புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
37 Posts - 40%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
1 Post - 1%
mruthun
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
mruthun
கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 5 of 18 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:01 pm

என்னுடைய நிறுவனம் பள்ளிகளுக்கான நோட்ஸ் நூல்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். நாங்கள் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் நிறைய சிம்பல்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு சிம்பலுக்கும் இன்ஸெர்ட் மெனு சென்று பின் சிம்பல் பாக்ஸ் தேர்ந்தெடுத்து பின் மீண்டும் இன்ஸெர்ட் அழுத்தி அதன் பின் மீண்டும் வேர்ட் சென்று பார்ப்பதில் அதிக நேரம் செலவாகிறது. இதற்கு வேறு வழி உள்ளதா?



நல்ல கேள்வி. அனுபவம் தான் அதிக சந்தேகங்களையும் கேள்விகளையும் தரும் என்பது சரிதான். ஓகே, உங்களுக்கான தீர்வுக்கு பல வழிகளில் முயன்ற பின் கீழ்க்காணும் வழி தான் எங்களுக்குத் தெரிந்தது.




முதலில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய சிம்பல்கள் என்னவென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு இன்ஸெர்ட் சென்று சிம்பல் பாக்ஸ் திறந்து பின் அங்குள்ள சிம்பல்களை இன்ஸெர்ட் செய்திடத் தொடங்குங்கள். முதல் சிம்பலை இன்ஸெர்ட் செய்தவுடன் சிம்பல் பாக்ஸ் அப்படியே டாகுமெண்ட் மீது இருப்பதனைப் பார்க்கலாம். இதனால் அனைத்துசிம்பல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக உங்களால் இன்ஸெர்ட் செய்திட முடியும். இவை அனைத்தையும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஓர் இடத்தில் கொண்டு வந்தால் பின் அதிலிருந்து கட் செய்து தேவையான இடத்திற்குக் கொண்டு செல்வது குறைவான நேரத்தையே எடுக்கும் அல்லவா? உங்களிடம் வேர்ட் 2007 இருந்தால் கூடுதலாக வசதி உண்டு. சிம்பல் பாக்ஸ் திறந்திருக்கும்போதே டாகுமெண்ட்டையும் எடிட் செய்திடலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:02 pm

ஒரு போல்டரை மினிமைஸ் செய்த பின்னர் அது டாஸ்க் பாரில் இருக்கும் போது அதில் பைலை காப்பி செய்வது எப்படி?


பைலை அப்படியே இழுத்து வந்து அந்த போல்டரின் மீது மவுஸின் பட்டனிலிருந்து அழுத்தத்தை எடுக்காமல் வைத்திருக்கவும். போல்டர் தானாகத் திறந்திடும். இப்போது அந்த விண்டோவில் பைலைப் போட்டுவிடலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:03 pm

புரோகிராம்களைத் திறக்க ஷார்ட் கட் ஐகான்களை அமைத்துத் திறக்கிறோம். ஆனால் கம்ப் யூட்டரில் அந்த புரோகிராம் பைல்கள் உள்ள போல்டர் எங்கே இருக்கிறது என்று பார்க்க டிரைவ் டிரைவாகத் தேட வேண்டியுள்ளது. இதற்கும் ஒரு ஷார்ட் கட் ஐகான் அமைத்திட முடியுமா?



ஏற்கனவே உள்ள ஷார்ட் கட் ஐகானில் அதற்கான கீ உள்ளது, மேடம். குறிப்பிட்ட ஐகான் மீது ரைட் கிளிக் செய்து ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் ஷார்ட் கட் டேபிற்குக் கீழாக Find Target என்று ஒரு கட்டம் இருக்கும். நீங்கள் விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துபவராக இருந்தால் ‘Open File Location’ என்று இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராம் பைல்கள் இருக்கும் போல்டரை உங்களுக்காகத் திறக்கும். அதில் மெயின் இ.எக்ஸ்.இ. பைல் உட்பட அனைத்து பைல்களும் இருப்பதனைக் காணலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:04 pm

இலவச இமெயில் தரும் இன்டர்நெட் வெப்சைட்களில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் எந்த யூசர் பெயரும் உடனே நமக்குக் கிடைப்பதில்லை. ஒவ்வொன்றாகப் போட்டு பார்க்க வேண்டியதுள்ளது. இறுதியில் அது தரும் பெயரில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இதற்கு வேறு வழியே இல்லையா?




ஏனென்றால் அது கொடுக்கும் யூசர் நேமைப் பயன்படுத்தினால் நமக்கு அது மறந்து போகிறது.






வேறு வழியில்லை. சில பெயர்களில் பல மாணவர்கள் ஒரு பள்ளியில் இருக்கலாம். ஆனால் இணைய தளம் தரும் அக்கவுண்ட்டில் ஒரு பெயரில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். இல்லை என்றால் கடிதங்கள் முகவரி மாறிப் போய்விடுமே. எனவே வித்தியாசமான முறையில் உங்கள் யூசர் நேம் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அந்த தளம் கொடுக்கும் பெயர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.




உங்கள் கேள்வியைப் படித்தவுடன் இணைய தளம் ஒன்று நினைவிற்கு வருகிறது. இது எந்த அளவிற்கு உங்களுக்கு உதவியாய் இருக்கும் என்று தெரியாது. வித்தியாசமான முறையில் இயங்குவதால் அது குறித்து உங்களுக்குத் தகவல் தருகிறேன். அந்த தளத்தின் பெயர் http://namechk.com என்பதாகும். இந்த தளம் சென்று உங்களுக்குப் பிடித்தமான யூசர் நேம் சில தளங்களில் கிடைக்குமா என்பதனை அறிந்து கொள்ளலாம். பெயரை டைப் செய்து செக் என்ற இடத்தில் கிளிக் செய்தால் அது 122 வெப்சைட்டுகளுக்குச் சென்று அங்கு உங்கள் பெயரை யூசர் நேமாகப் பயன் படுத்த முடியுமா என்று பார்த்து பதில் அளிக்கிறது. முதலில் பிரபலமான வெப்சைட்டுகளில் மட்டும் உங்கள் பெயருக்கு இடம் இருக்குமா என்று காட்டுகிறது. நீங்கள் அனைத்தும் அறிய ஆவலாய் இருந்தால் அதற்கான பட்டனில் கிளிக் செய்தால் 122 தளங்கள் பெயரும் எதில் உங்கள் பெயருக்கு இடம் உள்ளது என்றும் காட்டும்.



சோசியல் நெட்வொர்க்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு இந்த வெப்சைட் உதவியாய் இருக்கும். குறிப்பிட்ட பெயர் எந்த தளங்களில் கிடைக்கிறதோ அவற்றில் லாக் இன் செய்து அங்கு உள்ள நண்பர்களைச் சந்திக்கலாமே.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:05 pm

விண்டோஸ் எக்ஸ்புளோரரில் டிரைவ் மற்றும் பைல்களைப் பார்க்கையில் சில போல்டர்களின் முன் + அடையாளமும் சிலவற்றின் முன் – (மைனஸ்) அடையாளமும் உள்ளது. ஏன் இந்த வேறுபாடு? இது எதனைக் குறிக்கிறது?


போல்டருக்குள் சில போல்டர்கள் இருந்தால் அதன் முன் + அடையாளம் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் இன்னும் சில சப் போல்டர்களைப் பார்க்கலாம் என்று பொருள். அப்படி கிளிக் செய்து அதில் இருக்கும் போல்டர்கள் விரிக்கப்பட்டால் அந்த + அடையாளம் மைனஸ் அடையாளமாக மாறிவிடும். அதாவது உள்ளே இருக்கும் போல்டர்களை விரித்து விட்டேன். இனிமேல் உள்ளே எதுவும் இல்லை என்று பொருள். அப்படி விரித்து வெளிவந்த போல்டர்களில் உள்ளே போல்டர்கள் இருப்பின் அதன் முன்னும் + அடையாளத்தைக் காணலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:06 pm

ஆடியோ அல்லது வீடியோ பைல்கள், பெரும்பாலும் வீடியோ பைல்களை பிளே செய்திட முயற் சிக்கையில் கோடக் (CODEC) ஒன்றை டவுண் லோட் செய்தால் தான் இதனைப் பிளே செய்திட முடியும் என்று செய்தி வருகிறது. ஆனால் மற்ற பாடல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பிளே ஆகின்றன. என்ன பிரச்சினை? தீர்வு என்ன?


கோடெக் என்பது Coder Decoder அல்லது Compressor Decompressor ஆகிய இரண்டையும் குறிக்கும் சுருக்குச் சொல். இவற்றில் ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் கோடக் உள்ளன. இவை ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் சப் டைட்டிலிங் ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் டவுண் லோட் செய்த வீடியோ கிளிப்களுக்குத்தான் இது போன்ற கோடக் தேவைப்படும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:06 pm

ஓப்பன் சோர்ஸ் என்ற சொற்களை அடிக்கடி சில புரோகிராம்கள் மற்றும் பிரவுசர்களுக்குப் பயன்படுத்துகிறீர்கள். இந்த அடைமொழியை ஏன் தருகிறீர்கள். இலவசமாகக் கிடைப்பவை எல்லாம் ஓப்பன் சோர்ஸ் என அழைக்கலாமா?




அடிப்படையில் எந்த ஒரு புரோகிராமிற்கான சோர்ஸ் கோடினை (புரோகிராம் வரிகள்) அதனை எழுதியவர் மற்றவர் பார்க்கும்படியாகவும், படித்துத் திருத்தக் கூடிய வகையிலும் தருகிறாரோ அவை மட்டுமே ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் என அழைக்கப்படுகின்றன. சோர்ஸ் என்பது மூல ஆதாரம். இந்த புரோகிராமின் மூல ஆதாரங்களை யாரும் கண்டு கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் (விண்டோஸ் மற்றும் ஆபீஸ்) சோர்ஸ் கோட் எவருக்கும் கிடைக்காது. ஆனால் ஓப்பன் ஆபீஸ், லினக்ஸ் சிஸ்டம், மொஸில்லா பிரவுசர் ஆகியவற்றின் சோர்ஸ் கோடினை யார் வேண்டுமானாலும் இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதனால் தான் புரோகிராம் டெவலப்பர்கள் இந்த சாப்ட்வேர்களில் இயங்கக் கூடிய வகையில் துணை புரோகிராம்களையும் ஆட் ஆன் தொகுப்புகளையும் எழுதி மக்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.




இதில் என்ன லாபம் உள்ளது என்று எண்ணுகிறீர்களா? ஓப்பனாக சோர்ஸ் கோட் தருவதால் ஏற்கனவே உள்ள புரோகிராம்களுக்கு மேம்பாட்டிற்கான சிறிய புரோகிராம்களை நூற்றுக் கணக்கில் ஆயிரக் கணக்கில் புரோகிராமர்கள் பாடுபட்டு உருவாக்கி இலவசமாகத் தருகின்றனர். ஒரு நிறுவனம் இவர்களை வேலைக்கு நியமித்து அவற்றை எழுத வைப்பது என்றால் அதிகம் செலவாகுமே. மேலும் இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் பயன்படுத்த இலவசமே. ஆனால் அவற்றை சப்போர்ட் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.




ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் பெரும்பாலும் இலவசமே. ஆனால் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்கள் அனைத்தும் ஓப்பன் சோர்ஸ் அல்ல. விண்டோஸ் ஓப்பன் சோர்ஸ் ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? சான்ஸே இல்லை சார்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:07 pm

கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லும் படங்களை நாம் வேர்ட் டாகுமெண்ட்டில் ஒட்டுகையில் கண்ட்ரோல் +வி அல்லது பாப் அப் மெனுவில் பேஸ்ட் கட்டளையைக் கிளிக் செய்து ஒட்டுகிறோம். ஏன் இன்ஸெர்ட் கீயினைப் பயன்படுத்த முடியவில்லை?




இன்ஸெர்ட் கீயினையும் பயன்படுத்திக் கிளிப் போர்டில் உள்ளதை ஒட்டலாம். இதற்கு சின்ன செட்டிங்ஸ் செய்திட வேண்டும். அதற்கு முன் அந்த கீ குறித்தும் சில முன் தகவல்களைப் பார்ப்போம். கீ போர்டில் உள்ள இன்ஸெர்ட் கீ என்னும் டாகிள் கீக்கு இரண்டு வகையான செயல்பாடு உண்டு. ஒரு நிலையில் நாம் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட் மேலாக டைப் செய்தால் டைப் செய்திடும் டெக்ஸ்ட்டை இடையில் புகுத்தும். ஏற்கனவே இருப்பதை அழிக்காது.




இன்னொரு நிலையில் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட் மேலாக டைப் செய்திடும் டெக்ஸ்ட்டை அமைத்திடும். இந்த கீக்கு இன்னொரு செயல்பாட்டையும் செட் செய்திடலாம். நாம் காப்பி செய்திடும் டெக்ஸ்ட் அல்லது படம் எதுவானாலும் அது கிளிப் போர்டில் காப்பி ஆகி நாம் விரும்பும் இடத்தில் ஒட்டுவதற்காகக் காத்திருக்கிறது. இதனை கர்சர் உள்ள இடத்தில் ஒட்டிட Ctrl+V கீகளை அழுத்துகிறோம்; அல்லது Paste கட்டளை கொடுக்கிறோம். ஆனால் இந்த செயல்பாட்டை Insert கீ அழுத்தி மேற்கொள்ளலாம். இதற்கு Tools மெனு சென்று Options தேர்ந்தெடுக்கவும். பின் டேப்களுடன் கிடைக்கும் விண்டோவில் Edit டேபில் கிளிக் செய்திடவும். அதில் Use the Ins key for paste என்று இருக்கும் இடத்தில் ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் எதையேனும் காப்பி செய்து வைத்தால் அதனை விருப்பப்பட்ட இடத்தில் ஒட்ட Insert கீயினை அழுத்தினால் போதும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:09 pm

டிரைவர் பைல் கரப்ட் ஆனது என்றும், புதிய டிரைவர் பைலை அந்த தளங்களிலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் என கூறுகிறார்கள் டிரைவர் பைல் என்ன செய்கிறது? இது அவசியம் தேவையா?


அடிப்படையில் டிரைவர் பைல் என்பது ஹார்ட்வேர் சாதனம் ஒன்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் கம்ப்யூட்டருக்குச் சொல்லும் புரோகிராம் ஆகும். எனவே இது ஏதாவது காரணத்தால் கெட்டுப் போய்விட்டால் மீண்டும் அந்த பைலை இன்ஸ்டால் செய்தால் தான் குறிப்பிட்ட அந்த சாதனம் இயங்கும். அந்த சாதனத்தைப் பயன்படுத்தி புதிய வசதிகள் அளிக்க அதனைத் தயாரித்த நிறுவனம் முன்வருகையில் அதற்கான டிரைவர் பைலைப் புதுப்பித்து வழங்கும். எனவே அதனை டவுண்லோட் செய்து பதிய வேண்டும். கீ போர்டு, மவுஸ் மற்றும் பிரிண்டர் போன்ற சாதனங்களுக்கான டிரைவர்கள் வழக்கமாகக் கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும். வேறு புதிய சாதனங்கள் வாங்குகையில் இந்த டிரைவர் பைல்கள் பதிந்து சிடி உடன் வழங்கப்படும். சிடியைப் பயன்படுத்தி இன்ஸ்டால் செய்தவுடன் அதனைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பின் நாளில் பைல் கரப்ட் ஆன பின்னர் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் இன்ஸ்டால் செய்கையில், ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்கையில் இது தேவைப்படலாம். நிறுவனங்களின் வெப்சைட்டுகளில் புதிய டிரைவர்கள் கிடைப்பது சிக்கலாக இருந்தால் www.windrivers.com, www.driverguide.com ஆகிய தளங்களில் முயற்சித்துப் பார்க்கவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:10 pm

வெப்சைட்டுகளைப் பார்வையிட முயற்சிக்கையில் பலவாறாக அவை சில விளம்பரங்களை அனிமேஷனுடன் தருகின்றன. மேலும் மியூசிக் என்ற பெயரில் கேட்க முடியாத அளவிற்குஇரைச்சல் வருகிறது. வற்றை எப்படி நிறுத்திப் பார்ப்பது?


தலைவலி தரும் அளவிற்கு இரைச்சல் என்ற பெயரில் மியூசிக் இருந்தால் கம்ப்யூட்டரில் வால்யூமை மியூட் செய்து நிறுத்திவிடலாம். அல்லது வசதி இருந்தால் உங்கள் ஸ்பீக்கரை ஆப் செய்து வைக்கலாம். ஆனால் அனிமேஷனை நிறுத்தும் வழி? வெப்சைட் முழுவதும் இறங்கும் வரை காத்திருக்கவும். இறங்கியவுடன் பிரவுசரில் ஸ்டாப் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து அனிமேஷன் மற்றும் மியூசிக் வருவது நின்றுவிடும். தேவையான தகவல்களை மட்டும் படித்துத் தேவையானால் டெக்ஸ்ட்டினை காப்பி செய்து எடுத்துக் கொள்ளலாம்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 18 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக