புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
96 Posts - 49%
heezulia
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
7 Posts - 4%
prajai
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
cordiac
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
223 Posts - 52%
heezulia
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
16 Posts - 4%
prajai
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Barushree
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகச் சுற்றுலா தகவல்கள்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:19 pm

First topic message reminder :

ஓ மெரீனா....ஓ மெரீனா....

மெரீனா...கார்பன் மோனாக்ஸைடு சுவாசத்தில் திணறும் சென்னைவாசிகளுக்கு இளைப்பாறுதல் தரும் இடம்.

மெரீனா எப்படி ஒரு நாளை ஆரம்பிக்கிறது?

இதோ...மெரீனா கடற்கரையில் அதிகாலை 4 மணியிலிருந்து ஒரு "லைவ் ரிலே'... அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கிறது கடற்கரைச் சாலை. அதில், கலப்படமற்ற காற்றைச் சுவாசித்தபடி வாகனத்தில் சீறுவது அலாதி சுகமாய்த்தான் இருக்கிறது.

கலங்கரை விளக்கம் அருகே நமது வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு நடையைக் கட்டுகிறோம்.

வெளிச்ச மழையில் வெள்ளை மாளிகையாய்த் தகதகத்துக் கொண்டிருக்கிறது, டி.ஜி.பி. அலுவலகம். வாகன ஓட்டிகளை ஸ்பீக்கரில் எச்சரித்தபடி விரைகிறது, புதிய குவாலிஸ் காவல்துறை ரோந்து வாகனம்.

கடற்கரை உள்சாலையை ஒட்டியும் பரந்த மணல்வெளியிலும் வானமே கூரையாய்க் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் இந்நாட்டு "மன்னர்கள்'.

சீரணி அரங்கத்துக்குப் பின்புறம் உள்ள புறக்காவல் நிலையம் தூங்கி வழிந்து கொண்டிருக்க, கரகரத்துக் கொண்டிருக்கிறது ஒயர்லெஸ்.

தூரத்தே கடலில் ஜொலி ஜொலிக்கும் தீவுகளாய் மிதக்கின்றன கப்பல்கள்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:12 pm

திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை, அடி முடி காணா அண்ணாமலை, பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலம், ஆறு ஆதாரத் தலங்களில் மணிபூராகத் தலம், இந்தியாவின் 2-வது பெரிய ராஜகோபுரம், பிரம்மா, விஷ்ணுவின் அகந்தையை அடக்க சிவன் ஜோதி ரூபம் எடுத்த தலம், பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனை வேண்டித் தவமிருந்த தலம், அம்மனுக்கு இடபாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக சிவன் காட்சியளித்த தலம், அருணகிரிநாதர் முக்தியடைந்த தலம், திருப்புகழின் முதல் பாடல் பாடப்பட்ட தலம் என்று நீளமான பெருமைப் பட்டியலைக் கொண்டு விளங்குகிறது.

பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் அடி, முடியைக் காணச் செல்லும் போது அவர் ஜோதி ரூபமாகக் காட்சியளிக்கிறார். அப்போது திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் உருவானது. இதனால் சைவத்தின் முதல் தலமாக திருவண்ணாமலை போற்றப்படுகிறது.

இக்கோயிலில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) அபிதகுஜாம்பாளுடன் (ஸ்ரீ உண்ணாமுலையம்மன்) காட்சியளிக்கிறார். இங்குள்ள தூணில் அருணகிரிநாதருக்கும், 2-ம் பிரகூட தேவராய அரசனுக்கும் முருகர் தூணில் காட்சி தருகிறார். இதை நினைவுபடுத்தும் விதமாக கம்பத்து இளையனார் சன்னதி உள்ளது.

இக்கோயிலில் 9 கோபுரங்களும், 7 பிரகாரங்களும், 140 - க்கும் மேற்பட்ட சன்னதிகளும், பிரம்ம தீர்த்தமும், சிவகங்கைத் தீர்த்தமும் உள்ளன. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்துக் கல்வெட்டுக்கள் கோயிலில் கிடைத்திருந்தாலும் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:13 pm

முக்கிய திருவிழாக்கள்

சித்திரையில் வசந்த உற்சவம், மன்மதத் தகன விழா, வைகாசியில் விசாக உற்சவம், ஆனியில் தட்சிணாயன புண்ணியகாலம், ஒருநாள் திருமஞ்சனம், ஆடியில் ஆடிப்பூர விழா, தீமிதி விழா, ஆவணியில் மூல நட்சத்திர உற்சவம் (புட்டுக்கு மண் சுமந்த கதை), புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் கந்தர் சஷ்டி உற்சவம், அஸ்வினி அண்ணாபிஷேகம், கார்த்திகையில் கார்த்திகை பிரம்மோற்சவ தீப உற்சவம், அதையொட்டி நடக்கும் தேர்த் திருவிழா, தெப்பத் திருவிழா, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி உற்சவம், ஆருத்திரா தரிசனம், தை மாதத்தில் உத்திராயண புண்ணிய கால உற்சவம், தீர்த்தவாரி உற்சவம், மாசி மாதத்தில் மகா சிவராத்திரி, மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம், பங்குனியில் பங்குனி உத்திர உற்சவம், திருக்கல்யாணம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பு வாய்ந்த விழாக்களாகும்.

கோயிலின் சிறப்புகள்

இக்கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் என தனித்தனியாக 2 தங்கக் கொடி மரங்கள் உள்ளன. வழக்கமாக அம்மன் கோயிலில் தான் தீமிதி விழாக்கள் நடக்கும். ஆனால் சிவன் கோயிலான இங்கு தீமிதி விழா நடக்கிறது. ஆடி மாதத்தில் திருமஞ்சன உற்சவம், மார்கழியில் நடக்கும் ஆருத்திரா தரிசனத்தன்றும் நடராஜர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:13 pm

கிரி வலம்

திருவண்ணாமலையில் பெüணர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. பெüர்ணமி நாட்களில் 5 லட்சம் பக்தர்களும், கார்த்திகை தீபத் திருவிழா அன்று 10 லட்சம் வரையிலான பக்தர்களும் கிரிவலம் வருவார்கள்.

இங்குள்ள அண்ணாமலை லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் இன்றும் சூட்சும வடிவில் அண்ணாமலையில் உலா வருவதாலும் தங்கள் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

சுற்றுலாத் துறையும், திருவண்ணாமலை நகராட்சியும் கிரிவலப் பாதையின் பல இடங்களில் குடிநீர் வசதியையும், கழிப்பிட வசதியையும் ஏற்படுத்தி தந்துள்ளன.

மலையை சுற்றும் பாதையின் நீளம் 14 கி.மீ. கிரிவலப் பாதையின் பல இடங்களிலிருந்து அண்ணாமலையைப் பார்க்கும் போது அது பல மாறுபட்ட வடிவங்களில் காட்சியளிக்கும். கோயிலின் முகப்புப் பகுதியிலிருந்து பார்த்தால் லிங்க வடிவில் மலை தெரியும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:13 pm

குழந்தைப் பேறு பிரார்த்தனை

திருவண்ணாமலையை ஆட்சி செய்த வள்ளால மகாராஜா குழந்தைப் பேறு இல்லாமல் இறைவனை நோக்கித் தவமிருந்ததால் இறைவனே அவருக்குக் குழந்தையாகப் பிறந்ததாக தல வரலாறு கூறுகிறது.

இதனால் குழந்தைப் பேறு வேண்டுபவர்கள், வேண்டுதல் நிறைவேறிய பிறகு கார்த்திகை தேர்த் திருவிழா அன்றும், 5-ம் திருவிழா அன்றும், திருவூடல் திருவிழா அன்றும் கரும்பில் தொட்டில் செய்து, அத்தொட்டிலில் குழந்தையை வைத்து கோயிலை வலம் வந்து பிராத்தனையை நிறைவேற்றுகின்றனர்.

வள்ளால மகாராஜா இறந்த பிறகு இறைவனே ஈமக்கிரியைகளைச் செய்ததால் இக்கோயிலில் மோட்ச தீபமிடுவதும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அதே போல் இக்கோயிலில் ஸ்ரீ ரமண மகரிஷி தவமிருந்த பாதாள லிங்கமும் சிறப்பு வாய்ந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:14 pm

பிற முக்கிய இடங்கள்

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள், கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமம், ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம், ஸ்ரீ ராம்சுரத்குமார் ஆசிரமம் (விசிறி சாமியார் ஆசிரமம்), அம்மனுக்கு சுவாமி இடப் பாகத்தை அளித்த பவழக் குன்று ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில், மகிஷாசூரனை வதம் செய்த ஸ்ரீ துர்க்கையம்மன் கோயில், ஆதி அருணாச்சலேஸ்வரர் கோயில், (இங்குதான் பிரம்மா சிவனை நோக்கித் தவமிருந்தார்.) அஷ்ட லிங்கங்கள், குகை நமச்சிவாயம், விருப்பாச்சித் தேவர், திருவண்ணாமலை முதல் ஆதினம் (குன்றக்குடி ஆதினம்) தெய்வ சிகாமணி பரமாச்சாரியார், ஈசான்ய ஞானதேசிகர், குமரக்கோயில் பாணிபத்திரர் ஆகியோரின் ஜீவ சமாதிகள் உள்ளிட்ட பல இடங்களைத் தரிசித்து நற்பலன்களை அடையலாம்.

பிற தலங்கள்: படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில், தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் கோயில் ஆகியவை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

படவேட்டில் 13 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்புவராயர் காலத்தைச் சேர்ந்த 26 கோயில்கள் உள்ளன.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் வந்தவாசியிலிருந்து 7 வது கி.மீ.யில் வட இந்திய கட்டப்பாணியில் கட்டப்பட்ட தென்னாங்கூர் பாண்டுரங்கர் ஆலயம் அமைந்துள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:14 pm

திருவண்ணாமலை: சில விவரங்கள்

திருவண்ணாமலை கோயில் நடை திறப்பு: வழக்கமாக காலை 5.30 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் 12.30 மணிக்கு மூடப்படும். பின்னர் மாலை 3.30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூடப்படும். சிறப்பு தினங்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படும். காலை நடை திறப்பின் போது கோபூஜையும், இரவு நடை சாத்தப்படும் போது பள்ளியறை பூஜையும் நடைபெறும்.

முக்கிய ஊர்களிலிருந்து உள்ள தூரம்: சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக 190 கி.மீ., விழுப்புரத்திலிருந்து 60 கி.மீ., கடலூரிலிருந்து பண்ருட்டி, மடப்பட்டு வழியாக 100 கி.மீ., திருச்சியிலிருந்து மடப்பட்டு வழியாக 210 கி.மீ., சேலத்திலிருந்து ஊத்தங்கரை வழியாக 180 கி.மீ., வேலூர் - காட்பாடியிலிருந்து 80 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக 115 கி.மீ., பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக 220 கி.மீ., திருப்பதியிலிருந்து வேலூர் வழியாக 190 கி.மீ. தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது.

முக்கிய ஊர்களிலிருந்து விஷேச காலங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பெüர்ணமி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தங்குமிட வசதி: திருவண்ணாமலையில் யாத்ரீகர்கள் தங்குவதற்கு வசதியாக 50 - க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. சாதாரண நாள்களில் இங்கு ஒரு நாளைக்கு ரூ. 75-லிருந்து 900 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

அறநிலையத் துறை சார்பில், 17 அறைகள் கொண்ட உண்ணாமுலையம்மன் தங்கும் விடுதியும், 8 அறைகள் கொண்ட அப்பர் இல்லமும், 4 அறைகள் கொண்ட ஓய்வு விடுதியும் கட்டப்பட்டுள்ளன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:15 pm

நெல்லை என்னும் திருநெல்வேலி

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில், காந்திமதியம்மன் கோயில், கிருஷ்ணாபுரம் கோயில், ஸ்ரீவைகுண்டம் கோயில் ஆகியவை அவசியம் செல்ல வேண்டிய புனிதத் தலங்கள்.

பாளையங்கோட்டை பேராலயம் கிறிஸ்தவ மக்களின் புகழ்பெற்ற திருத்தலமாகும்.

மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இங்கு பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. பாளையங்கோட்டையில் சித்தமருத்துவக் கல்லூரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி அல்வா மிகப் பிரபலமானது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் தவறாமல் அல்வா வாங்கிச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மற்ற பகுதிகளில் தயாராகும் அல்வாவை விட இங்கு அதன் சுவை கூடுதலாக இருப்பதுதான் அதற்கு காரணம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:47 pm

சின்னக் குற்றாலம் '- கும்பக்கரை



தேனி மாவட்டத்தின் குற்றாலமாகத் திகழ்கிறது, கும்பக்கரை. இங்கு கொட்டும் நீர்வீழ்ச்சி, தென் மாவட்டப் பகுதி மக்களை பெருமளவில் ஈர்த்து வருகிறது.

கும்பல்கரையே கும்பக்கரை என்று மருவியதாகக் கூறப்படுகிறது. வன தெய்வங்களான மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைக்கப்பட்டதாம்.

இங்கு விழும் நீர்வீழ்ச்சி, கொடைக்கானல் அருகில் உள்ள பாம்பாறு பகுதியில் தோன்றி பாறைகளிடையே பாய்ந்து வந்து கொட்டுகிறது. குளிப்பதற்கும் கண்டுகளிப்பதற்கும் திகட்டாத நீர்வீழ்ச்சி இது.

இந்நீர்வீழ்ச்சிக்கு முன்னாலும், சாலையின் இருபுறங்களிலும் மா, தென்னந்தோப்புகள், பல்வேறு வகை மரங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியூட்டுகின்றன. மலைப் பகுதியில் நீண்ட தூரம் பயணித்து வருவதால் கும்பக்கரை அருவி நீர், மூலிகை மற்றும் தாதுப் பொருள்களின் நற்குணங்களை அள்ளிக் கொணர்ந்து சேர்க்கிறது.

இந்நீர்வீழ்ச்சியில் தண்ணீர் செல்லும் தடம், வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படுகிறது. யானைக் கெஜம், உரல் கெஜம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர்.

மழைக் காலத்தில் நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் அதிகமாகவும், கோடை காலத்தில் குறைவாகவும் இருக்கும். நீரின் வேகம் அதிகமாகும்போது அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் கொடைக்கானல் அடிவாரத்தில் பள்ளத்தாக்குப் பகுதியில் கும்பக்கரை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 89 கி.மீ. தொலைவில் உள்ளது. விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அருகில் உள்ள மக்கள், ஓர் உள்ளூர் சுற்றுலா போலச் சென்று ஒரு நாளை உல்லாசமாகக் கழிக்க ஏற்ற இடம் கும்பக்கரை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2009 9:23 am

சுற்றுலா பயணிகளைக் கவரும் ஏலகிரி


தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 6 Ela




ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் "ஏழைகளின் ஊட்டி'யாக ஏலகிரி திகழ்கிறது.

வெயிலூராக மாறிவிட்ட வேலூர் மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1410.60 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் கோடையில் இதமான, மிதமான வெப்பநிலையில் தென்றல் வீசுவது சிறப்பு.

திருப்பத்தூரில் இருந்து 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏலகிரிக்கு பஸ் வசதி உள்ளது. திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் பொன்னேரி கூட்டுச் சாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏலகிரி 14 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் பொன்னேரி கூட்டுச் சாலை உள்ளதால் ரயில் மூலமும் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரிக்கு வர முடியும்.

மலைக்கு வாகனங்கள் செல்லும் பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளைவிலும் தரைப் பகுதியைக் காணும் பார்வை மையங்கள் உள்ளன. மலையின் உச்சியில் இருந்து தொலைதூர இயற்கைக் காட்சிகளைக் காண வனத் துறை பராமரிப்பில் தொலைநோக்கி பார்வை மையம் உள்ளது.

ஏலகிரி 28.2 சதுர கி.மீட்டர் பரப்பில் 14 குக்கிராமங்களைக் கொண்டது. மலையில் புங்கனூர் ஏரிப் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இதற்கு நுழைவுக் கட்டணம் ரூ.3.

இதன் அருகில் சிறார்களைக் கவரும் வகையில் மான்கள், முதலைகள், மலைப் பாம்புகள் மற்றும் பறவைகள் அடங்கிய உயிரியல் பூங்கா ஒன்று இருந்தது. தற்போது இப்பூங்கா அகற்றப்பட்டு வெறிச்சோடி கிடக்கிறது.

புங்கனூர் ஏரியில் ஆண்டு முழுதும் நீர் உள்ளது. இதில் பயணிகள் படகு சவாரி செய்ய பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் வசூலிக்கப்படுகிறது.

படகு சவாரிக்காக பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை சீர்கெட்டுள்ளது. ஏரியின் நடுவில் உள்ள நீரூற்று பழுதடைந்துள்ளது. ஏரியின் கரைகளைச் சுற்றி பார்த்தீனியம் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. சுற்றுச் சாலைப் பகுதி பராமரிப்பின்றி உள்ளது.

ஏலகிரியில் பொதுப் பணித் துறை, வனத்துறை பராமரிப்பில் சுற்றுலா மாளிகைகள், தமிழ்நாடு கட்டட மையத்தின் விருந்தினர் மாளிகை ஆகியன உள்ளன. ஓட்டல் ஹில்ஸ், ஓ நிலா, தாஜ் கார்டன், ஓட்டல் நீலகிரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகளும் உள்ளன.

அத்தனாவூர் முருகன் கோயில், பழப் பண்ணை, தாமரைக்குளம் அம்மன் கோயில், தாயலூர் பட்டுப் பூச்சிப் பண்ணை, புங்கனூர் ஏரி அருகே வனத்துறையின் மூலிகைப் பண்ணை, சுவாமிமலை சிவன் ஆலயம் உள்ளிட்டவை பயணிகளைக் கவரும் இடங்கள்.

மலையில் நிலாவூரில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இவ்வழியாகச் செல்ல பாதை இல்லை. இதைக் காண விரும்பும் பயணிகள் திருப்பத்தூர் வழியாக 37 கி.மீட்டர் சுற்றி வரும் நிலை உள்ளது. இதனால் நிலாவூர்-ஜலகம்பாறைக்கு பாதை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் விருப்பம்.

மலையில் பெரிய மடுவு என்ற இடத்தில் மற்றொரு நீர்வீழ்ச்சி உள்ளது.

மே மாதத்தில் பெங்களூர், ஆந்திரம், கேரளம், புதுவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். மே இறுதியில் அரசு இப்பகுதியில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தி வருகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2009 9:24 am

சிவகங்கைச் சீமையிலே...

சிவகங்கை அரண்மனை:
வீர மங்கை வேலு நாச்சியார் அரசோச்சிய இந்த அரண்மனையில், காலத்தின் கரங்களில் சிக்கிச் சிதையுண்டவை போக சில பகுதிகளே எஞ்சியுள்ளன. ஆனாலும் அவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

அருங்காட்சியகம்: மருது மண்ணின் வீரப் பாரம்பரியப் பதிவுகளை சிவகங்கையில் உள்ள மாவட்ட அருங்காட்சியகத்தில் காணலாம்.

காளையார்கோவில்:
மருதுபாண்டியர்களால் திருப்பணி செய்யப்பட்ட மாபெரும் கோயில். மருது மன்னர்கள் நிர்வாகம் செய்த அரண்மனை, அரண்மனை சிறுவயல் என்ற சிற்றூரில் உள்ளது.

குன்றக்குடி: இங்குள்ள குன்றில் மீது அமைந்துள்ள சண்முகநாதர் கோயில் பல நூறு ஆண்டுகள் பாரம்பரியச் சிறப்புமிக்கது. சேதுபதி, மருது மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. அருணகிரிநாதரால் பாடப்பெற்றது இத்தலம். குன்றின் அடிவாரத்தில் குடைவரை சிவன் கோயில் உள்ளது.

அரியக்குடி: "தென் திருப்பதி' என்று போற்றப்படும் அரியக்குடி பெருமாள் கோயில் காரைக்குடிக்கு அருகில் உள்ளது.

திருக்கோஷ்டியூர்:
திருமந்திரத்தை ராமானுஜர் உபதேசித்த திருத்தலம். பிரசித்தி பெற்ற ஸ்ரீ செüமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது.

திருத்தளிநாதர் கோயில்: திருப்புத்தூரில் உள்ள இக்கோயில், கி.பி. 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு யோக பைரவர் அருள்பாலிக்கிறார்.

பிரான்மலை: கடையேழு வள்ளல்களுள் ஒருவரான பாரி வாழ்ந்த பறம்பு மலையே தற்போது பிரான்மலை என்றழைக்கப்படுகிறது. இங்கு மலையடிவாரத்தில் திருக்கொருக்குன்ற நாதர் கோயிலும், மலை உச்சியில் இஸ்லாமியர் தர்ஹாவும் உள்ளன.

மகிபாலன்பட்டி: "யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்றுரைத்த கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர். இங்கு குடைவரைக் கோயில் உள்ளது.

திருக்கோளக்குடி:
திருக்கோளநாதர் அருள்பாலிக்கும் இக்கோயில் பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது. இங்குள்ள குன்றுகளில் சமணர்கள் பயன்படுத்திய படுக்கைகள் உள்ளனது.

இடைக்காட்டூர்: சிவகங்கையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 1894-ல் கட்டப்பட்ட மிகப் பிரம்மாண்டமான தேவாலயம் உள்ளது.

தாயமங்கலம்: சிவகங்கையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு புராதனமான மாரியம்மன் கோயில் உள்ளது.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்: மதுரையில் இருந்து 55 கி.மீ. தொலைவில் திருப்புத்தூர் சாலையையொட்டி உள்ளது இச்சரணாலயம். இங்குள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாய்க்கு மழைக்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன.

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக