ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

+2
அன்பு தளபதி
balakarthik
6 posters

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by balakarthik Wed Aug 03, 2011 2:09 pm

ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “, என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.

அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள். அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள். அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்” என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற , செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான். அத்துறவியோ புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ பெருமைப்பட வேண்டும்” என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!

அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், “உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை, அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.

சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய அள்ளி, ” என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான். அவ்வளவுதான், அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!

என்ன, கதையைக் கேட்டாச்சா? சரி, இப்போ நாம இந்தப்பதிவோட முக்கியமான செய்திக்கு வருவோம். அதாவது, கதை சொல்வதும் அதை புரிந்து கொள்வதும் ஒரு கலையாம். பெரும்பாலும் மக்கள், கதைகளில் வரும் வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின் அடிப்படைக் கருத்தை (மையக்கருவை) புரிந்துகொள்வதில்லையாம். அது எப்படி என்கிறீர்களா? உதாரணத்துக்கு இக்கதையையே எடுத்துக்கொள்வோம். இக்கதையைக் கேட்ட/படித்த சிலர் என்ன சொன்னார்கள் தெரியுமா?

“யாருக்குமே எல்லாம் தெரிவதில்லை. பேய்களுக்கு கூடத்தான். சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல”

“அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது என்றால், எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது இந்தப் பேய் என்று அவன் எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள் எதிர்த்து நின்று தைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது”

“அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேயே! அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை”

” அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும் அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது”

” நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது”

இன்னும் சிலர்…..
“எனக்கு இந்தக் கதையின் முடிவு பிடிக்கவில்லை. நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் நான் இந்த கதையை படிக்கத் தொடங்கினேன். கடைசியில் சப்பென்றாகிவிட்டது”

“ஆமாம் , அவன் ஒரு ஜென் துறவியைச் சந்தித்தான் என்று ஏன் அந்தப் பேயால் கண்டுபிடிக்க முடியவில்லை?”

ஒரே கதையை படித்தவர்களின் புரிதல்கள் எத்தனை விதத்தில் இருக்கிறதென்பதை கவனித்தீர்களா? ஆக, கதை ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில் கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது. இதுபோலத்தான் நம் பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்!

உண்மையில் பேய்கள் என்பது நம் பயங்களும், மனதில் ஏற்பட்டு நம்மை அலைக்கழிக்கும் ஒரு வித உளவியல் நோய்களுமே. அத்தகைய பயங்களை உருவாக்கி நம்மை இம்சிப்பதே நம் மூளைதான். அது பயங்களையும் உருவாக்கும், அதேசமயம் வேறு யாரோ ஒருவர் வந்து நம்மை பயமுறுத்துவது போல புலம்பவும் செய்யும்! ஆக, நம் பயங்களுக்கும் துன்பங்களுக்கும் நம் மூளைதான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.

இதைத்தான் சொல்கிறது ஜென் வரலாறு. ஜென் துறவிகள் நம் கற்பனைப் பேய்களைவிட (மனித மனங்கள்!) அதிபுத்திசாலிகளாம். ஆனால், ஜென் துறவிகள் ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே இருக்கின்றனர்(பேய்கள் எங்கே இருக்கின்றன?). அவர்கள் சொல்வது என்னவென்றால், பேய்கள் என்பவை நம் எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும்தான். பயப்படுவதற்கும், துன்பப்படுவதற்க்கும் நாம் விரும்பவில்லை என்றால் வேறு ஒருவர் வந்து நம்மை எப்படி துன்புறுத்த முடியும்? சற்று சிந்தியுங்கள்!

அதனால், நாம் உருவாக்கிய பேய்களை (பயம், பற்று, எதிர்ப்பார்ப்பு, ஆசை, போதை….) நாமேதான் அழிக்க வேண்டும். மொத்தத்தில் பேய்கள் நம்மைப் போன்ற உருவமில்லாதவை, வெறும் மனப் பிரம்மைகள்தான்! அவற்றை தூக்கி எறிந்துவிட்டு சென்றோமானால், நலமான வளமான வாழ்வை வாழலாம்!

நன்றி - பத்மஹரி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by அன்பு தளபதி Wed Aug 03, 2011 2:16 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by balakarthik Wed Aug 03, 2011 2:25 pm

:வணக்கம்: :வணக்கம்:
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by Guest Wed Aug 03, 2011 2:39 pm

கடலய காட்டி கடல போற்றுவானு பயந்து ஓடிருக்கும் பாலா ஸார்.
நல்ல படைப்பு பாலா ஸார்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by balakarthik Wed Aug 03, 2011 2:45 pm

sharfultra wrote:கடலய காட்டி கடல போற்றுவானு பயந்து ஓடிருக்கும் பாலா ஸார்.
நல்ல படைப்பு பாலா ஸார்.

அருமையிருக்கு :வணக்கம்:
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by Abu BRS Mon Sep 26, 2011 1:18 pm

ஜென் கதைகள், சிறந்த கதை தொகுப்புகளில் ஒன்று. அதை எங்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் நன்றி.
Abu BRS
Abu BRS
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 20/09/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by vasanthe2590 Mon Sep 26, 2011 1:34 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by கேசவன் Mon Sep 26, 2011 1:41 pm

மன பேய்களை தவிர வேறு எந்த பேயும் இல்லை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by balakarthik Wed Sep 28, 2011 6:43 pm

:வணக்கம்: :வணக்கம்:
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by அதி Wed Sep 28, 2011 7:24 pm

இனி தூங்குறப கடலையை பக்கத்தில வெச்சுக்கிட்டே தூங்கணும்னு இந்த கதை மூலம் எனக்கு உணர்த்திய உங்களுக்கு நன்றி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by balakarthik Wed Sep 28, 2011 7:27 pm

அதிபொண்ணு wrote:இனி தூங்குறப கடலையை பக்கத்தில வெச்சுக்கிட்டே தூங்கணும்னு இந்த கதை மூலம் எனக்கு உணர்த்திய உங்களுக்கு நன்றி

ஒரு பேய இன்னொரு பேய் தொந்தரவு செய்யாது ஸோ டோன்ட் ஓரி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by அதி Wed Sep 28, 2011 7:29 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:இனி தூங்குறப கடலையை பக்கத்தில வெச்சுக்கிட்டே தூங்கணும்னு இந்த கதை மூலம் எனக்கு உணர்த்திய உங்களுக்கு நன்றி

ஒரு பேய இன்னொரு பேய் தொந்தரவு செய்யாது ஸோ டோன்ட் ஓரி
ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! 676261 ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! 676261
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by balakarthik Wed Sep 28, 2011 7:30 pm

கொட்டாரா ஹாஃபா இல்ல புல்லா இல்லேனா வெறும் கட்டிங்கா சைட் டிஷ் என்ன சியர்ஸ் சியர்ஸ்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by அதி Wed Sep 28, 2011 7:33 pm

நீங்க அதுலயே இருங்க மண்டையில் அடி அது வெறும் சோடா களைப்புக்கு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

Back to top Go down

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி! Empty Re: ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை