புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
53 Posts - 42%
heezulia
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
304 Posts - 50%
heezulia
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
21 Posts - 3%
prajai
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விகடன் செய்திகள்.... Poll_c10விகடன் செய்திகள்.... Poll_m10விகடன் செய்திகள்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விகடன் செய்திகள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:01 pm

மேற்கு வங்க அரசு மருத்துவமனை அவலம்: 36 மணி நேரத்துக்குள் 17 குழந்தைகள் உயிரிழப்பு
கொல்கத்தா, ஜூன் 30,2011


மேற்கு வங்கத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில், இரு நாட்களுக்குள் 17 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம், அம்மாநிலத்தை வெகுவாக உலுக்கியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள பி.சி.ராய் மருத்துவனையில் வெவ்வேறு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 17 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 36 மணி நேரத்துக்குள் இத்தனை குழந்தைகள் இறந்திருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை இழந்த பெற்றோர்களும் உறவினர்களும் கதறலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலரும் மருத்துவமனையையும், மருத்துவர்களையும் தாக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

சுகாதாரத்துறையையும் கவனித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பரில் நிமோனியா, இரைப்பை குடல் பிரச்னை காரணமாக 2 மாதக் கைக்குழந்தை உள்பட 14 குழந்தைகள் இதே மருத்துவமனையில் உயிரிழந்ததும், அப்போது மருத்துவமனையின் கவனக்குறைவைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றதும் நினைவுகூரத்தக்கது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:03 pm

''கனிமொழி அப்பாவி!''

நந்தி சாமியாக மாறிய அதிபன் போஸ்


முழங்கால் அளவுக்கு காவி... மிடுக்கு குறைந்த முகம்... அசட்டை​யான சிரிப்பு... ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த தொழில் அதிபர் அதிபன் போஸா இவர்? கனிமொழி​யுடன் திருமணம், விவா​கரத்து என பரபரப்புப் புள்ளியாக இருந்த அதிபன், இப்போது ஆன்மிக அவதாரம் எடுத்து இருக்கிறார். சித்தர் குரு அய்யாவின் அடியவராகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் அதிபன் போஸ், அவருடைய மந்திரங்களைப் பாடல்களாக்கி சி.டி-யாக வெளியிட்டு இருக்கிறார்.

நந்தி சாமியாக தன்னை மாற்றிக்கொண்ட அதிபன் போஸிடம், ''என்ன, இப்படி மாறிட்டீங்க?'' எனக் கேட்டோம்.

''மாற்றம்கிறது நல்ல விஷயம்தானே... இதில் அனுதாபப்பட என்ன இருக்கு? நாம மட்டும் இல்லை... இந்த மரம், மண் எல்லாமே மாறிட்டுத்தான் இருக்கு. 'எல்லாம் நிரந்தரம்’னு நாம கற்பனை பண்ணிட்டு அலையுறோம். ஒரு கட்டத்தில் அந்த நினைப்பு தவிடுபொடியாகிடுது; வாழ்க்கையோட உண்மை புரியுது. இந்த அதிபன் மாறியதும் அப்படித்தான்!'' என்றபடி பலமாகச் சிரிக்கிறார்.

''இந்த ஒலிநாடா மூலமாக என்ன சொல்லப்​போகிறீர்கள்?''

''மனிதத்தன்மை உள்ளவங்க இந்த உலகுக்கு ஏதாவது செய்யணும். நம்மை நாமே உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை இந்தப் பாடல்கள் உணர்த்தும். குரு பூர்ணிமா நேரத்தில் பாடப்பட்ட இந்தப் பாடல்கள் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்தர்களின் சிந்தையில் உதித்தவை.''

''கனிமொழி வழக்கைக் கவனிக்கிறீர்களா?''

''கனிமொழி நல்லவங்க. எதை செய்யும்போதும் ஜாக்கிரதையா இருப்பாங்க. ஆனால், அடுத்தவங்​களோட அட்வைஸுக்குத் தலை வணங்குறவங்க. எங்கள் மண வாழ்க்கை ஒரு வருஷம்தான். அப்புறம் பிரிஞ்சுட்டோம். ஆண்டவன் நடத்தும் விளையாட்டுகள் எல்லாமே அனுபவங்கள்தான். 1,000 வருடங்களுக்கு உரிய அனுபவங்களை நான் கத்துக்கிட்டது கனிமொழியின் பிரிவுக்குப் பிறகுதான். யாரும் யாரோட வாழ்க்கையிலும் தலையிட முடியாது. சில பிரிவுகளுக்குப் பின்னால்தான் அது புரியுது. வேறு என்ன சொல்றது?''

''கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''ஆறுதல் சொல்லும் நிலையில் நான் இல்லை. இது எல்லாம் நேரத்தால் உண்டாகிறது. நாளைக்கே கடந்து போய்விடும். நித்தியானந்தா மிகுந்த அறிவார்ந்த ஆள். அவரைக் கடவுளாகவே மக்கள் கும்பிட்டாங்க. ஆனா, இன்னிக்கு என்னாச்சு? அவரைப் பார்க்கிறதே பாவம்னு நினைக்கிற அளவுக்குப் பேசுறாங்க. நாம எப்பவும்போல நார்மலாக இருந்தாலும், நம்ம சூழ்நிலை நமக்கு வேறு பிம்பத்தைக் கொடுத்துட்டுத்தான் இருக்கு. அதுக்குக் கவலைப்படக் கூடாது. கடந்து போற வாழ்க்கையில் எதுவுமே நிலை இல்லை. எதைப் பார்த்து கனிமொழி பயந்தாங்களோ, எது அவங்களைத் தயங்கவெச்சதோ... அது எல்லாத்​தையும் எதிர்கொள்ளக்கூடிய சக்தி அவங்​களுக்கு இப்போது கிடைத்து இருக்கும்!''

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி தவறு பண்ணி இருப்பாங்​கன்னு நம்புறீங்களா?''

''யாருக்கும் நாம ஜட்ஜ்மென்ட் எழுத முடியாது. ஒவ்வொரு மனுஷங்​களோட நல்லது கெட்டது அவங்களோட மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். எனக்குத் தெரிஞ்சு கனிமொழி, லாப நோக்கம் பார்க்காத அப்பாவி. யாரையும் நம்பவைக்கிறதுக்காக நான் இதைச் சொல்றதா நினைக்கக்கூடாது. அது என்னோட வேலை இல்லை!''

''திருமண முறிவுக்கு அப்புறம் உங்க வாழ்க்கை எங்கெல்லாமோ போயிடுச்சே?''

''செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். பாதி இத்தாலி, பாதி இங்கிலீஷ்னு பேசிய யுனைடெட் நேஷனின் ஜர்னலிஸ்ட் பெண். குழந்தையும் பிறந்தது. கடவுளைத் தேடிப்போற பயணத்தில் என் குழந்தையும் இருக்குது. எனக்கும் கடவுளுக்குமான பயணம்தான் இந்த வாழ்க்கை. எது கையைவிட்டுப் போனப்பவும், நான் கவலைப்படவில்லை. வசதி வாய்ப்பாக இருந்தாலும் என் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. கனிமொழியைத் திருமணம் பண்ணினப்ப அத்தனை பத்திரிகையிலும் என்னைத் தூக்கிவெச்சுக் கொண்டாடினாங்க. 'ஏன் இப்படிப் பண்றாங்க?’னு கூச்சப்பட்டேன். திருமண முறிவையும் எழுதித் தள்ளினாங்க. ஏன் கொண்டாடினாங்க... ஏன் திட்டினாங்கன்னு எனக்கு கடைசி வரைக்கும் தெரியாது.

எல்லாத்தையும் விட்டுட்டு இந்தக் காவிக் கோலத்தில் நான் திரியும்போதுகூட, 'யூ அதிபன் போஸ்?’னு அடையாளம் கண்டு சிலர் பேசுவாங்க. 'ஆம்’, 'இல்லை’ன்னு எந்தப் பதிலையும் சொல்லாமல் சிரிச்சுக்கிட்டே போவேன்... போறேன்!''



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:05 pm

''அன்புமணியால் பதவி இல்லாமல் இருக்க முடியாது!''

அதிரடி கிளப்பும் பா.ம.க. அதிருப்தியாளர்கள்


அதிருப்தியாளர்களின் அதிரடியும், பா.ம.க-வின் பதிலடி யுமாக கிடுகிடுத்துக்கிடக்கிறது வன்னியர் பெல்ட்!

பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் காவேரியும் காமராஜும், தங்கள் ஆதர வாளர்களுடன் ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு நாள் குறிக்க, அவர்களுக்குப் போட்டியாக அதற்கு முதல் நாள் பா.ம.க. சார்பில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டப் பொதுக் குழு கூட்டத்தை நடத்தினார்கள்.

கடந்த 25-ம் தேதி மேச்சேரியில் நடந்த கூட்டத்துக்கு, கட்சியின் மாநிலத் தலைவரான கோ.க.மணிதான் தலைமை தாங்குவார் என சொல்லப்பட்டது. ஆனால், மணி வரவில்லை. மாநில துணைப் பொதுச் செயலாளரான ஓமலூர் தமிழரசு, கூட்டத்தை வழி நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு ஓமலூர் தமிழரசுவிடம் பேசினோம். ''தனக்குத் திரும்பவும் எம்.எல்.ஏ. ஸீட் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் காவேரி சொல்லிட்டு இருக்கார். மருத்துவர் ஐயாவை யாருமே பார்க்க முடியாதுன்னு காவேரி சொல்றது வடி கட்டிய பொய். தைலாபுரம் தோட்டத்துக்கு எங்க எல்லோரையும்விட காவேரிதான் செல்லப்பிள்ளை. அவரோட இரண்டாவது மகன் கல்யாணத்தை, 'எனக்கு குல தெய்வமே தைலாபுரத்தில்தான் இருக்குது. அதனால், என் பையன் கல்யாணத்தை அங்கேதான் நடத்துவேன்’னு சொல்லி தைலாபுரம் தோட்டத்துக்குத் தன் மகனை கூட்டிட்டுப் போய் மருத்துவர் ஐயா முன்னாடி தாலி கட்ட வெச்சார். வாரிசு அரசியல்னு சொல்றாரே... தி.மு.க-வில் வாரிசு அரசியல் இல்லையா..? காங்கிரஸில் இல்லையா..? சின்னய்யாவை நாங்க எல்லோரும் கட்டாயப் படுத்தித்தான் கட்சிக்குள் கொண்டு வந்தோம்.

ஐயாவைப் பத்தியோ... சின்னய்யாவைப் பத்தியோ பேச காவேரிக்கு எந்தத் தகுதியும் கிடை யாது. ஊரு ஊராகப் போய் ஊசி போட்டுட்டு இருந்த ஆர்.ஐ.எம்.பி. டாக்டரான காவேரியை, எம்.எல்.ஏ.வாக்கி அழகு பார்த்தது மருத்துவர் ஐயாதான். இன்னிக்கு காவேரியோட சொத்து மதிப்பு என்னன்னு கணக்கெடுக்கச் சொல்லுங்க. அது எங்கே இருந்து வந்தது?

வன்னியர் சங்கம் என்ற பெயரில் நாளைக்கு காவேரியும் காமராஜும் சேர்ந்து கூட்டம் போடு றாங்க. மக்கள் யாரும் தெரியாத்தனமா அங்கே போயிடக் கூடாதுன்னுதான் இன்னிக்கு நாங்க கூட்டம் போட்டோம். பா.ம.க. தொண்டன் ஒருத்தன்கூட அவங்ககூட போக மாட்டான். இதைத்தான் கூட்டத்தில் பேசினோம்...''என்றார்.

காவேரி தலைமையிலான பா.ம.க. எதிர்ப்பாளர் கள் கூட்டம், அதே மேச்சேரியில் 26-ம் தேதி நடந்தது. சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கூடியி ருக்க, நிர்வாகிகள் சிலருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், ''மேட்டூரிலும் பென்னாகரத்திலும் தன்னுடைய குடும்பத்தைத் தவிர வேற யாரும் எம்.எல்.ஏ. ஆகிடக் கூடாதுன்னு கோ.க.மணி நினைக்கிறார். மணியோட பையன் தமிழ்க்குமரனுக்கு எதிராக யாரும் இந்தப் பகுதியில் வளர்ந்துடக் கூடாது என்ப தில் கவனமா இருக்கார். என்னைப் போன்றவர்கள் இருந்தால் பிரச்னை என்பதால்தான், என்னைக் கட்சியைவிட்டு நீக்கி இருக்காங்க. இதை எல்லாம் ராமதாஸ்கிட்ட சொன்னாலும், அவர் கேட்க மாட் டார். மணியைப்பத்தி ராமதாஸ்கிட்ட ஒரு வக்கீல் புகார் பண்ணினார். மறுநாள் அந்த வக்கீலுக்கே மணி போன் பண்ணி, 'ராமதாஸே நினைச்சாலும் என்னை கட்சியைவிட்டு நீக்க முடியாது!’ன்னு சிரிச்சாராம். இப்படிப்பட்ட ஒரு இயக்கத்துல இத்தனை வருஷத்தை வீணடிச்சுட்டோமேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு...'' என்று வேதனையைக் கொட்டினார்.

உணர்ச்சிப் பிழம்பாக மைக் பிடித்தார் காவேரி. ''தலைமைக்கு எதிரான கருத்துகளை நான் சொன்னதாக மருத்துவர் ராமதாஸ் நினைத்து இருந்தால், என்னைத் தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து சவுக்கால்கூட அடித்திருக்கலாம். ஆனால், எங்களோட கடந்த கால உழைப்பை எல்லாம் மறந்துட்டு, என்னைப்போல உண்மையாக உழைத்த ஒவ்வொருவரையும் வெளி யேத்துறீங்க. எங்க வேதனையும் சாபமும் உங்களை சும்மாவிடாது.

ஒரு காலத்தில் நீங்க, 'நானோ, என் மகனோ சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ கால்வைக்க மாட்டோம்’ என்று சத்தியம் செய் தீர்கள். நீங்கள் ஒரு சத்ரியன். சத்ரியன் எப்போதும் பொய் பேச மாட்டான். நீங்கள் பொய்யும் பேசி விட்டீர்கள், வாக்கும் தவறிவிட்டீர்கள். இது மன்னிக்க முடியாத குற்றம்!

அன்புமணியால் பதவி இல்லாமல் இருக்க முடியாது. ஏன் அப்படி பதவி வேண்டும் என்றால், போட்டியிட்டு ஜெயிக்க வேண்டியதுதானே? ஏன் எப்போதும் பிளஸ் ஒன் கேட்டு வாங்குகிறீர்கள்? மணி போன்ற ஆட்களைத் தலைவராக வைத்திருக்கும் வரை, பா.ம.க. எந்தக் காலத்திலும் தலை தூக்கவே முடியாது. நமக்குன்னு ஒரு கொடி விரைவில் வரும். அதுவரை எந்த கரை வேஷ்டி கட்டுவதுன்னு உங்க எல்லோருக்கும் ஒரு குழப்பம் வரும். இளைஞர்களாக இருப்பவர்கள் பேன்ட் சட்டை அணியுங்கள். மத்தவங்க எந்த கரையும் இல்லாத சாதாரண கதர் வேட்டி அணியுங்கள். இந்தக் குழப்பத்துக்கு எல்லாம் விரைவில் விடையும் கொடியும் கிடைக்கும்!'' என்று பேசிக் கைதட்டல் வாங்கினார்.

அதிருப்தியில் இருக்கும் பா.ம.க-வினரை அரவணைக்கும் முயற்சியில் அ.தி.மு.க-வும், தே.மு.தி.க-வும் களம் இறங்கி இருப்பதால், இன்னமும் நிறையத் திருப்பங்கள் வரலாம்!





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:06 pm

இந்தத் தோல்விக்காக ஜெயலலிதாவுக்கு நன்றி..

காஞ்சிபுரத்தில் அன்பழகன் அறிவிப்பு



சட்டப் பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழுவின் தீர்மானங்களை, விளக்குவதற்குப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண் டார்.

அன்பழகனுக்கு முன் பேசிய கம்பம் செல்வேந்திரன் சீரியஸாகவே தொடங்கினார். தி.மு.க-வுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம் என்ற ரீதியில் பேசிய அவர், ''67-ம் ஆண்டு நடந்த தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்தினமே, காமராஜரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துச் சொன்னார், காவல் துறை அதிகாரி ஒருவர். 'எதுக்கு அவசரம் ஒரு நாள் பொறுக்கக்கூடாதான்னேன்?’ என்று காமராஜர் அவரைக் கடிந்து கொள்ள... அதற்கு அந்த அதிகாரி மிகுந்த நம்பிக்கையுடன், 'நாளைக்கு மதியம் நீங்க பிஸியாயிடுவீங்க அதான்...’ என்றார்.

ஆனால், அடுத்த நாள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சியைப் பிடித்து விட்டது!'' என்றார் செல்வேந்திரன்.

சுவாரஸ்யமாக இதைக் கேட்டுக்கொண்டு இருந்த அன்பழகன் குறுக்கே புகுந்து, ''அந்த அதிகாரி பேரைச் சொல்லுய்யா...'' என்றார். ஆனால், அந்த போலீஸ் அதிகாரியின் பெயர் தெரியாமல் முழித்த செல்வேந்திரன், ''அருளா?'' என்று பேராசிரியரிடமே கேட்டார். இல்லை என்று அன்பழகன் தலையாட்ட... சங்கடப்பட்ட செல்வேந்திரன், ''மகாதேவன் தானே...'' என்று மீண்டும் ஒரு கேள்வியை பேராசிரியர் முன் வைத்தார். அதற்குமேல் அவரை சங்கடப்படுத்த விரும்பாத அன்பழகன், ''ஐ.ஜி. பார்த்தசாரதி'' என்று சொல்ல... தொண்டர்களிடம் இருந்து பலத்த கைதட்டல்.

கம்பம் செல்வேந்திரனுக்குப் பிறகு மைக் பிடித்த அன்பழகன், ''தமிழகம் முழுக்க ஏற்பட்ட தோல்வியைக்கூட நான் ஏத்துக்கிட்டேன். ஆனால், காஞ்சியில் அடைந்த தோல்வியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பொதுவாக, நம்ம கட்சியில ஏரியாவுக்கு ஒரு தளபதிதான் இருப்பாங்க. ஆனா, காஞ்சிபுரத்தில் எண்ணிலடங்காத தளபதிங்க. தேர்தலப்போ மத்த தொகுதியைவிட இங்கிருந்துதான் அதிகம் மனுக்கள் வரும். கடைசியில கோட்டை விட்டுட்டீங்களே...'' என்று சற்றே நிறுத்தி ஆதங்கப்பட்ட அன்பழகன், ''இந்தத் தோல்வியை ஒரு வகையில் நல்லது என்பேன்...'' என்று சொல்லவே, தொண்டர்கள் சற்று மிரண்டனர். ''நம்மைப் பொறுத்த வரை தோல்வி அடையும்போதுதான் நம்மிடம் ஒற்றுமை தென்படும். வெற்றி அடையும்போது பிரிஞ்சு போயிடுறோம். வெற்றி நம்மைப் பிரிக் கிறது, தோல்வி நம்மை இணைக்கிறது!'' என்று விளக்கிய அன்பழகன், ''அண்ணா தோற்றபோது நான்கூட கவலைப்பட்டேன். ஆனால், அது நல்லதாகப் போய்விட்டது. தோற்றதால்தான் அவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றார். தி.மு.க. கொள்கைகள் இந்திய அளவில் சென்று சேர்ந்தது. அண்ணாவின் திறமையை அறிந்த ராம் மனோகர் லோகியா என்ற முதுபெரும் தலைவர் என்னிடம் ஒரு முறை, 'உங்க அண்ணாவை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நிற்கச் சொல்லுங்க!’ என்றார். அண்ணாவிடம் இதைச் சொன்னபோது சிரித்துக்கொண்டே 'இதுக்குதான்யா டெல்லி போகமாட்டேன்னேன். இன்னும் என்னை எங்கெங்கே போகச் சொல்வீங்களோ?’ என்று அண்ணா சொன்னார்'' என்று வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிய அன்பழகன்...

பின்னர், திராவிடர் - ஆரியர் பிரச்னைக்கு வந்தார். ''நாம எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வைதீக அகராதியில சூத்திரர்கள்தான். ஒவ்வொரு இனமும் எங்கெங்கே பிறந்தவங்கன்னு பிராமணன் வகுத்து வெச்சிருக்கான். தொடை, பாதம்ன்னு கண்ட கண்ட இடங்களைச் சொல்வாங்க. இவனுங்க எங்கேடா பிறந்தாங்கன்னு கேட்டா, நாங்க எல்லாம் ஒரிஜினல் ப்ளேஸ்லதான் பிறந்தோம்ங்கறான்'' என்றபோது பேசுவது பேராசிரியர்தானா? என்று மேடையில் இருந்தவர்களே கிள்ளிப்பார்க்கும் நிலைக்குப் போனார்கள்.

பத்திரிகைகளையும் ஒரு பிடி பிடிக்கத் தவறவில்லை அன்பழகன். ''உண்மையில் இது ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன். ஜெயலலிதா வெறும் அம்பு மட்டும்தான். வெற்றி பெற்றிருப்பது 'துக்ளக்’ சோவும் 'தினமணி’ வைத்தியநாதனும்தான். நாம் இலவசங்களைத் தந்தபோது மக்கள் வரிப்பணம் வீணாகுதுன்னு மூக்கை சிந்தினவங்க எல்லாம் இப்போ, அம்மா அறிவிச்சதை எல்லாம் நான்கு மாதத்தில் தந்திடுவாங்க... ஆறு மாதத்தில தந்திடுவாங்கன்னு பக்கம் பக்கமா ஜோசியம் எழுதிக்கிட்டு இருக்காங்க. கண்டிப்பா கொடுப்பாங்க அம்மா... அம்மா தராம விட்டுட்டாலும் இவங்க அதை வாங்கித் தந்திடுவாங்க போல இருக்கு. தி.மு.க., தேர்தல் அரசியலை நோக்கி இயங்கும் கட்சியல்ல. இது சமூக நீதிக்கான ஓர் இயக்கம். பகுத்தறிவு இயக்கம். ஒரு வகையில் இந்த தோல்விக்காக நாம் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம், இப்போதுதான் நாம் மக்களுக்கு முழுநேர சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மக்களை மயக்கியதால் கிடைத்த வெற்றி இது. அந்த மயக்கத்தைப் போக்கும் விதத்தில் இனி நம் பணி இருக்க வேண்டும்!'' என்று வேண்டுகோளோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார் அன்பழகன்.

தோல்விக்கு ஆறுதல் சொல்கிறாரா அல்லது நையாண்டி செய்கிறாரா என்று புரியாமலே உடன்பிறப்புகள் கலைந்து சென்றார்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:07 pm

தேர்தல் வரும் பின்னே.. இலவசம் வரும் முன்னே!

ஒ.எம்.ஆர். சாலையில் உள்ளாட்சித் திருவிழா ஆரம்பம்


'ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்’ - முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாசகம். இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும் அதையே தொடர்கிறார் என்பது வேறு விஷயம். ஆனால், சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் இருக்கும் ஊராட்சிகளில் தமிழக அரசின் இலவசத் திட்டங் களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இலவசங்களை அமல்படுத்தி அசத்துகிறார்கள் உள்ளூர் பிரபலங்கள். காரணம், வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல்!

கணிப்பொறி மென்பொருள் நிறுவனங்களின் படை எடுப்பால் பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்.) இன்று ஏகத்துக்கும் காஸ்ட்லி. சாலை எங்கும் வான் உயர்ந்த கட்டடங்களும், ஷாப்பிங் மால்களும் பளபளக்கின்றன. ஒரு சென்ட் நிலம் 30 லட்சத்தைத் தாண்டிவிட்டது. திருப்போரூர், தையூர், கேளம்பாக்கம், படூர், நாவலூர், சிறுசேரி, தாழம்பூர், புதுப்பாக்கம், மேலக்கோட்டையூர் என திருப்போரூர் பேரூராட்சியில் மட்டும் 50 ஊராட்சி கள் இருக்கின்றன.

இங்குள்ள கணிப்பொறி மென்பொருள் நிறுவனங் களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனங்களின் வரி இன வருவாய் கோடிக்கணக்கில் ஊராட்சி நிர்வாகங் களுக்குக் கொட்டுகிறது. தவிர, இங்கு கட்டடங்கள் கட்டவும், குறிப்பிட்ட விஷயங்களுக்கு தடை இல்லா சான்று வாங்கவும் கோடிக்கணக்கில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செலவு செய்கிறார்கள் அதன் உரிமையாளர்கள்!

இதனால், எம்.பி. பதவியை விடவும் இங்குள்ள ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர் பதவி களுக்கு மவுசு அதிகம். கடந்த உள்ளாட்சி தேர்தலில் இங்கு போட்டி இட்டவர்களின் செலவு, ஆஃப் தி ரெக்கார்டாக ஒரு கோடியில் இருந்து இரண்டு கோடியாம். அந்த அளவுக்கு வருமானமும் அதிகம். அதனால், இம்முறையும் உள்ளாட்சிப் பதவிகளைப் பிடித்துவிட இங்கு கடும் போட்டி. இலவசங்கள் இப்போதே குவிய ஆரம்பித்துவிட்டன!



படூர்

அ.தி.மு.க-வைச் சேர்ந்த பரமசிவம்தான் இந்த ஊராட்சியின் தற்போதைய தலைவர். இவரை வீழ்த்தி தலைவர் பதவியை அடையத் துடிக்கிறார் பிரபல ரியல் எஸ்டேட் பிரமுகர் சுதாகர். 'ஏழைகள் ரதம்’ என்ற பெயரில் இவர் டாடா மேஜிக் வாகனங்களை இயக்குகிறார். மாணவ, மாணவியர் படிப்பதற்கு அந்த வாகனங்களில் இலவசமாகச் சென்றுவரலாம். ஊருக்குள் யார் வேண்டுமானலும் சுமார் 30 கி.மீ. வரை அந்த வாகனத்தில் குடும்பத்துடன் இலவச மாகப் பயணிக்கலாம். இது தவிர, உள்ளூரில் சாலை எங்கும் சுதாகரின் சாதனை விளக்க டிஜிட்டல் பேனர்கள் மின்னுகின்றன!

சுதாகருக்குப் போட்டியாக உதவும் ரதங்களை களம் இறக்கி உள்ளார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னகுட்டி. இதில் மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ் ஒன்றும் அடக்கம். இளைஞர் களை கவர கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தி ஆயிரங்களில் பரிசுகளை வழங்குகிறார். இவர் களுக்குப் போட்டியாக ஐக்கிய ஜனதாதள மாநில மாணவர் அணி தலைவர் புருஷோத்தமன், படூர் மற்றும் புதுப்பாக்கம் ஊராட்சியில் இருக்கும் இருளர் சமூகத்து மாணவர்களுக்கு சீருடை, இலவச நோட்டுப் புத்தகம் வழங்குதல், பள்ளிக் கட்டணம் கட்டுதல் என அசத்துகிறார்!

இன்னொரு முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வரான ஐக்கிய ஜனதாதள மாநில இளைஞர் அணி செயலாளர் செங்கை ஆனந்தன் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களுக்கு சென்றுவர டாடா மேஜிக் வாகனத்தை ஒரு ரூபாய் கட்டணத்துக்கு இயக்குகிறார்.



தையூர்

தையூர் பகுதி தலைவர் பகுதிக்கு குமரவேல் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் இடையே கடும் போட்டி. ஊரில் யார் வீட்டில் விசேஷம் என்றாலும் 20 அடி நீளத்துக்கு இரு தரப்பினர் சார்பிலும் வாழ்த்துச் சொல்லி பேனர்கள் மின்னுகின்றன. கூடவே, அந்தக் குடும்பத்துக்கு 10,000 முதல்

25,000 வரை செலவுக்கு பணம் கொடுக்கிறார்கள். கல்யாணம் என்றால் சீர்வரிசை செலவு மொத்தமும் இவர்களுடையதே. தையூரின் ம.தி.மு.க. பிரமுகர் ராஜா பள்ளிக் கட்டணம், இலவசச் சீருடை, நோட்டுப் புத்தகங்கள் என கலக்குகிறார்!

முட்டுக்காடு

முட்டுக்காடு ஊராட்சியில் மயில்வாகனன் என்பவர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு குறி வைக்கிறார். இவர் கோயில் விழாவுக்குப் பணம் கொடுப்பது, கல்லூரி மாணவர்களுக்கு ஃபீஸ் கட்டுவது போன்றவற்றை கச்சிதமாகச் செய்கிறார். கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து சமூக சேவைப் பணிகளைச் செய்து இளசுகளின் ஓட்டுகளை டார்க்கெட் செய்கிறார்!

சிறுசேரி

தற்போதைய தலைவர் ரங்கநாதனுக்கும் இப்பகுதி யின் முக்கியப் பிரமுகர்கள் தேவசித்தம், ஏகாம்பரம் ஆகியோர் இடையே கடும் போட்டி. தேவசித்தம் தனது அறக்கட்டளை மூலம் ஊனமுற்றோருக்கு இலவச சைக்கிள், முதியோருக்கு உதவித் தொகை வழங்குகிறார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தாசில்தார் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு மனு கொடுக்கச் செல்வோருக்கு இலவச வாகன ஏற்பாடுகளையும் இவர் செய்து கொடுக்கிறார். இவரது கைவண்ணத்தால் இப்பகுதியில் மூடிக்கிடந்த கோயில்கள் எல்லாம் சீரமைக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

சிறுதாவூர்

முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும்பங்களா இருக்கும் பகுதி இது. இப்போதே அங்கு தி.மு.க. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயச்சந்திரனின் பேனர்கள் அமர்க்களப்படுகின்றன. தினசரி கிரிக்கெட் போட்டிகளை நடத்தி இளைஞர்களைக் கவர்வது மட்டுமின்றி, அவர்களின் அன்றாடச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறார்.

அடேங்கப்பா... இப்பவே கண்ணைக் கட்டு கிறதே!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:08 pm

யாராவது செத்தால்தான் இவர்கள் ஜெயிப்பார்கள்

வேலூர் தி.மு.க. சுறுசுறு!


சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காட்பாடி எம்.எல்.ஏ. துரைமுருகன் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால், வேலூர் மாவட்ட உடன்பிறப்புகளுக்கு ஏக சந்தோஷம்! கருணாநிதியின் 88-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிகழ்வாகவும் அதை வடிவமைத்து இருந்தனர். மாவட்ட தி.மு.க. சார்பாக கடந்த 25-ம் தேதி, லியோனி தலைமையில், 'கலைஞரின் விஞ்சிய புகழுக்குக் காரணம் இலக்கியப் பணியா... அல்லது அரசியல் பணியா?’ என கருணாநிதியின் புகழ்பாடும் பட்டிமன்றமும் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகவே மேடை ஏறி, முன்னுரை கொடுத் தார் துரைமுருகன்.

''தேர்தலில் தோற்று 45 நாட்கள் கழித்து வேலூரில் நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இது. நமது உடன்பிறப்புகள் சோர்ந்துபோய் இருப் பார்கள் என்று நினைத்தேன். ஆனால், நீங்கள் இன்னும் முறுக்கோடு இருப்பதைப் பார்த்து, என் மகிழ்ச்சியை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை!

நாம் தோற்றுப் போய்விடவில்லை... மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்! மேற்கு வங்கத் திலும், கேரளாவிலும், பக்கத்தில் உள்ள புதுச் சேரியிலும் மக்கள் மாற்றத்தை விரும்பியதுபோல தமிழ்நாட்டிலும் மாற்றி ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள், அவ்வளவுதான்! அ.தி.மு.க. கடந்த 1996 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4 ஸீட் மட்டும்தான் வாங்கியது. அது ஒரு கட்சியே இல்லை, வெறும் கம்பெனிதான். ரெண்டு பொம்பளைங்க கம்பெனி நடத்தறாங்க. சட்ட மன்றத்தில் ஈழப் பிரச்னை பற்றி நான் பேசி அமர்ந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எழுந்து, 'கருணாநிதியால்தான் இலங்கையில் உள்ளத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்’ என்கிறார். நீங்கள் நினைக்கலாம், நாங்கள் இன்னும் ஏன் பேசாமல் இருக்கிறோம் என்று! நாங்கள் இன்னும் சுருதியே ஆரம்பிக்கவில்லை! மக்கள் மன்றத்தில் எப்பவும் ஆளும் கட்சியும் நாங்கள்தான், எதிர்க்கட்சியும் நாங்கள்தான்!



குரங்கு கையில் பூ மாலை கொடுத்தால் என்னவாகும்? அதுபோலதான் ஜெயலலிதா அம்மையார் கையில் தமிழ்நாட்டைக் கொடுத்து இருக்கிறார்கள். இனி தமிழ்நாடு எப்படி திண்டாடப் போகிறது என்று பாருங்கள்! தி.மு.க. என்பது மிகப் பெரிய ஆலமரம். அதை யாரும் அழிக்க முடியாது. 23 பேர்தான் இருக்கிறோம் என்று ஆளும் கட்சி எங்களைக் குறைத்து மதிப்பிடப்பார்த்தால், அது அறியாமை! சட்டமன்றத்தில், 'சூரியன் அஸ்தமித்துவிட்டது’ என்று அந்த அறிவியல் தெரியாத அம்மையார் சொல்கிறார். பூமி முகத்தைத் திருப்பிக் கொண்டால் சூரியன் மறைவது இயற்கை. மீண்டும் மக்கள் என்கிற பூமி, தனது முகத்தை சூரியனுக்குக் காட்டும்! அப்போது தெரியும் யார் அஸ்தமித்துப் போகிறார்கள் என்று!

ராஜீவ்காந்தி கொலைக்கு தி.மு.க-தான் காரணம் என்று பிரசாரம் செய்துதான் 1991-ல் அ.தி.மு.க. ஜெயித்தது. எம்.ஜி.ஆர். இறந்தபோதும் ஜெயித்தது. இப்போது ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர்கள் இறந்ததற்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்லி, ஜெயித்து இருக்கிறார்கள். யாராவது செத்தால்தான் இவர்கள் ஜெயிப்பார்கள்! ஆனால், இந்த வெற்றி, தோல்வி எல்லாம் எங்களுக்கு சகஜம்!'' என்று பேசிவிட்டு அமர்ந்தார்.

அடுத்து வந்த லியோனி, பட்டிமன்றத்தைத் தொடங்கினார். திருப்பூர் சம்பத், கவிஞர் இனியவன் ஆகியோர் பேசி முடிக்க... இறுதியில், 'கலைஞரின் அரசியல் பணியே சிறந்தது’ என்று தீர்ப்புக் கூறிப் பேசிய லியோனியும் விஜயகாந்த்தைத் தாக்கிப் பேசினார். ''கடந்த தேர்தலில் ஜெயித்த பிறகு கேப்டன் டி.வி-க்காரங்க எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்கிட்ட பேட்டி கேட்டாங்க. அப்ப, 'மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?’ன்னு கேட்டாங்க. அந்த ஆளு அப்பவும் போதையில்தான் இருந்தார் போல! என்ன சொல்லுறாருன்னு அவருக்கே தெரியலைய்யா! என்ன பண்ணுறது, தலைவர் கலைஞர் மாதிரியேவா எல்லாரும் இருப்பாங்க? குடிசை வீட்டில் ஏழைகள் சந்தோஷமாக இருப்பதில்லை. ஏன்னா, அவங்க இல்லற வாழ்க்கையை முறையாக இரவுகளில் கடைப்பிடிக்க முடியாது. பக்கத் திலேயே குழந்தை இருந்தா எப்படி இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியும்? அதனால்தான் தலைவர் கான்க்ரீட் வீடுகள் கொண்டுவந்தார்! கலைஞரது அரசியல் பணியே நாட்டுக்குத் தேவை என்பதற்கு ஒரு உதாரணம் இந்தத் திட்டம்! எனவே, இலக்கியப் பணியைவிட, அரசியல் பணியில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் தலைவர் கலைஞர்!'' என தீர்ப்பு(!) கூறி நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.

சோர்ந்து கிடந்த உடன்பிறப்புகள், அ.தி.மு.க. அரசையும், கூட்டணிக் கட்சிகளையும் திட்டி யதைக் காது குளிரக்கேட்டு சந்தோஷமாகக் கலைந்தனர்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 8:18 pm

''கனிமொழி அப்பாவி"

ஆமா அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது எதிர்ப்பு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 8:18 pm

விகடன் செய்திகளுக்கு நன்றி அக்கா அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:19 pm

ஆமாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:20 pm

பிரதமருடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு
புதுடெல்லி, ஜூன் 30,2011


மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், பிரதமருடனான தயாநிதி மாறனின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எனினும், இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த முழுமையான தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் தயாநிதி மாறன் கூறுகையில், தனது துறை தொடர்பாக பிரதமரிடம் விவரித்ததாக தெரிவித்தார்.

தாம் இன்னும் மத்திய அமைச்சரவையில் தான் இருப்பதாக கூறியவர், இது வழக்கமான சந்திப்புதான் என்றார்.

அண்மையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வலையத்துக்குள் மத்திய ஜவுளித்துறை அமைச்சரான தயாநிதி மாறனின் பெயரும் வந்தது.

இதன் தொடர்ச்சியாக, தயாநிதி மாறனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கப்பட்டபோது, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர், தயாநிதி மாறன் என்பதும் கவனத்துக்குரியது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விகடன் செய்திகள்.... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக