புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_c10எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_m10எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_c10எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_m10எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_c10எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_m10எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_c10எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_m10எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்.....

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 9:25 am

First topic message reminder :

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்.....

முறுக்கு மீசையும் நறுக்குத் தெறித்தார்போல சிந்தனையும் கருப்புக்கோட்டும் கைத்தடியும் முண்டாசும் என்று தனக்கென ஒரு படிமத்தை உருவாக்கி தென்றல் காற்றில் உலவ விட்டு, தன் மூச்சுக்காற்றை முடித்துக்கொண்டவன் சுப்பிரமணிய பாரதி. முப்பொத்தொன்பது ஆண்டுகளே இம்மண்ணுலகில் வாழ்ந்து இன்று உலக மக்களின் மன உலகில் நிலையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மகாகவி அவன்.

பொன்னும் பொருளும் புகழும் விரும்பாத ஆசையற்ற மனத்தை வேண்டி கண்ணம்மாவைச் சரணடைந்த அம் மாகவி வாழும் காலத்தில் பொன், பொருள் புகழ் என்று எதையும் காணாமலே போனதை விதி என்பதா? சமுதாய நீதியற்ற வீணர்களின் சதி என்பதா?

பொருளாதாரத்தில் சமத்துவமும் சாதி பேதமற்ற சமூக ஒற்றுமையும் கல்வியில் மேன்மையும் பெண்கள் முன்னேற்றமும் அரசியல் விடுதலையும் ஆன்மிக வலிமையும் உடைய புதியதோர் சமுதாயம் படைக்கப் விரும்பியவன் அம் மகான். மூடப்பழக்கத்தைச் சுட்டெரிக்க சுடர்விடும் விழிகளில் தீ, வீசும் விழிப் பார்வையில் தீ, விரல் சுடும் எழுத்தில் தீ, வீறு கொண்டு பேசும் உதட்டில் தீ, உண்மை உணர்வினில் தீ, உள்ளத்தில் தீ. என்று தானே தீக்குழம்பாய் மாறினான். ஆம் பாரதீயாய் கொழுந்து விட்டு எரிந்தான். அவன் மீன்குஞ்சுகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வில்லை. தீக்குஞ்சுகளுக்குப் பாய்ச்சல் கற்றுக்கொடுத்தான் அவன் தமிழ்த்தாய் பெற்ற தன்னிகரில்லா வரம், அவன் தமிழகத்தின் தனிப் பெருமை. அவன் தமிழினத்தின் தவப்பயன்.

ஆடுவோம் பாடுவோம் என்று சுதந்திரம் வருமுன்னே துள்ளிக்குதித்த அவன் வெள்ளை உள்ளம் கண்ட நெட்டைக்கனவுகளின் நீளம் மட்டுமல்ல கல்வியில், சமத்துவத்தில் அறிவியலில், தொலைத் தொடர்பியலில் என்று அவன் கண்ட கனவுகளின் எண்ணிகையும் நீளமானதே.. அந்தக் கனவுகள் இன்று காட்சிகளாயினவா? என்று நின்று நிதானித்துச் சிந்தித்துப் பாப்பதும் சீர்தூக்க முயல்தும் ஒரு யுகக் கவிக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.

குயில் பாட்டில் தான் கண்ட கனவில்
“குயிற்பேட்டை என்றும் பிரியாமல்
காதலித்துக் கூடிக் களியுடனே வாழாமோ”

என்று பெட்டையைப் பிரியாமல் வாழும் நல்வரம் கேட்கும் அவன் குயிலுக்காகவா இதைப் பாடியிருப்பான். இல்லை என்பதை அவனே,

வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தால் கூறீரே”

என்று கூறுவதால் அறியலாம். காதலிருவர் கருத்தொருமித்து,

“வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
பாயு மொளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுக்கு,
நல்ல உயிர் நீ யெனக்கு நாடியடி நான் உனக்கு,
வேதமடி நீ எனக்கு, வித்தையடி நான் உனக்கு”

என்று ஆதரவாக இணைந்து வாழும் போக்கு இன்று தமிழினத்தில், தமிழகத்தில் ஏன் இந்தியாவில் உள்ளதா என்று கேட்டால் இல்லை என்று கட்டியம் கூற இலட்சக்கணக்கான விவாகரத்து வழக்குகள் சான்றாக உள்ளன. மேலை மோகம் பாரதியின் அக்கனவை நினைவாக்கவில்லை என்று அறுதியிட்டுக் கூற வைக்கிறது.

மேலைநாட்டு நாகரிகம் நம்மவர்களிடம் புதியதாக நுழைத்துள்ள கலாச்சார சீரழிவு, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் (Living Together). இன்று பெருநகரங்களில் பெருவழக்காகியுள்ள நாகரிங்களில் முதலிடம் பிடிப்பது இது. பாரதி பெண் தவறுவதற்கு ஆணே காரனம் என்று ஆண்களைச் சாடினான். விதவை மறுமணத்தை ஆராதித்தான். ஆனால் அவன் இருந்திருந்தால் ஒருபோதும் இதுபோன்ற முறையற்ற வாழ்நெறியை ஆதரித்து இருக்க மாட்டான்.

“பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்”

என்று கூறிய பாரதி, பாருக்கெல்லாம் வாழ்நெறி கற்றுக்கொடுத்த நம் பாரதப் பெருமை பாழ்பட்டு சீர்கெட்டு கீழிட்டுப் போயுள்ளதைக் கண்டால் பொறுப்பானா? அவன் முறட்டு மீசைதான் துடிக்காமல் இருக்குமா?

பெண்டாட்டிகளுக்கும் பெண்களுக்கும் அழுத்தமாக வக்காளத்து வாங்கியவன் முண்டாசுக் கவிஞன்..
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”

என்று ஆண் ஆதிக்கத்தை எதிர்த்து பெண்ணினத்தைத் தலைதூக்க வைத்த பெருமை அந்தப் புனிதக்கவிஞனையே சேரும். பெண்களை ஆண்களோடு போட்டிப் போடச் சொன்னான். பெண்களும் போட்டனர் போட்டி. நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும். பாரதி “ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை” என்று கூறியது பொய்த்துப் போகவில்லை. பட்டங்கள் ஆண்டனர், சட்டங்கள் செய்தனர் பாரினில் நம் பெண்கள். ஆனால் அவர் அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டிய ‘எட்டும் அறிவினில்’ என்ற சொல்லை மட்டும் கவணிக்காது எல்லாவற்றிலும் என்று எடுத்துக்கொண்டதால் இன்று கள்ளும் காமமும் களியாட்டங்களும் பொதுவுடைமையாகிப் போனது.

கல்வி நிலை முதல் கற்பு நிலை வரை ஆண்களும் பெண்களும் சமம் என்று கற்பு நிலையையும் சேர்த்து பாரதி கூறியதன் உள்நோக்கம் ஆண்களும் பெண்களைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என்ற உண்ணத வாழ்நெறியைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக....

ஓதரும் சாத்திரம் கோடி – உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்”

என்ற பாரதியின் கனவு காட்சியானதா? என்பது வினாவல்ல. இல்லை என்பதன் குறியீடே...

சொந்த மண்ணில் பிறர்க்கடிமைகளாய், அந்நியர்களை எதிர்க்க திரானியற்று, அவர்களால் வறுமையுற்று வதைப்பட்டுக் கிடந்த மக்களை மேலேற்ற சொல்லேணி படைத்த சுதந்திரக் கவி பாரதி. அந்நலம் இந்நலம் தன்னலம் என்று எந்நலமாயினும் ஓருபோதும் ஈயென இரத்தல் செய்யோம் என்பதை,

"இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்".

என்று பாடினான். இன்று குழந்தையைத் தவிர எல்லாம் இலவசமாகத் தருகிறோம் என்ற கட்சி பேதமின்றி ஏகோபித்த வாக்குறுதிகள். சுதந்திர நாட்டிலேயே எங்கும் எதிலும் தலைவிரித்தாடும் இலவசங்களின் வசப்பட்டு இன்றும் கஞ்சி குடிப்பதற்கில்லாத தன் வறுமை நிலைக்கும் விலைவாசி ஏறி மலையுச்சியை அடைந்துள்ள இந்நிலைக்கும் காரணம் எது? அல்லது யார்? என்றறியும் பகுத்தறிவு விளையாது போனதேன்?

மண்வெட்டிக் கூலி தினலாச்சே! – எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே – இந்த
மேதியினில் கெட்ட பெயராச்சே!

என்று வெந்து புழுங்கும் நிலை ஏன் வந்தது? மூலைக்கொரு கட்சி சாதிக்கொரு தலைவர் என்று புற்றீசலாய்க் கிளம்பி விட்ட அரசியல் தலைவர்களின் மூளைச்சலவையில் அழுத்தமாக மடித்து மழுங்கி இந்நாட்டு மன்னர்கள் எல்லோரும் பொறியற்ற விலங்குகளாய் இலவசங்களுக்காக இரு கரம் விரித்து வாழும் இழிநிலையை எய்தியுள்ளனர். பாரதி கண்ட தொலைதூரக் கனவு இந்த அற்ப ஆசைகளால் நொறுங்கிப் போனதை அறிவார்களா இவர்கள்?

இந்தத் தேசத்தைச் செதுக்கிச் செப்பனிடக் கவிதை உளியுடன் கிளம்பிய சத்தியக் கவிஞனின் நித்திரைக் கனவுகளில் சித்திரமாக இடம் பிடித்தவை இன்றும் அமைக்கப்படாத நதிப்பகிர்வும் சமைக்கப்படாத சேது பாலமும். இன்று ஈ என்ற எழுத்துப் படிமம் உணர்த்தும் துனபச்சாயல் ஈழம்.

“வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிசையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்”

புனித கங்கையை பொது உடைமை மங்கையாக்கி பயிர் காக்க, பசியால் வாடுகின்ற மக்களின் உயிர் காக்க நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டத்திற்கு அன்றே வழி கோலினான் அந்தப் பாரதக்கவி. இன்றளவும் அவன் விட்ட இடத்தில் இருந்து ஒரு புள்ளியேனும் நகர்ந்துள்ளதா? அரசியல் கமண்டலத்தில் அடைப்பட்ட கங்கையும் காவிரியும் என்று விரியும்? என்று விரியும்? என்று காத்திருக்கும் கண்களில் கண்ணீர்தான் விரிந்திருக்கிறது.

தசையெல்லாம் வெந்தபின்னே குளிர்ந்திடும் விழிகள் ஏது? இதயமே இழந்தபின்தான் முகிழ்த்திடும் உணர்வு ஏது? பெடையதைப் பிரிந்தபின்னர் பறவைகள் பிழைப்பு ஏது? பாசப்பிணைப்புகள் பதறிச்சாகப் பார்த்திடும் இனங்கள் ஏது? இனத்தமிழ்ர்கள் குருவிகளாய் கொசுக்களாய் மடிய ஈழத்துத் தின்னைகளில் கேட்கும் மரண ஓலம் ஓய ஏதேனும் வழி நாம் கண்டதுண்டா?

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”

என்று அவன் கண்ட கனவு விழித்திறையில் விழுந்த வீண்கனவு இல்லை. குருதிக் கொப்பளிக்கும் இருதயத்தின் உள்ளிருந்து கிளம்பிய இலட்சியக் கனவு. ஏழிசையை எழுப்பும் முன்னே அந்த நல்லதொரு வீணையை நாம் எறிந்து விட்டோம் எரிதழலில். அவன் விதைத்தவை நல் விளைச்சல்களே என்று அறிந்த பின்னும் வெற்று மொழி பேசி வாழ்ந்திடுதல் நலமாமோ?

நிறைவாக.....

நீண்டுகொண்டே போகும் அநீதிகளைக் கண்டு அவன் கனல் கக்கும் விழியின் கோப நெருப்பே சுட்டெரிக்கும் சூரியக் கதிர்கள். மலைகள் தோறும் கொட்டும் அருவிகள் நிறைவேறாத கன்வுகளுக்காக அவன் கண்கள் சிந்தும் கண்ணீர். இனியேனும் பாரதியை உச்சரிக்கும் ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு கனமும் எச்சரிக்கையாக அவன் கனவுகளை, அவற்றின் உண்ணத உட்பொருட்களை உணர்ந்து அவற்றை நிறைவேற்ற முயலுட்டும்.......

நன்றி பாரதியார் சங்கம்.

(இக்கட்டுரை கோலாலம்பூரில் 29.05.2011 அன்று நடைபெற்ற பாரதியார் விழாவில் வெளியிடப்பெற்ற “இன்றும் வாழ்கிறாய் இமய பாரதி!” என்னும் சிறப்பு மலரில் இடம்பெற்றது.)

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Tஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Hஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Iஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Rஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 6:15 pm

அப்துல் wrote:பாரதியின் கனவுகளை இங்கு அழகாக தந்து இருக்கிறீர்கள்.நன்றி நண்பரே
படித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி அப்துல் அன்பு மலர்

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Tஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Hஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Iஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Rஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 6:16 pm

அருண் wrote:
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்விற்கு நன்றி அக்கா..!
மிக்க நன்றி அருண். நலமா? அன்பு மலர்

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Tஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Hஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Iஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Rஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 6:18 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
இந்த பதிவை இட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
நான் கண்ட ஈகரை பதிவில் மிகவும் சிறப்பானவைகளில் ஒன்று.
நன்றி
தங்கள் பாராட்டில் மனம் மகிழ்ந்தது. மேலும் எழுதும் ஆர்வம் எழுந்தது. மிக்க நன்றி கணேஷ். அன்பு மலர்

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Tஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Hஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Iஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Rஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 6:23 pm

பாரதி எனும் பாற்கடலிலிருந்து சகோதரியின் பொற்க்கரங்களால் ஒரு வாய் அமிழ்தம்...சுகமான உணர்வு
நன்றி சகோதரி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Bஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Dஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Uஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Lஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Lஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 H
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 6:32 pm

maniajith007 wrote:அருமையான கட்டுரை ஒரு வகையுள் பாரதியும் சித்தரே
ஆம் மணி. இதற்கு அவரது வாக்குமூலமே சாட்சியாக உள்ளதே.
“எனக்கு முன்னர் சித்தர் பலர் இருந்தா ரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்

மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி”
நன்றி மணி. அன்பு மலர்

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Tஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Hஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Iஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Rஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 6:37 pm

Aathira wrote:
மிக்க நன்றி அருண். நலமா? அன்பு மலர்

நலம் அக்கா..! நீங்களும் எப்படி இருக்கீங்க முன் போல் பார்க்க முடிவதில்லை..! சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 14, 2011 6:46 pm

சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 6:50 pm

balakarthik wrote:என்றும் மகாகவி பாரதியே சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க
ஆம் கார்த்திக். கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி. அன்பு மலர்

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Tஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Hஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Iஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Rஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 6:52 pm

அதிபொண்ணு wrote:அருமையான கட்டுரை அக்கா

எனக்கு பிடித்த பாரதியின் வரிகள்:
நிமிர்ந்த நன்னடை நேர்க் கொண்ட பார்வை
மிக்க நன்றி அதிபொண்ணு. அது நமக்குப் பிடித்த வரிகள்.... எனக்கும்.. அன்பு மலர்

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Tஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Hஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Iஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Rஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 7:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:புனித கங்கையை பொது உடைமை மங்கையாக்கி பயிர் காக்க, பசியால் வாடுகின்ற மக்களின் உயிர் காக்க நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டத்திற்கு அன்றே வழி கோலினான் அந்தப் பாரதக்கவி.

ஆம் சகோதரி !

பாரதியை ,,
ஞாலத்தை சுருக்கி மூலத்தில் திணித்து
மூலத்தை விரித்து ஞாலத்தை பொருத்தும்
ஆற்றல் உடையவன்
---- என்பார்கள்

இவன் நெஞ்ச தோட்டத்தில்
முல்லாய் குத்தியவை எவை ?
மலராய் முகிழ்ந்தவை எவை ?
என்றும்

இவன்
கனல் கொண்டு சாடியவை எவை ?
கருணை கொண்டு படியவை எவை
?
என்று ...

குமரி ஆனந்தன் போன்றவர்கள் கூட தெரியாது என்றுதான் சொல்கிறார்கள் .பாரதியை பற்றி யார் எதை பேசினாலும் அழகுதான். ஆனால்
மகளிர் அவனை பற்றி பேசும் போது சற்று கூடுதலான அழகு விளைகிறது!
விரிவான விளக்கவுரை. அவன் ஞானி. ஒரு யுகத்தையே புரட்டிப்போட்டவன். அவன் உள்ளம் எவரறிவார். இங்கு நாமறிந்ததைக் கூறுகின்றோமே அன்றி அவன் கூறிய பொருளாக இருக்குமோ என்பது ஐயமே...
அழகாக கருத்து கூறியமைக்கு மனமார்ந்த நன்றியும் அன்பும் தோழரே... அன்பு மலர்

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Tஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Hஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Iஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Rஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Aஎட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்..... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக