புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜுனியர் விகடன் செய்திகள்....


   
   

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:12 am

First topic message reminder :

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

சிக்கலில் சீர்காழி லயன்ஸ் கிளப்
சிறிய கீற்றுக் கொட்டகையில் பள்ளி ஆரம்பித்து, அதன் லாபத்தால் இன்று பல மாடி கட்டடங்களைக் கட்டி கல்வித் தந்தைகளாக பலர் உலா வரும் தமிழ்நாட்டில் தான், நடத்தி வந்த மெட்ரிக் பள்ளியை நடத்த முடியாமல் மூடிவிட்டது லயன்ஸ் கிளப்!
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Ma26a


நாகை மாவட்டம் சீர்காழியில் 1984-ம் ஆண்டு சர்வதேச சங்கத்தின் நிதியைப் பெற்று, 'ஏழை மாணவர்களும் மெட்ரிக் கல்வி பெற வேண்டும்’ என்ற உண்மையான அக்கறையில் ஆரம்பிக்கப்பட்டது லயன்ஸ் கிளப் மெட்ரிகுலேஷன் பள்ளி. மிகக் குறைந்த கட்டணம் என்பதால், 400-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் அந்தப் பள்ளியில் சேர்த்தார்கள். பள்ளியின் செயல்பாடுகளைப் பார்த்த கடைக்கண் விநாயகநல்லூர் எஸ்டேட் நிர்வாகத்தினர், பல லட்சம் மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை வெறும் 3 லட்சத்துக்குக் கொடுத்தனர். அதில் கட்டடங்கள் கட்டி பல வருடங்களாக நல்ல முறையில் நடந்து வந்த பள்ளியை, தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மூடி, பெற்றோர்களைத் தவிக்கவைத்து உள்ளது பள்ளி நிர்வாகம்.

ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Ma26

கடந்த 20-ம் தேதி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட செய்தி கேட்டு பள்ளிக்கு விரைந்தோம். ஸ்வேதா, கயல்விழி என்ற இரண்டு பெண் குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டு பரிதாபமாக நின்ற கோவிந்தராஜன், ''என்ன அநியாயம் சார் இது? போன வருடம் தேர்வு முடிந்தவுடன் சொல்லி இருக்கலாம். இல்லை, எல்லோருக்கும் ரிசல்ட் அனுப்பும்போது சொல்லி இருக்கலாம். அதைவிட்டு, '15-ம் தேதி ஸ்கூல் திறக்கும்போது வேன் வரவில்லையே’ என்று நாங்கள் வந்து பள்ளியில் கேட்கும் போதுதான், 'பள்ளியை மூடப்போகிறோம்’ என்று அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். இப்படிப் பெற்றோர் ஒவ்வொருவராக வந்து கேட்டவுடன், பள்ளி நிர்வாகிகள் 17-ம் தேதி பெற்றோர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, 'பள்ளி நஷ்டத்தில் இயங்குகிறது, அதனால் மூடுகிறோம்’ என்று தன்னிலை விளக்கம் சொல்கிறார்கள். எல்லாப் பள்ளிகளிலும் அட்மிஷன் முடிந்துவிட்ட இந்த நேரத்தில், நாங்கள் எங்கேபோய் பிள்ளைகளைச் சேர்ப்பது?'' என்று கொந்தளித்தார் கோவிந்தராஜன்.

இங்கு வேலை பார்த்த பள்ளி முதல்வர், 15 ஆசிரியர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அத்தனை பேரின் எதிர்காலமும் கேள்விக்குறியே!

''அங்கே சொல்லி இருக்கோம்... இங்கே சொல்லி இருக்கோம்னு சொல்லி சமாளிக்கிறாங்களே தவிர, எந்தப் பள்ளிக்கூடத்திலேயும் எங்க குழந்தைகளை சேர்த்துவிடறதைப் பத்தி இவங்க நடவடிக்கை எடுக்கவே இல்லை. இவங்க மூடினது நஷ்டத்தாலா... இல்லை, வேற ஏதாவது உள் காரணம் இருக்கான்னும் தெரியலை!'' என்றார் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஹரிஜா பீவியின் தந்தை புகாரி.
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Ma27a
''அப்படி என்ன உள் காரணம் இருக்க முடியும்?'' என்று பள்ளி வட்டாரத்திலும், லயன்ஸ் கிளப் வட்டாரத்திலும் விசாரித்தோம். ''பள்ளிக்கூடத்தில் தற்போது 96 மாணவர்கள்தான் படிக்கிறார்கள். அதில் பாதி பேர் ஃபீஸ் கட்டாமல் இருக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூடம் என்றால் அவர்களின் நிர்ப்பந்தத்துக்குப் பயந்து கட்டணம் கட்டும் பெற்றோர், இங்கு கொஞ்சம் அலட்சியமாகவே இருக்கிறார்கள். ஆனால், அது மட்டும் பள்ளியை மூடக் காரணம் இல்லை. இந்தப் பள்ளியை, இங்கு உள்ள அறக்கட்டளை பிரமுகர் ஒருவரிடம், தற்போது பள்ளி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் விலை பேசி இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன...'' என்கிறார்கள். விலை பேசி இருக்கும் அந்த நபர் கேட்டுக்கொண்டதன் பின்னணியில்தான் பள்ளி மூடப்படுகிறதாம்.

பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் சுரேஷ்சந்த் ஜெயினை சந்தித்து இது பற்றிக் கேட்டோம். ''பள்ளியை மூடுவதற்கு நஷ்டம் மட்டும்தான் காரணம். கடந்த நான்கு ஆண்டு களாகவே வருடத்துக்கு 2 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதையும் ஏற்றுக்கொண்டுதான் தொடர்ந்து நடத்தி னோம். 'இனியும் நடத்த முடியாது’ என்று பள்ளி நிர்வாகக் குழு கூடி முடிவு எடுத்த பின்னர்தான் மூடுகிறோம். அதனால், பள்ளியில் படித்த மாணவர்களை அப்படியே விட்டுவிட மாட்டோம். சீர்காழி நகரில் இருக்கும் நான்கு முக்கியப் பள்ளிகளில் பேசி இருக்கிறோம். நிச்சயமாக இந்த வாரக் கடைசிக்குள் அந்தப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துவிடுவோம்!'' என்று உத்தரவாதம் கொடுத்தவரிடம், ''பள்ளியை விலை பேசிவிட்டீர் களாமே?'' என்று கேட்டோம். ''அப்படி எதுவும் இல்லை. இந்த இடம் தொடர்ந்து லயன்ஸ் கிளப் வசம்தான் இருக்கும். இதில் மருத்துவமனை போன்ற மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதையாவது கொண்டுவரத் திட்டம் இட்டு இருக்கிறோம். நிச்சயம் அடுத்தவரிடம் கொடுக்க மாட்டோம்!'' என்று இன்னொரு உத்தரவாதத்தையும் கொடுத்தார்.
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Ma27b
லயன்ஸ் கிளப் மேல் மக்கள் மிகுந்த நம்பிக்கைவைத்து இருக் கிறார்கள். ஆகவே, மீண்டும் பள்ளியைத் திறக்க ஆவன செய்ய வேண்டும்!

நன்றி ஜூவி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:33 am

செக்போஸ்ட் திமிங்கலங்கள்?

பதவி உயர்வு கொடுத்தால் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார் கள். ஆனால் செக் போஸ்ட்டில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் மேற்படி வருமானத்தைக் கணக்குப் போட்டு, பதவி உயர்வையே தவிர்த்து வருகிறார்கள். இவர்களால் அடுத்த நிலையில் இருக்கும் எங்களின் பதவி உயர்வு பாதிக்கிறது. மாண்பு மிகு முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற ரீதியில் ஒரு மனு முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்திருக்கிறது. மனுவை அனுப்பி இருப்பவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப் பாளர்களாக பணிபுரியும் அதிகாரிகள்!

தகவல் அறிந்து அவர்களைச் சந்தித்து விவரம் கேட்டோம். ''தமிழகம் முழுக்க மொத்தம் 20 செக் போஸ்ட் இருக்கிறது. அதில் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி, கோவையை அடுத்த கே.ஜி. சாவடி, சென்னையை அடுத்த பெத்திக்குப்பம் ஆகிய மூன்றும் ஏ கிரேடு சோதனை சாவடி கள் என தரம் பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள 20 செக் போஸ்ட்களிலும் தொழில் நுட்பமற்ற மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என்ற பதவியில் 72 பேர் வேலை செய்கிறார்கள். ஓசூரிலும், கே.ஜி. சாவடியிலும் இருக்கும் இந்த ஆய்வாளர்கள், பதவி உயர்வு அல்லது பணிமாறுதல் எது வந்தாலும் ஏற்பதே கிடையாது. பல வருடங் களாக ஒரே இடத்தில் பசை தடவின மாதிரி உட்காந்துக்கிட்டு இருக்காங்க. அதுக்குக் காரணமே இங்கே கிடைக்கிற வருமானம் தான்.

ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Ko29a

ரெண்டு பகல் ரெண்டு இரவு சேர்ந்ததை நாங்க ஒரு ட்யூட்டின்னு சொல்லுவோம். இந்த ஒரு ட்யூட்டியில மட்டும் அவங்க ஒவ்வொருத்தரும் வீட்டுக்கு எடுத்துப் போற தொகை ஒண்ணே முக்கால் முதல் ரெண்டு லட்சம் தேறும். இந்த ஒரே காரணத்துக்காக பல வருஷமா ஒரே இடத்துல உட்காந்துக்கிட்டு கொட்டம் அடிக்கிறாங்க. அரசுக்கு சேரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் பணம் முறை கேடாக எங்கெங்கோ போகுது.
ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 Ko29
எங்களை மாதிரி கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வு பெற்றால் தொழில் நுட்பமற்ற மோட்டார் வாகன ஆய்வாளர்களாக ஆக முடியும். ஆனால் இந்த திமிங்கில அதிகாரிகள் நகர அடம் பிடிப்பதால் எங்க புரமோஷன் தாமதமாகிறது. அவங்களை மாதிரி தவறான நோக்கத்துக்காக நாங்க இந்த பதவி உயர்வை எதிர்பார்க்கலை. எங்களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய பலன் உள்ளிட்ட விஷயங்களுக்காகத்தான் நாங்க இந்த பதவி உயர்வை எதிர்பார்க்கிறோம். வருமானத்திலேயே குறியாக இருப்பவர்களுக்கு எங்க கஷ்டங்கள் கண்ணுக்கே தெரிவது இல்லை. அதனால்தான் விஷயத்தை முதல்வர் கவனத் துக்குக் கொண்டு போய் இருக்கோம்!'' என்று வேதனையோடு பேசினார்கள்.

இந்த பிரச்னை பற்றி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டோம். ''நீங்க சொல்ற விஷயம் என் கவனத் துக்கும் வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. அனைவருக்குமே விதிப்படி பதவி உயர்வு, பணி மாறுதல் ஆணைகள் வழங்கப்படும். அதை ஏற்க விருப்பம் காட்டாத அதிகாரிகளை விருப்ப ஓய்வு வாங்கிட்டு போகும்படி சொல்லப் போகிறோம். தகுதியிருந்தும் பதவி உயர்வு பெறமுடியாமல் இருப்பவர்களுக்கு உரிய பலன் கிடைக்கும்!'' என்று சொன்னார்.

நல்லதே நடக்கட்டும்!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 12:35 am

மக்கள் பள்ளிகள் மீது கொண்டுள்ள விரோத மனப்பாங்கு மாற வேன்டும் என்பது என் கருத்து அக்கா. உண்மையிலேயே லாபம் கொள்ளை அடிக்கும் பள்ளிகளை அரசு எடுத்துக்கொள்ளலாம், ஆனால் சேவை நோக்குடன் நடைபெறும் பள்ளிகளும் திருடி வந்த பள்ளிகளும் இன்று ஒரே பெஞ்ச் மீது நிற்க வேன்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது வருந்தத்தக்க ஒன்று.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:52 am

உண்மையே இனியா.... ஒருவர் செய்யும் தவறால் நல்லவருக்கும் பழி ஏற்படுகிறது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... - Page 2 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 1:00 am

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே இனியா.... ஒருவர் செய்யும் தவறால் நல்லவருக்கும் பழி ஏற்படுகிறது.
இன்று எங்கள் பள்ளி மற்ற திருட்டு பள்ளிகளை விட குறைவான கட்டணமே வசூலிக்கிறது. ஆனால் இந்த நீதியரசர் இன்னும் பள்ளிக்கட்டணத்தை குறைத்துவிட்டார். ஆசிரியர்களுக்கு 6வது ஊதிய பரிந்துரை சம்பளம். பள்ளியில் ஏசி வசதி, அணைத்து வசதிகளும் கூடிய நவீன கணினி நூலகம். அதுபோக 55 அனாதை பள்ளிகளை எங்கள் பள்ளி நடத்துகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட 20 கிராமங்களை எங்கள் பள்ளி தத்தெடுத்து வாழ்வளித்து தொழில் கற்றுதந்து உதவி வருகிறது. ............ எஜிக்கேஷன் மூவ்மென்ட் மூலமாக பணக்காரர்களிடம் நன்கொடையாக பணம் பெற்று இன்று வட தமிழகத்தில் மட்டும் 7000 ஏழை மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.................தினமும் இரவு பள்ளி நடத்தி சென்னை எழும்பூர் சுற்றியுள்ள சேரிப்பகுதியில் 500க்கும் அதிகமான ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாலைக்கல்வியும் இரவு உணவு (குடும்பத்தாருக்கும் சேர்த்து) வழங்கிவருகிறது. இப்போது அறிவித்துள்ள கட்டணத்தால் எங்கள் பள்ளிக்கு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் என அடுத்த ஆண்டுக்கான பட்ஜட் தெரிவிக்கிறது. என்ன செய்வது என்று நிர்வாகம் விழி பிதுங்கி நிற்கிறது. திருடிப்பிழைப்பை நடத்திவந்த பல பெரிய சென்னை பள்ளிகள் இன்று இருமடங்கு அல்ல பல மடங்கு கட்டணத்தை உயர்த்திக்கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக