புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புரட்சியின் கதை -மனுஷ்ய புத்திரன்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 10, 2011 4:22 pm

ஒரு புரட்சியின் கதை -மனுஷ்ய புத்திரன்


கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டின் போது எனக்குப் பக்கத்து அறையில் தங்கியிருந்த சர்வதேச ஊடகமொன்றில் பணிபுரியும் நண்பரைச் சந்தித்தேன். அவர் தீவிரமான தி.மு.க. ஆதரவாளராக அறியப்பட்டவரும் கூட. அவரிடம் தி.மு.க.வின் அரசியல் எதிர்காலம் பற்றிக் கேட்டபோது ‘வரும் தேர்தலில் தி.மு.க. தோற்கவேண்டும். அதுதான் தி.மு.க.விற்கும் கலைஞருக்கும் நல்லது’ என்றார் கசப்புடன். தி.மு.க.வின் நோய்மைகளுக்காக இந்தத் தேர்தலில் செய்யப்பட்டிருப்பது மிக கடுமையான அறுவை சிகிச்சை. இதன் விளைவுகளிலிருந்தும் பக்க விளைவுகளிலிருந்தும் மீண்டுவர இன்னும் பல காலம் ஆகலாம். உண்மையில் தி.மு.க.வை இதிலிருந்து மீட்டெடுக்கும் சக்தி ஜெயலலிதாவிடம் மட்டுமே இருக்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் பரஸ்பரம் இந்த உதவியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போதைக்கு தி.மு.க.விற்குத் தேவையெல்லாம் தாங்கும் சக்தி மட்டுமே. மற்றபடி ஒரு தேர்தலில் அடையக் கூடிய வெற்றியோ தோல்வியோ யாருக்கும் எந்த மனமாற்றத்தையும் கொண்டு வருவதில்லை என்பதுதான் நமது அரசியல் சரித்திரம் சொல்லும் பாடம்.

அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் அடைந்திருக்கும் வெற்றி மிகப் பெரியது. அது சுத்தமான தெட்டத் தெளிவான தேர்வு. பொதுவான பல அரசியல் கணக்குகள் பொய்த்துப்போன தேர்தல் இது. தி.மு.க. அரசு கொண்டுவந்த பல நலத் திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் பரவலாகப் போய்ச் சேர்ந்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இலவசத் தொலைக் காட்சி, ஒரு ரூபாய் அரிசி , மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என ஏராளமான திட்டங்கள் வழியே மக்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்ட அரசாகவே தி.மு.க இருந்தது. ஆனால் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வினால் பெருவாரியான மக்கள் தாங்கள் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வினையே அடைந்தார்கள் என்பதை கருணாநிதி புரிந்துகொள்ளவே இல்லை. மின்சாரத் தட்டுப்பாடும் விலைவாசியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகக் கீழிறக்கிவிட்டது. தி.மு.க. அரசினால் இதைத் தடுத்து நிறுத்த எதுவுமே செய்யமுடியவில்லை. தொலைநோக்கற்ற திட்டங்களாலும் வெற்றுச் செலவீனங்களாலும் தமிழகம் பல்வேறு துறைகளில் வெகுவாகப் பின்தங்கிவிட்டது. ஒரு பெரிய காயத்திற்குத் தான் அளிக்கும் ஒத்தடம் பற்றி கருணாநிதி அதீத தன்னம்பிக்கையுடன் இருந்துவிட்டார். மேலும் தி.மு.க.வின் உள்ளூர் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகளை உற்சாகமாக அரங்கேற்றிக்கொண்டிருந்த காலத்தில் அ.தி.மு.க. உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து தமிழகமெங்கும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. மக்களின் பெருகிவரும் அதிருப்திக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியை அடிமட்டத்திலிருந்து ஜெயலலிதா படிப்படியாக உருவாக்கினார்.


ஜாதிய அரசியல் கூட்டணிகளால் வெற்றியைத் தீர்மானிக்கலாம் என்ற கணக்கும் இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் எப்போதும் ஜாதிய ரீதியாகத்தான் வாக்களிக்கிறார்கள் என்பது ஒரு கற்பனை. மக்களுடைய ஜாதிய விருப்பு வெறுப்புகளைக் கடந்த சில பொதுவான உணர்வுகளும் எதிர்ப்புணர்ச்சியும் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன என்பதையே இந்தத் தேர்தல் காட்டுகிறது.

எல்லாவற்றையும்விட தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் ஆழமான சில தார் மீக உணர்வுகள் அவமதிக்கப்பட்டன. ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனுக்குச் செய்த ஆடம்பரத் திருமணத்தின் மூலம் ஏழ்மை மிகுந்த ஒரு சமூகத்தின் தார்மீக உணர்ச்சிகளை அவமதித்தார் என்றால் அதைவிடப் பல மடங்கு அவமதிப்பினை தி.மு.க. இந்த ஐந்தாண்டுகளில் செய்தது. தன்னுடைய பல்வேறு குடும்பங்கள், கிளைக் குடும்பங்களின் அதிகாரப் போராட்டத்திற்கான மையமாக ஒரு அரசை, ஒரு கட்சியை மாற்றுவதன் அபாயம் குறித்து கருணாநிதி புரிந்து கொள்ளவே இல்லை. இரண்டாவதாக, அரசியல் அதிகாரம் ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டதே தவிர, தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்டதல்ல என்பதை கருணா நிதியின் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே ஏற்கவில்லை. அவர்கள் கருணாநிதியின் பிள்ளைகளாகவோ உறவினர்களாகவோ இருப்பதாலேயே அதிகாரம் செலுத்துவது தங்கள் பிறப்புரிமை என்று கருதினார்கள். அந்த உரிமையை நிலை நாட்டுவதற்காக ஒருவரை ஒருவர் ரகசியமாக வேட்டையாடினார்கள், சதிகளில் ஈடுபட்டார்கள், தீ வைத்து எரித்தார்கள், வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள். ஒரு ஜனநாயக அமைப்பின் மக்களது உணர்ச்சிகளை நாம் அவமதிக்கிறோம் என்று யோசிக்கக்கூடிய ஒருவர்கூட அங்கு இல்லை.


ஒரு தேர்தலை யுத்தகால கெடுபிடியுடன் தேர்தல் கமிஷன் நடத்த வேண்டியிருந்தது என்றால் அது தமிழகத்தில்தான். ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தி.மு.க. இவ்வளவு பரவலாகவும் பகிரங்கமாகவும் செயல்படுத்த முனைந்ததன் விளைவாக அது நேரான வழிமுறைகளில் சிறிதும் நம்பிக்கையற்ற ஒரு இயக்கம் என்கிற அவப்பெயரையே தேடித் தந்தது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என யாரும் யோசிக்க மாட்டார்கள் என்று கருணாநிதி அவ்வளவு திடமாக நம்பினார். தேர்தல் கமிஷன்தான் தன்னைத் தோற்கடித்துவிட்டது என்று இன்றளவும் புகார் சொல்லி வருவதன் மூலம் அவர் தனது வழிமுறைகளைப் பற்றி தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வருகிறார். தி.மு.க.அரசு எல்லா விதத்திலும் தனது நம்பகத்தன்மையையும் தார்மீக நெறிகளையும் இழந்ததன் மூலம் இப்போது அதிகாரத்தை இழந்திருக்கிறது.

தேர்தல் தோல்வியைவிட கருணாநிதியை மனமுடையச் செய்திருப்பது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதுதான். ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் என்ற பாத்திரத்தைவிட ஒரு கணவரின், தந்தையின் பாத்திரத்தை முன்வைத்தே தனது பொது வாழ்க்கையைக் கொண்டு செலுத்தியிருக்கும் அவரால் இதை எதிர்கொள்வது கடினமானது. நெருக்கடி நிலையின்போது ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைவிட, ஜெயலலிதா அரசினால் தான் கைது செய்யப்பட்டதைவிட கருணா நிதியை இது ஆழமாக மனமுடையச் செய்திருக்கிறது. முந்தைய கைதுகள் அரசியல் ரீதியானவை. கருணாநிதிக்கு அனுதாபத்தையும் அனுகூலத்தையும் பெற்றுத் தந்தவை. ஆனால் கனிமொழியின் கைது இதற்கு நேர் மாறானது. தி.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணி அரசின்கீழ் இயங்கும் சி.பி.ஐயினால் கனி மொழி கடுமையான ஊழல் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை யாரும் பழிவாங்கவில்லை. அவர் தேர்ந்துகொண்ட வழிமுறை அவரைப் பழிவாங்கிக்கொண்டிருக்கிறது.


கனிமொழியின் அரசியல் வாழ்வின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஒரு ஐந்தாண்டுக்குள் ஒரு முழுச் சுற்றுக்கு வந்துவிட்டது. இது மிகவும் அவலமானது. திராவிட இயக்க அரசியலில் ஒரு மாற்று அடையாளமாகவும் பெண்களின் நம்பிக்கைக் குரிய பிரதிநிதியாகவும் கருதப்பட்ட அவர் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அவப்பெயரைத் தேடிக்கொள்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கனிமொழியை டெல்லிக்கு அனுப்பியதன் மூலம் தனது குடும்ப அரசியலில் இன்னொரு கடமையைப் பூர்த்தி செய்வதாகத்தான் கருணாநிதி நினைத்திருப்பார். ஆனால் கனிமொழி தனது தந்தையின் குடும்பங்களுக்கிடையே தனது குடும்பத்தின் இடத்தை மேலே கொண்டு வருவதற்கான கடும் மனச்சிக்கலைக் கொண்டிருந்தார். கருணாநிதியின் மூத்த குடும்பத்தின் அதிகார பலம், மாறன் குடும்பத்தின் பண, ஊடக பலம் இவற்றிற்கு சமமான ஒரு பலத்தை அவர் உடனடியாக அடைய விரும்பினார். தனது தந்தையின் வாழ்நாளுக்குப் பிறகு தான் வெகு சுலபமாக ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்கிற உள்ளுணர்வு அவருக்கு இருந்தது. அரசியலில் தனக்குக் கிடைத்த இந்த முதல் சந்தர்ப்பம்தான் தனக்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பமும் என்று அவருக்குத் தெரியும். கேபினட் அந்தஸ்திற்குக் குறைவான மந்திரிப் பதவி எதையும் அவர் ஏற்க மறுத்த போதே அழகிரியும் தயாநிதி மாறனுமே அவருடைய எல்லா பிரச்சினைகளுக்கு காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவர் சம பலமற்ற ஒரு போட்டியில் துணிந்து இறங்கினார். ஆ.ராசா காட்டிய ஊழல் புதையல் யாரையும் மனப்பிறழ்வுக்கு ஆளாக்கக் கூடியது. அந்தப் புதையலுக்குப் பின்னே இருக்கும் பூதங்களைப் பற்றி யோசிக்கக் கூட அவகாசம் இல்லாதவராக கனிமொழி தனது சாகசத்தை தொடங்கினார். தன்னை முன்னிறுத்துவதற்காக கலைஞர் டி.வி.க்கும் தமிழ் மையத்திற்கும் எந்த முன்யோசனையும் இன்றி தொலைத் தொடர்புத் துறை ஊழல் பணத்தைக் கொண்டுவந்தார். இந்தப் புதையலைக் கையாள்வதற்கான எந்தத் திறமையும் அவருக்கு இல்லை. ஊழல் பணத்தை இவ்வளவு வெளிப்படையாக வங்கிக் காசோலையாகப் பெற்றுக்கொண்ட ஒரே நபர் இந்தியாவில் கனிமொழியாகத்தான் இருப்பார். மேலும் தான் ஈடுபடும் குற்றத்தின் தன்மை குறித்த எந்தத் தார்மீக உணர்வும் அவருக்கு இருக்கவில்லை. பொது வாழ்வில் அவர் தன்னைப் பற்றிக் கட்டியமைக்க விரும்பிய பிம்பத்திற்கு நேர் எதிரான ஒன்றைச் செய்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருந்திருப்பதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் இழப்பதற்கு எதுவும் இல்லாத காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தி.மு.க.வைப் பலவீனப்படுத்தும் தனது முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டது. இனி தன்னை அண்டி வாழவேண்டிய ஒரு சக்தியாக தி.மு.க.வை அது மாற்றியதன் மூலம் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் பல புதிய பேரங்களை நோக்கிச் செல்வதான பாதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் தங்களது சந்தர்ப்பவாத அரசியலால் இந்தத் தேர்தலில் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. ராமதாஸ் ஒரு நம்பகத்தன்மையற்ற தலைவர் என்ற இடத்தை தனது அரசியல் செயல்பாடுகளால் வெகு விரைவாகவே அடைந்தார். திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை ஒரு கூட்டணிக் கட்சியாக இல்லாமல் தி.மு.க.வின் ஒரு மாணவர் அணியாகவே மாற்றினார். கருணா நிதியின் மீது காட்டிய இந்த விசுவாசத்திற்காக அவர் ஈழப் பிரச்சினை போன்ற விவகாரங்களில் தன்னுடைய உணர்வுகளுக்கு எதிரான முடிவுகளையே எடுத்தார்.
இந்த இரண்டு கட்சிகளின் இடத்தையும் தே.தி.மு.க. வெகு சுலபமாக ஆக்ரமித்துக்கொண்டுவிட்டது. இந்தத் தேர்தலில் அது பிரதான எதிர்க்கட்சியாக மாறியதன் மூலம் விஜய்காந்த் தனது அரசியல் வாழ்வின் முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். வெகு சீக்கிரமே விஜய்காந்த் தீவிரமான ஆளும்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார். அதுவே அவரைப் பிரதான மாற்றுத் தலைவராக உருவாக்கும் என்று அவருக்குத் தெரியும்.


ஜெயலலிதாவின் வெற்றியைத் தமிழக ஊடகங்கள் ஒரு மகத்தான புரட்சியாக வர்ணிக்கின்றன. ஜெயலலிதா இதற்கு முன்பும் பல புரட்சிகளைச் செய்தவர் என்பதாலும் எப்போதும் அவர் ஒரு நிரந்தரப் புரட்சியாளராக இருக்கப்போகிறார் என்பதாலும் நாம் இந்த மகத்தான புரட்சியைக் கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறோம். கருணாநிதியினால் கட்டப்பட்டது என்பதற்காக 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றக் கட்டிடத்தை நிராகரித்தது, கருணாநிதியின் அரசினால் உருவாக்கப்பட்டது என்பதற்காக தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு மகத்தான மாறுதலைக் கொண்டுவரக்கூடிய சமச்சீர் கல்வித்திட்டத்தை எந்த விவாதமும் இன்றிக் கைவிட்டது என்று அவருடைய புரட்சிகர நடவடிக்கைகள் வெகு விமரிசையாகத் துவங்கியிருக்கின்றன. ஜெயலலிதாவைப் பற்றி வாஸந்தி ஆங்கிலத்தில் எழுதியுள்ள புத்தகத்திற்கு அது வெளிவருவதற்கு முன்பே தடை வாங்கியிருப்பதன் மூலம் அவரது சகிப்புத் தன்மையின் மாண்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இருந்தும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் சார்ந்து தி.மு.க. அரசு உருவாக்கிய கடும் பிரச்சினைகளை களைவதற்கு அவர் சில உறுதியான நடவடிக்கைகளை எடுப்பார் என மக்கள் நம்புகின்றனர். கருணாநிதியும் அவரது குடும்பமும் இப்போது சிக்கிகொண்டிருக்கும் பிரச்சினைகளில் இருந்து கொஞ்சம் மூச்சுவிடவே இன்னும் ஓராண்டிற்கு மேல் ஆகலாம். அதுவரை ஜெயலலிதா தனது புரட்சிகர ஆற்றலை மக்கள் நலத் திட்டங்களுக்காகக் கொஞ்சம் செலவிட்டால் நல்லது.


உயிர்மை நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 8:42 pm

யோசிக்க வேண்டிய விஷயம் தான்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு புரட்சியின் கதை -மனுஷ்ய புத்திரன்  47
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jul 10, 2011 8:47 pm

காலம் பதில் சொல்லும் .
நேற்றைய நிலை அறிந்தால் நலமே!
பருகூர் தொகுதில் தோற்றது நினைத்தால் ........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jul 11, 2011 5:14 am

மஞ்சுபாஷிணி wrote:யோசிக்க வேண்டிய விஷயம் தான்...
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக