புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
7 Posts - 64%
heezulia
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
8 Posts - 2%
prajai
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
4 Posts - 1%
mruthun
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கணினி - கேள்வி - பதில் Poll_c10கணினி - கேள்வி - பதில் Poll_m10கணினி - கேள்வி - பதில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:41 pm

கேள்வி: இன்டர்நெட் வெப்சைட்டிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை எடிட் செய்திடும் புரோகிராம் ஒன்றை இறக்கினேன். எத்தனை முறை இன்ஸ்டால் செய்தாலும் அது முழுவதுமாக இன்ஸ்டால் ஆக மறுக்கிறது. என்ன காரணமாக இருக்கும்?

பதில்: பொதுவாக இது போன்ற பிரச்சினை ஒரு சிலருக்கு ஏற்படும். அதற்கான காரணங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக் கைகளையும் இங்கு சுருக்கமாகக் கூறுகிறேன்.
1.முதலில் ஒரு சாப்ட்வேர் புரோகிராமிற்கான பைல்களை வெப் சைட்டிலிருந்து டவுண்லோட் செய்திடும் முன், அந்த தளத்தில் தரப்பட்டிருக்கும் தகவல்களை நன்றாகப் படிக்கவும். அதில் அந்த பைலை எப்படி இயக்கி இன்ஸ்டால் செய்திட வேண்டும்; எந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் இடம் தேவைப்படும்; இன்ஸ்டால் செய்திடும் முன் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டுமா? வேறு எந்த புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்ற தகவல்கள் எல்லாம் தரப்பட்டிருக்கும்.
2. மேலும் அது முற்றிலும் இலவசமான புரோகிராமா? அல்லது குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டும் இயங்குமா? என்ற தகவலும் தரப்பட்டிருக்கும்.
3. சில தளங்களில் அந்த புரோகிராமினைப் பயன்படுத்தியவர்களின் குறிப்புகளும் இருக்கும். இவை அனைத்தையும் படித்தபின்னரே, அந்த புரோகிராம் வேண்டுமா என்பதனையும், அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்திட கம்ப்யூட்டரில் இடம் உள்ளதா என்பதனையும் முடிவு செய்து, பின் டவுண்லோட் செய்திடலாம். பொதுவாக அந்த புரோகிராம் கேட்கும் காலி டிஸ்க் இடத்தைக் காட்டிலும் குறைந்த பட்சம் இரு மடங்கு இடம் இருந்தாலே பதிய வேண்டும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:43 pm

கேள்வி: வேர்டில் பொதுவாக ஒரு சொல் அல்லது குறிப்பிட்ட டெக்ஸ்ட் வரிகளைத் தேர்ந்தெடுத்தபின், அதில் மவுஸ் கர்சரைக் கொண்டு அழுத்தி அப்படியே இழுத்துச் சென்று இன்னொரு இடத்தில் விடலாம். என் அலுவல கத்தில் நான் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் இதனை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் வீட்டில் முடிகிறது. இரண்டிலும் வேர்ட் 2003 தான் உள்ளது.



பதில்: அலுவலகக் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் இந்த வசதி வேண்டாம் என செட் செய்யப்பட்டுள்ளது. கவலைப்பட வேண்டாம். மிக எளிதாக மாற்றிவிடலாம். கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. டூல்ஸ் (tools) மெனு சென்று ஆப்ஷன்ஸ் (Options) செலக்ட் செய்திடவும்.





2. கிடைக்கும் விண்டோவில் எடிட் (Edit) டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இந்த விண்டோவில் (Drag and Drop Text Editing) ட்ராக் அண்ட் ட்ராப் டெக்ஸ்ட் எடிட்டிங் என்று ஒரு வரி இருக்கும். அதன் முன்னே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை மவுஸ் கிளிக் செய்வதன் மூலம் ஏற்படுத்தவும்.
4.ஓகே கிளிக் செய்து ஆப்ஷன்ஸ் பாக்ஸை மூடவும்.
இனி நீங்கள் விரும்பியபடி டெக்ஸ்ட் செலக்ட் செய்து, அதன் மேல் மவுஸால் அழுத்தியவாறே, இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று பேஸ்ட் செய்திடலாம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:44 pm

கேள்வி: வேர்டில் பயன்படுத்தப்படும் டெம்ப்ளேட் பைல்கள் எந்த டைரக்டரியில் சேவ் செய்து வைக்கப்பட்டிருக்கும்? இந்த டைரக்டரியை மாற்றலாமா?


பதில்: புதிய, உங்களுக்குப் பிடித்த வகையில் டெம்ப்ளேட் பைல்களை உருவாக்கி சேவ் செய்து வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் டெம்ப்ளேட் பைல்கள் இருக்கும் டைரக்டரியை மாற்றுவது அவ்வளவு நல்லதல்ல. வேர்ட் டிபால்ட் முறையில் அந்த குறிப்பிட்ட டைரக்டரியில் தான் தேடும்; சேவ் செய்திடும். இருப்பினும் இந்த டெம்ப்ளேட்கள் எங்கு உள்ளன என்று அறியும் வழியைச் சொல்கிறேன்.
1. வேர்ட் தொகுப்பைத் திறந்து கொண்டு அதில் Tools மெனுவில் Options தேர்ந்தெடுக் கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
2. இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் File Types List என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.இந்த லிஸ்ட்டில் User Templates என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அது எந்த டைரக்டரியில் டெம்ப்ளேட் சேவ் செய்யப்படுகிறது என்று காட்டும். அதனைக் குறித்துக் கொள்ளவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:46 pm

கேள்வி: நான் இப்போது பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். சில வேலைகளுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் சரியாக வருகிறது என்று தெரிகிறது. இனி அதனையும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாமா? இதனால் பிரச்சினை வராதா?

பதில்: ஒரு கம்ப்யூட்டரில் எத்தனை பிரவுசர் வேண்டுமானாலும் வைத்துப் பயன் படுத்தலாம். இதனால் பிரச்சினை ஏற்படாது. ஆனால் ஒரு பிரவுசர் தான் உங்கள் கம்ப்யூட்டரில் மாறா நிலையில்
(default) இருக்கும். அதாவது இன்டர்நெட் முகவரியுடன் கூடிய லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த பிரவுசர் மூலம் தான் அந்த தளம் திறக்கப்படும். இரண்டு பிரவுசர் வைத்துக் கொள்வது நல்லதும் கூட. ஏதாவது ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டால் இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பயர்பாக்ஸில் நீங்கள் வைத்துள்ள புக்மார்க் அடையாளங்களை மாற்றிக் கொள்வதற்கும் வசதி தரப்பட்டுள்ளது. எனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினை நீங்கள் பதிந்து வைத்து இயக்கலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:48 pm

கேள்வி: அடிக்கடி பைல்கள் இருக்கும் இடம் தெரியாமல் தேட வேண்டியதுள்ளது. எந்த வகைகளில் எல்லாம் ஒரு பைலை கம்ப்யூட்டரில் தேடி அறியலாம் என்பதற்கு விளக்கம் தரவும்.


பதில்: உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். தவறே இல்லை ஆறுமுகம். இதோ விளக்கமான பதிலைத் தருகிறேன்.
பைல் தேடுவதற்கான மெனுவினை முதலில் பெற வேண்டும். இதற்கு Start பட்டன் அழுத்தி Search என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாக்ஸில் What do you want to search for? என்று கொடுக்கப்பட்டுள்ள பிரிவில் For File or Folders என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.இனி இந்தப் பிரிவுகளைப் பார்ப்போம்.
1. முதல் வகையாக பைலின் முழுப் பெயர் தெரியாத வகையினைக் காணலாம். உங்களுக்கு இந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது




*.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டு மானாலும் இருக்கலாம். பைலை வகைப் படுத்தித் தேடலாம். இந்த தேடலை முதல் பிரிவில் தரவும்.
2. பெயரும் தெரியவில்லை; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் உள்ளது என்றால் அதனை வைத்தும் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.
3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை look in என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம். எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.
4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனைப் பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்.
இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:50 pm

கேள்வி: என்னுடைய போட்டோ மற்றும் படங்கள் (ஜேபெக் பைல்கள்) எப்போது வெப் பிரவுசரிலேயே திறக்கின்றன. போட்டோக் களுக்கான புரோகிராம்களில் இவற்றைத் திறக்குமாறு செய்திட என்ன செய்ய வேண்டும்?



பதில்: உங்கள் பிரச்சினையை பைல் அசோசியேஷன் (File Association) பிரச்சினை என்று சொல்வார்கள். பலவாறான பைல்கள் இது போன்ற வேறு புரோகிராம்களில், ஏன் சில வேளைகளில் தவறான புரோகிராம்களிலும் திறக்கப்படும். இதனை எளிதாக சரி செய்திடலாம்.
1.விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். ஸ்டார்ட் (start)பட்டனில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் எக்ஸ்புளோர் (Explore) என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் கிடைக்கும். இங்கே நீங்கள் தொடர்பு தவறாக உள்ள டைப் பைல் ஒன்றைக் கண்டறிந்து அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். இனி உங்களுக்குக் கிடைக்கும் மெனுவில் Oணீஞுண ஙிடிtட என்றசொற்களுடன் இப்போது அந்த பைல் திறக்கப்படும் புரோகிராமின் பெயர் இருக்கும். இதனை மாற்ற வேண்டும் என்றால் கீழே உள்ள open with என்பதில் கிளிக் செய்தால், அந்த பைல் திறக்கப்படக் கூடிய புரோகிராம்களின் பட்டியல் இருக்கும். இதில் நீங்கள் விரும்பிய புரோகிராம் கிடைத்தால், அதனைத் தேர்ந்தெடுக்கலாம். தற்போது இருக்கும்(start) புரோகிராமினை விடுத்து வேறு ஒரு புதிய புரோகிராம் ஒன்றில் இது திறக்கப்பட வேண்டும் என விரும்பினால், open with என்று இருப்பதில் கிளிக் செய்தால் வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றிலிருந்து நீங்கள் விரும்பும் புரோகிராமின் பெயரைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலம். புரோகிராமின் பெயரைத் தேர்ந்தெடுத்தபின், புரோகிராம்கள் பட்டியலின் கீழாக " Always use this program to open this type of file" என்று ஓர் வரி இருக்கும். அதில் டிக் அடையாளம் ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதில் நீங்கள் விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுக் கலாம். அதுவே மீண்டும் மாற்றாதவரை அத்தகைய பைல்களைத் திறக்கும் புரோகிராமாக அமையும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:52 pm

கேள்வி: விஸார்ட் என்பது எதனைக் குறிக்கிறது?


பதில்: பொதுவாக wizard என்றால் மந்திரவாதி, சூனியக்காரன் என்று பொருள். அதனை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த சொல் கம்ப்யூட்டர் அறிவியலில் வேறு பொருளைத் தந்தாலும் கிட்டத்தட்ட ஒரு மந்திரவாதி போலத்தான் இதுவும் செயல்படுகிறது. தெருவோரம் கூட்டம் சேர்க்கும் செப்படி வித்தைக்காரன் அப்படிச் செய்,அதைப் பார்த்தாயா! இப்படிப் போடு, கண்ணை மூடு என்றெல்லாம் சொல்வது போல, விண்டோஸ் இயக்கத்தில் கிடைக்கும் விஸார்ட் தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டு, அதற்கான ஆப்ஷன்களையும் (விருப்பங்கள்) கேட்டு, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி வேலையை முடிக்கும். புரோகிராம் இன்ஸ்டலேசன், புரோகிராமில் முதலில் பைல் உருவாக்கும் நிலை போன்றவற்றில் நம்மை வழி நடத்தும் டயலாக் பாக்ஸே விஸார்ட் எனப்படுவது. இது எப்போதும் நமது நண்பனே.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:53 pm

கேள்வி: எனக்கு வரும் இமெயில்களில் உள்ள சில இணைய தளங்களின் முகவரிகள் லிங்க்காக இல்லாமல் டெக்ஸ்ட்டாக இருக்கின்றன. இதனால் இவற்றில் கிளிக் செய்து இணைய தளத்தைப் பெற முடியவில்லை. இது எதனால் ஏற்படுகிறது. தீர்வு என்ன?

பதில்: பொதுவாக அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் இணைய முகவரியினை லிங்க்காகத்தான் தரும் வகையில் செயல்படும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் எது என்று நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் புரோகிராம் அப்படிப்பட்டதாக இருப்பின் அதனை மாற்றும் வழி அதன் மெனுக்களில் இருக்கும். இல்லை எனில் முகவரியினை காப்பி செய்து பிரவுசரில் பேஸ்ட் செய்து தளத்தைக் காண வேண்டியதுதான்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 2:07 pm

கேள்வி: போல்டர் ஒன்றை பாஸ்வேர்ட் கொடுத்து மற்றவர்கள் அதனைத் திறக்க முடியாமல் பாதுகாக்க முடியுமா? எங்கள் அலுவலகத்தில் பலர் ஒரு கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். அதற்கான வழிகளைக் கூறவும்.


பதில்: விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பிலேயே போல்டர் ஒன்றைப் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாக்க இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கென சில இலவசமாக டவுண்லோட் செய்து பயன் படுத்தும் புரோகிராம்களும் உள்ளன.
1. உங்கள் அலுவலகக் கம்ப்யூட்டரில் உங்களுக்கென யூசர் அக்கவுண்ட்டுடன் பாஸ்வேர்ட் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதன் பைல் சிஸ்டம் என்.டி.எப்.எஸ். (NTFS) என்று எண்ணுகிறேன்.




2. இனி எந்த போல்டருக்குப் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டுமோ அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின் "Properties" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Alt அழுத்திய வாறே டபுள் கிளிக் செய்திடவும்.



3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ள பாக்ஸினைத் தேர்ந்தெடுக்கவும்.



4. பின் Apply என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய அக்கவுண்ட்டுக்கு பாஸ்வேர்ட் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். பாஸ்வேர்ட் ஒன்றை தரப்போகிறீர் களா? என்று கேட்கப்படும். உங்கள் போல்டரை நீங்கள் பிரைவேட் ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த பாஸ்வேர்டினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கம்ப்யூட்டரில் உங்கள் அக்கவுண்ட்டில் நுழைகையிலும் அதே பாஸ்வேர்டினைக் கொடுக்க வேண்டியதிருக்கும்.



5. பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்து பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும்.



6. பின் Properties டயலாக் பாக்ஸில் OK கிளிக் செய்திடவும்.



7. இனி உங்கள் பாஸ்வேர்ட் இல்லாமல் இந்த போல்டரை யாரும் திறக்க முடியாது. இரண்டாவதாக ஒரு வழி: இந்த போல்டர் ஸிப் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக பாஸ்வேர்ட் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு ஸிப் செய்யப்பட்ட போல்டர் மீது இருமுறை கிளிக் செய்திடவும். மேலாக உள்ள மெனுவில் பைல் தேர்ந்தெடுத்து, பின் ‘Add a Password’ என்பதில் கிளிக் செய்திடவும். பாஸ்வேர்ட் பாக்ஸில் பாஸ்வேர்ட் ஒன்றை டைப் செய்திடவும். மீண்டும் Confirm Password பாக்ஸிலும் இதனை டைப் செய்திடவும். இனி இந்த போல்டரை நீங்கள் மட்டுமே பாஸ்வேர்ட் பயன்படுத்திப் பார்க்க முடியும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக