புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_m10ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை?


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 08, 2011 11:19 am

இங்குள்ள ஸ்கூல்களில், கோடைகால மினி விடுமுறை ஜூலை மாதத் தொடக்கத்தில்
விடப்படும். 12 வயதான நூரியா என்ற மாணவிக்கும் விடுமுறை. அவருக்கு விடுமுறை
விட்டிருக்கின்றது என்ற சந்தோஷத்தைவிட, அதிக சந்தோஷமான விஷயம் வேறொன்று
உண்டு.
அது, என்ன தெரியுமா? விடுமுறை முடிந்து திரும்பும்போது, அந்தப் பெண் செல்வதற்கு ஸ்கூல் கட்டடம் ஒன்று இருக்கப் போகின்றது.
மேலே கூறப்பட்டது உங்களுக்கு ஒரு ஆச்சரியமான கூற்றாக இருக்கலாம். ஆனால் ஆப்கானிஸ்தானில் அப்படியல்ல.
பெண்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் திடீர் திடீரென்று தாக்கப்படுகின்றன.
கட்டடங்கள் உடைத்து நொருக்கப் படுகின்றன. பாடசாலைக்கு வரக்கூடாது என்று
மாணவிகளும் ஆசிரியைகளும் மிரட்டப்படுகின்றனர்.
நூரியாவின் பாடசாலையையும் சில மாதங்களுக்கு முன்னர் தாக்க முயற்சித்தார்கள். தாக்க முயன்றது யார்? தலிபான்களில் ஒரு பிரிவினர்!
கடந்த பிப்ரவரி மாதத்தின் ஒரு இரவு வேளையில், 10 வகுப்பறைகளையுடைய
பெண்கள் பாடசாலைக்குள் முகமூடியணிந்த தலிபான் பிரிவினர் புகுந்தார்கள்.
பாடசாலை மன்ட்ரவரி என்ற கிராமத்தில் (காபுல் நகரிலிருந்து 100 மைல்கள்)
அமைந்திருந்தது.ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? 20110708-TOD-6-380x249
தலிபான்களால் தாக்கப்பட்ட ஒரு ஸ்கூல். இடிந்த கட்டடத்தில் படிக்க, வாயிலில் வரிசையாக மாணவிகளைப் பாருங்கள்!

இரவுநேர வாட்ச்மேனை கட்டிப்போட்டுவிட்டு, பாடசாலை அதிபரின் அறை,
லைப்பிரரி ஆகிய இரண்டிலும் மண்ணெண்ணை ஊற்றினார்கள். பற்றவைத்தார்கள்.
போய்விட்டார்கள். இது ஒரு எச்சரிக்கைத் தாக்குதலாம்!
மறுநாள் வந்து பார்த்த ஊர் மக்களுக்கு, பாடசாலைச் சுவரில் எழுதப்பட்டிருந்தது, எச்சரிக்கை!
எச்சரிக்கை என்ன? “இந்தப் பாடசாலைக்கு இனிமேல் யாரும் வரக்கூடாது.
படிப்பதற்கு மாணவிகளோ, அவர்களுக்கு பாடம் சொல்லித்தர ஆசிரியைகளோ வந்தால்,
அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படும்”
தண்டனை என்ன என்று எழுதப்பட்டிருக்கவில்லை. ஆனால், இந்தக் குற்றத்துக்கு
என்ன தண்டனை வழங்கப்படும் என்பது அப்பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
அந்தத் தண்டனை, மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் கசையடி வழங்கப்படும்.
தண்டனையை எதிர்ப்பவர்களுக்கு, மூக்கும் காதுகளும் வெட்டப்படும்.
தண்டனை அது. குற்றம் என்ன? பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து பாடசாலை செல்வதுதான் குற்றம்.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட மறுநாள், மன்ட்ரவரி கிராமத்தில் ஒரு ஆச்சரியம்
நடைபெற்றது. அந்தப் பெண்கள் பாடசாலையில் பயின்று வந்த 650 மாணவிகளில்,
பெரும்பாலானவர்கள் வழக்கம்போல படிக்க வந்தார்கள்.
சுவரில் எழுதப்பட்டிருந்த எச்சரிக்கை வேலை செய்யவில்லை!
கட்டடங்கள் பாதி எரிந்த நிலையில் இருந்த காரணத்தால், அவர்களுக்கான
வகுப்புக்கள் மரங்களின் அடியில் நடைபெற்றன. கட்டடங்களை திருத்தி மீண்டும்
பழைய நிலைக்குக் கொண்டுவர, சில வாரங்கள் எடுத்தன. அதுவரை பிப்ரவரி மாதக்
குளிரிலும் மாணவிகள் மரத்தடியில் இருந்து படித்தார்கள்.
அருகிலுள்ள ஊர்களில் இருந்த பாடசாலை லைப்பிரரிகளில் இருந்து நூல்கள்
அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன. முழுமையாக எல்லா நூல்களும் எரிந்துபோன
லைப்பிரரியை முழுமையாக மாற்றீடு செய்ய முடியவில்லை. ஆனால், ஓரளவுக்கு
மாற்றீடு செய்ய முடிந்தது.ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? 20110708-TOD-5
வகுப்பறையில் இருந்த மேஜைகள் தலிபான்களின் தாக்குதலில் உடைக்கப்பட்டு விட்டன!

இப்போது பாடசாலை வழமைபோல இயங்குகின்றது. புதிய கட்டடம் கட்டுவதற்கு
ஆப்கான் அரசும், சில இஸ்லாமிய அமைப்புகளும் நிதியுதவி செய்திருந்தன. அப்படி
நிதியுதவி செய்த அமைப்புகளில் ஒன்று, மன்ட்ரவரி கிராமத்தில் இருந்து மிகத்
தொலைவில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள இஸ்லாமிய இளைஞர் சங்கம்.
மன்ட்ரவரி கிராமப் பாடசாலையில், நீளமான ஊதா நிற ஆடையும், தலையை மூடிய
துப்பட்டாவுமாக இருக்கும் மாணவிகளில் ஒருவர்தான், கட்டுரையின் ஆரம்பத்தில்
நாம் குறிப்பிட்ட, 12 வயதான நூரியா. மிக மிருதுவான குரலில் பேசுகிறார்
இவர்.
நூரியாவின் லட்சியமே தானும் ஒரு ஆசிரியையாக வரவேண்டும் என்பதே. “அவர்கள்
எனது மூக்கையும் காதுகளையும் வெட்டினாலும் பரவாயில்லை. நான் தொடர்ந்தும்
பாடசாலைக்கு வருவேன். எனக்கு படிக்கவேண்டும்” என்கிறார்.
இது நூரியாவின் பாடசாலையில் மாத்திரம் நடைபெற்ற ஒன்றல்ல.
ஆப்கானிஸ்தானிலுள்ள பெண்கள் பாடசாலைகள் எல்லாமே தலைக்கு மேல்
கத்தியுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள், வீட்டுக்கு வெளியே
வரக்கூடாது, பாடசாலைக்குப் போகக் கூடாது என்ற கோஷத்துடன் தலிபான்களின் ஒரு
பிரிவினர் ஒவ்வொரு பெண்கள் பாடசாலையாக இலக்கு வைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் முன்பு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே, பெண்கள்
யாரும் பாடசாலைகளுக்கு போக முடியாது என்ற நடைமுறையைக் கொண்டு வந்தார்கள்.
ஆனால், யுத்தம் வந்து எல்லாமே மாறிவிட்டது. தலிபான்களின்
கட்டுப்பாட்டிலலிருந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டபின்,
பாடசாலைகளுக்கு பெண்கள் செல்லத் தடையில்லை.
அவ்வளவு காலமும் வெளியுலகமே தெரியாமல் இருளில் இருந்த பெண்கள், படிக்கும் கனவுகளுடன் பாடசாலைகளுக்கு வரத் தொடங்கினாh;கள்.
இன்று ஆப்கானின் கல்வி அமைச்சு நாடு, முடுவதிலுமாக 1350 பெண்கள்
பாடசாலைகள் இருப்பதாக கூறுகின்றது. அதைத்தவிர மேலும் 2900 பாடசாலைகளில்,
பெண்கள் மதியத்துக்குப் பின்னர் படிக்க முடியும்.
இதன் காரணம், ஆப்கான் பாடசாலைகளில் ஆண்களும் பெண்களும் ஒன்றாகப்
படிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் 2900 ஆண்கள் பாடசாலைகளில், மதிய
இடைவேளைவரைதான் ஆண்கள் படிக்கமுடியும். அதன் பின்னர், அவர்கள் வெளியேற,
மாலைநேரத்தில் அப்பாடசாலைகள் 100 சதவிகித பெண்கள் பாடசாலைகளாக இயங்கும்.
ஆப்கானை முழுவதிலுமுள்ள 5 மில்லியன் மாணவ மாணவிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள் என்கிறது கல்வி அமைச்சு.
பெண்களுக்கான பாடசாலைகள் இயங்காதவாறு செய்வதற்கு, தலிபான்கள் இன்னமும்
முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். பெரிய நகரங்களிலுள்ள பெண்கள்
பாடசாலைகளை இவர்கள் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஆனால், மலையோரக்
கிராமங்களிலும், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும் இவர்களால்
அச்சுறுத்த முடிகின்றது.ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? 20110708-TOD-2
இதெல்லாம் தேவையில்லை என்கின்றனர் தலிபான்களின் ஒரு பிரிவினர்.

இங்குள்ள மற்றொரு விஷயம், தலிபான் அமைப்பிலும் பல பிரிவுகள் உள்ளன.
இதுபோன்ற கடும் கட்டுப்பாட்டுகளை நடைமுறைப் படுத்துபவை சில பிரிவுகள்தான்.
ஆனால், தலிபானின் ஒரு பிரிவு இப்படிச் செய்வதை, மற்றைய பிரிவுகள் தட்டிக்
கேட்பதில்லை. அப்படியொரு அன்டர்ஸ்டான்டிங் அவர்களிடையே உண்டு.
நாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பூச்சியமாக இருந்த மாணவிகளின்
எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 1.75 மில்லியன் என்ற அளவில்
உயர்ந்திருப்பது, தலிபான் சில பிரிவுகளில் உள்ள ஆட்களுக்கு ஆவேசத்தை
ஏற்படுத்தியிருக்கின்றது.
இன்றுகூட, ஆப்கானில் உள்ள மொத்த பெண்கள் ஜனத்தொகையில் 79 சதவிகிதமானவர்கள், தமது வாழ்க்கையில் ஒருபோதும் எழுதவோ படிக்கவோ இல்லை.
தலிபான்களின் தாக்குதல்களால் எந்தவித பலனும் இல்லை என்று கூறிவிட
முடியாது. இந்த வருடம் மாத்திரம் சுமார் 300 பெண்கள் பாடசாலைகள்
மூடப்பட்டிருக்கின்றன – பயம் காரணமாகவும், கட்டடங்கள் அழிந்து விட்டதாலும்.
இப்படி மூடப்படும் பெண்கள் பாடசாலைகள் பெரும்பாலும் இருப்பது, ஆப்கானின்
தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில்.
அங்கெல்லாம், தலிபான்களின் ஆதிக்கம் இன்னமும் இருக்கின்றது.
நேட்டோ ராணுவம் தலிபான்களை வேட்டையாடும் நிலையில், குறிப்பிட்ட சில
பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால், அங்கே அவர்களுக்கு
மக்களிடம் ஆதரவும் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது! முழுமையாக
இல்லாவிட்டாலும், கணிசமான அளவில் இருக்கின்றது.
சரி. பல வருடங்களாக பின்தங்கிய நிலையில் இருந்த ஆப்கான் பிரசைகள்,
இப்போது புதிய வாழ்க்கைக்குச் சென்ற பின்னரும், ஏன் தலிபான்களை
ஆதரிக்கிறார்கள்? தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கே செல்லவேண்டாம் என்று
தடுப்பவர்களை ஏன் ஆதரிக்கிறார்கள்?
அவர்களில் சிலருக்கு மத ரீதியான சில ‘தீவிரமான நம்பிக்கைகள் இருப்பதாக தெரிகிறது.
மற்றயவர்கள்?
இப்போது இருக்கும் புதிய ஆப்கான் அரசில் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக தலிபானை ஆதரிக்கிறார்கள்!
காபுல் அரசு பொதுமக்களின் ஆதரவை படிப்படியாக இழந்து வருவது கண்கூடாகத்
தெரிகிறது. குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கே லோக்கல் போலீஸ்
திணற வேண்டியிருக்கிறது. இதனால் குற்றங்கள் பெருகுகின்றன.
உதாரணமாக லக்மன் மாகாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே குற்ற விகிதம்,
மிகமிக அதிகம். பொதுமக்கள் பொலீஸ்மீது அதீத வெறுப்பில் இருக்கிறார்கள்.
“இங்குள்ள பொலீஸ்காரர்கள் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, சும்மா
வீட்டுக்கும் பொலீஸ் நிலையத்துக்கும் சென்று வருகிறார்களே தவிர,
குற்றவாளிகளைப் பிடிப்பதேயில்லை” என்கிறார் முல்வி சையத் ரஹ்மான். இவர்
அந்த மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? 20110708-TOD-7
தலைநகர் காபுலில் பெண்கள் உரிமை அமைப்பின் பெண்கள் தைரியமாக வெளியே வந்து போராடுகிறார்கள்.

“இரண்டு வருடங்களுக்கு முன்னர், இங்கே ஒரு தலிபான்காரர்கூட
இருக்கவில்லை. பொதுமக்களின் ஆதரவு இல்லாத நிலையில் அவர்கள் அனைவரும்
வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இன்று? பொதுமக்களில் பலர் கொஞ்சம்
கொஞ்சமாக தலிபான் ஆதரவாளர்களாக மாறி வருகிறார்கள். என்ன காரணம்?
‘பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டிருக்கும் வெறுப்பு” என்கிறார்
ரஹ்மான்.
“அரசாங்கம் எங்களைக் கவனிப்பதில்லை. அவர்களுக்கு நாங்கள் ஒரு பொருட்டாக
இல்லை. எங்களைப் பாதுகாப்பதில்லை. அதன் பின்னர், நாங்கள் ஏன் அரசை ஆதரிக்க
வேண்டும்?”
இப்படியான மனப்பான்மைதான், ஆப்கானில் மீண்டும் தலிபானுக்கு செல்வாக்கை வளர்த்துக்கொண்டு செல்கிறது.
அமெரிக்கப் படைகள் இன்னமும் ஆப்பானில் நிலைகொண்டிருக்கின்றன.
அமெரிக்கர்களின் ஆதரவுடன்தான் ஆப்கானின் அரசு இயங்குகிறது.
அப்படியிருந்தும், ஆப்கானில் வாழ்க்கை கடினமாக இருக்கிறது.
இது ஆப்கான் பிரஜைகளை யோசிக்க வைத்திருக்கின்றது.
அமெரிக்கர்கள் உள்ளேவந்தபின், தங்களது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.
புதிய ஆப்கான் உருவாகிவிடும் என்றெல்லாம் கனவு கண்டவர்கள்கூட, இப்போது
தாங்கள் நினைத்தது தவறோ என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம்,
மிக நீண்ட காலமாக அமெரிக்கர்கள் ஆப்கானுக்குள் இருந்தும், பெரிய மாற்றங்கள்
எதையும் செய்ய முடியவில்லை.
அதே நேரத்தில், அமெரிக்கர்களாலும் தாங்கள் நினைத்தபடி பெரிதாக எதுவுமே செய்ய முடியாமல் இருக்கின்றது என்பதே அங்குள்ள நிலை.
தலைநகர் காபுல், மற்றும் அதைச் சுற்றியுள்ள சில இடங்களையும் தவிர மற்றய
பகுதிகளுக்கு செல்வதையே அமெரிக்க ராணுவம் தவிர்க்கின்றது. காரணம்
பாதுகாப்பு!
இன்னமும் ஆங்காங்கே நடைபெறும் தாக்குதல்களில் அமெரிக்கப் படையினர்
கொல்லப்படுகின்றார்கள். எவ்வளவு முயன்றும், தாக்க வருபவர்களை முழுமையாக
நிறுத்தவே முடியவில்லை.ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? 20110708-TOD-3
தலிபான்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்..

அதுதவிர, ஆப்கான் மறைவாக நடமாடுவதற்கு அருமையான ஒரு இடம். எவ்வளவு
துல்லியமான உளவு பார்க்கும் தொழில் நுட்பம் இருந்தாலும், இன்னமும்
அமெரிக்கர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தலிபான்களும் அல்-கய்தா
உறுப்பினர்களும் ஆப்கானில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அருகே, பாகிஸ்தான் எல்லை இருக்கிறது.
பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு சார்பாக நடந்துகொள்கிறது என்று (முழுமையாக
அல்ல) கூறப்பட்டாலும், பாகிஸ்தான் – ஆப்கான் எல்லைப் பகுதிகளில் தனி
ராட்சியமே நடக்கிறது. எல்லைக்கு இந்தப் பக்கமும் சரி, அந்தப் பக்கமும் சரி,
அல்-கய்தாவுக்கும் தலிபானுக்கும் இன்றுகூட ஆதரவு அதிகம்.
ஆப்கானில் இன்று, நிஜமான நிலைமை என்ன?
ஒரு புறம் செயற்படாத அரசு. மறுபுறம் அதிகம் நகர முடியாத அமெரிக்கப்
படைகள். இந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக தலிபான்களுக்கு மக்கள் மத்தியில்
ஆதரவு அதிகமாகின்றது. தலிபான்கள், ஆப்கானின் சில பகுதிகளை கிட்டத்தட்ட
தமது ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாகவே மாற்றத் தொடங்குகிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தமது ராணுவத்தை ஆப்கானிலிருந்து திருப்பி
அழைத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார். உடனடியாக நடைபெறாவிட்டாலும், அடுத்த சில
வருடங்களில் அமெரிக்கப் படைகள் முழுமையாக அங்கிருந்து அகன்று விடலாம்.
அமெரிக்கப் படைகள் வெளியேறினால், அதன்பின் 1 நிமிடம்கூட ஆப்கான் அரசு
தாக்குப் பிடிக்காது. மீண்டும், தலிபான்களின் கையில் அதிகாரம்
சென்றுவிடும்.
அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால், நூரியாவைப் போலுள்ள 1.75 மில்லியன்
மாணவிகளின் படிப்பு என்னாகும்? படிந்து, ஆசிரியையாக வரவேண்டும் என்ற
நூரியாவின் கனவு என்னாகும்?
நன்றி:விறுவிறுப்பு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 08, 2011 11:35 am

இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருக்காங்களா....என்ன கொடுமை இது,,,
பாவம் அங்குள்ள பெண்கள்...சுதந்திரமில்லாமல் பயத்துடனே பாடம் படிக்கிறாங்க...அந்த பெண்ணை போல மன தைரியம் அனைவருக்குமே இருந்தால் நல்லதே...அவளின் கனவு நினைவாகனும்...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 11:51 am

காலம் நிச்சயம் மாறும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 1:05 pm

மிகவும் அருமையான விழிப்புணர்வு பகிர்வு, நம் நாட்டில் பெண்களின் நிலையை ஆப்கான் பெண்களின் நிலையோடு ஒப்பிட்டால் எவ்வளவோ உயர்ந்துள்ளது என்றுதான் தோன்றுகிறது... எனக்கு இந்த பதிவில் பல இடங்களில் மனக்கசப்பு மேலோங்கி நின்றாலும், ஆப்கான் மாணவிகளின் தைரியமும், தன்னம்பிக்கையும், கல்வி மீது அவர்களுக்குள்ள ஆர்வமும் என்னை வியப்புடன் கூடிய மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது... இஸ்லாமிய பெண்கள் பர்தா அணியும் பழக்கத்தையே நான் வன்மையாக எதிக்கிறேன்... ஒரு கருப்பு (வெள்ளை) கூடாரதிற்க்குள் அடைத்து வைக்கப்பட்ட ஐந்தறிவு மிருகமாய் பர்தாவில் பெண்களை காண்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை... பெண்களுக்கு கல்வி கூடாது என்று தர்க்கம் செய்வோர் கலவிக்கு மட்டும் அவர்கள் துணையை நாடுவதேன்? இதைபோன்று ஒரு இனத்தினை வளர்க்கும் ஜந்துவாய் மட்டுமே பார்க்கப்படும் பெண்கள் நம்நாட்டிலும் உள்ளனர், என்ன ஒரு சின்ன வித்யாசம் அங்கைவிட இங்கு அடக்குமுறைக்குள்ளாகும் பெண்கள் சதவிகிதத்தில் குறைந்த அளவில் உள்ளனர் அவ்வளவுதான். என்னுடன் பொறியியல் பயின்ற இருபத்தோறு மாணவிகளில் வெறும் நான்கு மாணவிகள் மட்டுமே வேலைக்குச் செல்கிறார்கள், அதில் இருவர் ஆசிரியையாய் உள்ளனர். மற்றவர்கள் வழக்கம்போல் குடும்பத்தலைவிகளாய் மட்டும்...தங்கள் பெண்களை எதற்காக படிக்கவைக்கிறோம் என்ற காரணம் பெற்றோர்களுக்கு உண்மையிலேயே தெரியுமா என எனக்கு தெரியவில்லை, படித்தவுடன் மணமுடித்து வீட்டில் அமர்த்திவிடுகிறார்கள், இரவு பகலாக போட்டிபோட்டு படித்து முதல் மதிப்பெண் பெற்ற பெண்கள் மணமுடித்தவுடன் குடும்பம், குழந்தை, வீடு, சமையல் இப்படியே தங்கள் ஆயுளை கழித்துவிடுகிறார்கள். "பெண்ணை எதற்கு இவ்வளவு படிக்க வைக்கிறாய்? பின் வரன் கிடைக்காமல் போய்விடும்" என்று பெண்ணை பெற்றோர்களுக்கு அறிவுரை வேறு!!! ஊழல், பொருளாதாரம், அரசியல், கல்வி, சட்டம், காவல் போன்று ஒவ்வொரு துறையிலும் உள்ள குறைகள் முழுமையாய் களையப்படுதல் இளைஞர்களால்தான் முடியும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டேன், மேற்கூறியவற்றில் பெண்களின் பங்கு எந்த அளவிற்கு மேலோங்கி நிற்கிறதோ அந்த அளவிற்கு விரைவான முன்னேற்றத்தை நாடு காணும், அது ஆப்கானாய் இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே வகுப்புகள் - இப்படி பிரித்து வைப்பதினால்தான் அதிகப்படியான பிரச்சனையே வருகிறது, இப்படி பிரித்து வைப்பதற்கு பேசாமல் பெண்களை தனியாக ஒரு பிரதேசத்தில் வாழவிட்டுவிட்டு ஆண்கள் மட்டும் தனியே ஆப்கானில் வாழலாம், பர்தா அணியாமல் வெளியே வந்த ஒரு பெண்ணிற்கு கசையடி கொடுக்கப்பட்ட வீடியோ கோப்பு காட்சியை நான் கண்டுள்ளேன், பெண்ணை தண்டிக்கும் உரிமை ஆணுக்கு உண்டு என யார் கூறியது? அந்த உரிமை கடவுள் என்று சொல்லப்படுபவனுக்கு(இருப்பானாயின்) கூட கிடையாது, அப்படி இருக்க மடந்தையின் மூக்கை அறுக்கவும், நாக்கை துண்டிக்கவும், கசையடி குடுக்கவும் நீங்கள் யாரடா மலத்தை உண்டு உடல் வளர்த்த மமதைகளே? இயற்க்கையில் உங்களைவிட உடல் வலிமையில் குறைவானவள் என்பதை தவிர எந்த விதத்தில் பெண் உங்களுக்கு கீழானவளானாள்? எகிப்தின் புரட்சியில் முகநூல் மூலம் புரட்சி வேருக்கு வித்திட்டவள் ஒரு பர்தா அணிந்த இஸ்லாமிய பெண், காஷ்மீரில் வீட்டில் நுழைந்த தீவிரவாதிகளை அவர்கள் துப்பாக்கியை பிடிங்கி அவர்களையே சுட்டவள் பர்தா அணிந்த இஸ்லாமிய பெண், மணிப்பூர் இராணுவ கொடுங்கோலாட்சியை எதிர்த்து நாடெங்கும் பிரசாரம் செய்து கொண்டிருப்பது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண், இவர்கள் ஒவ்வொருவரின் திறமையும், தைரியமும் பர்தா என்னும் இருட்டுச் சுவர்களை தாண்டி பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது, நுரியாவின் தன்னம்பிக்கையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்... பெண் சமூகத்தில் பள்ளிமுதல் அலுவல் வரை அரசியல் முதல் அறிவியல் வரை அனைத்திலும் பங்கு வகிக்க வேண்டும், உங்களுக்கான இடமளிப்பை 33 சதவிகிதம் என முடிவெடுக்க இவர்கள் யார்? 50 சதவிகத இடமளிப்பை கேட்டு பெரும் உரிமை அல்ல அதிகாரத்தோடு எடுத்துக்கொள்ளும் உரிமை பெண்களே உங்களுக்கு எப்போதும் உண்டு... தெளிவான நல்ல கல்வி மட்டுமே உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வினை தரும்... உங்களுக்கான கல்வி உங்கள் தரத்தை உயர்த்துமானால் அதை உங்கள் பெற்றோர் எதிர்த்தாலும் கேளாது கற்றிடுங்கள்...

மிகமிக விழிப்புணர்வு பதிவினை அளித்த ரியல் வாம்பையறுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

தங்கள் மூக்கினை தூண்டித்தாலும் கல்வி கற்றே தீருவேன் என்று தன்னம்பிக்கையோடு போராடும் மாணவிகளுக்கும், அவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் எனது தலைதாழ்ந்த வணக்கங்கள்...

பெண்ணுரிமை தொடர்பான எனது வலைப்பூ பதிவு http://agangai.blogspot.com/2010/07/pennurimai.html



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Boxrun3
with regards ரான்ஹாசன்



ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Hஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Aஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Sஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? Aஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை? N
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Jul 08, 2011 1:24 pm

தனது சொந்த நாட்டில் சுதந்திரமாக இருக்க முடியலே! பகிர்விற்கு நன்றி சக்தி! சோகம்

mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Fri Jul 08, 2011 1:37 pm

முட்டாள், மூடன், மூர்க்கன் இம்மூவரையும் திருத்தவே இயலாது.
தன் குடும்பம், தன் தாய் நாடு, இவற்றில் உள்ளோருக்கு எதிராக, துப்பாக்கி தூக்கியவன் எந்த சமாதானம் கூறினாலும், இறைவன் அவர்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. மக்களும் தான். ஏற்றுகோபவர்கள் மாக்கள்..... நல்ல பதிவு. சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக