புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Mon Jun 20, 2011 11:40 pm


ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!


''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''

''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!''

மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.


ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர தொழிலுக்கேற்ப நடிப்பாக இருக்கக் கூடாது. தமிழகத்தைக் கருணாநிதி ஆண்ட 5 வருடங்கள் கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப் படங்களை அவருடன் கண்டு களித்து தன் காரியங்களைச் சாதித்துக் கொண்ட ரஜினி, தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாக திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

பாட்சா பட வெற்றி விழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள்; தமிழகத்தில் அமைதியில்லை" என்று பேசி படத் தயாரிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் பதவிக்கு வேட்டு வைத்தவர். இன்று ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் தமிழகத்தைக் கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றி விட்டார் என்றும் ஜெயலலிதா முதல்வராகா விட்டால் கருணாநிதி தமிழகத்தை ஒரு வழி பண்ணி இருப்பார் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

''என் ஒரு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது தமிழ் அல்லவா என் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா'' என்று பாட்டு பாடும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் என்ன செய்து விட்டார் என்று பட்டியலிடத் தயாரா? குறைந்தப் பட்சம் தன் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தன் ரசிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவாரா? காவிரி தண்ணீர் பிரச்னைக்குத் தனியாக உண்ணாவிரதம் இருந்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பார். ரஜினிக்கு நிஜமாகவே தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால் தேர்தலுக்கு முன்பே தன் நிலையைத் தெளிவாகச் சொல்லி தமிழகம் எப்படி காப்பாற்றப் பட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தால் இன்று ரஜினி பேசுவதை அவரின் நடிப்பில்லை என்று நாம் நம்பலாம்!

ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு வராமல் திமுகவே மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால் "தமிழகம் காப்பாற்றப் படவில்லை" என்று ரஜினி தெளிவாக அறிவித்து இருப்பாரா என்ற நியாயமான கேள்விக்கு அவரின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

தமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், மொழி, இன அடிப்படையில் மக்களிடையே வேற்றுமையை விதைத்து நாட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பால் தாக்கரே போன்ற மத துவம்சம் பிடித்தவர்களையும் தெய்வம் என்பார். ஐந்து ஆண்டு கால ஆட்சியின் போது கருணாநிதியைப் பற்றியோ கருணாநிதியின் ஆட்சியை பற்றியோ வாய் திறக்காத ரஜினி, தேர்தலில் வாக்களித்த பின்பு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கமல் - ரஜினி இவரில் நடிக்கத் தெரிந்தவர் யாரென்று கேட்டால் பட்டெனப் பதில் வரும் கமல்தான் என்று. ஆனால் உண்மையிலேயே கமலைவிட நடிக்க மட்டுமல்ல, வசனம் பேசவும் தெரிந்தவர் ரஜினிதான் என்பதை அவர் பேசியதாக வெளியான இத்தகவல் மூலம் அறிய முடிகிறது.

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்..." என்ற பாடலை அவர் எழுதாவிட்டாலும் அவர் பாடுவது போன்று அமைக்கப்பட்டதால், ரஜினியே சொல்வது போன்றுதான் இன்றும் அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உப்பிட்ட மண்ணை மறந்துவிட்டுத் தன்னுடைய வருமானத்தையெல்லாம் தன் தாய் மண்ணிலே முதலீடு செய்துள்ளார். ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தில் எழுந்த பிரச்னையில் ரஜினி நடித்த திரைப் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என்று கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்த போது, உடனே மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி, தான் நடித்த குசேலன் திரைப் படத்தை வெளியிட்டார்.

ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் ஸிவாஜிராவ் கெய்க்வாட் ஒரு நடிகர்; தேர்ந்த நடிகர். நடிப்பு அவருக்கு வருவாய் ஈட்டும் தொழில். அரிதாரம் பூசி அவர் போடும் வேடங்கள் அவரின் உண்மையான குணாதிசயங்கள் அல்ல. அரிதாரத்தைக் கலைத்த பின் அவர் ஸிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தனி நபர். இது நடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர்கள், தாம் விரும்பும் நடிகர்கள் திரையில் செய்யும் ஸூப்பர்மேன் சாகசங்களை நிஜ வாழ்விலும் செய்வர் என நம்பிக்கொண்டு அவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக வரித்துக் கொண்டு, அவர்களின் கட்அவுட்டுக்கு மாலையிட்டுச் சூடம் கொளுத்திப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.

ரஜினிக்கு இணையாக சமகால நடிகர்கள் பலர் இருந்தும், ரஜினியைச் சுற்றிலும் ஓர் அரசியல் ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அதில் பலனடைந்தவர்கள் எல்லோருமே சினிமாத்துறை சார்ந்தவர்களே என்பது வெள்ளிடைமலை! இருப்பினும் 30+ ஆண்டுகள் ஆகியும், இனியும் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டு ஒளியேற்றுவார் என்று நம்பும் அப்பாவி ரஜினி ரசிகர்களை நினைக்கும்போது, ரஜினியின் வசனத்தில் "அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது" என்றே கருத வேண்டியுள்ளது.

சினிமா வசனகர்த்தா எழுதிக்கொடுத்த அவர் நடித்த படங்களிலுள்ள வசனங்களைக்கூட, அரசியல் கட்சிகளுக்கான மறைமுக எச்சரிக்கை என்று ரசிகர்களை ஏமாற்றியதில் ஊடகங்களின் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா நடிகர்களில் ரஜினிமீது ஊடகங்கள் காட்டிய கரிசனம், பாரபட்சமானது என்பதையும் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆட்சி மாறும்போது ஒரே வாசகங்களை மாற்றி மாற்றிப் போட்டு முதல்வர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஜால்ரா அடித்த திரை உலகினரை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, இம்முறை அது தன்னிடம் நடக்காது என்பதைத் தனிப்பட்ட தொலைப்பேசி உரையாடலில் ரஜினி கூறிய வாசகத்தை அரசு அறிக்கையாக வெளியிட்டு ரஜினிக்கு நாமம் போட்டுக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனக்குப் "பாராட்டு விழா" நடத்த தேதி கேட்டு வந்த திரை உலகத்தினரைத் திருப்பியனுப்பி, இனிமேலும் உங்களின் அரிதார அற்ப ஜால்ரா புகழுரைகள் என்னிடம் பலிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சம்மட்டியால் அடித்து விரட்டியது பாராட்டத்தக்கது! இது போன்ற சினிமாத் துறையினரின் சந்தர்ப்பவாத பேச்சுக்களை கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் ரஜினியை இகழ்ந்து பேசுவது நமது நோக்கமல்ல. தமிழகமே அவர் மீது பித்தம் கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அவரது ஒவ்வொரு அசைவையும் செய்திகளாக்கி, காசு பார்க்கும் ஊடக வியாபாரிகளின் பொறுப்பற்றத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, நேரத்துக்கும் காலத்துக்கும் தகுந்ததுபோல் தன் நிலைபாடுகளை மாற்றி நிஜ வாழ்விலும் சிறந்த நடிகர்களாக வலம்வரும் இவர்களை நம்பியிருந்து தம் வாழ்வைத் தொலைக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் பயப்பவர்களாக தம் வாழ்வை இளைஞர்கள் மாற்றியமைத்துக் கொள்ள சுட்டுவதே நம் நோக்கம்!

ரஜினி நலம் பெறட்டும்! தமிழர் தம் நிலை உணரட்டும்!!

இந்நேரம்.காம்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 21, 2011 12:11 am

உண்மை எல்லாம் சத்தமா பேசக்கூடாது பாஸ்!!!
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 139731 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 139731 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 139731

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jun 21, 2011 12:31 am

realvampire wrote:உண்மை எல்லாம் சத்தமா பேசக்கூடாது பாஸ்!!!
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 139731 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 139731 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 139731

யெஸ் பாஸ்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jun 21, 2011 5:49 am

உங்களின் கருத்தில் பல உண்மைகளை சுருக்கி சுந்தரமாக்கி இருக்கிறீர்கள். ரஜினியைப் பற்றி பல கசப்பான சம்பவங்கள் இன்னும் இருக்கின்றன. அண்மையில் அவர் உடல் நலமின்றி இருப்பதும் ஒரு நடிப்பாக இருக்குமோ?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 21, 2011 8:10 am

nadesmani wrote:உங்களின் கருத்தில் பல உண்மைகளை சுருக்கி சுந்தரமாக்கி இருக்கிறீர்கள். ரஜினியைப் பற்றி பல கசப்பான சம்பவங்கள் இன்னும் இருக்கின்றன. அண்மையில் அவர் உடல் நலமின்றி இருப்பதும் ஒரு நடிப்பாக இருக்குமோ?
அதிர்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 10:31 am

யாராவது சிக்குவாங்களா அவங்க பன்ற தப்பை எடுத்துரைப்போம்னு எதிர்பார்ப்பீர்களா

ரஜினி ஒரு நடிகர் அவர் படம் பிடித்தால் பாருங்கள் ரஜினி ரசிகர் அல்லாத ஒருவர் அவரைப் பற்றி வேறு எதுவும் பேச நினைக்காதீர்கள் உங்களது நேரம் பொன் பொன்றது அதை வீணாக்காதீர்கள். எப்பவுமே குறை கூறும் நோக்கத்தோடு பார்க்காமல் எதையும் சரி என்று பாருங்கள் அப்போது புரியும்........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 21, 2011 10:33 am

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 2825183110 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 2825183110 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 2825183110 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 2825183110



ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Uரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Dரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Aரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Yரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Aரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Sரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Uரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Dரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Hரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 10:37 am

nadesmani wrote:உங்களின் கருத்தில் பல உண்மைகளை சுருக்கி சுந்தரமாக்கி இருக்கிறீர்கள். ரஜினியைப் பற்றி பல கசப்பான சம்பவங்கள் இன்னும் இருக்கின்றன. அண்மையில் அவர் உடல் நலமின்றி இருப்பதும் ஒரு நடிப்பாக இருக்குமோ?

அவருக்கு உடல்நிலை எப்படி இருந்தால் உங்களுக்கென்ன நண்பா அவர் அப்படி நடித்தார் என்பது உண்மையானால் உங்களுக்கு எதுவும் பிரச்சினையா

ஒருவரை பாராட்ட வேண்டாம் அவரைப் பற்றி தப்பாக பேசாம இருந்தாலே போதும் தப்பு செய்தவர் உலகில் கோடி கணக்கில் உள்ளனர் அவரையெல்லாம் விட்டுவிட்டு இவர் என்ன என்ன செய்தார் என்று நோட் போட்டு எழுதி வைப்பீர்கள் போல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Jun 21, 2011 11:15 am

நண்பரே நீங்கள் எழித்தியது அத்தனையும் உண்மையே ரஜினி என்பவர் ஒரு நடிகர், அவர் தனிப்பட்ட விஷயமாக இருந்தால் இது என் கடை வீதிக்கு வரவேண்டும் மனிதன் என்றால் எப்போதும் ஒரு மனதோடு இருத்தல் வேண்டும் இப்படி குரங்கு மனம் படைதவர்களை விமர்சிப்பது சரியே..... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 211781



என்றும் ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 599303 அன்புடன்,
சோழவேந்தன் ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! 154550
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 11:35 am

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! Gtotemchimpanzee

அதற்க்கு இந்த படம் பொருந்துமா என்று பாருங்கள்



Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக