புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகச் சுற்றுலா தகவல்கள்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:19 pm

First topic message reminder :

ஓ மெரீனா....ஓ மெரீனா....

மெரீனா...கார்பன் மோனாக்ஸைடு சுவாசத்தில் திணறும் சென்னைவாசிகளுக்கு இளைப்பாறுதல் தரும் இடம்.

மெரீனா எப்படி ஒரு நாளை ஆரம்பிக்கிறது?

இதோ...மெரீனா கடற்கரையில் அதிகாலை 4 மணியிலிருந்து ஒரு "லைவ் ரிலே'... அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கிறது கடற்கரைச் சாலை. அதில், கலப்படமற்ற காற்றைச் சுவாசித்தபடி வாகனத்தில் சீறுவது அலாதி சுகமாய்த்தான் இருக்கிறது.

கலங்கரை விளக்கம் அருகே நமது வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு நடையைக் கட்டுகிறோம்.

வெளிச்ச மழையில் வெள்ளை மாளிகையாய்த் தகதகத்துக் கொண்டிருக்கிறது, டி.ஜி.பி. அலுவலகம். வாகன ஓட்டிகளை ஸ்பீக்கரில் எச்சரித்தபடி விரைகிறது, புதிய குவாலிஸ் காவல்துறை ரோந்து வாகனம்.

கடற்கரை உள்சாலையை ஒட்டியும் பரந்த மணல்வெளியிலும் வானமே கூரையாய்க் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் இந்நாட்டு "மன்னர்கள்'.

சீரணி அரங்கத்துக்குப் பின்புறம் உள்ள புறக்காவல் நிலையம் தூங்கி வழிந்து கொண்டிருக்க, கரகரத்துக் கொண்டிருக்கிறது ஒயர்லெஸ்.

தூரத்தே கடலில் ஜொலி ஜொலிக்கும் தீவுகளாய் மிதக்கின்றன கப்பல்கள்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:50 pm

பாவம் போக்கும் தீர்த்தங்கள்

அமைவிடம்: மதுரையில் இருந்து 164 கி.மீ. தொலைவில் உள்ள, 13,224.22 ஏக்கர் பரப்பளவுள்ள சிறுதீவு ராமேஸ்வரம்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை (பிற்பகல் 1 முதல் மாலை 3 மணி வரை தவிர) நடை திறந்திருக்கும். நாள்தோறும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

தீர்த்தங்கள்: ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 21 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே அக்னிதீர்த்தம், தேவிபட்டிணம் (நவபாஷாணம்), திருப்புல்லாணி (தர்ப்பசயனம்), மண்டபம், பாம்பன், தங்கச்சி மடம் போன்ற இடங்களில் உள்ள 31 தீர்த்தங்களும் பாவம் போக்கும் மகிமை பெற்றவை.

விழாக்கள்: பிப்ரவரி - மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி, மே - ஜூன் மாதங்களில் ராமலிங்கப் பிரதிஷ்டை விழா, ஜூலை - ஆகஸ்ட்டில் ஆடித் திருக்கல்யாண விழா, செப்டம்பர் - அக்டோபரில் நவராத்திரி விழா ஆகியவை ராமேசுவரம் கோயிலில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களாகும்.

போக்குவரத்து வசதி: சென்னை, மதுரையில் இருந்து ரயில் வசதி, மதுரையில் இருந்து பேருந்து வசதி உள்ளது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கோயிலுக்கு பேருந்து உள்ளது.

தங்குமிட வசதி: ராமேஸ்வரத்தில் புனித யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் தங்கும் இட வசதிக்குப் பஞ்சமில்லை. திருக்கோயிலைச் சார்ந்த பங்களாக்கள், குடில்கள், தங்கும் விடுதிகள் மொத்தம் 15 உள்ளன. குளிர்பதன வசதியும் உண்டு. (வாடகைக் கட்டணம் ரூ. 50 முதல் ரூ. 600 வரை.) இதுதவிர ஹோட்டல் தமிழ்நாடு மற்றும் தனியார் விடுதிகள் உள்ளன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:51 pm

சேதுபதி மண்ணில்...

ராமநாதபுரம்: முகவைப் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்களின் தலைமையகமான ராமநாதபுரத்தில் இன்றளவும் கம்பீரமாக நிற்கும் "ராமலிங்க விலாசம்' அரண்மனை அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடம். இங்கு இயற்கை வண்ணங்கள் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் இன்றும் புதுப் பொலிவுடன் காணப்படுவது வியப்புக்குரியது.

தேவிபட்டிணம்: இங்கு நவக்கிரகங்களைக் குறிக்கும் ஒன்பது கற்களை ராமர் ஸ்தாபித்துள்ளார். மகிஷாசூரனை வதம் செய்த தேவியின் கோயிலும் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இக்கடற்கரை ஊர் உள்ளது.

திருப்புல்லாணி: ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்விய தேசங்களுள் ஒன்று.

சேதுக்கரை: ராமேஸ்வரத்தில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு பிரசித்தி பெற்ற விஷ்ணு கோயில் உள்ளது.

உத்திரகோசமங்கை: ராமேஸ்வரத்தில் இருந்து 72 கி.மீ. உள்ளது. இக் கோயிலில் உள்ள நடராஜர் சிலை, மரகதத்தில் வடிக்கப்பட்டுள்து. இங்கு ஆருத்ரா தரிசன விழா மிகச் சிறப்பானது.

ஏர்வாடி தர்கா: ஏர்வாடியில் உள்ள சுல்தான் இப்ராஹிம் சையத் அவுலியா தர்கா 800 ஆண்டுகாலப் பெருமை வாய்ந்தது. இப்புண்ணிய பூமி மனநலம் கொடுக்கும் மகத்தான சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிப். - மார்ச் மாதங்களில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா பிரசித்தமானது.

காஞ்சிரங்குளம்: ராமேஸ்வரத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள இது நீர்ப் பறவைகள் சரணாலயமாகும். பறவைகளைப் பார்வையிட நவம்பர் - பிப்ரவரி சீசன் காலத்தில் செல்வது நல்லது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:52 pm

குதிக்கும் அருவியில் குளிக்கலாமா?



"குடிக்கவே தண்ணி இல்ல; இதில குளியலாவது? கும்மாளமாவது?' - தண்ணீரின்றித் தவிக்கும் உங்கள் கோபக் குரல் கேட்கிறது. ஆனால் நீங்கள் ஒகேனக்கல் வந்தால், கொட்டும் அருவியில் ஆசை தீரக் குளித்து மகிழலாம். ஒகேனக்கல்லுக்கு எந்த சீசனில் வருவது என்று கேட்கிறீர்களா? இங்கு வருடம் முழுவதுமே சீசன்தான்.

ஒகேனக்கல்லில் குளியல் மட்டும்தானா? இல்லை. பசுமைக் காடுகள் சூழ்ந்த பகுதியில் கண்களுக்கு விருந்து படைக்கும் அருவிகள்; உல்லாசப் பரிசல் சவாரி; புத்துணர்வூட்டும் எண்ணெய் மசாஜ்; தொங்கும் பாலம்; சிறுவர் பூங்கா; உயிரியல் பூங்கா; முதலைப்பண்ணை என சுவாரசியமாய் பொழுதை நகர்த்த பல்வேறு இடங்கள் இங்குள்ளன. டெல்டா பகுதியை வளமாக்கும் காவிரித் தாய் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குத் தாவிக் குதிக்கும் இடம்தான் ஒகேனக்கல்.

கர்நாடக அணைகளில் இருந்து விடுதலையாகி வரும் சந்தோஷத்தில் காவிரி ஆர்ப்பரித்து, அருவியாய்க் குதிப்பது இங்கு மட்டும்தான்.

கன்னடத்தில் "ஹோகே' என்றால் "புகை'. "கல்' என்றால் பாறை. பலத்த ஆரவாரத்துடன் 20 மீட்டர் உயரத்தில் இருந்து பாறைகளின் மீது நீர்விழுந்து வெண்மையான புகை மண்டலத்தை ஏற்படுத்துவதால் இப்பகுதி "ஹோகேனக்கல்' என்று அழைக்கப்பட்டு பின்னர் ஒகேனக்கல்லானது.

"ஆர்ப்பரிக்கும் அருவிகளை மிக அருகில் சென்று காண வேண்டுமா? ஏறுங்கள் பரிசலில்' என்று அழைத்துச் செல்கின்றனர் பரிசல்காரர்கள். இருபுறமும் உயர்ந்த குன்றுகள். இடையில் காட்டாறாய் ஓடும் காவிரி. இதில் லாவகமாய் படகை ஓட்டி, பெரும் சப்தத்துடன் விழும் அருவிக்கு மிக அருகிலேயே நம்மைக் கொண்டு செல்கின்றனர்.

ஆடிப்பெருக்கு... விவசாயத்தை வளப்படுத்தும் காவிரித் தாய்க்கு ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி இங்கு நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் நன்றி தெரிவிக்கப்படுகிறது. அன்று புதுமணத் தம்பதியினர் இப்புனித நதியில் நீராடினால் எல்லா வளமும் பெறுவர் என்பது ஜதீகம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:53 pm

திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் ஒன்று. கடற்கரையில் அமைந்துள்ள செந்திலாண்டவர் தலம். இப்புனித தலத்தில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் மற்றும் சூரசம்ஹாரம் ஆகியவை சிறப்பான திருவிழாக்கள்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் இந்நகர் அருகே ஆழ்வார்திருநகர் உட்பட பல புனித தலங்கள் உள்ளன.

கன்னியாகுமரி செல்லும் வழியில் உவரி, மணப்பாடு ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் தேவாலயங்கள் வரலாற்று சிறப்புமிக்கவை.

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூர் செல்ல ரயில் வசதி உண்டு. விரைவுப் பேருந்துகளும் உண்டு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:54 pm

சேலம் மாநகரம்

சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற நகரம்.

சேலம் நகரப்பகுதியில் மட்டும் 60க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உண்டு. ஆரம்பக்காலத்தில் இங்கிருந்துதான் ஏராளமான தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்டது. ஏற்காடு அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் தற்போது குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்பட்டுவிட்டன. எனினும், அக்காலத்தை நினைவுப்படுத்தும் வகையில் அதன் நுழைவாயில் மட்டும் அப்படியே பேணப்படுகிறது. சேலம் செல்லும் சுற்றுலாவாசிகள் இவ்விடத்தை சென்று ரசிக்கலாம்.

சேலத்தில் சுகனேஸ்வரர் கோயில், அக்ரஹாரம் விநாயகர் கோயில், மாரியம்மன் கோயில் ஆகியவை மிகப் பிரபலமான புனிதத் தலங்கள்.

சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியான ஏற்காடு இம்மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ள குடுவம்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான சூழலில் அமைந்துள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:54 pm

அதியமான்களின் கோட்டை

தகடூரை ஆண்ட அதியமான்களின் தலைநகரம் அதியமான்கோட்டை தருமபுரி}சேலம் நெடுஞ்சாலையில் தருமபுரியிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கிருஷ்ணதேவராயா மற்ரும் ஹோசலா மன்னர்களால் கட்டப்பட்ட சென்றாய பெருமாள் கோயில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் காணவேண்டிய திருத்தலம். 13ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

தருமபுரிக்கு அருகேயுள்ள பாப்பாரப்பட்டியில் தேச விடுதலைக்காக பாடுபட்ட சுப்பிரமணிய சிவாவின் நினைவகம் அமைந்துள்ளது.

ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. பொங்கலுக்கு மறுநாள் வரும் காணும்பொங்கல் தினத்தன்று இங்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:55 pm

ஏற்காடு

ஏழைகளின ஊட்டி என்றழைக்கப்படுகிறது ஏற்காடு.

இங்குள்ள ஏரியில் நாமே படகு சவாரி செய்து மகிழலாம். ஏரி முழுவதும் படகுப் பயணம் செய்ய தனி வாடகை உண்டு.

சுயிசைட் பாய்ண்ட் நாம் பார்க்கவேண்டிய இடமாகும். இங்குள்ள டெலஸ்கோப் மூலம் சேலம் நகரை காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல், மே மாதங்களில் இங்கு மலர்க்கண்காட்சி நடைபெறும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:56 pm

பூலோக சொர்க்கம் ஆனைமலை வனம்



இயற்கை ஆர்வலர்கள், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள், உயிரின ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது, கொங்கு மண்டலத்தில் உள்ள ஆனைமலை.

உலகின் மிகச் சிறந்த வன உயிரினப் பகுதியான இது, தென்னை நகரான பொள்ளாச்சிக்கு அருகில் அமைந்துள்ளது. மொத்தம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீண்டு, பரவிப் படர்ந்துள்ளது ஆனைமலை வனம்.

இந்திரா காந்தி வன உயிரின உய்விடம்

மிக அதிக எண்ணிக்கையிலான பல்வேறு வகை உயிரினங்கள், பறவைகளின் புகலிடமாகத் திகழ்கிறது, பொள்ளாச்சி இந்திராகாந்தி வன உயிரின உய்விடம்.

1976-ல் கரியன்சோலை, மஞ்சம்பட்டி, புல்மலைகள் அடங்கிய பகுதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது 1989-ல். இதில், பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலைப்பேட்டை, அமராவதி என 6 சரகங்கள்.

இப் பகுதியில் உள்ளது போன்ற நில அமைப்பு வேறெங்கும் கிடையாதென்பது இங்கு மலையேற்றத்துக்கு வந்துள்ள பல வெளிநாட்டவரின் வியப்பான கருத்து.

உடலுக்கு இதமான மிதமான தட்பவெப்பம், உள்ளத்துக்கு உற்சாகத்தைத் தரும் மெல்லிய சாரல் மழை, பார்வைக்கு விருந்தாகும் சோலைக் காடுகள், ஆண்டுக்குச் சுமார் 700 செ.மீ. மழை பொழியும் கரியன் சோலை பசுமை மாறாக் காடுகள், மிகக் குறைந்த அளவில் மழை பெறும் மஞ்சம்பட்டி முள்புதர்க் காடுகள், எண்ணிலடங்காத அரிய உயிரினங்களைக் கொண்ட வறண்ட மற்றும் ஈரப்பதமுள்ள இலையுதிர்க் காடுகள், ஊசியிலைத் தாவரங்கள், சோலைகள், புல்வெளிகள் ஆகியவை ஆனைமலையின் சிறப்புகள்.

கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் அதிகபட்சமாக 2513 மீட்டர் உயரம் வரை பல மலைகள் இப்பகுதியில் உள்ளன. அதிகபட்ச உயரமான 2513 மீட்டரில் காணப்படும் புல் மலைக்கு (எழ்ஹள்ள் ட்ண்ப்ப்ள்) தனக்காமலை.

இந்திராகாந்தி வன உயிரின உய்விடத்தின் மற்றொரு சிறப்பு, மலையும் மடுவும். ஒரு பக்கம் ஓங்கி உயர்ந்த மலைகள்; மறுபுறத்தில் அதல பாதாளம் -உலகின் வேறெந்த வனப்பகுதியிலும் இல்லாத சிறப்பு இது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:56 pm

எத்தனையெத்தனை உயிரினங்கள்!



இருவாச்சிப் பறவை

தமிழக அரசு விலங்கான நீலகிரி வரையாடுகள் இங்கு மிக அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

மேலும் ஆசிய யானைகள், சிறுத்தைகள், புலிகள், ஆனைமலையின் தனிச் சிறப்பான சிங்கவால் குரங்குகள், நீலகிரிக் கருங்குரங்குகள், ஆனைமலையின் பெருமையான இருவாச்சிப் பறவை, 350 வகைப் பறவையினங்கள், ராஜநாகம், விஷமில்லாத பறக்கும் பாம்பு உள்ளிட்ட எண்ணிலடங்காத பாம்பு வகைகள், கடமான், புள்ளிமான் எனப் பலவகை மான்கள், காட்டெருமை, காட்டு மாடு, வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் ராட்சதச் சிலந்திகள், பறக்கும் பச்சைத் தவளை, மனித ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள், மருந்துக்குப் பயன்படும் ஆயினிப் பலா, சிங்கவால் குரங்குகள் விரும்பி உண்ணும் குரங்குப் பலா, 500-க்கும் மேற்பட்ட அழகிய ஆர்க்கிட் மலர்கள், காட்டுப் பகுதிக்கே உரிய கல்வாழை, காட்டு நெல், வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் கோடம்புலி மற்றும் நூற்றுக்கணக்கான மூலிகைகள் (மூச்சு வாங்குகிறதா!) ஆகிய அனைத்தும் ஆனைமலை வனத்தில்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:57 pm

அழகிய ஆர்க்கிட் மலர்கள்.

ஆனைமலையில் வரகலியார் மற்றும் கோழிக்கமுத்தி ஆகிய இரு இடங்களில் யானைகளுக்கான பயிற்சி முகாம்கள் உள்ளன. தற்போது 12 ஆண் யானைகள், 5 பெண் யானைகள், ஒரு குட்டி உள்ளன. இந்த யானைகள் பிற பகுதிகளில் அடங்காத யானைகளையும் அடக்கும் பயிற்சி பெற்றவை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆனைமலை வனப்பகுதிக்குள் செல்லவும், டாப்சிலிப்பில் உள்ள விடுதிகளில் தங்கவும் அனுமதியுண்டு. யானைச் சவாரி செய்யவும், கோழிக்கமுத்தி முகாமைப் பார்வையிடவும் வனத்துறை அனுமதியுள்ளது.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களைத் தவிரப் பிற மாதங்கள் முழுவதும் சீசன்தான்.

இவ்வளவு பெருமைகள் மிக்க ஆனைமலை வனப் பகுதியை "பூலோக சொர்க்கம்' என்று சொல்வது சரிதானே?

Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக