புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:36
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
Nalla Tamil Arivom - purananuru
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
எல்லாரும் விரும்புவது :
இன்றைய இயந்திரமான வாழ்க்கை சூழலில் நாம் வெகு வேகமாக இயங்கி கொண்டிருக்கிறோம். ஒருவரை பற்றி மற்றொருவர் கவலைப் படக்கூட நேரம் இல்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. பலநாள் வாழ்கிறோம், இப்படி வாழ்ந்து வாழ்க்கையில் இறுதியில் இருக்கும் போது அடடா நாம் வாழ்நாள் வீணாக கழிந்து விட்டதே, உருப்படியாக நல்ல காரியங்கள் ஒன்றும் செய்ய வில்லையே என்று வருத்தப்படுகிறோம். இப்படி வருத்தப்படும் பெரியவர்களுக்கு கூறுவது போல் அமைந்த இந்த பாடல் இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் பொருந்தும் பாடல் ஆகும். உலகம் விரும்புவது என்ன, பெரியவர்கள் கூறும் நன்னெறி எது என்று இப்பாடல் கூறுகிறது.
பாடல் 6: எல்லாரும் உவப்பது (புறம் : 195)
பாடியவர்: நரிவெருஉத் தலையார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
பல் சான்றீரே ! பல் சான்றீரே !
கயல்முள் அன்ன நரைமுதிர் திரை கவுள்
பயனில் மூப்பின், பல் சான்றீரே !
கணிச்சிக் கூர்ம்படை கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமீன்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமார் அதுவே
பொருள் விளக்கம்:
சால்பு மிக்க பெரியவர்களே, சால்பு மிக்க பெரியவர்களே,
மீனின் முள் போல் வெண்மை நிறம் அடைந்த முடியை உடைய , முதிர்ந்த தேகத்தை உடைய, பயன் இல்லாத வாழ்க்கை வாழ்ந்த சால்பு மிக்க பெரியவர்களே, இரக்கம் இல்லாத கூரான ஆயுதம் உடைய கருமையான எமதர்மன் என்ற ஒருவன் உங்களை பாசக் கயிற்றால் பிணிக்கும் வேலை வரும் போது வருத்தப்படுவதால் என்ன லாபம்? மூப்பு வந்து விட்டதே இனி நாம் என்ன செய்ய இயலும் என்று எண்ண வேண்டாம்.
நல்லது செய்ய முடியவில்லை என்றாலும், கெட்டது செய்யாமல் இருங்கள், அதைத் தான் அனைவரும் விரும்புகின்றனர், அது மட்டுமல்லாமல் மூத்தோர் கூறும் நல்ல நெறியும் அதுவே. வயது முதிந்தோருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் கூறும் அறிவுரையும் இது தான்.
அனைவருக்கும் பொதுவானது எது, செல்வம் உடையவர் செய்யும் செயல் என்ன என்று அடுத்த பாடலில் காண்போம்

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தொடருங்கள் நண்பா.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அனைவருக்கும் பொதுவானது
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வேறு வேறு நிலையில் இருக்கிறார்கள். ஒருவன் பணக்காரனாகவும் வேறு ஒருவன் ஏழையாகவும் வாழ்கிறார்கள். இப்படி வேறு வேறு நிலையில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது எது?. செல்வம் பெற்றோர் செய்யும் செயல் என்ன என்று இந்த பாடல் கூறுகிறது.
பாடல் 7 : உண்பதும் உடுப்பதும் (புறம் : 189)
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிறழ்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பது இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயன் ஈதலே;
துய்பேம் எனினே, தப்பு ந பலவே.
பொருள் விளக்கம்
தெற்கு கடல் போல் மிகப்பெரிய நிலத்தை ஒரே வெண் கொற்ற குடையில் ஆளும் பேரரசனும், காட்டில் இரவு பகலும் உறங்காது வேட்டை ஆடும் சிறு வேட்டைக்காரனும் உண்பது நாழி அளவுதான், உடுப்பது மேலே ஒன்று, கீழே ஒன்று ஆகிய இரண்டு தான். மற்ற விஷயங்களும் இதைப் போல் பொதுவானது தான். அதனால் பணம் படைத்தவர்கள் செய்யும் சிறந்த செயல் இல்லாதவருக்கு ஈவதே, நாம் மட்டும் உண்டு வாழ்வோம் என்பது தவறான செயலாகும்.
இந்த கருத்தையே வலியுறுத்தும் வேறு சில பாடல்கள்
"இல்லோர் இரப்பது இயல்பே
இரந்தோர் கீ வதும் உடையோர் கடனே" - நறுந்தொகை
"ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு" - திருக்குறள்
" பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல் முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு " - நன்னெறி
ஒருவருக்கும் பயன் தராத கடல் நீரை மேகங்கள் கவர்ந்து சென்று நிலத்தில் பெய்வது போல் அடுத்தவனுக்கு கொடுக்காத செல்வத்தை பிறர் அபகரித்து உரியவருக்கு போய்ச் சேர்ப்பர்.
இப்படி அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் நாம் நமக்கு தேவையானவற்றை சம்பாதிக்க வேண்டும், இப்படி சம்பாதிக்கவும், சபையில் முன்னே வர வேண்டும் என்றால் கல்வி கற்ற வேண்டும். இப்படிப்பட்ட கல்வியின் சிறப்பை அடுத்த பாடலில் காண்போம்.

கல்வியின் சிறப்பு
வாழ்க்கையில் பல வசதிகள் இருந்தாலும் கல்வி இல்லையென்றால் அந்த வசதிகளை நம்மிடம் தக்க வைத்து கொள்ள முடியாது. கல்வி ஒன்றே எல்லா வசதிகளையும் நாம் சம்பாதிக்க உதவும். எந்த குடியில் பிறந்தாலும் கல்வி ஒருவனை மேலே உயர்த்துகிறது. கல்வியின் சிறப்பை இந்த பாடல் அழகாக எடுத்துக் கூறுகிறது.
பாடல் 8 : கற்கை நன்றே (புறம் : 183)
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
"மூத்தோன் வருக" என்னாது, அவருள்
"அறிவுடையோன் வருக" ஆறு அரசு செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
பொருள் விளக்கம்
கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு உற்ற உதவிகள் செய்தும், தேவையான பொருள் கொடுத்தும், அவர் சொல் சொன்னபடி, அவர் மனம் கோணாத படி கல்வி கற்பது சிறந்தது. ஒரே வயிற்றில் பிறந்தாலும் சிறப்பாக உள்ள மகனின் பால் தாயின் மனம் சாயும் , கல்வி கற்காத மகனை தாயும் மதிக்க மாட்டாள். ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு விழா நடக்கும் பொது, அந்த குடும்பத்தில் இளையவன் ஆனாலும், அறிவுள்ளவனுக்கே முதல் மரியாதை கிடைக்கும், அவன் பின்னர் அரசனும் செல்வர் . கல்வி கற்காதவன் வயது முதிர்ந்தாலும் அவனுக்கு தக்க மரியாதை கிடைக்காது. அந்தணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணத்தாரில் கீழ் உள்ளவன் கல்வி கற்றால் அவனுக்கு மேல் உள்ளவன் கட்டுப்பட வேண்டும். கல்வி ஒருவனை உயர்த்தும்.
ஆதலால் கற்பதில் சிரமங்கள் இருந்தாலும் கல்வியை விடாது கற்க வேண்டும்.
பாடலில் சிறப்பு :
குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிறது.
இந்த கருத்தையே வலியுறுத்தும் வேறு சில பாடல்கள்:
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"
"கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" - ஒளவையார்
"கேடில் விழுச் செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை" - திருக்குறள்
கல்வி கற்று ஒரு பதவியில் அமர்பவருக்கு என்ன குணங்கள் வேண்டும், அடுத்த பாடலில் காண்போம்.
வளரும் ............

பதவியில் இருப்பவர்கள் பண்பு
நாம் ஒவ்வொருவருக்கும் நம் தகுதிற்கேற்ப பதவிகள் அமைகிறது. பதவிகள் வந்தவுடன் நாம் நமக்கு வேண்டியவர்களுக்கு உதவி செய்கிறோம், அவர்கள் செய்யும் குற்றங்களை மறைக்க பார்க்கிறோம், வேண்டாதவர்களுக்கு கெடுதல் செய்கிறோம். நம்மை நாடி வந்தவர்களை உதாசீனம் செய்கிறோம். பதவி வரும் வரை அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறி, பதவி வந்தால் பிரச்சனைகளை கண்டு ஒதுங்கி சுகமாகவே வாழ ஆசைபடுகிறோம்.
பாடல் 9 : குற்றமும் தண்டனையும் (புறம் : 10)
பாடியவர்: ஊன் பொதி பசுங் குடையார்
பாடப்பட்டோர் : சோழன் நெய்தலங் கானல் இலஞ் சேட் சென்னி
திணை : பாடாண் துறை: இயன் மொழி
வழிபடு வோரை வல்லரி தீயே !
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே ;
நீ மெய் கண்ட தீமை கானின்;
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை யில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகியே, சிலைத் தார் மார்ப !
செய்து இரங்கா வினைச், சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங் கானல் நெடியோய் !
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே !
பொருள் விளக்கம்:
சோழா, நீ நீதி வழங்கும் போது உனக்கு வேண்டியவர்கள் கூறுவதால் நல்லவர்கள் என்றும் யாரையும் நீ உடனடியாக முடிவு செய்வதில்லை, அது போல் ஒருவரை பழித்து கூறுவதால் அவர்களை கெட்டவர் என்றும் முடிவு செய்து விடுவதில்லை. நன்கு ஆராய்ந்து முடிவு செய்கிறாய். அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று முடிவு செய்தால் வேண்டியவர்கள் என்றும் பாராமல் அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கிறாய். குற்றத்தை மன்னிக்கும் படி அவர்கள் வேண்டினால் அவர்களுக்கு உரிய தண்டனையை குறைத்து அருள் செய்கிறாய்.
உன்னை நாடி வந்தவர்களுக்கு உணவு அளித்து அவர்களுக்கு வேண்டிய உதவி செய்கிறாய். குல மகளிர் தழுவ உன் வலிமையான மார்பு இடம் தரும், உன் எதிரிகள் தாக்க இடம் தர மாட்டாய்.
தவறு செய்து விட்டு பின்பு வருந்தும் குணம் உன்னிடம் இல்லை. எதையும் நன்கு ஆலோசனை செய்த பின்பு முடிவு செய்கிறாய்.
நெய்தலங் கானல் என்னும் ஊருக்கு உரிய தலைவனே, உன்னை நாங்கள் பலப்படி ஏத்தி வாழ்த்துவோம், ஓங்குக உன் புகழ் !
பாடலின் சிறப்பு
மன்னனுக்காக எழுதப்பட்ட பாடல் இது என்றாலும் பொறுப்புள்ள பதவியில் உள்ள
அனைவருக்கும் பொருந்தும் பாடல் இது. எந்த குணங்களோடு இருப்பவர்
புகழ்தலுக்கு உரியவர் என்பதை இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது.
பதவியை எவ்வாறு கையாளுகிறோம், எவர் சுலபமாக கையாளுகிறார், எவர் கஷ்டப்படுகிறார் என்பதை அடுத்த பாடலில் காண்போம்.
வளரும் .............

பதவியின் பெருமை
பதவி வந்தால் அனைவரும் ஒரே மாதிரி கையாளுவதில்லை. ஒரு சிலரிடம் சின்ன வேலை கொடுத்தாலும் அதை முடிக்க வெகு சிரமப்படுவர். வேறு சிலரோ பெரிய வேலையையும் மிகச் சுலபமாக கையாளுகின்றனர். நாட்டை ஆளும் பிரதம மந்திரிக்கும் சாதாரண குடிமகனுக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். ஒருவர் நேரம் இல்லை என்கிறார். மற்றொருவர் சர்வசாதரானமாக அனைத்து வேலைகளையும் சுலபமாக செய்கிறார். இந்த பாடல் கூறுவதை கேளுங்கள்.
பாடல் 10 : அரச பாரம் (புறம் : 75)
பாடியவர்: சோழன் நலங்கிள்ளி
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிவரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே !
மண்டு அமர்ப் பறிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெருகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே மையற்று,
விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுக்கெழு திருவே"
பொருள் விளக்கம்
பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க, அதற்கு அடுத்து உள்ள இளையோர் பதவி ஏற்க, பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை. அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்தப் பதவிக்கே ஒரு மரியாதை வருகிறது.
ஆண்மை இல்லாத சிறியோன் கைகளில் கிடைத்தால் மக்களின் வரிப்பணத்தை உண்டு வாழும் வாழ்வாகவே அது முடியும். வீரமும் ஆண்மை அற்றவரிடம் அது போயிச் சேர்ந்தால், அது அவர்களுக்கு சுமையாகி விடும்.
போரில் எதிரிகளை தைரியமாக சந்திக்கும் ஆண்மைத் திறன் பெற்றவரிடம் அது போய்ச் சேரும் போது அது பொலிவு பெறுகிறது. முரசு கொண்டு நல்லாச்சி செய்யும் பெருநில மன்னருக்கு அது மிகவும் எளிதானது, குளத்தில் நீர் வற்ற காய்ந்து போன தாமரைக் கிழங்கு, மழை நீர் பெருகி குளத்தை நிறைக்கும் போது தக்கையாக மிதக்கும், அது போல் தக்கையாக அதை கையாளுவர்.
சரி பதவி வந்தால் மட்டும் போதுமா, நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருந்தால் தான் நமக்கு கவலை இல்லாமல் இருக்கும், கவலை இல்லையென்றால் முடி கொட்டாது, முடி நரைக்காது. இப்படி பல ஆண்டுகள் நரைக்காமல் இருந்தவரிடம் அதன் ரகசியத்தை கேட்டால் என்ன சொல்வார்?, அடுத்த பாடலில் காண்போம்.
வளரும்...............

- சரவணன்1புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011
சதாசிவம் wrote:
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
எனது நினைவை விட்டு நீங்காத வரிகள். பாட பகுதியில் மனபாட பகுதி என்று ஒன்று உண்டு. இந்த பாடல் நாங்கள் படிக்கும் பொழுது அவ்வகையில் சேர்க்கப்பட்டு இருந்தது. மறுபடியும் படிக்க வாய்ப்பு குடுத்த சதாசிவம் மற்றும் ஈகரைக்கு எனது நன்றிகள் உரித்தாகுக!
அன்புடன்,
சரவணன்.
- சரவணன்1புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011
சதாசிவம் wrote:
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமீன்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமார் அதுவே
இத தான், சின்ன வயசுல - எங்கம்மா, அவங்க நடைமுறை வழக்குல - " உபகாரம் செய்ய முடியாயல நாளும் உபத்திரவம் செய்யகூடாது" நு சொல்லுவாங்க! ஒரு நல்ல பாடலை மறுபடியும் படிக்க வாய்ப்பு அளித்த சதாசிவத்துக்கும் ஈகரைக்கும் எனது நன்றிகள்!
அன்புடன்,
சரவணன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சரவணன் wrote:சதாசிவம் wrote:
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமீன்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமார் அதுவே
இத தான், சின்ன வயசுல - எங்கம்மா, அவங்க நடைமுறை வழக்குல - " உபகாரம் செய்ய முடியாயல நாளும் உபத்திரவம் செய்யகூடாது" நு சொல்லுவாங்க! ஒரு நல்ல பாடலை மறுபடியும் படிக்க வாய்ப்பு அளித்த சதாசிவத்துக்கும் ஈகரைக்கும் எனது நன்றிகள்!
நன்றி தோழரே
பல நல்ல விஷயங்களை நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம், ஆனால் விவரம் தெரியாத வயதில். வெறும் மதிப்பெண் நோக்கி தான் நாம் படிக்கும் படிப்பு இருக்கிறது. பல நல்ல விஷயங்கள் நம் முன்னோர் கூறி இருந்தாலும், அது நமக்கு சரியாக சேரவில்லை. இப்படி படித்த சிறந்த பாடல்களையும், பாடப் புத்தகங்களையும் தாண்டி தமிழில் உள்ள மிகச் சிறந்த பாடல்களையும் வெளிக் கொணருவது தான் இந்த தொடரின் நோக்கம்.
கருத்திட்டமைக்கு நன்றி
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கவலையில்லா வாழ்க்கை
இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் கவலை இல்லாத மனிதன் இல்லை என்றே சொல்லலாம். ஆசை அதிகம் ஆகும் போது கவலை அதிகம் ஆகுகிறது என்பது வாழ்வியல் உண்மை. இப்படி வாழும் நிலையில் கவலை நம்மால் மட்டுமே வந்து விடுவதில்லை. நம்மை சுற்றிவுள்ளவர்கள் தான் நம்முடைய சுக துக்கங்களை வளர்க்கவும் குறைக்கவும் செய்கின்றனர். கவலை தான் உடல் கோளாறு அனைத்திற்கும் காரணம். இப்படி கவலை இல்லாமல், வாழ்ந்து, வயது ஆகியும் தலைமுடி நரைக்காமல் ஒருவர் இருந்தார், அவரிடம் இப்படி நரைக்காமல் இருந்ததற்கு காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார், அவர் கூறும் பதில் தான் இந்த பாடல். இன்று நமக்கு என் சீக்கிரம் நரைகிறது என்று இந்த பாடல் மூலம் அறியலாம்.
பாடல் 11 : நரையில ஆகுதல் (புறம் : 191)
பாடியவர்: பிசிராந்தையார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு, மக்களும் நிரம்பினார் ;
யான் கண்டனையர் என் இளையோரும் , வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"
பொருள் விளக்கம்
பல ஆண்டுகள் வாழ்ந்தும் நரை இல்லாமல் வாழ்வது எங்ஙனம் என்று நீங்கள் கேட்கிறீர்கள், அது என்ன என்று கூறுகிறேன் கேளுங்கள்.
மாண்பான குணம் கொண்ட என் மனைவி, என் மக்களும் கல்வி கற்று அறிவு நிரம்பியவர்கள், என்னிடம் பணி செய்யும் வேலைக்காரர்களும் என் குறிப்பு அறிந்து நான் சொல்லும் முன் வேலை செய்பவர்கள், இந்த நாட்டு அரசனும் கொடுமைகள் செய்யாமல் மக்களுக்கு நன்மைகள் செய்யும் மன்னன், கவலை நீங்க வாழ வைக்கிறான். அதற்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது, நல்லது எது கெட்டது எது என்று அனுபவத்தில் வாழ்ந்து உணர்ந்த (கல்வியால் மட்டும் உணரவில்லை என்பது இங்கு மறை பொருளாக கூறப்படுகிறது) சான்றோர் பலர் உள்ளனர், அவர்கள் மக்கள் தவறு செய்யும் போது அவர்களுக்கு நல்லது எது என்று எடுத்து உரைத்து தவறு மிகா வண்ணம் இந்த நாட்டை காக்கின்றனர். இப்படி நான் கவலைப் பட எந்த காரணமும் இல்லாதது தான் என் இளமைக்கு காரணம்.
சரி இளமையாக வாழ கவலை இல்லாமல் இருப்பது ஒன்று மட்டும் தான் வழியா, ஏதாவது தின்றால் நாம் இளமையாக இருக்க முடியுமா? இப்படி இளமையாக வாழ பழம் ஒன்று கிடைத்தால் நாம் என்ன செய்வோம், அதியமான் என்ன செய்தான் அடுத்த பாடலில் காண்போம்.

- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10