்று பொருள். அம்மை என்றதும் ஒரு வகையான நோயின் பெயர் என்று கூட, இக்காலத்தில் உள்ள உங்களைப் போன்ற குழந்தைகளில் சிலர் நினைத்துக் கொள்வார்கள். அம்மை என்றால் அம்மா, அன்னை என்று பொருள். ஆனால் அவ்வை என்ற சொல் கிழவி என்ற பொருளில் தான் இங்கு வழங்குகிறது. அது தவறு.

திருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சில பகுதிகளில் அவ்வை என்ற தெய்வம் கூட இருக்கிறது. இது ஒரு சிறு தெய்வம்.

ஒளவ்வை என்று எழுதுவதும் தவறு என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். “ஒள’ என்ற எழுத்தில் தொடங்கி எழுதுவதற்காக ஒரு சொல் வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒளவ்வை என எழுதப்படுகிறது. “அவ்வை’ என்று எழுதுவதே சரி.பல காலகட்டங்களில் இப்படி வாழ்ந்த அவ்வையார்களில் நான்கு அவ்வையார்களைப் பற்றி ஓரளவிற்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால் அவை கூட சிறிய அளவில்தான் இருக்கின்றன. அவர்கள் பின் வருமாறு :
1. சங்க கால அவ்வை
2. அங்கவை – சங்கவை அவ்வை
3. சோழர் கால அவ்வை
4. பிற்கால அவ்வை


1. சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடி இருக்கிறார். இக்காலம் கி.மு.300 முதல் கி.பி.250 வரையில் உள்ளது. சேரன் மாரி வெண்கோ, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் பெரு நற்கிள்ளி ஆகிய மூவேந்தர்கள் பற்றியும் அதியமான், எழினி, தொண்டைமான், பாரி ஆகிய குறுநில மன்னர்கள் பற்றியும் இவர் பாடலில் குறிப்புகள் உள்ளன. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டது இவர்தான்.

“அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்’
என்று திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான். இவர் நெஞ்சுரம் கொண்டவர், மன்னர்களிடமும், மக்களிடமும் பெருமதிப்பும், அறிமுகமும் கொண்டவர் பெண்ணிய சிந்தனை உடையவர் என்று கூறலாம்.

2. அங்கவை – சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப் பற்றி ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்’ என்று பாடி இருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள் தான் ‘சிவாஜி’ எனும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பெண்கள் அசிங்கமானவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிறம் அசிங்கமானதும் இல்லை.

3. சோழர் கால அவ்வை : இவரின் காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை எழுதியவர் இவர்தான். இந்த அவ்வைகளோடு புராண கருத்துகளும், கதைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. முருகனுக்கு அறிவுரை கூறியவர்.

அற்புதங்கள் செய்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி பல கற்பனைக் கதைகள் உள்ளன. இக்கால அவ்வை எழுதிய ஒரு பாடல் உழவுத் தொழிலைப் போற்றுகிறது.
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்

4. பிற்கால அவ்வை : பல தனிப்பாடல்களை பாடிய அவ்வை இவர். இவரோடும் புராணக் கதைகள் பிணைக்கப்பட்டுள்ளன.
அவ்வையை ஒரு பக்திப் பெண் எனவும், மந்திர மாயங்கள் செய்தவர் எனவும், இந்து கடவுளர்களான சிவன், முருகன் போன்றோரிடம் அருள் பெற்றவர், அவர்களோடு வாழ்ந்தவர் எனவும் பல கற்பனைக் கதைகள் இருக்கின்றன.

அவ்வையைப் பற்றி இதைப் போன்ற கருத்துக்களை சொல்லி, திரைப்படங்களும் வந்துள்ளன. இந்த கற்பனைகளை நீங்கள் தள்ளிவிடுங்கள். ஆனால் அவ்வை என்பது அழகிய தமிழ்ச்சொல் என்பதையும், அக்காலத்தில் அறிவுடைய பெண்களை இப்படி அழைத்தனர் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். கல்வி பெற்று ஆண்களுக்கு இணையாக பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் பெண் தான் அவ்வை என்பதை உணர வேண்டும்.


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:54 pm

பதிவிற்க்கு நன்றி ! இப்பொழுது நுனிப்புல் மையமட்டும் தான் முடிந்தது , பிறகு ஒருநாள் என் சந்தேகங்களை கேட்கிறேன் ! நிறைய சந்தேகம் உள்ளது கொன்றை வேந்தனில் !



[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Aug 18, 2011 6:14 pm

நல்ல தகவல்,
நம்மில் பெரும்பாலோனோர் அறிந்த ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் அ முதல் அக் வரை தான், ஆனால் அவ்வை அனைத்து தமிழ் எழுத்துகளில் எழுதி இருக்கிறார்.

கற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் உள்ள நிலையை மட்டும் குறிப்பதில்லை. அது ஒருவரின் உறுதியை குறிக்கும் சொல்லாகத் தான் பெரும்பாலும் பயன் படுதப்படுகிறது. கண்ணகி கற்புக்கரசி என்று கூறுவது அவர் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லை (கணவனுடன் சிறந்த வாழ்ந்த பலரை நாம் கற்புக்கரசி என்று போற்றவில்லை). தன் கணவன் மேல் தவறு இல்லை என்று உணர்ந்ததால், பெரிய அரசன் என்று பாராமல் அவனை எதிர்த்து நின்று தன் பக்கத்து நியாத்தை நிரூபணம் செய்தார். அந்த உறுதி தான் அவளை கற்புக்கரசி என்று போற்றச் செய்தது.
சொன்ன சொல் தவறாத உறுதி தான் கற்பு என்று கொன்றை வேந்தனில் கூறப்படுகிறது.

பதிவுகளை தொடருங்கள் ............ [You must be registered and logged in to see this image.]



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 6:21 pm

[quote]
சதாசிவம் wrote:
சொன்ன சொல் தவறாத உறுதி தான் கற்பு என்று கொன்றை வேந்தனில் கூறப்படுகிறது.
அறிய தகவல் நன்றி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Aug 18, 2011 8:21 pm

நல்ல பதிவு
நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 18, 2011 9:46 pm

ஆண்களும் பெண்களும் சமம் என்று பதிவு சுட்டி காட்டுகிறது..!
பகிர்விற்கு நன்றி..! மகிழ்ச்சி

avatar
yuktha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2011

Postyuktha Fri Aug 19, 2011 8:35 am

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி .

avatar
yuktha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2011

Postyuktha Fri Aug 19, 2011 8:37 am

கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.
Faultfinder becomes foe to every one

கெளவை சொல்லுதல் என்றால் குறைக் கூறுதல் என அர்த்தம்.எவ்வருக்கும் ..எல்லாருக்கும். பிறரிடம் அவர்களின் குறைகளை மட்டுமே ஒருவர் கூறிக்கொண்டிருந்தால் , விரைவில் அவர் அனைவருக்கும் பகையாவார்.

ஒரு வரியில் பெரிய , அரிய கருத்தினை இட்டு எழுதிய ஒளவை பிராட்டியை என்னென்று வியப்பது !


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Aug 19, 2011 9:59 am

உண்மையான தகவல், மகிழ்ச்சி
நாம் நம்மை போற்றுபவர்களைத் தான் நண்பர்களாக கருதுகிறோம். நம்மில் உள்ள குறைகளை கூறுபவர்களை தவிர்த்து விடுகிறோம்.

நகுதல் பொருட்டுத் தான் இன்று நட்பு வளர்கிறது, மேற்சென்று இடித்து உரைக்கும் நட்பை பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை.

"க" வரிசையில் முதல் பாடல் தொடங்கி , கடைசியில் வந்து விட்டீர்கள், மற்ற எழுத்துக்களையும் (கா, கி, கீ....) பதிப்பிக்க வேண்டுகிறேன்.





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
yuktha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2011

Postyuktha Fri Aug 19, 2011 9:11 pm

அய்யம் பெருமாள் .நா wrote: பதிவிற்க்கு நன்றி ! இப்பொழுது நுனிப்புல் மையமட்டும் தான் முடிந்தது , பிறகு ஒருநாள் என் சந்தேகங்களை கேட்கிறேன் ! நிறைய சந்தேகம் உள்ளது கொன்றை வேந்தனில் !
பதிவிற்க்கு நன்றி ! எப்போது வேண்டும் என்றாலும் சந்தேகங்களை கேட்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக