புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
37 Posts - 40%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
1 Post - 1%
mruthun
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
mruthun
கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:18 pm

என்னுடைய ஸ்டார்ட் மெனுவில் My Recent Documents என்ற போல்டர் இல்லை. இதனை எப்படி இதில் கொண்டு வருவது? நானும் பல வழிகளை மேற்கொண்டு பார்த்துவிட்டேன். உதவவும்.



இதற்கு தீர்வு மிக எளிது. கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.




1. Start பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். ஸ்டார்ட் மெனு ஏற்கனவே மேலே இருந்தால் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் Properties மட்டுமே கிடைக்கும்.




2. Properties மெனுவில் ஸ்டார்ட் மெனு டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Customize என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள Advanced என்ற பட்டனை அழுத்தவும்.




3.இங்கு Recent Documents என்ற இடத்தில் உள்ள "List my most recently opened documents" என்பதனை அடுத்திருக்கும் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.



4.பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அடுத்த முறை ஸ்டார்ட் மெனு திறந்தால் My Recent Documents என்ற பிரிவு கிடைக்கும். இதே போல இந்த பிரிவு தேவையில்லை என்று கருதுபவர்கள் மேலே சொன்ன வழி சென்று என்ற இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம்.




ஒவ்வொரு முறை ஒரு குறிப்பிட்ட புரோகிராமினைப் பயன்படுத்துகையில் ஒரு பாப் அப் விண்டோ எழுந்துவந்து இதில் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கான ரிபோர்ட்டை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அனுப்பவா? என்று கேட்கிறது. வேண்டாம் என்று கிளிக் செய்து அடுத்த முறை அந்த புரோகிராமினை ஸ்டார்ட் செய்கையில் சரியாகத் தொடங்குகிறது. ஆனால் ஓரிரு நாட்களில் மீண்டும் ரிப்போர்ட் தரவா பல்லவி தொடர்கிறது. இதற்குக் காரணம் வைரஸா? அல்லது புரோகிராமினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? இத்தகைய பாப் அப் எர்ரர் செய்தி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?




விண்டோஸ் எக்ஸ்பி தரும் இந்த பாப் அப் விண்டோ எர்ரர் செய்தியினை நீங்கள் விரும்பவில்லை என்றால் தடுத்துவிடலாம். டெஸ்க் டாப்பில் உள்ள My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் System Properties விண்டோவில் Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் "Error Reporting" என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இதில் உங்களுக்கு சில ஆப்ஷன்ஸ் கிடைக்கும். எர்ரர் ரிபோர்ட்டிங் என்பதனை இயங்காமல் செய்துவிடலாம். Disable error reporting என்பதனை இயக்கலாம்.



அவ்வாறு செய்துவிட்டால் கிராஷ் ஆகும் புரோகிராம் அப்படியே கிராஷ் ஆகிவிடுமே ஒழிய எர்ரர் ரிப்போர்டிங் எல்லாம் கொடுக்காது. எந்தவிதமான ரிபோர்ட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் செல்லாது.




இன்னொரு ஆப்ஷனும் உள்ளது. But Notify Me When Critical Errors Occur என்பதையும் இயக்கலாம். இது மிக மோசமான பொதுவான பிரச்சினைகள் குறித்து மட்டும் ரிப்போர்ட் செய்திடும். ஆனால் இந்த எர்ரர் ரிப்போர்டிங் நல்லதுதானே. ஏனென்றால் விண்டோஸ் தானாகவே ரிப்போர்ட் தயாரிக்கும் போது நம்மால் எடுத்து அனுப்ப இயலாத சில சிஸ்டம் விஷயங்களைத் தெளிவாக அனுப்பும். அதனைப் படித்து அறியும் மைக்ரோசாப்ட் நிறுவன ஆய்வாளர்கள் எதில் பிரச்சினை இருக்கிறது என்று கண்டறிந்து அந்த பிரச்சினை பொதுவானது அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினுடையது என்றால் அதற்கான தீர்வினைக் கண்டறிய முயற்சித்து தங்களுடைய பேட்ச் பைலில் இணைத்துத் தருவார்கள்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:18 pm

புதியதாக வால் பேப்பர் ஒன்றை என் கம்ப்யூட்டரில் அமைத்தேன். ஆனால் அதை மாற்ற வேண்டுமானால் என்ன செய்திட வேண்டும்?


உங்கள் டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் Properties தேர்ந்தெடுத்து Desktop என்பதைத் தேர்ந்தெடுங்கள். அதில் வால் பேப்பர் பயன்படுத்த என படங்கள் பட்டியல் ஒன்று கிடைக்கும். அதில் எந்த பேக் கிரவுண்ட் வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். அது டெஸ்க்டாப்பில் எப்படி காட்டப்படும் என்பதற்கு ஒரு முன் தோற்றம் கிடைக்கும். பின் அந்த காட்சி திரையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மூன்று ஆப்ஷன்கள் (Center, Tile, or Stretch) கிடைக்கும். இதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதில் உள்ள Browse என்ற பட்டனில் கிளிக் செய்தால் உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் கிடைக்கும். இதன்மூலம் கம்ப்யூட்டரில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள படங்களைத் தேடிப் பார்த்து உங்களுக்குப் பிடித்த பட பைலைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:41 pm

ஆஸ்பத்திரி ஒன்றில் பணி புரிகிறேன். அடிக்கடி டிகிரி சிம்பல் டைப் செய்திட வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை கேரக்டர் மேப் சென்று அந்த சிம்பலை எடுத்து காப்பி செய்தால் பேஸ்ட் ஆகிறது. சில வேளைகளில் சிரமம் தருகிறது. வேறு வழி உள்ளதா? கேரக்டர் மேப் வழியைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?



உங்களுடைய நீண்ட கடிதத்திலிருந்து இந்த அடையாளத்தினை நீங்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டி இருப்பது தெரிகிறது. கம்ப்யூட்டர் உதவாமல் சிரமம் வைக்கிற்தே என்று நீங்கள் வருந்த வேண்டாம். டிகிரி சிம்பல் (�) அடையாளம் டாகுமெண்ட்டில் கொண்டு வர ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன். முதலாவதாக கீ போர்டு ஷார்ட் கட் கீகள். ஆல்ட் கீயினை அழுத்திக் கொண்டு நம் லாக் கீ போர்டில் 0176 என்று அழுத்தவும். டிகிரி அடையாளம் சரியாக அமைந்துவிடும். இது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் அனைத்து புரோகிராம்களிலும் செயல்படும். எண்களை டைப் செய்திட நம் லாக் கீ ஆன் செய்து அந்த கீகளையே பயன்படுத்தவும். எழுத்துக் களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான கீகளைப் பயன்படுத்தினால் இது செயல்படாது. இரண்டாவது வழி: வேர்ட் மெனுவில் இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று சிம்பல் (Symbol) என்பதை செலக்ட் செய்திடவும். கிடைக்கும் சிம்பல் டயலாக் பாக்ஸில் டிகிரியைத் தேர்ந்தெடுத்து டபுள் கிளிக் செய்திடவும்.



மூன்றாவதாக ஆட்டோ கரெக்ட் வழியாகவும் இதனை மேற்கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்பதாலும், சிரமம் எதுவுமின்றி இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாலும் இதனையே நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இரண்டாவது வழியில் குறிப்பிட்ட டயலாக் பாக்ஸில் ஆட்டோ கரெக்ட் என்பதில் கிளிக் செய்தால் ஆட்டோ கரெக்ட் பாக்ஸ் கிடைக்கும். அதில் Replace என்ற பாக்ஸில் Degreesymbol என டைப் செய்திடவும். with என்று உள்ள பாக்ஸில் மேலே சொன்னபடி ஆல்ட் +0176 டைப் செய்தால் டிகிரி சிம்பல் அங்கு உட்கார்ந்துவிடும். இனி [b]Add
என்பதில் கிளிக் செய்து விட்டு வெளியே வரவும். அடுத்து நீங்கள் என்று டைப் செய்தால் போதும். வேர்ட் உடனே நீங்கள் விரும்பும் டிகிரி சிம்பலைத் தந்துவிடும்.



இது எளிதாகவும் நீங்கள் விரும்பும்படியும் இருந்தாலும்கேரக்டர் மேப்பில் என்ன பிரச்சினை உங்களுக்கு இருக்கும் என்பதையும் பார்ப்போம். கேரக்டர் மேப்பைப் பெற்று அந்த சிம்பலை செலக்ட் செய்த பின் அதில் டபுள் கிளிக் செய்தால் அது முதலில் கிளிப் போர்டுக்குத்தான் செல்லும். பின் குறிப்பிட்ட இடத்தில் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் சிம்பல் பேஸ்ட் செய்யப்படும். இதனை வரிசையாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

[/b]

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:42 pm

எம்பி3 பிளேயர் போல எம்பி4 பிளேயர் உண்டா? எம்.பி.4 என்பது எம்.பி.3 யின் அட்வான்ஸ்டு வெர்ஷனா? குழப்பமாக உள்ளது; விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



தொழில் நுட்பத்தின் வேகம் சில நேரங்களில் நம்மை மிரளவைக்கிறது. அதன் வெளிப்பாடே நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி. எம்பி4 என்பதைச் சுருக்கமாகச் சொன்னால் அது கம்ப்ரஸ்டு வீடியோ பைல் எனலாம். இந்த பார்மட்டின் முக்கிய நோக்கம் என்னவென்றால் வீடியோ பைல்களைச் சுருக்கிப் பதிவதுதான். அப்போதுதான் இந்த வகை பைல்களை எளிதாக எங்கும் எடுத்துச் சென்று சிரமமின்றிப் பயன்படுத்த முடியும். ஏனென்றால் வீடியோ பைல்கள் அளவில் பெரியவை. எனவே தான் அவற்றைச் சுருக்கி விரியும் தொழில் நுட்பம் ஒன்றால் சிறிய அளவில் ஆக்கிவிடுகின்றனர். அதைத்தான் எம்பி4 என அழைக்கின்றனர்.




எம்பி 4 பைல்களும் எம்பி 3 பைல்களைப் போன்றவையே. எம்பி3 பைல்களும் அதில் உள்ள ஆடியோ சுருக்கப்பட்டு அதன் தன்மை கெடாமல் கிடைக்கின்றன. இந்த வகை பைல்களுடன் வீடியோவும் இணைகையில் எம்பி4 பார்மட் கிடைக்கிறது. எம்பி4 என்பதை MPEG4 AVC எனவும் அழைக்கின்றனர். இது Advanced Video Coding என்பதன் சுருக்கமாகும். இன்னும் கொஞ்சம் விளக்கம் அளிக்கட்டுமா!



எம்பி4 பைல்கள் பெரும்பாலும் வீடியோக்களுடன் தொடர்புடையதால் எம்பி3 மியூசிக் மற்றும் ஆடியோ பைல்களைக் காட்டிலும் சிறிது சிக்கல் நிறைந்தவை ஆகும். இருப்பினும் சில ஸ்பெஷல் கோடிங் மூலம் அவை சுருக்கப்படுகின்றன. பல வகைகளில் இவை சுருக்கப்பட்டு விரிக்கப்படுகின்றன. இதனையே ஆங்கிலத்தில் compression and decompression என்கிறார்கள். அல்லது சுருக்கமாக codec என்றும் அழைக்கின்றனர். எம்பி3 மற்றும் எம்பி4 ஆகிய இரண்டு வகை பார்மட்டுகளையும் எளிதில் நகல் எடுக்கலாம் என்பதால் பைரசிக்கு இவை தப்புவதில்லை. எனவே இவற்றை உருவாக்குபவர்களுக்கு இவை பாதுகாப்பான வர்த்தகத்தைத் தருவது இல்லை

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:44 pm

வேப்பர் வேர் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சில கட்டுரைகளில் Aband onware என்று படித்திருக் கிறேன். அது எதனைக் குறிப்பிடுகிறது?


சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி அதனை விற்பனை செய்யாமலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்காமலும் இருந்தால் அதனை Abandonware என்று அழைக்கிறார்கள். பெரும்பாலான கம்ப்யூட்டர் கேம்ஸ் புரோகிராம்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம். இந்த சொல்லை கூகுள் சர்ச் இஞ்சினில் டைப் செய்து கிடைக்கும் பட்டியலில் இவை எப்படிப்பட்டவை என்று பாருங்கள். பழைய கேம்ஸ், பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் என்று நம் நினைவில் மட்டுமே உள்ளவற்றை அங்கு காணலாம். இவை பெரும்பாலும் தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்காது. அல்லது "Compatibility Mode" என்னும் வகையில் இவற்றை இயக்க வேண்டும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:44 pm

நான் ஒவ்வொரு புரோகிராமில் பைல் ஒன்றைத் திறந்து வைத்துப் பயன்படுத்துகையில் சிஸ்டம் ட்ரேயில் ஒரு சிறிய ஐகான் உருவாகுகிறது. ஆனால் அப்புறம் சில நேரம் கழித்து திறக்கும் பைல்களுக்கு அது போல உருவாவதே இல்லை. இதனால் கம்ப்யூட்டர் இயக்கம் பாதிக்கப்படுவது இல்லை என்றாலும் ஏன் இப்படி ஏற்படுகிறது என்று தெரிய வில்லை. தீர்வு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.



புதியதாய் திறக்கும் பைல்களுக்கு ஐகான் பட்டன்கள் அமைக்கப்படுவதில்லை என்பதுவே உங்கள் கலக்கத்திற்குக் காரணம். அவை திறக்கப்படுகின்றன; ஆனால் உங்களுக்குக் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட முடியவில்லை என்பதே உண்மை. டாஸ்க் பார் நிரம்பியவுடன் அடுத்து வரும் பைல் பட்டன்களுக்கு இடம் விடுவதற்காக டாஸ்க் பார் தன்னைச் சுருக்கி வளைத்துக் கொள்கிறது என்பதே உண்மை. டாஸ்க் பாரின் ஓப்பன் விண்டோ ஏரியாவின் அருகே அம்புக் குறியினைக் காணலாம். அதில் கிளிக் செய்தால் அனைத்து பைல்களுக்கான பட்டன் களையும் காணலாம்.




இது போன்ற சூழ்நிலை ஏற்படக் கூடாது என்றால் உங்கள் டாஸ்க் பாரினை டபுள் டெக்கர் பஸ்ஸாக மாற்றிவிடுங்கள். டாஸ்க் பார் மீதாக உங்கள் கர்சரைக் கொண்டு செல்லவும். மேலும் கீழுமாக இரண்டு அம்புக் குறிகள் உள்ள அடையாளக் குறியாக உங்கள் கர்சர் மாறும். உடனே அதனைச் சற்று மேலே இழுத்துவிடுங்கள். இனி சரியாகிவிடும். பைல்கள் பட்டன்கள் தங்க பெரிய வீடு கிடைக்கும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:46 pm

வேர்டில் டெக்ஸ்ட்டை ஹைலைட் செய்வது எதற்காக? அவ்வாறு செய்கையில் எத்தனை வண்ணங்களில் அதனை அமைக்கலாம். அதற்கான வழிகள் என்ன?




பதினைந்து விதமான வண்ணங்களில்வேர்ட் டெக்ஸ்ட்டை ஹைலைட் செய்திடலாம். வேர்டில் தரப்படும் ஹைலைட் டூல் மிக முக்கியமானதாகும். இதன் மூலம் நம் டாகுமெண்ட் டில் அதனைப் படிப்பவர்களின் அதிக கவனத்தைப் பெற வேண்டிய டெக்ஸ்ட்டை மற்றவற்றிடமிருந்து மாறுபட்டு அமைக்கலாம். இது ஒரு ஹைலைட் பேனாவால் சாதாரணமாக நாம் என்ன செய்வோமோ அதனையே செய்கிறது. இதனுடைய டிபால்ட் கலர் மஞ்சள். மொத்தம் ஒரு வரிசைக்கு ஐந்து வண்ணங்களாக மூன்று வரிசைகளில் 15 வண்ணங்கள் தரப்படுகின்றன. இதனைக் கிளிக் செய் தால் பென்சில் இருப்பது போல ஒரு பிரஷ் கர்சர் கிடைக்கும். அதனைக் கொண்டு எந்த டெக்ஸ்ட்டை ஹை லைட் செய்திட வேண்டுமோ அதனை ஹைலைட் செய்திடலாம்.




இந்த ஹைலைட் டூலிலேயே இன்னொரு ஆப்ஷன் இருக்கும். இதனை தேர்ந் தெடுத்தால் ஹைலைட் டூல் கலர் அடிக்காது. ஏற்கனவே அமைத்ததை நீக்க வேண்டும் என எண்ணினாலும் இதனைப் பயன்படுத்தலாம். புதிய டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட புதிய வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தால் பழைய ஹைலைட் செய்திட்ட டெக்ஸ்ட் அதே பழைய வண்ணத் திலேயே இருக்கும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:48 pm

கேள்வி: இன்டர்நெட் பயன்பாட்டில் எஸ்.எஸ்.எல். என்பது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. இதனைப் பெற என்ன செய்ய வேண்டும்? இதன் பொருள் என்ன? எப்படி நம்மை இது பாதுக்காக்கிறது?



பதில்: Secure Socket Layers என்பதன் சுருக்கமே SSL இது இன்டர்நெட் தளத்தின் பாதுகாப்பினை அளிக்கிறது. நீங்கள் இது போன்ற பாதுகாப்பான ஒரு தளத்தில் நுழைகையில் அது சில விநாடிகளுக்கு உங்கள் தளத்துடன் உரையாடுகிறது. இந்த உரையாடலின் போது சுருக்கப்பட்ட தகவலை அனுப்புகிறது. இதனை அந்த தளமும் உங்கள் பிரவுசர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இந்த உரையாடல் சரியாக செட் செய்யப்பட்டுவிட்டால் பின் அந்த தளம் வழக்கமான தளமாகச் செயல்படும். ஆனால் இடையே பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டே நடைபெறும். இதனால் மூன்றாவது நபர் குறுக்கே புகுந்து இந்த தகவல் பரிமாற்றத்தினை எந்த வகையிலும் பெற முடியாது. இதனால் தான் பாதுகாப்பான சர்வர்களுடன் நடைபெறும் தகவல் பரிமாற்றம் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது. இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். தகவல் பரிமாற்றத்தின் போதுதான் தகவல்களுக்கு என்கிரிப்ஷன் முறையில் பாதுகாப்பு கிடைக்கிறது. அந்த தகவல் சர்வரில் பதிந்து இருக்கையில் அதனை எடுக்க முயற்சிப்பவரின் முயற்சிகளை வேறு வழியில் தான் பாதுகாக்க வேண்டும். செக்யூர் சைட், பாதுகாப்பான தளம், என்பதனை அதன் முகவரியில் உள்ள https:// என்ற சொல்லில் உள்ள இறுதி எழுத்தைக் கொண்டு (s) ) அறியலாம். நீங்கள் இதனைப் பெற்று உங்கள் கம்ப்யூட்டரில் எதுவும் செய்திட முடியாது.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:49 pm

கேள்வி: எல்.சி.டி. மானிட்டர் ஒன்றை நான் என் கம்ப்யூட்டருடன் பயன்படுத்துகிறேன். அவ்வப்போது சிக்னல் டைமிங் மாற்ற வேண்டும் என மெசேஜ் வருகிறது. இது கம்ப்யூட்டர் தரும் மெசேஜா? அல்லது மானிட்டர் சம்பந்தப்பட் டதா? என்ன செய்திட வேண் டும் என ஆலோசனை கூறவும்.





பதில்: விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கேம்ஸ் விளையாடுகையில் உங்கள் மானிட்டர் எல்.சி.டி. மானிட்டர் என்றால் Attention: Signal frequency is out of range ... change signal timing என்று வரும். இதைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் மானிட்டரை சப்போர்ட் செய்திடும் சாதனம் அதனைக் காட்டிக் கொடுக்கிறது என்று பொருள். இது எதைக் குறிக்கிறது என்று மலைப்பாக இருக்கிறதா! உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்ட் குறிப்பிட்ட ரெப்ரெஷ் ரேட்டில் இயங்குகிறது; ஆனால் உங்கள் மானிட்டரால் இயலவில்லை. உங்கள் மானிட்டர் செட்டிங்ஸ் செக் செய்து அதன் ரேட்டினைக் குறைக்கவும்.



டெஸ்க் டாப் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் Settings என்னும் டேப்பிற்குச் செல்லவும். இதில் Advanced பட்டனில் கிளிக் செய்து அதில் Monitor டேப்பை எடுக்கவும். அது அதிகமாக (எ.க 85 Hz அல்லது அதிகமாக) இருந்தால் அதனை 60 Hz ஆக மாற்றவும். இந்த ரேட்டில் அனைத்து மானிட்டர்களும் சரியாகச் செயல் படும். நீங்கள் இந்த விண் டோவில் இருக்கையில் அது கிரே கலரில் மாற வில்லை என்றால் "Hide modes that this monitor cannot display"என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இதனால் நீங்கள் செட் செய்த ரேட் மாறாது.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:50 pm

கேள்வி: மேக் அபி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை வைத்திருந்தேன். ஆனால் தற்போது அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் இனி சப்போர்ட் கிடையாது எனவும் செய்தி வருகிறது. வேண்டும் என்றால் கட்டணம் கட்ட வேண்டும் என்று இதனை விற்பனை செய்தவர் கூறுகிறார். என்னுடைய சந்தேகம் ஏற்கனவே மேக் அபி வைத்த இடத்தில் இலவச சாப்ட்வேர் தொகுப்பினை (ஏவிஜி) பதியலாமா என்பதுதான்.
விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



பதில்: ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கு எப்போது வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். மேக் அபியுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் என்பது நீங்கள் செலுத்திய பணத்திற்கானதுதான். ஆனால் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கு மாறுவதற்கு முன் சிலவற்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். மேக் அபி தொகுப்பு தந்த அனைத்து வசதிகளும் இலவச ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பில் கிடைக்காது. மேலும் மேக் அபி தொகுப்புடன் சில செட்டிங்ஸ் ஏற்படுத்தி இருப்பீர்கள். எந்த புரோகிராமினை அனுமதிப்பது, எந்த தளத்தை அனுமதிக்கக் கூடாது என்பதெல்லாம் ஏவிஜி இலவச தொகுப்பு அப்படியே ஏற்றுக் கொள்ளாது.



மேக் அபி நிறுவனத்துடன் அடுத்த ஆண்டுக்கான பணத்தையும் கட்டுகிறேன் என்று ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தால் அதனை முறையாகத் தெரிவித்து ரத்து செய்திடுங்கள். ஏவிஜி தொகுப்பினை இன்ஸ்டால் செய்திடும் முன் மேக் அபி தொகுப் பை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். இதற்குச் சரியான வழியைச் சொல்கி றேன். முதலில் இலவச ஏவிஜி தொகுப்பினை இன்டர்நெட் மூலம் டவுண்லோட் செய்து டெஸ்க்டாப்பில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இன்டர்நெட் இணைப்பை கட் செய்திடுங்கள். பின் மேக் அபி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். பின் ஏவிஜி தொகுப்பை இன்ஸ்டால் செய்திடவும்.

Sponsored content

PostSponsored content



Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக