புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
1 Post - 13%
Barushree
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
1 Post - 13%
kavithasankar
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
2 Posts - 3%
Barushree
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 25, 2012 3:57 am

ஆரோக்கியமான உறவுகள் - (தொடர்கதை ஞாயிறுதோரும்)

அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள். நான் இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் படித்து இன்புறும் வகையில் "ஆரோக்கியமான உறவுகள்" என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுத உள்ளேன். இக்கதையில் நான் கூற விழைவது உறவுகளுக்குள்ளே உள்ள அன்பின் ஆழம் பற்றித்தான்". தங்கள் நல்லாதரவுடன் இதோ தொடங்குகிறேன்.

அது யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி. மகேஷ் அதைக் கேட்டதும், நிலைகுலைந்து விட்டார். இறந்தவர் மகேஷின் தங்கை சீதாவின் கணவர். வயது வெறும் 47தான். தன் ஒரே தங்கை சீதாவுக்கு இப்போது 38 வயது தான் ஆகிறது. பண வசதி நன்றாக இருந்த போதும் இந்த சிறிய வயதில் தன் தங்கை 15 வயது மகனுடன் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ற கேள்விதான் மகேஷை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. அப்படியே, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன.

ஒருநாள் சீதா தன் அண்ணன் மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். மகேஷ் தங்கை இளைத்து முகம் வாடி இருப்பதைக் கண்டு மிக வருத்தத்துடன் சீதாவிடம் "எப்படிம்மா இருக்க? உன் மகன் வைத்யா எப்படி இருக்கிறான்?" என கேட்க,
சீதா கண்ணில் வழிந்த நீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மெதுவாக சொல்லத் தொடங்கினாள். " அண்ணா, என்னவென்று சொல்வது? வைத்யா மிகவும் வாடிவிட்டான். எப்போதும் தன் அப்பா இல்லாத வெறுமையை தாங்க மாட்டாமல் தவிக்கிறான். அவனை தேற்ற என்னால் முடியவே இல்லை. அவனை எப்படி ஆளாக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை." என கண்ணீர் மல்கக் கூறினாள். மகேஷும் கண்கள் குளமாக, அவளை மனதளவில் தேற்றி விடை கொடுத்தான்.

மகேஷ் ஒருநாள் தன் வீட்டில் இருந்தபோது, அவரின் சகலை (சகலபாடி) சந்திரன் வந்தார். வந்தவர் மெல்ல சீதாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மகேஷிடம் விசாரிக்க, மகேஷ் தன் தங்கை பையன் வைத்யாவின் நிலையையும் அப்பாவின் நினைவால் அவன் வாடும் துயர் பற்றியும் சந்திரனிடம் சொன்னார். சந்திரன் மகேஷிடம் "மகேஷ், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்? இப்போதே பேசலாமா?" எனக் கேட்க, மகேஷும் தலையாட்ட, சங்கரன் சொல்ல ஆரம்பித்தார்.
"மகேஷ், நீங்கள் என் சகலை (சகலபாடி), எனில் உங்கள் தங்கை சீதா எனக்கும் தங்கைதானே?" என்று கூற, மகேஷும் ஆம் என்பதுபோல் தலையாட்ட, சங்கரன் தொடர்ந்தார். - "என் கடைசி அக்கா, கீதாவைப்போலவே சிறு வயதில் கணவனை இழந்தவர். கணவன் இறந்தபின், தன் ஒரே மகளை வளர்க்க மிகவும் பாடுபட்டார். தம்பியாக நானும் என் அண்ணனும் பண உதவிகள் செய்தபோதிலும், எங்களால், அக்கா மகளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அக்காவுக்கும் ஒரு கணவன் இல்லாது பட்ட துயரங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் இருந்தோம். எப்படியோ, அக்காவிற்கு அடைக்கலம் தந்து, குழந்தையை வளர்த்து அவளுக்கு ஒரு கல்யாணமும் செய்து முடித்தோம். ஆனால், எங்களால் என் அக்காவிற்கு உதவ முடிந்ததே தவிர, அவருக்கு கணவரின் இழப்பையும், அக்காவின் மகளுக்கு அப்பாவின் இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது." எனக் கூற
மகேஷ் "அண்ணா, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?" எனக் கேட்க

சந்திரன் தொடர்ந்தார் - " மகேஷ், நான் சொல்லப் போவது உங்களுக்கு புதுமையாக இருக்கும். ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும். ஆனால் உங்கள் தங்கை சீதா மற்றும் அவள் மகன் வைத்யா ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நான் சொல்லப் போவது கண்டிப்பாக நல்லதாக இருக்கும். என்ன விஷயம் என்பதை நாளை நீங்கள் என்னோடு என் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீர்களானால் அவரின் வீட்டில் வைத்து சொல்லுவேன்? என்று கூறினார். மகேஷ் ஒன்றும் விளங்காதவராக, சரியென தலையாட்டினார்.

மறுநாள் காலையில் சந்திரன் மகேஷை கூட்டிக்கொண்டு, தன் உறவுக்காரரான அசோக் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீடே களையிழந்து வருத்தத்தோடு இருந்தது. அசோக் இருவரையும் வரவேற்று தேநீர் அளித்தார். வீடு வசதியாக இருந்தது. அசோக் தன் அம்மாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அசோக்குக்கு கிட்டத்தட்ட 45 வயது இருக்கும். அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் இந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்திருந்தான். இரண்டாவது மகள். அவள் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அசோக் ஒரு வண்டி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் சார்ஜ்மேனாக இருந்தார். நல்ல சம்பளம். ஆனால், சமீபத்தில் தன் மனைவியை விபத்தில் இழந்திருந்தார். மகேஷ் சந்திரனிடம் வந்த விவரம் குறித்து தனியாகக் கேட்க, சந்திரன் வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் எனக் கூற, மகேஷ் ஓரளவு யூகித்தவராக இருவரும் சந்திரனின் வீட்டுக்குத் திரும்பினர்.

சந்திரன் மகேஷிடம் "அசோக் குடும்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க, மகேஷும் "நல்ல குடும்பம்" என்றார்.
சந்திரன் " மகேஷ், இப்போது அசோக் குடும்பத்தில் இரு குழந்தைகள் அம்மாவிற்காக ஏங்குகின்றன. அதுபோல் உன் தங்கையின் மகன் அப்பாவிற்காக ஏங்குகிறான். ஆனால் நீங்கள் மனது வைத்தால் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்க முடியும். அதாவது, அசோக்கிற்கு உங்கள் தங்கை சீதாவை ஏன் மனைவியாக்கக் கூடாது? இது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நான் எடுத்த முடிவாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டு, ஆவலோடு மகேஷின் முகத்தை பார்த்தார்.
மகேஷ் "அண்ணா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், அதற்கு அசோக் சீதா மற்றும் மூன்று குழந்தைகளின் சம்மதம் மட்டுமில்லாமல், இரு குடும்பத்தாரின் சம்மதம் வேண்டுமே" எனக் கூற,
சந்திரன் " மகேஷ், நான் அசோக்கின் குடும்பத்தில் இது பற்றி ஏற்கனவே கூறி, அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றுவிட்டேன். நீங்கள், சீதாவிடம் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து சம்மதம் பெற்றால், குழந்தைகளை ஒன்றாக சந்திக்க வைத்து, பரஸ்பரம் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தை நான் பெற்று விடுகிறேன்." எனக் கூற,
மகேஷுக்கு அப்போதே கல்யாணம் நடந்ததைப் போல நம்பிக்கை கிளைவிடத் தொடங்கியது. உடனே போய், தங்கையிடம் முழுதும் விளக்கி சம்மதம் பெற்றார்.
சந்திரன், மூன்று குழந்தைகளையும் ஒரு பூங்காவில் சந்திக்கச் செய்து பரஸ்பரம், இந்த கல்யாணத்தால் கிடைக்கப் போகும் நல்ல எதிர்காலத்தை விளக்கினார். குழந்தைகளும் அந்த "ஆரோக்கியமான உறவு" பற்றி புரிந்து சம்மதிக்க,
வடபழனி முருகன் கோவிலில் மூன்று குழந்தைகளும் முன்னின்று தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் நெருங்கிய உறவுகள் சம்மதிக்கவில்லை என்றாலும், போகப் போக, அனைவரும் அந்த உறவை ஆரோக்கியமாக உணர்ந்தனர்.

அசோக்கும் சீதாவும் ஆனந்தமாய் சந்திரனை நன்றிப் பெருக்கோடு ஆண்டவனாய் பார்த்தனர்.

(தொடரும்)








ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 25, 2012 2:33 pm

எழுதிய 11 மணி நேரத்தில் இத்தொடரை படித்த 54 ஈகரை உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

தங்களின் விமர்சனங்களையும் எழுதியிருந்தால் அடுத்த வாரம் கதையின் போக்கை தீர்மானிக்க உதவியாக இருந்திருக்கும்.



ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) 425716_444270338969161_1637635055_n
avatar
MYTHILY JAYABALAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012

PostMYTHILY JAYABALAN Sun Nov 25, 2012 3:20 pm

புரட்சிகரமான கருத்து. மறுமணம் ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்று.





மைதிலி ஜெயபாலன்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 25, 2012 7:44 pm

நல்லதொரு தொடர்.
ஜமாயுங்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 7:50 pm

நல்ல முயற்சி தொடருங்கள் நண்பரே , முதல் பதிவே அருமை , வாழ்கையில் மறுமணம் என்ற ஒன்றை கூறிய விதம் அருமை ,,,,

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 10:10 pm

இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் என்று எனக்கு தோன்றியது அந்த மூன்று குழந்தைகளின் புரிந்துனர்தளுக்கான களம் தான் .

அற்புதம் தொடருங்கள் நண்பரே தொடர்கிறோம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Nov 29, 2012 12:01 am

MYTHILY JAYABALAN wrote:புரட்சிகரமான கருத்து. மறுமணம் ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்று.

றினா wrote:நல்லதொரு தொடர்.
ஜமாயுங்கள்.
பூவன் wrote:நல்ல முயற்சி தொடருங்கள் நண்பரே , முதல் பதிவே அருமை , வாழ்கையில் மறுமணம் என்ற ஒன்றை கூறிய விதம் அருமை ,,,,
கரூர் கவியன்பன் wrote:இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் என்று எனக்கு தோன்றியது அந்த மூன்று குழந்தைகளின் புரிந்துனர்தளுக்கான களம் தான் .

அற்புதம் தொடருங்கள் நண்பரே தொடர்கிறோம்
அனைவரின் நல்ல விமர்சனத்துக்கு நன்றிகள்.
வரும் ஞாயிறு மறவாமல் தொடரை படித்துவிட்டு அனைவரும் நேர்மறையோ அல்லது எதிர்மறையோ விமர்சனங்கள் எழுதுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.




ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) 425716_444270338969161_1637635055_n
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 29, 2012 1:37 pm

நீங்க போடுங்க நாங்க எழுதுகிறோம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Nov 30, 2012 10:50 pm

றினா wrote:நீங்க போடுங்க நாங்க எழுதுகிறோம்.
இதுதான் வாசகரின் கண்ணியம்.
நீங்கள் கிடைத்தது நான் செய்த புண்ணியம்.



ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 02, 2012 8:17 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம் வரை நடந்தது
//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.
மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.
இந்த இருவருக்கும் மகேஷ் தன் சகலை சந்திரனின் ஆலோசனையோடும் உதவியோடும் திருமணம் முடித்து வைக்கிறார்.

இனி ......//


மகேஷின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு வந்து களைப்போடு படுத்த சந்திரன் தன் தூக்கத்திலிருந்து திடீரென்று அதிகாலை விழித்துக்கொண்டார்.
ஏதோ கனவு கண்டு விழித்தது போல் தோன்றவே, என்ன கனவு? என நினைவுபடுத்தி பார்த்தவருக்கு பகீரென்றது.
அதாவது, தான் மகேஷிடம் சீதாவின் மறுமணம் குறித்து பேசிவிட்டு வந்தது மட்டும் நிஜம் என்பதும் மற்றபடி
1 . தான் அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றது,
2 . மகேஷ் தன் தங்கை சீதாவிடம் பெற்ற சம்மதம்,
3 . தான் மூன்று குழந்தைகளை பரஸ்பரம் சந்திக்க வைத்து திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தது,
4 . அசோக்கிற்கும் சீதாவிற்கும் நடந்த திருமணம்
இவை யாவும் கனவு என்பது புரிய ஆரம்பித்தது.

நம்முடைய சமூகத்தில் இது போன்ற திருமணங்களுக்கு ஆதரவு அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடுமா என்ன? இது என்ன சினிமாவா? எல்லாம் ஒரே பாட்டில் உடனே நடந்து முடிக்க - என மனதுக்குள் கேட்டுக்கொண்டார்.

இருந்தாலும் இவை அனைத்தும் நடந்தேறினால், அந்த மூன்று குழந்தைகளின் எதிர்காலம் செழிக்குமே என்ற எண்ணத்தோடு படுக்கையை விட்டு எழுந்தவர் இந்த திருமணத்தை எப்படியாவது முடித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் - எண்ணிய
திண்ணிய ராகப் பெறின்

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப சந்திரன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதற்கு தனக்கு உதவிட சரியான நபர் யார்? என யோசித்தபோது, தன் நண்பன் வெங்கியும் தன் மனைவி மித்ராவும் தான் சரியான பாதையில் சென்று இந்த நல்ல காரியத்தை முடிக்க உதவுவார்கள் என்று தோன்றியது.

உடனே விடிந்ததும் முதல் வேலையாக, கைப்பேசியில் தன் நண்பன் வேங்கியிடம் இந்த விஷயம் பற்றி சுருக்கமாக கூறிவிட்டு,
"வெங்கி, வரும் ஞாயிற்றுக்கிழமை அசோக்கை சந்திக்க நீ என்னோடு வரவேண்டும்" என்று கூற, வெங்கியும் கட்டாயம் வருவதாகக் கூறினார்.
"அதக்கு முன்னால் இன்று மாலை நீ வேலை முடிந்ததும், மாலை எட்டு மணி வாக்கில் உன்னை சந்திக்க வேண்டுமே?" என சந்திரன் கூற, வெங்கியும் "ஒரு எட்டரை மணிவாக்கில் என் வீட்டுக்கு வந்து விடு. நாம் நமது திட்டம் குறித்து விவாதிப்போம்" என கூறினார்.

சந்திரன் வெங்கியிடம் பேசி முடித்து விட்டு, தன் மனைவியோடு பேசுவதற்காக அழைக்க, மனைவி மித்ரா கையில் தேநீரோடு வந்து நிற்க, வாங்கி ஒரு வாய் குடித்தவருக்கு தேநீரில் இனிப்பு போடவில்லை என்பது தெரியவே,
"என்னம்மா, தேநீரில் சர்க்கரை போட மறந்து விட்டாயா?" என மனைவியிடம் கேட்க,
"இல்லங்க, உங்க அம்மாவிற்கு சர்க்கரை வியாதி உள்ளதால் உங்களுக்கும் வரலாம் இல்லையா?, எனவே தான் இப்போதிலிருந்தே ....." என சமாளிக்க,

வாசலில் அழைப்புமணி ஒலிக்க, இருவரும் யாராக இருக்கும் என யூகித்துக்கொண்டே, கதவைத் திறந்தனர்.

(தொடரும்)






ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக