புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 7 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதேவிப் புராணம்


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:03 am

First topic message reminder :

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.



இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:31 am

595 வேறு.
பெருகியவனப்பிற்சமைத்தகல்யாணப்பிறங்குபொன்மண்டபச்சிறப்பை
யுருகியமனத்தின்யாவருநோக்கியுவந்தனர்மற்றதனூடு
முருகியகளிப்பினியவர்களறைந்தமுரசொலியகஞ்செவிநிறையப்
பருகியவொருமூன்றுலகினுளாரும்பரந்ததிவிரைந்துசென்றடைவார். 51

596 மருவியவாட்கேசர்கூர்மாண்டர்வயங்கியபுத்தியட்டகர்தோ
மொருவியகாலாக்கினியுருத்திரர்பூவுறைபவன்புரூரநள்ளுதித்தோர்
வெருவியவவரால்விதித்திடப்பட்டோர்விளங்கொருகாலுருத்திரர்தீப்
பொருவியசூலகபாலத்தராகிப்பொலிதருவயிரவர்முதலோர். 52

597 வானவர்மகவான்மலர்த்தலையுறைவோன்வண்டழாய்த்தொடைப்புயமாயோன்
றானவரியக்கர்சித்தர்கிம்புருடர்சாரணர்வித்தியாதரர்க
ளானவர்செழங்கந்தருவர்கின்னரர்மற்றாசைகாப்பாளர்வல்லரக்கர்
மானவர்பரிதிமதியுறுகோணாண்மாதவமுனிவரர்முதலோர். 53

598 அரமடந்தையரேயவிர்புலோமசையேயையவெண்டாமரைமகளே
வரமிகுதிருவேயருந்ததிமுதலாமாதவமுனிவர்பன்னியரே
பரவியநாகநாட்டுமங்கையரேபற்பலபுவிமடந்தையரே
விரவியமற்றைக்கருநெடுந்தடங்கண்வெண்ணகைச்செய்யவாயினரே. 54

599 அனைவருநெருங்கித்தோளொடுதோளுமழகியமுடியொடுமுடியும்
புனைவருகழற்காலொடுகழற்காலும்பூணணிமார்பொடுமார்பு
மினைவருமடந்தைமாரொடாடவருமிறுகிமிக்குரிஞுறப்புகுந்து
நினைவருமனையர்தகுதியினிருந்தார்நின்மலன்மணவணியுரைப்பாம். 55

600 வேறு.
கடிமலர்த்தவிசினானுங்கண்ணியந்துளவினானு
முடிவிலாமுதல்வன்பாதமுன்சென்றுவணங்கிப்போற்றி
யொடிவின்மஞ்சனஞ்செய்சாலையுள்ளெழந்தருளவேண்டு
மடிகளோவென்னவையனலர்முகமுறுவல்பூத்து. 56

601 மாயவனெடுத்துவைக்கும்பாதுகைமலர்த்தாள்சேர்த்துத்
தூயபட்டமைந்தமுன்கையிருவருந்துணைந்துநீட்டச்
சேயகைக்கமலம்வைத்துத்திருத்தகநடந்துசென்று
பாயமஞ்சனஞ்செய்சாலையுட்புக்கான்பரமயோகி. 57

602 மறைமுடியென்றுந்தூயமாதவருள்ளமென்று
மறைதருமொருபொற்பீடத்தமர்ந்தினிதிருக்கவேத
னிறைசிவகங்கைத்தெண்ணீர்நிலையுறும்படிபூரித்த
குறைவில்பொற்குடங்கையேந்தியாட்டினான்குளிரமாதோ. 58

603 நுழையிழைக்கலிங்கங்கொண்டுநோக்குடைத்திருவாழ்மார்பன்
மழைமிடற்றடிகண்மேனிமெல்லெனமருவவொற்றக்
குழையுடைச்செவியாலாலசுந்தரன்குறுகிநீட்டும்
பிழையில்வட்டகைவெண்ணீறுபிறங்குறநுதலிற்சாத்தி. 59

604 மன்னியவரைநாண்பட்டுக்கோவணமாயோனீட்டத்
துன்னியவீரமாற்றிமற்றவைசூழச்சேர்த்து
மின்னியசெம்பொற்பன்னூல்விளிம்புசெய்வெண்பட்டாடை
முன்னியவரைப்பின்போக்கிமுகிழ்த்தழகெறிப்பச்சாத்தி. 60



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:31 am

605 வடதிசைத்தலைவனிட்டமாயவனுவந்துவாங்கிப்
படவரவாடிச்சீறும்பண்பிவணாகாதெனுங்
கடன்மதித்தடக்கல்போலங்கங்கையைமறைத்தல்போலு
மடர்மணியிழைத்தசெம்பொன்னவிர்முடிமுடியிற்சேர்த்து. 61

606 கடிமணப்பணிகணோக்கக்காதல்செய்முகநாட்டம்போற்
பொடியணிநதலினாப்பட்பூத்தகண்டிறவாவண்ணம்
படிதரக்கட்டும்பட்டப்பண்பெனப்புனைபொற்பட்டத்
தொடிவில்பன்மணியும்வாரியுண்டிருளனுக்கச்சேர்த்து. 62

607 படுகடலுலகமேத்தும்பாண்டிநாடாளுஞ்சீருந்
தொடுசிலைமதவேண்மேனிசுண்ணஞ்செய்திட்டசீரும்
வடுவறவிளக்கியாங்குமாண்பிலேன்மொழிபுன்பாட்டு
மிடுபெருஞ்செவியினாலமகரகுண்டலங்களிட்டு. 63

608 பன்மணிபொலியுஞ்செம்பொற்பருப்பதந்தனைக்குழைத்த
வன்மையைமதித்துமிக்கவன்மையுற்றடைந்துவீங்குந்
தன்மையைத்தடைசெய்தென்னத்தவாப்பலமணிகால்யாத்த
புன்மையில்பொற்கேயூரம்புயவரைபொலியச்சேர்த்து. 64

609 வெருவரவுலகமெல்லாம்விழுங்கியவிருள்கால்சீப்பத்
திருமகண்முதலாயுள்ளதெய்வமங்கையர்தங்கண்ட
மொருவரும்பலபூண்பூணவுதவிசெய்திருக்கண்டத்திற்
பொருவருமொளிசால்கட்டுவடம்பலபொலியப்பூட்டி. 65

610 நிலம்புணரேனக்கோடுநெடுவலிக்கூர்மத்தோடும்
புலம்புகொண்டினைந்துதேம்பப்பொங்கொளிமணிமதாணி
நலம்புனைதரளக்கோவைநகுமுபவீதம்வெய்யோன்
றலம்புகர்படுக்கும்வீரசங்கிலியாதிசேர்த்து. 66

611 குடங்கைசெங்கமலமென்றுகுறித்திளங்கதிர்சூழ்ந்தென்ன
வடங்கலுங்கமலராகமழுத்தியகடகமுன்கை
யிடங்கொளப்பனைந்துமாயமீன்விழியெலும்புள்ளூடத்
தடங்கரவிரலினூடுதவாமணியாழிகோத்து. 67

612 அகத்தமர்கருணைபோலப்புறத்தினுங்குளிர்ச்சியார
மிகத்தழைகலவைச்சாந்தும்விளங்குறமார்பிற்பூசிப்
புகத்தகுமரவம்போக்கிப்பொன்னரைஞாணுந்தேசு
தகத்தழையுதரபந்தமுந்திருவரையிற்சாத்தி. 68

613 கரியுரிகழித்துச்செம்பொற்கலிங்கவுத்தரியம்போர்த்தி
வரிகழன்மறையீரெட்டாமலர்ப்பதநாலவீக்கி
விரிமலர்மாலைசூட்டிவிளங்குபேரழகுநோக்கி
யரியயனாதியெல்லாவமரருந்தொழுதுநின்றார். 69

614 பல்லியமுகிலினார்ப்பப்பனவர்வாய்வாழ்த்துமல்க
நல்லியலடியார்ரெல்லாநயந்துபன்மலருந்தூவ
வல்லியமுரித்தபுத்தேண்மணவரைத்தவிறசுமேவி
யல்லியங்குழலாராடுமாடல்கண்டிரந்தானன்றே. 70



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:31 am

615 கருங்குழலிந்திராணிகலைமகடிருமான்மற்று
மருங்குளமகளிர்கூடிமலர்க்கரங்குவித்துப்போற்றி
யொருங்குலகீன்றாடன்னையுறுவிரைதுவர்களப்பி
நெருங்குபல்லியங்களேங்கநிலவுநீராட்டினாரே. 71

616 மெல்லிழைக்கலிங்கங்கொண்டுமேனியினீரமொற்றி
வல்லிருமுலைப்பொன்னோதிவாசனையூட்டிச்சீவி
நல்லியலெஃகந்தொட்டுநலம்புனைதெய்வவுத்தி
வில்லியல்பிறைமுற்சேர்த்துவிளக்கஞ்சால்செருக்குச்செய்து. 72

617 மழைமுகிலடுத்துநின்றவானவிற்பொலிவுமானத்
தழையெழினுதலின்மேலாலிலம்பகந்தயங்கச்சூட்டிக்
குழையுமற்றதற்குநாப்பட்டடித்தொன்றுகுலாயதென்னப்
பிழையில்செம்மணிகால்யாத்தபட்டமும்பிறங்கச்சேர்த்து. 73

618 அவையடியொருமீன்றோன்றிற்றெனவவிர்பொட்டொன்றிட்டே
யிவைகளானோக்கப்பட்டோர்க்கிருங்கருமலமென்றுள்ள
நவைபுறப்படுமாலென்றுஞாலத்துக்கறிவிப்பார்போற்
செவையிவர்கட்புறத்திலஞ்சனந்திகழத்தீட்டி. 74

619 மதிவளர்குலத்திற்றோன்றிமாண்புமிக்களித்தாய்நாயேன்
பதிதருங்குலத்துந்தோன்றிற்பண்புமிக்காமேயென்று
கதிரிருசெவியினூடுங்கரைவதற்கடுத்ததொப்பத்
துதிசெயுங்குழைகடுக்குந்தோடிருகாதும்பெய்து. 75

620 நகைமுகமதியமீன்றநகுகதிர்முத்தமென்னத்
தகைகெழநாசிமேலாற்றயங்கொளிமுத்தொன்றிட்டு
மிகையுறுகொங்கைவெற்பின்மேலெழுபசுவேயீன்ற
பகையில்பன்முத்தமென்னப்படர்முத்தமாலைசாத்தி. 76

621 கந்தரமெனும்பேர்பூண்டவளைநிதிகமலராக
முந்தொளிவயிரஞ்செம்பொன்முதற்பலவீன்றதென்ன
நந்தியவிருள்கால்சீத்துநகுகதிர்விளக்கஞ்செய்ய
வந்திலாங்கியையத்தக்கவணிகள்பற்பலவும்பூண்டு. 77

622 படரொளிமுத்தமாலையுள்ளுறப்பைம்பொன்மாலை
யடரும்வித்துருமமாலைமரகதமாலையான்ற
தொடர்புடைவயிரமாலைதோற்றஞ்சான்மற்றைமாலை
விடலருமதாணியோடுமேதகவொழுங்கிற்பூண்டு. 78

623 இறையவன்முகத்துக்கண்ணாயிருந்துநாடோறும்வாழு
முறையுடையெங்கடேசுமுருக்குறாதருள்கவென்றே
யறையிருகதிருங்கைசூழ்ந்தமைந்தெனப்பதுமராக
நிறையொளிவயிரம்யாத்தகடகங்கைநிகழச்சேர்த்து. 79

624 காந்தளம்போதுமேலாற்கலந்தபொன்வண்டர்மானப்
போந்தபொன்மணிபதித்தவாழிபொன்விரலிற்கோத்து
மாந்தளிர்மருட்டும்பட்டுவயங்கியமருங்குல்சேரச்
சேந்தபன்மணிகால்யாத்தமேகலைசிலம்பச்சேர்த்து. 80



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:32 am

625 சிலம்புகிண்கிணிபொற்றண்டைமுதற்செறிபாதசால
மலம்புறமறையீரெல்லாமளப்பருமடியிற்சூட்டி
நலம்புரியுத்தரீயநககதிர்விளக்கஞ்செய்ய
நிலம்புகழ்நறம்பூமாலைநிறைதரவெடுத்துச்சூட்டி. 81

626 திருமகண்முதலாயுள்ளார்செங்கரங்குவித்துப்போற்றி
யருகுகைகொடுத்துப்போதமென்மெலவடிபெயர்த்துப்
பெருகபல்லியங்களார்ப்பப்பெருமறைமுழக்கஞ்செய்ய
மருமலர்க்கூந்தல்போந்துவள்ளல்பாலிருந்தாளன்றே. 82

627 வடவறைமுகட்டின்மேலான்மாணிக்கத்தருவும்பச்சைப்
படரொருகொடியுஞ்சேர்ந்தபான்மையிற்சிவபிரானு
மிடர்கெடுத்தெம்மையாளுமெழிற்பராபரையுஞ்செய்ய
சடர்மணித்தவிசின்மேவக்கண்டவர்தொழுதுவாழ்ந்தார். 83

628 மாயவனெழுந்துவள்ளன்மலரடிவிளக்கியந்தப்
பாயதண்புனறன்சென்னிமேற்படத்தெளித்துக்கொண்டு
நேயமிக்குறப்பூசித்துநிலவுபல்லியமுமார்ப்பச்
சேயமாமுதல்வன்செங்கைச்சிரகநீரொழிக்கினானே. 84

629 தருப்பைமாவிலையினோடுஞ்சார்ந்தவாண்டளப்பானாங்கு
விருப்பமாரரணிச்செந்தீமேகலைக்குண்டத்திட்டே
யருப்புபல்சமிதையுஞ்சேர்த்தாச்சியஞ்சிருக்கின்வாக்க
வுருப்பவெந்தழன்மிக்குண்டுவலஞ்சுழித்தோங்கிற்றன்றே. 85

630 மறையவர்வாழ்த்துமல்கமங்கலவியங்களார்ப்பக்
முறையறுத்துலகமெல்லாங்கூறொணாக்களிப்பின்மூழ்கப்
பிறைமுடிப்பெருமானங்கைபிறங்குமங்கலநாணெல்லா
முறையுயிர்த்தவடன்கண்டமுகிழ்த்திடத்தரித்திட்டானே. 86

631 மின்னியபெருமான்முன்னர்மிகுமதுப்பருக்கநல்கி
மன்னியசுரர்முன்யாருமுத்தவாலரிசிவீசித்
துன்னியமகிழ்ச்சிமேவச்சொலற்கருபேரானந்த
நன்னியமத்தரானார்நாமினிப்புகல்வதென்னே. 87

632 பெரியநாயகிபெற்செங்கைபிறங்குதன்கையாற்பற்றி
யரியதானென்னுந்தீச்சூழ்த்தமைதரப்பொரிகளட்டித்
தெரியவோர்கையாற்றூக்கிச்சீறடியம்மிசேர்த்துப்
பிரியமார்சாலிகாட்டிமகிழ்வித்தான்பெருமான்வையம். 88

633 மற்றுளசடங்குமுற்றும்வழுவறமுடித்தபின்னர்க்
கற்றுளமனிவர்போற்றக்காமனைக்காய்ந்தபெம்மான்
சற்றுளவிடையாளோடுந்தவாவுவளகத்தையுற்றான்
முற்றுளவுவகைபூப்பமுழுகினார்யாருமின்பம். 89

634 இடைசிறிதுடையாளோடுமெம்பிரான்காட்சிநல்க
மிடைதருபலருங்கண்டுவாழ்ந்தனர்விடையும்பெற்றா
ரடைதருதத்தம்வைப்பையடைந்தனரமர்ந்தாரப்பாற்
சடையுடைமுனிவகேட்டியென்றனன்றவாதசூதன். 90

திருக்கலியாணப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 9-க்கு திருவிருத்தம் 634




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:33 am

10. உருத்திர தீர்த்தப்படலம்

635 ஒருநொடிவரைப்பொழுதுலகழித்திடும்,
பெருவிறலுருத்திரப்பிரானபேதமாந்
திருவடைதரமனங்குறித்துச்செம்மலைப்,
பொருவருபூசனைபுரிதற்கெண்ணினான். 1

636 எண்ணியமுத்தலைவேற்கையெம்பிரான்,
நண்ணியதீர்த்தமுந்தலமுமூர்த்தியும்
புண்ணியம்பயப்பதோர்பொருவின்மான்மிய,
நண்ணியவிடமெதுவென்றுநாடினான். 2

637 மறுவறுகடிமணமகிழ்ந்துகண்டநா,
ளுறுபெரும்புண்ணியமொன்றிக்கூடலாற்
கறுவுவெம்பவப்பகைகாற்றுமான்மியச்,
சிறுமருதூரெனத்தெளிந்தெழுந்தனன். 3

638 எண்ணியவெண்ணியாங்கெய்தநல்குமப்,
புண்ணியப்பெருந்தலம்பொருக்கென்றண்மினான்,
கண்ணியபுகழ்ச்சிவகங்கைமூழ்கினான்,
புண்ணியபற்றுளாம்பரனைப்போற்றினான் 4

639 செம்மலுக்கெதிரொருதீர்த்தமாக்கினா,
னம்மலர்ப்பெருந்தடத்தகிலதீர்த்தமும்
விம்முறத்தாபித்துவிரும்பிமூழ்கினான்,
றும்முவெந்தீப்பொரிச்சூலத்தண்ணலே. 5

640 நிலவுவெண்ணீற்றொடுநிகரில்கண்மணி,
யிலகுறப்பூண்டெழுத்தைந்துமெண்ணிய
வ், வுலகவாம்புனல்முகந்தாட்டியொள்ளிய,
பலனருள்வில்வமுற்பலவுஞ்சூட்டினான். 6

641 அருக்கியமுதலியவனைத்துமன்புறு,
திருக்கிளரபேதமாந்தெளிவுமேவுற
மருக்கிளர்பூசனைவயங்கச்செய்தபின்,
பொருக்கெனத்துதிபலபுகறன்மேயினான். 7

642 கற்பனையென்பனகழன்றசோதிநீ,
யற்புதமூர்த்திநீயனைத்துமாகிய,
சிற்பரவியோமநீசெல்வமிக்குயர்,
பொற்பமர்சிறுமருதூரிற்புங்கவ. 8

643 மறைமுடியமர்தரும்வள்ளனீநெடு,
மறைமுடிமுழக்கிடுமான்மியத்தனீ
மறைமுடியணுகரம்வரதநீபுகன்,
மறைமுடிபொருமருதூரின்வாழ்பவ. 9

644 என்றுதோத்திரம்பலவிசைக்குமேந்தன்மு,
னொன்றுநாயகனெழுந்தருளியுத்தம
நன்றுநீகருதியநலமளித்தனஞ்,
சென்றுநின்பெரும்பதஞ்சிவணிவாழ்தியால். 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:33 am

645 ஒன்றியவெமக்குமற்றுனக்கும்பேதமே,
யின்றிஃதுணர்பவரெம்மொடொன்றுவர்
நன்றியதகைநினைநம்மின்வேறுசெய்,
புன்றகையினர்க்கிலைபொருவின்ஞானமே. 11

646 புரிதொழில்குறித்திருபுலவரோடுனைச்,
சரிசொலுமவர்விழுந்தகையர்கும்பியி
னெரிமருள்சூலிநீயியற்றுதீர்த்தந்தோய்,
பரிவினரெண்ணியபலவுமெய்துவர். 12

647 என்றநல்வரங்கொடுத்திறைமறைந்தன,
னொன்றுவெஞ்சூலிதன்னுலகம்புக்கன
னன்றுயர்பலமெலாநலக்கவெய்துவர்,
சென்றுநல்லுருத்திரதீர்த்தமூழ்குவோர். 13

648 நீதியவுருத்திரநீரின்மூழ்குதற்,
கோதியநாளெலாமுறுவிசேடமா
மாதிரைநாளவற்றதிவிசேடமாந்,
தீதியலாதவித்தினங்கடம்முளும். 14

649 மார்கழியாதிரைமருவிமூழ்குறிற்,
சீர்கழியாப்பலசிறப்புஞ்செல்வமும்
பார்கழிமுத்தியும்பயப்பதுண்மையாற்,
கார்கழிஞானமுட்கலக்குமெண்ணினும். 15

650 செம்மைசாலுருத்திரதீர்த்தமான்மிய,
மும்மையார்புவனத்துமொழியவல்லார்
ரம்மையோர்பாகங்கொண்டகிலங்காத்திடு,
மெம்மையாளிறைவனேயிசைக்கவல்லவன். 16

651 வரத்திரவுரவமுற்றுயரமாழற்றுற,
முருத்திரதீர்ததத்தினுயர்ச்சிகூறினுங்
கருத்திரமுறாதெனக்கரைந்துமற்றதுங்,
குருத்திரவியமெனக்கூறுஞ்சூதனே. 17

உருத்திரதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 10-க்கு, திருவிருத்தம். 651.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:34 am

11. விட்டுணுதீர்த்தப்படலம்

652 சங்குசக்கந்தாங்குந்தடக்கையான்,
பொங்குதானவரோடுபொரல்குறித்
தெங்குநாஞ்சென்றிறைஞ்சுதுமென்றெண்ணித்,
தெங்குமேயசிறுமருதூருற்றான். 1

653 தெளிசெய்நாயகிசெய்சிவகங்கையு,
மொளிசைய்மேன்மையுருத்திரதீர்த்தமு
மளிசெயன்பினணைந்துமுழுகினாள்,
களிசெய்வண்டுகலக்குந்துழாயனே. 2

654 திருந்துநீறதிகழப்புனைந்தறம்,
பொருந்துகண்மணிபூண்டெழுத்தைந்தையும்
வருந்துதீரமதித்துக்கொடுவிட,
மருந்துநாயகன்முன்னரணைந்தனன். 3

655 அங்கமெட்டினுமாறினுமைந்தினும்,
பங்கமோவப்பணிந்துபணிந்தெழுந்
துங்கணீங்கியுருத்திரதீர்த்தப்பாற்,
றுங்கமார்கிழக்கோர்தடந்தொட்டனன். 4

656 முன்னமூழ்கிமுகிழ்க்குமலர்செறி,
யன்னதீர்த்தங்கொண்டையனையாட்டியே
பன்னமாதிப்பலமலர்சூட்டிமிக்,
குன்னவாங்கனியாதியுமூட்டினான். 5

657 செய்யவேண்டுபசாரமெலாஞ்செயா,
வையவிங்ஙனமம்மையையும்புரிந்
தெய்யமீண்டுபிரான்முனமெய்தினான்,
றெய்யவான்றுதிசெப்பலுற்றானரோ. 6

658 ஆதியேயறமேயருளேயுமை,
பாதியேபரமேபரவானமே
மோதியேயிருள்சாடுமுழுப்பெருஞ்,
சோதியேயுன்றுணையடிபோற்றினேன். 7

659 ஐயனேயழல்கான்மழுமான்மறிக்,
கையனேபொய்கடிந்தவருள்ளமர்
மெய்யனேயந்திமானமிளிருருச்,
செய்யனேயுன்றிருவடிபோற்றினேன். 8

660 காலகாலகபாலசுபாலன,
நீலவாலமிடற்றநெருப்பெழும்
பாலலோசனபார்ப்பதிபாகவி,
சாலசீலநின்றாளிணைப்போற்றினேன். 9

661 பொருதமேவும்புயவலித்தானவர்,
நிருதராதியர்நீங்கவருள்செய்வாய்
கருதமிக்கினியாய்கண்டதேவிவாழ்,
மருதவாணநின்மாண்பதம்போற்றினேன். 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:35 am

662 என்றுதோத்திரஞ்செய்யுமிணர்த்துழா,
யொன்றுமாலையலப்புயத்தானெதிர்
கன்றுமான்மழுவேந்துகைத்தம்பிரா,
னன்றுதோன்றியருளுதன்மேயினான். 11

663 திதிமகாரொடுநீபொரல்சிந்தைவைத்,
ததிகபூசனைநம்மடிக்காற்றினை
யெதிரிலாதொளிரித்தலத்தாதலான்,
மதிசெய்மாயவவுள்ளமகிழ்ந்தனம். 12

664 வலியதானவர்மாட்டமராடிநீ,
பொலியவாகைபுனைவரநல்கினோ
மொலியவாங்கழலாயுனக்கின்னுமென்,
மெலியலாவரம்வேண்டுமுரையென்றான். 13

665 என்றபோதினிறைஞ்சியிம்மாத்தலத்,
தொன்றநின்னடிபோற்றியுறைதர
நன்றவாவினனான்புரிதீர்த்தத்து,
மன்றமூழ்கினர்வாழ்தரவேண்டுமால். 14

666 ஈதுமையநல்கென்றடிதாழ்தலுந்,
தீதுதீரநிருதித்திசைவயி
னோதுகோயில்கொளுன்புனன்மூழ்குவோர்,
காதுதீவினைக்கட்டறுத்துய்வரால். 15

667 என்றுகூறிமறைந்தனனெம்பிரா,
னன்றுமாயவனத்திசைக்கோயில்கொண்டொ
ன்றுதானவர்தம்வலியோட்டியே,
யென்றும்வாழ்வனுற்றார்க்கின்பருளியே. 16

668 அனையனாற்றியவப்புனலோணநா,
ணினையமூழ்குனர்நீடுவறுமைநோ
யினையவெவ்வகைச்செல்வமூமெய்துவார்,
துனையவன்னானுலகத்துந்துன்னுவார். 17

669 ஈதுமாயவன்றீர்த்தச்சிறப்பினிச்,
சாதுமேன்மைச்சவுநகமாதவ
போதுசேரயன்றீர்த்தப்புகழ்மையு,
மோதுகேனென்றுரைத்திடுஞ்சூதனே. 18

விட்டுணுதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 11-க்கு திருவிருத்தம் - 669.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:36 am

12. பிரமதீர்த்தப்படலம் (670 - 685)

670 இண்டைமாமலரிருக்குநான்முகன்,
றொண்டைவாயொருதோகைமாதைமன்
கண்டையாவுளங்கலங்கிமோகித்தான்,
பண்டையூழ்வினைபாற்றவல்லரார். 1

671 அன்னபாவமேலடர்ந்துபற்றலு,
முன்னமாந்தொழின்முழுதுந்தீர்ந்ததா
லென்னசெய்துநாமினியென்றுற்றனன்,
கன்னல்வேலிசூழ்கண்டதேவியே. 2

672 அங்கண்வந்துமையமைத்ததீர்த்தமுஞ்,
சிங்கறீருருத்திரநற்றீர்த்தமுஞ்
சங்கபாணியோன்சமைத்ததீர்த்தமுந்,
துங்கமார்தரத்துளைந்தெழுந்தனன். 3

673 செங்கண்மாயவன்றீர்த்தத்தென்றிசை,
முங்குதீர்த்தமொன்றாக்கிமூழ்கினான்
புங்கநீறுகண்மணிபுனைந்தன,
னங்கணுற்றெழுத்தைந்துமெண்ணினான். 4

674 அன்னநீர்முகந்தாட்டியையனைச்,
சொன்னகூவிளமாதிசூட்டியே
யுன்னவாஞ்சுவையுணவுமூட்டினா,
$னென்னசெய்கையுமினிதியற்றினான். 5

675 கண்டவாமொழிக்கண்ணிபாகனே,
கண்டவாநுதற்காலகாலனே
கண்டமாமதிகலந்தசென்னியாய்,
கண்டதேவிவாழ்கருணைமூர்த்தியே. 6

676 அண்டராதியோரலறியச்சமுட்,
கொண்டதோர்ந்துவெங்கொலைசெய்நஞ்சினை
யுண்டநாயகாவுமையோர்பாகனே,
கண்டதேவிவாழ்கருணைமூர்த்தியே. 7

677 என்றுதோத்திரமியம்பியிவ்வண,
மொன்றுபல்பகலுறையுமேல்வையிற்
கன்றுமான்மழுக்கையர்தோன்றினார்,
நன்றுநான்முகனயந்துபோற்றினான். 8

678 அன்னவூர்திகேளான்றவித்தல,
மென்னபோதுநீயெய்தப்பெற்றுளா
யன்னபோதுபோயழிந்ததுன்கரி,
சென்னமேன்மையுமெய்தப்பெற்றுளாய். 9

679 இந்தமாத்தலம்யாலரெய்தினும்,
பந்தமாருமெப்பாதகங்களு
முந்தவோட்டுவார்,முத்தியெய்துவார்,
சந்தமேவுமெய்ச்சிறப்புஞ்சாருவார். 10

680 இங்குறாதுநீயெங்குமேவினும்,
பொங்குதீவினைபோதலில்லைகாண்
கொங்குசார்மலர்க்கோயின்மேவுவோய்,
தங்குநின்றொழிற்றிறமஞ்சார்தியால். 11

681 இன்னும்வேண்டுவதியம்புகென்றனன்,
மன்னநான்முகன்வணங்கியையவென்
முன்னுதீர்த்தநீர்மூழ்குவோரெலாம்,
பன்னுமேன்மையிற்படரநல்கென்றான். 12

682 அன்னதாகெனவருளிவள்ளலா,
ருன்னவாயபுற்றுண்மறைந்தனர்
பின்னல்வார்குழற்பெரியநாயகி,
தன்னதாள்களுந்தாழ்ந்துபோற்றினான். 13

683 ஓங்குசத்தியவுலகநண்ணினா,
னாங்குமுன்றொழிலாற்றிவாழ்ந்தனன்
றேங்குமற்றவன்றீர்த்தமூழ்குவோர்,
பாங்குசால்வரம்பலவுமெய்துவார். 14

684 தெரிந்துரோகணித்தினத்தின்மூழ்குவோ,
ரரிந்துதீவினையாக்கமெய்துவார்
புரிந்துமற்றவன்பதத்தும்போய்ப்புகுந்,
திரிந்துதீர்தராதென்றும்வாழ்வரே. 15

685 கஞ்சமேலவன்கண்டதீர்த்தமீ,
தஞ்சமாமனுவமைந்தசிந்தையாய்
தஞ்சவெய்யவன்சமைத்ததீர்த்தமுந்,
துஞ்சவோர்தியென்றோதுஞ்சூதனே. 16

பிரமதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 12-க்கு, திருவிருத்தம் -685.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:37 am

13. சூரியதீர்த்தப்படலம் (686 - 700)

686 மோதுகடன்முகம்புழுங்கமுளரிமுகைமுறுக்குடைய
வோதுமலர்தலையுலகத்துயிரெலாங்கண்விழிப்பச்
சாதுமறைமுழக்கெடுப்பத்தழைகருமச்சான்றாகித்
தீதுவிரோராழித்தேருதையமெழுவெய்யோன். 1

687 ஒருமனைவியவன்கனல்வெப்புடறழுவற்காற்றாளாய்ப்
பொருமியழுதினைந்தேங்கிப்போய்த்தந்தைபாலுரைப்ப
வெருவில்வலித்தந்தையெனும்விச்சுவகன்மன்றெரிந்து
குருமலிபொற்பூங்கொடியையஞ்சற்கவெனக்கூறி. 2

688 சான்றபரிதியைப்பிடித்துச்சாணையிடைவைத்துரைத்திட்
டான்றகதிர்களைத்தேய்த்தானாறியதுவெப்பமுட
னேன்றகுலக்கொடிமகிழ்ந்தாள்கதிர்முழுதுமிழந்தமையாற்
றோன்றவருசெம்பரிதிசுடரின்றிமழுங்கிற்றே. 3

689 இனியாதுசெய்குதுமென்றெண்ணியடைந்தவர்க்கெல்லா
முனியாதுகருணைபொழிமுதல்வனார்சிறுமருதூர்
பனியாதுசென்றடைந்துபரவுதுமேற்றுயர்முழுதங்
கனியாதுசெய்வரென்றுகண்டதேவியையடுத்தான். 4

690 கண்டதேவியினயன்மால்காணாத்தேவியையொருபாற்
கொண்டதேவனைவணங்கிக்குலவியமற்றவன்றென்பால்
விண்டதேமலர்நாளுமிடைசிவகங்கைக்கீழ்பால்
வண்டர்தேதேயெனும்பன்மலர்த்தடமொன்றியற்றினான். 5

691 அன்னபெரும்புனன்மூழ்கியழகியவெண்ணீறணிந்து
பன்னருங்கண்மணிபூண்டுபரவுறுமைந்தெழுத்தெண்ணிச்
சொன்னபுனன்முகந்துமருதடிவளர்சோதியையாட்டி
மின்னகுபன்மலர்சூட்டிவில்வமுங்கொண்டருச்சித்தான். 6

692 இவ்வண்ணம்பூசைபுரிந்திருக்குநாளிரங்கிமிளிர்
செவ்வண்ணப்பெருமானார்திருக்காட்சிகொடுத்தருள
வுய்வண்ணமுண்டாயிற்றுண்டாயிற்றென்றெழுந்து
மைவண்ணத்துயரொழிந்துமலரடிதாழ்ந்திதுததிப்பான். 7

693 திருமுகத்துவலக்கண்ணாய்த்திருமேனிகளுளொன்றாய்க்
பொருசமருக்கெழங்காலைப்புவியியக்கும்பதத்தொன்றாய்
மருவுமிருக்கையுளொன்றாய்வயங்குமொருசிற்றடியே
னுருவவொளியிழந்திருத்தலுன்பெருமைக்கழகேயோ. 8

694 பிறங்குபெருங்குணக்குன்றேபெரியநாயகியைமணந்
தறங்குலவவுலகினுக்கின்பளித்தபேரருட்கடலே
நிறங்குலவுமருதடிவாழ்நித்தியநின்மலச்சுடரே
புறங்கிளருமொருநாயேன்பொலிவிழத்தலழகேயோ. 9

695 புரமூன்றுமொருநொடியிற்பொடிபடுத்தபுண்ணியனே
சிரமூன்றுமொருநான்குஞ்செறிந்தாருக்கறிவரியாய்
வரமூன்றும்படியடைந்தார்தமக்கருளுமாநிதியே
திரமூன்றுமொளியிழந்தியான்றேம்பிடுதலழகேயோ. 10

696 என்றுதுதித்திடுவானுக்கெம்பிரானருள்சுரந்து
நன்றுகுணக்குதித்திடுவோய்நாமொழிதிமுன்போலத்
துன்றுமொளிபெறுதியிருடொலைத்துவாழுதியின்னு
மொன்றுவரம்வேண்டுவதென்னுரைத்தியெனப்பணிந்துரைப்பான். 11

697 ஐயவறிவிலிநாயேனுய்ந்தனனெ்ன்னழலுடலஞ்
செய்யமனையவடழுவுந்திறமுமுதவுதல்வேண்டு
மெய்யமையவென்றீர்த்தம்விரும்பிமுழுகுனர்நினது
மையிலருட்குரியராய்வயங்கிமருவுதல்வேண்டும். 12

698 இனையவரந்தருதியெனவிரந்தனனீலிழைந்தபடி
யனையவரந்தந்தனமென்றருளிமறைந்தனன்பெருமான்
முனையமழுப்படையேந்துமுதல்வனைமற்றவனிடப்பா
னனையமலர்க்குழற்பெரியநாயகியைப்பணிந்தெழுந்து. 13

699 தன்னுலகம்புகுந்துகதிர்தழைந்துகருகிருளோட்டி
மன்னுலகவிழியாகிவயங்கினான்மார்த்தாண்டன்
றுன்னுலகம்புகழுமவன்றொட்டதீர்த்தம்படிவோர்
பொன்னுலகமடைந்துபெரும்போகமெலாந்துளைந்திடவார். 14

700 ஆதிவாரம்படிவோரையனருட்குரியராய்ச்
சோதிவார்கயிலாயந்துன்னிடுவர்பரிதிதட
நீதிகாணிதுமதிசெய்நெடுந்தீர்த்தப்பெருமையுங்கே
ளோதியாயென்றுரைத்துமேலுமறைத்திடுஞ்சூதன். 15

சூரியதீர்த்தப்படலம் முற்றிற்று..
ஆக படலம் - 13 க்கு, - திருவிருத்தம் 700.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக