புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_c10அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_m10அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_c10 
81 Posts - 60%
heezulia

34 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_c10அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_m10அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 44%

231 Posts - 38%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_c10அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_m10அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_c10அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_m10அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jun 19, 2011 7:39 pm

First topic message reminder :

இந்திய நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளில் சாணக்கியர் மிக முக்கியமானவர். இவர் சந்திராகுப்தா மௌரியரின் அமைச்சராக இருந்து அவர்க்கு மீண்டும் அரச பதவி கிடைக்க துணையாக நின்றவர். விதுர நீதி, பிரிகஸ்பதி, ஷூக்ரச்சார்யா, பார்த்தியகரி, விஷ்ணுஷர்மா போன்றவர்கள் நீதி சாஸ்த்திரம் குறித்து பல விஷயங்கள் கூறினாலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்ரத்திர்க்கு ஒரு தனி மரியாதை உண்டு, இவர் நீதி சாஸ்த்திரம் மட்டும் அல்லாமல் பொருளாதாரம் குறித்தும் பல விஷயங்கள் கூறியுள்ளார். அவரின் அர்த்த சாஸ்த்திரத்தின் சில முக்கிய அறிவுரைகளை இத்தொடரில் பார்ப்போம்.

முதல் அத்தியாயம்:

1. எல்லாம் வல்ல, மூன்று உலகங்களையும் காக்கும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களை தொழுது, பல சாஸ்த்திரங்களில் இருந்து எடுத்த இந்த அர்த்த சாஸ்த்திரத்தை உங்களுக்கு எடுத்து கூறுகிறேன், கேளுங்கள்.

2. எவன் ஒருவன் சகல சாஸ்த்திரம் கற்கிறானோ, நல்லது எது கெட்டது எது என்று உணர்ந்து நடக்கிறானோ, அவனே சிறந்தவன். அவனை எப்போதும் புகழ் சூழ்திருக்கும்.

3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

4. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .பணத்தை இழக்கும் போது மனைவியை காக்க வேண்டும் . பணத்தை இழந்தாலும், மனைவியை இழந்தாலும் தன் மனதைக் இழக்க கூடாது .

5. உங்களுக்கு மதிப்பு கிடைக்காத நாட்டிலோ, நீங்கள் பிழைக்க முடியாத நாட்டிலோ, நண்பர்கள் இல்லாத நாட்டிலோ, கல்வி கற்க முடியாத நாட்டிலோ வசிக்க வேண்டாம்.

6. இந்த ஐந்து விஷயங்கள் இல்லாத நாட்டில் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அவை வசதி படைத்தவன் , வேதம் ஓதும் வேதியன், முறை தவறாத மன்னன், ஆறு, மருத்துவன்.

7. அறிவுள்ளவன் ஒரு நாளும், வருமானம் தராத நாட்டிற்க்கும், எதற்கும் கலவைப்படாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், தவறு செய்வதற்க்கு நாணாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், புத்தி உள்ளவர்கள் இல்லாத நாட்டிற்க்கும், தானத் தருமம் செய்யாத நாட்டிற்க்கும் செல்ல மாட்டான்.

8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

9. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், பெண், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

10. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.

சதாசிவம்
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Wed Jun 22, 2011 1:58 pm

சதாசிவம் wrote:
3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

இன்று வாழும் நமக்காக முன்னரே எழுதி வைத்த மாதிரி உள்ளது...
மூன்றையும் அனுபவித்தவன் நான்....
இத்தொடரில் வாழ்க்கை பாடம் படிப்பதை போல் உணர்கிறேன்....

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jun 22, 2011 3:03 pm

ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி,
தொடர்கிறேன்...........

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 678642

சதாசிவம்
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jun 23, 2011 11:05 am

நான்காம் அத்தியாயம்

1. ஒருவனுடைய ஆயுள், செய்யும் வேலை, வசதி, கல்வி, மரணத்தின் தேதி ஆகியவைகள் கருவிலேயே நிச்சயக்கப்படுகிறது.

2. உங்கள் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் போதே நல்ல காரியங்கள் செய்யுங்கள், உங்கள் ஆத்மா மேண்ணை அடைய வேண்டிய செயல்களை செய்யுங்கள். ஏனென்றால் மரணத்தின் நெருக்கத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?

3. கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

4. ஒரு நல்ல மகனே குடும்பத்திருக்கு வேண்டும், பயன் அற்ற பல பிள்ளைகளை பெறுவதை விட ஒரு நல்ல மகன் இருக்க வேண்டும். வானத்தில் ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் ஒளி வீசுவது சந்திரன் மட்டுமே.

5. துக்கத்தை தீர்க்க மூன்று விஷயங்கள் உதவும், தமது சந்ததியினர், மனைவி, கடவுள் சேவை.

6. இறைவழிபாடு ஒருவராக செய்ய வேண்டும், கற்பது இரண்டு பேராக, பாடுவது மூவராக, பயணம் செய்யும் பொது நால்வராக, விவசாயம் செய்யும் பொது ஐவராக, போரில் பலர் சேர்த்து, செய்வது வெற்றியை தேடித் தரும்.

7. அடிக்கடி பிரயாணம் செய்வது ஆணுக்கு வயது முதிர்ச்சியை தரும், ஒரே இடத்தில் கட்டி வைத்தால் குதிரைக்கு சீக்கிரம் வயது ஆகி விடும், கணவனுடன் தாம்பத்தியம் இல்லையென்றால் பெண்ணுக்கு சீக்கிரம் வயது ஆகி விடும், தங்க நகைகள் வெயிலில் வைத்தால் பழையன ஆகி விடும்.

8. சரியான நேரம், சரியான வருமானம் , சரியான செலவு, சரியான நண்பர்கள், சரியான இடம் ஒருவனுக்கு சக்தியை தரும்.

9. கடவுள் பக்தி இல்லாத நபரும், அறிவு இல்லாத குருவும், அன்பு இல்லாத மனைவியும், அக்கறை இல்லாத உறவினர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவை ஆகும்.

10. அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் வசிப்பது, தனக்கு கீழானவனுக்கு சேவை செய்வது, பசியை போக்கா உணவு, முட்டாள் மகன், விதவையான மகள் ஒரு மனிதனை உடலை தீ இல்லாமல் எரிக்கும் விஷயங்கள் ஆகும்.

11.குழந்தை இல்லாத வீடு வெறுமையாக இருக்கும், உறவினர் இல்லாதவனுக்கு எல்லாத் திசையும் வெறுமையாக இருக்கும், முட்டாளின் இதயம் வெறுமையாக இருக்கும், ஆனால் வறுமையில் வாடுபவனுக்கு எல்லாமே வெறுமையாக இருக்கும்.

சதாசிவம்
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jun 25, 2011 2:52 pm

ஐந்தாம் அத்தியாயம்

1. தங்கம் வெட்டுதல், உரசுதல், சூடாக்கல், தகடாக தட்டுதல் ஆகிய முறைகளால் சோதிக்கப்படுகிறது, அது போல் ஒரு மனிதனை அவனது செயல், பேச்சு, குணம், எவற்றை தவிர்க்கிறான் என்பதன் மூலம் அறியலாம்.

2. அறிவாளியை கண்டு முட்டாளும், நல்ல குணம் உடைய பெண்ணைக் கண்டு குணம் இல்லாதவளும், பணக்காரனைக் கண்டு ஏழையும், அழகான பெண்ணை கண்டு அழகற்றவளும் பொறாமை கொள்கின்றனர்.

3. ஒரு மனிதன் தனியே பிறக்கிறான், தனியே இறக்கிறான், தனியே சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்கிறான். அவன் அவன் கர்ம வினைப்படி நல்லதையும் கெட்டதையும் அனுபவிக்கிறான்.

4. பயணத்தில் உதவும் நண்பன் நாம் கற்கும் கல்வி, வீட்டில் உள்ள போது உதவும் நண்பன் நம் மனைவி, இறந்த பின்பு உதவும் நண்பன் நாம் செய்யும் இறை தொண்டு.

5. கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

6. இந்த உலகம் நிலை பெற காரணம் சத்தியம் , சத்தியமே சூரியனை உதிக்கவும், மறையவும் செய்கிறது.

7. காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை, ஆன்மீக ஞானத்தை விட சிறந்த ஆனந்தம் இல்லை.

8. செல்வம் நிலையற்றது, இந்த வாழ்க்கை நிலையற்றது, ஆயுட் காலமும், வாழும் இடமும், வசதியும் நம் கையில் இல்லை. இந்த உலகத்தில் நிலையாக இருப்பது இறை அருள் மட்டுமே.

9. ஒருவனின் கல்வியை அவனது செயல்திறமையின் மூலமும், நல்ல குடும்ப கௌரவம் அவர்களின் செயல்கள் மூலமும், மரியாதைக்குரிய ஒருவனின் அடையாளம் அவரது நற்காரியங்கள் மூலமும், கோவத்தை கண்கள் மூலமும் அறியலாம்.

10. இவர்கள் ஐவரும் நமக்கு தந்தையாவர்கள் 1. நாம் பிறக்க காரணமானவர் 2. நமக்கு உபநயனம் செய்வித்தவர் 3. நமக்கு கல்வி அளித்த குரு 4. நமக்கு உணவு அளித்தவர் 5. ஆபத்து காலத்தில் நம்மை காப்பாற்றியவர்.

11. இவர்கள் ஐவரும் நமக்கு தாயாவர்கள் 1. நம்மை ஈன்றுடெடுத்தடுத்தவள் 2. அரசனின் மனைவி 3. நண்பனின் மனைவி 4. மனைவியின் தாயார். 5. நமக்கு கல்வி அளித்த குரு

சதாசிவம்
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Jun 27, 2011 4:32 pm

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 677196

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 28, 2011 9:57 am

ஆறாம் அத்தியாயம்

1. எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

2. காலம் ஒருவனை வாழவைக்கும், அதுவே ஒருவனை தாழவும் செய்யும். அது ஒன்று தான் உலகம் தூங்கும் நேரத்திலும் விழித்திருக்கிறது. காலம் ஒன்று தான் யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று.

3. பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.

4. தொடர்ந்து கடன் வாங்கும் தந்தையும், குணம் கெட்ட தாயும், மிக அழகான மனைவியும், படிக்காத பிள்ளையும் எதிரிகள் ஆவர்.

5. பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

6. கொடுங்கோல் மன்னனை விட காடு சிறந்தது, ஏமாற்றும் நண்பனை விட நண்பன் இல்லாமல் இருப்பது சிறந்தது, முட்டாள் மாணவனை விட மாணவன் யாரும் இல்லாமல் இருப்பது நல்லது, ஏமாற்றும் மனைவியை விட தனியே இருப்பது நல்லது.

7. சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து ஒன்றையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

7.
சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

8. கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

9.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

10. விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

11.
இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

12.
கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

13. ஒருவன் மேலே சொன்ன இருபது (20) விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

சதாசிவம்
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jun 30, 2011 4:15 pm

ஏழாம் அத்தியாயம்:

1. அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீ நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.

2. ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, இறை வழிபாடு, தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

3. உங்கள் கால்களால் ஒருபோதும் யாகத் தீ, குரு, பசு, வயதில் மூத்தோர், குழந்தைகள் ஆகியவர்களை தீண்டாதீர்.

4. யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

5. எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

6. அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

7. அளவுக்கு அதிகமாக பணத்தை சேமிக்காதீர். தேங்கி உள்ள நீரை எவ்வாறு ஆற்று வெள்ளம் அடித்து செல்கிறதோ, அது போல் செல்லும்.

8. சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.

9. படிக்காதவனின் வாழ்க்கை நாயின் வாலை போன்றது. அது மறைக்க வேண்டியதை மறைக்காது, பூச்சிகளிடம் இருந்தும் நாயின் உடலை காக்காது.

10. ஒருவன் ஆன்மிக வழியில் செல்ல வேண்டுமானால், சுத்தமான பேச்சு, தெளிவான சிந்தனை, சுய நலமற்ற மனம் ஆகியவை வேண்டும்.

சதாசிவம்
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 30, 2011 4:30 pm

மிகச்சிறந்த பதிவு . தொடரட்டும் உங்கள் அருட் பணி ! அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 154550
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jun 30, 2011 8:16 pm

[quote="கே. பாலா"]மிகச்சிறந்த பதிவு . தொடரட்டும் உங்கள் அருட் பணி ! குஓட்டே
மிக்க நன்றி அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 1194657695

சதாசிவம்
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jul 01, 2011 4:30 pm

எட்டாம் அத்தியாயம்

1. கீழான குணம் உடைய மனிதன் பணத்தை விரும்புகிறான், நடுத்தர மனிதன் பணத்தையும், மரியாதையும் விரும்புகிறான். மேலான குணம் உள்ள மனிதன் மரியாதையை மட்டுமே விரும்புகிறான்.

2. தண்ணீர் ஜீரணக் கோளாருக்கு சிறந்த மருந்து. உணவின் இடையில் அருந்தும் நீரானது தேனை போன்றது, அது ஜீரணத்திருக்கு உதவும். உணவின் இறுதியில் அருந்தும் நீரானது விஷத்தை போன்றது.

3. அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும், கணவன் இல்லாவிடில் ஒரு பெண் வீணாவாள்.

4. வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

5. அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

6. கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

7. எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

8. கட்டுப்பாடு இல்லாத அந்தணனும், கிடைத்ததை கொண்டும் திருப்தி அடையும் மன்னனும், வெட்கப்படும் தாசியும், ஒழுக்கம் இல்லாத குடும்ப பெண்களும் அழிந்து போவார்கள்.

சதாசிவம்
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக