புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
68 Posts - 76%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
234 Posts - 76%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
8 Posts - 3%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 15:10

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 23:41

வெப்சைட்டிலிருந்து புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து அதனைப் பதிந்து இயக்கிவருகிறேன். டவுண்லோட் செய்த அந்த புரோகிராம் பைலை இன்னும் கம்ப்யூட்டரில் வைத்திருக்க வேண்டுமா?



டவுண்லோட் செய்த புரோகிராம் பைல் எத்தகையது என்று நீங்கள் குறிப்பிடவில்லை. பொதுவாக அது ஒரு ஸிப் பைலாக இருக்கும். அதனைக் கிளிக் செய்து கிடைத்த டயலாக் பாக்ஸில் தரப்பட்ட ஆப்ஷன்களைப் பின்பற்றி புரோகிராமினைப் பதிந்திருப்பீர்கள். அடுத்து இந்த டவுண்லோட் செய்த புரோகிராம் தேவையில்லை. எனவே நீக்கிவிடலாம். சில புரோகிராம்கள் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக இருக்கும். இதிலும் இரண்டு வகை உண்டு. சில இ.எக்ஸ்.இ. பைலை இயக்கினால் அது விரிந்து பல பைல்களை ஒரு தொகுப்பாகப் பதிந்து கொள்ளும். இதில் அந்த புரோகிராமிற்கான இ.எக்ஸ்.இ.பைல் இருக்கும். எனவே டவுண்லோட் செய்த இந்த வகை பைலும் தேவை இருக்காது. ஆனால் நேரடியாக இயங்கும் இ.எக்ஸ்.இ. பைல் எனில் அது கட்டாயம் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். அதனைக் கிளிக் செய்துதான் நமக்கு அந்த புரோகிராம் கிடைக்கும்.





பொதுவாக இந்த பைல்களை நாம் மீண்டும் டவுண்லோட் செய்திடலாம் என்றாலும் 20% பைல்கள் தளங்களிலிருந்து எடுக்கப்பட்டு விடுகின்றன. அல்லது அப்டேட் செய்யப்படுகின்றன. எனவே இது போல பைல்களை தனி டைரக்டரியில் சேவ் செய்து புரோகிராம்களைப் பதியவும். பின் அந்த பைல்கள் அனைத்தையும், உங்களுக்கு ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால் சிடி, டிவிடி, ஸிப் டிரைவ் போன்றவற்றில் பதிந்து வைக்கலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 23:41

இன்டர்நெட்டைக் கண்ட்ரோல் செய்வது யார்? ஐ.நா. சபை போல ஏதாவது குழு உள்ளதா? எந்த நாட்டிற்கு இதில் அதிக அதிகாரம் உண்டு?



இன்டர்நெட் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இன்டர்நெட் தனி ஒருவருக்குச் சொந்தமில்லை. என்ன இது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் என்று நினைக்கிறீர்களா? ஆம், எந்த ஒரு தனி நாட்டிற்கும் இது சொந்தமில்லை. இன்டர்நெட்டை The World Wide Web Consortium என்ற அமைப்பு தான் கண்ட்ரோல் செய்கிறது. இதனை ஙி3இ என்றும் அழைப்பார்கள். இது பன்னாட்டளவிலான ஓர் அமைப்பு. இந்த அமைப்பில் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை இன்டர்நெட்டின் ஒவ்வொரு பிரிவு குறித்தும் கவனம் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன.



இவை ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் நாடு ஒன்றில் கூடி இன்டர்நெட் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் விவாதிப்பார்கள். அங்கு பல முடிவுகள் எடுக்கப்படும். மேலும் அவ்வப்போது சில முடிவுகளும் எடுக்கப்பட்டு அனைவருக்கும் அறிவிக்கப்படும். HTTP, FTP, HTML, PHP மற்றும் அகுக என்றெல்லாம் இன்டர்நெட் வெப்சைட் குறித்து பேசுகிறோம் அல்லவா? இவற்றை வரையறை செய்வது இதுதான். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சுருக்கமான பெயர் தரப்படுகிறது அல்லவா! அவற்றை முடிவு செய்வதும் இந்த அமைப்புதான். இணையப் பெயர்கள் எப்படி இருக்க வேண்டும் (இந்தியாவிற்கு in ) என்று வரையறை செய்வதில் இருந்து இன்டர்நெட் டிராபிக் எப்படி இருக்க வேண்டும் என அனைத்தையும் இந்த அமைப்பு முடிவெடுத்துச் செயல்படுத்துகிறது. இதற்கு இன்டர்நெட் தொடர்பான பல நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த அமைப்பு ஜனநாயக ரீதியாக, எந்த ஒரு நாட்டையும் சாராமல், முடிவெடுப்பதனால்தான் உலகின் அனைத்து குடிமக்களும் இன்டர்நெட்டைப் பயன்படுத்த முடிகிறது

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 23:42

இப்போது எந்த பிரவுசர் குறித்து படித்தாலும் பிரைவேட் பிரவுசிங் என்பது குறித்து எழுதப்படுகிறது. இதனால் என்ன பயன்? இதுவரை நாம் பிரைவேட்டாக பிரவுசிங் செய்திடவில்லையா? இது உண்மையிலேயே நல்லது என்றால் அதனை எப்படி செட் செய்வது?



நாம் இன்டர்நெட்டில் இப்போதெல்லாம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முடிகிறது. ட்ரெயின், பஸ் டிக்கட் வாங்குவது, எலக்ட்ரிசிட்டி, டெலிபோன் பில் கட்டுவது, பொருட்கள் வாங்குவது என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இந்த தளங்களுக்குச் செல்கையில் பிரவுசர்கள் நீங்கள் எந்த தளங்களைப் பார்த்தீர்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டு வைத்துக் கொண்டு பின் நாளில் அந்த தளத்தின் முதல் சொல்லை டைப் செய்திடத் தொடங்கினாலே தளத்தின் முகவரியைத் தந்துவிடும். முழுமையான முகவரியை டைப் செய்திடாமலேயே நமக்குத் தள முகவரி கிடைக்கும்.




இதில் என்ன ஆபத்து எனில் அந்த கம்ப்யூட்டரைக் கையாளும் மற்றவர்களுக்கும் இந்த பட்டியல் கிடைக்கும். நீங்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தளங்களைப் பார்த்தீர்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டுமா என்ன? அப்படியானால் இதற்கு வழி என்ன? என்று கண்டறிய முயற்சிக்கையில் ஏற்பட்ட தீர்வு தான் பிரைவேட் பிரவுசிங். இந்த சொற்களை பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறது. இதன் தற்போதைய பதிப்பில் இது தரப்படுகிறது.





Tools சென்று கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Start Private Browsing என்று ஒரு பிரிவு இருக்கும். இதைக் கிளிக் செய்தால் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த டேப்களெல்லாம் மறைந்து இப்போதிருந்து பிரைவேட் பிரவுசிங் ஆரம்பிக்கிறது. பயர்பாக்ஸ் நீங்கள் பார்க்கும் தளங்களை குறித்து எந்த பதிவினையும் ஏற்படுத்தாது. ஆனால் நீங்கள் ஏற்படுத்தும் புக் மார்க் போன்றவை பதியபப்படும் என்று அறிவிப்பு வரும். இதில் ஓர் எச்சரிக்கையும் உண்டு. பயர்பாக்ஸ்தான் பதிந்து கொள்ளாது.எனவே நீங்கள் இன்டர்நெட்டில் எந்த எந்த தளங்களைப் பார்த்தீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்கு இணைய சேவை தரும் நிறுவனத்திற்குத் தெரியும். எனவே உங்களுக்கு ஊதியம்கொடுத்து வேலைக்கு வைத்திருப்பவர் நினைத்தால் அவரும் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம் என்று ஓர் எச்சரிக்கை வரும்.





இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இதனை InPrivate Browsing என அழைக்கின்றனர். இது என்ன செய்கிறது என்றால் அப்போது நீங்கள் செல்லும் தளங்களின் பட்டியலை பதிய வைத்துக் கொண்டு உங்கள் பிரவுசிங் பணி முடித்து பிரவுசரை முடிக்கையில் அனைத்தையும் அழித்துவிடுகிறது. இரண்டு தொகுப்புகளிலும் இதனை பெற ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பு உண்டு. அது Ctrl + Shft + P ஆகும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 23:43

ப்ளக் இன் புரோகிராம் என்று குறிப்பிடப்படுவது எந்த வகையைச் சேர்ந்தது? இது ஒரு வகை பைலா?



ப்ளக் இன் என்பது ஒரு சிறிய புரோகிராம். இது உங்கள் பிரவுசருடன் இணைந்து செயலாற்றும் வகையில் வடிமைக்கப்பட்டிருக்கும். சில வடிவில் இருக்கும் வெப் மீடியாவினை இயக்க இந்த ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படும். எடுத்துக் காட்டாக சில வெப் தளங்கள் நீங்கள் கேம்ஸ் விளையாட ஷாக்வேவ் தரும் வசதியினைப் பயன்படுத்துகின்றன. எனவே நீங்கள் இந்த கேம்ஸ் விளையாட வேண்டும் என்றால் ஷாக் வேவ் ப்ளக் இன் கட்டாயம் தேவை. அப்படியானால் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டுமா என்று எண்ண வேண்டாம்.




நீங்கள் குறிப்பிட்ட கேம்ஸ் அல்லது வேறு வகை வெப் மீடியாவினைத் திறக்க எண்ணுகையில் அந்த தளமே உங்கள் கம்ப்யூட்டரைத் தேடிப் பார்த்து இந்த ப்ளக் இன் இல்லை. சற்றுப் பொறுக்கவும்; நானே தேடிப் பதிந்து கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டு அந்த ப்ளக் இன் புரோகிராமினைப் பதிந்துவிடும். ஆனால் இப்போது வரும் பெரும்பாலான பிரவுசர்கள் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களையும் உள்ளடக்கியே வருகின்றன.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 23:44

நான் என்னுடைய அல்லது பொதுவாக ஒரு கம்ப்யூட்டரைக் காலையில் இயக்க தொடங்கினால் அலுவலக நேரம் முடியும் வரை அதனை அணைக்காமல் இருக்கலாமா? அது கம்ப்யூட்டருக்கு நல்லதா? அல்லது தொடர்ந்து அணைக்காமலேயே வைத்துவிடலாமா?



என்னடா இந்த பட்டிமன்றக் கேள்வி சில மாதங்களாகக் காணோமே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் கண்ணன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை இங்கு இது குறித்துக் கூறுகிறேன். ஏன் பட்டிமன்றம் என்று குறிப்பிட்டேன் என்றால் இரண்டு வகையான கருத்து இப்படியும் அப்படியும் நிலவுகிறது. கம்ப்யூட்டரை வெகுநேரம் வேலை முடியும் வரை அப்படியே விட்டுவிடலாம்; தீங்கு ஒன்றும் நேராது என்று ஒரு கோஷ்டி. இல்லை விடக்கூடாது; அவ்வப்போது வேலை இல்லை என்றால் அணைத்து ஓய்வு கொடுங்கள். பின்பு தேவைப்படும்போது மீண்டும் இயக்கிக் கொள்ளலாம் என்றுஒரு கோஷ்டி கூறுகிறது. இவர்கள் கூறும் காரணங்களைப் பார்ப் போமா?



கம்ப்யூட்டரில் உள்ள எலக்ட்ரானிக் பாகங்கள் அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்திடாமல் வைத்தால் தான் வெகு நாட்களுக்கு நன்றாக வேலை செய்திடும். முதல் முதலில் கம்ப்யூட்டரை ஆன் செய்கையில் ஒரு எலக்ட்ரிக் பம்பிங் இருக்கும். அடிக்கடி செய்தால் இந்த லேசான அதிர்ச்சியை கம்ப்யூட்டர் அடிக்கடி பெற வேண்டுமே. மேலும் அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்தால் கம்ப்யூட்டர் பூட் செய்திட எடுக்கும் நீண்ட நேரத்தை அடிக்கடி சந்திக்க வேண்டும். இது வீணான நேரம் தானே. இதனை ஏன் அடிக்கடி கொள்ள வேண்டும்?




வேலையில்லையா, உடனே ஆப் செய்துவிடு என்று கூறுபவர்கள் ஹார்ட் டிஸ்க் நீண்ட நாட்கள் உழைக்க அது வேலையில் இல்லாத் நேரத்தில் ஓய்வெடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். தொடர்ந்து ஹார்ட் டிரைவின் மோட்டார் ஓடிக் கொண்டிருப்பது அதன் பாகங்களைத் தேயவைக்காதா? என்ற கேள்வியை இவர்கள் எழுப்புகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனென்றால் ஹார்ட் டிஸ்க் தயாரிப்பவர்கள் இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமலா தயாரித்திருப்பார்கள் என்று பலரும் சொல்கின்றனர். மேலும் ஹீட், டஸ்ட் அதிகம் பெறும் வாய்ப்பு அது தொடர்ந்து ஓடினால் அதிகமாகிறது. எனவே அவ்வப்போது ஆப் செய்திடுங்கள் என்று உரத்த குரலில் இவர்கள் கூறுகின்றனர்.




சரி, என்ன செய்யலாம்? நான் பகலில் வேலை இருக்கும்போது அப்படியே தொடர்ந்து ஓடவிடுகிறேன். இரவில் ஆப் செய்து விடுகிறேன். இடையே வேலை இல்லை என்றால் ஆப் செய்துவிடுகிறேன். சும்மா இருக்கையில் ஏன் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 133 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்திற்கு மேல் செயல்படும் எந்த ப்ராசசர் சிப்பிற்கும் அதன் வெப்பத்தினைத் தவிர்க்க ஒரு சிறிய விசிறி தேவைப்படுகிறது. ஆனால் இந்த விசிறிகள் மட்டும் போதாது. எனவே வேலை இருக்கும்போது இயக்கிவிட்டு, வேலை இல்லையா, கம்ப்யூட்டரை அணைத்துவிட்டுப் பின் தேவைப்படுகையில் இயக்கவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 23:45

கம்ப்யூட்டருக்கு அருகில் சிகரெட் பிடிக்கலாமா? அதிலிருந்து வரும் புகை கம்ப்யூட்டருக்குக் கெடுதலா? எந்த பகுதியைப் பாதிக்கும்?



கம்ப்யூட்டர் பரவத் தொடங்கிய 1980 மற்றும் தொடர்ந்த ஆண்டுகளில் கம்ப்யூட்டர்கள் தூசி இல்லாத ஏர் கண்டிஷனிங் அறைகளில் வைத்து மட்டுமே இயக்கப்பட்டன. மூடிய குளிரூட்டப்பட்ட அறைக் கதவுகளில் தயவு செய்து காலணிகளைக் கழட்டிவிட்டு நுழையுங்கள் என்றெல்லாம் அறிவிப்புகள் இருந்தன. கம்ப்யூட்டர் இருந்த அறை எல்லாம் ஆராய்ச்சி செய்திடும் பெரிய லேபரட்டரிகளாகக் கருதப்பட்டன. ஆனால் இப்போது மானிட்டர் மீது ஸ்நாக்ஸ், டேபிளில் காபி, அருகே சிகரெட் சாம்பலைத் தட்ட ஆஷ் ட்ரே என கம்ப்யூட்டர் மேஜை அமர்க்களப்படுகிறது.




சிகரெட் புகை கம்ப்யூட்டருக்குள் நுழைந்தால் கெடுதல் விளைவிக்கலாம். குறிப்பாக ஹார்ட் டிஸ்க்குள் நுழைந்தால் அதிலுள்ள சிறு துகள்கள் டிஸ்க்கின் ஹெட் மற்றும் ப்ளாட்டர்களுக்கு இடையே சென்று நிச்சயம் அதன் இயக்கத்தினை நிறுத்தும். சிகரெட் புகையில் இருக்கும் கெமிக்கல்ஸ் உங்கள் மானிட்டரின் திரைக்குத் தீங்குவிளைவிக்கும். கீ போர்டு பிரவுண் கலர் கலந்த மஞ்சள் நிறத்தை சிகரெட் புகையிலிருந்து பெறும். இந்த புகை சிடி/டிவிடி ரைட்டர்களின் துல்லிய ஆப்டிக்ஸ் செயல்பாட்டிற்கு நிச்சயம் ஊறு விளைவிக்கும். ஆக கம்ப்யூட்டருக்கு எப்படி இருந்தாலும் பாதிப்பு இருக்கும். சரி, சிகரெட் பிடிக்கும் நபருக்கு இதைக் காட்டிலும் பாதிப்பு இருக்குமே. கம்ப்யூட்டர் போனால் இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம். உடம்பு,இதயம் போனால் வாங்க முடியாது. எனவே கம்ப்யூட்டரைச் சுற்றி இல்லாமல் எந்த இடத்திலும் சிகரெட்டைப் பயன்படுத்தாமல் இருப்போம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 23:45

என் கம்ப்யூட்டர்களில் பலவகை பைல்களைத் திறந்து பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய டாஸ்க் பாரில் பல ஐகான்கள் இருக்கின்றன. எந்த ஐகான் எந்த புரோகிராமினுடையது என்று எப்படி அறிவது?



பொதுவாக டாஸ்க் பாரில் ஐகானோடு அந்த பைலின் பெயர் இருக்குமே. அல்லது கர்சரை அந்த ஐகான் உள்ள இடத்தில் கொண்டு சென்றால் சிறிய மஞ்சள் கட்டத்தில் அந்த புரோகிராமின் பெயர் மற்றும் பைலின் பெயர் கிடைக்கும். அல்லது ஆல்ட் +டேப் கீகளைத் தட்டுங்கள். திறந்திருக்கும் பைல்களுக்கான புரோகிராம் ஐகான்கள் வரிசையாகத் திரையின் நடுவில் காட்டப்படும். அதன் கீழாகவே குறிப்பிட்ட ஐகானின் அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் பைலின் பெயர் இருக்கும்.




இன்னொரு தேவையான டிப்ஸ் சொல்லட்டுமா? ஆல்ட் +டேப் பயன்படுத்தித் திறந்து வைக்கப்பட்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களின் வழியே செல்கையில் அடுத்தடுத்துத்தான் செல்ல வேண்டும். பின்னால் செல்ல முடியாது. இடது பக்கம் இருக்கும் ஐகானுக்கு மீண்டும் வர வேண்டும் என்றால் முழு வரிசையும் சென்று தான் மீண்டும் பெற வேண்டும் என நாம் பழகி உள்ளோம். இதற்கும் ஒரு வழி உள்ளது; ஐகான் வரிசையில் பின்னோக்கி வர ஆல்ட்+ஷிப்ட் +டேப் அழுத்தவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 23:46

பல வேளைகளில் நீங்கள் கன்பிகர் என்ற சொல்லைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் (Configure) எழுதுகிறீர்கள். இதன் சரியான பொருள் என்ன? கம்ப்யூட்டரின் எந்த வேலையை இது குறிக்கிறது?


அடிக்கடி பந்தை உதைப்பது போலப் பயன்படுத்தப்படும் சொல் என இன்னொரு வாசகர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆம், உண்மையே. நாம் பல முறை இதனைப் பயன்படுத்தி உள்ளோம். இது உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர், மெமரி, சாதனங்கள் மற்றும் சாப்ட்வேரினை அமைப்பது, நிறுவுவது மற்றும் இணைப்பதனைக் குறிக்கிறது. இது உங்கள் சாப்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம், பயன்பாடுகள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்த ஒரு வேலையையும் குறிக்கும். உங்கள் சாப்ட்வேர் தொகுப்பை உங்கள் தேவைக்கேற்றபடி சில வசதிகளுக்கு மாற்றினாலும் அது கான்பிகர் தான்.




உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா! கம்ப்யூட்டரில் உருவாகும் பல பிரச்சினைகள் இந்த கான்பிகர் வேலையைச் சரியாகச் செய்யாததுதான். எப்போது ஒரு அப்ளிகேஷன் புரோகிராமை இன்ஸ்டால் செய்தாலும் அல்லது ஒரு துணை சாதனத்தை இணைத்தாலும் அதன் ரீட் மி (Read Me) பைலைப் படித்து அவற்றை எப்படி கான்பிகர் செய்திட வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும். ஒன்றை நம் தேவைகளுக்கேற்பவும், நம் சிஸ்டத்தின் செயல்பாடுகளுக்கேற்பவும் அமைப்பதே கான்பிகர் செய்தல்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 23:47

விண்டோஸ் எக்ஸ்புளோரருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் என்ன வேறுபாடு? ஒன்று போலத்தானே இருக்கிறது. பின் ஏன் இரண்டு?


சரியான சந்தேகம். இரண்டும் பைல்களைக் காட்டுவதில் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. ஒரே புரோகிராமின் இரண்டு ஸ்பிளிட் பெர்சனாலிட்டி என்று கூடச் சொல்லலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திட உதவுகிறது. விண்டோஸ் எக்ஸ்புளோரர் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ், போல்டர்கள் மற்றும் பைல்களைத் தேடி எடுக்க உதவுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அட்ரஸ் பாரில் C:\My Documents என கம்ப்யூட்டரின் டைரக்டரியை டைப் செய்திடுங்கள். அங்கேயே மை டாகுமெண்ட்ஸ் டைரக்டரியைப் பார்க்கலாம். அதே போல விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் இன்டர்நெட் பக்கங்களையும் காணலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 15 Sep 2009 - 23:47

"Send To" மெனு என்பது என்ன செய்கிறது? எதற்காக இந்தப் பிரிவு தரப்படுகிறது? ஒரு சில மெனுக்களில் மட்டுமே இது கிடைக்கிறது, ஏன்? இதன் பயன்கள் குறித்து கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.





ஒரு சின்ன மெனு குறித்து எத்தனை கேள்விகளை அடுக்கி உள்ளீர்கள். (ஒரு சில மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது) விண்டோஸ் எக்ஸ்புளோரர் அல்லது மை கம்ப்யூட்டரில் நீங்கள் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் உள்ள ஆப்ஷன்களில் இதுவும் ஒன்று. இந்த "Send To" ஆப்ஷனை நீங்கள் அப்போது எடுத்துக் கொண்டிருக்கும் பைலை நீங்கள் திட்டமிடும் இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லலாம். இதில் என்னவென்றால் வித்தியாசமான இன்னொரு ஆப்ஷனும் இந்த "Send To"ஆப்ஷனில் கிடைக்கும். அது desktop (shortcut) ஆகும். நீங்கள் அப்போது வைத்திருக்கும் பைலுக்கு ஷார்ட் கட் ஒன்றை இதன் மூலம் உருவாக்க முடியும். இதனைப் பயன்படுத்தி ஒரு பைலை கம்ப்யூட்டருக்குள் மட்டுமின்றி ஒரு பிளாப்பி மற்றும் ஒரு பிளாஷ் டிரைவிற்கும் கொண்டு செல்ல முடியும். இமெயில் பெறுபவர் ஒருவருக்கும் அனுப்ப இதனைப் பயன்படுத்தலாம். இதில் என்ன வேடிக்கை என்றால் இத்தனை வசதிகள் உள்ள இந்த வசதியை அவ்வளாவாக யாரும் பயன்படுத்துவதில்லை.

Sponsored content

PostSponsored content



Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக